Saturday 6 February 2010

பாக்குநீரிணை முள்ளி வாய்க்காலாகுமா


என்வீட்டில் ஒரு நாய் உண்டு
வளமான என் வீட்டைக் காக்க
ஒருவருக்கும் தீங்கு செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்

முன் வீட்டுக் கோழி வந்து
என் முற்றத்தை அசிங்கப்படுத்தும்
என் நாய் ஒன்றும் செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்

பின் வீட்டில் இருந்து ஒரு மாடு வந்து
என் தோட்டத்தை நாசமாக்கும்
என் நாய் ஒன்றும் செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்

பக்கத்து வீட்டில் வாழும் என் தம்பி
தன் நாயோடு என் வீடு வந்தால்
எகிறிப்பாயும் என் நாய்
என் வீடு போர்க்களமாகும்

2010இல் செங்கல்பட்டு
1983இன் வெலிகடையாகிறது
நாளை பாக்குநீரிணை
முள்ளி வாய்க்காலாகுமா

Friday 5 February 2010

இலங்கை ஒரு சர்வாதிகார நாடு: 17ம் திருத்தம் இன்றி

இலங்கைக் குடியரசுத் தலைவர் பதவி உலகிலேயே தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப் படும் அரசுத் தலைவர் பதவிகளில் மிகவும் அதிகமான அதிகாரத்தை கொண்ட பதவியாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் ஜே ஆரி ஜெயவர்தன தனக்காக உருவாக்கிய பதவி இது. அவருக்கு இதற்காக ஆலோசனை வழங்கியவர்களில் நீலன் திருச்செல்வமும் பேராசிரியர் ஏ. ஜே. வில்சனும்( தந்தை செல்வாவின் மருமகன்) முக்கியமானவர்கள்.

என்னால் இலங்கையில் ஒரு பெண்ணை ஆணாகவே அல்லது ஆணைப் பெண்ணாகவோ மாற்றுவதைத் தவிர மற்ற எதையும் செய்ய முடியும் என்றார் இந்தப் பதவியை முதல் வகித்த ஜே. ஆர் ஜயவர்தன. இலங்கையின் சட்டவாக்கற்துறை பாராளமன்றிடம் இருக்க அதை நிறைவேற்றும் சகல அதிகாரங்களும் ஆட்சி அதிகாரங்களும் குடியரசுத் தலைவரிடமே இருக்கும். இலங்கை அரசின் முக்கியமான பதவிகளான தேர்தல் ஆணையாளர், காவல்துறை மாஅதிபர், பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிபதிகள், சட்ட மாஅதிபர் கணக்காய்வாளர் நாயகம், பாராளமன்ற ஆணையாளர் (ombudsman) ஆகிய பதவிகளை இலங்கைக் குடியரசுத் தலைவரே நியமிக்க வேண்டும். இது போன்ற பதவிகளுக்கு தனக்குச் சாதக மானவர்களை நியமிப்பதன் மூலம் இலங்கைக் குடியரசுத் தலைவர் நாட்டின் சகல நடவைக்கைகளையும் தனது கட்டுப்பாட்டிலும் தனக்கு சாதகமாகவும் வைத்திருக்க முடியும்.

குடியரசுத் தலைவர் தனக்குச் சாதகமானவர்களை இப்பதவிகளுக்கு அமர்த்துவதை தவிர்க்கவும் தன் அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுதுவதை தவிர்க்கவும் இலங்கை அரசியல் அமைப்பில் 17வது திருத்தம் 2001-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு இலங்கைப் பாராளமன்றத்தால் நிறைவேற்றப் பட்டது.

17வது திருத்தத்தின் படி இலங்கையில் அரசமைப்புச் பேரவை ஒன்று நிறுவப்படவேண்டும். அரசமைப்புச் பேரவையானது:
  1. பாராளமன்ற சபாநாயகர்.
  2. பிரதம மந்திரி,
  3. எதிர்க்கட்சித்தலைவர்.
  4. குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படும் ஒருவர்.
  5. பிரதமர் எதிர்ககட்சித் தலைவர் ஆகியோரின் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படும் ஐவர்.
  6. பாராளமன்றத்தால் நியமிக்கப்படும் ஒருவர். ஆகியோரை உள்ளடக்கியது.
அத்துடன் இலங்கையில், மனித உரிமை ஆணையகம் உட்படப் பல ஆணையகங்களும் உருவாக்க வேண்டும்:
1. அரசியலமைப்புப் பேரவை
2. பொதுச் சேவை ஆணைக் குழு
3. தேர்தல் ஆணைக் குழு
4. நீதிச் சேவை ஆணைக் குழு
5. தேசிய பொலிஸ் ஆணைக் குழு.

இந்தப் 17வது திருத்தம் இலங்கைக் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாவிடிலும் இலங்கையில் ஒரு மாற்றத்தை நீதியான ஒரு நிர்வாகத்தை மனித உரிமைகளுக்கான ஒரு மதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நீதியான நிர்வாகத்துடனோ அல்லது மனித உரிமைகளுக்கான மதிப்புடனோ இலங்கையை ஆளமுடியாது என்று கருதிய இலங்கை ஆட்சியாளர்கள் அதை இன்றுவரை அமூல் படுத்தவில்லை. அதை அமூல் படுத்துவதற்கான காத்திரமான அழுத்தங்கள் எதுவும் இதுவரை எதிர்க் கட்சிகளால் மேற்கொள்ளப் படவுமில்லை. எதிர் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் 17வது திருத்தத்துடன் ஆளுவதிலும் பார்க்க அது இல்லாமல் நாட்டை ஆளுவதை விரும்புகிறார்கள். இதனால் இலங்கை குடியரசுத் தலைவர் ஒரு தேர்ந்தெடுக்கப் பட்ட சர்வாதிகாரியாகும். அந்தச் சர்வாதிகாரி தனக்குச் சாதகமாக தனது பதவிக்காலம் முடியமுன் தேர்தலை தான் அதிகாரத்தில் இருந்து கொண்டு நடாத்தி தனது பதவிக்காலத்தை ஒரு முறை கேடான தேர்தல் மூலம் நீடிக்கக்கூடிய சாத்தியங்கள் நிறைய உண்டு.

1999இல் சந்திரிக்கா பண்டாரநாயக்காவும் 2010இல் மஹிந்த ராஜபக்சவும் பதவிக்காலம் முடியுமுன்னரே தேர்தலை நாடாத்தி தங்கள் பதவிக்காலங்களை நீடித்துக் கொண்டனர்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதமளவில் இலங்கையில் 17வது திருத்தம் நிறைவேற்றும்படி ஐரோப்பிய ஒன்றியம் வற்புறுத்தியது. மற்றும்படி பெரிய வெளிநாட்டு அழுத்தங்கள் 17வது திருத்தம் அமூல்படுத்தும்படி கொடுக்கப் படவில்லை. 17வது திருத்தம் இன்றி இலங்கையின் அரசியல் அமைப்பு பல சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணானதாகக் கருதப்பட இடமுண்டு.

2010-01-26இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல் 17வது திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இலங்கை அரசின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப் பட்டவர்கள். அதனால் அவர்களை அவருக்கு வேண்டியவர்கள் எனக் கருத இடமுண்டு. உண்மையில் எதிர்க் கட்சிகள் இந்த திருத்தம் இல்லாமல் தேர்தல் நடத்த முடியாது என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். அந்தத் திருத்தத்தை அமூலாக்கி அதன் படிதேர்தல் நடந்திருந்தால் தேர்தல் ஆணையாளர் நான் மிக அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தேன் என்று அறிவித்திருந்திருக்க மாட்டார். இப்போது முன்வைக்கப் படும் பல தேர்தல் முறை கேடு சம்பந்தமான பல குற்றச் சாட்டுக்கள் எழுந்திருக்காது. 17வது திருத்தம் இல்லாத தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருக்கவேண்டும் அப்படி ஒரு தேர்தல் நடக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்க வேண்டும். அவற்றை செய்யத் தவறியதன் விளைவை அவர்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்.

நடக்கவிருக்கும் பாரளமன்றத் தேர்தலுக்காவது அதை இலங்கையின் எதிர்க் கட்சிகள் செய்வார்களா?

17வது திருத்தம் அமூலாக்கப்படும் வரை இலங்கை ஒரு சர்வாதிகார நாடு.

Thursday 4 February 2010

ராஜபக்சவை சரித்திர நாயகனாக்கும் பன்னாட்டுப் பன்னாடைகள்.


ஒரு தீரமும் தியாகமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி சகல போர் நியமங்களுக்கு எதிராக போர் புரிந்து மழுங்கடிப்பதற்கு பலநாடுகள் ரஜ்பக்சேக்களுக்கு உதவின. பல நாடுகள் அந்த உதவியைத் திரைமறைவாகவே செய்தன. அதனால் ராஜபக்சேக்கள் தம்மை தாமே ஒரு வீரம் நிறைந்த கதாநாயகர்களாகச் சித்தரிக்கின்றனர். பன்னாட்டு அரங்குகளில் இலங்கைப் பிரச்சனைபற்றி எழுப்பப் பட்ட போதேல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் இலங்கை அரசு ஒரு ஜனநாயக முறைப்படி தெரிந்தெடுக்கப் பட்ட அரசு என்றும் கூறப்படும்.

தனது கையைக் கழுவும் அமெரிக்கா.
இலங்கையில் போர்குற்றம் நடந்தது என்று அறிக்கைவிட்டதன் மூலம் இலங்கை இனக்கொலையால் தனது கைகளில் படிந்த இரத்தத்தை அமெரிக்கா கழுவ முயல்கிறது. அந்த அறிக்கையை எதிர்த்து நிற்பதாக ராஜபக்சேக்கள் கூறியதுடன் போரில் அமெரிக்க விடுதலைப் புலிகளைப் பாதுகாக்க முற்பட்டது என்றும் மீண்டும் அது சரத் பொன்சேக்கவுடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்க முயல்கிறது என்றும் சிங்கள மக்களை நம்ப வைப்பதில் ராஜபக்சேக்கள் வெற்றி கண்டனர். இந்தப் பன்னாட்டுச் சதிகளை எல்லாம் தம்மால் மட்டுமே முறியடிக்க முடியும் என்றும் தம்பட்டம் அடிக்கின்றனர். இதன் உண்மை அல்ல நாம் அன்றும் இன்றும் என்றும் சிங்களவர் பக்கமே நின்றோம் நிற்கிறோம் என்ற உண்மையை அமெரிக்கா என்றும் வெளிப்படுத்தப் போவதில்லை.

சட்டையைக் கழற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
விடுத்லைப் புலிகள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி சாமாதனப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட வேளை அவர்களைப் பயங்கரவாத இயக்கம் எனப் பட்டியலிட்டு அவர்களைப் பலவீனப் படுத்தியது ஐரோப்பிய ஒன்றியம். அவர்களைன் நிதி மூலங்களை முடக்க இலங்கைக்கு உதவியது ஐரோப்பிய ஒன்றியம். ஒரு பயங்கரவாத இயக்கத்தை ஒழிக்க ஜனநாயக அரசுக்கு உரிமை உண்டு என்று வேதம் ஓதிய சாத்தான் ஐரோப்பிய ஒன்றியம். இறுதிப்போரில் சரணடைய வந்தவர்களைக் கொன்றதையும் அப்பாவிகளை உயிரோடு புதைத்ததையும் அறிந்தும் அறியாமல் இருந்து கொண்டு தனது இரத்தக் கறை படிந்த சட்டையை ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகையை இடை நிறுத்துவதன் மூலம் கழற்றி விடப் பார்க்கிறது ஐரோப்பிய ஒன்றியம். வர்த்தகச் சலுகை நிறுத்தினால் தாம் பயப்படப் போவதில்லை பணியப் போவதில்லை என்று முழங்கி வீரர்களாகினர் ராஜபக்சக்கள்.

இந்திய அரசு என்றொரு ஆரியப் பேய்கூட்டம்.
மூடி மறைக்கப் பட்ட ராஜீவ் கொலையின் பின்னணியை இதுவரை அறிய முயலாத இத்தாலிச் சனியாளின் பாவாடைக்குள் முடங்கிய காங்கிரஸ் என்னும் ஆரியப் பேய்களின் அரசு இலங்கைக்கு தமிழ்த் தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க சகல உதவிகளையும் செய்தது. ஆனால் ராஜபக்சக்கள் தாம் இந்தியாவின் போரை நடத்தி வென்று கொடுத்தோம், காங்கிரசை வெல்ல வைத்தோம், இந்தியாவால் முடியாததை நாம் செய்தோம் என்று முழங்கும் போது உண்மையை உரைக்க முடியாமல் மௌனியாக நிற்கிறது. சனல்-4 தொலைக்காட்சி தமிழர்கள் நிர்வாணமாகப் படுகொலை செய்யப் படுவதை அம்பலப் படுத்தியபோது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அது தொடர்பாக உடன் விசாரணைக்கு உத்தரவிடுவதாக அறிவித்தார். இன்றுவரை அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று பற்றியாரும் அறியார். இலங்கை இனக் கொலையில் இந்தியப் படைகளின் சம்பந்தம் பற்றி வெளிக் கொணரக் கூடிய காணொளிப்பதிவுகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறியத்தான் அந்த விசாரணையா? அந்தமாதிரி எல்லாம் இலங்கை இனக்கொலைக்கு நேரடித் தொடர்பு உடையதாகக் க்ருதப் படும் ஆரியப் பேய்கள் ராஜபக்சக்கள் இந்தியாவின் போரை நாம் நடத்தி வென்று கொடுத்தோம் என்று மார்தட்டும் போது மௌனியாக நின்று ராஜபக்சேக்களை சரித்திர நாயகர்கள் ஆக்குகின்றன. அவை மட்டுமல்ல இந்திய நிர்பந்தங்களுக்கு அடி பணியாமல் நின்றோம், இந்தியாவை இராஜ தந்திர ரீதியில் ஏமாற்றினோம் என்றுகூட ராஜபக்சக்கள் முழங்கினர்.

Wednesday 3 February 2010

பிரபாகரனின் மரணச் சான்றிதழ் வழங்கப் படவில்லை.


பிரபாகரன் கொல்லப் பட்டதாக சென்ற ஆண்டு மே மாதம் 18-ம் திகதி இலங்கை அரசு அறிவித்தது. அதைக் கொண்டாடுவதற்கு இலங்கை சென்ற எம். கே நாராயணனிடம் பிரபாகரன் இறந்ததற்கான ஆக்கபூர்வமானதாகவோ அல்லது அதிகார பூர்வமானதாகவோ எந்த சாட்சியத்தையும் இலங்கை அரசு எம் கே நாராயணனிடம் சமர்ப்பிக்கவில்லை. இது பற்றி எம் கே நாராயணனிடம் வினவியபோது இலங்கை அரசு பிரபாகரன் இறந்துவிட்டதாக பகிரங்கமாக அறிவித்ததே ஒரு சாட்சி என்று சொல்லிச் சமாளித்தார். மேற்கொண்டு எதையும் செய்வதற்கில்லையென்றும் நாராயணன் கூறி பத்திரிகையாளர்களின் மற்றக் கேள்விகளைத் தவிர்த்தார்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் பிரபாகரனும் ஒரு குற்றவாளி. அந்த வழக்கு இந்தியாவில் அப்போது நிலுவையில் இருந்தது. இலங்கையிலும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரனும் பொட்டு அம்மான் என்ற சிவசங்கரும் பிரதான எதிரிகள்.

கொழும்பு உயர்நீதிமன்றத்தில் 2009 செப்டம்பர் 8-ம் திகதி முன்னைநாள் வெளிநாட்டமைச்சர் லக்‌ஷ்மண் கதிர்காமர் வழக்கில் எதிரிகளின் பெயர் பட்டியலினை நீதிமன்றம் மாற்றம் செய்ய அனுமதித்தது. அவர்கள் இருவரும் கொல்லப் பட்டதாக பிரதி சட்டமா அதிபர் நீதிமன்றில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.அதில் முக்கிய எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகவிருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது நெருங்கிய சகாவாகவும் அவ்வியக்கத்தின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராகவும் இருந்த பொட்டு அம்மான் எனப்பட்ட சண்முகநாதன் சிவசங்கர் ஆகியோரின் பெயர்கள் நீக்கப் பட்டன. ஆனால் அவர்கள் இருவரும் இறந்ததற்கான இறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப் படவில்லை. அதன் பின்பும் அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக இந்தியாவிற்கு இலங்கை அறிவிக்கவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு 20வருடங்களாகியும் தொடர்ந்து கொண்டே இருந்தது. நீதிமன்றில் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கையும் அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதும் இருவரும் இறந்ததற்கான சட்டபூர்வமான பதிவுகளாக கருதப்படக்கூடியன.

பின்னர் இலங்கை அரசு இந்தியாவிற்கு பிரபாகரன் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பு எத்தகையது என்று இருதரப்பும் அறிவிக்கவில்லை.

சிதம்பர இரகசியம்.
2010 ஜனவரி 31-ம் திகதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் தமக்குக் கிடைக்கவில்லை என இந்திய மத்திய புலனாய்வுத் துறை அறிவித்தது. அதுவும் சும்மா அறிவிக்கவில்லை தகவலறியும் சட்டத்தின் கீழ் வற்புறுத்திக் கேட்டதன் பேரில் அறிவித்தது. இந்த இரகசியம் வெளிவந்ததால் சிங்கள் அரசிற்கு சங்கடமான நிலை ஏற்படும் என்று கவலைப் பட்ட சிவகங்கைத் தொகுதியில் ஏதோ செய்து வெற்றி பெற்ற சிதம்பரம் அண்ணாச்சி ஒரு அறிக்கை வெளியிட்டார். ராஜபக்சேக்கள் என்னும் எஜமானிகளின்மீதான எஜமான விசுவாசம் அவரை இப்படி ஒருஅறிகை விடத் தூண்டியதா என்ற சந்தேகம் கூட எழலாம். அவர் விட்ட அறிக்கை தொடர்பாக வந்த செய்தி:
  • India’s Union Home Minister P, Chidambaram said that India’s Central Bureau of Investigation (CBI) has received the 'documentation' from Sri Lanka confirming the death of LTTE Chief Vellupillai Prabhakaran.
  • Speaking to reporters today, Chidambaram said, "The CBI has told me that they received documentation from the Government of Sri Lanka confirming the death of Prabhakaran."

பிரபாகரன் இறந்தது தொடர்பான பத்திரங்கள் இந்திய மத்திய புலனாய்வுத் துறைக்குக் கிடைத்ததாக சிதம்பரம் தெரிவித்தார். அது என்ன பத்திரம் என்பது சிதம்பர இரகசியம். சிதம்பரத்தின் கூற்றில் "Death Certificate" என்ற பதம் பாவிக்கப் படவில்லை. சிதம்பரத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இலங்கை ஊடகங்கள் மரணச் சான்றிதழ் கிடைத்ததாக சிதம்பரம் தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டன. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களும் இப்படி அறிவித்தன:
  • இந்தியாவின் மத்திய உளவு நிறுவனமான சிபிஐ (CBI) க்கு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மரணச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tuesday 2 February 2010

சண்டை பார்க்கக் காத்திருக்கும் தமிழர்கள்

தமிழர்கள் மீதான சிங்களக் காடையர்களின் தாக்குதல் 1950களின் பிற்பகுதியில் ஆரம்பித்தது. அப்போது இருந்த காவற்துறையினர் சற்று தொழில் நியாயம் பார்ப்பவர்களாக இருந்தனர். காவல்துறை உயர்பதவிகளில் தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கி இனத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இதனால் பண்டாரநாயக்காவின் தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து இலங்கைப் பாராளமன்றத்தின் முன் காலிமுகத் திடலில் தமிழர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஈடுபட்டபோது அவர்களைத் தாக்குவதற்கு சிறைகளில் இருந்த சிங்களக் காடையர்கள் கொண்டு வந்து இறக்கப் பட்டனர். இ. மு. வி. நாகநாதன் என்னும் பாராளமன்ற உறுப்பினர் கடுமையாகத் தாக்கப் பட்டு வேட்டியும் சட்டையும் கழன்றநிலையில் உள்ளாடையுடன் மட்டும் பாராளமன்றத்துக்குள் புகுந்து உரையாற்றினார். இன்னோரு பாராளமன்ற உறுப்பினர் தலையில் இரத்தம் வடிய வடிய பாராளமன்றத்தில் உரையாற்றினார். பாராளமன்றத்துக்குள் கூட தமிழர்கள் தாக்கப் பட்டனர்.

பின்னர் காவல்துறையில் காடைத்தனம் புகுத்தப் பட்டது. தமிழர்களைத் தேவையான நேரமெல்லாம் அவர்கள் தாக்கத் தொடங்கினர்.

1971இல் ரோஹண விஜயவீராவின் ஜேவிபி இயக்கம் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது சிங்களவர்களும் சிங்களக் காவல்துறையும் கடுமையாக மோதிக்கொண்டன. சிங்களக் காவல்துறையினர் தங்கள் குடும்பங்களை தங்களுக்குத் தெரிந்த தமிழர்களிடம் ஒப்படைத்து பாதுகாத்தனர். ஜேவிபி கிளர்ச்சி அடக்கப் பட்ட நிலையில் பல சிங்களப் பெற்றோர்கள் ஜேவிபி உடன் தொடர்பு வைத்திருந்த தங்கள் பிள்ளைகளை வடக்குக் கிழக்கில் உள்ள தங்கள் தமிழ் நண்பர்களிடம் அனுப்பி வைத்தனர். இந்தக் கிளர்ச்சியில் சிங்களமக்கள் மோதிக் கொண்டதை தமிழரசுக் கட்சியின் அதிகார பூர்வ ஏடான சுதந்திரன் பத்திரிகை தன்வினை தன்னைச் சுடுகிறது என்று ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டது.

இப்போது பாராளமன்றத்துள் தமிழர்களைக் தாக்குவதாயின் காடையர்களை வெளியில் இருந்து கொண்டுவரத் தேவையில்லை. பாராளமன்றத்துக்குள்ளேயே தமிழர்கள் சக பாராளமன்ற உறுப்பினர்களைத் தாக்குவார்கள்.

1956இல் இருந்து சண்டைகளில் அப்பாவிகளாக பார்வையாளர்களாக பங்காளர்களாக தாக்கப் பட்ட தமிழர்கள் இன்று சண்டை பார்க்கக் காத்திருக்கிறார்கள்.

எதிர்க் கட்சிக்கு எதிரான ஆளும் கட்சியின் அடக்கு முறை என்று வன்முறையாக வெடிக்கும் என்று தமிழர்கள் காத்திருக்கின்றனர்.

Monday 1 February 2010

இணைந்து நின்றால் உயிர்த்தெழும் ஞாயிறு


வாக்களித்துத் தீராதது வாக்கெடுப்பில் தீர்ந்திடுமோ?
களத்தில் போராடிக் கிடைக்காதது புலத்தில் கூவிக் கிடைத்திடுமோ?
வட்டுக்கோட்டையில் தொடங்கிடவில்லை
முள்ளிவாய்க்காலில் முடிந்திடவுமில்லை
சர்வதேசச் சமூகம் என்னும் சண்டியர் கூட்டம்
ரவுட்டிகட்டித் தாக்கிய ரவுடிக் கும்பல்
பன்னாட்டுப் பன்னாடைப் பன்றிகள் கொட்டம்
கருத்துக் கணிப்பைக் கண்டு அடங்கிடுமோ
கருத்தைத்தான் மாற்றிடுமோ
துணையாய் வந்தோர் துரோகிகளன்றோ
தீர்க்க வந்தவன் தீர்த்துக் கட்டினானே

எதை மௌனித்ததால் எது சுழியமானது?
மௌனித்தது மீண்டும் பேசும்வரை
சுழியமானதுதான் பலமாகிடுமோ?
நாடிழந்தோர் நாடிநிற்பது
நாடுகடந்தோர் பலமன்றோ
இணைந்து நின்றால்
உயிர்தெழும் ஞாயிறு

Sunday 31 January 2010

அமெரிக்காவின் சாயம் வெளுக்கிறது


சரத் பொன்சேக்கா ஒரு திறமையான இராணுவ அதிகாரியுமல்ல தரமான அரசியல்வாதியுமல்ல. ஆனால் இருதுறையிலும் அவர் பிரபலம் அடைந்துள்ளார். இலங்கைப் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான வேட்பாளராக ஒரு அரசியல்வாதி போட்டியிடுவது ஒரு சாதாரணமானவரால் முடியாது ஆனாலும் சரத் அதைச் சாதித்தார். பாரதப் போரில் அபிமன்யுவை சக்கரவியூகத்திற்குள் வைத்துக் பலர் சூழ்ந்து கொன்றது போல தமிழ்த் தேசிய விடுதலைப் போரை பன்னாட்டுச் சதியாளர்களுடன் கூடி மழுங்கடித்ததால் சிறந்த படைத்துறை அதிகாரி என்று பெயர் எடுத்தவர் சரத் பொன்சேக்கா.

சரத் பொன்சேக்கா நாட்டை விட்டுச் செல்லாத படி சகல ஏற்பாடுகளும் இரகசியமாக செய்யப் பட்டுள்ளது. அவர் எப்போதும் கைது செய்யப் படலாம். இபோது அவருக்கு ஆதரவானவர்கள் "வடிகட்டப்" படுகிறார்கள்.

இப்போது சரத் பொன்சேக்கா தன்னிடம் பல இரகசியங்கள் இருப்பதாக கூறி மிரட்டுகிறார். அவரைப் பொறுத்தவரை அவை இரகசியங்கள் தமிழர்களைப் பொறுத்தவரை அவர் சொல்லவிருப்பது பகிரங்க உண்மைகள். யாழ் நூலகத்தை எரித்தவர்கள் யார் என்பது சிங்களத்தைப் பொறுத்தவரை இரகசியம். தமிழர்களைப் பொறுத்தவரை அது பகிரங்க உண்மை.

அமெரிக்கா இப்போது சொல்கிறது:
  • ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாது காப்பு தொடர்பில் உன்னிப்பாக கண் காணிக்கப்படும.
  • சரத் பொன்சேகாவுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்.
  • அவரது எதிர் காலம் தொடர்பில் கவனம் செலுத்தப் படும்.
  • தேவை ஏற்படின் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேக்காவில் அமெரிக்கா இப்படி அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் என்ன?
அவர் அப்படி உலக சமூகத்திற்கு என்ன செய்துவிட்டார்.
இலங்கையில் போர் குற்றம் இழைக்கப் பட்டது என்று அமெரிக்காவே கூறியது. அப்போர்குற்றத்தில் சரத் பொன்சேக்காவிற்கும் பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இருந்தும் ஏன் அமெரிக்காவிற்கு ஏன் இந்த அக்கறை?

சரத் பொன்சேக்கா ஒரு அமெரிக்க கைப்பொம்மை என்பதால் அவரை சிங்கள மக்கள் நிராகரித்தனர். அமெரிக்காவின் சதி இப்போது வெளிவந்துவிட்டது.

தொடர்ந்தும் சரத் பொன்சேக்காவை தனது பிராந்திய நலன்களுக்காக பயன்படுத்தப் போகிறது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...