Saturday, 20 February 2010

தமிழத் தேசியக் கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலிலா?


இலங்கைத் தமிழர்களின் நண்பன் போல் நடித்து இந்தியா அவர்களைப் பலமுறை கால் வாரிவிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் போரில் பேரழிவைத் தடுக்க பல நாடுகள் எடுட்த முயற்ச்சி இந்தியாவின் சதியால் தடுத்து நிறுத்தப் பட்டது. இலங்கை அரசு ஆகஸ்ட் 2009இல் முடிக்க இருந்த போரை இந்தியா வற்புறுத்தி இந்தியப் பொதுத் தேர்தலுக்குமுன்( மே 2009)அப்பாவிகளின் உயிரிழப்புக்களைக் கருத்தில் கொள்ளாமல் இலங்கையும் இந்தியாவும் இலங்கையில் போரை முடித்தன. இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான துரோகம் இன்று நேற்கு ஆரம்பமானதல்ல.

இந்தியப் பிரதமர் ஜவகர்லால நேரு இலங்கையைக் கூட்டுச் சேரா நாடுகள் அணியில் இணையச் செய்ய முன்னாள் இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதன் படி இலங்கையில் இருந்து தோட்டத் தொழில் செய்து கொண்டிருந்த பல இலட்சம் தமிழர்கள் வெளியேற்றப் பட்டனர். அதன் பிரதி உபகாரமாக இலங்கை அமெரிக்காவுடன் சேராமல் கூட்டுச் சேரா நாடுகளுடன் இணைந்து கொண்டது.
இலங்கை 1948இல் சுதந்திரமடைந்தபின் தமிழர்களின் இரு முக்கிய கட்சிகளான தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் இலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் இணைக்க தமிழ் காங்கிரசுத் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் முயன்ற போது அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் தோட்டத் தொழிலாளர் காங்கிரசுத் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானிடம் நீ சிறுபான்மை இனமாகிய தமிழர்களுடன் சேராமல் பெரும்பான்மை இனமான சிங்களவர்களுடன் ஒத்துழை என்று பணித்தார். தொண்டமானும் அப்படியே செய்தார். அவருக்கு சிங்களவர்கள் கொடுத்தபரிசு தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தமையாகும். இது பற்றி நேருவிடம் தோட்டத் தொழிலாளர்கள் முறையிட்டபோது இது உள் நாட்டுப் பிரச்சனை இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டார். இது இந்தியா தமிழினத்திற்கு இந்தியா செய்த பெரும் துரோகம்.

இதன் பின் 1964இல் இந்தியா இலங்கையுடன் சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் சர்வதேச நியமங்களுக்கு எதிராக கைச்சாத்திட்டு 150,000 தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. இத்துடன் நின்றுவிடவில்லை இந்தியத் துரோகம்.

1980களின் ஆரம்பப்பகுதியில் இலங்கை வாழ் தமிழர்களிடை பல ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவற்றை சிங்களவர்களுடன் மோதவிட்டதுடன் அக்குழுக்களை ரோ அமைப்பின் சதி மூலம் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டது. இது தமிழ்த் தேசிய போராட்டத்தை பலவீனப் படுத்தவும் இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டுவடவும் செய்த சதி.

மாலைதீவில் தமிழ் ஆயுதக் குழு ஒன்று நடாத்திய தாக்குதல், ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தம் உட்பட பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கையில் இன அழிப்புப் போர் 2008/09 போரை இந்தியா முன்நின்று நடாத்தியது. அப்போதே இலங்கைக்கு 500கோடி கைக்கூலியாக இந்தியப் பொதுத் தேர்தலுக்கு பின் தருவதாக இந்தியா இலங்கைக்கு வாக்குறுதி அளித்ததாக நம்பப்படுகிறது. போர் நடந்து கொண்டிருக்கும் போது இலங்கைய இந்தியா போர் நிறுத்தம் கேட்பதாக "பாவ்லா" காட்டிக் கொண்டிருந்தது. நாம் போர் நிறுத்தம் செய்யும் படி கேட்பது போல் கேட்கிறோம் நீ கொன்று குவி! பத்தாயிரம் ஆரியப் பேய்கள் வன்னியில் நின்று போரை முன்னெடுத்ததாம்.

இந்த சரித்திரப் பின்னணியை தமிழத் தேசியம் கூட்டமைப்பு நன்குணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைய நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அது பின் வருவனவற்றில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது:
  • தமிழ்த்தேசியத்தின் தீவிர ஆதரவாளர்களை ஓரம் கட்டுதல்.
  • இந்தியாவின் துரோகங்களை உணர்ந்து செயற்படும் தமிழின உணர்வாளர்களை ஓரம் கட்டுதல்.
  • வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் புறக்கணித்து தமது அரசியல் நடவைக்கைகளை எடுத்துச் செல்லுதல்.
இவற்றைப் பார்க்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியத்திற்கு எதிராக இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. தமிழ்த் தேசிய போராட்டம் புலம் பெயர்ந்த மக்கள் கையில் ஒப்படைப்பதாகவே போராளிகள் கடைசியாகத் தெரிவித்த கருத்து என்பதை கூட்டமைப்புக் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றித் தெரிந்து கொண்டுதான் அதன் கையில் ஒப்படைக்கவில்லையோ?

Thursday, 18 February 2010

மாறும் இந்து சமுத்திரப் பிராந்திய ஆதிக்கம் தமிழர்களுக்கு சாதகமாக அமையுமா?


இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்து மேற்குலகப் பத்திரிகைகள் அடிக்கடி இப்போது எழுது வருகின்றமையில் இருந்து இலங்கை தொடர்பாக வட அமெரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன அல்லது ஏற்படுத்தவிருக்கின்றன என்று சொல்லலாம். இதற்கு அவை இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பத்திரிகைச் சுதந்திரம் போன்றவற்றை கையில் ஆயுதமாக எடுத்தாலும் உண்மையில் அவை இலங்கையின் சீனாவைச் சார்ந்து செல்வதாக அவை கருதுவதே முக்கிய காரணம்.

அமெரிக்க சீன பங்காளிக் கொள்கை
அமெரிக்கா தனது வெளியுறவுக்கொள்கையை தனது வர்த்தக நலன்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றிக் கொள்ளும். சென்ற நூற்றாண்டின் இறுதியில் சீனா பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சியைக் காணத் தொடங்கியபோது அமெரிக்க வெளியுறவுத் துறை ஆலோசகர்கள் சீனாவுடன் முரண்படுவதிலும் பார்க்க ஒரு பங்காளியாக இணைந்து சீனாவுடன் ஒரு நல்ல வர்த்தக உறவை ஏற்படுத்தும் படி அமெரிக்காவை வலியுறுத்தினர். அதன் விளைவாக சீனா தனது ஏற்றுமதியை பெருமளவில் பெருக்கி உலகின் மிகப் பெரிய வெளிநாட்டுச் செலவாணியைக் கொண்ட நாடாக மாறியது. சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதிக்குப் பிறகு ஜப்பான் பாரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த போது ஜப்பானிய நாணயம் அமெரிக்க டொலருக்கு எதிராக மூன்று மடங்கு மதிப்பு வளர்ச்சி கண்டது. அதனால் ஜப்பான தனது நாட்டின் உற்பத்திகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜப்பானிய வட்டிவீதம் சுழியம் வரை இறங்கியது. அவற்றின் பலனை இப்போது ஜப்பானிய தொழிலாளர்கள் அனுபவிக்கிறார்கள். ஜப்பான் விட்ட பிழையைத் தான் விடக்கூடாது என்று சீனா கவனமாகச் செயற்பட்டு தனது பொருளாதாரத்தையும் பிராந்திய ஆதிக்கத்தையும் கட்டியெழுப்பியது. அதன் ஆதிக்கம் ஆசியாவுடன் நிற்காமல் ஆபிரிக்க மத்திய அமெரிக்க நாடுகள் வரை நீண்டது. அமெரிக்க எதிரி நாடுகளான ஈரான சிம்பாவே மியன்மார் ஆகிய நாடுகளுடன் உறுதியான உறவுகளை வளர்த்துக் கொண்டது. அமெரிக்கா சீனாவிடன் வர்த்தகப் பங்காளி உறவை மேம்படுத்திக் கொண்டிருக்கையில் இந்தியா என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறியது.

தேய்ந்து செல்லும் இந்தியப் பிராந்திய ஆதிக்கம்.
இந்திரா காந்தி - பார்த்தசாரதி(வெளியுறவுச் செயலர்) காலத்தில் இந்தியா தனது பிராந்திய ஆதிக்கத்தை நன்கு வைத்திருந்தது. பங்களா தேசப் பிரிவினையை வெற்றீகரமாக ச் சாதித்தது. அமெரிக்காவாலும் சீனாவாலும் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது.

1984இல் அலன் தம்பதிகள் தமிழ்ப் பேராட்டக்குழு ஒன்றினால் கடத்தப் பட்டபோது அவர்களைத் தேட அமெரிக்க விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதை அறிந்த இந்த்திரா காந்தி அம்மையார் அவ்விமானம் எந்தத் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடு படக்கூடாது என்று இலங்கையை எச்சரித்து அந்த விமானத்தைப் பறக்காமல் செய்தார். அவ் விமானம் பறப்பில் ஈடுபட்டால் இந்தியக் கரையோரப் பகுதிகளை வேவு பார்க்கக் கூடும் என்றே இலங்கையை மிரட்டிப் பணிய வைத்தார். தமிழ்த்தேசிய வாதிகளின் பக்கபலத்தால் இதை அவ்ரால் சாதிக்க முடிந்தது. இப்படியெல்லாம் இந்தியப் பிராந்திய ஆதிக்கம் இருந்தது.

இலங்கை குடியரசுத் தலைவரைத் திருப்திப்படுத்த ராஜீவ்கந்தி பார்த்தசாரதியைப் பதவி நீக்கம் செய்தபின் நிலைமைகள் தலை கீழாக மாறின. அதன் பின் இன்னோரு வெளியுறவுச் செயலர் வெங்கடேசனையும் ராஜீவ் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்தார் இலங்கையைத் திருப்திப் படுத்த. பின்னர் வந்த வெளியுறவுச் செயலர்கள் எல்லாம் அவர்கள் சாதிகளையும் ஆட்சியாளர்களைன் குடும்ப நலன்களையும் கருத்தில் கொண்டு செயற்பட்டனர். இந்தியாவின் இந்தப் பலவீனமான வெளியுறவுத் துறை அமெரிக்கா சீனாவுடன் வர்த்தகப் பங்காளியாகச் செயற்பட்ட காலத்தில் இருந்தது சீனாவிற்கு வசதியாகப் போய்விட்டது. இந்தியாவிற்கு எதிராக தனது பிராந்திய ஆதிக்கத்தை நன்கு நிலை நாட்டி விட்டது.

சீனாவின் முத்து மாலைத் திட்டம் - இந்தியாவிற்கு சுருக்குக் கயிறு
சீனா இந்தியாவைச் சுற்றி மறைமுக கடற்படைத் தளங்களை அமைத்துவருகிறது. உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து மாக்கடலுாடாகவே நடக்கிறது. இந்தப் பாரிய கடல் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள சீனா ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.
.
இந்தியாவின் வடபகுதி முழுக்க எதிரிகளான சீனாவினதும் பாக்கிஸ்தானுடன் உள்ளது. நேப்பாளமும் பங்களா தேசமும் இந்தியச் சார்பான நாடுகள் அல்ல. இந்தியாவின் எனைய எல்லைகள் யாவும் கடற்பரப்பாகும்.பாக்கு நீரிணை இந்திய மீனவர்களின் கொலைக்களம்.
இந்நிலையில் பாக்கிஸ்த்தானில் குவாடார் துறைமுகத்தில் சீனா பலமான மறைமுகத் தளம் அமைத்துள்ளது. இது அரபுக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் அமைக்கப் பட்டதாகும்.
.
இலங்கையில் அம்பாந்தோட்டையில் மிகப் பெரும் செலவில் ஒரு துறைமுகத்தை அமைத்து வருகிறது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்துமாக்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் சீனாவிற்க்குத் தேவையான பெற்றோலியம் அரபியநாடுகளில் இருந்து இவ்வழியாகவே செல்கிறது. இதில் சீனாவும் ஈரானும் இணைந்து இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளது.
.
மியன்மாரில்(பர்மா) சிட்வே என்னும் இடத்திலும் பங்களாதேசத்தின் முக்கியமான சிட்டகொங்கிலும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இவை வங்கக் கடலில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் சீனாவால் அமைக்கப் பட்டுள்ளன.

குடும்ப நலன்களுக்காக பிராந்திய நலனைக் கைவிட்ட இந்தியா
மேற்குலக நாடுகள் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இலங்கைப் பிரச்சனையை கையில் எடுத்த வேளை இந்தியா சீன-இலங்கைக் கூட்டில் தன்னையும் ஒரு பங்காளனாக இணைத்துக் கொண்டது. ஐக்கியா நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டது. விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டினால் போதும் என்பது மட்டும் தான் தமது எண்ணம் என்பது போல் இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடந்துகொண்டது. அப்படி நடந்தமைக்குக் காரணம் ஒரு குடும்ப நலனை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் செயற்பட்டமையே. சிங்களப் பேரினவாதிகள் கடும் இந்திய எதிர்ப்பாளர்கள் என்பது சிங்கள மக்களுடன் பழகிய அனைவருக்கும் தெரியும்.

சீனாவிற்கு எதிராகக் காய்கள் நகர்த்தும் அமெரிக்கா.
சீனாவுடனான தனது பங்காளிக் கொள்கை சீனாவை வளர்க்கவே உதவியது என்பதை இப்போது அமெரிக்கா உணர்ந்து கொண்டுள்ளது. அமெரிக்கா இப்போது சீனாவிற்கு எதிராகக் காய்களை நகர்த்துவது போல் தெரிகிறது. இதன் பகுதிகளாக தைவானிற்கு பாரிய ஆயுத விற்பனையும் தீபெத்தியத் தலைவர் தலய் லாமாவுடனான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சந்திப்பும் நடந்தேறியுள்ளன. அத்துடன் அமெரிக்கா இந்தியாவையும் தன் சீனவிற்கு எதிரான காய் நகர்த்தல்களில் ஈடுபடுத்த முயல்கிறது. அண்மையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் ஜேம்ஸ் ஜோன் அவர்களின் பாக்கிஸ்த்தானியப் பயணத்தின் போது அமெரிக்கா இப்போது பாக்கிஸ்த்தானை சற்று அடக்க முயல்கிறது போல் நடந்து கொண்டுள்ளதுடன் சற்று இந்தியச் சார்பாகவும் நடந்திருக்கிறார். அத்துடன் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கவிற்கு பாக்கிஸ்த்தான் தேவைப்படுவதற்க்கும் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு இந்தியா தேவைப் படுவதற்கும் இடையில் ஒரு சமநிலையை உறுவாகக அவர் பெரிதும் சிரமம் எடுட்திருகுக்கிறார்.

தமிழர்கள் மீண்டும் தேவைப் படுவார்களா?
மஹிந்த ராஜபக்சே தனது அதிகாரத்தை நாட்டில் தக்க வைக்க மேற்குலகிறகு எதிரான சக்திகளுடன இணைய விரும்புகிறார். மேற்குலகிற்கு எதிராக அவர் நிற்பது அவருக்கு சிங்களமக்கள் மத்தியில் ஒரு வீர மிக்க தலைவராக உருவாககும் என்று அவர் நம்புகிறார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றதற்கு அதுவும் ஒரு காரணி. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் இரசியா சென்றது கவனிக்கத் தக்கது. அவர் அங்கு இருக்கும் போதுதான் சரத் பொன்சேக்கா கைது செய்யப் பட்டார். அவர் அங்கு ஏதாவது உறுதி மொழியை வாங்கிக் கொண்டுதான் துணிந்து சரத் பொன்சேக்காவைக் கைது செய்யும் காரியத்தில் இறங்கினாரா?
சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் காய் நகர்த்தல்களும் தனது ஆட்சி அதிகாரத்தை இலங்கையில் நிலை நிறுத்த மஹிந்த ராஜபக்சே மேற்குலகின் சொற் கேளாமல் நடப்பதும் அவர் சீன இரசிய நாடுகளுடன் உறவை வளர்ப்பதும் மஹிந்தவிற்கு எதிரான சிங்கள சக்திகள் வலுவிழந்து நிற்பதும் மேற்குலகைத் தமிழர்பக்கம் பார்வையைத் திருப்ப வைக்குமா?

Tuesday, 16 February 2010

தமிழர்கள்: இந்தியா கை கழுவி விட்டதா அல்லது கை நழுவ விட்டதா?


இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் நடந்து கொள்ளும் முறை குறித்து தாங்கள் அதிருப்பதி அடைந்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இதை தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கிருஸ்ணா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்வைத்து அவர்கள் வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கு மகிந்த ராஜபக்கச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுவது மிகவும் விசித்திரமானது. இலங்கைக்கு சகல உதவிகளும் வழங்கி இலங்கையுடன் மிகச் சிறந்த நட்புறவை பேணிவருவதாகக் கூறிவரும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஏன் இப்படி ஒரு விரக்தி கலந்து வசனம் பேசுகிறார்?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கை எதுவும் தமிழர்களுக்கு செய்கிறது இல்லை என்று கூறுவது ஒன்றில் இலங்கையில் இந்தியாவின் கையாலாகத் தனத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் அல்லது
இந்தியா இலங்கைத் தமிழர்களைக் கைகழுவி விட்டிருக்க வேண்டும்.
இலங்கையிலும் பார்க்கப் பல மடங்கு பலம் மிக்க இந்தியா சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் இருந்தே இலங்கை விவகாரத்தில் ஒரு பலவீனமான நாடாகவே செயற்படுகிறது. கச்சதீவுத் தாரை வார்ப்பும் ஒரு இந்தியப் பலவீனத்தின் வெளிப்பாடே. 1980களில் அமெரிக்கா இலங்கையில் காலூன்ற முயன்றபோது இந்தியாவால் அதை தன் படைபலத்தால் தடுக்க முடியாமற்போனது. அப்போது இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்கள் தேவைப் பட்டனர். இதற்காக இந்தியா தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தமிழ்-சிங்கள ஆயுத மோதலை உருவாக்கியது. தமிழர்கள் ஆயுத ரீதியாகப் பலம் பெற்ற நிலையில் இந்தியாவின் அமைதிப் படை வந்து தமிழர்களை அழித்தது. ராஜீவ் காந்தியின் அமைதிப் படை வந்திருக்காவிட்டால் ஆறு மாதத்தில் தமிழ் ஈழம் பிரிந்திருக்கும் என்று அப்போதைய இலங்கை நிதியமைச்சராக விருந்த ரொணி டீ மேல் தெரிவித்தார்.

அமைதிப் படை விரட்டியடிக்கப்பட்டு தமிழர்கள் மீண்டும் ஆயுத ரீதியாகப் பலம் பெற்ற நிலையில் இரு வாரத் தாக்குதலில் வடக்குக் கிழக்கில் உள்ள சிங்களப் படைகளை அழித்தொழிக்கக் கூடிய அளவிற்கு தமிழர்கள் ஆயுத பலம் பெற்றிருந்த நிலையில் தமக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியாப் படைகள் மீண்டும் வராமல் இருக்கக்கூடிய ஒரு பன்னாட்டு ஆதரவுத் தளத்தை உருவாக்க தமிழர்கள் ஒரு சமாதான உடன்படிக்கையை இலங்கை அரசுடன் நோர்வேயின் அனுசரணையுடன் 22 பெப்ரவரி 2002 இல் கைச்சாத்திட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளில் இலங்க அரசு எந்தத் தீர்வையும் முன்வைக்கப் போவதில்லை என்பதை தமிழர்கள் தரப்பிற்கு முன் கூட்டியே தெரிந்து கொண்டுதான் அதில் பங்குபற்றியது. பேச்சு வார்த்தையின் முடிவில் தமிழர்களுக்கு தனிநாட்டைத் தவிர வேறு வழியில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவதே தமிழர் தரப்பின் நோக்கம். ஆனால் இந்தியச் சதி இலங்கயிலும் வெளிநாடுகளிலும்.வேறு விதமாக இருந்தது. பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த வேளை தமிழர்கள் போராட்டத்திற்கு இந்திய வற்புறுத்தலால் வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பயங்கரவாத முத்திரை குத்தின. தமிழர் ஆயுதபலம் இந்தியாவால் தூண்டப் பட்டது. துரோகிகளால் பலவீனப் படுத்தப் பட்டது. தொடர்ந்து இந்தியா சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களின் ஆயுத விநியோகங்களையும் அழித்தது. சிங்களவர்கள் தமிழர்கள்மீது போர் தொடுத்தபோது சிங்களவர்களுக்கு ஏற்பட்ட படைத்துறை ஆளணி இணைப்புக்களை ஈடு செய்ய ஆரியப் பேய்கள் பின்கதவால் இலங்கைக்குள் நுழைந்து தமிழர்களைக் கொன்று குவித்தன. ஆரிய சிங்களக் கூட்டுச் சதி முள்ளிவாய்க்கால்வரை சென்றது.

  • தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா ராணுவத்துக்குத் இந்தியா வழங்கி வரும் ஆதரவு மிக முக்கியமானது என சிறிலங்காவின் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பேட்டியொன்றில் சென்ற ஆண்டு மே மாதம் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் ‘டைம்ஸ் நவ’ தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சிறிலங்கப் பிரதமராகப் தாம் பதவி வகித்த காலத்தில் இந்தியாவும், அபிவிருத்தியடைந்த பல நாடுகளும் பாதுகாப்புத் துறையில் சிறிலங்காவுக்கு உதவியதாகக் கூறியுள்ளார். முன்னர் தடைகள் இருந்த போதிலும், சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பின்னர் ராணுவ ரீதியிலான உதவிகள் தாராளமாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

தமிழர் போராட்டத்தை மழுங்கடித்த இந்தியா தமிழர்களை மிகப் பலவீனமான நிலையிலும் சிங்களவர்களை மிகப் பலமான நிலையிலும் நிறுத்திவிட்டது. இப்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ள கருத்து தம்மால் இனி ஒன்றும் செய்யமுடியாது தமது பணி முடிந்து விட்டது எனபது போல் இருக்கிறது. இது ஒரு கைகழுவல்தான். இலங்கை குடியரசுத் தலைவர் நினைத்தால் எந்தவித சட்டப் பிரச்சனையுமின்றி இலங்கைக் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தை அமூலாக்க முடியும். அது இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட மிகக் குறைந்த ஒரு அதிகாரப் பரவலாக்கம். அதைக்கூட வற்புறுத்த இந்தியா விரும்பவில்லை. இது இந்தியாவின் கையாலாகாத நிலை அல்ல தமிழர்களைக் கைகழுவிவிடும் நோக்கமே.

ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் நடந்து கொள்ளும் முறை குறித்து தாங்கள் அதிருப்பதி அடைந்துள்ளதாக தெரிவிதத இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தம் அதிருப்தியை எப்படி வெளிக்காட்டப் போகிறோம் என்று குறிப்பிடவில்லை அல்லது தாம் அடைந்துள்ள அதிருப்தியால் இலங்கைக்கு பாதகமான நிலை ஏற்படும் என்றோ அல்லது இலங்கை இந்திய உறவு பாதிக்கப் படும் என்றோ கோட்டிட்டுக்கூடக் காட்டவில்லை. இது கை கழுவல்தான்.

இந்திரா காந்திக்குப் பின் இலங்கை இந்தியப் பிடியிலிருந்து நழுவி விட்டது. அதன் பின் இலங்கையின் ஒரு கைப் பொம்மையாகவே இந்தியா செயற்படுகிறது. ஜே ஆர் ஜெயவர்த்தனே ராஜீவ் காந்தியை ஏமாற்றி இந்தியப் படைகளை தனது கூலிப்பட்டாளம் ஆக்கியதில் இருந்து நிலை மாறிவிட்டது.

Sunday, 14 February 2010

முதல்வர் கருணாநிதியின் அடுத்த நாடகம்


கருணாநிதி தனது அடுத்த நாடகத்திற்கு தயாராகி விட்டார். அவர் அண்மையில் இப்படித் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்:
  • தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்தபின் நிறைவேற்றுவதுதான் நியாயமான - நாணயமான ஜனநாயகமாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக ராஜபக்சே இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தவறினாலும் - தாமதப்படுத்தினாலும் தி.மு.. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இங்குள்ள கழக அரசின் சார்பாக இந்தியப் பேரரசை வலியுறுத்தி ஆவன செய்யத் தயங்காது.
இவ்வளவு காலமும் தமிழர்கள் இலங்கை சுதந்திரம அடைந்ததிலிருந்து இலங்கையில் சிங்களவர்களின் வன்முறைக்கு உள்ளானபோது தமிழ்நாட்டால் எதுவும் செய்ய முடியவில்லை. இலங்கத் தமிழர்களுக் தமிழ்நாட்டிலிருந்து உதவி கிடைத்தது 1980களில் இந்திய மத்திய அரசு தனது பிராந்திய நலன்களுக்காக தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி சிங்களவர்களுடன் மோதவிடும் கொள்கையை அமூல் படுத்தியபோதுதான். கொடுத்த அதே ஆயுதங்களைப் பறிக்க ராஜீவ் காந்தி படை அனுப்பி அட்டூழியம் செய்தபோது யாரால் தடுக்க முடிந்தது? பார்வையாளர்களாக இருந்தது யார்?

நடுக்கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் குருவிகள் போல் சுட்டுக் கொல்லப்பட்டபோது, நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்தித் தாக்கியபோது யாரால் தடுக்க முடிந்தது? பார்வையாளர்களாக இருந்தது யார்?

தமிழர்களின் ஆயுதக் கப்பலை இந்தியாவும் இலங்கையும் இணைந்து அழித்து ஒழித்தபோது யாரால் தடுக்க முடிந்தது? பார்வையாளர்களாக இருந்தது யார்?

தமிழர்கள் ஒரு நாளில் மட்டும் ஆரியப் பிணந்தின்னி நாய்களும் சிங்களவர்களும் இணைந்து 25000 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்றும் குவித்தபோது யாரால் தடுக்க முடிந்தது? பார்வையாளர்களாக இருந்தது யார்?

ராஜீவ்-ஜேஆர் ஜெயவர்தன ஒப்ந்தம் இதுவரை நிறைவேற்றப் படவில்லையே! ராஜீவும் ஜேஆரும் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லையே இதப் பார்த்துக் கொண்டு இருந்தது யார்?

இம்முறை பதவியைத் துறந்து விட்டுப் போராடுவோம் என்று சொல்லாமல் இந்தியப் பேரரசை வலியுறுத்தி ஆவன செய்வோம் என்று முதல்வர் ஐயா கூறியிருப்பதைக் கவனிக்கவும். அவர் இன்னும் கடிதம் எழுதப்போகிறார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...