எகிப்தின் மோசமான சர்வாதிகாரியும் அமெரிக்காவின் நண்பருமான ஹஸ்னி முபாரக் மாபெரும் மக்கள் எழுச்சியால் பதவியில் இருந்து விரட்டப்பட்டதை இன்றும் உலகெங்கும் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
அண்மைக்கால வரலாற்றில் பதவியில் இருந்த அமெரிக்காவின் அயோக்கிய நண்பர்கள் பல விரட்டப்பட்டதுண்டு. அவர்களில் சிலர்:
- ஈரானிய ஷா Mohammed Reza Pahlavi 1979இல் நாட்டை விட்டு விரட்டப்பட்டார்.
- 1978இல் நிறவெறியன் போத்தா தென்னாபிரிக்காவில் பதவி இறக்கப்பட்டான்
- 1986இல் பிலிப்பைன்சின் பெர்டினாண்ட் மார்கோஸ் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.
- 2011 இல் பென் அலி துனிசியாவில் இருந்து விரட்டப்பட்டார்.
ஈரானில் 1979இல் அமெரிக்கா விட்ட தவறு புரட்சிக்குப்பின்னர் வந்த அரசு ஒரு அமெரிக்காவிற்கு எதிரான அரசாக அமையவிட்டது. இதே தவறை அமெரிக்கா 1980இல் பிலிப்பைன்சில் செய்யாமல் தவிர்த்துக் கொண்டது.
பிலிப்பைன்சின் பெர்டினாண்ட் மார்கோஸ் இற்கு எதிரான புரட்சியில் தனது கையாட்களை ஈடுபடுத்திக் கொண்டது.
ஹஸ்னி முபாரக்கிறகு எதிராக எகிப்தில் மக்கள் கிளர்ந்து எழுந்த போது அமெரிக்கா அடக்கி வாசித்து தனது காரியத்தை சாதிக்கிறது. அமெரிக்கா 18நாள் மக்கள் எழுச்சியில் எழுச்சி செய்த மக்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. எகிப்தில் ஒரு "மாற்றம்" தேவை என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தது. எகிப்தில் புதிதாக அமையப்போகும் ஆட்சி அமெரிக்க சார்பானதா இல்லையா என்பதை இப்போது கூறிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. எகிப்திய படையின் பல உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். அமெரிக்கா எகிப்திற்கு ஆண்டு தோறும் வழங்கிவரும் இரு பில்லியன் டொலர்களில் பெரும்பாலானவை எகிப்திய படையினரின் சௌகரியத்திற்கே செலவிடப்பட்டது. ஒரு சர்வாதிகரிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழும்போது அச்சர்வாதிகாரியின் படையினர் நடுநிலை வகித்தது எகிப்தில்தான் முதன்முறையாக நடந்தது. இது இந்த நடுநிலைக்குப்பின்னால் ஒரு பெரும் கை இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூற முடியும். இதன் உண்மை நிலை அறியச் சிலகாலம் எடுக்கலாம்.
முபாரக்கைத் தொடர்ந்து பதவியில் இருந்து விரட்டப்பட வேண்டிய அமெரிக்காவின் அயோக்கிய நண்பர்கள்:
சவுதி மன்னர் அப்துல்லா.
2005-ம் ஆண்டிலிருந்து உலக பெட்ரோலிய இருப்பில் ஐந்தில் ஒரு பகுதியை கொண்டிருக்கும் சவுதி அரேபியாவை ஆண்டுவருகிறார். அவரது ஆயிரம் பேருக்கு மேல் உறுப்பினராகக் கொண்ட அரச குடும்பம் சவுதியை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி ஆண்டு வருகிறது. இரு பெரும் இசுலாமியத் புனிதத் தலங்களைக் கொண்ட சவுதியில் தேர்தல் இல்லை அரசியல் கட்சிகள் இல்லை. உலகின் மிக மோசமான அடக்கு முறையைக் கொண்ட சவுதி அரசில் தொண்ணூறு இலட்சம் பெண்கள் எந்தவித உரிமைகளும் இன்றி அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இசுலாமியத் தீவிர வாதிகளை அடக்குவதில் சவுதி அரசு அமெரிக்காவிற்கு பெரும் உதவிகள் வழங்கிவருகிறது. 2010இல் மட்டும் அமெரிக்கா சவுதிக்கு 60பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்தது.
யேமனின் அலி அப்துல்லா சலேஹ்
1978இல் இருந்து வட யேமனையும் 1991இல் இரு யேமன்களும் ஒன்றிணைக்கப்பட்டபின் வட தென் யேமன்களையும் ஆண்டு வரும் அலி அப்துல்லா சலேஹ். மோசமான அடக்கு முறை கண்டபடி கைதுகள் பெண்கள் மீதான கொடுமைகள் நிறைந்த யேமனின் அலி அப்துல்லா சலேஹ் அமெரிக்காவின் நண்பர்.
ஜோர்டனின் மன்னர் அப்துல்லா - 2
மூன்றில் ஒருவர் வேலையற்றிருக்கும் ஜோர்டனை மன்னர் அப்துல்லா 1999இல் இருந்து ஆண்டு வருகிறார். ஜோர்டனில் நான்கில் ஒருவர் வறுமையால் வாடுகின்றனர்.
உகண்டாவின் Yoweri Museveni.
ஊழல், வறுமை, வேலையில்லப்பிரச்சனை நிறைந்த நாடு உகண்டா. அங்கு அதன் அதிபர் Yoweri Museveni படாடோப வாழ்க்கை வாழ்கிறார்.