Saturday, 26 December 2009

ஒரு அரசமைப்பு நெருக்கடியை தமிழர்களால் ஏற்படுத்த முடியுமா?


இலங்கையின் அரசியல் அமைப்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமையில் ஒரு பலவீனம் உண்டு. அந்தப் பலவீனம் அரசியல் அமைப்பை வரைந்தவர்கள் தேர்தலில் இரு பெரும் புள்ளிகள் மட்டுமே மோதுவர், மற்றவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறமுடியாதவர்களாக இருப்பார்கள் என்று அனுமானித்ததால் ஏற்பட்டது.

இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமையை சுருங்கக்கூறுவதாயின் இப்படிச் சொல்லலாம்:
1. குடியரசுத் தேர்தலில் 50% மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவர்.
2. ஒவ்வோரு வாக்காளரும் இரு வாக்குகள் அளிக்கலாம். ஒன்று முதல் தெரிவு. மற்றது இரண்டாம் தெரிவு. இரண்டும் ஒருவருக்கு அளிக்க முடியாது.
3. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முதல் தெரிவை அடிப்படையாகக் கொண்டு எண்ணப் படும். இதில் 50%இற்கு மேற்பட்ட வாக்கை பெறுபவர் குடியரசுத் தலைவரா அறிவிக்கப் படுவர். இதுவரை நடந்த தேர்தல்களில் முதற்கட்ட எண்ணிக்கையில் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இரண்டாம் கட்டத்திற்கு போகத் தேவையில்லாத படி முதற்கட்டத்திலேயே 50% வாக்குகள் பெற்று வெற்றி நிர்ணயிக்கப் பட்டது.
4. முதற் கட்ட வாக்கு எண்ணிக்கையில் எவரும் 50% வாக்குகள் பெறாதவிடத்து அதிக வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியில் இருக்க மற்றவர்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவர். இவ்விரு வேட்பாளர்களுக்கும் விழுந்த இரண்டாம் தெரிவு வாக்குக்கள் அவர்கள் ஏற்கனவே பெற்ற வாக்குக்களுடன் சேர்த்து மற்றவரிலும் பார்க்க அதிகமாகவும்50% இற்கு அதிகமாகவும் வாக்குப் பெற்றவர் குடியரசுத் தலைவராக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப் படுவர்.

இரண்டாம் கட்ட எண்ணிக்கையிலும் எவரும் 50% இற்கு அதிகமான வாக்குக்கள் பெறாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி இலங்கை அரசியலமைப்பு வரையறை செய்யவில்லை. அதனால் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட் வாய்ப்புண்டு.

இம்மாதிரியான அரசியலமைப்பு நெருக்கடியை தமிழர்களால் உருவாக்க முடியும். அதற்கு மூன்று பெரும் புள்ளிகள் தேர்தலில் மோதவேண்டும். இம்முறை மூன்றாவது புள்ளியாக விக்கிரமபாகு கருணரட்ண களம் இறங்கியுள்ளார். அவருக்கு கணிசமான வாக்குக்கள் கிடைக்குமா என்பது சந்தேகம். பிரதான இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் முன்றாவது ஒருவருக்கு எல்லாத் தமிழர்களும் முதல் தெரிவு வாக்கு மட்டும் அளித்து இரண்டாம் தெரிவு வாக்கை எவருக்கும் அளிக்காமல் விடவேண்டும். இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் எவரும் 50% இற்கு அதிகமான வாக்குக்கள் பெறாமல் போகலாம். ஆனால் இம்முறை அது சாத்தியமில்லை. இந்தியாவின் சொல்லுக்கு அடங்கி மலையகத் தமிழர்களின் பிரதான கட்சிகள் கொடியவன் ராஜபக்சேயிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்து விட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த கொடியவன் சரத் பொன்சேக்காவுடன் அவரது பொய் வாக்குறுதிகளை நம்பி இணையவிருப்பதாக செய்திகள் வருகின்றன. போதாக் குறைக்கு சிவாஜிலிங்கம் வேறு ஒரு வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். இலங்கையின் அரசியல் அமைப்பை வரைந்தவர்கள் தமிழர்களின் ஒற்றுமை இன்மையை மந்தில் கொண்டு அதை வரைந்தார்களா?

Friday, 25 December 2009

திருமா, மணியன் ஐய்யாக்களிடம் ஒரு கேள்வி.



இலண்டனிற்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாததில் வருகை தந்த தோழர் திருமாவளவனும் தமிழருவி மணியனும் ஒரு கருத்தை தமிழர்கள் மத்தியில் விதைக்க முயன்றனர்: "இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ஒருவரும் இல்லை. இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை".

அவர்கள் இலண்டனில் ஆற்றிய உரைகளின் பதிவுகளை இங்கு காணலாம்:

http://veltharma.blogspot.com/2009/09/blog-post_27.html

http://veltharma.blogspot.com/2009/10/blog-post_06.html


இலண்டனில் தோழர் திருமாவின் உரையிலும் அவர் ஜீடிவி எனும் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியிலும் சிலகருத்துக்கள் உள்ளடக்கப் பட்டிருந்தன:

  • இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்டி ஆட்சியில் இருந்தாலும் இந்திரா காங்கிரசு ஆட்சி செய்ததையே செய்திருக்கும்.
  • தமிழர்களுக்கு இந்தியா மட்டும் எதிரி இல்லை, சகல நாடுகளூமே எதிரி.
  • தோழர் திருமாவளவன் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்ற பொருள்படப் பேசினார்.
  • எல்லா வற்றிலும் மேலாக, இலங்கையில் சீனா காலூன்றாமல் இருக்க இலங்கைக்கு இந்தியா உதவிவருகிறது. உங்களின் எதிரியான இலங்கைக்கு உதவுவதால் இந்தியாவை உங்கள் எதிரியாக எண்ணாதீர்கள் என்று சொன்னது பல தமிழின உணர்வாளர்களை ஆச்சரியப் பட வைத்தது.
இப்போது கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி விடுதலைப் புலிகளுக்கு உதவ 2009 மார்ச் மாதத்திலேயே அமெரிக்கா தயாராகிவிட்டது. அதை இந்தியாவின் உதவியுடன் தான் இலங்கை தவிர்த்துக் கொண்டது.

கொழும்புல் இருந்து வெளிவரும் ஐலண்ட் பத்திரிகை இப்படிக் கூறுகிறது:

  • About two months before the final battle on the banks of the Nanthikadal lagoon in May, the United States had offered to evacuate top LTTE leaders and their families. The unprecedented proposal had been made by the then US Ambassador in Colombo Robert Blake after the Co-Chairs to the Sri Lankan peace process, spearheaded by the Norwegians agreed that the LTTE could no longer halt the army advance. Responding to The Island queries, sources said that at one point the Sri Lankan government had suggested that Ambassador Blake should also consult New Delhi regarding the controversial evacuation plans.
ஐலண்ட் பத்திரிகையின் முழுச் செய்தியையும் இங்கு காணலாம்:
http://www.island.lk/2009/12/24/news1.html

அமெரிக்காவை இலங்கையில் தலையிட அன்று அனுமதித்திருந்தால் 70,000 இற்கு மேற்பட்ட அப்பாவிகளின் கொலைகளைத் தவிர்த்திருக்கலாம். தமிழர்கள் இந்தியாவை கொலையாளியாகத்தான் பார்கிறார்கள்.

தமிழர்கள் எல்லோரும் இந்தியாதான் தமிழர்களின் முதல் எதிரி என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். இப்படி இருக்கையில் திருமாவளவன் ஐய்யாவும் தமிழருவி மணியன் ஐய்யாவும் இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்று எமக்குப் போதித்தது ஏன்? இந்திய உளவுத்துறைதான் உங்களை அனுப்பி அப்படிச் சொல்ல வைத்ததா?

Wednesday, 23 December 2009

வெளிநாடு வாழ் தமிழர்களைக் குறிவைக்கும் இந்தியா.


மே-2009 இற்குப் பின்னர் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையும் இந்தியாவும் வேறு விதங்களில் குறி வைக்கின்றன. இலங்கை அவர்களுக்குள் பிளவு உருவாக்கவும் சிலரைத் தன்பக்கம் இழுக்கவும் முயற்சிக்கிறது. இந்தியா வெளிநாடுகளில் வாழ் தமிழர்களை முழுமையாகத் தன்பக்கம் இழுக்கவும் அவர்களிடையே இனி தனிநாட்டுக் கோரிக்கை சரிவராது உங்களுக்கு இனி இந்தியாதான் கதி என்ற எண்ணத்தை உருவாக்கவும் முயற்ச்சிக்கிறது. இந்தியா தமிழர்களை மோசமாக இலங்கை அரசு மூலமாகத் தோற்கடிப்பதன் மூலம் அவர்கள் தமக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு தன்னை நாடிவாருவார்கள் என்று கணக்குப் போட்டிருந்தது. அது முற்று முழுதான தப்புக் கணக்கு என்பதை இபோது இந்தியா உணர வேண்டிய நிலை வந்து விட்டது. தமிழர்கள் தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. இந்தியாவைத் தம் முதலாம் எதிரியாகக் கருதுகிறார்கள். இது பாக்கு நீரிணையில் இருபுறமும் நிலவும் கருத்து. மீண்டும் முருக்க மரத்தில் ஏற இந்தியா கேணல் ஹரிகரன் என்னும் ஓய்வு பெற்ற இந்திய படைத்துறையில் புலனாய்வு அதிகாரி மூலம் ஒரு செய்தியை வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு சொல்கிறது.

கொச்சைப் படுத்தப் படும் வட்டுக்கோட்டைத் தீர்மானம்.
கேணல் ஹரிகரன் என்னும் ஓய்வு பெற்ற இந்திய படைத்துறையில் புலனாய்வு அதிகாரி அடிக்கடி தமிழர்களின் தேசிய போராட்டத்தைப் பற்றி கேவலமாக எழுதுபவர். அவர் கனாடாவில் நடந்த வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை பற்றி இன்று கருத்துரைத்துள்ளார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 99%மான மக்கள் வாக்களித்ததாக வாக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. ஹரிகரன் அதை வேறு விதமாகப் பார்கிறார். கனடாவில் 300,000இருந்து 350,000 வரையான தமிழர்கள் வசிக்கிறார்கள் அவர்களில் 48000 தமிழர்கள் மட்டும் வாக்களித்துள்ள படியால் இது சிறுபான்மை வாக்களிப்பு என்று சொல்பவர்களின் கருத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழர்கள் இதற்கு முன்பு போரைத் தொடருவதா இல்லையா என்ற வாக்கெடுப்பை ஏன் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் போர்நிறுத்தக் கோரிக்கையை எத்தனை தடவை முன்வைத்தனர் என்பதை கேணலின் கோணல் சிந்தனைக்குப் படவில்லை. இந்த மாதிரி வேறு பல விடயங்களுக்கு ஏன் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கேணல் கரிகரன் அவர்கள். அவரது கருத்துப் படி செய்வதாயின் தமிழர்கள் வாரம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த வேண்டும். ஹரிகரன் மேலும் சொல்கிறார் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள் வேறு வழியின்றி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கையில் எடுத்திருக்கிறார்களாம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முடிவுகளில் இருந்து ஒன்று நன்கு புலனாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்க்கும் தமிழர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையினரே. கருத்தில் எடுத்துக் கொள்ளப் படத் தேவையில்லாத எண்ணிக்கையினரே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்க்கின்றனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பலத்த எதிர்ப்பு இருக்குமாயின் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து வாக்களித்திருப்பர்.
இதை ஹரிகரனும் அவரது "எஜமானர்களும்" புரிந்து கொள்ளவேண்டும்.

இலங்கையில் நடக்கும் பல விடயங்களைச் சுட்டிக் காட்டிய ஹரிகரன், வன்னி முகாம்களில் நடந்த வதைகள் பற்றியோ அல்லது சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றமை பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. அது பற்றிக் குறிப்பிடுவது அவர்களது சிங்கள "எஜமானர்களை" ஆத்திரப் படுத்தும். பூனூல்காரர்களின் சதிகளால் கருகிப்போன இளம் பூக்களைப் பற்றி ஹரிகரன் அறியவில்லையா? எத்தனை ஆயிரம் சிறார்களை இலங்கை அரசு இந்திய செய்மதித் தகவல்களின் துணையுடன் கொன்று குவித்தது? அதைப் பற்றியெல்லாம் எழுத மாட்டாரா இந்தக் கோணல் புத்திக் கேணல்?

ஹரிகரன் தனது கட்டுரையில் வேலிக்கு ஓணானாக ரொஹான் குணத்திலக என்ற சிங்களப் பேரினவாதியை சாட்சிப்படுத்துகிறார். ரொஹான் சொன்னாராம் இனி ஒரு தலைமை உருவாக முடியாத படி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டு விட்டார்களாம். அப்படியானால் ஏன் இலங்கை அரசு தொடர்ந்தும் பாதுகாப்புச் செலவுகளை அதிகரித்துக் கொண்டே போகிறது? சரத் பொன்சேக்கா ஏன் படைகளின் எண்ணிக்கையை மூன்று இலட்சமாக அதிகரிக்க வேண்டுமென்றார்?

இன்னும் சொல்கிறார் ஹரிகரன்: வெளிநாடுவாழ் தமிழர்கள் இரண்டாகப் பிளவு பட்டு நிற்கிறார்களாம். ஒரு பிரிவு நாடுகடந்த அரசு அமைக்கவிருக்கும் உருத்திரகுமார் தலைமையிலாம். மற்றது நோர்வேயில் வாழும் தொடர்ந்து ஆயுத போராட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லும் நெடியவன் தலைமையிலாம். ஆனால் தமிழர்கள் இரண்டையும் ஆதரிக்கிறார்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல. தமிழர்களுக்கு இரண்டும் தேவை. உருத்திரகுமாரன் என்று சொன்னார் இனி ஆயுத போராட்டம் சரிவராது என்று? நெடியவன் என்று சொன்னார் நாடுகடந்த அரசு தேவையற்ற தென்று? தமிழர்கள் பிளவு படவில்லை. அது உங்களது கனவு ஹரிகரன் ஐயா.

சும்மா ஆடுமா சோழியன் குடுமி.
சரி இப்படி எல்லாம் தமிழர்களுக்கு வேறு வழியில்லை வேறு கதியில்லை என்று சொல்கிற ஹரிகரன் என்ன தீர்வை தமிழர்களுக்கு முன்வைக்கிறார் தெரியுமா? புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் 22-11--2009இலன்று சுவிற்சலாந்து சூரிச் நகரில் இலண்டன் தமிழ் தகவல் நிலையம் ஏற்படுத்திய இலங்கைக்கான சர்வதேச செயற்குழுவிற்கு ஆதரவு தெரிவிப்பதுதானாம். இந்தியச் சூழ்ச்சியால் நடந்த இந்தக் கூட்டம் முடிவு எடுக்காமலேயே குழப்பத்தில் முடிந்தது. இந்திய அடிவருடிகளே இதில் குழப்பம் விளைவித்தார்கள். அதற்கு சகல தமிழ் முஸ்லிம் கட்சிகள் வந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹரிகரன். போக்குவரத்துச் செலவு, கைச்செலவுப் பணம் போன்றவை கொடுத்தால் முழு இலங்கையுமே சூரிச் வரும்! இப்படிபட்ட (குழப்பத்தில் முடியும்) கூட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரிவினைக்கு புத்துயிர் கொடுத்தால் மீண்டும் ஒரு தம்மைத் தாமே தோற்கடிக்கும் நிலைதான் தமிழர்களுக்கு ஏற்படும் என்ற செய்தியுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் ஓய்வு பெற்ற கேணல் ஹரிகரன். ஆனால் தமிழர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள் ஹரிகரன் ஐயா அவர்களே: "விழ விழ எழுவோம்"
உங்கள் இந்தியாவும் உங்கள் எஜமானர்களும் இன்னும் எத்தனை முறை விழுத்துவீர்கள்?

Tuesday, 22 December 2009

தமிழ்நாட்டுச் சிங்கள அடிமைகளின் இருட்டடிப்பு


எருதுக்கு விருது

இலங்கை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக இரு முக்கிய செய்திகள் உலக அரங்கில் அடிபடுகின்றன. ஒன்று வாணி குமார் என்னும் பெண்மணி வன்னி முகாம்களில் நடை பெறும் வதைகளை வெளிக் கொண்டு வந்தது. மற்றது சரணடியச் சென்ற விடுதலை புலிகளைச் சுட்டுக் கொன்றது. இவ்விரு செய்திகளும் பல ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

இவை பற்றி பெங்களூரில் இருந்து வெளிவரும் நியூ கேரளா கூடப் பிரசுரித்திருந்தது. மும்பாய் மிறர் பிரசுரித்திருந்தது. ரைம்ஸ் ஒF இந்தியா பிரசுரித்திருந்தது. மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் கூடப் பிரசுரித்திருது. கொழும்பில் இருந்து வரும் சில சிங்களவர்களின் ஊடகங்கள் கூடப் பிரசுரித்தன. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இந்து பத்திரிகை இவை பற்றி எதுவும் பிரசுரிக்கவில்லை. கலைஞர் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி போன்றவை இது பற்றி ஏதாவது தெரிவித்ததா? இவற்றை நான் பார்ப்பதில்லை. ஆனால் தெரிவித்திருக்க மாட்டார்கள்.
இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து செயற்படுவது மானமுள்ள தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஐநா மீண்டும் திருகு தாளம் செய்யும்.


ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளது சிலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதனால் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? இதுவரை நடந்து அநியாயங்கள் வெளிவருமா? யாராவது அதற்காக தண்டிக்கப் படுவார்களா?

சரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்தவர்களையும் சுட்டுக் கொல்லப் பட்டதாக சரத் பொன்சேக்கா தெரிவித்ததாக முதலில் செய்திகள் வந்தன. பின்னர் அது அவரால் மறுக்கப் பட்டது. வெள்ளை கொடியுடன் யாரும் சரணடைய வரவில்லை என்றும் கூறினார் சரத் பொன்சேக்கா. இதை வைத்துக் கொண்டு எந்த சட்ட நடவடிக்கையும் இலங்கை அரசிற்கு எதிராக எடுக்க முடியாது. பிலிப் அள்ஸ்டன் அவர்களே இதைக் தனது கடிதத்தில் இப்படித் தெரிவித்துள்ளார்:
  • இந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்போதைய படைத் தளபதியான சரத் பொன்சேக்காவினால் சண்டே லீடர் செய்தித்தாளிற்கு வழங்கிய பேட்டியில் மேற் கொள்ளப் பட்டிருந்தன.
  • இதன் உண்மைத் தன்மையைப் பற்றி முன்மதிப்பீடு செய்ய விரும்பாத வேளை ஆயுதப் போரின் போது கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இலங்கை அரசிடம் இருந்து அவரது கடிதத்திற்கு என்ன பதில் வரும் என்பதை நாமும் அறிவோம் ஐக்கிய நாடுகள் சபையும் அறியும். இருந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்தது ஏன்? ஐநா இலங்கைப் போரில் நடந்த முறை பல ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு விளக்கம் கோரல் கடித நாடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சரணடையும் பேச்சு வார்த்தை முதலில் இந்தியாவுடன் நடை பெற்றது. இந்தியா கையை விரித்து விட்டது. பின்னர் ஒரு ஊடகவியலாள்ரூடாக பேச்சு வார்த்தை நடை பெற்றது அதில் ஐநாவின் விஜய் நம்பியார் நேர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சம்பந்தப் பட்டிருந்தனர். இதை சாதுரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் தனது கடிதத்தில் மறைத்துள்ளார். கோத்தபாய ராஜபக்சே சரணடையாலாம் என்று கூறியதிற்கு உன்னத சாட்சியாக விஜய் நம்பியாரும் எரிக் சொல்ஹெய்மும் இருக்கிறார்கள். இந்த காத்திரமான உண்மையை தனது கடிதத்தில் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் மறைத்ததின் பின்னணி என்ன? இந்த சரணடைய வந்தவர்களைக் கொன்ற குற்றச் சாட்டை நிரந்தரமாக மறைக்க முன்னேற்பாடு நடக்கிறதா?

பிலிப் அள்ஸ்டன் அவர்கள் உண்மையில் இந்த விளக்கத்தை ஐநாவிடம், ஐநா அதிபரிடம், இதில் சம்பந்தப் பட்ட விஜய் நம்பியாரிடம்தான் கேட்டிருக்க வேண்டும் என்று இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்ல இந்த சரணடையும் பேச்சுவார்த்தைகளில் விஜய் நம்பியார் ஈடுபட்டிருந்த வேளை அவர் பான் கீமூனுடந்தான் இருந்தார் என்றும் கூறப் படுகிறது.

ஐநா ஏற்கனவே செய்த திருகுதாளங்களும்
வில்லங்கமான வில்லன் நம்பியாரும்.
இலங்கயில் கடுமையாகப் போர் நடந்து கொண்டிருட்ந்த வேளை போர் முனையில் 250,000 இற்கு மேற்பட்டவர்கள் அகப் பட்டிருந்தனர் என செய்மதிகள் மூலம் நிபுணர்கள் கணித்து ஐநாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால் தொடர்ந்து இலங்கை அரசு அங்கு 70,000 பேருக்குக் குறைவானவர்களே இருந்தனர் என்று தொடர்ந்து அடம் பிடித்தது. உண்மையில் மூன்று இலட்சம் பேர் போர் முனையில் பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக உணவு, நீர், மருந்து போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தொடர் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர். இதற்கான சகல ஆதாரங்களும் இப்போது உண்டு. இலங்கைக்கு எதிராக ஐநா என்ன நடவடிக்கை எடுத்தது. இந்தியா சீனாவுடன் கைகோத்து ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்தது.

போர் நடந்து கொண்டிருந்த வேளை ஐநா அதிபர் இலங்கை செல்லும் படி கேட்கப் பட்டார் அதை அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி போர் முடிந்த பின் சென்றார். இதுபோன்ற வஞ்சக செயற்பாடுகளுக்காக ஐநா அதிபர் பான் கீ மூன் அவர்களை மிக ஆபத்தான் கொரிய நாட்டவர் (Ban Ki Moon, the msot dangerous Korean) என்று ஒரு ஊடகம் விமர்சித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதியது.


போர் நடந்து கொண்டிருந்த வேளை பிரித்தானியாவின் வற்புறுதலின் பேரில் ஐநாவின் விஜய் நம்பியார் என்னும் சீனாவின் நண்பர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு சென்று உடனடியாக அறிக்கை சமர்பிக்கும்படி பணிக்கப் பட்டார். அவர் அங்கு சென்று உடன் ஐநா திரும்பாமல் இந்தியா சென்றார். அவர் அங்கு தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனனுடனும் நாராயணுடனும் பேச்சு வார்த்தை செய்யவா சென்றார் என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. காலம் தாழ்த்தி ஐநா திரும்பிய வில்லங்கமான வில்லன் நம்பியார் முதலில் தனது அறிக்கையை சமர்பிக்காமல் காலம் தாழ்த்தினார். இதற்க்காக அவர் மீது ஒழுக்காற்று நடவைக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா மிரட்டிய பின் நிலத்திற்குக்கீழ் உள்ள மூடிய அறையில் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.

ஐநா அதிபரைப் பற்றி அண்மையில் வந்த விமர்சனம்
...at a time when global leadership is urgently needed, when climate change and international terrorism and the biggest financial crisis in 60 years might seem to require some—any!—response, the former South Korean foreign minister has instead been trotting the globe collecting honorary degrees, issuing utterly forgettable statements, and generally frittering away any influence he might command. He has become a kind of accidental tourist, a dilettante on the international stage.

(Note: Dilettante means - an amateur who engages in an activity without serious intentions and who pretends to have knowledge)

Not for him bold speeches or attempts to mobilize public opinion behind what could be an organization that helps tackle nuclear proliferation or reconstruct Afghanistan. Not for him championing human rights, or even rallying in defense of beleaguered civilians. Visiting Malta in April for yet another honorary degree, he was evasive when asked about the island's penchant for sending illegal African immigrants packing off to Italy, saying, "I am not in a position to intervene." As tens of thousands of Tamil refugees lingered under fire on a narrow strip of beach in Sri Lanka, Ban and his advisors did little more than huddle in New York and wring their hands, only making a trip to the war zone after hostilities ended. Under his stewardship, the United Nations isn't merely an unhelpful place—it's a largely irrelevant one.

So far, Ban has no such successes to his credit. It's not as if there aren't enough crises around the globe for him to make his mark, whether in Sri Lanka or Sudan or the Middle East. But Ban hasn't given any indication that he's going to have an impact in any of these places—or even that he wants to.



மீண்டும் திருகு தாளமே.
ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் இலங்கை அரசிற்கு அனுப்பிய கடிதமும் ஒரு திருகு தாளத்திலேயே முடியும்.

Monday, 21 December 2009

ஐநா இலங்கையிடம் விளக்கம் கோரியுள்ளது: சரணடைய வந்தோர் கொலை.


தமிழர்களுக்கு எதிரான போரின் இறுதி நாளுக்கு முதல் நாளான 17-05-2009 இலன்று சரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்தவர்களையும் சுட்டுக் கொன்றமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளார்.

அக்கடிதத்தின் சாராம்சம்:
மேதகு தங்களது அரசிற்கு திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது மரணம் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன்.

மேதகு தங்கள் அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டதாகக் கூறிய நாளுக்கு முதல் நாளான 17ம் திகதி மே மாதம் 2009 இலன்று திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் ஒரு சிறிய இடத்தினுள் அகப்பட்டிருந்தனர். இடை ஆட்கள்மூலம் தாங்கள் எப்படி இலங்கை அரச படைகளிடம் சரணடையலாம் என்று அறிய மேதகு தங்கள் அரசுடன் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றனர். இதற்கான பதிலாக வெள்ளைக் கொடிகளுடனும் வெள்ளை ஆடைகளுடனும் இலங்கை அரச படைகளின் நிலைகளை நோக்கி நடந்து வரும்படி தங்கள் அரசின் பாதுகாப்புச் செய்லரும் தங்களது ஆலோசகரும் அப்போதைய பாராளமன்ற உறுப்பினருமானவரிடமிருந்து வந்தது. அப்படிச் சரணடைய வந்த திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லும்படி பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து தொலைபேசி மூலமான உத்தரவு 58வது படைத் தளபதி சென்றது.

இந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்போதைய படைத் தளபதியான சரத் பொன்சேக்காவினால் சண்டே லீடர் செய்தித்தாளிற்கு வழங்கிய பேட்டியில் மேற் கொள்ளப் பட்டிருந்தன.

இதன் உண்மைத் தன்மையைப் பற்றி முன்மதிப்பீடு செய்ய விரும்பாத வேளை ஆயுதப் போரின் போது கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆயுத மோதல் தொடர்பான 1949 ஜெனீவா உடன் படிக்கையின் பொது பந்தி 5 இன்படி ஆயுதத்தைக் கீழே வைத்தவர்கள் மனிதாபிமான ரீதியில் நடாத்தப் படவேண்டும்.

திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரும் அவர்களுடன் வந்தவர்களும் கொல்லப் பட்டது தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கும் வேளையில் தங்களது அரசின் ஒத்துழைப்பையும் அவதானத்தையும் இது தொடர்பாக செலுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன். அத்துடன் குறிப்பாக கீழுள்ள வினாக்கள் தொடர்பாகவும்:
  1. மேலுள்ள குற்றச் சாட்டுக்கள் சரியானதா? அப்படி இல்லையாயின் அது தொடர்பான தகவல்களையும் பத்திரங்களையும் தயவு கூர்ந்து (என்னுடன்) பகிர்ந்து கொள்ளவும்.
  2. 18-05-2009 இலன்று கொல்லப்பட்டதாக நம்பப்படும் திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் தொடர்பாக தங்கள் அரசிடம் உள்ள தகவல்கள் என்ன?
  3. மேலுள்ள குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ, காவற்துறை, நீதித்துறை போன்றவற்றின் விசாரணைகளைப் பார்க்கவும்.
தங்களது அரசின் பதில் மனித உரிமைக் கழகத்திடம் தெரிவிக்கப் படும்.

இப்படிக்கு
பிலிப் அள்ஸ்டன்

மேற்படி கடிதவிவகாரத்தை கவனமாக இலங்கைஅரசு கையாள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலமாகும் வன்னி வதை முகாம்களின் அசிங்கங்கள்.


வன்னி வதை முகாம்களின் அசிங்கமான அட்டூழியங்கள் பற்றி மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் இருந்து ஒரு ஊடக ஆசிரியப் பன்றி ஒன்று இலங்கை வந்து வன்னி முகாம்கள் இந்தியாவில் உள்ள முகாம்கள் சிறந்தன என்றன. இன்னொரு பன்னாடைக் கூட்டம் முகாம்களை பார்வையிட என்று வந்து மஹிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திப் பரிசு பெற்றுச் சென்றது. ஆனால் அங்குள்ள உண்மைகளை வெளிக் கொண்டுவரவில்லை.

இப்போது வன்னிமுகாமில் பணிபுரிந்த வாணி குமார் என்பவர் பிரித்தானிய The Guardian பத்திரிகை மூலமாக பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளார்.
  • பாலியல் கொடுமை முகாம்களில் ஒரு பொதுவான விடயம். யாரும் எதிர்த்துக் கதைக்க முடியாது.
  • எதிர்த்துக் கதைப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவர்.
  • மிகக் குறைந்த தண்டனை கடும் வெய்யிலில் நீண்ட நேரம் முழங்காலில் நிற்க வைப்பது.
  • வெள்ளை வானில் அடிக்கடி முகாமிலிருந்து மக்கள் இழுத்துச் செல்லப் படுவர். அவர்களை உறவினர்கள் மீண்டும் காணமுடியாது.
  • சிறு கூடாரங்களில் பல்லாயிரக் கணக்கானோர் போதிய உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றித் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.
  • பெண்கள் திறந்த வெளியில் காவலர்கள் முன்னிலையில் குளிக்கும்படி உத்தரவிடப் பட்டனர்.
  • எங்கும் பூச்சிகளும் இலையான்களும் நிறைந்திருந்தன.
  • ஒரு முதியவர் தாக்கப்பட்டதை என் கண்ணால் கண்டேன்.
இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்தவர் வன்னியில் உள்ள "சிறந்த" முகாம்களில் ஒன்றில் வைக்கப் பட்டிருந்தவர். அவர் வெளியிட்ட தகவல்களே இப்படி என்றால் மற்ற முகாம்களில் நடந்தவை என்னென்னவோ? அவை என்று வெளிவருமோ?

Sunday, 20 December 2009

ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நன்மை தருமா?


எதிர்வரும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இழக்கப் போவது எதுவுமில்லை
என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களிடம் இழக்க இப்போது ஒன்றும் இல்லை. தமிழர்களிடம் இருத்து யாவும் பறிக்கப் பட்டு விட்டது.

டக்ளஸ் தேவானந்தா இப்படிக் கூற மனோ கணேசன் அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரவேண்டியது காலத்தின்கட்டாயம். இன்றைய நெருக்கடி மிகுந்த காலக்கட்டத்திலே இந்த காலத்தின் கட்டாயத்தை புரிந்துக்கொண்டு நாம் செயற்படாவிட்டால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் அரசியல் செயற்பாட்டை தமிழ் இனத்தின் தேசிய ஐக்கியத்தை சிதைத்து சின்னப்பின்னப்படுத்தாமல் நம்மால் கொண்டுவரமுடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழினத்தின் ஐக்கியத்தை தான் பிரித்ததாகப் பெருமையுடன் கூறிக் கொள்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அவருடன் கூடி இருந்து கொண்டு மனோ கணேசன் தமிழினத்தின் ஐக்கியம் பற்றிக் கூறுகிறார். அடுத்த வருடம் ரணில் சொல்லுவார் மனோகணேசனைப் மற்றத் தமிழர்களிடம் இருந்து பிரித்தது நானே என்று. மனோ கணேசன் மலையக மக்கள் முன்னணியின் கருத்தில் இருந்து வேறு படுகிறார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

இலங்கையில் பல ஆட்சி மாற்றங்களை நாம் கண்டுள்ளோம் எந்த ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு விடிவு தந்தது?

யார் இந்த புது அரசியல்வாதி சரத் பொன்சேக்கா?
மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு சரத் பொன்சேக்காவை ஆட்சிக்கு கொண்டுவந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? யார் இந்த சரத் பொன்சேக்கா? தமிழர்களை போர் நியமங்களை மீறி கொன்று குவித்ததால் சிங்கள மக்களிடம் புகழ் பெற்றவர்.
இவர் இதுவரை சிங்கள மக்களுக்கு என்ன சேவை செய்தார்? இவர் அரசியலுக்கு வரக் காரணமே இவர் ஒரு தமிழ்த் தேசியத்தின் விரோதி என்பதாலேயே. இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வித உரிமையும் கிடையாது அவர்கள் இங்கு வாழலாம் என்று "பெருந்தன்மையுடன்" கூறிய சரத் பொன்சேக்காவுடன்; சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றேன் என்று கூறிப் பெருமை தேடிக் கொண்டவருடன் கூட்டுச் சேர்ந்து இருந்து கொண்டு மனோ கணேசன் சொல்கிறார் ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு விடிவு கொண்டுவருமாம்.

வாக்குப் பலமும் சுயநிர்ணய உரிமையும்.
தமிழர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பதன் மூலம் தமது பிரச்சனையைத் தீர்க்கலாம் என்றால் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருக்கிறது என்றாகிவிடும். இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்கள் வாக்களித்து எதைச் சாதித்தார்கள். அவர்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் அவர்களின் துரோகிகளாக மாறியதுதான் உண்மை. சுயநிர்ணய உரிமை இல்லாத ஒரு இனம் தந்து வாக்குப் பலத்தால் எதையும் செய்ய முடியாது. தமது வாக்குப் பலத்தால் எதையும் ஒரு இனம் சாதிக்க முடியாவிட்டால் அது சுயநிர்ணய உரிமை இல்லாத இனம்.


தமிழ் அரசியல் வாதிகள் சிலவற்றை மறந்து விட்டனர்:
  • தமிழர்களின் அதி தீவிர விரோதி யாரோ அவருக்குத்தான் சிங்களமக்கள் விரும்புவாரகள்.
  • இத் தேர்தலில் தமிழர்கள் வாக்குப் பலத்தை கருத்தில் கொள்ளாது பிரதம வேட்பாளர்கள் களத்தில் இறங்குவதையே சிங்களப் பேரினவாதிகள் விரும்புகிறார்கள்.
  • தேர்தல்களில் வாக்களிப்பதால் தமிழர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை.



Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...