Saturday, 15 September 2012
எமது நிலம் எமக்கு வேண்டும்
யாழிசைக்குப் பரிசாகி மீனிசைக்கு வசமாகி
தமிழிசைக்குக் களமாகி மழலையிசை தேனாகி
புள்ளிசை காதினிக்க இல்லற நெறியிசைக்க
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்
ஆழ்கடல் முத்தெடுத்து சூழ்கடல் உப்பெடுத்து
மீன் வளச் சொத்தெடுத்து பாய்மரக் கப்பலெடுத்து
திரைகடல் கடந்து சென்று செல்வஞ் சேர்த்தெடுத்து
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்
கால்நடைகள் உறவாக களனியது தாயாக
மழைத் துளிகள் பரிசாக வியர்வைத்துளிகள் வித்தாக
நீர்வளங்கள் தெய்வங்களாக வளர்த்த பயிர் விருந்தாக
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்
அற வழி பொருளீட்டி அன்பு வழி ஆனந்தம் கூட்டி
மழலையர்க்கு மரபு காட்டி பண்பார்ந்த வாழ்வு காட்டி
நற்றமிழ் மொழி பேசி நானிலத்திற்கு வழிகாட்டி
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்
கதிரது நாளை உதிக்க கீரி மலையோடு திருமலை
எரிமலையாய் வெடிக்க விடுதலைத் தீ எரிய
படுவான்கரையும் எழுவான் கரையாய் மாற
ஈழ நிலமெங்கும் எதிரி விழுவான் நிரையாக - அன்று
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கே ஆகும்
Thursday, 13 September 2012
கமலேஷ் ஷர்மா என்ற சொறிநாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால்!
படம்: நன்றி டெய்லி மிரர். |
- இலங்கையில் மக்களாட்சி தொடர்பில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. மக்களாட்சி என்பது ஒரு பயணம் என்றும் அது பயணம் முடிவுறும் இடமில்லை.
- வடக்கு, கிழக்கு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதை எனது கண்களால் காணக்கிடைத்தமை தொடர்பில் மிகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கமலேஷ் ஷர்மாவின் மனைவியை மஹிந்தவின் மனைவி சந்தித்தார். என்ன "பரிமாறப்பட்டதோ இப்படி இலங்கையைப் பற்றிக் கூறுவதற்கு? பன்னாட்டு அரசியல் அறிவில்லாத ஒருவனுக்குக் கூடத் தெரியும் ஒரு நாட்டுக்குச் செல்லும் அரசதந்திரிக்கு அந்நாட்டு அரசின் வழிகாட்டுதல் பயணத்தில்(guided tour) அரசு தனக்குச் சாதகமாக நிலைமை இருப்பது போல் காட்டிவிடும் என்று. சில மானம்கெட்ட நாட்டு அரசதந்திரிகள் ஏற்கனவே தட்சணைகளை தாராளமாகப் பெற்றுக் கொண்டு அரசு சொல்லும் ஒரு சில இடங்களுக்குச் சென்றுவிட்டு அரசைப் பாராட்டி அறிக்கைகள் விடுவர். இப்படிப்பற்றவற்றை நாம் அண்மைக்காலங்களாக நிறையப் பார்க்கிறோம்.
கனடாவிற்கு ஆலோசனை கூறும் கமலேஷ்
ஏற்கனவே கனடியப் பிரதமர் ஸ்ரிவன் ஹார்ப்பர் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறமுன்னர் இலங்கையில் இறுதிப் போரின் போது நடைபெற்ற அத்து மீறல்கள் தொடர்பாக முறையான விசாரணை செய்யாவிடில் தான் அம்மாநாட்டில் பங்கு பற்றப் போவதில்லை என இலங்கையை எச்சரித்திருந்தார். ஆனால் கமலேஷ் ஷர்மா கனடா இந்த முடிவை மாற்ற வேண்டும் என்றார். கமலேஷ் ஷர்மாவிற்கு நன்கு தெரியும் இலங்கைப் போரின் போது இலங்கை மட்டும் குற்றம் புரியவில்லை என்று. கிழக்கு மாகாணத்தில் அரசின் அத்து மீறல்கள் தேர்தல் முடிந்தவுடன் முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற மாற்றுக் கட்சி வேட்பாளர்களை இப்போது அரசு மிரட்டியும் ஆசைகள் காட்டியும் தம்முடன் இணையும் படி வேண்டுகிறது.கமலேஷ் ஷர்மா ஹெஹெலிய ரம்புக்வெலவின் பணியைச் செய்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
மாமா வேலை பார்த்த கமலேஸ்
இலங்கையில் அண்மையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது நடந்த முறை கேடுகளைப்பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே கமலேஷ் ஷர்மா இலங்கையில் மக்களாட்சி தொடர்பில் எவ்வித குறைபாடுகளும் இல்லை என்றார். இந்தக் கமலேஷ் தான் பொது நலவாய நாட்டின் அலுவலகத்தில் பிரித்தானிய அரசியாரின் வைர விழாவின் போது பொருளாதார மாநாட்டில் மஹிந்தவை உரையாற்ற வைக்கும் மாமா வேலை பார்த்துத் தோல்விகண்டவர்.
இதுக்கென்றே ஒரு குரூப்பாய் அலையுறாங்கள்
ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு விஜய் நம்பியார், வாஷிங்டனில் ஒரு நிருபாமா ராவ், பொதுநலவாய நாட்டில் ஒரு கமலேஷ் ஷர்மா சென்னையில் ராம், சோ, சுவாமி போன்றோர் தமிழனை அழிக்கும் சிங்களவர்களிற்கு வக்காலத்து வாங்குவதை தம் பணியாகக் கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கற்றுக் கொள்ளாத பாடங்கள்
இலங்கைப் பாராளமன்றத்தினுள் தமிழர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய எந்தத் தீர்மானமும் எடுக்கப்பட மாட்டது என்பதில் 1956இல் இருந்தே தமிழர்களுக்கு நல்ல பட்டறிவு இருக்கிறது. ஒன்றன் பின்னர் ஒன்றாக வந்த அரசியல் அமைப்புச் யாப்புக்கள் தமிழர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்தன. ஆனால் இந்த உணமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கற்றுக்கொள்ளவில்லை.
அமெரிக்க நிர்ப்பந்தம் நன்மை தராது
1977இல் ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜயவர்த்தன ஒரு பெரும் இனக்கலவரத்துடன் தனது ஆட்சியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்த இந்தியா திட்டமிட்டது. அதை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா தனது கையாளும் தந்தை செல்வநாயகத்தின் மகனுமாகிய பேராசிரியர் ஏ ஜே வில்சனை அமெரிக்கவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்படுத்த முனைந்தது. அதன் ஒரு அம்சமாக எந்தவித அதிகாரமும் இல்லாத மாவட்ட சபை 1981இல்உருவாகியது. ஏ ஜே வில்சனின் ஆலோசனையுடன் உருவான மாவட்ட சபையை அதிகாரமற்றது என்று தமிழர்கள் ஏற்க மறுத்தனர். அமெரிக்கத் தூதுவர் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து அதை இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். அப்போதைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் அதை ஏற்றுக் கொண்டது. மாவட்ட சபைத் தேர்தல் நட்ந்த போது ஒரு இனக்கலவரம் நடந்தது யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. பின்னர் தமிழர்கள் மாவட்ட சபை ஒன்றுக்கும் உதவாதது என்பதை உணர்ந்து கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட தமிழர் கூட்டணி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. சிங்கள தமிழ் விரோதம் தீவிர மடைந்தது. அப்போது அமெரிக்கா இலங்கையில் செய்த தலையீடு இலங்கையில் சிங்கள தமிழ் குரோதத்தை மோசமாக்கியதுடன். தமிழர்களின் படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை தீவிரமடையச் செய்தது. இதில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்க நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது.
சுனாமியிலேயே சுவிம்மிங் போறவங்க சுவிம்மிங் பூலில் சும்மா இருப்பாங்களா?
கடைசியாக நடந்த குடியரசுத் தலைவர் தேர்ந்தலில் தேர்தல் ஆணையாளர் துப்பாக்கி முனையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் என்ற வதந்திகளின் உண்மைத் தன்மை த. தே. கூட்டமைப்பு அறியாததா? உலகக் கவனம் திரும்பி இருந்த அந்தத் தேர்தலில் என்ன நடந்தது என்று கூட்டமைப்பு அறியாதா? அதிலேயே அப்படி என்றால் மாகாணசபைத் தேர்தல் எப்படி இருக்கும் என்று கூட்டமைப்பு அறியாதா? 1981இல் மாவட்ட சபைத் தேர்தல் நடந்த போது கூட்டுறவுச் சங்கங்களில் வேலை செய்யும் சிங்களக் காடையர்கள் தேர்தல் அதிகாரிகளாகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுக்கள் திணிக்கப்பட்டன. அரச மந்திரிகள் இருந்த சுபாஸ் விடுதியில் இருந்து ஒரு வாக்குப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை இலங்கையில் நீதியான தேர்தல் ஒரு போதும் நடந்தது இல்லை. இதைக் கற்றுக் கொள்ளாத த. தே. கூட்டமைப்பு தேர்தலில் எந்த நிபந்தனையும் இன்றிப் போட்டியிட்டது. தன்னை நிர்ப்பந்தித்தவர்களிடம் நீதியான தேர்தல் ஒன்றிற்கு உத்தரவாதம் தாருங்கள் என்று விடாப்பிடியாக நிற்கவில்லை. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் வேட்பாளர்கள் மிரட்டி விலகச் செய்யப்பட்டனர். வேட்பாளர்கள் தாக்கப்பட்டனர். வாக்காளர்கள் மிரட்டப்பட்டனர். வாக்காளர்கள் தாக்கப்பட்டனர். வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுக்கப்பட்டனர். வாக்குச் சீட்டுகளில் முறை கேடு நடந்தது. வாக்குக்க்கள் எண்ணப்படும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு வாக்கு நிலைமை மாற்றப்பட்டு முடிவு மாற்றப்பட்டது. இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இவையாவும் நடக்கும் என்று த. தே. கூட்டமைப்பிற்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் குற்றச் செயல்களை நவீன காணொளிக் கருவிகள் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்திருக்க வேண்டும். தேர்தலில் நடந்த முறை கேடுகள் பன்னாட்டு மட்டத்தில் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லும் அரிய சந்தர்ப்பத்தை த. தே. கூட்டமைப்புத் தவற விட்டு விட்டது.
யாருமே இல்லாத கடையில் யாருக்கு ரீ ஆத்தப் போனீர்கள்?
மாகாண சபைக்கு எந்த வித அதிகாரமும் இல்லை என அன்று சட்ட அறிஞர் நடேசன் சத்தியேந்திரா அன்று சொன்னார். நேற்று யாழ் பல்கலைக்கழகத்தில் அதன் விரிவுரையாளார் குமரகுருபரன் மாகாணசபைகளுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் அதிகாரம் மாகாண ஆளுநர் கைகளிலேயே இருக்கிறது என்றும் த. தே. கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்னிலையில் எடுத்து விளக்கினார். த. தே. கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டது. த. தே. கூட்டமைப்பு வெற்றி பெற்று நடாத்திக் கொண்டிருக்கும் சிறிய பிரதேச சபைகளையே ஒழுங்காக நடாத்த விடாமல் அரசு கெடு பிடி செய்கிறது என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படி இருக்க உங்களை மாகாண சபையை மட்டும் நடாத்த விட்டு வைப்பார்களா? உங்களிற்கு அழுத்தம் கொடுத்த இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் போதிய அதிகாரம் மிக்க மாகாண சபையை உருவாக்கும் படி நீங்கள் ஏன் கேட்கவில்லை. சுருங்கச் சொன்னால் மாகாண சபை பேஸ்மென்ரும் வீக் பில்டிங்கும் வீக்! அதிகாரமில்லாத மாகாணசபைத் தேர்தலில் ஏன் போட்டியிட்டீர்கள்?
கட்டத்துரைகளின் கைப்பிள்ளை ஆகாதீர்கள்
அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர்கள் மேல் அக்கறை கொள்வது மஹிந்த ராஜபக்சவை தமது வழிக்குக் கொண்டுவரும் வரை மட்டுமே. இலங்கையில் அமைதியை உறுதி செய்வதும், மேற்கொண்டு எத்தகைய தவறுகளும் நடக்காமல் இருக்க உத்தரவாதமளிப்பதும் அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்று சொன்னார் சென்னையில் உள்ள அமெரிக்காவின் துணைத்தூதுவர் ஜெனிபர் ஏ மக்இன்ரைர். அவர் ஏன் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று சொல்லவில்லை? தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லவில்லை?
அமெரிக்கா ஒரு போதும் சிங்களவர்களை ஆத்திரப்படுத்தக் கூடிய எந்த ஒரு வார்த்தையையும் கூறாது என்பது அண்மைக்காலங்களாக அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைக்களைப் பார்த்தால் தெரியும். அதிகாரப்பரவலாக்கம் என்ற பதம் சிங்களவர்களுக்குப் பிடிக்காது என்பதால் அமெரிக்கா இப்போது நல்லிணக்கம் என்ற பதத்தை முன்வைக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில் இந்தியா தமிழர்களின் நண்பன் போல் நடித்து ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி திருமலையிலும் சிலாபத்திலும் அமெரிக்கக் காலூன்றலைத் தடுத்தபின்னர் தமிழர்களின் எதிரியாக மாறியதில் இருந்து த. தே. கூட்டமைப்பு எதையும் கற்றுக் கொள்ளவில்லை! நாளை மஹிந்த தனது சீன ஆதரவு நிலைப்பாட்டை மாற்றினால் இந்தியாவோ அமெரிக்காவோ இலங்கையில் தேர்தல் நடந்து விட்டது. இனிப் பிரச்சனகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். வெளியில் இருந்து தீர்வு திணிக்கப்பட்டால் அது பிரச்சனையை வளர்க்கும் என்று சொல்வார்கள். அதனால் த. தே. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எது உகந்த தீர்வு என்பதைத் தீர்மானித்து அதை பன்னாட்டு சமூகத்தின் முன்வைத்து அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் படி செய்ய வேண்டும்.
இணைந்த வடக்குக் கிழக்கே தீர்வாகும்
நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கற்றுக் கொள்ள வேண்டிய பெரும் பாடம் "தமிழர்களுக்கு வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த அலகில் போதிய அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய ஒரு தீர்வால் மட்டுமே நன்மை கிட்டும்" என்பதாகும். இதைக் கற்றுக் கொள்வீர்களா?
பொங்கல் பானை உடைத்த இந்தியா.....
ஐம்பதிற்கு ஐம்பது என்னும் அரிசியிட்டு
எம்பதி ஜீ ஜீ பொன்னம்பலம் தலைமையில்
தன்மானத்தோடு சமத்துவப் பொங்கலொன்று
சமைக்க முயன்றோம் அன்று நாம்
சோல்பரியாரின் தூர நோக்கின்மையால்
அரிசியே மண்ணில் சிந்தியது
காந்தீய அரிசியெடுத்து கடமைப் பாலெடுத்து
தமிழுணர்வுப் பானை தேர்ந்தெடுத்து
இணைப்பாட்சி என்னும் சமஷ்டிப்
பொங்கலிட முயன்றோம் அன்று நாம்
காடையரை ஏவிவிட்டுப் கொடுமை செய்து
பொங்கலைச் சிதைத்தது கயவர் ஆட்சி
ஐந்து வீடாவது கொடு என்ற பாண்டவர்போல்
மாவட்ட சபை என்னும் மட்டமான அரிசியிலே
அரை வேக்காட்டுப் பொங்கலொன்று சமைத்தோம்
நூல் நிலையம் கொழுத்தி நோகடித்தனர் எம்மை
மிரட்டல் பானையிலே வஞ்சகப் பாலூற்றி
இந்திய நட்பென்னும் புழுத்துப் போன அரிசியிலே
பதின் மூன்றாம் திருத்தம் எனும்
பொங்கலை எம் வாயில் திணித்தனர்
தொண்டையில் இன்றும் சிக்கி நிற்கிறது நஞ்சாக
வீரத் தீமூட்டி தியாகப் பானை எடுத்து
தீரப் பால் வார்த்து உறுதி நெய்யூற்றி
தூய்மை அரிசியோடு வாய்மைத் தேனிட்டு
பொங்கிய ஈழப் பொங்கல் இறக்கும் வேளையிலே
பன்னாட்டுச் சமூகமென்னும் பன்னாடைக் கூட்டமும்
மானம் கெட்ட பாதக இந்தியாவும்
பொங்கல் பானை உடைத்துச் சென்றன
பட்டதுயரங்கள் நெஞ்சில் ஆறா ஆறா
இழந்த உயிர்கள் எண்ணில் அடங்கா
பட்டறிவுகளையாவது பயன்படுத்துவோம்
நாளை சந்ததிக்காவது நன்மை செய்வோம்
Wednesday, 12 September 2012
ஐநா மனித உரிமைக் கழகத்தின் Universal Periodic Review என்பது என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் 21வது கூட்டத் தொடர் 10-09-2012இல் ஆரம்பமாகி நடக்கிறது. இக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அகில காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) இடம் பெற இருக்கிறது. 2008இல் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான அகில காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) கடைசியாகச் செய்யப்பட்டது. இப்போது 2008இல் இருந்து 2012 வரை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு செய்யப்படவிருக்கிறது.
ஐநா மனித உரிமைக் கழகத்தின் 193 அங்கத்துவ நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்படும். ஒரு கூட்டத் தொடரில் 14 முதல் 16 நாடுகளின் மனித உரிமை மீளாய்வு செய்யப்படும்.இந்த மீளாய்வு முக்கியமாக மூன்று ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும்:
1. மீளாய்வு செய்யப்படும் நாடு சமர்ப்பிக்கும் இருபது பக்க அறிக்கை.
2. ஐநா மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை
3. மீளாய்வு செய்யப்படும் நாட்டின் குடிசார் அமைப்புக்கள், அரச சார்பற்ற
தொண்டு நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளைச் சுருக்கி ஐநா
மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை.
ஐநாவின் பட்டயம் (the Charter of the UN), மனித உரிமைகளுக்கான அகிலப் பிரகடனம், மனித உரிமை ஒப்பந்த ஆவணம் human rights instruments ஆகியவற்றின்படி மீளாய்வு செய்யப்படும். இப்போதைய கூட்டத் தொடரில் செக் குடியரசு, ஆர்ஜெண்டீனா, கபன், பெரு, குவாட்டமாலா, பெரு, கொரியக் குடியரசு, சுவிட்சலாந்து, பாக்கிஸ்த்தான், ஜாம்பியா, ஜப்பான், உக்ரேய்ன், இலங்கை ஆகிய 14 நாடுகள் மீளாய்வு செய்யப்படவிருக்கின்றன.
மீளாய்வின் நோக்கங்கள்
மனித உரிமைகள் தொடர்பான அகில காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review)உறுப்பு நாடுகளின் மனித உரிமையை மேம்படுத்தவும் உறுப்பு நாடுகள் மனித உரிமை தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர் கொள்ளும் சவாலகளை அறிந்து கொள்ளவும் அதற்கான உதவிகளைச் செய்யவும், நாடுகள் தமக்கிடை மனித உரிமை தொடர்பான செயற்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளவும் நாடுகளிடையும் கழகத்துடனும் மனித உரிமை தொடர்பான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் செய்யப்படுகிறது.
மீளாய்வு செய்யப்படும் விவகாரங்கள்:
Accountability and impunity - பொறுப்புக் கூறலும் குற்றத்தில் இருந்து தப்புதலும்
Asylum seekers, refugees and internally displaced persons புகலிடம் கோருவோர், அகதிகள், உள்ளக இடப்பெயர்வுக்குள்ளானோர்.
Counter-terrorism measures - பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள்
Death penalty - இறப்புத் தண்டனை
Detention, including arbitrary detention and prison conditions - தடுத்து வைத்தல்(காரணமின்றித் தடுத்து வைத்தல் உட்பட) சிறைச்சால நிலைமை.
Development - அபிவிருத்தி
Due process protections -உரிய பாதுகாப்பு செயல்முறை
Education - கல்வி
Elections - தேர்தல்
Employment - வேலைவாய்ப்பு
Enforced disappearances - கட்டாய காணமற் போதல்
Environment - சுற்றாடல்
Extrajudicial executions - நீதிக்குப் புறம்பான கொலைகள்
Freedom of association - ஒன்று கூடும்(கூட்டம் நடாத்தும்) உரிமை
Freedom of opinion and expression, including media freedom - கருத்து, பேச்சு, ஊடக சுதந்திரம்,
Freedom of movement - பிரயாணம் செய்யும் சுதந்திரம்
Freedom of religion and belief - மத நம்பிக்கைச் சுதந்திரம்
Gender equality - ஆண் பெண் சமத்துவம்
Health - ஆரோக்கியம்
Housing - வீடமைப்பு
Human rights defenders - மனித உரிமைப் பாதுகாவலர்கள்.
Human rights education and training - மனித உரிமைக் கல்வியும் பயிற்ச்சியும்.
Human trafficking - மனிதக் கடத்தல்
Indigenous peoples - உள்நாட்டு மக்கள்
International humanitarian law, including the protection of civilians in armed conflict - பன்னாட்டு மனிதாபிமானச் சட்டம், படைக்கல முரண்பாட்டின் போது பொது மக்கள் பாதுகாப்பு
Judiciaries and justice systems - நீதி நிர்வாக முறைமை
Migrant workers - வெளிநாட்டு ஊழியர்கள்
Minorities - சிறுபான்மையினர்
National human rights mechanisms, including the establishment of NHRIs மனித உரிமைகளுக்கான கட்டமைப்பு
Non-discrimination, including on the bases of ethnicity, race, sex, and sexual orientation and gender identity - இன பால், சாதி வேறுபாட்டின்படி பாகு பாடு காட்டுதல்
Persons with disabilities - மற்றுத் திறனாளிகள்
Police and military - காவற்துறையும் படையினரும்
Ratification of/accession to international human rights instruments - பன்னாட்டு மனித உரிமை ஆவணங்களை ஏற்றுக்கொள்ளலும் சம்மதித்தலும்
Torture and other cruel, inhuman and degrading treatment or punishment - வதையும் கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் நடாத்துதல்
Violence against women. - பெண்களுக்கு எதிரான வன்முறை.
இவை தொடர்பாக ஒவ்வொரு நாடும் என்ன செய்தது என்பது பற்றி மீளாய்வு செய்யப்படும்.
மூவர் குழு Troika
ஒவ்வொரு நாட்டினதும் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு தொடர்பாக உதவுவதற்கு என மூன்று நாடுகள் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுகிறது. இக்குழு இரசிய மொழியில் Troika என அழைக்கப்படும். மற்ற நாடுகள் மூவர் குழு மூலமாக தமது கேள்விகளையும் சந்தேகங்களையும் தெரிவிக்கலாம்.
விளைவு அறிக்கை
மூவர் குழு 1. மீளாய்வு செய்யப்படும் நாடு சமர்ப்பிக்கும் இருபது பக்க அறிக்கை. 2. ஐநா மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை. 3. மீளாய்வு செய்யப்படும் நாட்டின் குடிசார் அமைப்புக்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளைச் சுருக்கி ஐநா
மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து மீளாய்வு செய்யப்படும் நாட்டுடன் இணைந்து விளைவு அறிக்கையைதாயாருக்கும். இவ் விளைவு அறிக்கை 47 நாடுகளைக்கொண்ட மனித உரிமைகள் கழகத்தின் செயற்குழுவால் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். விவாதத்தின் போது மீளாய்வு செய்யப்படும் நாட்டின் கருத்துக்கள் அறிக்கை தொடர்பான ஆட்சேபங்கள் கேட்டறியப்படும்.
மனித உரிமைகளை மீறும் நாடு தண்டிக்கப்படுமா?
ஒரு நாட்டுக்கு எதிராக மோசமான அறிக்கை சமர்பிக்கப்பட்டால் அது தண்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு மனித உரிமைக் கழகம் பதில் கூறவில்லை. தொடர்ந்து மீறல்கள் செய்யும் நாட்டிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையிட்டு 47 நாடுகளைக் கொண்ட செயற்குழு முடிவு செய்யும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.
இலங்கையும் அகில காலாந்தர மீளாய்வும் (Universal Periodic Review)
இலங்கை 2008 ஆண்டு மீளாய்வு செய்யப்பட்ட போது Adopt measures to strengthen the rule of law, prevent human rights violations, including enforced disappearances, extrajudicial executions and torture, ensure punishment of those responsible, and include, inter alia, systematic review of all detention areas. establish an independent complaint mechanism in prisons, and prompt, impartial investigation into allegations of torture as well as protection for witnesses and others alleging torture or ill-treatment against reprisals, intimidation and threats என்ற பரிந்துரை இலங்கைக்குச் செய்யப்படது. இது நிறைவேற்றப்பட்டதா? இலங்கை தொடர்பான தற்போதைய மீளாய்வு 10-09-2012இல் தொடங்கிய கூட்டத்தொடரில் நவம்பர் முதலாம் திகதி ஆய்வு செய்யப்படவிருக்கிறது. இலங்கை தனது அறிக்கையைச் சமர்ப்பித்து விட்டது. இதன் உண்மைத் தன்மையை யார் உறுதி செய்யப்போகிறார்கள். மனித உரிமைக் கழகத்தின் செய்முறையில் உண்மையை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா? மீளாய்வு செய்யும் மூன்று நாடுகள் கொண்ட குழுவில் இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகள் இடம்பெருகின்றன. இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுத்தால்இலங்கை சீனாபக்கம் சாய்ந்து விடும் என்று பயந்து நடுங்கும் அல்லது அப்படி பொய் சொல்லி இலங்கையில் தமிழர்களைக் கொன்றொழிக்க உதவி செய்த இந்தியா எப்படிப்பட்ட அறிக்கையைத் தயாரிக்கும்? விளைவு அறிக்கை தயாரிக்கும் போது இந்த மூன்று நாடுகளுடன் இலங்கையும் இணைந்து கொள்ளும் போது இந்தியாவும் இலங்கையும் இணைந்து மற்ற இருநாடுகளையும் தமது பக்கத் திருப்பலாம். மனித உரிமைக் கழக ஆணையாளரின் பணிமனையும் பன்னாட்டு மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு போன்றவற்றின் நிலப்பாடு எப்படி இறுதி விளைவு அறிக்கையில் இடம்பெறும்?
இறுதியில் நாம் உணரப் போவது:
UPR - Useless politicians' Review

Tuesday, 11 September 2012
ஐ-போனில் அதிரடி மாற்றம் செய்யவிருக்கிறது ஆப்பிள்
சம்சங் தனது கலக்சியால் கைப்பேசிச் சந்தையைக் கலக்கடித்து உலகில் அதிக கைப்பேசிகளை விற்றுக் கொண்டிருந்த நொக்கியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. ஆப்பிள் நிறுவனம் தனது கைப்பேசியின் பகுதிகளை உற்பத்தி செய்யும் பணிகளை சம்சங் நிறுவனதிற்கு ஒப்படைக்க, சம்சங் ஆப்பிளின் தொழில்நுட்பத்தைச் சுட்டெடுக்க, நீதிமன்றம் வரை பிரச்சனை சென்றது.
சம்சங் கலக்சி எஸ் 3 தனது திரையைப் 4.8 அங்குலத்திற்குப் பெரிதாக்கி ஆப்பிளுக்கு ஒரு சவாலை விட்டது. கைப்பேசிகள் வெறும் கைப்பேசிகளாக மட்டும் இல்லாமல் இணையத் தளங்களைப் பார்வையிடவும் காணொளிப்பதிவு செய்து பார்த்து மகிழவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 4.8" திரையைக் கொண்ட சம்சங் கலக்சி எஸ் 3 பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அப்பிளின் புதிய ஐ-போன் - 5 நான்கு அங்குலத் திரையைக் கொண்டதாக வெளிவரவிருக்கிறது. தற்போதைய ஐ-போன்களின் திரை 3.5அங்குலங்கள் மட்டுமே. புதிய ஐ-போன் - 5 செப்டம்பர் 12-ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டு 21-ம் திகதி விற்பனைக்கு வரவிருக்கிறது. பலரினதும் பெரு வரவேற்பைப் பெற்ற ஐ-பாட் மூன்றில் உள்ள ரெட்டீனா புதிய ஐ-போன் 5 இல் இருக்கும்.
இசைப் பிரியரகளுக்கு ஒரு பெரும் திருப்தியை ஐ-போன் 5இல் இருக்கும் Streaming media தொழில்நுட்பம் கொடுக்கும்.
வங்கி அட்டை மூலமான பணம் செலுத்துவதற்குப் பதிலாக அப்பிளின் புதிய ஐ-போன் - 5இன் மூலம் பாவனையாளர் பணங்களை செலுத்தும் முகமாக NFC chip புதிய ஐபோனில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அத்துடன் PassBook என்னும் செயலி மூலமாக கடைகளில் வழங்கப்படும் கூப்பன்களை ஐ-போனில் பதிவேற்றிக் கொள்ளலாம். அத்துடன் விமானப் பயணச்சீட்டுக்களையும் airport boarding passesகளையும் ஐ-போனில் பதிவேற்றலாம். இதற்குப் பல விமானச் சேவை நிறுவனங்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றன.
புதிய ஐ-போன் - 5 இல் 4G LTE தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கும். இது தொலைபேசித் தொடர்புகளை மிக விரைவாக்கும். அத்துடன் பதிவிறக்கங்களையும் விரைவாக்கும். LTEயின் குறைபாடான அதிக மின்சாரப் பாவனையும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஐ-போன் 5 இல் CPU மேலும் விரைவானதாகவும் குறைந்த அளவு மின்சாரம் பாவிப்பதாகவும் இருக்கும். LTE, short for Long Term Evolution, is considered by many to be the obvious successor to the current generation of UMTS 3G technology, which is based upon WCDMA, HSDPA, HSUPA, and HSPA. LTE is not a replacement for UMTS in the way that UMTS was a replacement for GSM, but rather an update to the UMTS technology that will enable it to provide significantly faster data rates for both uploading and downloading. Verizon Wireless was the first U.S. carrier to widely deploy LTE, though MetroPCS and AT&T have also done so, and Sprint and T-Mobile USA both have plans for LTE. In fact, Sprint is phasing out its WiMAX network in favor of LTE. Verizon Wireless and AT&T currently have incompatible LTE networks, even though they both make use of 700MHz spectrum. AT&T and Verizon Wireless LTE customers often see download speeds that exceed 15Mbps, and upload speeds in the 10Mbps range. -From Mobileburn
ஆப்பிளிற் சவால்விடும் HTC உம் சம்சங்கும்
ஆப்பிள் LTE தொழில்நுட்பத்தை தமது கருவிகளில் இணைத்து தமது காப்புரிமையை மீறியதாக HTC உம் சம்சங்கும் ஆப்பிள் மீது வழக்குத் தொடுத்துள்ளன. இது ஐ-போன் 5 இன் வெளியீட்டைப் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது. HTC பிரித்தானியாவில் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளது.
புதிய ஐ-போன் 5 இன் dock connectors சிறியதாக்கப்படவிருக்கிறது. அத்துடன் headphone jack போனின் மேல் பாகத்தில் இருந்து அடிப்பாகத்திற்கு மாற்றப்படவிருக்கிறது.
கடவுச் சொல்லாக பெருவிரல் அடையாளம்
சென்ற ஆண்டு 'flash memory' தொழில் நுட்ப நிறுவனத்தை வாங்கிய அப்பிள் ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு பெருவிரல் அடையாளத்தை பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் பாவிக்கும் AuthentTec நிறுவனத்தை முன்னுற்று அறுபத்தைந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வங்க இருக்கிறது. இனிமேல் ஐ-போன்களைத் தொடக்குவதற்கு கடவுச் சொற்களுக்குப் பதிலாக் உங்கல் பெருவிரலை ஐ-போனில் பதிய வேண்டும். இது அதிக பாதுகாப்பை ஐ-போன்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ-போன் 5இல் இந்தத் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்குமா என்பது சந்தேகம். சிலர் பெருவிரலடையாளம் ஐ-போன் 5 இல் நிச்சயம் இருக்கும் என்கின்றனர். ஆனால் பெருவிரலடையாளத் தொழில் நுட்பம் நிச்சயம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் வெளிவர இருக்கும் ஐ-பாட் 4 இல் நிச்சயம் இருக்கும்.
Monday, 10 September 2012
சாஞ்சியில் ஆசை தீர்க்கும் ராஜபக்ச
ஐம்பது பழம்பெரும் பௌத்த தூபிகளைக் கொண்டது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் சாஞ்சி மலை. இந்தியாவிலேயே அதிகம் பேணப்படும் பௌத்த நிலையம் இதுவாகும். கிருத்துவுக்கு முன்னர் மூன்னூறு ஆண்டிலிருந்து கிருத்துவிற்குப்பின்னர் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை கட்டப்படவை இந்தத் தூபிகள். யுனெஸ்க்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாச்சாரம் மற்றும் விஞ்ஞானத்திற்கான அமைப்பு இதை ஒரு பாதுகாக்கப்படவேண்டிய மத நிலையமாக அறிவித்துள்ளது. சாஞ்சி போபாலுக்கு வடக்கே 68கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது பௌத்தக் கலைகளினதும் கட்டிட நிர்மாணத்தினதும் மேன்மைக்கு ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது. இத்தனை பெருமைகள் சாஞ்சிக்கு இருந்த போதும் கௌதம புத்தரின் வாழ்வின் எந்த ஒரு நிகழ்விற்குமோ அல்லது பௌத்தமத சரித்திர நிகழ்வுகள் எதற்குமோ சாஞ்சியுடன் தொடர்பில்லை. முதலில் அசோகப் பேரரசன் எட்டு தூபிகளை சாஞ்சிமலையின் உச்சியில் நிர்மாணித்தான். அதன் பின்னர் பலர் அங்கு தூபிகளை நிர்மாணித்தனர். கடைசியாக குப்தர்கள் அங்கு தூபிகளை நிர்மாணித்தனர். அசோகன் இந்தியாவையும் ஆப்கானிஸ்த்தானையும் ஒரு குடைக்குக் கீழ் ஆண்டவன்.
அசோகன் சாஞ்சி மலையைத் தேர்ந்தது ஏன்?
பௌத்த மதத்தின் படி பிக்குகள் ஒரு நாளின் அரைப் பகுதியை பிச்சை எடுப்பதிலும் மற்ற அரைப்பகுதியை சமயப் பணிகளிலும் ஈடுபட வேண்டும். சாஞ்சி மலைச் சாரலை அண்டி பெரும் வர்த்தகப் போக்கு வரத்து அமைந்திருந்தபடியால் அங்கு பிச்சை எடுப்பதற்கு இலகு. இதனால் சாஞ்சி மலை பௌத்த மத வளர்ச்சிக்கு உகந்தது என அசோகன் கருதினான். இந்தியாவில் உள்ள மிகப் பழமை வாய்ந்த கற் கட்டிடம் சாஞ்சி மலையில் இருக்கும் அசோகன் நிர்மாணித்த தூபியாகும்.
பிரித்தானிய ஆட்சியின் போது 1912இற்கும் 1919இற்கும் இடையில் சாஞ்சியில் பல புனரமைப்பு வேலைகள் செய்யப்பட்டன.
மஹிந்த சாஞ்சியைத் தெரிந்து எடுத்தது ஏன்?
மஹிந்த ராஜபக்சவின் ஆசைகளில் ஒன்று வெளிநாடுகளில் நிகழும் நிகழ்வுகளில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்பது. அவர் பயணம் செய்யும் நாட்டில் தமிழர்கள் இருந்தால அது பெரும் பிரச்சனையில் முடியும். இதனால் இந்தி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்தியப் பிரதேசம் அவருக்கு பெரும் வாய்ப்பான ஒரு இடம்.சாஞ்சியில் ஒரு பௌத்த கல்வி கலாச்சார கற்கை நிலையத்தை அமைப்பதற்கான கட்டிடத்தின் அடிக்கல்லை செப்டம்பர் 21-ம் திகதி நாட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்பாடு செய்தவர் யார்? இந்த நிகழ்வில் பூட்டான் பிரதமர் லியொன்பி தின்லியும் கலந்து கொள்வார். பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவி சுஸ்மா சுவராஜ் அவர்களின் தொகுதியின் சாஞ்சி இருக்கிறது. சாஞ்சில் அமைக்கப்படவிருக்கும் கற்கை நிலையத்தில் உலகெங்கிலும் இருந்து பௌத்த பிக்குகள் வந்து பயிலுவர். அவர்கள் முதலில் பயிலப்போவது "ஆசையினல் துன்பம் உண்டாகிறது".
மஹிந்த தேர்ந்தெடுத்த நாள்
செப்டம்பர் 21-ம் திகதி கௌதம புத்தர் ஞானம் பெற்று 2600 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது அதை ஒட்டி இந்த பௌத்த கலாச்சார கலை கற்கை நெறி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்படவிருக்கிறது. செப்டம்பர் மூன்றாம் வாரம் இலங்கை அரசைப் பொறுத்த வரை ஒரு முக்கியமான வாரமாகும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழக்த்தின் 21ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வு செய்யப்படவிருக்கிறது. இந்த மீளாய்வுக் குழுவில் இந்தியா, ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இலங்கையில் இருந்து இது தொடர்பான காய் நகர்வுகளை மேற் கொள்வதை விட்டு மஹிந்த இந்தியா சென்றது ஏன்? அங்கு உரியவர்களுக்கு தட்சணை வழங்கி தனக்கு வேண்டியதை ஜெனீவாவில் சாதிக்கவா?
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது.
இந்திய வெளியுறவுத் துறை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளமன்ற உறுப்பினர்களை சுஸ்மா சுவராஜ் தலைமையைல் இலங்கைக்கு அனுப்பியது. பின்னர் புது டில்லியில் இருக்கும் இலங்கைத் தூதுவரகத்தில் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து பௌத்த மதத்தை அசோகன் மகன் மஹிந்தவும் சங்கமிதிரையும் பரப்பியது சம்பந்தமான ஓவியத்தை திறந்து வைத்திருக்கிறார். இவை 2014இல் காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்து பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் இலங்கையின் தமிழின அழிப்புப் பணிகளுக்கு இந்தியாவின் உதவி தொடந்து கிடைக்கும் என்பதை இலங்கைக்கு உறுதி செய்யவே.
எல்லாக் கட்சிகளும் மஹிந்தவைத் தாம் அழைக்கவில்லை என்கின்றன.
மத்தியப் பிரதேச மாநிலத்தை பாரதிய ஜனதாக் கட்சி ஷிவ்ராஜ் சிங் சௌஹானை முதலமைச்சராகக் கொண்டு ஆள்கிறது. மஹிந்த ராஜபக்சவை தனது கட்சி அழைக்கவில்லை என்கிறார் அவருடன் கொழும்பில் இரகசியப் பேச்சு வார்த்தை நடாத்திய சுஷ்மா சுவராஜ் அம்மையார். ஆனால் முதலில் தொலைக்காட்சியில் தோன்றி வாயெல்லாம் பல்லாக மஹிந்த ராஜபக்சவின் வருகையை முதலில் அறிவித்தவர் இந்த சுஸ்மா சுவராஜ்தான். இவர் கொழும்பில் மஹிந்தவுடன் இரகசியப் பேச்சு வார்த்தை செய்யும் போதே சாஞ்சி உடன்பாடு செய்யப்பட்டதா? தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரத ஜனதாக் கட்சித் தலைவர் பொன் இராதா கிருஷ்னன் தமது கட்சிக்கும் மஹிந்தவின் இந்தியாவில் உள்ள சாஞ்சிக்கு மேற்கொள்ளும் பயணத்திற்கும் தொடர்பில்லை என்கிறார். அப்படியாயின் ஆளும் காங்கிரசுக் கட்சி அழைத்ததா? மத்திய ஆளும் காங்கிரசின் அமைச்சர் ஜி கே வாசன் மஹிந்தவைத் தனது அரசு அழைக்கவில்லை மத்தியப் பிரதேச அரசுதான் அழைத்தது என்றார். ஆனால் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் வை. கோபாலசுவாமியைத் தொடர்பு கொண்டு தாம் மஹிந்தவை அழைக்கவில்லை என்றார். ஆனால் வைக்கோ மஹிந்தவிற்கு விட்ட அழைப்பு பிரச்சனைக்கு விடப்பட்ட அழைப்பு என்றதுடன் தான் தொண்டர்களை ஆயிரக்கணக்கில் திரட்டிக்கொண்டு மதியப் பிரதேசம் சென்று ஆர்ப்பாட்டம் செய்வேன் என்கிறார். கலைஞர் கருணாநிதி முதலில் மஹிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை எதிர்த்தார். பின்னர் வழமை போல் ஒரு குத்துக் கரணம் அடித்து தான் எதிர்க்கவில்லை என்றார். இவர்கள் எல்லோரும் இப்படி யார் அழைத்தது என்று மோதிக் கொண்டிருக்க புது டில்லியில் தென் மண்டலத்தில் ஒரு சிலர் தம் பூனூல்களைத் தடவியபடியே தமது தட்சணைகளை கணக்கிட்டுப் புன்னைகைக்கின்றனர்.
அசோகன் சாஞ்சி மலையைத் தேர்ந்தது ஏன்?
பௌத்த மதத்தின் படி பிக்குகள் ஒரு நாளின் அரைப் பகுதியை பிச்சை எடுப்பதிலும் மற்ற அரைப்பகுதியை சமயப் பணிகளிலும் ஈடுபட வேண்டும். சாஞ்சி மலைச் சாரலை அண்டி பெரும் வர்த்தகப் போக்கு வரத்து அமைந்திருந்தபடியால் அங்கு பிச்சை எடுப்பதற்கு இலகு. இதனால் சாஞ்சி மலை பௌத்த மத வளர்ச்சிக்கு உகந்தது என அசோகன் கருதினான். இந்தியாவில் உள்ள மிகப் பழமை வாய்ந்த கற் கட்டிடம் சாஞ்சி மலையில் இருக்கும் அசோகன் நிர்மாணித்த தூபியாகும்.
இந்தியாவின் மிகப்பழைய கற் கட்டிடம் |
மஹிந்த சாஞ்சியைத் தெரிந்து எடுத்தது ஏன்?
மஹிந்த ராஜபக்சவின் ஆசைகளில் ஒன்று வெளிநாடுகளில் நிகழும் நிகழ்வுகளில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்பது. அவர் பயணம் செய்யும் நாட்டில் தமிழர்கள் இருந்தால அது பெரும் பிரச்சனையில் முடியும். இதனால் இந்தி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்தியப் பிரதேசம் அவருக்கு பெரும் வாய்ப்பான ஒரு இடம்.சாஞ்சியில் ஒரு பௌத்த கல்வி கலாச்சார கற்கை நிலையத்தை அமைப்பதற்கான கட்டிடத்தின் அடிக்கல்லை செப்டம்பர் 21-ம் திகதி நாட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்பாடு செய்தவர் யார்? இந்த நிகழ்வில் பூட்டான் பிரதமர் லியொன்பி தின்லியும் கலந்து கொள்வார். பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவி சுஸ்மா சுவராஜ் அவர்களின் தொகுதியின் சாஞ்சி இருக்கிறது. சாஞ்சில் அமைக்கப்படவிருக்கும் கற்கை நிலையத்தில் உலகெங்கிலும் இருந்து பௌத்த பிக்குகள் வந்து பயிலுவர். அவர்கள் முதலில் பயிலப்போவது "ஆசையினல் துன்பம் உண்டாகிறது".
மஹிந்த தேர்ந்தெடுத்த நாள்
செப்டம்பர் 21-ம் திகதி கௌதம புத்தர் ஞானம் பெற்று 2600 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது அதை ஒட்டி இந்த பௌத்த கலாச்சார கலை கற்கை நெறி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்படவிருக்கிறது. செப்டம்பர் மூன்றாம் வாரம் இலங்கை அரசைப் பொறுத்த வரை ஒரு முக்கியமான வாரமாகும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழக்த்தின் 21ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வு செய்யப்படவிருக்கிறது. இந்த மீளாய்வுக் குழுவில் இந்தியா, ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இலங்கையில் இருந்து இது தொடர்பான காய் நகர்வுகளை மேற் கொள்வதை விட்டு மஹிந்த இந்தியா சென்றது ஏன்? அங்கு உரியவர்களுக்கு தட்சணை வழங்கி தனக்கு வேண்டியதை ஜெனீவாவில் சாதிக்கவா?
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது.
இந்திய வெளியுறவுத் துறை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளமன்ற உறுப்பினர்களை சுஸ்மா சுவராஜ் தலைமையைல் இலங்கைக்கு அனுப்பியது. பின்னர் புது டில்லியில் இருக்கும் இலங்கைத் தூதுவரகத்தில் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து பௌத்த மதத்தை அசோகன் மகன் மஹிந்தவும் சங்கமிதிரையும் பரப்பியது சம்பந்தமான ஓவியத்தை திறந்து வைத்திருக்கிறார். இவை 2014இல் காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்து பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் இலங்கையின் தமிழின அழிப்புப் பணிகளுக்கு இந்தியாவின் உதவி தொடந்து கிடைக்கும் என்பதை இலங்கைக்கு உறுதி செய்யவே.
எல்லாக் கட்சிகளும் மஹிந்தவைத் தாம் அழைக்கவில்லை என்கின்றன.
மத்தியப் பிரதேச மாநிலத்தை பாரதிய ஜனதாக் கட்சி ஷிவ்ராஜ் சிங் சௌஹானை முதலமைச்சராகக் கொண்டு ஆள்கிறது. மஹிந்த ராஜபக்சவை தனது கட்சி அழைக்கவில்லை என்கிறார் அவருடன் கொழும்பில் இரகசியப் பேச்சு வார்த்தை நடாத்திய சுஷ்மா சுவராஜ் அம்மையார். ஆனால் முதலில் தொலைக்காட்சியில் தோன்றி வாயெல்லாம் பல்லாக மஹிந்த ராஜபக்சவின் வருகையை முதலில் அறிவித்தவர் இந்த சுஸ்மா சுவராஜ்தான். இவர் கொழும்பில் மஹிந்தவுடன் இரகசியப் பேச்சு வார்த்தை செய்யும் போதே சாஞ்சி உடன்பாடு செய்யப்பட்டதா? தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரத ஜனதாக் கட்சித் தலைவர் பொன் இராதா கிருஷ்னன் தமது கட்சிக்கும் மஹிந்தவின் இந்தியாவில் உள்ள சாஞ்சிக்கு மேற்கொள்ளும் பயணத்திற்கும் தொடர்பில்லை என்கிறார். அப்படியாயின் ஆளும் காங்கிரசுக் கட்சி அழைத்ததா? மத்திய ஆளும் காங்கிரசின் அமைச்சர் ஜி கே வாசன் மஹிந்தவைத் தனது அரசு அழைக்கவில்லை மத்தியப் பிரதேச அரசுதான் அழைத்தது என்றார். ஆனால் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் வை. கோபாலசுவாமியைத் தொடர்பு கொண்டு தாம் மஹிந்தவை அழைக்கவில்லை என்றார். ஆனால் வைக்கோ மஹிந்தவிற்கு விட்ட அழைப்பு பிரச்சனைக்கு விடப்பட்ட அழைப்பு என்றதுடன் தான் தொண்டர்களை ஆயிரக்கணக்கில் திரட்டிக்கொண்டு மதியப் பிரதேசம் சென்று ஆர்ப்பாட்டம் செய்வேன் என்கிறார். கலைஞர் கருணாநிதி முதலில் மஹிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை எதிர்த்தார். பின்னர் வழமை போல் ஒரு குத்துக் கரணம் அடித்து தான் எதிர்க்கவில்லை என்றார். இவர்கள் எல்லோரும் இப்படி யார் அழைத்தது என்று மோதிக் கொண்டிருக்க புது டில்லியில் தென் மண்டலத்தில் ஒரு சிலர் தம் பூனூல்களைத் தடவியபடியே தமது தட்சணைகளை கணக்கிட்டுப் புன்னைகைக்கின்றனர்.
Sunday, 9 September 2012
வெற்றீகரமான தொழில்முனைவோருக்கு (Entrepreneurs) தேவையான பண்புகள்
வெற்றீகரமான தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) இருக்க வேண்டிய பண்புகள் பற்றி Gallup ஒரு ஆய்வை நிகழ்த்தி அதன் முடிவுகளை வெயிட்டுள்ளது. சிறந்த தொழில்முனைவோருக்கான பண்புகள் உலகிலேயே மிகத் தட்டுப்பாடனதும், கிடைத்தற்கரியதும்,கடின சக்தி தேவையானதும் ஆகும் என்கிறார் Gallupஇன் பிரதம நிர்வாகி ஜிம் கிலிஃப்ரன். சிறந்த தொழில்முனைவோராக வரவேண்டியவர்களுக்கு தேவையானதாகச் சொல்லப்படும் பத்துப் பண்புகள்:
- உங்கள் சொந்த இலச்சினையை அறிந்து கொள்ளுதல்: வெற்றீகரமான தொழில்முனைவோர் தங்கள் திறனையும் நன்கு அறிந்து கொண்டு அடுத்தவர் திறனையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இத்திறமை வெற்றீகரமான தொழில்முனைவோர் தங்களின் வேலையாட்கள், முதலீட்டாளரகள், வாடிக்கையாளர்கள், வழங்குனர்கள் போன்றோருடன் சிறந்த முறையில் செயற்பட உதவும்.
- சவால்களை ஏற்றுக் கொள்ளுதல்: தொழில்முனைவோர் பல புதிய சவால்களை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும். நிச்சயமற்ற நிலைமை, தட்டுப்பாடான வளங்கள் போன்ற பிரச்சனைகள் மத்தியில் போதிய தகவல்கள் மத்தியில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய திறமைக்கு சவால்களை எதிர்கொள்ளும் பண்பு அவசியம்.
- சாத்தியமானவற்றினூடும் செய்முறைகளினூடும் சிந்தித்தல்: தொழில்முனைவோர் தங்கள் கூட்டுக்கு வெளியே சாத்தியமானவற்றையும் செய்முறைகளீனூடும் சிந்த்தித்து செயற்படவேண்டும். புதிய பொருட்களை அறிமுகப்படுத்த இந்தப்பண்பு உதவும்.
- நிறுவனத்தை மேம்படுத்தல்: (Promote the business) நிறுவனத்தை மேம்படுத்த சிறந்த தொழில்முனைவோர் தாமே தங்களின் பேச்சாளராக இருக்கக்கூடிய அளவிற்கு தொடர்பாடல் திறன் மிக்கவக்ராக இருக்க வேண்டும். நிறுவனத்தின் சகல நிலைகளிலும் அதன் மேம்படுத்தலுக்கு இது அவசியம். நிறுவனம் தொடர்ந்து சகல நிலைகளிலும் துறைகளிலும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
- நிறுவனத்தின் விளைவுகளில் கவனம் செலுத்துதல்: ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் செயல்களின் விளைவுகளிலேயே தங்கியுள்ளது. ஒவ்வொரு செயற்பாடுகளின் விளைவுகளிலும் நிறிவனத்தின் மொத்த விளைவுகளிலும் தொழில்முனைவோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- எப்போதும் நிறுவனத்தின் மாணவனாக இருத்தல்: சிறந்த தொழில்முனைவோர் தொடர்ந்து தமது அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
- தம்மில் தங்கியிருத்தல்(Be self-reliant): சிறந்த தொழில்முனைவோர் தனது பொறுப்பை சரியாக உணர்ந்து எந்தப் பணிகளை மற்றவர்களிடம் சமர்ப்பிபது தனது பணிகள் எவை என்பதை உணர்ந்து தன் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும்.
- தானே தொடக்குபவராக இருத்தல்( Be a self-starter): சிறந்த தொழில்முனைவோர் சம்பவங்களை தானே நிகழச் செய்பவராக இருக்க வேண்டும். புதிய திட்டங்கள் பணிகள் ஆரம்பிக்க நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படும். இதற்கு மற்றவர் ஊக்கமின்றி தான் செயற்பட்டு மற்றவர்களுக்கு தான் ஊக்கம் கொடுப்பவராக தொழில்முனைவோர் இருக்க வேண்டும்.
- ஒப்படைப்பு மூலம் தம்மைப் பலராக்குதல் (Multiply yourself through delegation) ஆரம்பத்தில்தன் தலையில் பல பணிகளையும் பொறுப்புக்களையும் தாங்கி நிற்கும் தொழில் முனைவோர் நிறுவனம் வளர்ச்சியடையும் போது தனது பொறுப்புக்களை அதிகாரங்களையும் மற்றவர்களிடம் ஒப்படைக்கத் தயங்கக் கூடாது. இதன் மூலம் தன்னைப் போல் பலரை நிறுவனத்தில் உருவாக்க வேண்டும்.
- உறவுகளை கட்டியெழுப்புதல்: நிறுவனத்தின் பல நிலைகளிலும் நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனங்களுடனும் சிறந்த உறவுகளையும் தொடர்புகளையும் தொழில்முனைவோர் கட்டி எழுப்ப வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...