Showing posts with label ஈழம். அரசியல். Show all posts
Showing posts with label ஈழம். அரசியல். Show all posts

Wednesday, 28 July 2010

ஆட்டம் காணும் பான் கீ மூனின் இரண்டாம் ஆட்டக் கனவு.


2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலராகப் பதவியேற்ற தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூனின் பதவிக்காலம் 2011-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியுடன் முடிவடைகிறது. ஐநா வின் பொதுச் செயலாளராக ஒருவர் இரண்டு தடவை பதவி வகிக்க முடியும். பான் கீ மூனின் இரண்டாவது பதவிக் காலத்திற்கு எதிரான கருத்துக்கள் சென்ற ஆண்டில் இருந்தே ஆரம்பித்துவிட்டன. இதன் முக்கிய் ஆரம்பமாக நோர்வேயின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி மோனா ஜூல் அவர்களால் சமர்பிக்கப் பட்ட இரகசிய அறிக்கை வெளிக்கசிந்தது அமைந்தது.

உலக நெருக்கடிகளிற்கு ஐநாவின் செயற்பாடுகள் தேவைப் படும் நேரங்களில் பான் கீ மூன் அமைதியாக இருப்பதாகவும், உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட வேளையில் தனது தலைமைத்துவத்தை வெளிக்காட்டவில்லை என்றும் நோர்வேயின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி மோனா ஜூல் குற்றம் சுமத்தியிருந்தார். ஒரு அமெரிக்க ஊடகம் இவரை உலகின் மிக ஆபத்தான கொரியநாட்டவர் என்று வர்ணித்தது.


கவர்ச்சியற்ற பான் கீ மூன்

பான் கீ முனிற்கு முன்னர் இருந்த கோபி அனன் அவர்கள் சிறந்த தோற்றமும் தெளிவான பேச்சுத் திறனும் கொண்டவர். அவரைத் தொடர்ந்து வந்த பான் கீ மூன் ஒரு தெரியாத நகரத்தில் பணப்பையைத் தொலைத்த பயணி போல் எப்போது காட்சியளிப்பார். புன்னகைக்கவே மாட்டார். பான் கீ மூனின் பேச்சு தம்மை நித்திரை கொள்ளச் செய்வதாகப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மீண்டும் சூடு பிடிக்கிறது

பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில வாரங்களாக மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை "பான் கீ மூனின் செயற்பாடுகளிற்கு எதிராக கலையும் அமைதி" என்ற தலைப்பிட்டு 22-07-2010இல் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் பான் கீ மூனின் மோசமான ஆங்கில அறிவும் அவரது தொடர்பாடல் திறமையின்மையும் அவரது முதற் பேச்சிலேயா வெளிப்பட்டு விட்டதாம். இதன் பின்னர் அவருக்கு ஆங்கிலப் பயிற்ச்சியும் தொடர்பாடல் பயிற்ச்சியும் வழ்ங்கியும் போதிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்க்குமாறு இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.


இன்னும் ஒரு செய்திக் கசிவு

பான் கீ மூனின் திறமையின்மை தொடர்பாக இன்னும் ஒரு செய்திக் கசிவு ஏற்பட்டுள்ளது. இது பான் கீ மூனிற்கு சுவீடனைச் சேர்ந்த உதவிப் பொதுச் செயலாளர் இங்கா பிரித் ஆலெனியஸ் (under-secretary general Inga-Britt Ahlenius) அவர்கள் எழுதிய இரகசிய உள்ளகக் கடிதம் இப்போது வெளிவந்துள்ளது. அப்பெண்மணி ஐநா பொதுச் செயலகம் "அழுகத்" தொடங்கிவிட்டது துண்டுகளாக் விழப் போகிறது, ஐநா தேவையற்ற ஒன்றாகப் போகிறது என்று தான் மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்றார். Ahlenius accuses her boss(பான் கீ மூன்) of trying to undermine the independence of her office by refusing to allow her to hire a highly regarded and pugnacious investigator and by seeking to set up an in-house investigative body, presumably in rivalry with her own. Ban has marketed himself as a hard-headed Korean reformer, but Ahlenius angrily asserts that in his administration there is "no transparency," a "lack of accountability," and, overall, "[no] signs of reform."


கொப்பெனகனில் கோட்டை விட்ட பான் கீ மூன்

2009 டிசம்பரில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும் பான் கீ மூனின் தலைமைத்துவத் திறமையின்னமை நன்கு வெளிப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலர் இந்த மாநாட்டின் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.


இந்தியர் இருவர் நடுவில் பான் கீ மூன்

பான் கீ மூனின் பிரத ஆலோசகராக விஜய் நம்பியார் என்பவர் இருக்கிறார். அவரது மகளின் கணவரான சித்தார்த சட்டர்ஜீக்கு பதவி உயர்வு வழங்கியது பான் கீ மூனின் நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியது. விஜய் நம்பியார் இலங்கையின் போர்த்துறை ஆலோசகர் சதீஸ் நம்பியாரின் சகோதரர். விஜய் நம்பியார் 2009 மே மாதம் இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை சென்று விட்டு வந்து பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க மறுத்து அடாவடித்தனம் செய்தவர். சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றதில் விஜய் நம்பியாரின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சகல செயறபாடுகளிலும் இந்தியாவைன் கை சம்பந்தப் பட்டிருக்கும் என்பதற்கு இவர்கள் இருவரும் சாட்சியங்களா?


சரித்திரத்தில் மோசமான இடம் பிடித்த பான் கீ மூன்

ஐநாவைப்பற்றி பல புத்தகங்கள் எழுதிய நியூ யோர்க் பல்கலைக் கழக அரசியற் துறைப் பேராசிரியர் தோமஸ் வைஸ் அவர்கள் இதுவரை இருந்த ஐநா பொதுச் செயலர்களுள் பான் கீ முன் மிக மோச மானவர் என்று குறிப்பிடுகிறார். அவர் மேலும் தெரிவிப்பது:

"While it is perhaps unfair to compare the current secretary-general with his telegenic and charismatic predecessor, Ban Ki-moon has set a new standard for being invisible," Weiss said, adding: "I think he feels comfortable with blending into the background."


இதே வேளை பான் கீ மூனின் உதவியாளர்கள் சிலர் அவரை புகழும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஜப்பானியர் அவரை யோகிக்கு ஒப்பிட்டார். யோகி எப்படிக் கதைக்கிறார் என்பதல்ல முக்கியம் அவர் எதைப் போதிக்கிறார், எப்படிச் செயற்படுகிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் அவர்.


சென்று வாருங்கள் என்கிறார் ஜேம்ஸ் ரவுப்

பிரபல அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் ரவுப் அவர்கள் Good night, Ban Ki moon என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை 22-07-2010இலன்று எழுதியுள்ளார். பொதுச் செயலாளர்கள் அவர்களின் திறமையின்மைக்காகவே தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று அவர் கிண்டலடித்துள்ளார். பான் கீ மூனிற்கு எதிராக அவர் வைக்கும் குற்றச் சாட்டுக்களில் இலங்கை உள்நாட்டுப் போரை அவர் கையாண்ட விதம் முக்கிய இடம் பெறுகிறது. முன்னாள் கோபி அனனின் திறமை அமெரிக்காவிற்கு பாதகமாக அமைந்ததால் திறமையற்ற பான்கீ மூன் தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஐநாவை எப்போதும் ஒரு தடையாகப் பார்க்கும் சீனா அதன் பெருமையைக் குறைக்கவே பான் கீ மூனை பொதுச் செயலராக்க அனுமதித்தது என்கிறார் ஜேம்ஸ் ரவுப்.

Ban Ki-moon, a colorless South Korean bureaucrat and the favored candidate of U.S. Ambassador John Bolton, was the cure for Annan's dangerous charisma. China, which exercised effective veto rights over the choice of an "Asian candidate," was equally pleased with a figure who would lower the U.N.'s profile.


இலங்கை பிரச்சனையைக் கையிலெடுத்த பான் கீ மூன்

தனது செயற்பாடுகளுக்கு எதிரான குற்றச் சாட்டுகளில் இலங்கைப் பிரச்சனை மிக முக்கிய இடம் வகிப்பதால் தனது இரண்டாவது பதவிக்கால நீடிப்பிற்கு இலங்கைப் பிரச்சனையை பான் கீ மூன் கையிலெடுத்தார். ஒரு ஆலோசனை சபையை நியமித்து அதை அடுத்த ஆண்டின் இறுதி வரை நீடித்தால் தனது பதவி நீடிப்பிற்கு சாதகமாக இருக்கலாம் என்று பான் கீ மூன் கருதுகிறார். சென்ற முறை பான் கீ மூன் தேர்வு செய்யப் பட்டபோது அவர் தேர்வு செய்யப்பட தனது வேட்பாளரை போட்டியில் இருந்து விலகச் செய்து பான் கீ மூனை வெல்லச் செய்தது இலங்கை. அவரை இந்த முறை வெற்றியடையச் செய்வதில்லை என்று இலங்கை கங்கணம் கட்டி நிற்கிறது.


அமெரிக்க சார்பாளரை அமெரிக்க கைவிடுமா?

இது வரை இருந்த எட்டு பொதுச் செயலாளர்களுள் பான் கீ மூன் தான் மிகத்திவீரமான அமெரிக்க ஆதரவாளர். முன்னாள் பொதுச் செயலர் கோபி அனன் அமெரிக்கா ஈராக்கில் செய்தவற்றை பகிரங்கமாக கண்டித்தவர். ஐரோப்பியாவில் நல்ல பெயரெடுத்தவர். இவரைப் பிடிக்காத்தால் ஜோர்ஜ் புஷ் பான் கீ மூனை பொதுச் செயலராக்கினார். இபோது ஒபாமா நிர்வாகம் இலங்கைப் போர் குற்ற விசாரணையை காரணம் காட்டி அவரை பதவியில் நீடிக்கச் செய்யுமா? இலங்கையுடன் ஏதாவது திரை மறைவு உடன்பாடு ஏற்படுமா? சீனா பான் கீ மூனின் இரண்டாம் ஆட்டத்தை ஆதரிக்குமா?

Tuesday, 22 June 2010

ஐரோப்பிய ஒன்றியம் ஏன் ஜிஎஸ்பி+ ஐ நீடிக்கிறது?



ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி+ வரிச்சலுகையை இலங்கைக்கு சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து வழங்கியது.

GSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக்கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி அல்லது குறைந்த தீர்வுடன் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றியம் 17 நாடுகளுக்கு இந்தச் சலுகையை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை நீக்கப் பட்டால் நேரடியாகவும் அதனுடன் தொடர்பு பட்டதாகவும் இருக்கும் 250,000 இலங்கையர் வேலை இழப்பர் என்று தெரிவிக்கப் படுகிறது. குடும்பங்களோடு தொடர்பு படுத்தி கணக்குப்பார்த்தால் இலங்கையில் ஐந்தில் ஒருவர் இதனால் பாதிக்கப் படுவார்களாம்.
ஜிஎஸ்பி+ஆல் இலங்கை அடைந்த நன்மையை அறிந்து கொள்ள உகந்த புள்ளி விபரம்: 2005-ம் ஆண்டு 99பில்லியன் ரூபாக்கள் ஏற்றுமதி வருவாய் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிடைத்தது. ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை வழங்கியபின் அது 157பில்லியன் ரூபாக்களாக அதிகரித்தது. இதே வேளை அமெரிக்காவிற்கான எற்றுமதி வருவாய் 164பில்லியன்களில் இருந்து 173பில்லியன்கள் மட்டுமே அதிகரித்தது. அமெரிக்காவிற்கான வளர்ச்சியிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி பத்துமடங்கு அதிகரித்தது. இலங்கையில் ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகையால் பயனடையும் துறைகளில் ஆடை அணிகலன் துறை மிக முக்கியமானதாகும். மற்றைய துறைகள் இறப்பர், மாணிக்கம், கடலுணவு மற்றும் மரக்கறி வகைகளாகும்.

பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகை இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலை உயரும் என்று முன்னர் தெரிவித்துள்ளது. பிரித்தானிய வரத்தகர்களின் அமைப்பு ஒன்று இலங்கைகான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.

Marks & Spencer, Tesco, Next போன்ற பிரித்தானிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து அங்கிருந்து GSP+ வர்த்தகச் சலுகையைப் பாவித்து குறைந்த விலையில் தமது பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்கின்றன.

GSP+ வர்த்தகச் சலுகையின் பின்னணி
மேற்குலக நாடுகள் தமக்கு குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்ய முதலில் ஜப்பானைப் பயன்படுத்தின. ஜப்பான் பாரிய பொருளாதார வளர்ச்சியடைந்த பின் அதன் நாணய மதிப்பு பெரிதளவில் வளர்ச்சி கண்டது. பின்னர் ஆசியச் சிறு வேங்கைகள் என் அழைக்கப் பட்ட ஹொங் ஹாங், தென் கொரியா, தைய்வான், சிங்கப்பூர் ஆகியவற்றில் இருந்து இறக்குமதிகளைச் செய்தன. அவையும் பொருளாதார வளர்ச்சிகாண பின்னர் சீனா அந்த இடத்தைப் பிடிக்க முயன்றது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை ஒரு பொது உடமை போர்வை போர்த்திய அரச முதலாளித்துவ நாடான சீனாவில் இருந்து இறக்குமதி செயவது பெரிதும் விரும்பத்தக்கதல்ல. சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேற்குலகிற்கு அச்சுறுத்தலாக அமையும். இதை தவிர்க்கும் முகமாக வறிய நாடுகளுக்கு ஜீஎஸ்பீ+ வரிச்சலுகையை அளித்து அவற்றிடம் இருந்து இறக்குமதிகளைச் செய்யவே இந்த ஜீஎஸ்பீ+ வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்தது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பல நிபந்தனைகளை விதிக்கிறது. 27 பன்னாட்டு உடன்படிக்கைகளை அந்த நாடுகள் அமூல் செய்ய வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் கூறும் 27 பன்னாட்டு உடன்படிக்கைகளில் மூன்று உடன்படிக்கைகளை இலங்கை மீறியதாக ஐரோப்பிய ஒன்றியம் அமைத்த விசாரணைக் குழு கூறியது:International Covenant on Civil and Political Rights, the Convention agaist Torture and Convention on Rights of Child.

இலங்கை அரசியல் அமைப்பின் 17வது திருத்தம் அமூல் படுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்தது. பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் இலங்கைக்கான ஜிஎஸ்பி+ வரிச் சலுகை நிறுத்தப் படுவதாக அறிவித்தது. இப்போது ஐரோப்பிய ஒன்றியம் 2011 பெப்ரவரி வரை ஜிஎஸ்பி+ வரிச் சலுகை நீடிக்கப் படும் என்று அறிவித்துள்ளது.


ஐரோப்பிய ஒன்றியக் குத்துக் கரணத்துக்கு என்ன காரணங்கள்?
  1. முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல். இலங்கையில் முதலீடு செய்த ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களின் முதலீட்டைப் பாதுகாப்பது. ஒரு நிறுவனம் முதலீடு செய்யும் போது அந்த முதலீட்டிற்கான மிள் செலுத்தல் காலம்(Pay back period) ஒன்றை கணக்கிடும். அந்த முதலீட்டுக் காலம் முடியும் வரை ஜிஎஸ்பி+ வரிச் சலுகையை இழுத்தடிக்க வேண்டிய கட்டாயத்தால் இந்த வர்த்தகச் சலுகை நீடிக்கப்படுகிறது. Marks & Spencer, Tesco, Next போன்ற வர்த்தக நிறுவனங்களை பாதுகாக்க இந்த இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
  2. குறைந்த விலையில் இறக்குமதி. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயங்களான யூரோ ஸ்ரேலிங் பவுன் போன்றவை அண்மைக் காலங்களாக பெறுமதித் தேய்வு கண்டு வருகிறன. இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறக்குமதிப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. ஜிஎஸ்பி+ வரிச் சலுகையை நிறுத்தினால் பல இறக்குமதிப் பொருட்களின் விலை மேலும் உயரும். இதைத் தடுக்கவும் இந்த பெப்ரவரி 2011 வரையான இழுத்தடிப்பு.

Tuesday, 30 June 2009

நாடு கடந்த அரசாங்கம் என்றால் என்ன?


A government in exile is a political group that claims to be a country's legitimate government, but for various reasons is unable to exercise its legal power, and instead resides in a foreign country. Governments in exile usually operate under the assumption that they will one day return to their native country and regain power

நாடு கடந்த அரசாங்கம் என்றால் என்ன?

xU ehl;bd; muR jdJ nrhe;j ehl;by; VjhtJ fhuzq;fSf;fhf nraw;gl Kbahikapdhy; .....,d;ndhU ehl;by; my;yJ jiy kiwthfr; nraw;gLtij ehL fle;j murhq;fk; vd miof;fg;gLம்.

VjhtJ murpaw;FO nrhe;j ehl;il NtW xU muR MSifapy; சொந்த நாட்டில் தாம் இருப்பதால் அழியும் நிலை ஏற்படும் எனக்கருதி jhk; jhd; cz;ikahd muR vd;W ntW xU ehl;by; ,Ue;J வரும் காலத்தில் தமது நாட்டை விடுவிக்கும் நோக்குடன் gpufldk; nra;J nraw;gl;lhy; mJ ehL fle;j murhq;fk; vdg;gLk;.

cjhuzq;fs;.

rPdh jPngj;ij Mf;fpukpj;J Ml;rp nra;ifapy; jya; yhkh ehL fle;j murhq;fk; xd;iw epWtpAs;shu;. 1959ம் ஆண்டில் இருந்து இது இந்தியாவில் இருந்து செயற்பட்டு வருகிறது.

,uz;lhk; cyfg; Nghupd; NghJ gy INuhg;gpa ehLfs; `pl;yupd; gilfshy; Mf;fpukpf;fg; gl;l NghJ Mf;fpukpf;fg; gl;l ehLfspd; Ml;rpahsu;fs; gpupj;jhdpahtpy; ehL fle;j murhq;fk; mikj;Jr; nraw;gl;ldu;.

gu;kpa ehl;il ,uhZtk; Gul;rp %yk; ifg;gw;wpajhy; gu;kpa ehl;bdu; ehL fle;j murhq;fk; xd;iw epWtpdu;.

.....

எந்த சூழ்நிலையில் நாடு கடந்த அரசு சிறப்பாகச் செயற்படும்.

...

மாற்றான் வலிமையும் தன் வலிமையும்

நாடு கடந்த அரசு தனக்கென ஒரு ஆயுதம் தாங்கிய படையணியைக் கொண்டிருக்க வேண்டும். சீனாவும் தலய் லாமாவும் இதற்கு நல்ல உதாரணங்கள். இங்கு லாமாவின் வலிமையிலும் பார்க்க சீனாவின் வலிமை பல்லாயிரம் மடங்கு. அதனால் லாமாவின் நாடு கடந்த அரசு அர்த்தமற்ற அரசாகவே இருக்கிறது. லாமாவின் அரசு தனக்கென ஒரு படையை உருவாக்கி தீபெத்தைக் கைப்பற்றினால் அது வெற்றியாகும்.அல்லது வெளியில் இருந்துகொண்டு தீபெத்தில் பலத்த ஆயுத போராட்டத்தை வளர்த்தெடுத்தால் அது தீபெத்தின் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். ஆக மொத்தத்தில் மா ஓ சூ துங் கூறியதுபோல் ஆட்சி அதிகாரம் துப்பாக்கி முனையில் பிறக்கிறது.

....

மற்ற நாடுகளின் அங்கீகாரம்.

மற்ற நாடுகள் பல அதிகாரத்திலிருக்கும் அரசைவிட நாடு கடந்த அரசு நாடுகடந்த அரசை அங்கீகரித்திருந்தால் அதிகாரத்திலிருக்கும் அரசிற்கு பல நெருக்கடிகள் தோன்றும். இந்நாடுகள் அதிகாரத்திலிருக்கும் அரசின் மீது பொருளாதாரத்தடையை ஏற்படுத்துங்கால் அதிகாரத்திலிருக்கும் அரசு கவிழ்ந்து நாடு கடந்த அரசு பதவியைக் கைப்பற்ற வாய்ப்புண்டு.

...

மற்ற நாடுகளின் படை உதவி

மற்ற நாடு ஒன்றின் அல்லது பலவற்றின் உதவியுடன் தமது நாட்டிற்குப்..... .. படை எடுத்து தமது ஆட்சியை தம்து நாட்டில் நிலை நாட்டலாம்.

....

பாரிய உள் நாட்டுக் கலவரம்.

பாரிய உள் நாட்டுக் கலவரம் ஒன்று ஏற்பட்டு அதிகாரத்தில் இருக்கும் அரசு ஆட்டம் காணும் போது நாடு கடந்த அரசு அங்கு சென்று தனது அதிகாரத்தை நிலை நாட்டலாம்.

....

பாரிய இயற்கை அழிவு.

பாரிய இயற்கை அழிவு ஏற்பட்டு அதிகாரத்தில் இருக்கும் அரசு அழிந்தோ அல்லது செயற்பட முடியாமற் போகுமிடத்து நாடு கடந்த அரசு அங்கு சென்று தனது அதிகாரத்தை நிலை நாட்டலாம்.

....

நாடு கடந்த அரசிற்கு தேவையானது.

  • படை பலம்.
  • கணிசமான நாடுகளின் நேரடியான அல்லது மறை முகமான அங்கீகாரம்.
  • பண பலம்.
  • உறுப்பினர் பலம்.
  • சொந்த நாட்டில் பலத்த திரை மறைவு ஆதரவு.
தமிழர்கள் அமைத்துள்ள நாடு கடந்த அரசாங்கம் மற்ற நாடு கடந்த அரசாங்கங்களில் இருந்து வேறு பட்டது. தமிழர்கள் அமைத்தது Trans National Government மற்றைய அரசுகள் Government in exile.

Trans National Government இற்கும் Government in exile இடையிலான வேறு பாடு
Trans National Government என்பது ஒரு இனக் குழுமம் தனது நாட்டிலிருந்து அல்லது தாம வாழ்ந்த நாடுகளிலிருந்து வெளியேறிமையால் அல்லது வெளியேற்றப் பட்டமையால் தாம் ஒன்று கூடி தமக்கென ஒரு அரசை அமைப்பது. இப்படி யூதர்கள் செய்தார்கள். ஆனால் தமிழர்கள் ஒரு தேர்தல் மூலம் தமது அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வகையான தேர்ந்தெடுக்கப் பட்ட நாடுகடந்த அரசு முதல் முறையாக தமிழர்கள் உருவாக்குகிறார்கள். Government in exile என்பது ஒரு அரசு தோற்கடிக்கப் பட்டதால் தனது நாட்டிலிருந்து ஆட்சியாளர்கள் வெளியேறி வேறு ஒரு நாட்டில் செயற்படுவது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...