டேவிட் இலங்கை சென்ற ஓர் அமெரிக்க உல்லாசப் பிராயாணி. தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதில்
தங்யிருந்தவர். தனது சாளரத்தின் வழியாக வெளியில் பார்த்தவருக்கு கடலினதும்
அதன் கரையினதும் அழகைப்பார்த்து வியந்து போனார் வெயில் சாய்ந்தபின்னர் அதை
முழுமையாக அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தார்.
மாலையானதும்
டேவிட் கொழும்பின் கடற்கரையின் அழகை இரசித்தபடி நடந்து சென்று
கொண்டிருந்தார். அங்கு உல்லாசமாக இருந்த காதலர்களையும் இரசித்தபடி நடந்து
கொண்டிருந்தவர் தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதிக்கு எப்படித் திரும்பிப்
போவது என்று மறந்துவிட்டார். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து
கொண்டிருந்தவருக்கு ஒண்ணுக் கடிக்க வேண்டும் போல் இருந்தது. அதற்குரிய
இடத்தையும் காணவில்லை. அங்கும் இங்கும் அதற்குரிய இடத்தைத் தேடியவருக்கு
அப்படி ஒரு இடம் கிடைக்கவில்லை. ஒரு சந்துக்குள் போய் ஒண்ணுக்கு அடிக்கத்
தயாராகிக் கொண்டிருந்த வேளை அவர் பின்னால் காக்கிச் சட்டையுடன் ஒரு
சிங்களக் காவற்துறைச் சேர்ந்த ஒருவன் வந்து இங்கு இதெல்லாம் செய்யக் கூடாது
என்று சிங்களத்தில் கூறினான். அதற்கு டேவிட் சைகை மூலம் தனக்கு ரெம்ப
அவசரம் என்று சொன்னார். அதற்கு அந்த சிங்களவன் தன் பின்னே வரும்படி
ஆங்கிலத்தில் சொன்னான். டேவிட்டும் பின் தொடர்ந்தார். ஏன் நீ என்னுடன்
ஆங்கிலத்தில் முதலில் கதைக்கவில்லை என்றார் டேவிட். அதற்கு சிங்களவன் இது
எங்கள் நாடு. எங்கள் ஆட்சி. எங்கள் ஆட்சி மொழி சிங்களம் என்றான்
ஆங்கிலத்தில். அப்படிச் சொன்னபடியே ஒரு வெள்ளை நிறக் கட்டிடத்திற்கு
டேவிட்டைக் கொண்டு போய் விட்டு இங்கு நீ எங்கு வேண்டுமானாலும் ஒண்ணுக்கு
அடிக்கலாம் என்றான். டேவிட்டும் ஒரு நீண்ட அடி அடித்து ஒரு நீண்ட பெரு
மூச்சு விட்டுட்டு:
This is your hospitality - இது உங்கள் விருந்தோம்பல் என்றார். அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத அந்தச் சிங்களவன்
No, it is not hospital.... it is Indian embassy இது மருத்துவ மனை இல்லை இது இந்தியத் தூதுவரகம் என்றான்.
2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்கக் குடியரசுத்
தலைவர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப்பிற்கு சவாலாக முன்னாள் துணைக் குடியரசுத்
தலைவர் ஜோ பிடன் மக்களாட்சிக் கட்சி சார்பில் போட்டியிடலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் மீது சேறு பூச டிரம் பல வகைகளில் முயற்ச்சி
செய்தார் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்கத்
தேர்தலில் மற்ற நாடுகளைத் தலையிட தூண்டும் வகையில் அமைந்துள்ளன என அவரது எதிர்க்
கட்சியினர் கொதிக்கின்றார்கள்.
சீனாவில் ஒன்றரை பில்லியன் சுருட்டப்பட்டதா?
டிரம்ப் சீனாவிடம் ஜோ பிடனினதும் அவரது மனைவியின் முதற்தார மகர்
ஹண்டர் பிடனினதும் சீன முதலீடுகள் தொடர்பாக விசாரித்து தகவல்களை அம்பலப்படுத்தும்
படி கோரினார் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இது அமெரிக்கத் தேர்தலில் ஒரு
வெளிநாடைத் தலையிடும் படி தூண்டுவதாக அமைகின்றது என்கின்றனர் டிரம்பின் எதிர்க்
கட்சியினர். அதற்கு போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. தன் பெயர் குறிப்பிட
விடும்பாத ஒருவர் டிரம்பிற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில்
தொலைபேசியில் உரையாடலில் ஹண்டர் பிடனிற்கு சீனாவில் இருக்கும் முதலீடுகள் பற்றி பகிரங்கப்படுத்தும்படி
வேண்டுகோள் விடுத்தார் என ஓர் அமரிக்க ஊடகத்திற்கு தெரிவித்தார் என்பது போதிய
ஆதாரமாக இல்லை. 2019
செப்டம்பரில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில் ஹண்டர் பிடன் சீனாவில் ஒன்றரை பில்லியன்
டொலர்கள் பெறுமதியான் சொத்தை வைத்திருக்கின்றார் எனக் குற்றம் சாட்டினார். சீனாவில்
இருந்து நிதியை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது மிகவும் கடினமாக இருக்கும்
நிலையில் ஹண்டர் மிக இலகுவாக அந்த ஒன்றரை பில்லியன் நிதியை எடுத்து வந்துவிட்டார்
என்றார் டிரம்ப்.
உக்ரேனில் முறைகேடான முதலீடா?
பராக் ஒபாமா அதிபராகவும் ஜோ பிடன் துணை அதிபராகவும் இருந்த போது
உக்ரேனில் பல பிரச்சனைகள் உருவாகின. அந்தப் பிரச்சனையால் உக்ரேனிற்க்கு இரசியாவில்
இருந்து வரும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டது. இதை முன் கூட்டியே அறிந்த
அமெரிக்க துணை அதிபர் தனது மகனான ஹண்டர் பிடனை உக்ரேனில் எரிவாயு நிறுவனங்களில்
முதலீடு செய்யப் பண்ணினார். பின்னர் 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் கிறிமியா
தீபகற்பத்தை தன்னுடன் இணைத்து இரசியர்கள் பெரும்பாலாக வாழும் உக்ரேனின் கிழக்குப்
பகுதியில் பிரிவினைப் போராட்டம் ஆரம்பமானது. அதனால் ஹண்டர் பெருமளவு பணம்
சம்பாதித்தார் என்பது டிரம்பின் தர்ப்பில் இருந்து வைக்கப்படும் குற்றச்சாட்டு.
டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது மகன்
ஹண்டரின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக விசாரிக்கும் உக்ரேனின் வழக்குத் தொடுநரை
பதவி நீக்கம் செய்யும் படி உக்ரேன் அதிபரை வலியுறுத்தினார் என வாதிடுகின்றனர். ஜோ
பிடன் இப்படிச் செய்யும் போது அவர் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தாராம். ஹண்டர் பிடன் உக்ரேனின் எரிவாயு நிறுவனத்தின்
ஆலோசகராக இருந்து 3.4மில்லியன் டொலர்கள் சம்பாதித்தார்; இதற்காக் அவர் உக்ரேன் செறது கூடக் கிடையாது
என்பது அவர்மீது வைக்கப்படும் குற்ற்ச்சாட்டு.
வழங்காத ஜவலின் ஏவுகணைகள்
டிரம்ப்பின் பதவி நீக்க முயற்ச்சியில்
அமெரிக்காவின் ஜவலின் ஏவுகணைகள் முக்கியமானவை. FGM-148 Javelin ஏவுகணைகள்
தோளில் வைத்து ஏவக் கூடியவை. எந்த போர்த்தாங்கியையும் அழிக்கக் கூடியவை. உலகிலேயே மிகச் சிறந்த தாங்கிகளை உற்பத்தி
செய்யும் இரசியா இவற்றையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளன. ஜவலின் ஏவுகணைகள்
தரைப்போரில் இரசியாவிற்கு சாதகமாக இருந்த நிலையை மாற்றியமை மாற்றியமைத்தன. இலக்கு அசையும் போது அதற்கு ஏற்ப தமது திசையையும் மாற்றைப் பாயக் கூடியவை.
சிரியாவிடமிருந்த இரசிய தாங்கிகளை அழிக்க குர்திஷ் போராளிகளுக்கு அவை
அமெரிக்காவால் வழங்கப்பட்டன. உக்ரேனை இரசியா ஆக்கிரமித்த போது உக்ரேனுக்கு
அமெரிக்காவின் FGM-148 Javelin ஏவுகணைகளை வழங்கும் படி அதிபர் ஒபாமாவை துணை
அதிபர் ஜோ பிடன் வலியுறுத்தியிருந்தார். அந்த ஏவுகணைக்ள் இரசியா உக்ரேனுக்கு
அனுப்பிய தாங்கிகளை நிர்மூலம் செய்யக் கூடியவை. இரசியாவுடன் பகைமை வளர்க்க
விரும்பாத ஒபாமா அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து உக்ரேனுக்கு ஜோ
பிடனை அனுப்பிய ஒபாமா உக்ரேனுக்கு காத்திரமான உறுதி மொழி எதையும் வழங்க வேண்டாம்
எனவும் சொல்லியிருந்தார். அப்போது உக்ரேன் ஊழல் நிறைந்த நாடாக இருந்தது. அதில்
ஊழல் நிறைந்த எரிவாயு நிறுவனத்தின் ஆலோசகராக ஹண்டர் பிடன் நியமிக்கப்பட்டார்.
வழங்கவிருந்த
ஜவலின் ஏவுகணைகள் நிறுத்தமா?
2019 ஜூலை
10-ம் திகதி உக்ரேனின் புதிய அதிபரின் பிரதிநிதிகள் வெள்ளை மாளிகையை டொனால்ட்
டிரம்ப்பை சந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கவில்லை.
பின்னர் 25-ம் திகதி டிரம்ப் உக்ரேன் அதிபர் வொளோடிமீர் ஜெலென்ஸ்கியுடன்
தொலைபேசியில் உரையாடுகின்றார். 2019 ஓக்ஸ்ட் மாதம் 12-ம் திகதி வெள்ளை மாளிகையைச்
சேர்ந்த ஒருவர் அமெரிக்க உளவு சமூகத்தின் கண்காணிப்பாளர் நாயகத்திடம் ஒரு
முறைப்படு செய்கின்றார். அந்த முறைப்பாட்டில் உக்ரேன் அதிபருடன் டிரம்ப் செய்த
உரையாடலில் ஜோ பிடன் செய்த ஊழல்கள் பற்றி அம்பலப்படுத்த வேண்டும் என
நிர்ப்பந்தித்ததாகவும் அதை மறுத்த போது டிரம்ப் உக்ரேனுக்கு வழங்க இருந்த ஜவலின்
ஏவுகணைகளை வழங்குவதை நிறுத்தியதாகவும் சொல்லப்படிருந்தது. இங்கு டிரம்ப் இரண்டு
குற்றச் செயல்களை செய்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. ஒன்று அமெரிக்கத் தேர்தலில்
தலையிட வெளி நாடு ஒன்றைத் தூண்டியது. அதை மறுத்த போது அந்த நட்பு நாட்டுக்கு
ஆபத்து விளைவிக்கக் கூடிய முடிவை எடுத்தது. இந்த அடிப்படையில் டிரம்பின்
எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்கப்
பாராளமன்றத்தின் மக்களவையில் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற முன்
மொழிவு வைக்கப்பட்டது. அதை ஒட்டி டிரம்ப் மீது விசாரணை செய்ய மக்களவை முடிவு
செய்து விசாரணையை ஆரம்பித்தது. டிரம்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான
அமெரிக்கத் தூதுவர், உக்ரேனிற்கான அமெரிக்கத் தூதுவர், உக்ரேன் தொடர்பான
அமெரிக்கப் படைத்துறை நிபுணர் போன்றவர்கள் விசாரிக்கப்பட்டனர்.
பதவி நீக்க
விசாரணை
அமெரிக்க
அதிபரைப் பதவி நீக்கம் செய்வது இலகுவான ஒன்றல்ல முதல் அமெரிக்கப் பாராளமன்றத்தின
மக்களவையில் ஒரு முன் மொழிவு செய்யப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அக்குற்றச் சாட்டைநீதிக்கான
குழு அல்லது ஒரு சிறப்புக் குழுவால் விசாரிக்கப்பட வேண்டும். நீதி விசாரணைக் குழு
சாதாரண பெரும்பான்மையுடன் தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட
தீர்மானத்தை மக்களவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு அது சாதாரண
பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
பின்னர் பாராளமன்றத்தின் மூதவையில் விசாரணை நடை பெறும். அதற்கன சட்ட மூலம் அங்கு தாக்கல் செய்யப்படும். அதில் மக்களவை
உறுப்பினர்கள் சாட்சியங்கள் சமர்ப்பிப்பர் தலைமை நீதியரசர் மூதவை விசாரணைக்கு
தலைமை தாங்குவார் மூதவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் குற்றவாளி என
முடிவு செய்ய வேண்டும் அப்போது குற்றம் சாட்டப்பட்ட அதிபர் பதிவியிழப்பர்.
முன்னைய பதவி நீக்க முயற்ச்சிகள்
இதற்கு முன்பு
அண்டுரு ஜோன்சன் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோரைப் பதவி நீக்க
முயற்ச்சிக்கப்பட்டது. இருவரையும் பதவி நீக்க அமெரிக்க மக்களவை முடிவெடுத்தது.
ஆனால் இருவரும் மூதவையால் விடுவிக்கப்பட்டனர். 1868இல் ஜோன்சன் மீது போர்
அமைச்சரைப் பதவி நீக்கம் செய்தது சட்ட விரோதம் என்ற குற்றம் சுமத்தப்பட்டது. அவர்
மூதவையில் ஒரு வாக்கால் தப்பித்தார். 1999இல் நீதிக்கு முன் பொய் சொன்ன
குற்ற்ச்சாடு பில் கிளிண்டன் மீது சுமத்தப்பட்டது. மூதவையில் அதற்கு மூன்றில்
இரண்டு பங்கு ஆதவிற்கு 22 வாக்குகள் போதாமல் இருந்தன.
டிரம்பை
விசாரணைக்கு அழைப்பு
டிரம்பிற்கு எதிரான விசாரணையில் வந்து
டிரம்ப்பைத் தோன்றும் படி மக்களவையின் நீதித்துறைக்கான குழுவின் தலைவர் ஜெரால்ட்
நட்லர் அழைப்பு விடுத்ததுடன் வந்து விசாரணையில் பங்கு கொள்ளுன்க்கள் அல்லது
விசாரணையைப் பற்றி குறை சொல்வதை நிறுத்துங்கள் என்றும் சொல்லியுள்ளார்.
விசாரணையில் பங்கு பற்றி சாட்சிகளை அவர் கேள்விகளும் கேட்கலாம் என்றார் அவர்.
மூதவை டிரம்பை பாதுகாக்கும்
டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டை மக்களவை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு
அதிகம் உண்டு. அதை மூதவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறவேற்ற
முடியாது. நூறு உறுப்பினர்களைக் கொண்ட மூதவையில் டிரம்பின் குடியரசு கட்சியினர் 53பேரும்
எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியில் 47பேரும் உள்ள நிலையில் டிரம்பை
குற்றவாளியாக மூதவையில் முடிவு செய்யும் வாய்ப்பு மிகக் குறைவு