Saturday, 1 September 2012

ஜேம்ஸ் பாண்டின் கவர்ச்சியின் இரகசியம்

1962-ம் ஆண்டு Dr Who திரைப்படத்தில் இருந்து உலகப் புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் பெண்களைக் கவர்வதன் இரகசியத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். இதுவரை தயாரிக்கப்பட்ட 23 படங்களும் மக்களைக் கவர்ந்தவையே. இதன் மர்மத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் பாண்ட் பாத்திரத்தின் கவர்ச்சிக்கான காரணங்களை வெளியிட்டுள்ளனர்:

1. உச்ச தன்னம்பிக்கை: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் உச்ச தன்னம்பிக்கை உள்ளதாகப் படைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜேம்ஸ் பாண்டைப் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

2. பதட்டப்படாமல் அமைதியாக இருத்தல்: கொல்ல முயற்ச்சிக்கப்படும் போதும் மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் போதும் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிப்பவர்கள் பதட்டப்படாமல் அமைதியாக இருந்து நிலைமையக் கையாள்வது பெண்களை மிகவும் கவர்கிறது.

3. தண்ணியடித்தல்: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரங்கள் மதுவை லாவகமாக அருந்து சுய நினைவை இழக்காமல் இருப்பது போல் சித்தரிக்கப்படுவதால் அந்தப் பாத்திரத்தை பெண்கள் விரும்புகிறார்கள்.

4. நல்லவர்/கெட்டவர்களை இனம் காணும் திறன்: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரங்கள் தன்னைச் சந்திப்பவர்கள் எத்தகையினர் - அதிலும் முக்கியமாகப் பெண்களை- என்பதை இலகுவாக இனம் காண்பதை பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

5. ஒரு பெண் ஆணிடம் எதை எதிர் பார்க்கிறாள்: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் ஒரு பெண் ஆணிடம் எதை எதிர்பார்க்கிறாள் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பாத்திரத்தின் இந்த அறிவு பெண்களைப் பெரிதும் கவர்கிறது.

6. உயரமான தோற்றம்: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடித்த சகல நடிகர்களும் உயரமானவர்கள். பெண்கள் உயரமான ஆண்களால் அதிகம் கவரப்படுகிறார்கள்.

7. கையில் பணப்புழக்கம்: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரங்கள் கையில் நிறையப் பணம் வைத்திருப்பதும் பெண்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சூதாடுவதும் பெண்களை மிகவும் கவர்கிறது.

8. ஆபத்தில் இருந்து தப்பிக்கொள்வது: ஜேம்ஸ் பாண்ட்பாத்திரங்கள் எந்த மோசமான ஆபத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளும். ஆண்மை மிக்கவர்களால்தான் இதைச் செய்ய முடியும்

9. குறு நகைச்சுவை(பஞ்ச் டயலாக்): அவ்வப்போது ஒரு குறுகிய வசனங்களின் மூலம் ஜேம்ஸ் பாண்ட் நகைச்சுவைகளை சொல்வது பெண்களை மிகவும் கவர்கிறது.

10. அருகில் இருப்பவரை அருட்டுதல்(exciting): ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் அருகில் இருப்பவர்களிற்கு ஊக்கமளிக்கும் தன்மையுடையது.  இது பெண்களிற்கு மிகவும் பிடிக்கும்




என்னைத் தொலைத்து உன்னைத் தேடுகிறேன்

கண்ணைத் தொலைத்து பார்வையத் தேடுகிறேன்
நாட்களைத் தொலைத்து யுகங்களைத் தேடுகிறேன்
என்னைத் தொலைத்து உன்னைத் தேடுகிறேன்
காதலைத் தொலைத்து அன்பைத் தேடுகிறேன்


இன்றும் என் நெஞ்சில்
எதிரொலிக்கும் உன் இதயத் துடிப்பு
இன்றும் என் கண்ணில்
நிழலாடும் உன் கண்ணசைவு

இன்றும் என் நாசியில்
நறுமணம் வீசும் உன் மூச்சுக் காற்று
இன்றும் என்னுடலில்
சிலிர்ப்படையச் செய்யும் உன் அணைப்பு

மைல்களாய் நீழும் இடைவெளி
மில்லி மீட்டராய்க் குறைய வேண்டும்
யுகங்களாய் நீழும் பிரிவு
கணங்களாய் மறைய வேண்டும்

Friday, 31 August 2012

கொல்லப்பட்ட பின் லாடனை இனம் காட்டிய சிறுமி

"இரு பெண்கள் அலறிய படி அருகிருக்க ஒரு கண்ணினூடாக துளைத்துச் சென்ற குண்டால் மூளை சிதறி இரத்த வெள்ளத்தில் அடையாளம் காணமுடியாதபடி இறப்பு வலியால் துடிதுடித்துக் கொண்டிருதார் பின் லாடன்" இது தான் பின் லாடனைக் கொன்ற அமெரிக்கக் கடற்படையில் சிறப்புப் பிரிவான Team - 6 எனப்பட்ட சீல் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறுவது. பின் லாடனைக் கொல்லும் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பின் லாடனைக் கொன்றது பற்றி "ஒரு இலகுவான நாளல்ல" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அப்புத்தகம் செப்டம்பர் 11-ம் திகதி வர இருந்தது. புத்தகத்தை வாங்க அதிகமானோர் உத்தரவு வழ்ங்கியதால் இருவாரங்கள் முன்னரே புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

பின் லாடன் மறைந்து வாழ்த மாளிகையில் சீல் படையினர் இறங்கித் தாக்குதல் நடத்தத் தொடங்கியவுடன் மூன்றாம் மாடி அறை ஒன்றில் ஒளித்துக் கொண்ட பின் லாடனை  அவர் இருந்த அறைக்குள் தாக்குதல் அணி செல்ல முன்னரே அணியைச் சேர்ந்த குறிபார்த்துச் சுடும் வீரர் சுட்டுவிட்டார். அதற்கு முன்னதாக மாளிகையில் இறங்கியவுடன் பின் லாடனின் மகன் காலித் சுட்டுக் கொல்லப்பட்டார். மூன்றாம் மாடிக்கு ஏற இன்னும் ஐந்து படிகள் இருக்கும் நிலையில் நாம் சூட்டுச் சத்தத்தைக் கேட்டோம் என்றார் "ஒரு இலகுவான நாளல்ல" இன் ஆசிரியர். அவரின் இறப்பை உறுதி செய்ய மார்பில் பல தடவை இறுதியாகச் சுடப்பட்டது.

கையற்ற வெள்ளை ரீஷேர்ட்டும் மண்ணிற தளர்ந்த காற்சட்டையும் பின் லாடன் இறக்கும் போது அணிந்திருந்தார். இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருந்த அவரது தலையை ஒரு படுக்கை விரிப்பால் துடைத்த போது மிகவும் வெறுக்கப்படும் அந்த முகத்தைப் பார்த்தோம். சீல் படைப் பிரிவில் அரபு மொழி பேசத் தெரிந்த ஒருவர் அவர் பின் லாடனா என அவருடன் இருந்த இரு பெண்களைக் கேட்ட போது அவர்கள் மாறி மாறி வேறு பெயர்களை உளறினர். பின்னர் மொட்டைமாடியில்(பலகணி நடு நடுங்கிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களில் ஒரு சிறுமி முன்  படையினர் ஒருவர் முழங்காலில் நின்றபடி இது யார் எனக் கேட்ட போது அச்ச்சிறுமி ஒசமா பின் லாடன் என்றாராம். உன்னால் அவர் ஒசாமா பின் லாடன் என நிச்சயமாகச் சொல்ல முடியுமா என்றபோது ஆம் என்று அச்சிறுமி கூறினார். அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து உலுப்பிய படி stop f--king with me, now tell me who is that என்று கேட்ட போது அப்பெண் ஒசமா என்றார். எந்த ஒசாமா என்றபோது ஒசாமா பின் லாடன் என்றார்.உடனே "ஜெரேனிமோ" இலக்கு தாக்கி அழிக்கப்பட்டது என்று அமெரிக்க மேலிடத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. பின் லாடனைக் கொல்ல அமெரிக்க உளவுத்துறை அவருக்கு ஜேரேனிமோ என்ற குறியீட்டுப் பெயரைச் சூட்டி இருந்தது. பின் லாடனின் வாயில் இருந்து இரண்டும் இரத்தத்தில் இருந்து இரண்டுமாக டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன. இரண்டும் வேறு வேறு வான்கலங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. ஒன்று பாக்கிஸ்த்தானியரால் சுடப்பட்டால் மற்றதாவது எஞ்சும் என்பதற்காக அப்படிச் செய்யப்பட்டதாம். பின் லாடனின் மாளிகையில் இருந்த பதிவேடுகள் காணொளிப்பதிவுகள், கணனிகள் யாவற்றையும் சீல் படையினர் தம்முடன் எடுத்துச் சென்றனர்.

பாக்கிஸ்தானுக்குப் பொய் சொன்ன அமெரிக்கா
பின் லாடனைக் கொல்ல அனுப்பிய வான் கலங்கள் தமது தொலைந்து போன ஒரு ஆளில்லா விமானத்தைத் தேடி பாக்கிஸ்த்தான் வான் பரப்புக்குள் செல்கின்றன என்று அமெரிக்க அரசு பாக்கிஸ்த்தானுக்குப் பொய் கூறியது. அமெரிக்கக் கடற்படையில் சிறப்புப் பிரிவான Team - 6 பின் லாடனின் மாளிகைக்குப் போகும் போது கைத் தொலை பேசித் தொடர்புகளை துண்டிக்கும் கருவி தேவைப்படின் இலஞ்சம் கொடுக்க ஏராளமான பணம் ஒளிப்படப் பதிவுக் கருவிகள் போன்றவற்றை தம்முடன் எடுத்துச் சென்றன.

முறையான ஒத்திகை
பின் லாடன் இருந்த மாளிகை போல் ஒரு மாளிகையை அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் அமைத்தனர். அதன் சூழல் போல் அழுக்கான சுற்றாடனும் அமைக்கப்பட்டது. இரவு நேரத்த்தில் மாளிகையில் செய்த ஒத்திகைத் தாக்குதல்களை அமெரிக்க உயர் அதிகாரிகள் இரவில் பார்க்கும் கண்ணாடிகள் அணிந்தபடி பார்த்து தமது திருப்தியைத் தெரிவித்தனர். தாக்குதல் அணியிடம் கடைசியாகக் கூறியது: “Try not to shoot the motherf--ker in the face. Everybody is going to want to see his picture.”

ஈரானில் வெடித்த எகிப்தியக் குண்டு

ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு மேற்கு நாடுகள் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், ஈரானின் அணு உலைகளை இஸ்ரேல் தனித்தோ அல்லது ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தோ தாக்கலாம் என்ற பரபரப்புச் சூழலில் ஈரானில் அணிசேரா(கூட்டுச்சேரா) நாடுகளின் உச்சி மாநாடு நடக்கிறது. ஈரான் இந்த மாநாட்டை ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிராக மற்ற நாடுகள் தன்னுடன் அணிசேரவைப்பதற்கு முயற்ச்சி செய்கிறது. ஈரான் அணிசேரா நாடுகளின் மாநாட்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி போல ஒழுங்கு செய்துள்ளது என்கிறது பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை.

அணி சேரா நாடுகள்
முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, முன்னாள் எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர், முன்னாள் இந்தோனிசியப் பிரதம சுகர்ணோ, முன்னாள் யூக்கோஸ்லாவிய அதிபர் ஜோசேப் டிட்டோ முன்னாள் கானா அதிபர் குவாமி நிக்குவுமா ஆகியோரது உழைப்பால் 1961இல் பெல்கிரேட்டில் உருவாக்கப்பட்டது அணிசேரா நாடுகள் இயக்கம். நேட்டோ ஒப்பந்த நாடுகளின் அணியிலோ அல்லது வார்ஸோ ஒப்பந்த அணியிலோ சேராமல் தாமாகக் கூடி அணிசேரா நாடுகள் என்று தம்மை அழைக்க விரும்பின. தற்போது 120 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அணிசேரா நாடுகள் இயக்கம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஒரு பலமிக்க அமைப்பாகும். ஆனால் அணிசேரா நாடுகள் ஒரு அணியில் சேர்வதில்லை. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் பனிப்போர் நிலவிய போது அணிசேரா நாடுகள் இயக்கத்திற்கு இருந்த முக்கியத்துவம் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அண்மைக்காலத்தில் பெரு வல்லரசான ஐக்கிய அமெரிக்காவை அறிக்கைகள் மூலம் தாக்குவதை தலையாய கடமையாகக் கொண்டுள்ளன.

ஈரானின் கனவு
ஈரானை பன்னாட்டு அரங்கில் தனிமைப்படுத்த ஐக்கிய அமெரிக்கா பெரு முயற்ச்சி எடுத்து வரும் வேளையில் ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக அணிசேரா நாடுகளை அணி திரட்ட முயல்கிறது. மாநாட்டு மண்டபத்தின் வெளியே தனது நாட்டில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானிகள் பாவித்த குண்டுகளால் சிதறிய வாகனங்களைக் காட்சிப்படுத்தியது. அத்துடன் மாநாடு நடக்கும் மண்டபத்திற்குள் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானிகளின் குடும்பத்தினரை முன் வரிசையில் கொல்லப்பட்டவர்களின் படங்களைத் தாங்கிய படி அமர்த்தியது. மாநாட்டில் பேசிய ஈரானிய ஆன்மிக்கத் தலைவர் அயத்துல்லா கொமெய்னி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையை தாக்கிப் பேசினார்.  கொமெய்னி தனது உரையில் சிரியாவைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சிரியா ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு ஈரான் பெருதும் உதவிவருகிறது.

பான் கீ மூன்
இஸ்ரேலால் தாக்கப்படும் அபாயம் மேற்கு நாடுகளின் பொருளாதார்த தடை ஆகியவற்றுக்குள் தவிக்கும் ஈரான் உலக அரங்கில் தனது பலத்தையும் செல்வாக்கையும் தூக்கி நிறுத்த தனது நாட்டுத் தலைநக் டெஹ்ரானில் நடக்கும் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டை பயன்படுத்த எண்ணி இருந்தது. அந்த நம்பிக்கையில் முதல் விழுந்த அடி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் மாநாட்டில் ஆற்றிய உரையால் விழுந்தது. பான் கீ மூன் ஈரானின் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார். பான் கீ மூன் ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் வேண்டுகோள் விடுத்தன. பான் கீ மூன் அங்கு பங்கு பற்றச் சம்மத்தித்தது தமக்குக் கிடைத்த வெற்றி என ஈரான் கருதியது. ஆனால் பான் கீ மூன் ஆற்றிய உரை ஈரானுக்குச் சாதகமாக இருக்கவில்லை.

குண்டைத் தூக்கிப் போட்ட எகிப்திய அதிபர்
டெஹ்ரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில் மல்லிகைப் புரட்சிக்குப் பின்னர் பதவிக்கு வந்த எகிப்திய அதிபர் மொஹமட் மோசியின் உரை பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் மொஹமட் மோசி சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக மாநாட்டில் உரையாற்றியது ஈரானுக்குப் பெரும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும்  இருந்தது. சுனி முஸ்லிம் இனத்தவரான மொஹமட் மோசி சிரியாவில் கிளர்ச்சி செய்யும் சுபி இஸ்லாமையர்களுக்கு ஆதரவாகப் பேசியது ஆச்சரியம்ல்ல. ஆனால் சிரிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் ஈரானிய ஆட்சியாளர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.  மோசி சிரியாவில் நடக்கும் வன்முறை தனது இருதயத்தில் இருந்து இரத்தம் கொட்டச் செய்கிறது என்றார். ஈரானியத் தொலைக்காட்சியில் மோசியின் உரையின் பல பாகங்கள் தணிக்கை செய்யப்படன. தான் பன்னாட்டு அரங்கில் தனிமைப் படுத்தப்படவில்லை என பறை சாற்ற இருந்த ஈரானுக்கு மோசியின் உரை ஒரு பெரும் குண்டைத் தூக்கிப் போட்டது போல் இருந்தது. அணி சேரா நாடுகளிடையே ஈரானுக்கு ஆதரவில்லை என்பதை மோசியின் உரை கோடிட்டுக் காட்டுகிறது. 1979இல் முன்னாள் எகிப்திய அதிபர் அன்வர் சதாத் இஸ்ரேலுடனான காம் டேவிட் உடன்படிக்கையில் கையொப்பமிட்டதில் இருந்து ஈரான் எகிப்திய உறவு சீராக் இருக்கவில்லை. அதன் பிறகு ஈரானுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் எகிப்திய அதிபர் மொஹமட் மோசியாகும்.

Star of the Show மொஹமட் மோசி
அணிசேரா நாடுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவர் நட்சத்திரத் தலைவராக இருந்திருக்கிறார்கள். கியூபத் தலைவர் ஃபிடல் காஸ்ரோ, லிபிய அதிபர் மும்மர் கடாஃபி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோர் அணிசேரா நாடுகளிடை மிகவும் விரும்பத்தக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போது நடக்கும் மாநாட்டில் Star of the Show மொஹமட் மோசிதான். படையினரின் பிடியில் இருந்து எகிப்தை மீட்டு அங்கு தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் மொஹமட் மோசி. இப்படிப்பட்ட ஒருவர் ஈரானைத் தாக்கி உரையாற்றியது அணிசேராநாடுகளிடை ஒரு அதிர்வலையை ஏற்படுட்தி உள்ளது.

Thursday, 30 August 2012

கணினி நகைச்சுவைகள்

நீ என்ன கணனி வைத்திருக்கிறாய் என்ற கேள்விக்கு
ஒரு ஆணின் பதில்:  My computer is fastastic...intel core i7
processor at 3.3 ghz, windows 7, 64 bit, 8gb ram
& nvidia gtx 560 graphics card.
ஒரு பெண்ணின் பதில்: I have a nice pink one.

Q: Did God really create the world in seven days?
A: He did it in six days and nights while living on Jolt and candy bars. On the seventh day, He went home and found that His girlfriend had left Him.

Q: Does God control everything that happens in my life?
A: He could if he used the debugger, but it's tedious to step through all those variables. 



தேவலோகத்தில் ஓர் IT பிரிவு:
சிவன்: System Programmer
பிரம்மன்: System Installer
திருமால்: System Supporter
நாரதர்: Data transfer
யமன்: Recycle bin
ஊர்வசி: virus



There are 10 types of people in the world: those who understand binary, and those who don't


ஒருவன் சிறந்த பேய்க் கதை எழுத்தாளராக வேண்டும் என்று தவமிருந்தான். கடவுள் அவன் முன் தோன்றி உனது விருப்பத்தைச் சொல் என்றார். எனது எழுத்தை உலகெங்கும் வாசிக்க வேண்டும்...நான் எழுத்தை வாசித்து மக்கள் கூச்சலிட வேண்டும்.....எனது எழுத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைய வேண்டும்...தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் என்றான்.
கடவுள் அவனை Microsoft இல் programmer ஆக்கினார்.

அந்த வைரஸிற்க்கு ஏன் ராகுல் காந்தி வைரஸ் எனப் பெயரிட்டனர்?
அது ஏழைகளின் வீட்டில் உள்ள கணனிகளைக் காலி செய்து விடுமாம்.

அந்த வைரஸிற்கு ஏன் மன்மோகன் வைரஸ் எனப் பெயரிட்டனர்?
அது அமைதியாக இருந்து 1.86இலட்சம் கோடி மெகா பைட் தரவுகளைச் சுருட்டிவிட்டதாம்.


  (o)(o)   Perfect breasts

  ( + )( + )   Fake silicone breasts

  (*)(*)   Perky breasts

  (@)(@)   Big nipple breasts

  oo   A cups

  { O }{ O }   D cups

  (oYo)   Wonder bra breasts

  ( ^ )( ^ )   Cold breasts

  (o)(O)   Lopsided breasts

  (Q)(Q)   Pierced Breasts

  (p)(p)   Hanging Tassels Breasts

  \o/\o/   Grandma's Breasts

  (  -  )(  -  )   Against The Shower Door Breasts

  | o | | o |   Android Breasts

  ($) ($)   Italy Sanian's Breasts

இரு கணனிப் பித்தர்களின் உரையாடல்:
முதலாமவர்: மச்சி நேற்று பப்பில் சுப்பர் ஃபிகர் ஒன்னு மாட்டிடிச்சு...
இரண்டாமவர்: ஓ எப்படி மச்சான்
முதலாமவர்: நான இருந்த மேசைக்கு எதிர் மேசையில் அவள் இருந்து நைஸ் லுக்குவிட்டுக் கொண்டிருந்தாள். எனது மேசைக்கு வரும்படி சைகை காட்டினேன். முதலில் மெல்லச் சிரித்தாள். பிறங்கு come to my table dear என்றேன். please you come here என்றாள் நானும் போனேன்
இரண்டாமவர்: ஓ மட்டர் நல்லாத்தான் போயிருக்கு...
முதலாமவர்: ஆமடா மச்சான். இருவரும் ஒன்றாக சாப்பிட்டோம் . எனது அறைக்கு வாறியா என்றேன்...
இரண்டாமவர்:அடப்பாவி....
முதலாமவர்: தயங்கித் தயங்கிச் சம்மதித்தாள் அவளை எனது அறைக்குக் கொண்டு போய் கட்டிலில் இருந்த எனது புதிய டெல் லப்ரொப்பை எடுத்து மேசையில் வத்து.....
இரண்டாமவர் (இடைமறித்து): மச்சான் நீ புது டெல் வாங்கினியா சொல்லவே இல்லை என்ன ஸ்பெக் மச்சான்...நானென்றால் ஹெச்பி தான் வாங்கியிருப்பேன்...
அதன் பின்னர் இருவரும் டெல்லா ஹெச்பீயா சிறந்தது என்பதைப்பற்றி ஒரு பட்டி மன்றம் நடத்தி கடும் வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது....


Wednesday, 29 August 2012

கணனியை ஊடுருவுவது(hack) போல் மூளையையும் ஊடுருவலாம்.

கணனிகளை ஊடுருவி(hack) அதில் உள்ள தகவல்கள் கடவுச்சொற்கள் திருடுவது போல் (passwords) உங்கள் மூளையையும் ஊடுருவி அதில் உள்ள தகவல்களைத் திருடும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு $300 பெறுமதியான காது ஒலிவாங்கி (ear phone) போன்ற ஒரு கருவி போதுமானதாகும். நாம் அர்த்தமுள்ள ஒன்றைப் பார்க்கும் போது எமது மூளையில் இருந்து வெளிவரும் P300 சமிக்ஞைகளில் இருந்து தகவல்களைப் பெற முடியும்.

நரம்பியல் நிபுணர்களும் குறியீட்டு நிபுணர்களும் இணைந்து மூளையை ஊடுருவும் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இவர்கள் ஒருவரின் மூளைக்குள் தமக்கென  ஒரு கடவுட்சொல்லை உள்புகுத்திவிடுவர். கணனி விளையாட்டுக்களில் பாவிக்கப்படும் brain computer interfaces (BCI) மூளையை ஊடுருவப் பாவிக்கப்படுகிறது.
கணனி விளையாட்டில் பாவிக்கப்படும் brain computer interfaces (BCI)


neuroscientists and cryptographers came up with an “unbreakable crypto” system that relied on implicit learning so your subconscious could remember a 30 character passphrase. However, the trick is that the password couldn’t be consciously recalled and obtained via “rubber hose attacks” meaning torture. The method relied on learning the password with a computer game similar to Guitar Hero, but that plants “a secret password in the participant’s brain without the participant having any conscious knowledge of the trained password.”

இது தொடர்பான காணொளிப்பதிவு:-



How do these brain-computer interfaces work?
BCI controllers sit on your head and read your brain's electrical activity with an electroencephalograph, or EEG. While the devices can't read your exact thoughts, hands-free controllers like the $300 product sold by Emotiv distinguish between two brain states: Relaxed and concentrating. Essentially, it's like playing a video game with only one button (which some players find underwhelming). BCIs also have medical applications, and are frequently used to gather neuro-feedback on things like sleep disorders, epilepsy, driver alertness, and more, says Death and Taxes' Pangburn.

Tuesday, 28 August 2012

புதிய ஆங்கிலச் சொற்கள் - New Words in English

Stop texting me.....I am a decent girl...
ஆங்கில மொழிக்கு புதிதாகச் சொற்கள் சேர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவை பலதரப்பட்ட துறைகளில் இருந்தும் சேர்க்கப்பட்டுக் கொள்ளப்படும். ஆங்கில மொழிக்கு வளமும் பெருமையும் சேர்ப்பவை அவையே. அண்மையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட சொற்களும் அவற்றின் பொருளும்:

aha moment:  A moment of sudden inspiration, insight, recognition or understanding. திடீரென உருவாகும் உத்வேகம்.

bucket list:  A list of things that one wants to do before dying. மண்டையைப் போடமுன்னர் செய்யவேண்டும் என நினைப்பவை.

cloud computing:  Storing regularly used computer data on servers that can be accessed via the Internet. இணையவெளியூடாக தரவுகளை சேமித்து வைத்தல்.

earworm: A song or melody that keeps repeating in one’s mind. மனதுக்குள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.

f-bomb:   A euphemism for having used the “f-word” பலான வார்த்தைகள் போன்ற சொற்களைப் பாவிப்பது

game changer:  A new element or factor that changes an existing situation or activity in a significant way. தற்போதைய நிலைமையை மாற்றியமைக்கும் காரணிகள்.

mash-up:  Something created by combining elements from two or more sources. பல மூலங்களில் இருந்து காரணிகளை எடுத்துக் கலத்தல்.

sexting:  Sending sexually explicit messages or images by cell phone. கைப்பேசியில் பலான தகவல்கள் அனுப்புதல்

systemic risk
:  The risk that the failure of one financial institution could cause other interconnected institutions to fail…and thus harm the economy as a whole. ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சி அத்துடன் தொடர்புடைய பல நிறுவனங்களை விழச்செய்யும் ஆபத்து.

underwater:  A mortgage loan for which more is owed than the property securing the loan is worth. சொத்தின் பெறுமதிக்கு மேலான ஈட்டுக் கடன்.

nesting (noun) : an arrangement of divorced parents in which their children live in one location full-time and the parents take turns living with the children at that location


consistify
(verb) : to make consistent or congruous

textophrenia (noun) : the sensation of hearing or feeling a text message alert when no message has been received


retainage
(noun) : that portion of a construction contract payment that is withheld until the project is completed

status (verb) : to add or update information (as on a report) about the status of something

deconflict(verb) : to resolve conflicts in a schedule


agreeance (noun) : agreement

editorialism (noun) : an instance or example of editorializing

Sunday, 26 August 2012

சில SMS நகைச்சுவைகள்

 காதலி: எனக்கு ஐஸ் கிரீம் வாங்குடா
காதலன் வாங்கினான்.
காதலி: நன்றி
காதலன்: நன்றி மட்டுமா?
காதலி: முத்தம் வேண்டுமா?
காதலன்: ஐஸ் கிரீம் வாங்கிய காசைக் கொடு.

கோபப்பட்ட மனைவி
கதைக்காமல் இருத்தல் இனிது.

வகுப்பறையில் தொடங்கி
முடிவதல்ல நட்பு
வாழ்நாள் முழுவதும் தொடர்வதே
நட்பு

என்னைப் புரிந்து கொள்ள முயலாதே
புரிந்தால் என்னை விரும்ப மாட்டாய்

நான் இறந்த பின்
என்மீது பூக்களைக் தூவாதே
என்னால் மணக்க முடியாது
இன்றே அனுப்பு
நான் இறந்த பின்
எனக்காக கண்ணீர் வடிக்காதே
என்னால் பார்க்க முடியாது
நான் இறந்த பின்னர்
என்னைப் புகழாதே
என்னால் கேட்க முடியாது
இன்றே என்னைப் புகழ்

ஒரு உறவின் இறப்பின் இழப்பிலும்
வாழும் இருவரிடை இருக்கும் உறவின் இறப்பு
மிகக் கொடுமையானது.

இன்னொருத்தி காலடியில்
நான் என்பது
எமது மகளின் காலணியைப்
பூட்டுவதாக இருக்கட்டும்

We take everything for granted.

_ A constantly worried mom
_ A strict dad
_ An annoying bro
_ A rude sis
_ A chipku frnd
_ A demanding wife
_ A complaining husband.
.
.
BUT
.
.
when v lose them then v miss them as.
.
.
_ My caring mom
_ My concerned dad
_ My best bro
_ My l0ving sis
_ My real frnd
_ My wife, My life
_ My hubby, My world

உண்மையான நட்பு
உயிரைக் கொடுப்பது அல்ல
வாழவைப்பதே உண்மையான நட்பு

There are two greatest days in our life..
The day when we were BORN..
and
The day we discovered PORN

இன்றைய நாள்
உன் வாழ்வில் கூட்டப்பட்டது
இன்றாவது நல்லதைச் செய்யவே

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...