திருவாளர் நம்பிக்கைக்குரியவர்
தனியாகக் கட்சி ஆரம்பித்த பிரணாப் முஹர்ஜியை ராஜிவ் கொல்லப்பட்ட பின்னர் பிரதமரான பி வீ நரசிம்ம ராவ் மீண்டுக் காங்கிரசுக் கட்சிக்குக் கொண்டு வந்து அவரை திட்ட ஆணைக் குழுவின் பிரதித் தலைவராக்கினார். நீண்ட அரசியல் ஈடுபாடும் ஆழ்ந்த அரசியல் அறிவும் கொண்ட பிரணாப் முஹர்ஜி அரசறிவியலில் முதுமானிப் பட்டம் பெற்றவர். நிதி, வெளியுறவுத் துறை, வர்த்தகம், பாதுகாப்பு போன்ற முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்தவர் பிரணாப் முஹர்ஜி. இரவு பகல் பாராத கடின உழைப்பு புத்திக் கூர்மை கட்சிக்கு விசுவாசம் போன்றவற்றால் இவர் திருவாளர் நம்பிக்கைக்குரியவர் (Mr Dependable) என்று அழைக்கப்படுபவர். தற்போது நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முஹர்ஜி முன்னர் நிதியமைச்சராக இருந்த போது அவரின் கீழ் பணி புரிந்தவர் தற்போதைய பிரதம மந்திரி மன்மோகன் சிங்.
மொக்கை காந்திக்கு வழிவிட வேண்டும்
மொக்கை காந்தி என அழைக்கப் படும் ராகுல் காந்தி அடுத்த பிரதம மந்திரியாவதற்கு தடையாக இருப்பவர் பிரணாப் முஹர்ஜி. ஒரு பத்திரிகைப் பேட்டி கூட ஒழுங்காகக் கொடுக்கத் தெரியாமல் தடுமாறும் ராகுல் காந்தியின் திறமையின்மையும் அனுபவமின்மையும் அவரைப் பிரதம மந்திரியாக்குவதற்கு பலரிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபவமும் திறமையுமுள்ள பிரணாப்பை குடியரசுத் தலைவராக்கிவிட்டால் ராகுல் மொக்கை காந்தியை பிரதமராக்குவது இலகு என்று சோனியா காந்தி நினைக்கிறார்.
தமிழின விரோதப் பார்ப்பனர் பிரணாப் முஹர்ஜி
ஐந்தடி ஒரு அங்குல உயரமான பிரணாப் முஹர்ஜி மீன் கறியில் பிரியமுள்ள பார்ப்பனன். இசையிலும் வீட்டுத் தோட்டத்திலும் ஆர்வமுள்ள பிரணாப் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது இலங்கையின் இன அழிப்புப் போருக்கு பெரும் உதவி புரிந்தவர். இந்தியா இலங்கைக்கு படைக் கலன்கள் கொடுத்து உதவுவதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டவர். இறுதிப் போரின் போது போர் முனையில் நான்கு இலட்சம் மக்கள் சிக்கித் தவிக்கையில் அங்கு எழுபதினாயிரம் மக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று இலங்கை அரசு பொய் கூறியது. போர் முனையில் நான்கு இலட்சம் மக்கள் சிக்கித் தவிக்கும் மக்களிற்கு உணவு, நீர், மருந்து அனுப்பாமல் தடுத்து அவர்களைப் பட்டினியால் கொல்வதற்காகவே இலங்கை அரசு பொய் கூறியது. எழுபதினாயிரம் மக்கள் மட்டுமே உள்ளனர் என்ற அதே பொய்யை வலியுறுத்திக் கூறியவர் இந்தப் பிரணாப் முஹர்ஜி. போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டதாக கூறிக் கொண்டு அங்கு சென்று இலங்கைக்கு போரை விரந்து முடிப்பதற்குத் தேவையான உதவிகளை செய்தவர் பிரணாம் என்ற குற்றச் சாட்டும் உண்டு.
டெசோ கருணாநிதி
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தனது அரசியல் வறுமையில் இருந்து விடுபட எடுத்த ஒரு கத்தி டெசொ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு. 1985இல் உருவாக்கப்பட்ட டெசோ செய்த சாதனைகள் அண்டன் பாலசிங்கமும் செல்வநாயகம் சந்திரகாசனும் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டமையை நிறுத்தியதும் 1985இல் அன்றைய ஆந்திர முதல்வர் என் டி ராமாராவ், வாஜ்பாய் (பாஜக), என்.டி. ராமராவ், பி.உபேந்திரா (தெலுங்கு தேசம்), எச்.என்.பகுகுணா (லோக்தள்) பல்வந்த் சிங் ராமுவாலியா எம்.பி.(அகாலிதளம்), பி.உன்னிகிருஷ்ணன் எம்.பி. (காங்கிரஸ்-எஸ்), ராச்சையா (ஜனதாக்கட்சி), அப்துல் ரஷீத் எம்.பி.(காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி), ஜஸ்வந்த் சிங் எம்.பி, இந்துஸ்தான் முன்னணி சார்பாக சுப்பிரமணிய சாமி எம்.பி., அஸ்ஸாம் கணபரிஷத்தைச் சேர்ந்த தினேஷ்கோஸ்வாமி எம்.பி, க.அன்பழகன், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம், தேவசகாயம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலைவர்கள் கலந்துகொண்டனர். என்டிஆர், வாஜ்பாஸ் ஆகிய பிரபலமானவர்கள் உட்படப் பலரை கொண்ட ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்தமை மட்டுமே. இவற்றைத் தவிர வேறு எதையும் டெசோவால் சாதிக்க முடியவில்லை. ராஜிவ் காந்தி இறந்த பின்னர் இயங்காமல் போன டெசோவிற்கு இப்போது புத்துயிர் கொடுக்க கருணாநிதி முயல்கிறார். இனிவரும் தேர்தல்களின் சீமானின் சூறாவளிப் பிரசாரம் தனது கட்சியைத் தோல்வியடையாமல் செய்ய தான் ஒரு தீவிர ஈழ விடுதலை ஆதரவாளர் எனக் காட்டிக் கொள்ள கருணாநிதி முயல்கிறார்.
ஈழமும் காங்கிரசும்
ஈழவிடுதலைக்கு கருணாநிதி இருதய சுத்தியுடன் ஆதரவு தெரிவிப்பவராக இருந்தால் ஈழவிடுதலைக்குச் சார்பாக காங்கிரசு தன் கொள்கையை மாற்றிக் கொண்டால் மட்டுமே தன்னால் சோனியவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க முடியும் என்று சொல்லியிருக்க வேண்டும். அல்லது இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வை விரைவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையாவது முன்வைத்திருக்க வேண்டும். மம்தா பனர்ஜி போல் சோனியா முன்னர் நிமிர்ந்து நிற்காமல் தனது குடும்ப நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு கருணாநிதி நிபந்தனை எதுவுமில்லாமல் ஒரு தமிழின விரோதிக்கு ஆதரவு வழங்கியுள்ளார். பிரணப்பை தனது நண்பன் என்று அடிக்கடி சொல்லும் கருணாநிதி தனது செம்மொழி மாநாட்டை ஆரம்பித்து வைக்க அவரையே அழைத்தார். பிரணாப்பிற்கு ஆதரவு வழங்குபரகளில் முக்கியமானவர்கள் திமுகவினரே. பார்ப்பன விரோதப் பரப்புரை மூலம் அரசியலுக்கு வந்த கருணாநிதி ஒரு பார்ப்பனனை இந்தியக் குடியரசுத் தலைவராக்குவதில் முன்னிற்கிறார்.
மலேசியாவில் ஒரு மானத் தமிழன்
மலேசியாவில் ஒரு மானத் தமிழன்மாண்பு மிகு துணை முதல்வன்
பீனாங்கு மாநிலப் புதல்வன்
கற்றுயர்ந்த கண்ணியவான்
பேராசான் இராமசாமி
உலகத் தமிழர் தலைவன்
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்
கோடானு கோடியாகச்
சொத்துச் சேர்க்கவில்லை
ஈழத்தவரை வைத்து
அரசியல் செய்யவில்லை
புதல்வர்க்கு பதவி கேட்டுக்
காவடியெடுக்கவில்லை
ஈழத் தமிழர் துயர்கண்டு
கொதித்தெழுகின்றான்
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்
போர்குற்றம் கண்டு
பொங்கி எழுகின்றான்
உலக மனச்சாட்சியைத்
தட்டிக் கேட்கின்றான்
தேர்தல் கூச்சலல்ல
வாக்கு வேட்டைக்கல்ல
வாய்ச்சவாடல் செய்யவில்லை
உண்ணா விரத நாடகமாடவில்லை
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்
மொழி பேசுவோரை
அழிந்தொழிய விட்டு
மொழிக்கு மாநாடு கூட்டி
உமிழ் நீரும் தமிழ் நீரென
தம்பட்டம் அடிப்போரே
மலேசிய மானத் தமிழனின்
கழி நீருக்குத்தன்னும்
நீர் இணையாவீரோ