துருக்கி (Turkey) தனது F-4-Phantom விமானத்தை சிரியப் படையினர்22-06-2012இலன்று சுட்டு வீழ்த்தியதை ஒரு ஆக்கிரமிக்கும் செயலாக எடுத்துக் கொண்டு நேட்டோப் படைக் கூட்டமைப்பின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளது. நேட்டோவின் கூட்டம் 26/06/202இலன்று நடக்கவிருக்கிறது. துருக்கிய வெளிநாட்டமைச்சர் Ahmet Davutoglu ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர், பிரித்தானிய வெளிநாட்டமைச்சர், பிரெஞ்சு வெளிநாட்டமைச்சர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஆகியோருடன் தனது விமானம் சுட்டு வீழ்தியதைப் பற்றி உரையாடியதுடன் நிற்கவில்லை, இரசிய, ஈரானிய வெளி நாட்டமைச்சர்களுடனும் தொடர்பு கொண்டுள்ளார்.
ஹிலரி கிளிண்டன், பிரித்தானிய வெளி நாட்டமைச்சர் வில்லியக் ஹேக் ஆகியோர் துருக்கிய விமானம் சுட்டு வீழ்த்தியமையைக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளனர்.
அமெரிக்கப் படைத்துறையின் உச்ச அதிகாரி மார்டின் டிம்ஸி துருக்கியின் படைத்துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு துருக்கிய விமானம் சுட்டு வீழ்த்தியமை பற்றி கலந்துரையாடியுள்ளார்.
நேட்டோ ஒப்பந்தத்தின் நாலாம் பிரிவின் படி நேட்டோவின் கூட்டதைக் கூட்டிய துருக்கி ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவின்படி நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து சிரியாவின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நேட்டோ நாடுகளைக் கேட்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. துருக்கியப் பிரதமர் சிரியாவிற்கு ஒரு காத்திரமான பதிலடி கொடுக்க வேண்டும் என்று கருதுவதாகச் செய்திகள் வந்தன.
சிரியா மீது தாக்குதல் நடாத்துவதற்கான முன்னோடியாக சிரியா தனது மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று மொரொக்கோ நாடு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில்2012 பெப்ரவரி மாதம் கொண்டு வந்த தீர்மானத்தை இரசியாவும் சீனாவும் தமது இரத்து (Veto) அதிகாரத்தைப் பாவித்துத் தடுத்தன. சிரியாவின் இரண்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறி ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் ஒரு வாரத்தில் மட்டும் நாற்பதினாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்ட போது இந்திய எதிர்ப்பின் நிமிர்த்தம் யாரும் ஐநா பாதுகாப்புச் சபையில் கொண்டு செல்லவில்லை. வில்லன் விஜய் நம்பியாரின் அறிக்கையும் நிலத்துக்கீழ் அறையில் இரகசியமாக ஆராயப்பட்டது.
தமக்குப் பிடிக்காத சர்வாதிகாரிகளைப் பதவியில் இருந்து அகற்றுவதை மேற்குலக நாடுகள் தம் தலையாய கடமையாகக் கொண்டுள்ளன. சிரியாவின் அதிபர் அல் அசாத் மேற்குலகால் வெறுக்கப்படும் ஒருவர். இவரைப் பதவியில் இருந்து அகற்ற மேற்குலக நாடுகள் விரும்புகின்றன. ஆனால் சிரியாவின் அதிபர் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு மேற்குலகிற்கு சார்பான ஒருவர் அங்கு ஆட்சிக்கு வந்தால் அது அரபு நாடுகளில் கேந்திரோபாய சமநிலையை தமக்குச் சாதகமாக்கி விடும் என்று சீனாவும் இரசியாவும் கருதுகின்றன. இந்த பிராந்திய ஆதிக்க முரண்பாட்டின் விளைவாக அப்பாவி சிரிய மக்கள் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சிரியாவில் கிளர்ச்சிக்காரகளுக்கான பயிற்ச்சி மற்றும் படைக்கலன்கள் துருக்கியில் இருந்தே நடப்பதாக ஏற்கனவே சிரியா பலமுறை குற்றம் சுமத்தியுள்ளது. சிரிய எல்லையில் துருக்கி பல அத்து மீறல்களை நிகழ்த்தி வருவதாக சிரியா பல தடவை குற்றம் சாட்டியுள்ளது.
சிரியா தனது இன்னும் ஒரு விமானத்தில் தாக்குதல் நடாதியது என்று 25/6/2012இலன்று துருக்கி மீண்டும் அறிவித்தது
அண்மைக்காலமாக சிரியாவிற்கு எதிராக மேற்குலக நாடுகளின் இரகசியக் காய் நகர்த்தல்கள் மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றன என்பதை சிரிய விமானப் படை விமானிகள் ஒருவர் பின் ஒருவராக விமானங்களுடன் அமெரிக்க நேச நாடான ஜோர்தானுக்குத் தப்பிச் செல்வது எடுத்துக் காட்டுகிறது. அது மட்டுமல்ல பல சிரியப் படை உயர் அதிகாரிகள் சிரியாவில் இருந்து தப்பி துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர். துருக்கி விமானச் சுட்டு வீழ்த்தலால் விமானிகள் உயிரிழக்க வில்லை. ஆனாலும் அது தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சிரியா துருக்கிய விமானம் தனது கடற்பரப்பில் வந்தமையால்தான் சுட்டுவீழ்த்தப்பட்டது என்று சொல்கிறது. துருக்கிய விமானத்தைச் சாக்காக வைத்து நேட்டோப் படையினர் சிரியாவின் விமானங்களை முற்றாக அழித்து சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்த முயலலாம். சிரிய நோக்கிச் சென்ற இரசிய கப்பலை படைக் கலன்கள் ஏற்றிச் சென்றதாகக் கூறி பிரித்தானியா இடை மறித்துத் திருப்பி அனுப்பி விட்டது.
துருக்கிய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியமை நேட்டோவின் ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவின் படி நேட்டோ நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சிரியாமேல் தாக்குதல் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப் போதுமான காரணம் அல்ல என்று சிலர் வாதாடுகின்றனர். துருக்கிய விமானச் சுட்டு வீழ்த்தலை சாட்டாக வைத்து சிரியாமீது நேட்டோ தாக்குதல் நடத்தாமல் போனாலும் சிரியாவிற்கு எதிரான ஒரு படை நடவடிக்கையை முன்னெடுக்க நேட்டோ தயாராகி வருகிறது என்பதையே இந்த விமானச் சுட்டு வீழ்த்தலைப் ஊதிப் பெரிதாக்குவது காட்டுகிறது. ஆனால் சீனாவும் இரசியாவும் லிபியாவில் விட்டுக் கொடுத்தது போல் சிரியாவிலும் விட்டுக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சிரியாவில் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டால் மேற்குலக நாடுகளின் அடுத்த இலக்கு ஈரான் என்பதை சீனாவும் இரசியாவும் உணர்ந்து கொண்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment