![](http://3.bp.blogspot.com/-vKcequMe55o/TbIPxkBAp_I/AAAAAAAAEM4/HRrbhWImjgM/s400/three_girl_vel_tharma.jpg)
திருமணத்திற்கு பெண்ணைத் தேர்ந்தெடுப்பது பெரும் பிரச்சனை. அதற்காக பல சிரமங்களையும் சந்திக்க வேண்டிவரும்.
இதற்காக ஒருவர் மூன்று பெண்களிடம் ஆயிரம் டாலர்களைக் கொடுத்து இதைச் செலவு செய்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பினால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று அறிய முயற்சித்தார். ஒரு பெண் அந்த ஆயிரம் டாலர்களுக்கும் தனக்கு ஆடை அணிகலன்களை வாங்கி தன்னை ஒரு அழகிய திருமணப் பெண்ணாக்கினாள். இரண்டாம் பெண் அந்த ஆயிரம் டாலர்களுக்கும் வீட்டுக்கு தேவையான அவசியப் பொருட்களை வாங்கினாள். மூன்றாவது பெண் ஆயிரம் டாலர்களையும் வங்கியில் வைப்பிலிட்டாள்.
இப்போது கேள்வி மூவரின் எந்தப் பெண்ணைத் திருமணம் செய்வது என்பதாகம். இதற்கான பதில் வேறு வேறு நாட்டவர்களிடம் இருந்து வேறு மாதிரியாக இருந்தது:
அமெரிக்க இளைஞன்: மூவரில் எந்தப் பெண்ணின் தந்தை அதிக பணக்காரனோ அவளத் திருமணம் செய்வேன்.
பிரித்தானிய இளைஞன்: மூவரில் யார் அழகியோ அவளைத் திருமணம் செய்வேன்.
பிரெஞ்சு இளைஞன்: மூவரில் யார் கவர்ச்சிகரமானவளோ அவளத் திருமணம் செய்வேர்.
அரபு நாட்டு இளைஞன்: மூவரையும் திருமணம் செய்வேன்
இந்திய இளைஞன்: எனது பெற்றோர் சொல்லும் பெண்ணைத் திருமணம் செய்வேன்.
இலங்கை இளைஞன்: எனக்கு இன்னும் திருமணத்திற்கு காலம் இருக்கிறது. எனக்கு இப்போது வயது 31தான் ஆகிறது. ஒரு அண்ணன் வேறு 35 வயதில் திருமணமாகாமல் இருக்கிறான்.