Friday, 21 August 2009

வன்னியில் பாக்கிஸ்த்தானியப் படைகள் முகாம் - பயிற்ச்சி என்ற போர்வையில்


இலங்கையில் பாக்கிஸ்த்தானிய இராணுவத்திற்கு பயிற்ச்சி அளிக்கவிருக்கிறது. இதற்கு வன்னியில் பயிற்ச்சிக் கல்லூரியை இலங்கை இராணுவம் அமைக்கவிருக்கிறது.

இது செய்தி. ஆனால் இதன் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும். நேற்றுவரை இலங்கை இராணுவம் பாக்கிஸ்த்தானில் பயிற்ச்சி பெற்று வந்தது. பாக்கிஸ்த்தானிய படையினர் முக்கியமாக விமான ஓட்டிகள் நேரடியாகவே தமிழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப் பட்டது. இப்படி இருக்கையில் பாக்கிஸ்த்தானுக்கு இலங்கையில் பயிற்ச்சி என்பது நம்ப முடியாததொன்று.

இந்தியப் படைகள் கண்ணிவெடி அகற்றுவது என்ற போர்வையில் இலங்கையில் காலடி எடுத்து வைத்ததை பாக்கிஸ்த்தானும் சீனாவும் விரும்பி இருக்காது. இதற்கு அவை தனியாகவோ அல்லது ஒருங்கிணந்தோ எடுக்கும் நடவடிக்கையா இது? இது பயிற்ச்சி முகாம் என்ற போர்வையில் அமைக்கப் படவிருக்கும் பாக்கிஸ்த்தானிய இராணுவ முகாமா?வன்னி வதை முகாம்களில் இருக்கும் மக்களின் நிலங்கள் இதற்காகப் பாவிக்கப் படவிருக்கிறதா?

தமிழ்த் திரையுலகைக் கேவலப் படுத்திய சிங்கள அரசு. வாய்மூடியிருக்கும் ஆரிய அரசு



இலங்கை அரசின் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் தென்னிந்தியத் தமிழ்த் திரைப் பட உலகம் விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஏசியன் றிபியுனுக்கு (Asiantribune) வழங்கிய செவ்வியிலேயே இந்தக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

Did Rajnikanth, Vaiko and Ramdoss benefit from LTTE money? Yes, they did, alleges Sri Lanka Minister for Resettlement and Disaster Relief Services Abdul Risath Bathiyutheen, who also claims that the Tigers funded business ventures and set up Tamil radio and TV stations in the West and Far East.

இப்படி Asiantribune.com இல் செய்திவெளிவந்தது.

இவ்வாறிருக்க ரைம்ஸ் ஒf இந்தியா இப்படிக் கூறுகிறாது:

CHENNAI: A Sri Lankan minister has stirred up a controversy by alleging that the LTTE had funded the production of Tamil movies as part of its international business ventures. Resettlement and disaster relief services minister Abdul Risath Bathiyutheen reportedly said films thus tainted by 'LTTE blood money' included Tamil superstar Rajnikanth's movies.

சிங்கள அரசால் வைக்கப்பட்ட இக்குற்றச் சாட்டு சாதாரணமானதல்ல. விடுதலைப் புலிகள் தடை செய்யப் பட்ட இயக்கம். அதனுடன் பணக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். அப்படியான தொடர்பு இருந்தால் அதை ஏன் இந்தியக் காவல்துறையோ உளவுத்துறையோ கண்டு பிடிக்க முடியாமல் போனது? இந்திய மைய அரசு இலங்கையுடன் தான் நல்ல உறவுகளைப் பேணுவதாகவும் அதன் பிராந்திய ஒருமைப் பாட்டையும் மதிப்பதாகவும் இலங்கைக்கு பயங்கர வாத ஒழிப்பில் உதவுவதாகவும் அடிக்கடி பிதற்றிக் கொள்கிறது. அப்படிப்பட்ட நல்ல உறவு பேணப்படும் நாடாகிய இலங்கைக்கு இந்தியாவில் விடுதலைப் புலிக்ளுக்கு பணம் சேர்ப்பதாகத் தெரிந்தால் அதை பற்றி அரச மட்டத்தில் இராச தந்திர மட்டதில் எடுத்துச் சொல்லப் பட்டு நடவடிக்கை எடுக்காமல் இப்படி அறிக்கைகள் விடுவது ஏன்? இது தொடர்பாக இந்திய மைய அரசு ஆட்சேபம் தெரிவிக்குமா? இந்தியக் குடிமக்களுக்கு அல்லது அங்குள்ள அமைப்புக்களுக்கு எதிராக வேறு நாடு குற்றம் முன்வைக்கும் போது இந்தியா என்ன செய்யவேண்டும்? செய்ய வேண்டியதை இந்தியா செய்யுமா?

தமிழர்கள் இந்தியர் இல்லையா?
இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப் படுவதற்கு எதுவும் செய்யாத இந்தியா இதற்கு மட்டும் ஏதாவது செய்யுமா? உத்தரப் பிரதேச பேரினவாதிகளின் தமிழ்நாட்டுக் கொத்தடிமைகள் எல்லை தாண்டும் மீனவர்கள் கொல்லப் படுவர் என்று பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் சொல்கின்றனர். ஒருவர் தனது நாட்டு எல்லையை தாண்டி மற்ற நாட்டு எல்லைக்குள் செல்லும் போது சுட்டுக் கொல்லப் படுவதில்லை. அவர் கைது செய்யப் பட்டு நீதிம்னறில் நிறுத்தப் படுவர். அப்படிக் கொல்லப் படுவது இருநாடுகளுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே இது நடக்கும். மானம் கெட்ட இதிய மைய அரசைப் பொறுத்தவரை தமிழர்கள் இந்தியர் இல்லையா?

Thursday, 20 August 2009

கோபாலபுரம்-டெல்லி-கொழும்பு அடுத்த தொடர் நாடகம் ஆரம்பம்?


இந்த ஆண்டின் முதற் பகுதியில் இலங்கையில் இனக்கொலை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தவேளை கோபாலபுரத்திலிருந்து டெல்லிக்கு தந்திகள் கோரிக்கைகளாகப் பறக்கும் போர் நிறுத்தம் உடனடியாக வேண்டும் என்று. கோபாலபுரம் அது நடக்கப் போவதில்லை என்பதயும் நன்கு அறியும் இருந்தும் தொடர்ந்து கோரிக்கைகள் பறந்த வண்ணமே இருந்தன. டெல்லியும் சும்மா இருக்கவில்லை போர் நிறுத்தம் போர் நிறுத்தம் என்று கொழும்பை நோக்கி கூவிக் கொண்டே இருந்தது. ஆனால் டெல்லியும் கொழும்பும் இணைந்து தான போரை நடாத்தி தமிழர்களை கொன்று குவித்ததாம். இடையில் இலங்கையில் போர் முடிந்து விட்டது என்று கோபாலபுரம் மார்தட்டிக் கொண்டது. அப்படி இல்லை அங்கு இப்போதும் போர் நடக்கிறது என்று யாராவது சொன்னால் அவர்கள் மிரட்டப் பட்டனர். சனி-நரிக் கூட்டமைப்பு இந்த நாடகத்தை வைத்து தேர்தலில் வென்றது. இந்த ஆண்டில்அறுபதிராயிரத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் கொல்லப் பட்டனர்.

இரண்டாவது நாடகம்.
கொழும்பின் இரண்டாவது இன அழிப்பு மூன்று இலட்சம் தமிழர்களை இடைத் தங்கல் முகாம் எனப்படும் வதை முகாம்களில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பது. அதற்கு டெல்லி ஐநூறு கோடி ரூபா கொடுக்கும். டெல்லி கோபாலபுரத்திற்கு ஆறு மாதங்களுக்குள் மூன்று இலட்சம் தமிழர்களும் மீள் குடியேற்றப் படுவார்கள் என்று சொல்லி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை.
கோபாலபுரம் தொடர்ந்து கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது தமிழர்கள் மீளக் குடியேற்றப் பட வேண்டும் என்று.
டெல்லியும் கொழும்புக்கு "வலியுறித்திக்" கொண்டே இருக்கிறது.
கொழும்பு எதுவும் செய்யவில்லை. கொழும்பு இலங்கை முழுவதும் சிங்களவர்கள்தான் வாழவேண்டும் என்ற கொள்கையுடையது. மற்றவர்கள்????

கொழும்பிலிருந்து கோபாலபுரத்திற்கு டெல்லியூடாக வந்த உத்தரவிற்கு அமைய கோபால புரம் இப்போது சொல்கிறது இலங்கையில் சுமூக நிலை தோன்றிவிட்டது என்று.
இதுதான் இப்போதைய வெற்றி நாடகம்.
இல்லை இலங்கையில் தமிழர்கள் பரிதவிக்கிறார்கள் என்று சொல்பவர்கள் மிரட்டப் படுவார்களா?

இத்தாலிச் சனியாள் கீதை - 3



வன்னி வதை முகாம்களில் அடைத்து

தண்ணீரிலும் கண்ணீரிலும்

தமிழர்களை நன்றாகவே வதைகின்றாய்

உலகத்தை உன்னதமாக ஏமாற்றுகின்றாய்

உனக்கிட்ட கட்டளையை நன்றாகவே நிறைவேற்றுகின்றாய்

சர்வதேசங்களையும் நன்றாகவே ஏமாற்றுகின்றாய்

உனது கடமைகளை நன்றாகவே நிறைவேற்றுகிறாய்

ஐந்து கோடி கைக்கூலி உன்னை நாடி வரும்

கலைஞரும் இன்று உன் பக்கமே

உன்னை நன்றாகவே புகழுகிறான்

இன வதைகளைத் தொடர்ந்து செய்

தண்டனைகளைப் பற்றிக் கவலைப் படாதே

Wednesday, 19 August 2009

தமிழர்களைக் காக்கும் பொறுப்பும் (R2P) சர்வதேசத்தின் மௌனமும்












.
.
.



இலங்கையில் ஆயுத ரீதியாக தமிழர்கள் பலமாக இருந்த போது இணைத் தலைமை நாடுகள் என்று ஒன்று இலங்கைப் பிரச்சனையைத் தீர்பதற்கு ஏற்படுத்தப் பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே என்பன இதில் இணைந்து கொண்டன. இதில் இந்தியாவையும் இணைய அழைத்தபோது அது மறுதுவிட்டது. ஆனால் இலங்கை விவகாரத்தில் இந்தியாவும் இவர்களுடன் இணந்து திரை மறைவில் செயற்பட்டது.

இந்த இணைத் த(றுத)லை நாடுகள் அவ்வப் போது கூடி இலங்கை மக்கள் மீது தமக்கு அக்கறை இருப்பது போலவும் இலங்கையின் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பது போலவும் பாசாங்கு செய்து கொண்டு இலங்கைக்கு நிதியுதவி அழிப்பதிலும் தமிழர்களின் ஆயுத போராட்டத்தைப் பயங்கரவாத முத்திரை குத்துவதிலும் ஈடுபட்டனர்.

ஆனால் இவர்கள் தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனித்ததுடன் தாமும் மௌனித்துக் கொண்டனர். அதன் பிறகு இவர்களது எந்தக் கூட்டமும் நடை பெறவில்லை அறிக்கைகள் விடுவதும் இல்லை.
நோர்வே என்றொரு மாரீசன்
ஜப்பான் என்றொரு நயவஞ்சகன்
அமெரிக்கா என்றொரு அயோக்கியன்
ஐரோப்பிய ஒன்றியம் என்றொரு கயவன்
இத்தறுதலைகள் போதாதென்று
இந்தியா என்றொரு விபீஷணன்
இணைந்தாங்கள் தமிழரை ஏமாற்ற
கதையுங்கள் கதையுங்கள் எனச் சொல்லி
கழுத்தறுத்தாங்கள் ஈழத் தமிழரை
சமாதானம் சமாதானம் எனச் சொல்லி
ஆயுதங்கள் கொடுத்தாங்கள் சிங்களவனுக்கு
சமாதானம் பேசிய சாத்தான்கள்

தமிழன் அழியும் போது மௌனித்தன.

காக்கும் பொறுப்பு - Responsibility to Protect(R2P)
காக்கும்பொறுப்பு என்ற பதம் 2001-ம் ஆண்டளவில் உருவானது. ஒரு நாட்டுக்குள் நடக்கும் அந்நாட்டு மக்களின் ஒரு பிரிவினருக்கு எதிரான அடக்குமுறை, அநியாயம் என்பவற்றை அந்நாடு தடுக்க மீறும் சமயத்தில் சர்வதேச சமூகமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ பாதிக்கப் படும் மக்களை காக்க வேண்டிய கடப்பாடுடையது என்பது தான் அப் பதத்தின் முக்கிய அம்சமாகும். நாடுகளுக்கு உள்ளேயான முரண்பாடுகள் மோதல்கள் அதிகரித்த சூழலில் இந்தப் பதம் உருவானது. இனக் கொலைகள் இனச் சுத்தீகரிப்புகள் திட்டமிட்ட கற்ழிப்புகள் போன்றவை நடக்குமிடத்து ஒருநாட்டின் இறைமைக்குள் தலையிட்டு நீதியை நிலை நாட்டுதல் இதன்(R2P) நோக்கமாகும்.

காக்கும் பொறுப்பனது(R2P) முன்கூட்டியே தடுக்கும் பொறுப்பு, உணர்ந்து செயற்படும் பொறுப்பு, மிள் நிர்மாணிக்கும் பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

ருவண்டா ஸ்றேபெணிக்கா போன்ற நாடுகளில் காக்கும் பொறுப்பு சிறிதளவு நிறை வேற்றப் பட்டது.

2009 மே மாதம் நடந்த இனக் கொலையின் போது சர்வதேச் சமூகம் தனது காக்கும் பொறுப்பில் தோல்வியடைந்தது.

இப்போது வன்னியில் வதை முகாம்களில் மக்கள் அவலப் படும் போது நாளந்தம் கொல்லப் படும்போதும் அல்லது இறக்கவிடப்படப் படும் போது சர்வதேசம் மௌனித்திருக்கிறது. மழைக் காலம் வரும் போது வன்னியி வதை முகாம்களின் பேரவலம் மேலும் மோசமடையும் என முன்கூட்டியே மனித நேய அமைப்புக்கள் எச்சரித்திருந்தன. ஊடகங்களும் சுட்டிக் காட்டியிருந்தன. எந்த நாடும் நடவடிக்கை எடுக்க வில்லை. ஐக்கிய நாடுகள் சபை கூட மௌனித்திருக்கிறது.

இந்தியாவின் பொறுப்பு
ஜேஆர்- ராஜீவ் ஒப்பந்தத்தின் படி தமிழ்ர்களைக் காக்க இந்தியாவால் இலங்கைக்கு படை அனுப்ப முடியும். ஆனால் இந்தியா தமிழர்களைக் காக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. மாறாக தமிழ் தேசிய வாதத்தை ஒடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசின் முதலாம் கட்ட நடவடிக்கையான தமிழர் ஆயுத பலத்தை மழுங்கடித்தலுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டது. இலங்கைச் சிங்களப் பேரின வாதிகளின் இரண்டாவது கட்ட நடவடிக்கை தமிழர் தாயக நிலங்களை அபகரித்து சிங்கள மய மாககுதல் அதற்கும் உத்தரப் பிரதேசப் பேரின வாதிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கனவான் ஒப்பந்தத்தை மீறிய அயோக்கிய ஆரிய பூமி


தமிழர்கள் இன்று இருக்கும் நிலையையும் 1987இல் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்திற்கு முன் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இலங்கை இராணுவம் நடமாட அஞ்சி இருந்தது அன்று. இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ்ப்போராளிக் குழுக்கள் தாக்குதல் நடத்தி பாரிய அழிவுகளை விளைவிக்கலாம் என்று இலங்கை அரசு அன்று அஞ்சி இருந்தது. தமிழர்கள் கைகளில் ஆயுதம் இருந்தது அன்று.

இன்று தமிழனுக்கு என்று ஒரு எதிர்காலம் இருக்கிறதா? என்ற கேள்விக்குறி மட்டும்தான் தமிழனின் சொத்து.

ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தப் படி தமிழ்ப் போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படக்க வேண்டும். போராளிக் குழுக்களும் ஆயுதங்களை ஒப்படைத்தன. பிரச்சனை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில். அதைத்தீர்க்க ஒப்பந்தம் செய்தவர்கள் அபோதைய இலங்கை குடியரசுத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்தனேயும் அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும். இதில் தமிழர்களின் பங்கு என்ன? தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப் பட்டது. அதன் படி இந்தியா பல வாக்குறுதிகளை தமிழர்களுக்கு வழங்கியது,

தமிழர்களுக்கும் இந்தியா கொடுத்த வாக்குறுதிகள்.
  • தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்கும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காணும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இலங்க அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்ப்டும்.
  • இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட்டு தமிழர்களின் தாயகமாக ஏற்றுக் கொள்ளப் படும்.
இவை இந்தியா கொடுத்த வாக்குறுதிகள். இவை எழுத்தில் கொடுக்கப்படாத கனவான் ஒப்பந்தம். ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தப் படி விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா 1987இல் ஆரம்பித்தது. இலங்கையும் இந்தியாவும் இணைந்து அன்றிலிருந்து அரும் பாடுபட்டு 2009இல் புலிகளை அழிக்கும் பணியை முடித்தது. இப்போது சர்வ தேச ரீதியில் விடுதலைப் புலிகளை அழிக்கும் பணியில் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு ஈடு பட்டுள்ளது.

தமிழர்களுக்கு கிடைத்தவை எவை?

வடக்கும் கிழக்கும் பிரிக்கப் பட்டது.
13-ம் அரசியல் திருத்தம் அமூல் செய்யப் படவில்லை.
தமிழர்கள் நிராயுத பாணியாக்கப் பட்டனர்.
தமிழர்கள் ஏதிலிகள் ஆக்கப் பட்டனர்.

கனவான் ஒப்பந்தத்தை மீறியவர்கள் அயோக்கியர்களே.
இந்தியா ஒரு அயோக்கிய நாடு என்று அழைக்கப் படாமல் இருக்க:
இப்போது வன்னி முகாம்களில் வதை படும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப் பட்டு அவர்கள் மீள் குடியேற்றப் படவேண்டும். இந்த வருட முடிவுக்குள் தமிழர்களது பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

இவை நடக்காவிடில்:

தமிழர்களின் முதல் எதிரி இந்தியா.
தமிழர்களின் பிரதான எதிரி இந்தியா.
தமிழர்களுக்கு என்றும் எதிரி இந்தியா.

என்ற முடிவை மட்டும் தான் தமிழர்கள் எடுக்க முடியும்.

Tuesday, 18 August 2009

உன் நினைவுகளை எது வந்து அழிக்கும்


நீ அனுப்பிய குறுந்தகவல்கள்
உள் பெட்டகத்தில் அழிந்துவிட்டன

இணந்திருந்து எடுத்த நிழற்படங்களும்
அழிந்தே போய் விட்டன

தெய்வீகமாய் இசைத்த உன் குரல்களை
தென்றல் வந்து அழித்துவிட்டது

கைகோத்து நாம் நடந்த காற் தடங்களை
கடலலைகள் அழித்துவிட்டன.

என் உதட்டில் உன் உதட்டின் ஈரத்தை
காற்றலைகள் அழித்துவிட்டன.

உடல்களின் உல்லாச உரசல்களை
உணர்வலைகளாய் அழிந்த்துவிட்டன.

என் நெஞ்சத்தில் உன் நினைவுகளை
எது வந்து அழிக்கும்....

சீனாவின் குரலாக சரத் பொன்சேகா ஒலிக்கிறாரா?


இலங்கை மீது சீனாவின் கண் மிக நீண்டகாலத் திட்டமுடையது. நீண்டகாலத் திட்ட அடிப்படையில் செயற்படுவதில் சீன கம்யூனிஸ்ட்டுகள் திறமையானவர்கள். கருமமே கண்ணாக காத்திருந்து செயற்படுவர். சிங்களவர்களைப் பொறுத்தவரை சீனா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன். இலங்கையில் வலது சாரிக் கொள்கையுடையதும் அமெரிக்க சார்பானதுமான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சீனா தனது இலங்கைக்கான உதவிகளையோ இலங்கையுடனான உறவுகளிலோ தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். ஜேவிபி என்கிற கம்யூனிசப் போர்வை போர்த்திய பேரினவாதக் கட்சியும் பௌத்த அடிப்படை வாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் தீவிர சீன ஆதரவுக் கட்சிகள். அத்துடன் தீவிர இந்திய எதிர்ப்பாளர்கள். இந்தியா என்னதான் சிங்களவர்களுக்கு உதவி செய்தாலும் இவர்கள் இந்தியாவை விரோதியாகவே கருதுகின்றனர். சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு அமைப்புக்கள் பல உண்டு. இந்திய ஆதரவு அமைப்புக்கள் எதுவுமில்லை.

இதுவரை காலமும் இலங்கை இராணுவம் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் போர் சிங்களவர்களுக்கு சாதகமாக இந்தியாவின் பேருதவியுடன் நடந்து கொண்டிருந்த வேளை இலங்கை இராணுவம் இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கு ஒரு கருத்தைத் தெளிவாகக் கூறிவிட்டதாம்: நாம் பலசிரமங்களுக்கு மத்தியில் சிங்களவர்களின் ஆட்சி அதிகாரத்தை இலங்கை முழுததும் நிலை நிறுத்துகிறோம். இதில் இனி அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கு இடம் கொடுக்க முடியாது. அப்படி ஒரு அதிகாரப் பகிர்வு தமிழர்களுடன் ஏற்படும் இடத்து நாம் ஆட்சியைக் கைப் பற்றுவோம்.

இலங்கையில் இராணுவ ஆட்சியை சிங்கள மக்கள் விரும்புவதில்லை. இதை இராணுவம் நன்கறியும். அப்படி இருந்தும் இராணுவம் இப்படி கூறியதில் அவர்களுக்குப் பின்னால் ஒரு பலமான நாடு இருந்திருக்க வேண்டும். அது சீனாவைத் தவிர வேறில்லை. இந்த இராணுவக் கருத்து இப்போது பகிரங்கமாக சரத் பொன்சேகாவால் முன் வைக்கப் பட்டுள்ளது.

சரத் பொன்சேகா கூறியது:
போர் வெற்றியையும், படையினரின் தியாகங்களையும் முன்னிலைப்படுத்தி, அரசியல்வாதிகள் இவை அனைத்தையும் கருத்திற்கொள்ளாமல் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முற்பட்டிருப்பதால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றது எனத் தெரிவித்தே தனது அரசியல் பிரச்சாரத்தை சரத் பொன்சேகா தொடங்கியிருக்கின்றார்.

தாயக மண்ணைப் பாதுகாக்க எந்தத் தியாகத்தைச் செய்யவும் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் சரத் பொன்சேகா மக்களின் ஆதரவையும் இதற்காகக் கோரியுள்ளார்.

"13 ஆவது அரசியல் திருத்தம் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள், மற்றும் சிறிலங்காவில் உள்ள அனைத்து இனங்களின் எதிர்பார்ப்புக்கு முரணாகவே இதனை எம்மீது திணிப்பதற்குத் திட்டமிடப்படுகின்றது" எனத் தெரிவித்திருக்கும் சரத் பொன்சேகா, "இது முறைப்படுத்தப்பட்டால், போரினால் வெற்றிகொள்ள முடியாதுபோன ஈழத்தை அவர்களுக்கு வழங்குவதாக அமைந்துவிடும்"எனக் குறிப்பிட்டுள்ளார்

13வது அரசியல் திருத்தம் ஒரு உப்புச் சப்பில்லாத அதிகாரப் பரவலாக்கம். அதிகாரப் பகிர்வு அல்ல. மாகாண சபைகளுக்கு வழங்கப் பட்ட அதிகாரம் பொதுவாக குடியாட்சி முறை வளர்ச்சியடந்த நாடுகளில் மாநகர சபைகளுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களை ஒத்தது. இதைத் தமிழர்கள் ஏற்கவில்லை. இது இலங்கையின் இனப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை.
இருந்தும் இதன் மூலம் இலங்கை பிரிந்து விடும் என்று சரத் பொன்சேகா கூறுவது இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்கும் உரிமை அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல இராணுவத்திற்கும் உண்டு என்பதை நிலைநிறுத்த அவர் ஒரு வழிதேடுகிறார் என்பதைக் காட்டுகிறது. இலங்கையை மியன்மார்(பர்மா) போல இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தி தனது பிடிக்குள் கொண்டுவர சீனா முயல்கிறதா? அதற்கு சரத் பொன்சேகாவை சீனா பயன் படுத்தப் போகிறதா?

தமிழர்கள் சுதந்திரத்திற்கு ஆப்பு வைத்துவிட்டு தம் சுதந்திரத்தை இனிப்புடன் கொண்டாடுகின்றனர்


ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு 125,000 அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. 500,00 விடுகளை அழித்தது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மழுங்கடித்தது. 500,000 மக்களை உள்ளக இடப் பெயர்விற்கு உட்படுத்தியது. 150,000 மக்கள் நாட்டை விட்டு ஓடச் செய்தது.

தமிழர்கள் சுதந்திரத்திற்கு ஆப்பு வைத்துவிட்டு தம் சுதந்திரத்தை இனிப்புடன் கொண்டாடுகின்றது துரோக நாடு.

Monday, 17 August 2009

கண் மூடி நின்றதென்ன கலைஞர் தொலைக் காட்சியே.


இன்று காலை(17/08/2009) கலைஞர் தொலைக் காட்சியின் செய்தி ஒளிபரப்பை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
செய்தியில் முதலமைச்சர்கள் மாநாட்டில் ஸ்ராலின் கலந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தனர்.

செய்தியில் இடைத் தேர்தல் வாக்குப் பதிவுகளைப் பற்றி தெரிவித்தனர்.

செய்தியில் கலைஞர் ஆட்சியின் மகத்தான சாதனைகள் பற்றித் தெரிவித்தனர்.

செய்தியில் மது அருந்திய சாமியார் கத்தியின் மேல் நின்று அருள் வாக்கு சொல்வது பற்றித் தெரிவித்தனர்.

செய்தியில் சென்னையில் நடந்த கிருஸ்தவ சமயக் கூட்டம் பற்றியும் தெரிவித்தனர்.

செய்தியில் இரசிய நாட்டில் விமானங்கள் மோதியமை பற்றித் தெரிவித்தனர்.

செய்தியில் ஜேர்மனியில் நடந்த தடகளப் போட்டி பற்றியும் தெரிவித்தனர்.

செய்தியில் ஜேர்மனியில் நடந்த தண்ணிருக்குள் குதிக்கும் போட்டி பற்றியும் தெரிவித்தனர்.

செய்தியில் நாணய மாற்று விகிதங்களையும் குறிப்பிட்டனர்.

செய்தியில் ஐரோப்பிய நகரங்களுக்கான கால நிலை பற்றியும் காட்டினர்.

ஆனால்,
வன்னியில் வெள்ளத்தில் வதை முகாம்களில் தமிழ் மக்கள் படும் அவலங்கள் பற்றியோ அல்லது அங்கு ஏற்படப் போகும் பாரிய தொற்று நோய் பற்றியோ அவர்களை யார் சொன்னாலும் வெளியில் விடமாட்டோம் என்று கோத்தபாய ராஜபக்சே சூழுரைத்தமை பற்றி யோ எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவிற்கு செருப்படி கொடுத்தார் கோத்தபாய ராஜபக்சே.


"வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்ய முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தித்தார் கோத்தபாய ராஜபக்சே. வன்னி வதை முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் மீள் குடியேற்ற வேண்டும் என்று இலங்கைக்கான் இந்தியாவின் தூதுவரின் வேண்டு கோளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே கோத்தபாய ராஜபக்சே இதைக் கூறினார்.

கோரிக்கை விட்ட இந்தியத் தூதுவருக்கும் நன்கு தெரியும் தனது கோரிக்கை நிராகரிக்கப் படும் என்று. பதிலடி கொடுத்த கோத்தபாயவிற்கும் தெரியும் தான் இப்படிக் கூறுவதால் இந்தியா ஆத்திரப் படப் போவதில்லை என்றும் இந்தியா தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் சிங்களப் படையினரைக் குடியமர்த்தும் பணி, பலாலி விமானப் படைத் தளத்தை விரிவாக்கும் பணி உட்பட பல உதவிகளைச் செய்து கொண்டே இருக்கும்.

தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் கொள்கை.

தமிழர்களுக்கு உள்ள ஒரே தெரிவு அடிமையாகுஅல்லது அழி என்பதுதான் இந்தியாவின் கொள்கை என்பதையும் கோத்தபாய நன்கு அறிவார்.

Sunday, 16 August 2009

சூடு சொரணை இல்லையா? இந்தியா மீண்டும் கோரிக்கை விடுக்கிறது.



இலங்கையில் மும்முரமான இனக்கொலை இந்த ஆண்டின் முற்பாதியில் நடந்து கொண்டிருத்த வேளை இந்தியா போர் நிறுத்தம் உடனடியாக செய்ய வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தது. இலங்கை நிராகரித்து. இந்தியா எதுவும் செய்யவில்லை. தொடர்ந்தும் இலங்கைக்கு பலவிதங்களிலும் உதவுகிறது.

வன்னி வதை முகாம்களில் சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழர்களை ஆறு மாதங்களுக்குள் மீள் குடியேற்றம் செய்யப் படவேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை விட்டது. இலங்கை நிராகரித்து. இந்தியா எதுவும் செய்யவில்லை. தொடர்ந்தும் இலங்கைக்கு பலவிதங்களிலும் உதவுகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உடனடி அரசியல் தீர்வு தேவை என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இலங்கை அதை அசட்டை செய்யவில்லை. இலங்கை நிராகரித்து. இந்தியா எதுவும் செய்யவில்லை. தொடர்ந்தும் இலங்கைக்கு பலவிதங்களிலும் உதவுகிறது.

இப்போது வன்னி முகாம்களில் இருக்கும் மக்களின் பேரவலத்திற்கு மேலும் அவலம் வன்னியில் பெய்யும் மழையால் ஏற்படுகிறது. இது தொடர்பாக பல அமைப்புக்களும் ஏற்கனவே எச்சரித்திருந்தன. இப்போது உரிய நடவடிக்கை எடுக்கும் படி இந்தியா கோரிக்கை விடுக்கிறது. இதையும் இலங்கை அசட்டை செய்யவில்லை.

இந்தியாவிற்கு சூடு சொரணை இல்லையா?
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு ஏற்பாடு இருக்கிறது போலத் தோன்றுகிறது. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களை அழித்தொழிக்க இலங்கைக்கு இந்தியா சகல உதவிகளும் இந்தியா வழங்கும். ஆனால் அவ்வப் போது இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக நடப்பது போல் அறிக்கைகள் விடும். அதை இலங்கை அசட்டை செய்யத் தேவையில்லை. அல்லது இந்தியாவிற்கு சூடு சொரணை இல்லையா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...