Saturday, 7 August 2010
பறக்கும் தட்டு பற்றிய தகவலை மறைத்த பிரித்தானியப் பிரதமர்
பறக்கும் தட்டுக்கள் பற்றி தாம் அறிந்தவற்றை மறைத்து வைத்திருப்பதாக பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சு மீது ஒரு குற்றச் சாட்டு இருந்து வருகிறது. இது பற்றிய முக்கிய தகவல் ஒன்று இப்போது வெளிவந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியப் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சேர்ச்சில் அவர்கள் ஒரு பறக்கும் தட்டு சம்பவம் பற்றி ஐம்பது வருடங்களுக்கு மறைத்து வைத்திருக்கும்படி பிரித்தானியப் பாது காப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டதாக அவரது மெய்ப்பாதுகாவலரின் பேரன் இப்போது பகிரங்கப்படுத்தியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ஒரு பிரான்சில் ஜெர்மனியப் படையினருக்கு எதிராக தாக்குதல் நடாத்திவிட்டுத் திரும்பும் போது பிரித்தானிய ஆகாயப்படை விமானி ஒருவர் தனது விமானத்திற்கு அண்மையாக இன்னொரு உலோகப் பொருள் வந்ததையும் தனது வேகத்திற்கு ஏற்ப அந்த மர்மப் பொருளும் தனது வேகத்தை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தார். இந்தத் தகவல் வெளிவந்தால் மக்கள் மத்தியில் பலத்த பீதி ஏற்படும் என்று இதை மறைக்கும் படி உத்தரவிட்டார் வின்ஸ்டன் சேர்ச்சில்.
பிரித்தானிய கதுவி(ரடார்)கள் இருநூறுக்கு மேற்பட்ட பறக்கும் மர்மப் பொருள்களைப் பதிவு செய்துள்ளன. பொதுமக்களிடமிருந்து பறக்கும் மர்மப் பொருள்களைக் கண்டதாக 343 கடிதங்கள் பிரித்தானிய அரசிற்கு கிடைத்துள்ளன. 1996-ம் ஆண்டு மட்டும் பிரித்தானிய அரசு 600க்கு மேற்பட்ட அறிக்கைகள் பறக்கும் மர்மப் பொருள்கள் சம்பத்தமாக தயாரிக்கப்பட்டன.
பிரித்தானிய அரசின் தகவல்களின் படி பறக்கும் மர்மப் பொருள்களை அவதானித்தல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் பலத்த வீழ்ச்சியைக் கண்டுள்ளன. பல பறக்கும் மர்மப் பொருள்கள் பிரித்தானிய மீது உளவு பார்க்க சோவியத் ஒன்றியம் அனுப்பிய விமானங்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
Thursday, 5 August 2010
போர் குற்றம்: இன்று Naomi Campbell நாளை அசின்?
உலகின் முன்னணி மாதிரி அழகி நஓமி கம்பெல் Naomi Campbell பற்றி திடீரென செய்திகளில் அடி பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணம் லைபீரியாவின் சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor)இற்கு எதிரான போர்க் குற்றச் சாட்டில் சாட்சியாக அழைக்கப்பட்டமையாகும். 1997-ம் ஆண்டு நெல்சன் மண்டேலா வழங்கிய விருந்துபசாரத்தில் நஓமி கம்பெல் Naomi Campbellஉம் சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor)உம் கலந்து கொண்டனர். இதில் பாக்கிஸ்த்தானிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கானும் கலந்து கொண்டிருந்தார் என்பது ஒரு உதிரி தகவல்.
மண்டேலாவின் விருந்தில் நஓமி கம்பெல் Naomi Campbellஉம் சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor)உம் சந்தித்துக் கொண்டனர். பின்னர் சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor) நஓமி கம்பெல் Naomi Campbellஇற்கு வைரங்களை வழங்கினாரா என்பதுதான் கேள்வி. இதற்கும் போர்குற்றத்திற்கும் என்ன சம்பந்தம்? சீரா லியோன் தீவிரவாதிகள் சட்டவிரோதமாக அகழ்ந்தெடுத்த வைரங்களை சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor)இடம் வழங்கி அதன் மூலம் அவர்களுக்கு சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor) ஆயுதங்களைப் பெற்றுக் கொடுத்தாரா என்பதைத்தான் சார்ல்ஸ் ரெய்லருக்கு (Charls Taylor) எதிரான போர்க் குற்ற தீர்ப்பாயம் (War Crime Tribunal) அறிய முற்படுகிறது. சார்ல்ஸ் ரெய்லர் இடம் தாராளமாக வைரங்கள் இருந்தன என்பதை அறிய போர்க் குற்ற தீர்ப்பாயம் (War Crime Tribunal) முயல்கிறது. ஆனால் சார்ல்ஸ் ரெய்லருக்கு எதிரான போர்க் குற்ற தீர்ப்பாயம் (War Crime Tribunal) விசாரணை செய்கிறது என்பதை நஓமி சாட்சியாக அழைக்கப் பட்ட பின்னர் உலகெங்கும் பலரும் அறிந்து கொண்டுள்ளனர்.
நஓமி கம்பெல் Naomi Campbellதான் முன்னறி முகமில்லாதவர்களிடம் இருந்து வைரங்கள் பெற்றுக் கொண்டதாகவும் அவற்றை ஒரு பொதுத் தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்புச் செய்ததாகவும் ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் அந்தப் பொதுத் தொண்டு நிறுவனம் அப்படி எந்த வைரங்களையும் தாம் பெறவில்லை என மறுக்கிறது.
அண்மைக் காலங்களில் ஆரிய சிங்களக் கூட்டமைப்பிற்கு எதிராக தமிழர்கள் அடைந்த ஒரு வெற்றி இலங்கையில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவைத் தோற்கடித்ததாகும். இந்த தோல்வியைத் தொடர்ந்து இந்திய நடிகை அசின் இலங்கை சென்றார். படப்பிடிபிற்காக என்று சொல்லிச் சென்றவர் அங்கு படப்பிடிப்பில் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
இலங்கையிலும் போர் குற்றம் நடந்தது என்று பலரும் கூறுகிறார்கள். பல பன்னாட்டு பொது நிறுவனங்கள் அது தொடர்பாக விசாரணை தேவை அதற்குரிய சாட்சியங்கள் உண்டு என்று சொல்கிறார்கள். அதற்கும் ஒரு நாள் விசாரணை நடக்கும். இந்திய நடிகை அசின் திடீரென்று இலங்கை அரசின் விருந்தாளியாக மாறி திருமதி ஷிராந்தி ராஜபக்சவுடன் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ளவர்கள் மற்ற தமிழ் நடிக நடிகைகளைச் சந்திக்க விரும்புகிறார் என்று அறிக்கை விட்டார். இவரை இப்படிச் சொல்ல வைத்தது என்ன? இவருக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் என்ன கொடுக்கல் வாங்கல் நடந்தது என்பதை அறிய நாம் ஆவலாக இருக்கிறோம். நாளை நடபெறவிருக்கும் போர்குற்ற விசாரணையில் அசின் சாட்சியாக அழைக்கப் படுவாரா? ABC, BBC, CNN, Channel -4 போன்ற ஊடகங்களில் அசினும் தோன்றுவாரா?
இன்று கறுப்பின மக்களைப் பிடிக்காத பல மேற்குலக ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பெரிது படுத்தி நஓமியை வாங்கு வாங்கென்று வாங்குகின்றன. நாளை தென்னிந்தியரைப் பிடிக்காத வட இந்திய ஊடகங்களும் அசினை வாங்கு வாங்கென்று வாங்குமா?
இலங்கையில் நடந்த போர்குற்றங்களை விசாரிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படும். பல முகமூடிகள் பாக்கு நீரிணையின் இருபுறத்திலும் கிழியும். இதனால்தான் ஒரு முட்டைக்கண் பா.....ன நாய் அண்மையில் இலங்கைப் போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு எதிராக ஆசிரியத் தலையங்கம் தீட்டியது.
கீழுள்ள இணைப்பில் நஓமி கம்பெல் Naomi Campbell இன் சாட்சியத்தின் காணொளியைக் காணலாம்:
http://www.youtube.com/watch?v=PJ2zWmzqbJU
iPadஇன் இன்னொரு புரட்சி - ஓவியங்கள்
கணனி உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஐ-பாட் இப்போது புதிய ஒரு பரிமாணத்தில் தனது பயன்பாட்டை பிரபலப்படுத்தியுள்ளது. திரைச்சீலையின்றி வர்ண வர்ண எண்ணைப் பூச்சுகளின்றி அற்புதமான ஓவியங்களை ஐ-பாட்டில் உருவாக்கி பலரையும் கவர்ந்துள்ளார் இருபத்தி இரண்டு வயதான கைல் லம்பே(ர்)ட் என்னும் எண்மிய ஓவியர். டிஸ்னியின் Toy Story திரைப்படக் காட்சிகளை ஐ-பாட்டில் ஓவியங்களாக வரைந்துள்ளார் கைல் லம்பே(ர்)ட்.
கைல் லம்பே(ர்)ட் வரையும் ஓவியங்கள் இருநூற்றி இருபது ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனையாகின்றன. பலரும் இவற்றை எண்ணை ஓவியங்கள் என்றே நம்புகின்றனர். " sketchbook pro""brushes app" என்னும் செயல்மென்பொருள்(aaplication) களைப் பாவித்து கைல் லம்பே(ர்)ட் இந்த ஓவியங்களை வரைகின்றார். செய்ய வேண்டியதெல்லாம் ஐ-பாட்டின் திரையை உங்கள் கற்பனைக்கேற்ப விரல்களால் தொட்டுத் தடவ வேண்டியதுதான் சிறந்த ஓவியங்கள் உருவாகும். எங்கு எப்படி எதை என்னமாதிரி தடவ வேண்டும் என்பதுதான் தொழில் நுட்பம்.
Wednesday, 4 August 2010
மிகச் சிறிய கணனி அறிமுகம் - Stealth's new LPC-100 mini computer
மிகச் சிறிய கணனி என தமது புதிய LPC-100 mini என்னும் கணனியை Stealth நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது காரம் பெரிய கடுகு எனலாம். கணனி சிறிது காரியம் பெரிது. இப்போது பாவனையில் உள்ள சிறு கணனிகளுக்குள் இது வல்லமையில் பெரியது என்கிறார்கள். இதன் தரம்:
- 2.53GHz of processing power.
- 500GB of hard drive storage.
- 4GB of memory.
- 1.9 GHz Dual Core Celeron T3100 processor.
- As standard but upgrades to a 2.26GHz Intel Core 2 Duo P8400 or 2.53GHz T9400 are available. There's up to 4GB of DDR3 memory supported over two slots and the basic configuration comes with a 160GB SATA hard drive but there's up to 500GB offered as optional upgrades and solid state drives in the storage pot too.
இதன் அளவு அங்குலங்களில்: 4.0 x 6.1 x 1.45
இதன் அடிப்படை விலை US$995
Tuesday, 3 August 2010
Monday, 2 August 2010
காகித்திலே கலை வண்ணம் கண்டான்
Octopus Paul புது வடிவம் - Elvis Presley ஆக
தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கிண்ணக் கால்பாந்தாட்டத்தில் ஜேர்மனி பங்கு பற்றிய போட்டிகளின் முடிவுகளைச் சரிவர எதிர்வு கூறியதால் பிரபலமடைந்த Octopus Paul இப்போது எல்விஸ் பிறெஸ்லியாக வேடமிட்டு பெரும் பணம் சம்பாதிக்கவிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரபல பாடகரான King of Rock and Roll என்றழைக்கப்படும் எல்விஸ் பிறெஸ்லி 1977-ம் ஆண்டு தனது 42வது வயதில் காலமானவர். அவர் இப்போதும் உயிருடன் இருப்பதாக அவரது பல மில்லியன் இரசிகர்கள் நம்புகிறார்கள். எல்விஸிற்கு மரியாதை செலுத்தும் பாடல் தொகுப்பில் Octopus Paul உம் பங்குபற்றிப் பாடவிருக்கிறது. The name of the album will be "Paul The Octopus Sings Elvis." எட்டுக்கால் பாடகர் Octopus Paulஇற்கு ஒலிவாங்கியைப் பிடித்துக் கொண்டு பாடுவதிலோ நடனமாடுவதிலோ சிரமம் இருக்காது.
ஏற்கனவே பல புத்தகங்கள் Octopus Paulஐப்பற்றி எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு புதிய ஐ-போன் செயல்மென்பொருளும் Octopus Paulஐப்பற்றி வெளிவரவுள்ளது. இந்த ஆண்டின் நத்தார் பண்டிகைக்கு பெரும் அளவிலான Octopus Paul விளையாட்டுப் பொருள்கள் சந்தைக்கு வரவிருக்கின்றன.
ஜேர்மன அதிபர் அஞ்செலா மேர்கெல்லிலும் பார்க்க Octopus Paul உலகெங்கும் புகழடைந்துள்ளது. கொலை அச்சுறுத்தலில் இருந்து Octopus Paulஇற்கு கடும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஹொலிவூட் திரைப்படத்திலும் Octopus Paul விரைவில் தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Octopus Paul இன் வாழ்க்கை தொடர்பான ஆவணப்படம் The Murder Of Paul The Octopus ஏற்கனவே தயாராகிக்கொண்டிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...