Tuesday, 26 May 2009
இன்று அவன் எங்கு போவான்? ஒரு நாள் வெல்வான்..
தன்னாட்சி கேட்டவன்
தன்னாட்டம் தளர்கையில்
முன்னூட்டம் கொடுக்காதோர்
பின்னூட்டம் கொடுத்துப்
பெருமையடைகின்றனர்
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
எங்கும் இருட்டு
எங்கும் அவலம்
எங்கும் அபாயம்
எதுவும் புரியவில்லை
திக்கும் தெரியவில்லை
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
துணைக்கு வந்தவர் துரோகிகளாயினர்
பங்காளிகளய் வந்தவர் பகையாளியாயினர்.
திர்க்க வந்தவர் தீர்த்துக் கட்டினர்
பார்த்து நின்றவர் பாரா முகங் கொண்டனர்
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
பொய் மூட்டைகள்
புனை கதைகளும்
மெய்யாகிப் போனதால்
உண்மை எது பொய் எது
தடுமாறி நிற்பவன்
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
பூகம்பத்துள் பூவாகியவன்
சூறாவளிக்குள் சுடரானவன்
துரோகச் சுனாமியைக் கண்டவன்
அடுத்தவரால் அடுத்துக் கெடுக்கப்ப்ட்டவன்
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
அவனுக்கு சமயம் பார்த்து
உதவியவருமில்லை
அவன் சமயத்தைப் பார்த்து
உதவியவருமில்லை
அறிக்கைப் போரால்
அலுத்துப் போனவன்
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
இழப்புக்களே வாழ்க்கையானவன்
துரோகங்களே சூழலலானவன்
ஒன்றை மட்டும் இழக்காமல்
நிற்ப்பான் நிமிர்ந்து
இழக்கவில்லை அவன் மனத்திடம்
அதனால் அவன்
அவன் இப்போது
எங்கும் செல்வான்
எவரிடமும் செல்வ்வான்
எப்படியும் செல்வான்
ஒருநாள் வெல்வான்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
Is so touching brother .this isn't a poem its the true situation of thamilan
Post a Comment