Saturday, 27 October 2012

இணைவோம் எழுவோம் வெல்வோம்


ஓயாத அலைகளாய் சாயாத மலைகளாய்
தாழாத நிலைகளாய் சோராத தோள்களாய்
அணையாத தீயென நில்லாத காற்றென
இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்

கீர்த்தியில்லாச் சில்லறைகள் உற்சவ மூர்த்திகள் நாமெனச்
உருத்திரம் கொண்டாலும் பிரிந்து நின்றாலும்
பிளவு பட்டாலும் நிலையது குலையோம் நிமிர்ந்து நிற்போம்
 

இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்

எத்தனை பகை வரினும் எத்தனை இடர் வரினும்
எழ எழ வீழ்த்துவோம் என இந்தியா நின்றாலும்
விழ விழ வீறு கொண்டெழுவோம் வேங்கைகள் நாமாவோம்
 

இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்

பெருமரமாகும் சிறு வித்துக்களாய் நாம் வருவோம்
ஆழ்கடல் சென்றெடுத்த நன் முத்துக்களாய்
களங்கமடையோம் பெருமைகள் சேர்ப்போம்
 

இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்

தாயகத்துக் கனவுடன் மாவீரர்களாய் மரித்து
வானகத்துறையும் கானகத்து வேங்கைகளின்
கனவினை நனவாக்கிட துணிவோம் துணிவோம்

இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்

Friday, 26 October 2012

சீனப் பிரதம மந்திரியின் பெரும் செல்வம் அம்பலம்.

சீனக் காசைக் கரியாக்கியவரும் இந்தியக் கரியை காசாக்கியவரும்
அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ் சீனப் பிரதம மந்திரி வென் ஜியாபோவும் அவரது குடும்பத்தினரும் அவரது பதவிக்காலத்தில் சேர்த்த பெரும் செல்வத்தைப் பற்றி அம்பலப் படுத்தியுள்ளது. ஒரு பன்றி மேய்க்கும் தகப்பனுக்கும் ஆசிரியையான தாய்க்கும் பிறந்த வென் ஜியாபோ எப்படிப் பெரும் செல்வம் சேர்த்தார்?

இந்த ஆண்டுடன் பதவி விலகும் 90 வயதான வென் ஜியாபோ 1998இல் உதவிப் பிரதம மந்திரியாக்கப்பட்டுப் பின்னர் 2003இல் பிரதம மந்திரியாக பதவி உயர்த்தப்பட்டவர். அவரதும் அவரது குடும்பத்தினரதும் செல்வம் 2.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ். பிரதம மந்திரியின் விதவைத் தாய் யாங்கின் சொத்து 2007-ம் ஆண்டு 120மில்லியன் டாலர்கள்.முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சொத்து 120 மில்லியன் டாலர்கள்.

சீனப் பிரதம மந்திரியின் தம்பி, மகள், மகன், மைத்துனர் போன்றோரும் பெரும் அவரது பதவிக்காலத்தில் செல்வந்தர்களாகியுள்ளனர்.  வென்னின் உறவினர்கள் வங்கிகள், நகைக்கடைகள், உல்லாச விடுதிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள் போன்ற பல கம்பனிகளில் பங்குதாரர்களாக உள்ளனர். சீன அரசு குடும்பங்கள் ஆரம்பிக்கு வியாபார முயற்ச்சிகளுக்கு உதவும் கொள்கை கொண்டது. சீனாவில் 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளிற்கான அரங்கங்களைக் கட்டுவதில் வென் ஜியாபோவின் குடும்பந்தினர் சம்பந்தப்பட்டு பெரும் செல்வம் ஈட்டினராம்.

2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காப்புறுதி நிறுவனத்தில் மட்டும் வென் ஜியாபோவின் குடும்பத்தினர் 1.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்தனர் என்கிறது அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ்.

சீனக் கம்யூனிசக் கட்சியின் விதிகளின் படி கட்சியின் உயர் பதவியில் உள்ளவர்கள் தமது சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும். ஆனால் அதி உயர் பதவியில் இருப்பவர்களின் உறவினரகள் தங்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுவதில்லை. இந்த ஓட்டையைப் பாவித்து பலர் சொத்து சேர்த்துள்ளனர். சீனாவின் அடுத்த அதிபராக வரவிருக்கும் ஸி யின்பிங்கின் சொத்துக்களைப்பற்றி புளூம்பேர்க் பகிரங்கப்படுத்தியதைத் தொடர்ந்து அது சீனாவில் தடை செய்யப்பட்டது.சீனாவில் அதி உயர்பதவியில் இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு பல சலுகைகள் உண்டு. அவர்கள் இளவரசர் இளவரசிகள் போல் நடாத்தப்படுவர். பங்குச் சந்தையில் கூட அவர்கள் கழிவு விலைக்கு பங்குளை வாங்க முடியும். வென் ஜிபாவேயின் மகனும் மருமகளும் பல நிறுவனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். மகனின் நண்பன் ஒருவரும் பெரும் செல்வந்தர் ஆகியுள்ளார் என்கிறது நியூயோர்க் ரைம்ஸ். சீனப் பிரதம மந்திரியின் மகன் சீனாவில் பட்டமும் கனடாவில் உயர்படிப்பும் சிக்காக்கோவில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

அமெரிக்கப்பத்திரிகை 2007இல் வென் ஜியாபோ சொன்னதை நினைவு படுத்துகிறது.
“Leaders at all levels of government should take the lead in the antigraft drive. They should strictly ensure that their family members, friends and close subordinates do not abuse government influence.”  

நியூயோர்க் ரைம்ஸின் நீளமான கட்டுரையை சீனாவின் டுவிட்டரான வெய்போவில் பகிர சிலர் முயன்றபோது  "Your post cannot be published due to violation of law". என்ற பதில் வந்ததாம்.  ஒரு கோடி மக்களுக்கு மேல் பலி கொண்ட சீனப் புரட்சி கடைசியில் கண்டது இதுதானா?

கேம்பிரிட்ஜ் நகரில் எச்சில் உணவுத் தட்டுக் கழுவியவள் இந்தியா வந்து பெரும் பணக்காரி ஆனாள். 5 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிஸ் வங்கியில் 2பில்லியன் டாலர்களாம். இப்போது பல மடங்காக இருக்கலாம்.  நாதியற்ற தெலுங்கர்கள் ஆடிப் பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்து பெரும் செல்வந்தர் ஆனார்கள். கன்னடத்தில் திவாலான குடும்பம் தமிழ்நாட்டுக்கு வந்து பெரும் பணம் சேர்த்து தமிழர்களைத் தன் காலில் விழ வைக்கிறது. அரசியலில் இதெல்லாம சகஜம் என்று இருக்கக் கூடாது மக்கள் தட்டிக் கேட்க வேண்டும்.

பிந்திக் கிடைத்த செய்திகளின் படி சீனாவில் நியூயோர்க் ரைம்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது. சீனப் பிரதமரின் செல்வம் தொடர்ப்பான செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இது தொடர்பாக பிரசுரிக்கும் இணையத் தளங்கள் தடை செய்யப்படுகின்றன.

Wednesday, 24 October 2012

பொருளாதாரத் தடையால் ஈரான் பணிகிறதா?

ஈரான் மீது ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கொண்டு வந்த பொருளாதரத் தடை தம்மை ஒன்றும் செய்யாது என அதன் அதிபர் முகமது அகமதினிஜாத் சூளுரைத்திருந்தார். 2012 செப்டம்பரில் டெஹ்ரானில் நடந்த ராக் போர் நினைவு நாளில் உரையாற்றிமுது அதினிஜாத் து நாட்டின் மீது இஸ்ரோலோ அல்து கிய அமெரிக்காவோ அத்துமீறி ந்தால் த்திடி கொடுக்கப்டும் என்றும் எச்ரித்திருந்தார்.

கப் பொருளாதாநிபுணர்ளின் ருத்து முகமது அகமதினிஜாதுடன் உடன்வில்லை. 2013இன் முற்குதியில் ரானியப் பொருளாதாரம் சிறும் த்து உள்து என்று வர்கள் எச்ரிக்கிறார்கள். பொருளாத் டைக்கு முன்ரே ரானியப் பொருளாதாரம் 2007இல் இருந்து கெங்கும் ஏற்பட்பொருளாதாரப் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்டு ஒரு வீமாநிலையிலேயே இருந்தது.

ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலை தொடர்ந்து மேற்கொள்வேன் என அடம்பிடித்தது. ஈரான் அணு குண்டு தாயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் உறுதியாக அறிவித்தன. ஈரான் அசையவில்லை. தனது யூரேனியம்  பதப்படுத்தல் சமாதானத்திற்காகவே. அணுக் குண்டு உற்பத்திக்கு அல்ல என்றது. ஈரான் மீது பல இணைய வெளித் தாக்குதல்களை இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து தனித்தனியாகவும் நடாத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஈரானின் அணு விஞ்ஞானிகள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலைக் கைவிடவில்லை. ஈரானின் யூரேனியம் பதனிடும் நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்த வேண்டும் என இஸ்ரேல் அமெரிக்காவை வலியுறுத்தியது. பராக் ஒபாமா நிர்வாகம் பொறுமையக் கடைப்பிடித்து தந்திரமாகக் காய்களை நகர்த்தி ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் அமூல் படுத்தியது. பன்னாட்டு வங்கி கொடுப்பனவு முறைமையான SWIFT இல் இருந்து தந்திரமாக ஈரானை வெளியேற்றியது. இந்தியா சீனா போன்ற நாடுகளை ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய வேண்டாம் என வலியுறுத்தியது. சீனாவும் இந்தியாவும் மறுத்தன. இறுதியில் இந்தியா தான் ஏற்கனவே இறக்குமதி செய்யும் எரிபொருளை மட்டும் தொடர்ந்து இறக்குமதி செய்வதாக ஒத்துக் கொண்டது. 
பொருளாதாரத் தடையின் பின்னர் ஈரானியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது என்பதை அதன் நாணயமான ரியால் 80% பெறுமதி வீழ்ச்சியைக் கண்டது. ஈரானின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு (foreign exchange reserves) இன்னும் ஆறு அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும் என்றும் கருதப்படுகிறது. ஈரானியப் பொருளாதரப் பிரச்சனைகளுக்கு வெளியில் இருந்து வந்த பொருளாதாரத் தடை மட்டுமல்ல காரணம். அதன் ஆட்சியாளர்களின் மோசமான பொருளாதார நிர்வாகமும் ஒரு முக்கிய காரணம். 

பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் பல வீராப்புகளை ஈரான் கொட்டியது. ஹோமஸ் நீர்ணையை மூடி உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் பகுதியை தடை செய்வேன் என்றது. பல ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்து காட்டியது. இஸ்ரேல் மீது தனது ஆளில்லா விமானத்தைப் பறக்க விட்டது. ஈரானிய ஆதரவு விடுதலை இயக்கமான ஹிஸ்புல்லா ஈரான் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது தாம் தீவிரவாதத் தாக்குதலை மேற்கொள்வோம் என்றது. கடைசி நகர்வாக ஹோமஸ் நீரிணையில் எரிபொருள்களை பெருமளவில் கசிய விட்டு அதை கப்பல் போக்கு வரத்திற்கு ஆபத்தான ஒரு இடமாக மாற்றி அதன் மூலம் உலக எரிபொருள் விநியோகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் தனது திட்டத்தையும் கசிய விட்டது. ஆனால் இது ஈரானியப் பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி ஒன்றை ஈரானின் நேச நாடுகளும் விரும்ப மாட்டா. 


தனது மொத்த எரிபொருள்   ஏற்றுமதியையும் நிறுத்தப் போவதாக ஈரான் எச்சரித்தது. ஈரானிடமிருந்து துருக்கி, இந்தியா, தென் கொரியா சீனா ஆகிய நாடுகள் இப்போது எரிபொருள் இறக்குமதி செய்கின்றன. ஏற்றுமதியை நிறுத்தினால் உலக எரிபொருள் விலையில் பெரும் அதிகரிப்பு ஏற்படும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது. ஈரானிய மக்கள் பொருளதாரத் தடைகளின் சுமையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். மக்கள் கிளர்ந்து எழ முன்னர் ஈரானால் செய்யக் கூடிய அதன் தெரிவுகள் மிகச் சிலவே:
1. ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்துதல். பொருளாதாரம் முறிவடைந்த பின்னர் இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடாத்துவதிலும் பார்க்க முறிவடையமுன்னர் போரை ஈரான் ஆரம்பித்தால் சிறிது பலமான நிலையில் போர் புரிய முடியும். ஆனால் முதலில் போர் தொடங்கிய ஈரானை இரசியாவும் சீனாவும் ஆதரிக்குமா என்பது சந்தேகம்.2. யூரேனியம் பதனிடுவதை நிறுத்துதல். இப்படி நிறுத்தினால் உள் நாட்டில் ஆட்சியாளர்கள் தமது செல்வாக்கை பெரிதும் இழக்கலாம்.3. பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைத்தல்.

அந்தரங்கத்தில் பணிவு! பகிரங்கத்தில் வீராப்பு
அறையில் சரண். அம்பலத்தில் வீரம்பகிரங்கமாக வீராப்புப் பேசும் ஈரானிய ஆட்சியாளர்கள் திரைமறைவில் ஐக்கிய அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடச் சம்மத்தித்துள்ளார்கள். ஆனால் ஈரான் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை. அமெரிக்காவைச் சாத்தான் என விமர்சித்த ஈரானிய மதத் தலைவர்கள் முகத்தில் இது கரி பூசியதாக அமையும்.

 பேச்சு வார்த்தைகளில் இழுபறி
நவம்பர் - 6ம் திகதி நடக்க விருக்கும் தேர்தலில் பராக் ஒபமா தோல்வியடைந்தால் நிலைமை ஈரானுக்கு இன்னும் மோசமாகலாம். இதனால் ஈரான் திரைமறைவில் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்குத் தயாரானது. ஈரான் ஐக்கிய அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை ஒரு பன்முகப்பட்டதாக அமைய விரும்பியது. லிபியா சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமை பாலஸ்த்தீனப் பிரச்சனை போன்றவற்றை பேச்சு வார்த்தையில் உட்படுத்த ஈரான் விரும்பியது. ஆனால் அமெரிக்கா இது காலத்தை இழுத்தடிக்கும். பேச்சு வார்த்தை இழுபட ஈரான் தனது நிலத்தின் கீழ் 30 அடியில் உள்ள தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களில் தேவையான அளவு யூரேனியத்தைப் பதப்படுதி விடும் என்று சந்தேகித்தி பேச்சு வார்த்தை யூரேனியப் பதப்படுத்தலும் பொருளாதாரத் தடையையும் பற்றி மட்டுமே பேச்சு வார்த்தை செய்வதாக தெரிவித்தது.

உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி
ஈரான் சமாதான நோக்கத்திற்குத் தேவையான யூரேனியத்தை தயாரிக்க அமெரிக்கா அனுமதிக்கும். அதற்கான கடும் பன்னாட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இதனால் ஒரு உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி (win-win) நிலைமையை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கிறது. ஈரான பகிரங்கமாக தான் சமாதானத்திற்குத்தான் யூரேனியம் பதப்படுத்துகிறேன் என்று இதுவரை சொல்லி வந்தது. அணுக் குண்டு செய்யப்போகிறேன் என்று சொல்லவில்லை. ஈரான் சில அணு மின் நிலைகளை உருவாக்கலாம். பொருளாதரத் தடை நீக்கப்படலாம். ஆனால் அமெரிக்காவின் சதி வேறு விதமாக இருக்கலாம். அமெரிக்காவே தனது கையாட்கள் மூலம் அணு குண்டு எங்கே எனக் கேட்டு கிளர்ந்து எழும் சில தீவிரவாதிகளை ஈரானில் உருவாக்கலாம். மோசமடைந்த பொருளாதாரத்தால் கொதிப்படைந்த ஈரானிய மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.

Excellent SMS

There may be more than 8.5 billion people in this world
BUT
Sometimes we really need JUST ONE..!!

"Tears of EYES are Valuable"
"Speech of LIPS are Powerful"
"Heart With LOVE is Beautiful"
"Life with FRIENDS is Most Wonderful".. !!

When a Girl Accepts Your Friend Request
it means she accepted Your "Friendship" Not Your "Proposal"..
When a Girl sends you a Friend Request
it means She wants to be your Friend not Your Girlfriend.
When She Tag you
it means she wants to share her Thoughts with You
'n not that She's Lost in Your Thoughts..
When she comments on Your status
it means She's just being Social 'n not Flirting..
When She Like Your comment
it means She like Your Comment not You. !
     - by  Dushyant Vaghela

ABBREVIATIONS Which Are Not Known To Many Of Us:
CHESS : Chariot, Horse, Elephant, Soldiers.
COLD : Chronic Obstructive Lung Disease.
JOKE : Joy Of Kids Entertainment.
AIM : Ambition In Mind.
DATE : Day And Time Evolution.
EAT : Energy And Taste.
TEA : Taste And Energy Admitted.
PEN : Power Enriched In Nib.).
SMILE : Sweet Memories In Lip Expression.
BYE : Beside You Every-time.

Superb Definitions...!
School- A Place Where Papa Pays 'n Son plays.
Life Insurance- A Contract That Keeps You Poor All Your Life So That You Can Die Rich.
Nurse- A Person Who Wakes You Up To Give You Sleeping Pills.
Father- A Banker Provided By Nature.
Experience- The Name Men Give To Their Mistakes.
Atom Bomb- An Invention To End All Inventions.
Smile- A Curve That Can Set A Lot Of Things Straight.

Compromise- The Art Of Dividing A Cake In Such A Way That Everybody Believes He Got The Biggest Piece.

Tears- The Hydraulic Force By Which Masculine Willpower Is Defeated By Feminine Water Power..!!
   -by  Yashesh Parmar

Storming msg:
When You lift the phone You say HELLO..
Do u know what is the Real meaning of HELLO?
It is the name of a girl..!
Yes!!
And Do u knw who is dat girl?
Margaret hello..
She is girlfriend of Grahmbell who invented telephone.
One can forget the name of Grahmbell but not his girlfriend!
Thats LOVE.
       by  Purvi Mehta


Father Means
F= Forever With His Family
A= Always There For You No Matter What
T= The Only One Who?S There
H= He?S My Hero Till The End
E= Encouraging In Everything I Do
R= Really The Only One?
No One Can Beat Him He ISThe Best!!!
    -by  Sakshi Raut

What Is Da True Meaning Of 'Study' ???
S. Sleeping
T. Talking
U. Unlimited Tafreh
D. Dreaming
Y. Yawning
    -by  Suryanshu Thakur

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...