
உரசல்களும் வருடல்களும்
பல்லவியாகத் தொடங்கும்
நெருக்கமும் அணைப்பும்
அநுபல்லவியாகத் தொடரும்
வளையொலியும் கட்டிலொலியும்
பக்க வாத்தியங்களாய் இணையும்
முத்தங்களும் தழுவல்களும்
சரணங்களாய் வந்து சேரும்
சிணுங்கல்கள் நிரவல்களாகும்
முனகல்கள் ஆலாபனைகளாகும்
தாரஸ்தாயி சஞ்சாரம்
தரும் ஒரு தனி சுகம்
மேல்ஸ்தாயி சஞ்சாரம்
கொண்டு செல்லும் சுவர்க்கம்.
மொத்தத்தில் நம் உறவு
தனியாவர்த்தனம் இல்லாத
கர்நாடக கீர்த்தனம்.
No comments:
Post a Comment