Monday, 7 November 2011

அடுத்த ஆண்டு புதிய ஐ-போன், ஐ-பாட் , ஐமக்- ஆப்பிளின் புனரமைப்பு நடவடிக்கை.

ஆப்பிளுக்கு சவாலாகும் சம்சங் கலக்சி S II

Stuff Magazineஇன் சிறந்த கைப்பேசிக்கான விருதை சம்சங்கின் Galaxy S II வென்றது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்த விருதை ஆப்பிளின் ஐ-போன்களே வென்று வந்தன. 2011இன் மூன்றாம் காலண்டில் சம்சங்கின் Galaxy S II கைப்பேசிகளின் விற்பனை 278இலட்சத்திற்கு அதிகரித்தது. ஆப்பிளின் கைப்பேசியான ஐ-போனின் விற்பனை 171 மில்லியன்களாகக் குறைந்தன. ஆப்பிளின் ஐ-பாட் இந்த ஆண்டின் சிறந்த tablet கணனிக்கான விருதைப் பெற்ற போதும் குறைந்த விலையில் வெளிவந்த Amazon இன்Kindle ஐ-பாட்டிற்கு சவாலாக வந்துள்ளது. ஐ-போன் 4S இல் சில குறைபாடுகள் இருப்பதை ஆப்பிளே ஒத்துக் கொண்டது. ஆண்டோயிட் மென் பொருளும் ஆப்பிளிற்கு பெரும் சவாலாக அமைகிறது.

இந்தப் பின்னணியில் ஆப்பிள் தனது சகல உற்பத்திப் பொருட்களையும் மீளாய்வு செய்து வருகிறது. கைப்பேசிகள் கணனிகள் யாவற்றிலும் புதிய மாடல்களை அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கிறது.  ஆப்பிள் நிறுவனத்தின் பணக் கையிருப்பு அமெரிக்க அரசின் கையிருப்பிலும் அதிகம். ஆப்பிளிடம் 75.87பில்லியன் டாலர்கள் நிதி இருக்கிறது அதேவேளை அமெரிக்க அரசின் கையிருப்பு நிதி 73.76டாலர்கள் மட்டுமே.  இப் பெரும் நிதிக் கையிருப்புடன் ஆப்பிளால் தனது முதற்தர நிலையை மேம்படுத்த முடியும் எனப் பலரும் நம்புகின்றனர்.

 

Apple store at Newyork

 கணனிகள்                                                                                                                            ஆப்பிளின் ஐமக் கணனிகள் 2009இற்குப் பின்னர் மிளாய்வோ மீள்வடிவமைப்போ செய்ய முடியவில்லை. அடுத்த ஆண்டு ஆப்பிள் தனது ஐமக் கணனிகளை புதிதாக வடிவமைத்து சந்தைப்படுத்தவிருக்கிறது.

ஐ-பாட்                                                                                                                                     ஆப்பிளின் ஐ-பாட்கள் இப்போது உள்ளவற்றிலிருந்து பல அபிவிருத்திகள் செய்யப்படவிருகின்றன. ஐ-பாட்-3 அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப் படவிருக்கின்றது.   உடன் வெளிச்சத்துடன் (flash light) கூடிய   சிறந்த ஒளிப்பதிவுக்கருவி, நீடித்த பட்டரி நேரம், மேம்படுத்தப்பட்ட தொடுதிரை, 4G, SD card slot  போன்ற பல அம்சங்களுடன் ஐ-பாட்-3 வரவிருக்கிறது.

ஐ-போன்கள்                                                                                                                            ஆப்பிளின் அடுத்த ஐ-போன்களைப் பற்றிப் பல ஊகங்கள் நடமாட்டத்தில் உண்டு. லேசர் கீபோர்ட் என்னும் புரட்சிபற்றிய ஊகங்களும் நிலவுகிறது. அத்துடன் ஹொலோக்கிராஃபி முறையில் பெரிய திரையில் காணொளிகளைக் காணும் வசதிகளும் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இவ் எதிர்பார்ப்புக்களின் காணொளியைக் கீழே காணலாம்:

                                                                                                                                                             


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...