2026 நவம்பர் மாதம்
22-ம் திகதி காலை இரசியக் கப்பல் ஒன்று லியாவின் பென்காசித்துறை முகத்தில் தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளது. லிபியத் தேசியப் படையினரின் முதற்கட்ட விசாரணைகளின் படி லிபியாவின் பென்காசித் துறைமுகத்தில் தரித்து நின்ற
இரசியாவின் Corvette Merkury என்ற கப்பல் ஆளிலி மூலம் தாக்கபட்டு எரிந்து பெரும்பகுதி
சேதமடைந்துள்ளது. கப்பலின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. Corvette Merkury இரசியக்
கடற்படைக்குச் சொந்தமான கப்பலாகும். இது வழிகாட்டல் ஏவுகணைகள், கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை, வான் பாதுகாப்புஏவுகணைகள் போன்ற வலுவான படைக்கலன்களைக்
கொண்டது.
லிபியாவில் இரண்டு
பெரும் அரசுகளும் ஒரு சிறு அரசும் செயற்படுகின்றன. லிபியாவின் கிழக்குப் பகுதியில்
செயற்படும் அரசுடன் இரசியா உறவைப் பேணுகின்றது. திரிப்போலியில் இருந்து செயற்படும்
அரசுடன் உக்ரேன் தொடர்புகளை வைத்துள்ளது. லிபியாவின் கிழக்குப் பகுதியில் செயற்படும்
அரசின் படையினரின் தகவலின் படி லிபியாவின் திரிப்போலி நகரில் இருந்து செயற்படும் அரசின்
கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இயங்கும் உக்ரேனியப் படையினர் இரசியவின் Corvette
Merkury கப்பல் மீது பல ஏவுகணைகளை வீசிக் கப்பலைத் தாக்கியுள்ளனர். நான்கு ஏவுகணைகள்
இடை மறித்து அழிக்கப்பட்டன. இரண்டு ஏவுகணைகள் கப்பலைத் தாக்கினர். ஆனால் இத்தாக்குதலுக்கு
உக்ரேன் உரிமை கோரவில்லை.
தாக்கப்பட்ட கப்பல்
இரசியப் படைகளுக்குத் தேவையானவற்றை எடுத்துச் செல்லும் கப்பல் எனச் சொல்லப்படுகின்றது.
Corvette Merkury
கப்பல் எரிபொருள் மீள் நிரப்பலுக்காக பென்காசித் துறைமுகத்தில் தங்கியிருந்த வேளையிலேயே
தாக்குதலுக்கு உள்ளானது.
2026 மார்ச் மாதம்
இரசியாவின் Arctic Metagaz என்ற திரவ எரிவாயுத் தாங்கிக் கப்பல் ஒன்று லிபியக் கடற்பரப்பில்
தாக்குதலுக்கு உள்ளானது. அத் தாக்குதலை உக்ரேன் செய்தது என இரசியா சொல்லியிருந்தது.
திரிப்போலியை தலைமையாக க் கொண்டு செயற்படும் அரசு இரசியாவிற்கு எதிரானது எனக் கருதப்படுகின்றது.
திரிப்போலி அரசு லிபியாவை வேறு நாடுகளின் மோதல் களமாக மாற்ற முடியாது என எச்சரித்துள்ளது.
தாக்குதல்
சட்ட பூர்வமானதா என்பதை பார்க்க எடுத்துக் காட்டாக இதைப் பார்ப்போம். :
·
அரசு A மற்றும்
அரசு B போரில் ஈடுபட்டுள்ளன.
அரசு B-யின் போர்க்கப்பல் ஒன்று அரசு C-யின்
துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
அரசு C நடுநிலையானது மற்றும் போரில் ஈடுபடவில்லை.
·
அரசு B-யின்
போர்க்கப்பலை அழிப்பதில் அரசு A-க்கு சட்டபூர்வமான இராணுவ ஆர்வம் இருக்கலாம்.
இருப்பினும், அந்தக் கப்பல் அரசு C-யின் துறைமுகத்தில் இருக்கும்போது அதைத்
தாக்கினால், அரசு A அரசு C-யின் பிரதேசத்திற்குள்ளேயே படைக்கருவிகளைப் பயன்படுத்துவதாக அர்த்தம்.
·
இது
பின்வருவனவற்றை மீறக்கூடும்:
·
அரசு C-யின்
இறையாண்மை,
நடுநிலைமைச் சட்டம்,
மற்றும் மற்றொரு அரசுக்கு எதிரான படைக்கருவிப் பயன்பாட்டுத்
தடையை மீறுவதற்கான வாய்ப்பு.
முக்கியக் கொள்கை
·
சர்வதேச
சட்டம் பெரும்பாலும் இரண்டு தனித்தனி கேள்விகளை எழுப்புகிறது:
·
இலக்கு
ஒரு சட்டபூர்வமான படைத்துறை இலக்கா?
·
இங்கே, எதிரிப்
போர்க்கப்பல் சட்டபூர்வமான இலக்காக இருக்கலாம்.
·
அந்த
இடத்தில் படைக்கருவிகளைச் சட்டபூர்வமாகப் பயன்படுத்தலாமா?
Corvette Merkury சட்ட
பூர்வமான இலக்காக இருக்கலாம். ஆனால் தாக்குதல் செய்யப்ட்ட இடம் சட்ட பூர்வமானதல்ல.
இவற்றை எல்லாம் தாண்டி
இன்னும் ஒரு கேள்வி இங்கு இருக்கின்றது லிபியாவின் கிழக்குப் பகுதியில் இயங்குவது சட்ட
பூர்வமான அரசா? Khalifa Haftar தலைமையில் இயங்கும் அந்த அரசை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கவில்லை. இரசியா, ஐக்கிய அரபு அமீரகம்,
எகிப்த்து ஆகிய நாடுகள் கிழக்குப் பகுதியில் செயற்படும் அரசுடன் தொடர்பை வைத்துள்ளன.
பன்னாட்டு நியமங்களை
மீறும் நாடுகள் தண்டிக்கப்படுவதில்லை என்பது ஒரு நியமம் ஆகிவிட்டது.
