உலகத்தில் நடக்கப் போகும் சகல சமூக பொருளாதார நிகழ்வுகள் அனைத்தையும் எதிர்வு கூறக்கூடிய பாரிய கணனித் தொகுதிகளை உருவாக்கும் முயற்சிகளில் சுவிட்சலாந்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் மேற்கொள்ளப்படும் The Living Earth Simulator Project (LES) எனப் பெயரிடப்பட்டுள்ள திட்டத்தான் உருவாக்கப்படும் மிகுமேன்மைக் கணனி(supercomputer) உலகின் சகல நிகழ்வுகளையும் ஒப்புச் செயாலாக்கும் (simulate) வல்லமையுடையதாகும்.
மேற்படி மிகுமேன்மைக் கணனி(supercomputer) டுவிட்டர் பதிகளில் இருந்து அரச செலவீனங்கள் ஈறாக சகல உலகத் தகவல்களையும் திரட்டி அடுத்த பொருளாதாரச் சரிவு உட்பட பல உலக எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறனுடையது. இந்த மிகுமேன்மைக் கணனி(supercomputer)உலகப் பந்தின் நரம்பு மண்டலம் போல் செயற்படும் என்று கூறப்படுகிறது.
மிகுமேன்மைக் கணனி(supercomputer)திட்டத்தின் தலைவராகச் செயற்படும் Zurichஇல் உள்ள Swiss Federal Institute of Technology இனது பேராசிரியர் Dirk Helbing அவர்கள் தாம் உருவாக்கும் கணனி உலகின் பல தகவல்களைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்து உலக நிகழ்வுகளை எதிர்வு கூறும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பின் லாடன் தொடர்பான சகல செய்திகளையும் செய்திச் சுரங்கமிடல் - News Mining என்னும் தொழில் நுட்பம் மூலம் ஆய்வு செய்திருந்தால் அவர் இருந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்திருந்திருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
செய்திச் சுரங்கமிடல் - News Mining பற்றிய முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment