

பல வெற்றிக் களிப்புகளில் மூழ்கிக் கொண்டிருந்த இலங்கை அரசிற்கு ஒரு விரக்தி தரும் நிகழ்வாக இந்தியத் திரைப்பட விழா அமைகிறது. அயர்லாந்து, தென் கொரியா, கனடா போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் நடத்தும் படி கேட்டிருந்தும் இலங்கையில் இந்த விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்தது எந்த அடிப்படையில் என்று விளக்கம் இல்லாமல் பலரும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் நடத்த வேண்டும் என்ற முடிவு பெரும் பணக் கொடுக்கல் வாங்கலின் பின்னர் அல்லது இந்தியப் பேரினவாத ஆட்சியாளர் இலங்கை பேரின வாத ஆட்சியாளர்களுக்கு தமிழர்களை அடக்கியாள தொடர்ச்சியாக செய்து வரும் உதவிகளின் அடிப்படையில்தான் எடுக்கப் பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவிக்கப் படுகிறது. அல்லது இரண்டும் இந்த முடிவை எடுக்கச் செய்திருக்கலாம்.
தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பை வட இந்தியப் பேரினவாதிகள் வழமைபோல் கருத்தில் எடுக்கவில்லை. இலங்கையில் விழாவை நடத்தக் கூடாது என்ற தமிழின உணர்வாளர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்தால் தமது படங்களின் வருவாய் குறையும் என்பதை உணர்ந்த பல வட இந்திய முன்னணி இந்திப் பிரமுகர்கள் இலங்கையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதில்லை என்ற முடிவு இலங்கை அரசிற்கு பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பங்கேற்பதற்கு பெரும் தொகை பணத்தை நுழைவுக் கட்டணமாக அறவிட இருந்த இலங்கை உல்லாசப் பிரயாணத் துறை இப்போது கட்டணங்களை வெகுவாக குறைத்து விட்டது. தலைக்கு இரண்டு இலட்சத்தில் இருந்து பதினொரு இலட்சம் வரை அறவிட இருந்த இலங்கை உல்லாசப் பிரயாணத் துறை இப்போது இருபத்தையாயிரம் ரூபாக்களாக குறைத்துள்ளது.
இந்த விழாவில் பங்கு பற்றுவதில் இருந்து இந்திப்படவுலகின் முன்னணி நட்சத்திரங்கள் விலகியமை இலங்கையினல் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு செய்த இனக்கொலை மேலும் பிரபலம் அடையச் செய்துவிட்டது. இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்ற மாயையை ஏற்படுத்த் முயன்ற ஆரிய சிங்களக் கூட்டமைப்பு இப்போது விழிபிதுங்குகிறது.