Saturday, 12 December 2009
பிரபாகரன் இறந்துவிட்டாராம் - இலங்கை
விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக இந்தியாவிடம் இலங்கை அதிகாரபூரவமாக அறிவித்து விட்டதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 17ம் திகதி பிரபாகரன் கொல்லப் பட்டதாக அறிவித்த இலங்கை அரசு இதுவரை அதை அதிகாரபூர்வமாக இந்தியாவிற்கு அறிவிக்காமல் இருந்தது. இப்போது திடீரென அறிவித்துள்ளது.
கொழும்பு உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 8-ம் திகதி முன்னைநாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் வழக்கில் எதிரிகளின் பெயர் பட்டியலினை நீதிமனறம் மாற்றம் செய்ய அனுமதித்தது. அதில் முக்கிய எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகவிருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது நெருங்கிய சகாவாகவும் அவ்வியக்கத்தின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராகவும் இருந்த பொட்டு அம்மான் எனப்பட்ட சண்முகநாதன் சிவசங்கர் ஆகியோரின் பெயர்கள் நீக்கப் பட்டன. ஆனால் அதற்கான இறப்பு அத்தாட்சிப் பத்திரம் சமர்ப்பிக்கப் படவில்லை. அதன் பின்பும் அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை.
இப்போது திடீரென இந்த அறிவித்தல் கொடுப்பதற்கும் இலங்கையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரச்சாரங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வியை எழச் செய்கிறது.
Friday, 11 December 2009
ஐநாவின் புரட்டலும் அமெரிக்க மிரட்டலும்.
இலங்கையின் வதை முகம்களான வன்னி முகாம்களில் இருந்து காணாமல் போனோர் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலரும் அடிக்கடி இலங்கை சென்று வந்தவருமான ஜோன் ஹொல்ம்ஸ் அவர்களிடம் இலங்கையில் முகாகளில் இருந்து காணாமற் போனோர்கள் பற்றி Inner City Press வினவியபோது அவர்களைத் தான் காணாமற் போனோர்கள் என்று கூறுவதிலும் பார்க்க அடையாளம் காணப்பட்டு இப்போது புனரமைப்பு முகாம்களில் வைக்கப் பட்டுள்ள முன்பு விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்று புது வியாக்கியானம் அளித்துள்ளார். அதன் ஆங்கில மூலம்:
The UN, too, spoke of accountability of one of three things necessary in Sri Lanka. On December 10, Inner City Press asked the UN official who has most visited Sri Lanka, John Holmes, about reports of people released from the Manik Farm camp only to be put in other closed camps, and about additional disappearances.
Holmes said he wouldn't call those disappearance, rather that people who previously worked with the Liberation Tigers of Tamil Eelam were "still being identified" and put into "rehabilitation camps."
இலங்கை அரசு சார்பில் பலதடவை முகாம்களில் இருந்து பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் காணமற் போயுள்ளனர் என்று கூறியுள்ளது. மத்திய கிழக்கில் காசாவில் உயிரிழந்தவர்களிலும் பார்க்க 5 மடங்கு உயிரழப்பு இலங்கையில் ஏற்பட்டத ஐநா அறியும். இலங்கையில் காணமற் போனோர் என்ற சொல்லிற்கு என்ன அர்த்தம் என்பதை ஐநா அறியாமல் இருக்கலாம் ஆனால் நாம் அறிவோம்.இது இவ்வாறிருக்க அமெரிக்காவின் நிலைப்பாடு இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது:
Ambassador Rice answered, "with respect to Sri Lanka, and frankly other instances of alleged and definite human rights abuses, we will examine these with seriousness internally, and look at what steps we might take bilaterally to reflect those concerns, with respect to any nation. And the President in his remarks in Oslo mentioned today Zimbabwe, Sudan and Burma specifically."
Last week, as Stephen Rapp walked into the UN Security Council, Inner City Press asked him about the Sri Lanka report he had signed. "We are pushing hard on that," Rapp said. But what exactly is being done? Another report authored by Senator John Kerry urges rapprochement with Sri Lanka. So what was that about accountability?
இரண்டையும் இணைத்துப் பார்த்தால் அமெரிக்கா இலங்கையை மிரட்டி "நல்லுறவு" (அல்லது வல்லுறவு) செய்து கொள்ள விரும்புகிறது என்று எண்ணத் தோன்றுகிறது.
Thursday, 10 December 2009
சரத் பொன்சேக்காவை வெல்ல வைக்க அமெரிக்காவின் சதி.
இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து தேவையான பதிவுகளைச் செய்து கொண்டே இருந்தது. இது தொடர்பான பதிவைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: இனக்கொலை
அந்தப் பதிவுகளை சர்வதேச நியமங்களை மீறி போர் செய்த ஒரு அதிகாரக் கும்பலைத் நியாயப் படி தண்டிக்க அமெரிக்கா என்ன சர்ததேச நீதிபதியல்ல. உலகின் மிக மோசமான போர்க்குற்றம் புரிந்த புரிந்து கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களைத் தயாரித்த அமெரிக்கா அதைப் பயன்படுத்தி முதலில் சரத் பொன்சேக்காவை மிரட்டி தேர்தலில் போட்டியிட வைத்தது அமெரிக்கா என்று இலங்கையில் உள்ளோர் நம்புகின்றனர். ஏற்கனவே தனக்கு தோல்வி நிச்சயம் என்று உணர்ந்த ரனில் விக்கிரமசிங்க சரத் பொன்சேக்காவின் பின்னால் அணிதிரண்டார். சிங்கள மக்கள் சரத் பொன்சேக்கா அமெரிக்காவால் உருவாக்கப் பட்ட குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் என்று அறிந்தால் அவர்கள் சரத்தை வெறுப்பார்கள் என்று அமெரிக்கா உணர்ந்து கொண்டுள்ளது. அதிலும் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் தீவிரமாக எதிர்ப்பார்கள்.
இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைக்கப் பட்டபோதும் மனித உரிமைகள் மீறப் பட்டபோதும் அமெரிக்கா சர்வதேச நிறுவனங்களைத் திருப்திப் படுத்தவும் தனனை மனித உரிமைக் காவலன் என்று காட்டவும் இலங்கைக்கு எதிராக சில அறிக்கைகளை வெளியிட்டது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களவர்களுக்கு அமெரிக்காவும் திரை மறைவில் உதவி செய்தது. இது பல சிங்களவர்களுக்கு தெரியாது. ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க அறிக்கைகளைப் பார்த்த சிங்களவர்கள் அமெரிக்கா தமக்கு எதிரானது என்றே நம்பினர். அந்த நம்பிக்கை சரத்தின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று உணர்ந்த அமெரிக்கா தான் இலங்கை தொடர்பாக கொள்கை மாற்றம் செய்யப் போவதாக அறிவித்தது. அதேவேளை அமெரிக்கா தனது தெற்கு-மத்திய ஆசிய உதவிச் செயலர் ரொபேர்ட் பிளேக்கை இலங்கைக்கு அனுப்பி தான் சிங்களவர்களின் நண்பன் என்றும் காட்ட முனைந்தது.
கொழும்பில் வதந்தி
அமெரிக்க உளவாளிகள் கொழும்பில் உள்ள தமிழ் மக்களிடையே சரத் வெற்றி பெற்றால் மஹிந்தவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் எதிராக போர்குற்றம் கொண்டுவந்து அவர்களைத் தண்டிப்பார் என்ற வதந்திகளைப் பரவவிட்டுள்ளதாக கொழும்பில் சிலர் பேசிக் கொள்கிறார்கள். இதற்காக சரத் பொன்சேக்காவிற்கு வாக்களிக்க வேண்டும் என சிலர் மக்களிடையே பேசி வருகிறார்கள். இவ்வதந்த்தி வட கிழக்கிற்கும் பரப்பப் படுகிறது. இதையே ஒரு செய்தியாக வெளியிட்டால் அது மஹிந்தவின் புகழை சிங்கள மக்கள் மத்தியில் உயர்த்தி அவர் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இது வதந்தியாகப் பரவ விடப் பட்டுள்ளது என்று கூறப் படுகிறது.
தீர்ப்பதும் தீர்த்துக் கட்டுவதும்
அமெரிகாவின் தெற்கு-மத்திய ஆசிய உதவிச் செயலர் ரொபேர்ட் பிளேக் கொழும்பில் இனப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று சும்மா சாக்குப் போக்கிற்கு சொல்லிவிட்டு பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றியே அதிகம் கவலைப் பட்டார். அதிலும் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற பதத்தை தவிர்த்து இனங்களுக்கு இடையிலான இணக்கப் பாடு என்ற பதத்தையே அதிகம் பாவித்தார். சிங்கள மக்கள் இனப் பிரச்சனைக்கான தீர்வு என்ற பதத்தையே சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை இனப் பிரச்சனை தீர்க்கப் பட்டுவிட்டது. அதாவது தீர்த்துக் கட்டப் பட்டுவிட்டது.
ஒபாமாவை ஆதரித்த தமிழர்கள்
அமெரிக்கத் தேர்தலில் பல தமிழர்கள் Tamils for Obama என்ற குழுவைத் தொடங்கி பராக் ஒபாமாவை ஆதரித்தனர். அவர்கள் இப்போது அடங்கிப் போய் இருக்கின்றனர். ஒரு முதலாளித்துவ நாட்டின் வெளியுறவுக்க் கொள்கை அதன் வர்தக நலனை ஒட்டியே அமைந்திருக்கும். சில ஆயிரம் பேர்களின் வாக்குகளுக்காக மாற்றப் படமாட்டாது என்பதை அவர்கள் ஏன் உணரவில்லை?
அடங்கிப் போன ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கை மனித உரிமை மீறல்கள் போர் குற்றங்கள் பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சலசலப்பு அடங்கிப் போய்விட்டது. இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் இப்போது இலங்கையை அமெரிக்காவின் கைகளில் விட்டு விட்டது போல் காணப் படுகிறது. அமெரிக்கா ஜீஎஸ்பி வர்த்தகச் சலுகையை இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தை நிர்பந்திக்கலாம அல்லது ஏற்கனவே நிர்பந்தித்திருக்கலாம். பிரித்தானியா தனது பங்கிற்கு இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் அடுத்த மாநாடு நடக்காமல் தடுத்துவிட்டு அதற்கடுத்த மாநாடு இலங்கையில் நடக்க அனுமதித்தது. பிரித்தானியா இதுவரை இலன்கைக்குஏதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தொழிற்கட்சி அரசு பிரித்தானியத் தமிழர்களை ஏமாற்றி விட்டது.
Wednesday, 9 December 2009
கருணாநிதியின் கபட நாடகத்தை அம்பலப் படுத்தும் சரத் பொன்சேக்கா.
இலங்கையில் போர் மும்முரமாக நடந்து தமிழர்கள் தினமும் ஆயிரக் கணக்கில் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு செய்தி தமிழ்நாட்டில் இருந்து வந்தது:
இலங்கையில் போர்நிறுத்தம் கோரி, தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு உற்சாகமாகப் பேசினார்.
நேற்றிரவெல்லாம் கண் விழித்து, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டில்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் கூறினர். ‘நல்லதே நடக்கும்’ என்று தான் உறுதியளித்தனர்.
ஆனால், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது. அதிகாலை 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல், ‘அறிவாலயம் செல்கிறேன்’ என்று கூறிவிட்டு, அண்ணாதுரை இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து, உண்ணா நோன்பை துவங்கினேன்.
இதன் விளைவாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி, போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. இனி இலங்கை ராணுவம், இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் அளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது”சரத் பொன்சேக்கா Outlook India விற்கு வழங்கிய பேட்டியில் கலைஞர் கருணாநிதியின் குட்டு உடைபட்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் அழுத்தங்கள் கொடுக்கப் பட்ட போதும் இந்தியா தமது நடவடிக்கைகளில் தேர்தல் வேளையில் கூட தலையிடவில்லை என்று சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
Did India help with satellites or intelligence inputs? என்று சரத் பொன்ச்சேக்காவிடம் கேட்கக்ப் பட்டபோது அவர் வழங்கிய பதில்:
Not really, but even (if) they did...I can’t tell you (laughs). We didn’t expect that kind of support from India. India was always against the terrorism here. So, despite the pressure which Tamil Nadu politicians had put on the central government even when general elections were being held in India (May ’09), India didn’t interfere in our operations.
கருணாநிதியின் உண்ணாவிரதத்தின் பின் ஒருநாளில் மட்டும் இருபதினாயிரத்திற்கு மேலான தமிழர்கள் கொல்லப் பட்டனர். இந்தக் கபட நாடக்த்திற்கும் கருணாநிதி தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்க செனட் அறிக்கை: தமிழர்களுக்கு எதிரான மோசடி
அமெரிக்க செனட் சபை தனது வெளியுறவுக் கொள்கைக்களுக்கன குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளது. இலங்கை: போருக்குப் பின்னரான தந்திரோபயத்தை மீள்வடிவமைத்தல் என்று தலைப்பிடப் பட்ட இவ்வறிக்கை அமெரிக்க மூதவையால் தெரிவு செய்யப் பட்ட ஒரு குழுவினால் தயாரிக்கப் பட்டுள்ளது. இக்குழு இலங்கை சென்று அங்கு பலதரப்பினரையும் சந்தித்ததாம்.
நீண்டகால அமைதி ஏற்படுத்தும் தன் முயற்ச்சியில் இலங்கை ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறது என்று அந்த அறிக்கை தொடங்குகிறது. அண்மைக்கால சரித்திரத்தில் பயங்கரவாதத்தை போரின் மூலம் தோற்கடித்த சிலநிகழ்வுகளில் இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி அமைந்திருக்கிறது என்கிறது அவ்வறிக்கை.
போர்முடிந்துவிட்டது ஆனால் அடிப்படை முரண்பாடு இப்போதும் கொதிநிலையில் இருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஆயுத முரண்பாடு உருவானதற்கான காரணிகளைச் சரிசெய்வதற்குக் காலம் எடுக்கும் என்பத அவ்வறிக்கை சொல்கிறது. இனப் பிரச்சனைக்கான தீர்வு வெளியில் இருந்து திணிக்கப் படமுடியாது என்பதை அது வலியுறுத்துகிறது.
இலங்கைப் பொருளாதாரம் திடமற்ற நிலையில் இருக்கிறது என்று கூறும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்களுக்கன குழுவிற்கான அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்ககைகான வர்த்தகச் சலுகையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
போர் குற்றம் மனித உரிமைமீறல் ஆகியவற்றிக்கு மத்தியிலும் ராஜபக்ச அரசு மானிடப் பிரச்சனைகளைத் தணிக்க சில நடவைக்கைகளை எடுத்துள்ளது என்றும் இளவயதினரைப் படையில் இருப்பதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மீள்கட்டமைப்பும் அபிவிருத்துயும் இலங்கை அரசால் முடியுமா என்று அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையில் நடந்த இறுதிப்போர் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்கிற அறிக்கை ஒபமா நிர்வாகம் மனித உரிமைப் பிரச்சினையிலும் பத்திரிகைச் சுதந்திரத்திலும் கவனம் செலுத்தியது என்றும் குறிப்பிடுகிறது. ஆனால் கொழும்பு தனது வாசிங்கடனுடானான உறவு கீழ்நோக்கிசெல்கிறது என்று கருதுகிறது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பன:
யூஎஸ்-இலங்கை உறவுநிலையில் முரண்பாடு தோன்ற கொழும்பு மேற்குலகல்லாத நாடுகளுடன் மீள்கூட்டணி சேர்ந்தது. அந்நாடுகள் சுதந்திரத்திலும் பார்க்க பாதுகாப்பில் அக்கறையுள்ள அபிவிருத்தியை இலங்கைக்கு வழங்கின. ராஜபக்சேயின் தலைமை பர்மா, சீனா, ஈரான், லிபியா ஆகிய நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டது. சீனா பல பில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகளை இலங்கையில் செய்துள்ளது.
இத் தந்திரோபாய முரண்பாட்டால் இப்பிராந்தியத்தில் அமெரிக்க நலன்கள் பாதிப்படைகின்றன.
இலங்கையுடனான உறவை அமெரிக்கா இழக்க முடியாது. உலகசரக்குக் கப்பல் போக்குவரத்துக்களில் பாதி இலங்கையை அண்டிய கடற்பரப்பினூடாக நடப்பதால் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கையூடாக அமெரிக்கப் போர்விமானங்கள் பறக்க முடியும். அமெரிக்க கடற்படைக் கலன்கள் இலங்கையில் தரிக்க முடியும்.
இப்படி இலங்கையின் பூகோளகேந்திரோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்திய அறிக்கை இலங்கைக்கு அமெரிக்கா பல உதவிகளைச் செய்யவேண்டும் என்று பலபரிந்துரைகள் செய்கிறது. இலங்ககை செய்ய வேண்டிய ஆறு விடயங்களை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது:
1. உள்ளக இடப் பெயர்வுக்குள்ளானோரை சர்வ தேச நியமங்களுக்கமைய நடாத்துதல்
2. பத்திரிகைச் சுதந்திரம்
3. அவசரகாலச் சட்டங்களை நீக்குதல்
4. புனர் நிர்மாணங்களையும் அபிவிருத்திகளையும் பொதுமக்களுடன் பங்கிடுதல்
5. இனங்களுக்கிடையான இணக்கப்பாடு
6. காணிகள் சம்பந்தமான முரண்பாடுகளைத் தீர்த்தல்
அமெரிக்கச் சதி
அறிக்கை அதிகாரப் பரவலாக்கல் அதிகாரப் பகிர்வு சுயநிர்ணய உரிமை போன்றவற்றை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவை சிங்களவர்களைப் பொறுத்தவரை கெட்ட வார்த்தைகள் என்பதை அமெரிக்கா உணர்ந்து கபடத்தனமாக அவற்றைத் தவிர்த்துள்ளது. இலங்கைக்கு இப்போது சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்கின்றன. இப்போட்டியில் இப்போது அமெரிக்காவும் இணையப் போகிறது. சிங்கள மக்களைத் தன் பக்கம் எப்படி இழுப்பது என்பதிலேயே அறிக்கை அதிக கவனம் செலுத்துகிறது. இதற்காக அறிக்கை தயாரிப்பில் நில்மினி குணரத்ன என்னும் சிங்களப் பெண்மணி ஈடுபடுத்தப் பட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மனிதாபிமானப் பிரச்சனையில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தினால் நீண்டகால அடிப்படையில் அமெரிக்க இலங்கை உறவு பாதிப்படையும் என்பத அறிக்கை சுட்டிக் காட்டுகிறது
சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அமெரிக்கா முதலீடு செய்ய வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. போர்க்குற்றம் புரிந்தோரைத் தண்டிப்பது பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லை.
அறுபதுகளில் கம்யூனிசப் புரட்சிகள் நடக்காமல் இருக்க அமெரிக்கா Peace Corps என்னும் தொண்டர் அமைப்புக்களை கம்யூனிசப் புரட்சி நடைபெறும் அறிகுறி உள்ள நாடுகளில் ஈடுபடுத்தி சமூக சேவை என்றபோர்வையில் கம்யூனிசத்திற்கு எதிராகச் செயற்படுத்தியது. அவற்றை இலங்கையில் ஈடுபடுத்தி ஆங்கிலமும் தகவல் தொழில் நுட்பமும் கற்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று அறிக்கை பரிந்துரை செய்கின்றது.
இந்த Peace Corps மீண்டும் ஆயுத போராட்டம் தமிழர்கள் மத்தியில் உருவாகாமல் இருக்க அமெரிக்கா செய்யும் சதியாகும். அமெரிக்கா இலங்கையுடன் தனது நட்பை மேலும் உறுதியாக்கி தமிழர்களை அடக்கியாள வழி செய்யப் போகிறது.
Tuesday, 8 December 2009
இனக்கொலை: குற்றமுள்ள இந்திய நெஞ்சம் குறு குறுக்கிறது.
1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தை அப்போதைய பாரதப் பிரதம மந்திரி ஒரு இனக்கொலை எனக் கூறினார். இந்தியச் சட்டவாளர்கள் அவையும் (Indian Bar Association) அதை ஒரு இனக் கொலை என்றே கூறியது.
இனக்கொலைக்கான வரைவிலக்கணம்.
ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ , மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது இவைகள் இனக்கொலைகளாகக் கருதப்படும்.
இலங்கையில் இந்த ஆண்டில் நடந்தவற்றிற்கான காட்சிப் பதிவுகளை பின்னுள்ள இணைப்பில் காணலாம். ஒரு எச்சரிக்கை இப்படங்கள் உங்கள் மனதையும் இதயத்தையும் பாதிக்கக்கூடியவை தைரியமுள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்.
http://www.tamilwin.com/vi
http://picasaweb.google.co
இலங்கையில் 2008/09il நடந்தது இனக்கொலை இல்லை என்றால் உலக சரித்திரத்தில் நடந்தவை எதுவும் இனக்கொலை அல்ல.
1983இல் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப் பட்டனர். வீடுகளை இழந்தனர். இப்போது இலட்சக்கணக்கில் அவை நடந்துள்ளது.
இந்திய பொதுவுடமை(கம்யூனிச) கட்சியுன் உறுப்பினர் திரு ராஜா அவர்கள் மாநிலங்கள் அவையில் உரையாற்றும் போது இலங்கையில் நடந்தது இனக்கொலை எனக் கூறினார். அவர் பாவித்த இனக் கொலை என்னும் பதத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி உத்தரவிட்டார் அவைத் தலைவர். மாநிலங்கள் அவையில் பெரிய பூசணிக்காய் ஏன் சோற்றில் மறைக்கப் பட்டது?
இந்திரா காந்தி அன்று பொய் சொன்னார் என்று இன்றைய மாநிலங்கள் அவை கருதுகிறதா? அரசவையில் மாதவிலக்கில் இருக்கும் பெண்ணின் சேலையை உருவுபவர்களிடம் நாம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? மருமகள் சீதனம் கொண்டு வரவில்லை என்றதற்காக உயிருடன் கொழுத்துபவர்களிடம் நாம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? பிறக்கப் போகும் குழந்தை பெண் என்று அறிந்தால் கொல்பவர்களிடமிருந்து நாம் நியாயத்தை எதிர் பார்க்க முடியுமா?
இனக்கொலை என்பது பாரதூரமான குற்றம். இலங்கையில் நடந்த இனக்கொலைக்கு இந்தியா நேரடியாகப் பங்களித்தது என்றும் 20,000இற்கு மேற்பட்ட இந்தியப் படையினர் சிங்களவர்களுடன் இணைந்து இனக்கொலை புரிந்தார்கள் என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.
இலங்கையில் நடந்ததாக தமிழர்கள் நம்புவது இதுதான்: மாவிலாற்றில் இருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கும் போது முன்னேறும் சிங்கள இராணுவத்திற்கு கணிசமான இழப்பு ஏற்படுத்திக் கொண்டே பின்வாங்கினர். அவர்களின் திட்டம் இப்படி சிங்கள இராணுவத்திற்கு இழப்பு ஏற்படுத்திக் கொண்டு தமது தரப்பு இழப்புக்களைத் தவிர்த்துக் கொண்டு போகும் பட்சத்தில் ஒருகட்டத்தில் சிங்கள இராணுவம் பலவீனமடையும் அக்கட்டத்தில் பலத்த தாக்குதல் நடாத்தி சிங்களப் படைகளைச் சிதறடிப்பது. இத்திட்டத்தை தமது உளவாளிகள் மூலம் அறிந்து கொண்ட இந்தியா இலங்கைப் படையினரின் இழப்புக்களுக்கு தனது படைகளை போர்க்களத்திற்குஅனுப்பி ஈடுகட்டியது என்றே தமிழர்கள் கருதுகிறார்கள். அதனால் தமிழரக்ளைப் பொறுத்தவரை இந்தியா ஒரு இனக்கொலையாளி.
இலங்கையில் நடந்தது இனக்கொலை என்றால் இந்தியாவும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் படும் என்று இந்தியா பயப்படுகிறதா? அதனால்தான் மாநிலங்கள் அவைக் குறிப்பில் இனக்கொலை என்ற பதம் நீக்கப் பட்டதா?
Monday, 7 December 2009
சிங்களவர்களின் ருசி சுவைத்த பூனைகளா இந்திய எம்பிக்கள்?
இப்பொது எந்த நாட்டினதும் உளவுத் துறை அமைப்பு தனது நடவைக்கைகளை நிறைவேற்றத் தேவையான நேரத்தில் எதிர்க்கட்சியையும் பயன் படுத்திக் கொள்ளும். எதிர்கட்சியில் உள்ளவர்களும் தேசிய நலனை மனதில் கொண்டு உளவுத் துறையினருடன் இணைந்து செயற்படுவர்.
இப்போது இந்திய உளவுத் துறையின் பெரிய சவால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை மீண்டும் இந்தியாவின் பக்கம் இழுத்து எடுப்பது.
ராஜீவ் காந்திக்குப் பிறகு பல தமிழர்கள் இந்தியாவை வெறுக்கத் தொடங்கிவிட்டனர்.
சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இந்தியா இலங்கைக்கு தமிழர்களைக் கொன்றொழிக்க உதவியதை பலரும் அறிவர். பல தமிழர்கள் இந்தியப் படைகள் நேரடியாக களத்தில் இருந்து சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களைக் கொன்று குவித்தாக நம்புகிறனர்.
இலங்கையில் நிவாரண முகாம் களில் அடைக்கப்பட்டிருக்கும் 2.5 லட்சம் தமிழ் மக்களின் உயிர்க ளைக் குறித்து ஒட்டுமொத்த இந்தி யாவும் கவலைப்பட்டுக்கொண்டி ருக்கிறது. உண்மையில் அவை முகாம்கள் அல்ல. முள்வேலிச் சிறைச்சாலைகள். இவ்வாறு இந்திய நாடாளுமன் றத்தில் தமிழில் பேசுகையில் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார்.
தவித்து நிற்கும் தமிழ் மக்களுக்கு இப்படி ஒரு பேச்சைக் கேட்கும் போது மிகவும் ஆறுதலாக இருக்கும். இலங்கையில் போர் நடக்கும் போது இந்த சுஷ்மா சுவராஜ் என்கிருந்தார் என்ற கேள்வியும் உடன் அவர்கள் மனதில் எழத்தான் செய்யும். இந்தியா தமிழர்களைக் கொல்வதற்கு உதவிசெய்வதுடன் நின்றதா? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது இந்தியா தனது எதிரி சீனாவுடன் இணைந்து கொலைகாரச் சிங்களவர்களைப் பாராட்டும் தீர்மானமாக அது மாற்றியத எந்தத் தமிழன் மறப்பான்? எவன் அதை மன்னிப்பான்? அப்போது வாய் மூடியிருந்த சுஷ்மிதா அம்மையார் இன்று "ஒட்டுமொத்த இந்தி யாவும் கவலைப்பட்டுக்கொண்டி ருக்கிறது" என்று ஏன் பொய் சொல்கிறார். சோனியா காந்திஅப்படிக் கவலைப் படுவதாகத் தொரியவில்லையே! அவர்தான் இந்தியர் அல்லவே என்று வைத்துக் கொள்வோம். சரி சிவசங்கர் மேனனும் நாராயணனும் கவலைப் படுகிறார்களா? எல்லா காங்கிரசு கட்சியினரும் கவலைப் படுகிறார்களா? அப்படிக் கவலைப் படுபவர்கள் ஏன் மஹிந்த ராஜபக்சேயிற்கு வந்து பொன்னாடை போர்த்தினார்கள்?
இப்போது இருக்கும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் முக்கிய நோக்கு பிராமணிய சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதுதான். இலங்கையில் சாதிய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டியவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை அவர்கள் நன்கு அறிவர். அதே பாணியைத் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் பின்பற்றி பார்பனச் சாதியின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டிவிடக்கூடாது என்றுதான் ஹிந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றோர் முன்னின்று விடுதலைப் புலிகளை எதிர்த்தனர். மத்திய அரசில் உள்ள பார்ப்பனர்களை தமிழர்களின் விடுதலை போருக்கு எதிராகத் தூண்டினர்.
இப்போது உலகெங்கும் வாழும் உணர்வுள்ள தமிழ் மக்கள் இந்தியாவை தமது முதல் எதிரியாகக் கருதுகின்றனர். இது இந்தியக் கொள்கை வகுப்பாளர்களைச் சற்றுச் சிந்திக்க வைத்துள்ளது. தமிழர்களை மீண்டும் இந்தியாவின் பக்கம் வென்றெடுப்பதிற்கு அவர்கள் பல முயற்ச்சிகளை மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாகவே திருமாவளவனும் தமிழருவி மணியனும் இலண்டன் வந்து இந்தியாவை விட்டால் உங்களுக்கு உதவ ஒருவரும் இல்லை என்றனர். அது பயனளிக்கவில்லை. இப்போது இந்திய வெளியுறவுத் துறை எதிர்க்கட்சிகளின் உதவியை நாடுகிறது போல் இருக்கிறது. அதன் ஒரு அம்சம் தான் சுஷ்மிதா அம்மையாரின் பாராளமன்ற உரை என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் உரை கட்சி நலன்களுக்கு அப்பால் சென்று தேசிய நலனை கருத்தில் கொண்டுள்ளது. அவர் காங்கிரசுக் கட்சியை தாக்கிப் பேசவில்லை. இது அவர் இந்திய வெளியுறவுத் துறையினதோ அல்லது உளவுத் துறையினதோ வேண்டுகோளின் படி பேசியதாகத் தோன்றுகிறது. அத்துறைகளின் சாதிய கொள்கைகளும் சுஷ்மிதா அம்மையாரின் கட்சியின் திரை மறைவுச் சாதியக் கொள்கைகளும் நன்கு ஒத்துப் போகக் கூடியவை.
இலங்கைக்கு மீண்டும் ஒரு இந்திய பாராளமன்றக் குழு வருமாம். ஏற்கனவே வந்து ராஜபக்சேயிற்கு பொன்னாடை போர்த்த பன்னாடைகள் அவரிடம் இருந்து பரிசுகளும் பெற்றுச் சென்றன. ருசிகண்ட பூனைகள் மீண்டும வருகின்றனவா?
Sunday, 6 December 2009
சரத் பொன்சேக்காவின் பின்னால் இந்தியா செல்லுமா?
சிங்களவர்கள் போரில் வெல்ல இந்தியா சகல உதவிகளும் செய்தது. ஆனால் சீனா இலங்கையில் பாரிய திட்டங்களை நிறைவேற்ற மஹிந்த ராஜபக்சே அரசு அனுமதி அளித்துள்ளது. ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களுக்கான செலவை சீன வங்கி இலங்கைக்குக் கடனாக வழங்கும். அதை வைத்து சீன நிறுவனங்கள் இலங்கையில் அத்திட்டங்களை நிறைவேற்றும். அத்திட்டங்கள்:
- புத்தளத்தில் அனல் மின்நிலைய இரண்டாம் கட்டம்.
- அம்பாந்தோட்டையில் துறைமுகத்தின் இரண்டாம் கட்டம்.
- அம்பாந்தோட்டை விமான நிலையத் திட்டம்.
- மாத்தறை கதிர்காமம் இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
- பிந்துவர மாத்தறை இடையிலான் விரைவுப் பாதை அமைப்பு.
- மதவாச்சி தலைமன்னார் இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
- யாழ்ப்பாணத்தில் பல பெருந்தெருக்கள் அமைப்பு.
- யாழ்-மன்னார்-புத்தள இணைப்பு தெருக்கள்
- பலாலி காங்கேசன் துறை இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
சக்தியற்ற இந்தியா
இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு மும்முனைப் போட்டியை ஏற்படுத்த முனைந்தது. அது சரத் பொன்சேக்கா, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்சே ஆகியோருக்கிடையிலானதாக இருக்க இந்தியா விரும்பியது. இலங்கையில் தனது விருப்பத்தை நிறைவேற்றும் சக்தி இந்தியாவிடம் இல்லை. சிங்களவர்களுக்கு சேவகம் செய்து தமிழர்களை அழிக்க உதவ மட்டுமே முடியும். ரணிலை இந்தியாவிற்கு அழைத்து தனித்துப் போட்டியிடும் படி வற்புறுத்தியது இந்தியா. ரணில் அதற்கு மறுத்து அமெரிக்காவின் சொல்கேட்டு சரத் பொன்சேக்காவின் பின்னால் அணிதிரண்டார். இந்தியாவின் மும்முனைப் போட்டியின் ஒரு அம்சமாகவே கலைஞர் கருணாநிதி ரணிலை ஆதரித்தும் அவருக்கு சென்ற குடியரசுத் தேர்தலில் வாக்களிகாததிற்கு விடுதலைப் புலிகளை தாக்கியும் ஒரு அறிக்கை விட்டார்.
இந்தியாவை ஓரம் கட்டிய ரணில்
ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மறுத்துவிட்டு அமெரிக்க ஆதரவாளராக மாறியதுடன் இந்தியா வேறு வழியின்றி மஹிந்த ராஜபக்சேயின் பின்னால் போனது. அதற்குப் பலமாக தமிழ் பேசும் மக்களை ஒன்று திரட்டி தான் சொல்லும் வேட்பாளர்களுக்கு அவர்களை வாக்களிக்கச் செய்யும் முயற்ச்சியில் இந்தியா இறங்கியது அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. பிரணாப் முகர்ஜீ இலங்கை வந்து மஹிந்த ராஜபக்சேயை வடக்குக் கிழக்கு ஒருங்கிணைப்பை செய்யவிருப்பதாக அறிவிக்கும்படி வேண்டினார். மஹிந்த அது ஒரு அரசியல் தற்கொலை என்பதை உணர்ந்து அதை பகிரங்கமாக மறுத்து பிரணாப் முகத்தில் கரிபூசினார். ஆனாலும் தொடர்ந்து மஹிந்தவிற்கு இந்தியா ஆதரவு வழங்கியது. ஆனால் மஹிந்த மேலுள்ள ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களை சீனாவிற்கு வழங்கினார்.
அமெரிக்கத் திட்டம்.
அமெரிக்காவின் திட்டம் சீனாவை இலங்கையில் இருந்து ஓரம் கட்டுவது. இந்தியாவால் இதைச் செய்ய முடியாது. சரத் பொன்சேக்காவை வெற்றி பெறச் செய்ய அமெரிக்கா பல வகையில் செயற்படுகிறது. முதலில் திரை மறைவில் தமிழர்கள் மத்தியில் ஒரு செய்தி பரப்பப் பட்டது. அதாவது சரத் ஆட்சிக்கு வந்தால் ராஜபக்சேக்களுக்கு எதிராக போர்க் குற்றம் சுமத்தப் படும் என்பது. சரத் பொன்சேக்காவை வெற்றி பெறச் செய்ய மலையத் தமிழர்களின் வாக்கு பெரிதும் உதவும் என்று அமெரிக்கா எண்ணுகிறது. அதனால் சீனாவை ஓரம் கட்டும் தன் முயற்ச்சியில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்கா கடந்த சில தினங்களாகப் பெரு முயற்ச்சி செய்கிறது. அதன் ஒரு அம்சமாக சரத் பொன்சேக்கா இந்தியா சென்று இந்திய வெளியுறவுத் துறையினரைச் சந்தித்தார். இந்தியா இப்போது மனம் மாறி சரத்-ரணில் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் அல்லது அமெரிக்கா மலையகத் தமிழர்களின் அரசியல் கட்சிகளிடையே பிரிவை உண்டாக்கி அவர்கள் வாக்குக்களைப் பித்து பெரும் பகுதியை சரத் பொன்சேக்காவிற்கு அதரவாக விழச் செய்யும்.
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...