Saturday, 6 November 2010

ஹைக்கூ: வெள்ளாடை பூண்ட நிலமகள்


வெற்றிக்கு வழி நம்பிக்கை
நம்பிக்கைக்கு வழி
தகுந்த தயார்ப்படுத்தல்

தேடல் நாடல் தடவல்
ஊடல் விலகல்
கடலும் அலையும்

தண்டுகளோடு
இலைகளின் ஊடல்
இலை உதிர்காலம்

கணவன் கதிரவன் மறைவால்
வெள்ளாடை பூண்ட நிலமகள்
வெண்பனி

மரத்தின் ஆடைகளைய
காற்றுக்கு காமம்
உதிர்ந்த இலைகள்

Friday, 5 November 2010

அழ வைத்த பெண்கள்


நட்புக்கழகு
ஆமா போடுவான்
சாதாரண நண்பன்
விவாதித்து முடிவு
செய்ய வைப்பான்
உன்னத நண்பன்

அழ வைத்த பெண்கள்
அழ வைத்து
என்னை இங்கு கொண்டு வந்தாள் ஒருத்தி
அழவைத்து
என்னை இங்கிருந்து அனுப்புகிறாள் இன்னொருத்தி
இதயம் கொடுத்தாள் ஒருத்தி
இதயம் பறித்தால் இன்னொருத்தி


சுகமான சுமை
பேனாக்கள் திருடுவாள்
பணம் பறிப்பாள்
குறும்புகள் பல செய்வாள்
என் ஆடைகளை கிண்டல் செய்வாள்
தொல்லைகள் பல தருவாள்
தோளிலும் சாய்வாள்
அங்கு கொண்டு போ என்பாள்
இங்கு என்னோடு இரு என்பாள்
Remote contol பறிப்பாள்
ஆனாலும் அவள்
சுகமான சுமை
என் தங்கை

தலை சுற்ற வைக்கும் ஆங்கில வசனங்கள்.


ஆங்கிலத்தை என்ன விதமாகச் சுற்றிச் சுழற்றி எழுதலாம். டி. விஜய ராஜேந்தருக்கு இவை ரெம்பப் பிடிக்குமோ!!!!he bandage was wound around the wound.

The farm was used to produce produce.

The dump was so full that it had to refuse more refuse

We must polish the Polish furniture.

He could lead if he would get the lead out.

The soldier decided to desert his dessert in the desert.

How can I intimate this to my most intimate friend?

Since there is no time like the present, he thought it was time to present the present.

A bass was painted on the head of the bass drum.

When shot at, the dove dove into the bushes.

I did not object to the object.

The insurance was invalid for the invalid.

There was a row among the oarsmen about how to row.

They were too close to the door to close it.

The buck does funny things when the does are present.

A seamstress and a sewer fell down into a sewer line.

To help with planting, the farmer taught his sow to sow.

The wind was too strong to wind the sail.

After a number of injections my jaw got number.

Upon seeing the tear in the painting I shed a tear.

I had to subject the subject to a series of tests.

Thursday, 4 November 2010

ராஜபக்சே இலண்டனில் கைது செய்யப்படலாம் - Times of India


இலண்டனில் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் மஹிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என Times of India செய்தி வெளியிட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேசுவதற்கு மஹினத ராஜபக்ச பிரித்தானியா வரவிருந்தார்.

  • In an embarrassing turn of events, Sri Lankan president Mahindha Rajapakse has been forced to cancel his proposed visit to Britain following fears that he might be arrested for alleged war crimes under British law. Rajapakse's provisional engagements included an address to the Oxford Union, and it's learnt that certain Sri Lankan Tamil organisations were planning to move court for his arrest.
இதுபற்றி பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சுடன் தொடர்பு கொண்டபோது ராஜபக்கசவின் பயணத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

1998இல் சிலியின் சர்வாதிகாரி ஸ்பானிய சிலியில் வாழும் ஸ்பானிய மக்களுக்கு எதிராக போர்குற்றம் புரிந்தமைக்காக அவரை ஸ்கொட்லண்ட்யாட் கைது செய்தது.

அண்மையில் பிரித்தானிய வரமுயன்ற இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அங்கு கைது செய்யப்படலாம் என்றபயத்தில் ஹீத்துரு விமான நிலையம் வரை வந்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.

Wednesday, 3 November 2010

அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி சலுகையையும் இலங்கை இழக்கும் அபாயம்.


அமெரிக்க தொழில் அமைப்பு(American labour organization) அமெரிக்க மூதவைக்கு இலங்கையில் தொழிலாளர்கள் உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அம் மனு ஏற்றுக் கொள்ளப் படுமானால் இலங்கைக்கான அமெரிக்க வரிச் சலுகை இரத்துச் செய்யப்படலாம் என்று நம்பப்பட்டது.

இலங்கை ஏற்கனவே பன்னாட்டு உடன் படிக்கைகளுக்கு ஏற்ப நடக்காத படியால் ஐரோப்பிய ஒன்றியம் தனது வர்த்தகச் சலுகையை இரத்துச் செய்தது. பன்னாட்டு உடன் படிக்கைகளில் 27இல் 3 ஐ இலங்கை மீறியதாக ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்து இலங்கைக்கான தனது வர்த்தகச் சலுகையை (GSP+) இரத்துச் செய்தது.

அமெரிக்க தொழில் அமைப்பு(American labour organization) அமெரிக்க மூதவைக்கு இலங்கையில் தொழிலாளர்கள் உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக பல வாதப் பிரதி வாதங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. இலங்கையின் அரசு சார்பு தொழிற் சங்கங்கள் இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் பேணப்படுவதாகவும் அரசு சார்பற்ற தொழிற் சங்கங்கள் இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதாகவும் மனுக்கள் தாக்கல் செய்தன.

இப்போது பேரிடி
The International Trade Union Confederation இப்போது ஒரு இலங்கையின் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. International Labour Organization இன் முக்கிய எட்டு உடன்படிக்கைகளில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள போதிலும் அது இலங்கையில் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை என்று The International Trade Union Confederation தனது ஒன்பது பக்க அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த அறிக்கை அமெரிக்க வர்த்தகச் சலுகை நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

இலங்கையில் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமைகள் இருகின்ற போதிலும் பல ஏற்றுமதி சார் தொழில்துறைகளில் தொழிற் சங்கங்கள் அமைக்க அனுமதிக்காமல் வெறும் தொழிலாளர்கள் சபைகள் மட்டும் அமைக்க அனுமதிக்கப் படுகிறது.

இலங்கயில் 27 வருடங்களாக செயற்பட்டு வந்த ஒரு நிறுவனம் அண்மையில் மூடப்பட்ட போது அதன் 2500 ஊழியர்களுக்கு எந்தவிதமான நட்ட ஈடுகளும் வழங்கப் படவில்லை என்பதை The International Trade Union Confederation தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வேலை நிறுத்த உரிமைகள் இருந்த போது இலங்கைக் குடியரசுத் தலைவர் ஒரு வர்த்தமானி அறிக்கை மூலம் குறிப்பிட்ட தொழிலை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்து எந்த வேலை நிறுத்தத்தையும் சட்ட விரோதமானதாக்க முடியும். இலங்கையில் அப்படி பிரகடனம் செய்யப்பட்ட பல தொழில்கள் International Labour Organization இன் வரைவிலக்கணப்படி அத்தியாவசிய சேவையாக கருதப்பட முடியாது என்றும் The International Trade Union Confederation தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரச சேவையில் ஆண் பெண் பாகுபாடு காட்ட முடியாத படி சட்டங்கள் இருந்த போதிலும் தனியார் சேவைகளில் அதற்குரிய சட்டங்கள் இல்லை.

இலங்கைக்கான அமெரிக்க வர்த்தகச் சலுகைக்கு The International Trade Union Confederationயின் அறிக்கை பேரிடியாக அமையும்.

Tuesday, 2 November 2010

திருமணமாகும் பெண்கள் ஆண்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை.



பெண்கள் என்ன உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆண்கள் என்ன எதிர்பார்கிறார்கள்:

  • Shopping என்பது பொழுது போக்கல்ல.
  • அழுகை என்பது blackmail இற்கான வழி அல்ல.
  • உங்கள் பிறந்த தினத்தையோ அல்லது திருமண தினத்தையோ ஆண்கள் மறப்பது சாதாரணம்.
  • காலணிகள் காலைப் பாதுகாக்க மட்டுமே. அணிகலன்கள் அல்ல.
  • ஏதாவது வேண்டுமானால் நேரடியாகக் கேட்கவேண்டும்.
  • கட்டிலில் உங்கள் தேவைகளைச் சொல்லி ஆரம்பிக்கவும் கூடாது முடிக்கவும் கூடாது.
  • உங்களைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க முடியாது.
  • "நான் அழகாய் இருக்கிறேனா" என்று அடிக்கடி கேட்கக்கூடாது.
  • செய்திகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது தேவையற்றவை பற்றிப் பேசக் கூடாது.
  • என்ன பிரச்சனை என்று நாம் கேட்கும் போது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னால் நாம் ஒன்றுமில்லை என்றே எடுத்துக் கொள்வோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
  • உங்களிடம் இருக்கும் ஆடைகள் போதுமானவை.
  • நீங்கள் என்ன உடுக்கிறீர்கள் என்பதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.
  • நாம் மற்றப் பெண்களைப் நாம் அவ்வப்போது sight அடிப்போம், நீங்கள் எவ்வளவு அழகு என்பதை அறிந்து கொள்ள.
  • உங்கள் உறவுக்காரர்களைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டோம்.
  • எங்கள் உறவுக்காரர்களை நீங்கள் திட்டுவதை நாம் பொறுக்க மாட்டோம்.
  • அவ்வப்போது நாம் எமது நண்பர்களுடன் பொழுது போக்குவோம்.

ஆண்களைப் பெண்கள் இப்படிக் கலாய்க்கிறார்கள்.



பிரமச்சாரி என்பவர் யார்?
ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாறடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்காதவர்.

ஆண்கள் எப்படி எதிர்காலத்திற்கு திட்டமிடுகிறார்கள்?
வழமையிலும் பார்க்க இரு மடங்கு மது பானம் வாங்குவதன் மூலம்.

50/50 உறவு என்பது ஆண்களைப் பொறுத்தவரை என்ன அர்த்தம்?
நீ சமை நான் சாப்பிடுகிறேன். நான் அழுக்காக்கிறேன் நீ சுத்தப் படுத்து. நான் கசக்கிறேன் நீ அழுத்து(iron).

ஆணைப் படைத்தவுடன் கடவுள் என்ன சொன்னார்?
தவறு விட்டு விட்டேன். ஒரு திருத்திய பதிப்பு வெளிவிட வேண்டும்.

கைவிலங்கிடப்பட்ட ஆணை எப்படி அழைப்பீர்கள்?
நம்பக்கூடியவன்.

அரைவாசியாவது மூளையுள்ளவனை எப்படி அழைப்பீர்கள்?\
கடவுள் அருள் பெற்றவன்

நன்கு உடை உடுத்திய ஒரு ஆணைக் கண்டவுடன் மனதில் என்ன தோன்றும்?
அவள் மனைவி அவனுக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.

ஒரு வேலை ஒரு ஆணைக் கொண்டு செய்விப்பதற்கு சரியான வழி எது?
இதைச் செய்கிற அளவிற்கு நீ இளமையானவன் அல்ல என்று சொல்ல வேண்டும்.


What's a man's definition of a romantic evening?
Sex.

What's a man's idea of honestly in a relationship?
Telling you his real name.

What's the smartest thing a man can say?
"My wife says..."

Man: Is this seat empty?
Woman: Yes, and this one will be if you sit down.

Man: Hey baby, what's your sign?
Woman: Do not enter.


Man: How do you like your eggs in the morning?
Woman: Unfertilized.

Man: If I could see you naked, I'd die happy.
Woman: If I saw you naked, I'd probably die laughing.

ஆண்கள் விளம்பரங்கள் போலே! ஒரு வார்த்தையைக் கூட நம்பகுடியாது.

ஆண்கள் கணினி(computer) போலே! புரிந்து கொள்வது சிரமம். எப்பவும் ஞாபகக் குறைவு.

Men are like Copiers.
Can be used only for reproduction.

ஆண்கள் சோதிடம் போலே! சொல்லுவது ஒருநாளும் நடக்காது


Monday, 1 November 2010

இலங்கையில் சீனாவால் அசௌகரியப்படும் இந்தியா - கொழும்பு ஊடகம்.


கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று இப்படி தனது வராந்தப் பதிப்பில் தெரிவித்துள்ளது:

  • The relationship between China and Sri Lanka is deemed to be one of mutual benefit but there is undeniably a balance-of-power component that Colombo needs to take into account. Even Indian diplomats are now willing to confess — strictly confidentially — that the excessive closeness between Beijing and Colombo is breaching comfort levels in New Delhi.
  • இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு ஒருவர்க் கொருவர் நன்மையளிப்பதாகக் கருதப்பட்டாலும் அங்கு மறுக்கப்படமுடியாத அதிகாரச் சமநிலை பங்கு ஒன்று இருப்பதை கொழும்பு கவனத்தில் கொள்ளவேண்டும். கடுமையான அந்தரங்கமாக இப்போது இந்திய அரச தந்திரிகள் கூட கொழும்பிற்கும் பீஜிங்கிற்கும் இடையிலான மிகையான நெருக்கம் டெல்லியின் சௌகரிய நிலையை தகர்கிறது.
அப்பத்திரிகை மேலும் சொல்கிறது:

  • “We don’t for a minute doubt the sovereign right of the Government of Sri Lanka to engage with foreign partners in any manner it deems fit,” a source from the Indian diplomatic corps told this newspaper. “But we have only pointed out to the Government of Sri Lanka that given the history and closeness of our relationship and the geographical location in which we find ourselves... in taking decisions the Government of Sri Lanka will keep our interests in mind, and will do nothing that compromises the security of India.”
இப்படிச் சொல்கிறது ஒரு கொழும்புப் பத்திரிகை. இதன் பின்னணி என்ன? இலங்கையில் தமிழர்களைக் கொன்றொழிப்பதில் இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு உதவின. பின்னர் இலங்கையை சுரண்டுவதில் சீனாவிற்கு அதிக பங்கு வழங்கப் படுகிறது. இந்தியா தன்னைச் சூழவுள்ள பல நாடுகளில் சீன ஆதிக்கத்தை தடுக்க முடியாமல் தவிக்கிறது. இலங்கையிலும் அத்தகைய நிலை உருவாகிவிட்டது. சோதிடர்கள் சொல்லுவார்கள் சந்திரன் ஒரு சிறிய உப கிரகம் ஆனாலும் அது பூமிக்கு அண்மையில் இருப்பதால் அதன் தாக்கம் பூலோக வாசிகள்மீது அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையின் நிலையும் அதுதான். ஒரு படைத்துறை ஆய்வாளர் கருத்துப் படி இந்தியாவைச் சூழவுள்ள நாடுகள் சீனாவை பிராந்திய வல்லரசாக ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அவை இந்தியாவை தமக்குச் சமமான நாடாகவே பார்க்கின்றன.

இலங்கையில் சீனா முன் வைக்கும் திட்டங்கள் விரைந்து அனுமதிக்கப் படுகின்றன. இந்தியாவின் சம்பூர் திட்டமும் இந்திய இலங்கைக்கிடையிலான் பொருளாதார ஒப்பந்தத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. சீனத் தொழிலாளர்கள் பலர் இலங்கையில் வேலை செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.

2009-ம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு அதிக கடனுதவி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. வீதி அபிவிருத்திக்கு 1.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது. உதவித் தொகையாக 2.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது.

ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை உரையாடும் உறுப்பினராகச் சேர்க்கப் பட்டமை இலங்கையில் சீனாவின் பிடி இறுகுகின்றதென்பதற்கு மேலும் ஒரு அறிகுறியாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு சபை சீனா, கஷகஸ்த்தான், இரசியா, தஜிகிஸ்த்தான் உஷ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பில் இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் பார்வையாளராக கலந்துகொள்ளும் உரித்துடையன. இலங்கைக்கு இந்த அமைப்பில் உரையாடும் உறுப்புரிமை வழங்கப்பட்டமை இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் இழுக்கும் நோக்கம் கொண்டது.
.
இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை சீனா நன்கு உணர்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் சீனா பலமான ஒரு வர்த்தக உறவை 1960களில் இருந்தே ஏற்படுத்தி வருகிறது. ஆபிரிக்காவின் மூலவளமும் மத்திய கிழக்கின் எரிபொருள் வளமும் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின , பங்காற்றி வருகின்றன. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து சமுத்திரத்தின் வழியாக இலங்கையைக் கடந்தே செல்ல வேண்டும். இதனால் இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க சீனா விரும்புகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை இணைந்து கொண்டமை மேற்குலகிற்கு எதிராக இலங்கை எடுத்து வைக்கும் ஒரு அடி அல்ல என்று இலங்கை வெளியுறவுச்செயலர் தெரிவித்திருந்த போதிலும் அதுதான் உண்மை என்றும் கருதப்பட வேண்டியுள்ளது. மேற்குலகு இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுப்பும் போர் குற்றச்சாட்டிலிருந்து தப்ப இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு புகலிடம் தேவை. அது ஐநாவில் இரத்து (வீட்டோ) அதிகாரம் கொண்ட சீனாவைத்தவிர வேறு எந்த நாட்டாலும் முடியாது. உண்மையில் இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவின் தீவிரஆதரவாளர்களாக இருப்பதால்தான் மேற்குலகு இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்குற்றம் என்ற ஆயுதத்தை எடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இந்தியா இலங்கையில் சீன ஆதிக்கத்தைப் பற்றி தனது கரிசனையை பலதடவை எடுத்துச் சொல்லிவிட்டது. இது பற்றி கதைக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவின் இலங்கைப் பயணத்தை இலங்கை தள்ளி வைத்துவிட்டு மஹிந்த ராஜபக்சே இப்போது சீனப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நிச்சயம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கை பயணத்தை எப்படிக் கையள்வது இந்திய வலியுறத்தல்கள் அழுத்தங்களை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றித்தான் சீனாவுடன் கலந்துரையாடியுள்ளார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.

இன்னொரு ஊடகம் இலங்கைப் போரில் வென்றது சீனா என்கிறது:

  • MJT: So you just got back from Sri Lanka. What did you see there? What did you learn?
  • Kaplan: The biggest takeaway fact about the Sri Lankan war that’s over now is that the Chinese won. And the Chinese won because over the last few years, because of the human rights violations by the Sri Lankan government, the U.S. and other Western countries have cut all military aid. We cut them off just as they were starting to win. The Chinese filled the gaps and kept them flush with weapons and, more importantly, with ammunition, with fire-fighting radar, all kinds of equipment. The assault rifles that Sri Lankan soldiers carry at road blocks throughout Colombo are T-56 Chinese knockoffs of AK-47s. They look like AK-47s, but they’re not. What are the Chinese getting out of this? They’re building a deep water port and bunkering facility for their warships and merchant fleet in Hambantota, in southern Sri Lanka. And they’re doing all sorts of other building on the island.

இந்தியா தொடர்பான இலங்கையின் உண்மை நிலை இனி வரும் காலங்களில் வெளிவரும்.
.

Sunday, 31 October 2010

பல மில்லியன்கள் செலவில் போர்முனையில் நாய்ப் படைகள்



பல மில்லியன்கள் செலவில் போர்முனையில் நாய்ப் படைகள்
ஈழத் தமிழர்களை அழிக்க அயல்நாட்டிலிருந்து அமைதிப் படை என்ற பெயரில் வந்த கொலை வெறி நாய்ப்படைகளை நாம் அறிவோம். சென்ற ஆண்டும் ஈழத்துக்குள் பின்கதவால் நுழைந்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கொலைவெறி நாய்ப்படைகள் தமிழர்களைக் கொன்று குவித்தன. அவை இரண்டுகால் நாய்கள். அமெரிக்கா தனது போர்களங்களில் நாலுகால் நாய்களைப் பயன் படுத்துகிறது.

ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினர் தங்களுக்கு உடனடியாக 647 போர்ப் பயிற்ச்சி பெற்ற நாய்கள் வேண்டுமென்று அமெரிக்கப் பாதுகாப்புக்கு பொறுப்பான பெண்டகனுக்கு அறிவித்துள்ளன.

பெண்டகன் 34 மில்லியன் டொலர்களை இந்திஅ நாய்ப் படைகளுக்காக செலவளிக்க இருக்கிறது.

போர் முனையில் நாய்கள் ஆற்றும் முக்கிய பணி மறைத்து வைத்திருக்கும் குண்டுகளைக் கண்டு பிடிப்பது.

பெண்டகனில் நாய் திட்டப் பிரிவு ஒன்றே இருக்கிறது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...