Friday, 5 June 2009
தமிழர்களின் ஆயுத போராட்டத்திற்கான தேவை முடிந்ததா?
மனோ கணேசன் என்பவர் இலங்கையின் பாராளமன்றத்தின் உறுப்பினராக இருகிறார். இவருக்கு பல கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப் பட்டுள்ளது. இத்தனைக்கும் இவர் செய்தது தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடியது அல்ல. அவ்வப்போது இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அறிக்கைகள் விட்டதுதான். ஒரு கட்டத்தில் இவர் உயிராபத்தால் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார். இப்போதும் பகிரங்கமாக நடமாடப் பயந்தே வாழ்க்கையைக் கொண்டு போகிறார். இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மிகப் பயத்துடனே வாழ்கின்றனர். இந்த நிலை இன்றல்ல நேற்றல்ல 1956இல் இருந்தே இருக்கிறது. தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டு பல இலட்சக் கணக்கில் இடம் பெயர்க்கப் பட்டு தவித்த போது மௌனமாக இருந்தவர் மனோ கணேசன் அவர்கள். இவர் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்:
புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டது. இந்த உண்மையை புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். புலம் பெயர்ந்துள்ளவர்களின் போராட்டங்கள் தமிழினத்தின் பிரச்சினைகளை இன்று உலகறிய செய்திருப்பது உண்மை.ஆனால் தாய்நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்களின் வரலாற்றுக் கேள்விகளுக்கு புலிகளின் ஆயுதப்போராட்டமும், அதைச்சார்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும் விடைகளை கொண்டுவரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்து கொள்ளப் பட வேண்டும்.
ஆயுத போராட்டத்திற்கான தேவை இல்லாமல் செய்யப்பட்டதா?
புலிகளின் ஆயுதப் போராட்டம் மழுங்கடிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் தமிழர்களின் ஆயுத போராட்டத்திற்கான தேவை இல்லாமல் செய்யப்பட்டதா? என்ற கேள்விக்கு மனே கணேசன் அவர்கள் விடை சொல்லத் தேவையில்லை. இலங்கையின் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள் விடை கூறிவிட்டார்:
இலங்கையின் சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது.
தலைமை நீதிபதியானவர் ஒரு நாட்டின் சட்டத்திற்கு வியாக்கியானம் கொடுக்கும் வல்லமை பொருந்தியவர். அவரே இப்படிக் கூறிவிட்டார். சட்டத்தின் மூலம் எங்கு நீதி கிடைக்காதோ அங்கு ஆயுதப் போராட்டம் தலை தூக்கும் என்பதை எந்த அறிவிலியும் அறிவான்.
தலைமை நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள் மேலும் கூறியது: தமிழர்களுக்கு போதுமான அளவிற்கு நாம் நிவாரணம் வழங்க வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அதற்கான பழியை நாம் தான் ஏற்க வேண்டும். இந்த நாட்டின் சட்டத்தின் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய துயர நிலைகள், நீதிமன்றத்திற்கு முன் கொண்டு வரப் படவில்லை. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்றும் சரத் என்.சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சிங்களவர்தம் மனோ பாவத்தை அறிந்து
கொள்ளுங்கள் மனோ ஐயா அவர்களே!
இலங்கையின் அரசியலமைப்பைப் பற்றியும் சிங்கள ஆட்சியாளர்களின் மனோ பாவத்தையும் தெரிந்தவர்கள் இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு இல்லை என்பதை அறிந்திருப்பர். நீங்கள் முதலில் தமிழனை வாழ விடுங்கள். வெளிநாட்டுத் தமிழன் நிம்மதியாக இருப்பான்.
மனித உரிமைகளும் ஐநா எருமைகளும்.
இலங்கையில் நடந்த நடந்து கொண்டிருக்கின்ற அவலங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.சிலர் அவற்றை வார்த்தைகளில் வடிக்க முயன்றனர்:
Food and medicine are denied for the innocents and many of them are forced into starvation.
- Most of the wounded are let to die in the open fields. Those who are fortunate enough to make to the make shift hospitals have their limbs amputated without anaesthesia. Caesarian operations are carried out without pain relievers.
- காயப் பட்டு பதுங்குகுழிகளுக்குள் இருந்த மக்கள் உயிரோடு புதைகப் பட்டனர். சரணடைய வந்தவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
- Chinese F7s and Russian MIG fighters fly over the skies of Vanni continuously and they regularly bomb hospitals,schools, churches and orphanages. Cluster bombs and phosphorous bombs are used against innocent Tamil civilians.
- ஒரேயொரு கிளர்ச்சித் தலைவரை கொல்ல ஆகாயத்திலிருந்து குண்டுகளை வீசியும் ஐம்பதாயிரம் மக்களைக் கொன்றும் முப்பதாயிரம் மக்களை அங்கவீனர்களாக்கியும் சிங்கப்பூரைப் போன்ற பரப்பளவுள்ள இரண்டு மடங்கு பிரதேசத்தை அழித்து துவம்சம் செய்துமுள்ளதைப் போன்ற ஒரு அரசாங்கள் இந்த உலகில் வேறில்லை.
- உடல் சிதறி இறந்த சிறார்களின் படங்கள் ஆயிரக் கணக்கில் உண்டு.
- காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்து அவலத்தை உலகிற்கு தெரிவித்தவர்களைக் காணவில்லை.
- சாட்சியங்கள் கூறவேண்டிய மத குருமார்களைக் காணவில்லை.
- சண்டை நடந்துகொண்டிருந்த போது சென்ற ஐநா அதிகாரி விஜய் நம்பியார் தான் இலங்கை அரசுடன் நடாத்திய பேச்சு வார்த்தையை ஐநா பிரதிநிதிகளிடம் தெரிவிக்க மறுத்தார். ஏன்?
- சண்டை நடந்துகொண்டிருந்த போது செல்ல மறுத்த ஐநா பொதுச் செயலாளர் சண்டை முடிந்தபின் இலங்கை சென்றார். சம்பந்தமில்லாமல் கண்டி சென்றார். ஏன்?
- இவர்கள் இருவரும் தாம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டது மட்டுமல்ல மனிதத்திற்கெதிராக நடாத்தப்பட்ட மாபெரும் குற்றங்களுக்கு முழுமையான ஆதரவளிப்பவர்களாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள். ஏன்?
- இதைப்பற்றி ஐநாவின் மனித உரிமை மன்றில் எழுப்பப் பட்ட போது 47 நாடுகள் இணைந்து ஒன்றாக இலங்கைப்பிரச்சினை மீது வாக்களித்துள்ளன. அவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இலங்கைப் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்ற கோணத்திலிருந்தே அவை அவ்வாறு வாக்களித்துள்ளன. அவ்வாறு வாக்களித்ததனூடாக அவை இலங்கை அரசாங்கத்தின் புலிகள் மீதான வெற்றியைப் பாராட்டியுள்ளதோடு இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் மீதான விசாரணையையும் புறந்தள்ளியுள்ளன.
அண்மையில் ஒரு ஐநா பிரதிநிதியைச் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. அவரது அறிவுப்படி ராஜீவ் காந்தி மகாத்மா காந்தியின் பேரன்! இப்படிப் பட்ட எருமைகளுக்கு மனித உரிமைகள் பற்றியோ அல்லது இலங்கையில் நடப்பவை பற்றியோ எப்படி அறிந்திருக்க முடியும்? உலகத்தின் தலைவிதியை இவர்கள் தீர்மானித்தால் எப்படி இருக்கும்!
ஐநாவிற்கான இந்தியப் பிரதிநிதிகளுக்கு இலங்கையில் நடந்தவை முழுவதுமே தெரியும். காந்தியின் தேசத்தைச் சேர்ந்தவர்கள் காந்தியின் பெயரை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களின் சொற் கேட்டு வாக்களித்தது ஏன்?
அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பான்
சேர்ந்தால் சர்வதேச வியாபாரிகள் கூட்டம்
இவற்றோடு சீரழி சினாவும் ரசியாவும்
சேர்ந்தால் சர்வதேச சண்டியர் கூட்டம்
போதாக் குறைக்கு இந்தியாவையும்
சேர்த்தால் சர்வதேச சண்டாளர் கூட்டம்.
எதுதான் அந்த சர்வதேச சமூகமோ?
யார் குடி கெடுக்க யாரை ஏமாற்ற
எந்த இனங்களை அழித்தொழிக்க
எவங்கள் நாடகம் ஆடுகிறாங்கள்
Thursday, 4 June 2009
உலக வர்த்தகத்தின் மூன்றில் இரு பகுதியை சீனா தன் கட்டுக்குள் வைத்திருக்குமா?
இலங்கையின் போர் வெற்றி விழாவில் உரையாற்றிய இலங்கை அதிபர் தமது நாட்டுக்கு சில வெளி நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக கூறினார். இது நடந்த சில மணித்தியாலங்களில் சீன வெளி நாட்டமைச்சர் ஒரு அறிக்கை விட்டார்: இலங்கையின் உள் விவகாரங்களில் வெளி நாடுகள் தலையிடக் கூடாது என்றார்.
முதலில் என்ன அழுத்தம் வெளி நாடுகள் கொடுக்கின்றன? இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கை குற்றம் இழைத்தது. இனக் கொலை செய்தது. இதற்கான ஆதாரங்களை அழிப்பதில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. ஆதாரங்களை அழிப்பதற்கு முன்னர் செயற்பட வேண்டும் என்று சில நாடுகள் முயல்கின்றன. இந்த நாடுகளுக்கு ஏன் இந்த அக்கறை? சீனா இலங்கையில் காலூன்றுவதைத் தடுக்கவே சில மேற்குலக நாடுகள் தமிழர்கள் பிரச்சனையை கையில் எடுக்கின்றன. இலங்கையின் நட்பு நாடுகளான சீனாவும் பாக்கிஸ்த்தானுடன் இப்போது ஈரானும் இணைந்துள்ளது. மியன்மாரில்(பர்மா) சீன ஆதிக்கம் நிலவுகிறது. பங்களாதேசமும் சீனாவின் பிடியில் உள்ளது.
சீனாவின் முத்து மாலைத் திட்டம்
சீனக் கடற்படைத் தளங்கள் பாக்கிஸ்த்தான் பங்களாதேசம் மியன்மார் ஆகியவற்றில் உண்டு. இத்துடன் இலங்கையின் தென் கோடியில் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளத்தை அமைப்பதில் ஈடு பட்டுள்ளது. இது சீனாவின் முத்துமாலைத் திட்டம் என்று அழைக்கப் படுகிறது. இந்த முத்து மாலைத்திட்டம் இந்து சமுத்திரக் கடற் பிராந்தியத்தை தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் நேக்கம் கொண்டது. இந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஊடாக உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி நடை பெறுகிறது. சீனாவின் இந்த முத்து மாலைத் திட்டம் இந்த மூன்றில் இரு பகுதி வர்த்தகத்தை தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் எண்ணத்துடன் தீட்டப்பட்டது.
குடும்ப நலன்களுக்காக பிராந்திய நலனைக் கைவிட்ட இந்தியா
மேற்குலக நாடுகள் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இலங்கைப் பிரச்சனையை கையில் எடுத்த வேளை இந்தியா சீன-இலங்கைக் கூட்டில் தன்னையும் ஒரு பங்காளனாக இணைத்துக் கொண்டது. ஐக்கியா நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டது. விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டினால் போதும் என்பது மட்டும் தான் தமது எண்ணம் என்பது போல் இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடந்துகொண்டது. அப்படி நடந்தமைக்குக் காரணம் ஒரு குடும்ப நலனை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் செயற்பட்டமையே. சிங்களப் பேரினவாதிகள் கடும் இந்திய எதிர்ப்பாளர்கள் என்பது சிங்கள மக்களுடன் பழகிய அனைவருக்கும் தெரியும்.
Wednesday, 3 June 2009
Tamils batted alone
Manmohan at the first slip
Narayan at the second slip
Menon at the third slip
Pakis at the silly point
China at the cover point
UN at the extra cover
US at the long off
EU at the long on
Iran at the leg gully
Norway as the cheer leader
Tamils batted alone
Mahindha delivered a nasty bouncer
In the already fixed limited over match.
இலங்கை இல்லாத ஒன்றுக்கு பயப்படுகிறதா? இருக்கிறதை இல்லை என்கிறதா?
இலங்கையில் பயங்கர வாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்றதற்கான விழா கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. இலங்கையில் இனிப் பயங்கரவாதப் பிரச்சினை இல்லையாம். போர் முடிந்ததற்க்கான பத்திரங்கள் சற்று முன்னர் அதிபர் மஹிந்த ராஜபக்சேயிடம் முப்படைத் தளபதிகளும் சமர்ப்பித்தனர்.
பயங்கர வாதப் பிரச்சனை இல்லாத நாட்டில் கொண்டாடப் படும் விழாவிற்கு ஏன் இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள்? முதல் நாளே பல தெருக்கள் மூடப்பட்டன. பல தமிழர்கள் கைது செய்யப் பட்டனர். விழாவிற்கு வருவோர்கள் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டனர். தொடரூந்து சேவைகள் பல இடை நிறுத்தப் பட்டன. இவை மட்டுமா? முதல் நாளில் இருந்தே கல்கிசையில் இருந்து முகத்துவாரம் வரையிலான கடற் பகுதிக்குள் எவரும் அனுமதிக்கப் படவில்லை. கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தப் படுவதை தடுக்க இந்தப் பாதுகாப்பு. புலிகளின் கடற்படைத் தளபதி சூசை இறந்து விட்டார்தானே? சென்ற மாதம் 15ம் திகதி இலங்கையின் சகல கடற் பிராந்தியமும் மீட்கப் பட்டு விட்டதாகச் சொன்னார்களே! ஏன் இந்தப் பயம் இப்போது?
பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும் இப்போது தேவையா? ஒழிக்கப் பட்ட ஒன்றுக்கு ஏன் இந்தப் பயம்? ஒழிக்கப் பட்டது எனது கேள்விக்குரியதா?
Tuesday, 2 June 2009
அறுபத்தாறு வயதில் பிள்ளை பெற்ற அன்னை - பிரித்தானியாவில் சாதனை.
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது
- இலங்கைப் போருக்கு இந்தியா உதவியதை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிறட் அடம்சும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- இலங்கையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய மனிதப் பேரழிவு ஏற்பட இருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்த பிறகும் இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்தாததற்காக அந்த நாடு என்ன காரணங்களை கூறினாலும் அதனை ஏற்க முடியாது.
- இதில் இந்தியா சற்று தீவிரமாக செயல்பட்டிருந்தால் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என 'த ரைம்ஸ்' நாளிதழிடம் பிறட் அடம்ஸ் கூறினார்.
- இலங்கைப் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக இந்திய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.
மீண்டும் மேலுள்ள கேள்விக்கு வருவோம்: இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
இலங்கை சுதந்திரமடைந்தவுடன் பத்து இலட்சம் தமிழ் வாககாளர்களின் வாககுரிமை பறிக்கப் பட்டது. இந்தியாவின் நேரு இதைப்பற்றிக் கூறுகையில் அது இலங்கையின் உள் நாட்டு விவகாரம் என்றார். இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
பின்னர் வந்த இந்தியப் பிரதமர் சாஸ்திரி இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயககவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதன் படி பல இலட்சக் கணக்கான தமிழ் மககள் நாடற்றவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது சகல மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் அப்பாற் பட்ட நடவடிக்கை. பன்னாட்டுச் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முரணானது. ஆனாலும் இந்தியா இதைச் செய்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
1958இல் இலங்கையில் பெரும் இனக்கொலை நடந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
1972 சிங்கள பொது உடமைவாத இளைஞர்கள் ஆயுதப் புரட்சி செய்தனர். இந்தியப் படையினர் இலங்கைக்கு சென்று அதை அடக்கினர்.
1977 இல் இலங்கையில் பெரும் இனக் கொலை நடந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
அமெரிக்கா திருகோணமலைத் துறைமுகத்தைக் குத்தகைக்கும், சிலாபத்தில் வானொலி நிலையம் என்ற பெயரில் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான தொலை தொடர்பு நிலையத்தையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டது. இப்போது இந்திரா காந்தி அம்மையார் தமிழர் பிரச்சினையில் அக்கறை(?) காட்டத்தொடங்கினார். தமிழ்ப் போராளிக்குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தார். ஆயுதம் கொடுத்தார். ஆனால் வெளிநாடு ஒன்றில் இருந்து ஆயுதக் குழுவொன்று கொள்வனவு செய்த அதி நவீன ஆயுதங்கள் இந்தியாவால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய உளவுத்துறை தமிழ் குழுக்களுக்கிடையில் சண்டை மூட்டிவிட்டது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
தமிழ் குழுக்கள் வேறு நாடுகளுடன் நட்பு பாராட்டுவதை இந்தியா எதிர்த்தது. அவர்கள் தம்முடன் மட்டுமே உறவுகளை வைத்திருக்க வேண்டுமென்று வற்புறுத்தியது. தமிழ்க்குழுக்களும் அவற்றை ஏற்று நடந்தன. தமிழ் குழுக்களை மற்ற நாடுகள் வெறுத்தன. தமிழர்கள் தனிமைப் படுத்த்ப் பட்டனர். தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவின் தயவையே நாடி நின்றன.
1985 இல் வல்வெட்டித்துறையில் இரு பாடசாலைகளில் பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் இலங்கை அரச படையினரால் கொல்லப் பட்டனர். இதற்குப் பழி வாங்கும் முகமாக ஒரு பேரூந்தில் விடுதலைப் புலிகள் அனுராதபுரத்தை தாக்கினர். அனுராதபுரம் அவர்களது கட்டுப்பாட்டில் பல மணி நேரம் இருந்தது. இப்படியான தாக்குதல் இலங்கையில் எப் பாகத்திலும் நடத்தப் படலாம் என்று இலங்கைப் புலனாய்வுத் துறை தெரிவித்தது. இப்போது இலங்கை தமது நாட்டுப் பிரச்சனையை தீர்க்க இந்தியாவை நாடியது. திருகோணமலைத் துறை முக குத்தகைத் திட்டமும் சிலாபத்தில் அமைக்கவிருந்த வானொலித்திட்டமும் கைவிடப் பட்டது. இலங்கை இந்தியாவிற்கு பணிந்தது. இது தமிழர்களின் தோளில் ஏறியிருந்து இந்தியா சாதித்தது. ராஜீவும் ஜேஆரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு அம்சமும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. இதன் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களை ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளிக்க வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தியது. அவர்களின் பாதுகாப்பிற்கு தாம் உத்தரவாதம் என்றது. ஆனால் புலேந்திரன் குமரப்பா போன்றோ கைது செய்யப் பட்டு மரணித்த போது இந்தியா வெறுமனெ கைகட்டி நின்றது. இந்திய அரசிடம் சில கோரிக்கககலை வைத்து உண்ணா விரதம் இருந்து அன்னை பூபதி தியாகி திலீபன் மரணமடைந்தனர். புலிகளை ஒழிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டது. அப்போதைய இலங்கை அதிபராக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனவின் முதிர்ந்த அரசியல் தந்திரத்திற்கு கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தி பலியனார்.
இந்திய அமைதிப் படையின் கசப்பான அனுபவங்களிற்குப் பின் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவதில்லை எனக் கூறிக் கொண்டு சிங்களப் படையினருக்கு ஆயுதங்களையும் பயிற்ச்சிகளையும் வழங்கி வந்தது. தமிழ் மீனவர்களைக் கண்டபடி சுட்டுக் கொன்றது இலங்கை இராணுவம். அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை. இந்தியா ஏன் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
திரை மறைவில் இந்தியா இலங்கைக்குப் வழங்கி வந்த பல உதவிகள் ராஜீவின் மகள் பிரியங்கா ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினி சந்தித்த பின் தீவிரமடைந்த்தாக நம்பப் படுகிறது. இந்தியப் படையினர் நேரடியாக இலங்கை வந்து இனக்கொலை செய்யும் இலங்கை இராணுவத்தினருக்கு உதவினர் என்றும் நம்பப் படுகிறது. பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர், அவயங்களை இழந்தனர். பல்லாயிரக் கணக்கான வீடுகள் அழிக்கப் பட்டன. இரண்டு இலட்சத்திற்கு மேலான மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப் பட்டனர். இவர்களுக்கு உதவுவது யார்?
Monday, 1 June 2009
இருதய நோய்க்கு தக்காளியிலிருந்து அற்புத மருந்து கண்டு பிடிப்பு.
.
உலகளாவிய ரீதியில் இக் கண்டு பிடிப்பு பல உயிர்களைக் காப்பாற்றும் என நம்பப்படுகிறது. அரெறொனன் மாத்திரை இருதயத்தின் குழாய்களில் கொழுப்புத் தேங்குவதால் ஏற்படும் அடைப்பை நீக்கவல்லது என்கிறார்கள் இதைக் கண்டுபிடித்தவர்கள். ஒரு மாத்திரை மூன்று கிலோ தக்காளி சாப்பிடுவதற்கு சமானமாகும். ஒரு வருட காலமாக இதய நோய் கொண்ட 200 பேரில் இம் மாத்திரைகள் ஏற்கனவே பரிசோதிக்கப் பட்டுள்ளது.
.
ஒரு மாதத்திற்கு தேவையான அரெறொனன் மாத்திரை வாங்குவதற்கு சுமார் 50 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய தக்காளி பயிரிடுவோர் சங்கம் இயற்கையாக வளர்க்கப் படும் உணவுகளில் கண்டுபிடிக்கப் படாத பல நன்மைகள் உண்டு எனத்தெரிவித்தனர்.
இலங்கை இந்தியாவை ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டதா?
பாக்கிஸ்த்தான் தனது பங்கே பெரியது என உரிமை கொண்டாடுகிறது.
இந்தியா படை உதவி, படைக்கல உதவி, பயிற்ச்சி உதவி, உளவுத்துறை உதவி, எனப் பல செய்தும் தாம் உதவி செய்ததாக சொல்லவில்லை!பெருந்தன்மையா?
இந்தியா உதவி செய்யும் போது இலங்கை இந்தியாவைப் பயன் படுத்துகிறது. தனது தேவை முடிந்ததும் இந்தியாவிற்கு பேப் பே காட்டிவிடும் என்று கூறப்பட்டது. இலங்கை இந்தியாவை ஓரம் கட்டப்போகிறது என்பதற்கு ஏற்பதாக மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன:
1. இலங்கையின் வெற்றிக்கு தாமே பெரும் பங்காற்றியதாக பாக்கிஸ்த்தான் அறிவித்தது. அத்துடன் தாம் உள்நாட்டு அழுத்தமின்றி செயற்பட்டதாகவும் அறிவித்தது. இது இந்தியாவை ஓரங்கட்டவே.
2. ஜேவிபி என்னும் சீன சார்புச் சிங்களக் கட்சியின் வீரவன்ச என்பவர் இலங்கைப் போரிற்கு இந்தியாவின் பங்களிப்பை மிகவும் கேவலப் படுத்திப் பேசியுள்ளார். தமிழர்களின் பேரழிவிற்கு இந்தியாவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்ல பாக்கிஸ்த்தானும் சீனாவும் இலங்கைக்கு உதவி செய்ததுடன் நிற்கின்றன. இந்தியா அத்துடன் நிற்காமல் இலங்கையின் உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றது என்று குற்றம் சாட்டுகிறார். இந்த அறிக்கை சீனவில் தயாரிக்கப் பட்டிருக்கலாம் என்று கொழும்பிலுள்ள ஒரு நண்பர் கூறினார். இது இந்தியாவை ஓரங்கட்டவே.
3. இலங்கையின் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே ஒரு படி மேலே சென்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, “இந்தியாவுக்காகவும்தான். 18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம். விடுதலைப் புலிகளை நாங்கள் கொன்றுவிட்டதால் இந்திய அரசு அதற்காகப் போர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.” என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இது இந்தியாவை ஓரங்கட்டவே.
“எங்களுடைய போர் நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும் வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.”
இதற்கு தமிழக மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபக்ச.
.
இவர்கள் யார் என்பதை தமிழக மக்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும்.
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...