Saturday, 13 February 2010

போர் குற்றம்: சொந்த இலாபம் தேடும் மேற்குலகம்.

வலியுறுத்தல்கள் வலி தீர்க்குமா?
இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது போர் நிறுத்தம் செய்யும்படி பகிரங்கமாக வலியுறுத்தல்கள் பல நாடுகளால் விடப்பட்டன. அவையாவும் திரை மறைவாக இலங்கைக்கு தமிழினக் கொலைக்கு உதவி செய்து கொண்டே இந்த வலியுறுத்தல்களை விட்டன. இலங்கை அரசு தனது இனக் கொலையைச் செய்து முடித்து மூன்று இலட்சம் பேர்களை சட்டவிரோதமாக மோசமான சூழலில் தடுத்து வைத்தது.

இப்போது மீண்டும் ஒரு வலியுறுத்தல் எழுந்துள்ளது. அது இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றம் சம்பந்தமாக. கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்று கருதப்படக்கூடிய விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்பதை தாம் தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் கூறியிருக்கிறார். இந்த வலியுறுத்தல்களுக்கு இலங்கை செவிசாய்க்காது என்பதை அவரே நன்கு அறிவார். இலங்கையில் இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் தமக்கு ஏற்புடையவர்கள் அல்லர் என்பதனால் அவர்களுக்கு எதிராக ஒரு தொடர் மிரட்டல் விடுக்கவே இந்த வலியுறுத்தல் நாடகம். பல்லாயிரக் கணக்கான அப்பாவித்தமிழ் மக்கள் இறந்ததை எண்ணி வருந்தி அதற்காக விசாரணையை யாரும் வலியுறுத்தவில்லை. வலியுறுத்தலை இலங்கை ஏற்றுக் கொள்ளாவிடில் ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் என்ன செய்வார்? போர்குற்றம் நடந்தது என்று தமிழர்கள் சொல்கிறார் போர் குற்றம் நடந்ததாக போரை நடத்திய தளபதி சரத் பொன்சேக்காசொல்கிறார். போர் குற்றம் தொடர்பாக விசாரணை எதுவும் நடக்காது என்று இலங்கைக் குடியரசுத் தலைவர் ராஜபக்சேயின் உடன் பிறப்பும் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நீதிமன்றில் இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை தொடங்காமல் வலியுறுத்துவது ஏன்?

ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் அவர்களின் நாடகம்.
இலங்கை அரசிற் கும், விடுதலைப் புலி களுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப் பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ். இலங்கை அரசை சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். அவர் மேலும் தெரிவிப்பன:
  • சகல விதமான ஆயுதங்களும் பயன் படுத்தப்பட்டன.
  • துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்கள் முதல் மோட்டார்கள், ஆட்டிலறிகள் முதலிய கனரக ஆயுதங்கள் வரை விடுதலைப் புலிகளின் நிலை களைத் தகர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட் டன.
  • பொதுமக்கள் குறித்து போதிய கவனம் எடுக்கப்படவில்லை.
  • இலங்கை அரசு தெரிவித்த பல விடயங்கள் பொய்யானவை. சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்க முடையவையாகவும் அவை காணப்பட்டன.

இவ்வளவு காலமும் மௌனமாக இருந்த கோர்டன் வெய்ஸ் ஏன் இப்போது பேசுகிறார்? உண்மையில் இறுதிக் கட்டதில் இறந்தவர்கள் தொகை எழுபதினாயிரத்திற்கு மேல். அப்படியிருக்க கோர்டன் வெய்ஸ் ஏன் 40,000வரை என்று வரையறுக்கிறார்? ஒரு ஐநாவின் அதிகாரியாக இருந்து இவரால் இத்தனை இறப்புக்களையும் தடுக்க முடியாமல் போனது ஏன்? இதை தடுக்காமல் ஐநா இருந்தது ஏன்? ஐநாவும் சதிஸ் நம்பியாரும் போர் நடந்தவேளை செய்த சதிகளை கோர்டன் வெய்ஸ் ஏன் அம்பலப் படுத்தவில்லை? இலங்கை தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சியாளர் மேற்குலகிற்கு உகந்தவர் அல்லர் என்பதால்தால்தான் இவரை இப்போது பேசும்படியாராவது பணித்துள்ளார்களா? தேர்தல் முடிவு வேறுவிதமாக இருந்திருந்தாலும் இவர் இப்படிப் பேசியிருப்பாரா?

இலங்கை அரசு சிம்பாவே போல் முழுக்க முழுக்க மேற்குலகின் எதிர் நாடாக மாறி சீனா, ஈரான் போன்ற நாடுகளின் கூட்டத்தில் நிரந்தரமாக இணையாமல் இருக்கவும் மேற்குலகு இலங்கைக்கு தனது கையில் இருந்து நழுவாமல் இருக்கவும் மேற்குலகம் சுய இலாபம் தேடிக் காய்களை நகர்த்துகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் இதை நன்கு அறிந்து கொண்டுள்ளனர். இதனால் இலங்கை அரசு தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு தொண்டு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஒரு சிறிய நாட்டிற்கு இந்தளவு செல்வாக்கா என்று வியந்தார்.

Friday, 12 February 2010

தமிழர்கள் கொஞ்சம் மாற்றி யோசிப்பார்களா?

இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் நடந்த உண்மைக் கதை இது. ஒரு சிறுவன் ஒரு வயோதிபருக்கு சொந்தமான காணியில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் பிடுங்கிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். காணியில் யாரும் குடி இருப்பதில்லை. அந்த வயோதிபர் குடி இருப்பது தொலைவில். அது அந்தச் சிறுவனுக்கு வசதியாகப் போய்விட்டது. பொறுக்க முடியாத வயோதிபர் ஒருநாள் காணியில் மறைந்திருந்து சிறுவனைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டார்.
'உனக்குத் தண்டனை இங்குள்ள தேங்காய்களை எல்லாம் மரத்தில் இருந்து இறக்கி எனது வீட்டிற்கு கொண்டு போய்ச் சேர்ப்பது' என்று கூறி அச் சிறுவனின் தலையில் தேங்காய்களை சுமந்து கொண்டு தன் வீடு வரை நடக்கச் சொன்னார். சுமந்து கொண்டு போகும் வழியில் வயோதிபர் ஓரிடத்தில் களைப்பாற சற்று உட்கார்ந்தார். சிறுவன் தலையில் தேங்காயுடன் திரு திரு என விழித்துக் கொண்டு நின்றான். வயோதிபர் சிறுவனைப் பார்த்துச் சொன்னார் 'நீ முழிக்கிற முழியைப் பார்த்தால் இவ்வளவு தேங்காயையும் எனக்கு மேல் போட்டு விட்டு ஓடப் போகிறாய் போல் இருக்கிறது' என்றார். அப்போது தான் சிறுவனுக்கு அதுவும் ஒரு நல்ல யோசனையாகப் பட்டது. அப்படியே செய்தான். இத்தால் சகலரும் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் எமது எதிரிகளே எமக்குச் சிலசமயங்களில் நல்ல ஆலோசனையை வழங்குவார்கள்.இதைத் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வாழும் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள நாய்களுடன் ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள் இணைந்து கொண்டு இனக்கொலை செய்தமைக்கு பல காரணங்கள் உண்டு. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் சாதி மேலாதிக்கம், தமிழர்களுக்கு எதிரான மலையாளிகள் எனப் பல சொல்லிக் கொண்டே போகலாம். முதலில் இந்தியாவின் கொள்கை தமிழர்களுக்கு எதிராக மோசமாகத் திரும்பியது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதுதான். அப்போது வெளியுறவுச் செயலராக இருந்த பார்த்தசாரதியை பதவி நீக்கம் செய்து இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜே ஆர் ஜெயவர்தனவைத் திருப்திப்படுத்தினார் ராஜீவ் காந்தி. உலக அரச தந்திர வரலாற்றில் தன்னோடு முரண்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டைத் திருப்திப்படுத்த தனது நாட்டின் அனுபவமும் திறமையும் மிக்க ஒரு அதிகாரியைப் பதவி நீக்கம் செய்த முதலும் கடைசியுமான "அறிவாளி" ராஜீவ் காந்தி. அதன் பின் ஆசியாவின் மோசாமான குள்ளநரி என்று வர்ணிக்கப் பட்ட ஜே ஆர் ஜெயவர்த்தனவின் கைப்பொம்மையாகவே மாறிவிட்டார். இத்தனைக்கும் ஜே ஆர் செய்தது ஒன்றுதான். "இலங்கையில் தமிழர்கள் தமக்கென்று ஒரு தனி நாடு அமைத்தால் இந்தியாவிலும் தமிழர்கள் தமக்கென்று ஒரு நாடு அமைத்து விடுவார்கள்" என்று அரசியல் அறிவில்லாத ராஜீவ் காந்தியை நம்ப வைத்தார். இதற்காக ஜே ஆர் ஜெயவர்த்தன ராஜிவின் ஆலோசகர்களை நன்கு கவனித்துக் கொண்டாராம். இன்றுவரை இலங்கை இந்திய ஆலோசகர்களை நன்கு கவனித்துக் கொள்கிறது. அவர்களும் தங்கள் "எஜமானர்களுக்கு விசுவாசமாக" நடந்து கொள்கிறார்கள்.

எதிரியின் அச்சத்தையே உலகெங்கும் வாழும் தமிழர்கள் நல்ல ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழர்களைச் சுற்றி வல்லரசுகளின் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் கடலைத் தாண்டித்தான் உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி செல்கிறது. இதை ஒட்டியே தமிழர்கள் வாழும் பிரதேசத்தைச் சுற்றி ஒரு வல்லரசுகளின் போட்டியே நடக்கிறது. இதன் ஒரு அம்சமாகவே பலநாடுகள் ஒன்று கூடி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்தன. தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் சுட்டுக் கொல்லப் படும்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. இன்று கடலில் நடந்தது நாளை தரையிலும் நடக்கலாம். தனது பிராந்தியத்தின் முக்கியத்துவமே தமிழனுக்கு எதிரியாக மாறியது ஏன்? தமிழன் பிராந்தியத்தின் ஆட்சி அதிகாரம் ஆரிய சிங்களப் பேய்கள் கையில் இருப்பதால்தான். பாக்கு நீரிணையின் இரு புறமும் வாழும் தமிழர்கள் கொஞ்சம் மாத்தி யோசிக்க வேண்டும். எங்கோ இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள் தமிழர்களைக் கொள்ளை அடித்து கோடிக்கணக்கில் பணம் குவித்து தங்கள் குடும்பத்தின் ஒரு சொத்தாக தமிழ்நாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா உலகம் அடிகடி செய்யும் பாராட்டு விழாவைக் கண்டு களித்துக் கொண்டிருக்காமல் உண்மையில் என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழர்களை யார் இப்போது ஆள்கிறார்கள் ஒரு இலட்சம் தமிழர்கள் இறக்கும் போது ஆறரைக் கோடி தமிழர்களால் ஏதும் செய்யமுடியாமல் போனது ஏன்? தமிழனால் தன் உறவுகளின் மோசமான நிலை கண்டு தீக்குளிக்க மட்டும்தான் முடியுமா? உண்ணாவிரதம் இருந்தது கொட்டும் மழையில் கைகோத்து நின்றது ஊர்வலம் போனது குரல் கொடுத்தது எல்லாம் பயனளிக்காமல் போனது ஏன்? தமிழன் கையில் அதிகாரம் இருக்கிறதா?

Thursday, 11 February 2010

பாக்கு நீரிணை மேலால் தமிழர்கள் கைகள் இணையட்டும்


தமிழர்களுக்கு ஒரு மூச்சு விடும் இடைவெளி தேவை.
தமது அப்பாவி மகன், தானும் தன்பாடுமாக இருப்பவன், ஒருவர்க்கும் தீங்கு செய்யாதவன் எங்காவது ஒரு வெளிநாட்டிற்குப் போய் தப்பிப் பிழைக்கட்டும் என்று தம் சொத்துக்களை விற்று அவன் கையில் பணத்தை கொடுத்து கொழும்புக்கு அனுப்பினால் பின்னார் அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.
அவன் காணாமற் போனோர் பட்டியலில். இப்படி எத்தனை பெற்றோர்கள்? குண்டு வீச்சில் இறந்த குழந்தைகள் எத்தன? கருவிலேயே குண்டுவீச்சால் அழிந்த குழந்தைகள் எத்தனை? கப்பம் கேட்டுக் கடத்திச் சென்ற 5வயதுச் சிறுமியை வன்புணர்ச்சிக்கு உள்ளாககிக் கொல்லும் கவர்களால் பாதிக்க்ப பட்டவர்கள் எத்தனைபேர்? ஒருவரும் இல்லாமல் அழிந்த குடும்பங்கள் எத்தனை? சகல பிள்ளைகளையும் மாவிரர்களாய் கண்ட குடும்பங்கள் எத்தனை? அமைதிப் படையில் அட்டூழியங்களால் பாதிக்கப் பட்ட குடும்பங்கள் எத்தனை? ஈழத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு விதமான கண்ணீர்கதை உண்டு. 1972இல் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் இன்றுவரை இடையின்றித் தொடர்கிறது. பலநாடுகள் ஒன்று கூடி உள்வீட்டுத் துரோகிகள் உதவியுடன் கேள்விக் குறியாக்கப்பட்ட தமது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக் கூட பயப்படும் நிலையில் தமிழர்கள் இப்போது.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் இருந்து தெற்கு நோக்குச் செல்லும் தொடரூந்தில் இடையில் ஏறும் சிங்களவர்கள் தமிழர்களை பலவந்தமாக எழுப்பிவிட்டு தாம் அமரும் நிலையில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம் துரோகிகளால் இன்று தமிழர்கள் வீடு புகுந்து சிங்களவர்கள் அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றி விட்டு தாம் குடியேறும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.

பல துன்பங்களை நீண்டகாலமாக அனுபவித்து வந்த தமிழர்களுக்கு இப்போது ஒரு மூச்சு விடும் இடைவெளிதேவை. விழ விழ எழுபவனுக்கு தன்னைத் தானே சுதாகரிக்க ஒரு கால அவகாசம் தேவை. இந்தக் கால அவகாசத்தை உள்ளூர் அரசியல்வாதிகளால் மட்டுமே வழங்க முடியும். கோயில் புனர் நிர்மாணத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாக்களைக் கொடுத்து விட்டு பத்து இலட்சம் ரூபாக்கள் கொடுத்ததாக பற்றுச் சீட்டு வாங்கிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் இனித் திருந்தவேண்டும் அல்லது அரசியலில் இருந்து விலகவேண்டும். தமிழ்ப் பாராளமன்ற அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவதால் மட்டுமே திணறி நிற்கும் தமிழர்களுக்கான மூச்சு விடும் இடைவெளியைக் கொடுக்க முடியும்.

ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் அடுத்த சதி.
தமிழர்களின் ஆயுத போராட்டத்தை மழுங்கடித்த ஆரிய சிங்களக் கூட்டமைப்பு இப்போது தமிழர்களை இனித் தலையெடுக்காதபடி நிரந்தர அடிமைகளாக்கும் திட்டத்தை செயற்படுத்த முனைகிறது. வில்லங்கமான வில்லன் நம்பியாரான சதிஸ் நம்பியார் என்னும் இந்தியன் வரையறைத்துக் கொடுத்த பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழர்களைன் நிலங்கள் பல ஏற்கனவே அபகரிக்கப் பட்டன. மேலும் பல நிலங்களை தமிழர்களிடம் இருந்து அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு அபகரிக்கப் போகிறது. இதனால் தமிழர்களை ஒரு நிரந்தர சுற்றி வளைப்புக்குள் வைத்திருக்க அது முயல்கிறது. பாக்கு நீரிணையின் இரு புறமும் இருக்கும் தமிழர்களை அடக்கும் திட்டமும் இதில் அடங்கும். பாக்கு நீரிணையின் இரு புறமும் வாழும் தமிழர்கள் இதை உணர்ந்து செயற்பட வேண்டும். பாக்கு நீரிணை மேல் தமிழர்கரங்கள் இணையட்டும்.

Wednesday, 10 February 2010

சரத் பொன்சேக்காவிற்கு நடக்கவிருப்பவை.

இலங்கைப் பாராளமன்றம் கலைக்கப்பட்டமை சரத் பொன்சேக்கா மீது எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை மூடி மறைக்க ஏதுவாக அமையும். இலங்கைப் பத்திரிகைகள் மீது உள்ள கெடுபிடிகள் எந்த விதத்திலும் குறைவதற்கான அடையாளங்கள் இல்லை. பாராளமன்றம் செயற்படாத நிலையில் எதிர்க் கட்சிகள் உண்மைகளை வெளிக் கொண்டு வருவது கடினம். இதனால் சரத் பொன்சேக்காவிற்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வது கடினம்.

பதவி இறக்கப்பட்டு மானபங்கப் படுத்தப்படவுள்ள சரத்.
ஒரு ஓய்வு பெற்ற ஜெனரலுக்குரிய கௌரவத்துடன் சரத் பொன்சேக்கா மீதான விசாரணை நடக்காமல் இருக்க அவர் விரைவில் சாதாரண படை வீரனாக பதவி இறக்கப் படலாம். இது தமிழர்களுக்கு எதிரான கொடுமையான போரை நடத்திய சரத் பொன்சேக்காவை மானபங்கப் படுத்த தமிழ் இனக்கொலை புரிந்த ராஜபக்சக்கள் எடுக்கும் நடவடிக்கை. தமிழர்கள் இதை ஒரு தொடர் நாடகம் போல் பார்த்து இரசிக்கலாம்.

சரத் பொன்சேக்கா இனி தேர்தலில் போட்டியிட முடியாது!
சரத் பொன்சேக்கா இனி தேர்தலில் போட்டியிட முடியாதபடி அவரது இலங்கைக் குடியுரிமை பறிக்கும் எண்ணம் கோத்தபாய ராஜபக்சவிடம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. முன்பு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை இப்படிப் பறிக்கப் பட்டு இலங்கையின் முதலாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக சிறிமாவோ போட்டியிடாமல் ஹெக்டர் கொப்பேகடுவ ஜே ஆர் ஜயவர்த்தனவிற்கு எதிராகப் போட்டியிட்டார்.

குற்றச் சாட்டுகளுக்கானவிரிவான விளக்கங்கள் இல்லை
  • இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டமை.
  • பதவியில் இருக்கும்போது ஆயுதப் படைத் தலைவருக்கு( மஹிந்த ராஜபக்ச) எதிராக சதிசெய்தமை.
  • படையிலிருந்து தப்பி ஓடிய 1500இற்கு மேற்பட்டோரை தனனுடன் வைத்திருந்தமை.
  • படைத்துறை கொள்வனவுகளில் முறைகேடாக நடந்தமை.
ஆகிய குற்றச் சாட்டுக்கள் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக முன்வைக்கப் பட்டிருந்தாலும் அதற்கான் பூரண விளக்கங்கள் இதுவரை வெளியிடப் படவில்லை. இராணுவ நீதிமன்றில் முறைப்படி குற்றப் பத்திரிகை சமர்ப்பிக்கும்வரை அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்று இப்போது கூற முடியாது என்று சட்டவல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப் பட்ட கொழும்பு பங்குச் சுட்டெண்
தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அரசியல் திடத் தன்மை ஏற்பட்டுள்ளது என்று முதலீட்டாளர்கள் கருதியதால் கொழும்பு பங்குச் சுட்டெண் தொடர்ந்துஉயர்ந்து வந்து சாதனைகள் படைத்தது. சரத் பொன்சேக்கா திங்கள் இரவு கைது செய்ததைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை(நேற்று) வீழ்ச்சியைக் கண்டது. இன்றும் ஒரு தளும்பல் நிலையிலேயே காணப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைப் பங்குகளை விற்பதிலேயே அக்கறை காட்டுகின்றனர். இது வரும் காலங்களில் மேற்கு நாடுகளின் நடவடிக்கை இலங்கைப் பொருளாதார்த்திற்கு சாதகமாக இருக்காது என்று நம்பப்படுகிறது.

குட்டிமணி தங்கத்துரை ஜெகன் போன்றேருக்கு நடந்தது
சரத் பொன்சேக்காவிற்கு நடக்குமா?
தமிழ்ப் போராளிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையில் திருப்தி அடையாத சிங்களப் பேரினவாதிகள் 1983இல் வெலிகடைச் சிறைச் சாலையில் அவர்களைக் கொடூரமான முறையில் கொன்றனர். சரத் பொன்சேக்காவிற்கு எதிராக இன்று உயர் நீதிமன்றத்தில் சரத் கைது செய்யப் பட்டமைக்கும் இராணுவ நீதிமன்றில் விசாரிக்கப் படுவதற்கும் எதிராக மனு சமர்ப்பிக்கப்படும். சரத் பொன்சேக்காவிற்கு இராணுவ நீதி மன்றம் வழங்கும் தண்டனையில் அவரது எதிரிகள் திருப்தியடையாவிட்டால் தமிழ்ப் போராளிகளுக்கு நடந்தது சிங்களப் போராளிக்கு நடக்குமா?

Tuesday, 9 February 2010

சரத் பொன்சேக்காவின் கைதுக்குப் பின்னால்....


காலம்: 08-02-2010 இரவு 10 மணி,
இடம்
: இராஜ்கீய மாவத்த( ரோயல் கல்லூரிக்கு எதிரே), கொழும்பு.
பாத்திரங்கள்
: சரத் பொன்சேக்கா, மனோகணேசன், சோமவன்ச அமரசிங்க, ரவு ஹக்கீம், கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா.
இப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்ட இடத்தில் ஒரு கலந்துரையாடாலைச் செய்துகொண்டிருக்கும் போது இராணுவக் காவற்துறைப் பிரிகேடியர் விஜயசிரி, மேஜர் ஜெனரல் மானாவடுகே ஆகியோர் தலைமையில் ஒரு இராணுவக் காவல்துறைப் படையினர் அங்கு நுழைந்தனர். அவர்களை எதிர்த்துப் பேசிய கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா என்னும் சரத் பொன்சேகாவின் ஊடகத்துறைப் பேச்சாளர் முதலில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சரத் பொன்சேக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டது:
  • இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டமை.
  • பதவியில் இருக்கும்போது ஆயுதப் படைத் தலைவருக்கு( மஹிந்த ராஜபக்ச) எதிராக சதிசெய்தமை.
  • படையிலிருந்து தப்பி ஓடிய 1500இற்கு மேற்பட்டோரை தனனுடன் வைத்திருந்தமை.
  • படைத்துறை கொள்வனவுகளில் முறைகேடாக நடந்தமை.
ஆகியவை சரத் புரிந்த குற்றங்களாக தெரிவிக்கப் பட்டது. அதை எதிர்த்து உரையாடி கைது செய்யப்பட மறுத்தமையால் சரத் பொன்சேக்கா பலவந்தமாக இழுத்துச் செல்லப் பட்டார்.

இலங்கை இந்தியப் போர்குற்றங்களின் மிகமுக்கிய சாட்சியம்.
பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் இலங்கையில் நடந்த மோசமான போர்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இந்தியப் படைகளிற்கு எதிரான சாட்சியாக திகழ்பவர் சரத் பொன்சேக்கா. அது தொடர்பாக அண்மைக் காலங்களாக சரத் பல கருத்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தச் சாட்சியை இல்லாதொழிக்க முதலில் இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடிய பின்னர் சரத் பொன்சேக்காவைக் கைதுசெய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத்தின் கைதத் தொடர்ந்து வரும் பன்னாட்டு அழுத்தங்களைச் சமாளிக்கவே மஹிந்த ராஜபக்ச இரசியாவிற்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி இந்தியா ஆலோசனை தெரிவித்ததாகவும் செய்திகள் மேலும் கூறுகின்றன.

அதிரடி அறிவிப்பு
இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் ஒரு அதிரடி அறிக்கை விட்டார். பொன்சேகா மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக எனக்கு தெரிந்தவை, நான் கேள்விப்பட்டவை, எனக்கு தெரியப்படுத்தப் பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளேன்.
போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்"
இந்த அறிக்கையை விட்டதால்தான கைது செய்யப்பட்டார் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் தான் கைது செய்யப் படப் போகிறேன் எபதை அறிந்தே சரத் பொன்சேக்கா இந்த அறிக்கையை விட்டுள்ளார்.

சிங்க படையணி
சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவானதாகக் கருதப்படும் சிங்கப் படையணியைக் கலைத்த பின்னரே அவரைக் கைதுசெய்வதாக அரசு திட்டமிட்டிருந்ததாம். ஆனால் அவர் அதற்கு முன் போர்குற்றங்கள் சம்பந்தமாக பகிரங்கப் படுத்தலாம் என்று அஞ்சியே அவசரக் கைது நடந்தேறியது. சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவானவர்களை ஓரம் கட்டும் முயற்ச்சி தொடங்கி பல மாதங்களாகிவிட்டன. ஆனால் சிங்கப் படையணியைக் கலைப்பது தேனிக்கூட்டிற்கு கல் எறிவது போன்றது. அது கவனமாகச் செய்யப் படவேண்டியது என்றே அரசு அதில் அவசரம் காட்டவில்லை. ஆனால் தேர்தல் நடக்கும் போதே சிங்கப் படையணி ஒருவிதச் சுற்றி வளைப்புக்கு உடபடுத்தப் பட்டுவிட்டது.

சட்டப் பிரச்சனை
இராணுவ சேவையில் இல்லாத ஒருவரை இராணுவக் காவற்துறையினர் கைது செய்ய முடியாது என்று சரத் பொன்சேக்கா சட்டப் பிரச்சனையை எழுப்பி முரண்பட்டார். அதனால் அவர் தாக்கி நிலத்தில் விழுத்தப் பட்டு காலில்பிடித்து இழுத்துச் செல்லப் பட்டார்.

அழும் அமெரிக்கா! கதறும் ஐநாவின் நைனா!
சரத் கைதுசெய்யப்பட்டதால் சிங்களம் இரண்டாகப் பிளந்து விடுமோ என்று தாம் அஞ்சுவதாக அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது:"There is a tremendous need for the government of Sri Lanka to work to overcome the fissures that exist within its society. It has to be very cautious that any actions it takes are designed to heal the split within Sri Lankan society, not to exacerbate it".
ஐக்கிய நாடுகள் சபைச் செயலர் வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாதென்றார். இதுவரை கொழும்பில் வன்முறைகள் ஏதும் இடம்பெறவில்லை.

கைதுக்குப் பின்னால்
சரத் பொன்சேக்காவின் கைதின் நோக்கங்களில் பழிவாங்கலும் போர்குற்ற மறைப்பும்தான் முக்கியமானவை. இலங்கை அரசு சரத் ஆதரவாளகளின் எதிர்ப்புக்களுக்கு எதிராக சகல முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டது என்றே தோன்றுகிறது. அவரின் கைதிற்கு எதிரான செயற்பாடுக்ளுக்கு உள்ளூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரவிருந்த எதிர்ப்புக்களுக்கு எதிராக சகல நடவடிக்கைகளும் அரசு தரப்பு கனகச்சிதமாக மேற்கொண்டுவிட்டது.
பகிரங்க விசாரணையில் பகிரங்கமாகும் உண்மைகள்.
கள்ளர்களுக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும்.
சரத் பொன்சேக்காவிற்கு எதிராக பகிரங்க விசாரணை நடத்தப்பட்டால் பல உணமைகள் வெளிவரும். இதை மறைக்க இராணுவ இரகசியங்கள் வெளிவரும் என்ற காரணம் காட்டி அரசு தரப்பு இரகசிய இராணுவ நீதிமன்றில் சரத்தை விசாரிக்கும் சாத்தியம் உண்டு. அதற்கு சட்டத்தில் இடமில்லாவிடில் சட்டத்தை அரசு மாற்றி அமைக்கலாம். சரத் பொன்சேக்கா ராஜபக்ச சாகோதரர்களுக்கு எதிரான குற்றங்களை முன்வைக்க ஒரு பகிரங்க மேடைக்குக் காத்திருக்கிறார் என்பது அவர் நேற்றுக் கைது செய்யப்படமுன்னர் வெளிவிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சரத் பொன்சேக்காவிற்கு மரணம் சம்பவிக்குமா?
சரத் பொன்சேக்கா என்று ஒருவர் உயிருடன் இருக்கும்வரை போர் குற்ற உண்மைகளை மூடி மறைக்க முடியாது. அவர் மீதான குற்றத்திற்கு ஆகக் கூடிய தண்டனை ஆயுள் சிறைத் தண்டனை மட்டுமே. அவரைத் தடுத்து வைத்திருக்கும் சிறைக்குள் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அவருக்கு மரணம் சம்பவிக்கச் செய்யும் சாத்தியம் உண்டு.

ஐநாவின் பொய்நா கொண்ட நைனாமௌனமாக இருப்பாரா?
அண்மையில் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் போர் குற்றம் தொடர்பாக எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப் படமாட்டாது என்று கூறிய போது அமெரிக்கப் பேராசிரியர் பொய்ல் அவர்கள் ஒரு போர் குற்றம் நடந்த நாட்டில் போர்குற்ற விசாரணை நடக்காத போது ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு போர் குற்ற விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார். நேற்று சரத் பொன்சேக்கா இலங்கையில் நடந்த போர் குற்றங்களை எங்கு வேண்டுமானாலும் தெரிவிப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்த பின் அவரை விசாரிக்கும் கடப்பாடு ஐநாவிற்கு உண்டு. அதை ஐநாவின் பொய்நா கொண்ட நைனா செய்வாரா?

Monday, 8 February 2010

இலங்கையில் தை மாதத்தில் முடிந்த ஆடித் தள்ளுபடி


தமிழ்நட்டில் ஆடித் தள்ளுபடி என்று செய்யும் வியாபாரம் இலண்டனில் நீல புள்ளடித் தினம் என்று நடக்கும். கடைகள் சாதாரண விலையிலும் பார்க்கா அதிக விலை குறித்து முதலில் பொருட்கள விற்பனைக்கு வைக்கும். பின்பு ஒரு வியாழக்கிழமை நீலப் புள்ளடித் தினம் (Blue Cross Day) என்று அறிவிக்கும். வியாழக்கிழமைகளில்தான் மக்கள் கைகளில் அதிக பணம் இருக்கும். அன்று நீலப் புள்ளடி இட்ட பொருட்கள் வழமையான விலையிலும் பார்க்க 20% அல்லது அதற்கு மேல் குறைத்து விற்கப் படும். அத்தினம் நிறைய விற்பனை நடக்கும். மறுநாள் பொருட்கள் வழமையான விலைக்குத்தான் விற்கப்படும்.

இலங்கையிலும் தமிழ் மக்கள் மோசமான கெடுபிடிகளுக்கு 1972இல் இருந்து உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். சிங்களவனின் அடக்கு முறைகள் அட்டூழியங்கள் போதாது என்று ராஜீவ் காந்தி என்ற அரசியல் அறிவில்லாதவன் ஒரு சாத்தான் படைகளை அனுப்பி தமிழ் மக்கள் மீது மோசமான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். தமிழனுக்கு உதவ இந்தியா இருக்கிறது என்று பயந்து இருந்த சிங்களவன் தமிழனின் மிகமோசமான விரோதி இந்தியாதான் என்பதை உணர்ந்து கொண்டான். காந்தியின் பெயரைத் திருடி தம்முடன் இணைத்த கள்ளக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பேரினவாத ஆரியப் பேயான ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகளுக்குப் பிறகு சிங்களவர்கள் தமிழர்கள் மீதான கெடுபிடியை உச்சத்திற்கு எடுத்துச் சென்றனர். மூர்க்கமாக தமிழர்கள் சிங்களவன் முறைகளை எதிர்த்தபோது இந்தியா ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை வற்புறுத்தி தமிழர்கள் போராட்டம் ஒரு பயங்கரவாதம் என்று முத்திரை குத்தச் செய்தது. அதைத் தொடர்ந்து தமிழர்கள் போராட்டத்தை சர்வதேச சமூகம் என்னும் பன்னாட்டு ரவுடிக் கும்பல் ரவுண்டு கட்டித் தாக்கி மழுங்கடித்தது.

சிங்களவன் ராஜபக்ச தான் போரில் வென்றதாக மார்தட்டி தேர்தல் களத்தில் இறங்கினான். அவனுக்கு தமிழர்களின் வாக்கு தேவைப்பட்டது. தமிழர்களின் வாக்குகளை வேண்டி ஒரு "ஆடித் தள்ளுபடி" அல்லது "நீலப் புள்ளடித் தினம் (Blue Cross Day" அறிவித்தான். சில தமிழர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழர்களுக்கு என இருந்த நடமாடும் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன, சோதனைச் சாவடிகள் நீக்கப் பட்டன. தேர்தல் முடிய கெடுபிடிகள் மீண்டும் முன்னரைவிட மோசமாக மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ் மக்கள்மீன்பிடிப்பதற்கான தடை இப்பொது முன்னைவிடமோசமாக அமூல்படுத்தப்படுகிறது.

கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் இரண்டு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பபட்டுள்ளார்கள். இவர்களது உடலங்களை மக்கள் இனம்காட்டியுள்ளதுடன், உடலங்களை சிறீலங்கா காவல்துறையினர் எடுத்துசென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிளிநொச்சிப் பகுதியில் தமிழர்களை மீள் குடியேற்றாமல் தடுக்க செய்த பயமுறுத்தலா? அங்கு சிங்கள மயப் படுத்தி தமிழர்களின் நிலங்களைப் பறிக்கும் முயற்ச்சியா?

யாழ்ப்பாணத்தில் சிங்கள வர்த்தகர்கள் சட்டவிரோதமாக தெருக்களில் கடைகள் போட்டு வியாபாரம் செய்வதைத் சுட்டிக்காட்டி எழுதிய பத்திரிகை ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப் பட்டது.

Sunday, 7 February 2010

இலங்கைப் பொருளாதாரத்திற்கு விழும் இரு அடிகள்


இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி+ வர்த்தகச் சலுகைத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய இணையதளம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு உறுப்பு நாடுகளுக்கு இரண்டுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

GSP+சலுகையைப் பெறுவதற்கு என்று சில நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும். அதில் முக்கியமானது 27 சர்வதேச உடன்படிக்கைகளில் சலுகை பெறமுயலும் நாடு கையொப்பமிட்டிருக்க வேண்டும். அந்த உடன்படிக்கையை மதித்து பின்பற்றி நடக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை மனித உரிமைகள் சம்பந்தமானது. இலங்கையின் மனித உரிமைகள் மீறல் காரணமாக இச் சலுகையை இடை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

2005ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இலங்கைக்கு இந்த வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டது. இலங்கைக்கு மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதி வருமானம் இதனால் ஆண்டு தோறும் கிடைக்கிறது. 100,000 பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர். Marks & Spencer உட்படப் பல வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இடை நிறுத்தம் இலங்கை பொருளாதரத்திற்கு விழும் ஒரு அடியாகும்.

சவுதி அரேபியா இலங்கைப் பணிப்பெண்களுக்குத் தடை.
சவுதி அரேபியா திடீரென இலங்கைப் பணிப்பெண்களுக்குத் தடை விதித்துள்ளது.
சவுதி அரேபியாவில் மூன்று இலட்சம் இலங்கைப் பணிப்பெண்கள் வேலை செய்கின்றனர். இதனால் இலங்கைக்கு ஆண்டு தோறும் எழுபது மில்லியன் டொலர் வருமானக் கிடைக்கிறது. இலங்கை பெண்கள் கொலை சிறுவர் மீதான வன்முறை மற்றும் கலாச்சார விரோத நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுவதால் இந்தத் தடை என்று சவுதி தரப்பில் சொல்லப்படுகிறது. இது அண்மைக் காலங்காளில் இலங்கை பொருளாதரத்துக்கு விழுந்த அடுத்த அடியாகும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...