Saturday, 9 February 2013

மானம் கெட்ட இந்தியாவும் கெடுகெட்ட இந்து மதமும் துப்புக் கெட்ட TESOவும்

ராஜபக்ச கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த போதும் கமலேஷ் ஷர்மா ஒழுங்கு செய்த பொதுநலவாய அமைப்பின் பொருளாதார மாநாட்டை ஆரம்பித்து வைக்க வந்த போதும் பிரித்தானியா வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள்.

ராஜபக்சவின் பிரித்தானியப் பயணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய பல தமிழர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியா வந்தனர். யாரும் எல்லையில் வைத்துக் கைது செய்யப்படவில்லை. எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பிரித்தானிய அரசு தமிழர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வசதி செய்வதற்கு தெருக்களில் வாகனங்கள் செல்வதைத் தடுத்தது. எவரையும் பிரித்தானிய அரசு கைது செய்யவில்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு மூதாட்டி தமிழர்களுக்கு எதிராக செய்த அட்டூழியங்களை சொல்லி அழுத போது ஒரு காவற்துறை அதிகாரி கண்ணீர் வடித்தார். ஆனால் இந்தியாவில் நடந்தது என்ன? ஆர்ப்பாட்டக் காரர்கள் போகவிடாமல் தெருக்களை மூடினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக் காரர்கள் கைதுசெய்யப்பட்டனர். ராஜபக்சே செல்லும் பாதை எங்கும் இந்திய அரச செலவில் காவற்துறையினரும் உளவுத் துறையினரும் பல்லாயிரக் கணக்கில் குவிக்கப்பட்டனர் இதனால் இந்தியா தான் ஒரு மானம் கெட்ட நாடு என்பதை நிரூபிக்கிறது. இலங்கைப் போர்க் குற்றத்தில்தானும் ஒரு பங்காளி என்பதை இந்தியா உறுதி செய்கிறது.



கேடுகெட்ட இந்து மதம்
இலங்கையில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் ராஜபக்ச ஆட்சியில் அழிக்கப்பட்டுள்ளன. உள்ளன. பல நூற்றுக் கணக்கான  ஆலயங்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகளாக மாற்றப் பட்டுள்ளன. இந்து ஆலயங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனாலும் ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை இந்து முன்னணி ஆதரிக்கிறது.  இந்துக்களின் மிக முக்கிய ஆலயத்திற்குள் அவர் அனுமதிக்கப்பட்டு ஆசி வழங்கப்பட்டுள்ளார். போருக்கு முன்னர் ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரான போரில் வெல்ல தமிழ்நாட்டிலேயெ 2008-ம் ஆண்டு பல யாகங்கள் நடந்தன. இன்னாளில் பொய்மைப் பார்ப்பனர் அவர் ஏதேனும் செய்து காசு பெறப்பார்ப்பர். சுப்பிரமணிய சுவாமி என்ற ஒரு பார்ப்பன நாதாரி ராஜபக்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதையிட்டு கவலை தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். சில நாய்கள் போட்ட எலும்புத் துண்டுக்கு மேலாக குரைக்கின்றன.

சுப்ரபாதத்தின் முதல் வரியில் புலி
ராஜபக்ச திருப்பதியில் சுப்ரபாதம் படிக்கும் போது இருந்தாராம். சுப்ரபாதத்தின் முதல் வரியிலேயே புலி என்ற சொல் வருகிறது:
  • கோசலையின் தவப்புதல்வா ராமா கிழக்கில் விடியல் வருகின்றதே
    எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை

துப்புக் கெட்ட  TESO
மத்திய ஆட்சியில் இருந்து கொண்டே தமிழர்கள் இலட்சக் கணக்கில் கொல்லப்பட்ட போது உண்ணாவிரத நாடகமாடி தமிழரை ஏமாற்ற முயன்றவர் கலைஞர் கருணாநிதி. மருத்துவ சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை வர முதலில் அனுமதித்து விட்டு பின்னர் விமான நிலையத்தில் வேண்டுமென்றே நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டுப் பின்னர் திருப்பி அனுப்பிய அரசின் பங்காளி கருணாநிதி. அவரது அரசு ராஜபக்சே வருகைக்கு  சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறது. அவரது TESO கும்பல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடாத்தியது. ஆந்திரா செல்லும் ராஜபக்சேவிற்கு சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதால் எந்த வித பயனும் இல்லை என அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படி ஏதாவது செய்து கழகக் கண்மணிகளை ஏமாற்ற வேண்டும். இவர்கள் புதுடில்லியின் கொத்தடிமைகள். இவர்களால் புதுடில்லியை எதிர்த்து ஒரு விரலைக் கூட ஆட்ட முடியாது. அப்படிச் செய்தால் திஹார் சிறையில்தான் அவர்களது முழுக் குடும்பமும் இருக்க வேண்டிவரும். இலங்கையில் குண்டு வீசுவதை நிறுத்தி விட்டாரகள் என்று பொய் சொன்ன கருணாநிதியை இல்லை இப்போதும் குண்டு போடுகிறார்களே என்று கேட்ட போது மழை விட்டுவிட்டது தூவானம் அடிக்கிறது என்றார். கடந்த சட்ட சபைத் தேர்தலில் எதிர்கட்சித் தலைமை பதவி கூடக் கிடைக்காமல் உங்களுக்கு விழுந்த அடி தூவானம் மட்டுமே. 2014 மே மாதத்திற்கு முன்னர் நடக்க இருக்கும் பாராளமன்றத் தேர்தலில் உங்களுக்கு விழவிருக்கும் அடி பெரு மழையாக இருக்கும்.

கைது செய்யும் குண்டாச்சி
தமிழின உணர்வாளர்களின் ஆதரவால் ஆட்சிக் கதிரைக்கு ஏறிய குண்டாச்சி ராஜபக்சேவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறார்.

Friday, 8 February 2013

போட்டிக் கவிதை

 காதல் போட்டி
அவள் ஜுன்ஸிற்கும்
அவள் பாவாடைக்கும் போட்டி
அவளை அழகு படுத்துவது யாரென்று

அவள் blouseக்கும்

T-shirtக்கும் போட்டி
அவளை இறுக அணைப்பது யாரென்று


அவள் இடக் கண்ணுக்கும்
வலக்கண்ணுக்கும் போட்டி
என்னைக் கொல்வது யாரென்று

அவள் உதட்டிற்கும்
அதரத்திற்கும் போட்டி
என்னை அதிகம் கவர்வது யாரென்று

அவள் பற்றிய நினைவிற்கும்
அவள் பற்றிய கனவிற்கும் போட்டி
என்னை வதைப்பது யாரென்று


அரசியல் போட்டி
புது டில்லிக்கும் கொழும்புக்கும் போட்டி
தமிழரை யார் அதிகமாக அழிப்பதென்று
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் போட்டி
தமிழர்களை யார் அதிகம் ஏமாற்றுவதென்று

ஈழத்தமிழ் அரசியல் வாதிகளிடையே போட்டி
யார் அதிகம் கெடுப்பதென்று
புலம் பெயர் தமிழ் அமைப்புக்களிடையே போட்டி
எத்தனை கூறுகளாகப் பிரிவது என்று

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் போட்டி
இனக்கொலைக்கு யார் உதவுவதென்பதென்று
இந்து நாடுகளுக்கும் இசுலாமியநாடுகளுக்கும் போட்டி  

ஈழக் கோவில்களை அழிப்பதற்கு யார் உதவுவது என்று

Thursday, 7 February 2013

உலக நகரங்களின் தரவரிசை

 உலகிலேயே அழகிய நகரங்கள், பயங்கர நகரங்கள், செலவு மிக்க நகரங்கள், அழுக்கான நகரங்கள் ஆகியவற்றின் தரவரிசைகள்:

உலக நகரங்களில் வாழ்வதற்கு செலவு மிக்க நகரமாக ஜப்பானியத் தலை நகர் டோக்கியோ திகழ்கிறது. வாழ்வதற்கு செலவு குறைந்த நகரங்களாக பாக்கிஸ்த்தானின் கராச்சியும், இந்திய மும்பாயும் இருக்கிறது. உலகிலேயே அழுக்கான நகரமாக மும்பாய் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அங்கு இருப்பதால் அது அழுக்கான நகரமா?

செலவு மிக்க நகரங்கள்:
  1. டோக்கியோ - ஜப்பான்
  2.  ஒசாக்கா - ஜப்பான்
  3. சிட்னி - ஒஸ்ரேலியா
  4. ஒஸ்லோ - நோர்வே
  5. (=4) மெல்போர்ண் - ஒஸ்ரேலியா
  6. சிங்கப்பூர்
  7. ஜூரிச் - சுவிஸ்
  8. பாரிஸ் - பிரான்ஸ்
  9. கரகஸ் - வெனிசுலேவியா
  10. ஜெனீவா - சுவிஸ் 

செலவு குறைந்த நகரங்கள்:
=1. கராச்சி - பாக்கிஸ்த்தான்
=1. மும்பாய் - இந்தியா
3. புதுதில்லி - இந்தியா
4. காட்மண்டு - நேப்பாளம்
=5 அல்ஜீர்ஸ் - அல்ஜீரியா
=5 புச்சாரெஸ்ற் - ருமேனியா
7. கொழும்பு - இலங்கை
8. பனாமா நகர் - பனாமா
9. ஜெட்டா - சவுதி அரேபியா
10. டெஹ்ரான் - ஈரான்

உலகின் அழகிய நகரங்கள்:
1. வெனிஸ் - இத்தாலி
2. பாரிஸ் - பிரான்ஸ்
3. பிராக் - செக் குடியரசு
4. லிஸ்பன் - போர்த்துக்கல்
5. Rio De Janeiro - பிரேசில்
6. அம்ஸ்ரெடம் - நெதர்லாந்து
7. ஃபுளோரென்ஸ் - இத்தாலி
8. ரோம் - இத்தாலி
9. புயூடபெஸ்ற் - BUDAPEST - ஹங்கேரி
10. BRUGES - பெல்ஜியம்

உலகிலேயே அழுக்கான நகரமாக மும்பாய் திகழ்கிறது. மிகவும் சுத்தமான நகரங்களாக டோக்கியோவும் சிங்கப்பூரும் இருக்கிறது. நட்புமிக்க நகரங்களாக மெக்சிக்கோவின் கன்கன், டோக்கியோ, சிங்க்ப்பூர் ஆகியவை இருக்கின்றன. போர்ச்சுகலின் லிஸ்பன், துருக்கியில் இஸ்தான்புல், தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் ஆகியவை மற்ற நட்புமிக்க நகரங்களாகும். முதல்தர கொள்வனவு நகரமாக நியூயோர்க் நகரம் இருக்கிறது. உலகிலேயே வாழப் பயங்கரமான நகரமாக கொலம்பியா இருக்கிறது. வாழப் பயங்கரமான நகரங்களில் 10-ம் இடத்தில் கஷ்மீர் இருக்கிறது.

Wednesday, 6 February 2013

பார்வைகளின் அரவணைப்பு


பார்வைகளின் அரவணைப்பில்
கருவாகி
புன்னகைகளின் அரவணைப்பில்
உருவாகி
உள்ளங்களின் அரவனைப்பில்
பெரிதாகி
கைகளின் அரவணைப்பில்
நிறைவாவது காதல்

வார்த்தைகளால் சொல்ல முடியாதவை
பலவற்றை அரவணைப்பின்
இறுக்கம் எடுத்துச் சொல்லும்

களைப்பை இதமாக்கி
உடல் வலியோடு
மன வலியையும் போக்கி
கரிசனையைப் பகிர்ந்தெடுத்து
உணர்வுகளைப் பொங்கவைக்கும்
இதமான அரவணைப்பு

எத்தனை அரவணைப்புக்கள் வந்தாலும்
தாயின் அரவணைப்பு எதுதான் ஈடாகும்

அரவத்தை அணைத்தது போலாகும்
தீயோரின் அரவணைப்பு

அன்னை மடியில் அன்பின் அரவணைப்பு
உடன் பிறந்தோரின் பாச அரவணைப்பு
உற்றவரின் அன்பு அரவணைப்பு
தோழர்களின் நேச அரவணைப்பு
பொங்கும் மகிழ்ச்சியைப் பகிர அரவணைப்பு
துயரத்தில் தோள் கொடுக்க அரவணைப்பு
காதலுணர்ச்சியைப் பரிமாறும் அரவணைப்பு
வெற்றியைக் கொண்டாட அரவணைப்பு
அரவணைப்பில் மயக்கம்
அரவணைப்பில் தூக்கம்

Tuesday, 5 February 2013

பக்கிஸ்த்தானில் இந்தியாவிற்கு சீனா வைக்கும் ஆப்பு

அரபுக் கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சீன நிறுவனமான China Overseas Port Holdings இடம் கையளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முத்துமாலைத் திட்டத்தில் ஒன்றான குவாடர் துறைமுகத்தை கடந்த ஐந்து ஆண்டுகள் Port of Singapore Authority என்ற நிறுவனம் நிர்வகித்து வந்தது.

முத்துமாலை என்னும் சுருக்குக் கயிறு
இலங்கையில் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்த்தானில் குவாடர், மியன்மார் எனப்படும் பர்மாவில் சிட்வே, பங்களாதேசத்தில் சிட்கொங் ஆகிய நான்கு இடங்களிலும் சீனா அமைத்துள்ள துறை முகங்கள் இந்தியாவிற்கு எதிராக சீனா முத்துமாலைத் திட்டம் என்னும் பெயரில் போடப்படும் சுருக்குக் கயிறாகும். இந்தியாவின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகரான மும்பாயில் இருந்து 87 கடல் மைல்கள் தொலைவில் குவாடர் துறைமுகம் இருக்கிறது.  குவாடர் துறைமுகமும் தென் இலங்கையில் இருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போல் ஓர் ஆழ்கடல் துறைமுகமாகும். குவாடர் துறை முகத்தை நிர்மாணிப்பதற்கான செலவான $248மில்லியன்களில் 75% சீனாவால் செலவளிக்கப்பட்டது.

இந்து மாக்கடல் இந்தியாவின் கடல் அல்ல
குவாடர் துறைமுகத்தை சீன நிறுவனம் பொறுப்பேற்ற செய்தி வந்தவுடன் CCS எனப்படும் இந்தியாவின் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Security) அவசரமாகக் கூட்டப்பட்டது.  இது இந்தியாவிற்கு குவாடர் துறைமுகத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்தின் தன்மையைக் காட்டுகிறது. குவாடர் துறைமுகத்தில் இருந்து சீனாவால் இந்தியாவின் மேற்குக் கரையில் நடமாடும் கப்பல்களை வேவுபார்க்க முடியும்.இந்து மாகடல் இந்தியாவின் கடல் அல்ல என்பதே சீனாவின் நிலைப்பாடு. இந்து மாகடலிலும் அரபியக் கடலிலும் சீனாவின் கடற்படைகள் ஆதிக்கம் செலுத்துவதற்கு குவாடர், அம்பாந்தோட்டை, சிட்டகொங் ஆகியவற்றில் சீனக் கடற்படைத் தளங்கள் வழிவகுக்கும்.பர்மாவின் சிட்வே துறைமுகத்தில் சீனக் கடற்படைத் தளம் அமைந்தால் அது இந்தியாவிற்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் பசுபிக் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாகும். சீனா குவாடர் துறை முகத்தில் இருந்து சீனாவிற்கான நெடுஞ்சாலையையும் உருவாக்க்க பாக்கிஸ்த்தானுடன் இணங்கியுள்ளது. 900 கிமீ(550 மைல்கள்) நீளமான இப்பாதை 4,693மீற்றர் (15,397அடி) உயர மலைத்தொடரைக் கடந்து செல்ல வேண்டிய ஒரு சிரமமான பாதையாகும். இந்து மாக்கடலூடான தனது வழங்கற்பாதைக்கு மாற்றீடான ஒரு பதையாக சீனா இதைக் கருதுகிறது. இப்பாதை பாக்கிஸ்த்தானை சீனாவின் ஒரு செய்மதி நாடாக்கிவிடும்.

ஹோமஸ் நீரிணை
குவாடர் துறைமுகத்தை சீனா படைத் துறை மயமாக்கும் நிலையில் அது இந்தியாவிற்கு மட்டுமல்ல யுனைட்டெட் அரபு எமிரேட், ஓமான், ஈரான் போன்ற நாடுகளுக்கும் சவாலாக அமையும். அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோமஸ் நீரிணையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானிற்கு அண்மையில் உள்ள் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. அமெரிக்கக் கடற்படையினர் ஹோமஸ் நீரிணையில் தமது பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களை நடமாடவிட்டு தமது கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர். சீனாவிற்கான எரிபொருள் வழங்கலில் 70% ஹோமஸ் நீரிணையூடாகச் செல்வதால் அது சீனாவிற்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ததாக அமைகிறது. தற்போது அமெரிக்கக் கடற்படை அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஈரானியத் துறைமுகத்திற்குப் போட்டி
குவாடர் துறைமுகத்தை சீனா படைத்தளம், மேற்குச் சீனாவிற்கான வழங்கற்பாதை முனையம், வர்த்தக விருத்தி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தலாம். குவாடர் துறை முகம் வர்த்தக ரீதியில் வளர்ச்சியும் முக்கியத்துவமும் பெறும் போது அது ஈரானின் சபஹார் துறைமுகத்திற்குச் சவாலாக அமையலாம். ஈரான் - ஈராக் போரின் ஹோமஸ் நீரிணையூடான எரிபொருள் ஏற்றுமதி தடைபட்ட போது ஈரான் சபஹார் துறைமுகத்தையும் அதை அண்டியுள்ள பிரதேசத்தையும் பெருமளவு அபிவிருத்தி செய்து வருகிறது. 1992இல் அங்கு ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தையும் உருவாக்கியது. 2002இல் அங்கு ஒரு பன்னாட்டுப் பலகலைக்கழத்தையும் உருவாக்கியது. சபஹாரில் இருந்து இந்தியா, இரசியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியாவும் ஈரானுடன் இணைந்து செயற்பட்டது. கடற்படுக்கையூடாக சபஹாரில் இருந்து இந்தியாவிற்கு குழாய்களூடாக எரிவாயு விநியோகத் திட்டமும் அதில் அடக்கம். ஆனால் சபஹார் துறைமுகம் ஈரானின் பெரிய மாகாணமான சிஸ்ரன் - பலுச்சிஸ்த்தானில் இருக்கிறது. சியா முஸ்லிம் நாடான ஈரானின் சிஸ்ரன் - பலுச்சிஸ்த்தானில் சுனி முஸ்லிம்களே பெரும்பானமையானராக இருக்கின்றனர். இதனால் இங்கு பிரிவினை தோன்றலாம் என்ற அச்சத்தில் சபஹார் துறை முகத்தை மேம்படுத்த ஈரான் தயக்கம் காட்டுகிறது.

உடனடி ஆபத்து இல்லை ஆனால் நீண்டகாலப் பேராபத்து.
குவாடர் துறைமுகம் சரியான பாவனைக்கு வர இன்னும் பல காலம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. குவாடர் துறை முகத்திற்குத் தேவையான மற்ற வசதிகளான போக்கு வரத்து வசதி, பாரிய சேமிப்புக் கிடங்குகள் போன்றவை இன்னும் அங்கு உருவாக்கப்படவில்லை.  இவையாவற்றையும் அமைத்து குவாடர் துறமுகத்தை ஒரு பாரிய கடற்படைத் தளமாக மாற்ற இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும் எனப்படுகிறது. சீனா நீண்டகாலத் திட்டம் போட்டுச் செயற்படுவதில் திறமை மிக்கது. ஆழ்கடல் துறை முகமான குவாடரில் சீனாவால் பாரிய நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்த முடியும். சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களின் தொகையை பெருக்கி வருவதாகக் கருதப்படுகிறது. சீனா தற்போது ஆசியாவில் ஐந்தாவது பெரிய கடற்படை வலிமையை மட்டும் கொண்டிருக்கிறது. இதன் கடற்படை வலிமையிலும் பார்க்க இந்தியாவின் வலிமை பெரியது எனப்படுகிறது. ஆசியாவில் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா போன்றவற்றின் கடற்படை வலிமையும் சீனாவிலும் பார்க்கப் பெரியதாகும். ஆனால் சீன தனது பாதுகாப்புச் செலவீனங்களை ஆண்டாண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. நீண்டகால அடிப்படையில் பார்க்கையில் சிட்டகொங், அம்பாந்தோட்டை, குவாடர் ஆகிய துறைமுகங்களில் சீனா படைத்தளம் அமைத்தால் அது இந்தியாவை சீனா அடக்கி விட்டது என்றே பொருள்படும்.சீனா குவாடரைப் பொறுப்பேற்கப் போகிறது என்ற அறிவுப்பு ஒரு எதிர்பார்த்திராத அறிவிப்புப் போல் இருக்கிறது. இந்துமாக்கடல் பிராந்தியத்தின் படைத்துறைச் சமநிலையை இது பாதிக்கிறது. இதை மீள் சமநிலைக்குக் கொண்டு செல்ல இந்தியா இனிக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அம்பாந்தோட்டையிலோ அல்லது இலங்கையில் வேறு என்கேயோ இனி சீனா எக்காரணம் கொண்டும் ஒரு படைத்தளம் அமைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக இந்தியா அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் சீனக் கடல் பிராந்திய நாடுகளுடன் இணைந்து  சீனாவை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் வைத்தே முடக்குவது நீண்டகால அடிப்படையில் இந்தியாவிற்கு பெரும் நன்மையாக அமையும்.

சீனா அகலக் கால் வைக்கிறதா?
தென் சீனக் கடலிலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் பல நாடுகளுடன் முறுகிக் கொண்டிருக்கும் சீனா அரபுக் கடலிலும் ஒரு முறுகல் நிலையை உருவாக்குவது சீனா அகலக் கால் வைக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அமெரிக்காவிடமிருந்து பாக்கிஸ்த்தான் விலகுகிறதா?
அண்மைக்காலங்களாக சியா முஸ்லிம்களுக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான முறுகல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் சில சுனி முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கத்தையும் உறவையும் அதிகரித்து வருகின்றன.  சுனி முஸ்லிம் நாடான பாக்கிஸ்த்தான் சியா முஸ்லிம் நாடான ஈரானுடன் பெரும் எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி செய்துள்ளது. அத்துடன் பாக்கிஸ்த்தானூடாக ஈரானில் இருந்து சீனாவிற்கு எரிபொருள் விநியோகக் குழாய்கள் தொடுக்கும் திட்டமும் சீனாவிடம் இருக்கிறது. சீனா, பாக்கிஸ்த்தான், ஈரான ஆகிய மூன்று நாடுகளும் நெருங்கி படைத்துறை ரீதியில் ஒத்துழத்தால் அது வளை குடாவில் அமெரிக்காவிற்கும் இந்தியாவின் மேற்குக் கரைக்கும் பெரும் சவாலாக அமையும். இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் போது குவாடர் துறைமுகம் இருக்கும் பாலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் பிரிவினைவாதத்தை அமெரிக்கா ஊக்குவித்து பாக்கிஸ்தானில் பிரச்சனையை ஏற்படுத்தும். பாலுச்சிஸ்த்தான் மாகாணம் கனிம வளங்கள் நிறைந்த ஒரு பிரதேசமாகும். அங்கு வாழும் மக்கள் பாக்கிஸ்த்தானிய அரசால் பாகுபாடுகாட்டப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இந்தியாவை நேசிக்கிறார்கள். ஆப்கானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு பாக்கிஸ்த்தானுடாக விநியோகங்கள் செல்லவதை பாக்கிஸ்த்தானிய அரசு தடை செய்ந்திருந்தபோது பாலுச்சிஸ்த்தானின் சுய நிர்ண்ய உரிமையை அங்கீகரிப்போம் என்று சில அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் மிரட்டினார்கள். பாலுச்சிஸ்த்தான் மக்கள் தமது தாயக நிலங்களை சீனாவிடம் கையளிப்பதை எதிர்த்து வருகிறார்கள். இப்படிப் பட்ட ஒரு பாதகமான சூழலிலும் சீனா குவாடர் துறைமுகத்தைப் பொறுப்பேற்றமை அந்தத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

சீனாவின் ஆப்பை எப்படி இந்தியா சமாளிக்கும்?
மும்பாயிலும் குஜராத் மாநிலத்திலும் இந்தியா வலிமை மிக்க கடற்படைத் தளங்களை கட்டி எழுப்ப வேண்டிவரும். இதற்காக இந்தியா அமெரிக்காவை நோக்கி தனது தந்திரோபாய நகர்வுகளை நகர்த்த வேண்டிவரும்.

Monday, 4 February 2013

இலங்கையில் நடுநிலையாளராகச் செயற்படும் தகுதி தென் ஆபிரிக்காவிற்கு இருக்கிறதா?

இலங்கையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தென் ஆபிரிக்க விடுதலை இயக்கமான ஏ.என்.சி எனப்படும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் பெரும் உதவிகளைச் செய்திருக்கிறது. தென் ஆபிரிக்காவில் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கான பயிற்ச்சி நிலைமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படைகளுக்கான பயிற்ச்சி வெளி நாடு ஒன்றிலேயே மேற்கொள்ளப்பட்டது. அது தென் ஆபிரிக்காதான் என்றும் கூறப்பட்டது. 

இன ஒதுக்கல் கொள்கையுடைய ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆபிரிக்க மக்களின் போராட்டத்தில் அங்கு வாழும் தமிழர்கள் பெரும் பங்கு வகித்தனர். உலகெங்கும் வாழும் தமிழர்களும் தென் ஆபிரிக்க விடுதலைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தென் ஆபிரிக்கா விடுதலை பெறமுன்னர் அங்கிருந்த இன ஒதுக்கல் ஆட்சியாளர்களுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தன. அப்போது இலங்கை அதிபராக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தன பேய்களிடமிருந்து கூட உதவி பெறுவேன் எனக் கூறி தென் ஆபிரிக்காவிடம் இருந்து படைக்கலன்களை இறக்குமதி செய்தார். இதுவும் தமிழர்களையும் ஆபிரிக்க விடுதலை இயக்கத்தையும் நெருங்கச் செய்தன.

இப்போது வரும் செய்திகளின்படி முன்பு நோர்வே செய்துவந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான சமாதானத் தூதுவர் வேலையை தென் ஆபிரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் உலகத் தமிழ் பேரவையைச் சேர்ந்தவர்களும் தென் ஆபிரிக்கா சென்று பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

2012 செப்டம்பரில் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணைகள் உள்நாட்டு ரீதியில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தென் ஆபிரிக்காவின் நிலைப்பாடு என அதன் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்திருந்தார். இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவைன் அறிக்கையை பல பன்னாட்டு அமைப்புக்கள் அதிருப்திகரமானவை என்று தெரிவித்த பின்னரும் தென் ஆபிரிக்கா இப்படிக் கூறியிருந்தது. 

தென் ஆபிரிக்காவில் இன ஒதுக்கல் ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெறுவதை இறுதிக் கட்டத்தில் வட அமெரிக்கா நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுமே நெறிப்படுத்தின. விடுதலை பெற்ற தென் ஆபிரிக்கா தமக்கு எதிரான ஒரு நாடாக மாறக் கூடாது என்பதிலும் தென் ஆபிரிக்காவுடனான தமது வர்த்தகம் மேம்படுத்துவதிலும் தென் ஆபிரிக்காவில் தமது முதலீடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் உறுதி செய்து கொண்டன்.

தென் ஆபிரிக்காவைத் தமிழர்களுக்கு இனம் காட்டிய 2009.
2009-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொண்டு வந்த போது இந்தியா அத் தீர்மானத்தை தலைகீழாக மாற்றி இலங்கையைப் பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. இந்தியாவின் வேண்டுதலின் பேரில் இலங்கையைப் பாராட்டும் தீர்மானத்திற்கு தென் ஆபிரிக்கா வாக்களித்தது. இது பற்றி ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரசில் கேள்வி எழுப்பப்பட்ட போது இந்தியாவின் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டுப் பிரச்சனையில் இந்தியாவை அனுசரித்தே வாக்களிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. மேற்படி தீர்மானம் பிழையானது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் நியமித்த நிபுணர்கள் குழுவே தெளிவாகத் தெரிவித்திருந்தது.

ஆபிரிக்கப் பிராந்திய நாடு ஒன்று தொடர்பான ஒரு பிரேரணை பன்னாட்டு அரங்கில் வரும் போது இந்தியா  தென் ஆபிரிக்காவின் நலம் சார்ந்து செயற்பட வேண்டுமாய்ன் தென் ஆபிரிக்காவும் இந்தியாவின் அயல் நாடுகள் தொடர்பான பிரேரணை வரும் போது இந்தியாவை அனுசரித்தே வாக்களிக்க வேண்டும். மேலும் இந்தியாவும் ஆபிரிக்காவும் தமது வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் ஒன்றை ஒன்று அனுசரித்தே போக வேண்டும். அத்துடன் BRICS நாடுகள் எனப்படும் பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய மக்கள் தொகை கூடிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்திய-தென் ஆபிரிக்க நட்பும் ஒத்துழைப்பும் முக்கியமானவை.

நேர்வேயின் எரிக் சொல்ஹேய்ம் சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட போது அவர் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற இந்திய-அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் படைக்கலன்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் அவர் மௌனித்து விட்டார். பின்னர் அவ்வப்போது விடுதலைப் புலிகளைக் கடுமையாகத் தாக்கு மாநாடுகளில் உரையாற்றுவார். விடுதலைப் புலிகள் மீது சேறு பூசுவதற்கு என்றே நோர்வே சில மாநாடுகளைக் கூட்டியது. நோர்வேயின் நோக்கம் இலங்கை இனப் பிரச்சனைக்க்கு தீர்வு காண்பதல்ல விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதே என்பது இலங்கையில் தமிழர்காளின் பிரச்சனை இன்றும் தீர்க்கப்படாமல் முன்பு இருந்ததிலும் பார்க்க மோசமாகியிருப்பதில் இருந்து தெரிகிறது.

இலங்கை இனப்பிரச்சனையில் தென் ஆபிரிக்காவின் நடுநிலைமை என்பது இந்திய நலன் சார்ந்ததாகவே இருக்கும். இந்தியா தான் தமிழர்களின் விரோதி என்பதையும் தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பேரினவாத நிலைப்பாட்டை பல செய்கைகள் மூலம் எமக்கு உணர்த்தி விட்டது. இந்தியாவில் ஆட்சி மாறினால் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமாக இந்தியா நடக்கும் என்ற சிலரின் நம்பிக்கையை சுஸ்மா சுவராஜ்ஜின் இலங்கைப் பயணமும் அவரது கட்சியினர் மஹிந்த ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து பௌத்த கலாச்சார போதனா நிலையத்தை திறக்க வைத்தமையும் தவிடி பொடியாக்கி விட்டன.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லை அங்கு நடந்தது ஒரு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை மட்டுமே என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த தென் ஆபிரிக்கா தனது செய்கை தவறானது என்று அறிவிக்கும்வரை அதற்கு இலங்கைப் பிரச்சனையில் நடுநிலை வகிக்கும் யோக்கியதை கிடையாது.

Sunday, 3 February 2013

ஈரானின் அசத்தலான போர் விமானம்

ஒரு குரங்கை விண்வெளிக்கு அனுப்பியதைத் தொடர்ந்து ஈரான் Qaher F313 என்னும் பெயருடைய Stealth Fighter ரக போர் விமானங்களை உருவாக்கியுள்ளது. உலகிலேயே சிறந்த ரக Stealth Fighter தன்னுடைய Qaher F313போர் விமானம் என ஈரான் தெரிவித்துள்ளது. கதுவி(ராடார்)களால் அடையாளம் காண முடியாத தொழில் நுட்பம் கொண்ட போர் விமானங்களை Stealth Fighter எனப்படும்.

Qaher என்பது ஆதிக்கம் என்னும் பொருள்படும் எனப்படுகிறது. அணுக் குண்டு உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ள ஈரான் தொலைதூர ஏவுகணைகள் ஏவும் தொழில் நுட்பதிலும் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது பல நாடுகளைக் கவலையடைய வைக்கலாம்.குரங்கு ஒன்றைக் கொண்ட ஈரானின் விண்வெளி ஓடம் 120கிமீ(75மைல்கள்) உயரம் வரை சென்று விண்ணில் சுற்றி விட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. ஈரான் இது தொடர்பாகக் காட்டிய படங்களில் குரங்கு போகும் போது அணிந்திருந்த ஆடையும் திரும்பும் போது அணிந்திருந்த ஆடையும் வித்தியாசமாக இருந்ததாக சில மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டின. குரங்கு விண்ணில் இறந்து விட்டது அல்லது விண்ணிற்கு ஓடம் செல்லவே இல்லை என்கின்றன அந்த ஊடகங்கள்.

ஈரானை அணுக்குண்டு உற்பத்தி செய்ய விடாமல் தடுக்க  அதன் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் அது தன் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலை அதிகரிக்கச் செய்யும் என அமெரிக்கா அஞ்சுகிறது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் பல பிரச்சனைகளை ஈரான சந்தித்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து தன் படைக்கலன் உற்பத்தியைப் பெருக்குகிறது.

1979இல் அமெரிக்க கைக்கூலியாகக் கருதப் பட்ட மன்னர் ஷா மொஹமட் பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராக ஈரானிய மத போதகர்கள் செய்த புரட்ச்சியின் நினைவிநாளில் Qaher F313போர் விமானங்களை உருவாக்கியுள்ளது.

மனன்ர் ஷாவின் ஆட்சிக்குப் பின்னர் வந்த மத அடைப்படைவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக படைக்கலங்கள் விற்பனைத் தடையை மேற்கு நாடுகள் அமூல் படுத்தியதைத் தொடர்ந்து ஈரான் தானாகவே படைக்கலன்களை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டது. டாங்கிகள், ஏவுகணைகள், அணுக் குண்டு உற்பத்திக்கான இல்மனைற் பதனிடுதல் என்பவற்றில் முன்னேற்றம் கண்ட ஈரான் போர் விமான உற்பத்தியிலும் தனது அறிவியல் முன்னேற்றதை நிரூபித்துள்ளது.



ஈரானின் Qaher F313 இன் தன்மைகள்:
ஒற்றை இருக்கை மட்டும் கொண்ட சிறிய விமானம்.
புதியரக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக்கூடியது.
தாக்குதலும் வேவும் செய்யக்கூடியது.
விமானத்தில் இருந்து விமானத்திற்கும் விமானத்திலிருந்து தரைக்கும் தாக்குதல் நடத்தக் கூடியது.
தற்கால போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் இதன் cockpit பெரியதாக இருப்பதுடன் அடிப்படையானதாகவும் இருக்கிறது.
மூக்குப் பகுதி மிகச் சிறியதாக இருக்கிறது. இதில் ரடார் பொருத்த முடியாது.

இதற்கு எதிரான கருத்துக்கள்:
  •     The thickness of the wing is nuts. It's not an airfoil for supersonic flight.
  •     The air intakes are tiny.
  •     As others have noted: it's just too small up front, there's no room up there for radar, and I don;t see any thing like passive FLIR and other sensors poking out up there.
  •     There's little room for any sort of meaningful fuel or weapon load-out.
  •     If you look at tail end of the thing, it's designed to give the look of a thrust vectoring solution, but clearly is not.
  •     And why the all the English signage on it? "Warning," etc. That makes no sense.

It reminds me a lot of the "Have Blue" prototype in terms of scale. If anything, that's what this is, a sub scale demonstrator.

ஈரான் வெளிவிட்ட  Qaher F313 தொடர்பான காணொளியில் அதன் take off and landing எதுவும் இல்லாதது சில சந்தேகங்களை நிபுணர்கள் மனதில் கிளறியுள்ளது.


ஈரானின் Qaher F313 விமானங்களால் வளைகுடாவில் வலம் வரும் விமாம்தாங்கிக் கப்பல்களுக்கு ஆபத்து என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் 1980-ம் ஆண்டு உருவாக்கிய விமாங்களுக்கு ஈடான விமானமான Qaher F313 விமானங்களை எப்படி எதிர் கொள்வது என்ற தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இல்லாமல் போகுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

சிய முசுலிம் நாடான ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக் கூடிய படைக்கலன்களை சுனி முசுலிம் நாடான சவுதி அரேபியா அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும். முசுலிம்களுக்கு இடையிலான மோதல் அமெரிக்காவின் வியாபாரத்தைப் பெருக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...