மேற்குலக நாடுகள், முக்கியமாக அமெரிக்கா, பதவியில் இருந்து விலக்க நினைக்கும் அரசத்தலைவர்களில் வட கொரியாவின் கிம் ஜொங், ஜிம்பாவேயின்ரொபேர்ட் முஹாபே, லிபியாவின் மும்மர் கடாஃபி ஆகியோர் முக்கியமானவர்கள்.
இப்போது உள்ள அரச தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்தவர் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபி. மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்களுக்கு உதவுபவர் என்று பல மூன்றாம் உலகநாடுகளின் மக்களால் போற்றப் படுபவர் மும்மர் கடாஃபி. 1969-ம் ஆண்டு ஒர் ஆயுதப் புரட்சி மூலம் அப்போது அரசாராக இருந்த இட்றிஸை பதவியில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியவர் மும்மர் கடாஃபி. அப்போது அவருக்கு வயது 27. அப்போது அவர் சிறந்த புரட்சியாள்ராகவும், புதிய சேகுவேராவாகவும் மதிக்கப்பட்டார். கடாபி இஸ்லாமையும் சோசலிசத்தையும் கலந்து பசுமைப் புரட்சி என்ற நூல் எழுதினார்.
விடுதலை இயக்கங்களுக்கு உதவிய கடாஃபி
காடாஃபி பலஸ்த்தீன கறுப்பு செப்டம்பர் இயக்கத்திற்கு நிதி உதவுவதாக கூறப்பட்டது. 1972இல் ஜேன்மன் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்றது கறுப்பு செப்டம்பர் இயக்கம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. கடாஃபி பல்வேறு விடுதலை இயக்கங்களுக்கு செய்த உதவியால் அவரை ஒரு பயங்கரவாதிகளிக்கு நிதி வழங்குபவராக அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் கடாபியை மத்திய கிழக்கின் விசர் நாய் என்றும் அவரது லிபியா ஒரு பறையர் நாடு என்றும் விமர்சித்தார்.( தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு போன வார்த்தைகளுக்குள் பறையர் என்ற சொல்லும் ஒன்று). 1986இல் அமெரிக்க விமானங்கள் லிபியாவின் கடாஃபியின் இருப்பிடங்களில் குண்டுகளை வீசி அவரைக் கொல்ல முயன்றன. நிலக்கீழ் அறையில் இருந்ததால் கடாஃபி உயிர் தப்பினார். கடாஃபியின் வளர்ப்பு மகன் அதில் கொல்லப்பட்டார்.
மும்மர் கடாபியின் மீது இப்போது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்:
- அவரது ஆட்சி உலகிலேயே மோசமான அடக்கு முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஆட்சி
- மும்மர் கடாபியின் லிபிய நாட்டில் எந்த பத்திரிகைச் சுதந்திரமும் இல்லை.
- முறை கேடான ஆட்சி
- பெண்பித்தர்.
மும்மர் கடாபி ஒர் உக்ரேய்ன் நாட்டு கவர்ச்சிகரமான மருத்துவத் தாதியுடன் காதல் வசப்பட்டதாக விக்கிலீக் தகவல்கள் கசியவிட்டது.
பெப்ரவரி
14-ம் திகதி அதாவது எகிப்தின் ஹஸ்னி முபாரக் பதிவி விலகிய மூன்றாம் நாள் ஃபேஸ்புக்கின் மூலம் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
20-ம்திகதி பென்காஜி நகர் கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
21-ம்திகதி கடாஃபியின் நீதியமைச்சர்
முஸ்தபா அப்துல் ஜலீல் பதவி விலகினார்.
25-திகதி லிபியச் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியது.
26-ம்திகதி கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் கடாஃபியின் நீதியமைச்சர்
முஸ்தபா அப்துல் ஜலீல் அவர்களை தமது தலைவராக்கினர். அதே தினம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கடாஃபிக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி கடாஃபியினதும் அவரது சகாக்களினதும் சொத்துக்களை முடக்க வேண்டும், லிபியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை ஆயுத விற்பனைத் தடை, மும்மர் காடாஃபியை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து வேண்டும்.
மார்ச்
1-ம்திகதி லிபியா ஐநா மனித உரிமைக்கழகத்தில் இருந்து விலக்கப்பட்டது.
7-ம் திகதி நேட்டோ விமானங்கள் கடாஃபிக்கு எதிராக குண்டு வீச்சுக்களை ஆரம்பித்தன.
17-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபை லிபியாவில் லிபிய விமானங்கள் பறப்பதை தடைசெய்யவும் பொதுமக்களைப் பாதுக்காப்பதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றியது.
18-ம் திகதி லிபியா போர் நிறுத்தம் அறிவித்தது.
19-ம் திகதி நேட்டோ விமானங்கள் கடாஃபியின் படை நிலைகள் மீது குண்டு மாரி பொழியத் தொடங்கின.
30-ம் திகதி லிபிய வெளி நாட்டமைச்சர் மூசா கூசா பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்றார்.
ஏப்ரல்
6-ம் திகதி மும்மர் கடாஃபி அமெரிகாவிற்கு லிபிய மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி கடிதம் எழுதினார்.
29-ம் திகதி நேட்டோவை தனது நாட்டின் வளங்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி கடாஃபி வேண்டுகோள் விடுத்தார்.
30-ம் திகதி நேட்டோ விமானக் குண்டு வீச்சில் கடாஃபியின் ஒரு மகனும் சில பேரன்களும் கொல்லப்பட்டனர்.
மே
8-ம் திகதி லிபியப் படைகளால் கற்பழிக்கப் பட்டதாக ஒரு பெண் முறைப்பாடு.
22-ம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் பென்காஜி நகரில் தனது பணிமனையைத் திறந்தது.
ஜூன்
1-ம் திகதி நேட்டோ விமானங்களின் குண்டு வீச்சுக்கள் மேலும் 90 நாட்கள் நீடிக்கப்பட்டன.
8-ம் திகதி பல நாடுகள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் இடைக்கால தேசிய சபையை லிபியாவின் சட்டபூர்வ அரசாக அறிவித்தனர்.
14-ம் திகதி தென் ஆபிரிக்கா லிபியாமீது நேட்டோப் படைகளின் குண்டு வீச்சு பொது மக்களைப்பாதுகாப்பதற்காக இல்லாமல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் ஆக்கிரமிப்புப் படைகளை உட்புகுத்தவும் என்று குற்றம் சாட்டி நேட்டோப் படைகளின் நடவடிக்கைகளைக் கண்டித்தது.
ஜூலை
15-ம் திகதி அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் இடைக்கால தேசிய சபையை லிபியாவின் சட்டபூர்வ அரசாக அங்கீகரித்தனர்.
28-ம் திகதி மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கொல்லப்பட்டார்.
ஆகஸ்ட்
9-ம் திகதி கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் இடைக்கால தேசிய சபையின் தலைவர்
முஸ்தபா அப்துல் ஜலீல் இடைக்கால அரசின் நிறைவேற்று அதிகாரிகளைப் பதவி நீக்கினார்.
15-ம் திகதி கடாஃபி லிபிய மக்களைக் கிளர்ந்து எழும்படி வேண்டுகோள் விடுத்தார்.
20-ம் திகதி கிளர்ச்சிக்காரர்கள் லிபியத் தலைநகர் திரிப்போலிக்குள் புகுந்தனர்.
21-ம் திகதி கடாஃபி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை ஒலிபரப்புச் செய்யப்பட்டது. லிபியாவைக் காப்பாற்றும் படி அவர் நாட்டு மக்களை வேண்டினார். திரிப்போலிக்குள் கடல் மார்க்கமாக இரு நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சிப்படையின தரை இறங்கினர். முக்கிய படைத் தளங்கள் கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டன.
22-ம் திகதி தலைநகர் திரிப்போலியின் சிறு பகுதியைத் தவிர மற்ற இடங்களைக் கடாஃபி இழந்தார். கடாஃபியின் மூன்று மகன்கள் கிளர்ச்சிக்காரர்களால் கைது. கடாஃபியின் இருப்பிடம் பற்றி தகவல் இல்லை.
23-ம் திகதி கைது செய்ததாகக் கூறப்பட்ட கடாஃபியின் மகன் சயிஃப் கடாஃபி தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றினார்.
Click on picture to enlarge