Saturday, 3 April 2010

தமிழர்கள் மத்தியில் பெரிய சாதிச் சண்டை உருவாக்கப்படும்.




ஆரியப் பேரினவாதப் பேய்ககளும் சிங்களப் பேரினவாத நாய்களும் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க பலமுனைத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. தமிழர்களைப் பலகூறுகளாக பிரிப்பதில் வெற்றி கண்டுள்ளனர். இலங்கையிலேயே அதிக தேர்தல் வன்முறை மட்டக்களப்பில் நடக்கிறது.

அடுத்த காதலர் தினம் வரை தமிழர்கள் காத்திருக்க வேண்டும்.
இந்தியாவால் களமிறக்கப் பட்ட வரதராஜப் பெருமாள் சிங்களவர்களின் இதயங்களை வென்றெடுப்பதுதான தமிழர்களின் இப்போதைய முதற்பணி என்கிறார். அதற்கு அடுத்த வலன்ரைன் டே மட்டும் தமிழர்கள் காத்திருக்க வேண்டும்.

பெருமாளா? பெருமாள் மாடா?
பெருமாள் சும்மா சொல்லவில்லை. சிங்களவர்களின் இதயத்தை வென்றெடுக்க தமிழர்கள் கடும் முயற்ச்சி செய்ய வேண்டுமாம் கூறுகிறார் பெருமாள்.

தமிழ் மக்கள் விட்டுக் கொடுத்து வாழவேண்டும் என்று இந்திய அரசியல்வாதிகள் எதிர்பார்கிறார்களாம் கூறுகிறார் பெருமாள். தமிழர்களிடம் விட என்ன உள்ளது? கொடுக்க என்ன உள்ளது? பெருமாளா? பெருமாள் மாடா? இந்தியா எதற்கு பெருமாளைப் பாதுகாத்து வைத்து இலங்கைக்கு அனுப்பியது என்று இப்போதாவது புரிகிறதா?

இந்தியாவின் விற்பன்னர்கள் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள்:
ராஜபக்ச கொடுப்பதை வாங்கிட்டு பொத்திக்கிட்டு கிடக்க வேண்டியதுதான் தமிழர்கள் செய்யக் கூடிய ஒரே வேலை.
இதை தேர்தல் காலம் என்றபடியால் வ. பெருமாள் கௌரமாகாக் கூறுகிறார் சிங்களவர்களின் இதயங்களை வென்றெடுப்பதுதான தமிழர்களின் இப்போதைய முதற்பணி என்று.

அடுத்த சதி
தமிழர்களைத் தொடர்ந்து அடிமையாக வைத்திருக்க ஆரிய சிங்களக் கூட்டமைப்பு எதுவும் செய்யும். விடுதலைப் புலிகள் ஒழித்துக் கட்டிய சாதிச் சண்டையை மீண்டும் உருவாக்குவதுதான் அடுத்த ச்தியாக இருக்கும். தமிழர்களை மேலும் பிளவு படுத்த அடுத்த கட்டமாக தமிழர்கள் மத்தியில் ஒரு சாதிச் சண்டை விரைவில் ஆரிய சிங்களக் கூட்டமைப்பால் ஆரம்பித்து வைக்கப் படும்.

Friday, 2 April 2010

கவிதை: சொர்க்கமடி நீ எனக்கு


கருவில் சிதைத்தோம் புதுமைக் கருத்துக்களை.



வாழ்வுச் சந்தையில்
உணர்வுகளை விற்றோம்
போட்டிப் போதையில்
உறவுகளை மறந்தோம்
சீதனச் சிற்றன்னையால்
பெண்களை Cinderella ஆக்கினோம்
வீட்டுக்குள் நாய்கள் வரலாம்
மனிதர்களை அனுமதியோம்
வாழ்க்கைப் பாதையின்
வழக்கங்களை மாற்றோம்
சிந்தனைக் கர்ப்பத்தில்
சிதைத்தோம் புதுமைக் கருக்களை.

Thursday, 1 April 2010

புதிய LG GD900 Crystal கைப்பேசி


Integrated Social NetworkingCamera 5+ MPTouch ScreenMemory Card CompatibleWi-Fi3G
Integrated Social Networking 8 MP autofocus camera with LED flash Touch Screen Memory Card Compatible Wi-Fi 3G
எல்ஜீ நிறுவனம் தனது புதிய புதிய LG GD900 Crystal கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு Smart phone அல்லவென்றாலும் இது ஒரு கவர்ச்சிகரமான கருவி. இதில் குரல் இனங்காணும் வசதியும் இல்லை.

இதில் சிறந்த 8MP ஒளிப்பதிவுவசதியுள்ளது. இதன் மூலம் தெளிவான படங்களை எடுக்கமுடியும்.

இக் கைத்தொலைபேசியின் முக்கிய அம்சம் இதில் உள்ள transparent keypad. சகலவசதிகளும் கொண்ட தொடுகை உணர் கருவி இது.
LG GD900 Crystal's sleek drop-down transparent keypad is more than just great looks. Rather it is a fully functional touch key pad that works similar to a mouse pad found on Laptop computers. It's mouse mode feature lets you browse the internet in smooth movements and flip through your contents with swift easy strokes while the exclusive Multi Finger Touch feature Enables two-finger touch recognition for faster response time.
Taking touch technology one step further, LG GD900 Crystal features a drop down crystal touchpad that is both extremely beautiful and remarkably usable. A superior scratch-resistant design made from tempered glass
இதுபற்றிய மேலதிகத் தகவல்கள்:

http://www.telegraph.co.uk/technology/technology-video/gadget-inspectors/7484327/LG-Crystal-mobile-phone-review-Gadget-Inspectors.html


Wednesday, 31 March 2010

கத்திக்குள் கணனித் தகவல்கள் - கொலை செய்தாலும் பெறமுடியாது.


பல சிறு கருவிகளை உள்ளடக்கிய Swiss Army knife 1897-ம் ஆண்டு முதல் உலகெங்கும் பாவிக்கப்படுகிறது. பல வடிவமைப்பில் பலதரப்பட்ட பயன்பாடுகளுடன் பல விலைகளில் சுவிஸ் ஆமிக் கத்தி கிடைகிறது.

எண்மிய(Digital) காலத்திற்கு ஏற்ப நவீன கத்தி.
நவீன கணனிக் காலத்திற்கு ஏற்ப சுவிஸ் ஆமிக் கத்தி தன்னை மாற்றி அமைத்துள்ளது. இப்போது சுவிஸ் ஆமிக் கத்தி நினைவுத் தண்டையும் (memory stick) தன்னுடன் இணைத்துள்ளது. அதில் கணனித் தகவல்கள் கோப்புக்கள் பதிவு செய்து வைக்கலாம். அது சாதாரணமானதுதானே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் சுவிஸ் ஆமிக் கத்தி தாயாரிப்பாளர்கள் தங்களது நினைவுத் தண்டு (memory stick) சாதாரணமானது அல்ல என்று கூறுகிறார்கள். தங்கள் நினைவுத் தண்டு (memory stick) கடவுச் சொல் இல்லாமல் உள் நுழைய முடியாதது.

கைவிரல் ரேகையைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம்

கைரேகையை இனம் காணும் தொழில் நுட்பம் பாவிக்கப் படுகிறது இந்த கணனிக்கால சுவிஸ் ஆமிக் கத்தி.

யாராவது கள்ளத்தனமாக உள் நுழைய முற்பட்டால் சுவிஸ் ஆமிக் கத்தியின் நினைவுத் தண்டு (memory stick) தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமாம். The latest version of the pocket knife, launched on Thursday, contains a memory stick that can store computer files and documents. But realising its customers are more conscientious than most, its maker has developed technology which it claims is “unhackable”, even self-destructing if it detects an attempt to break into an owner’s personal files.

விக்ரொறினொக்ஸ் என்னும் சுவிஸ் ஆமிக் கத்தி தயாரிப்பாளர்கள் யாராவது கள்ளத்தனமாக இருநாட்களில் உள் நுழைந்தால் அவருக்கு பெரிய தொகையைப் பரிசாக அளிப்பதாக அறிவித்தது.
Victorinox, the maker of the Swiss Army knife, has offered a “six figure sum” to anyone who can unlock it successfully. Over the next two days, computer hackers have been invited to the company’s shop in Central London, where the attempts to crack the device can be monitored by the store’s upmarket clientele.

கொலை செய்தும் உடைக்க முடியாது
சுவிஸ் ஆமிக் கத்தியின் நினைவுத் தண்டு (memory stick) வைத்திருப்பவரைக் கொன்று விட்டு அவரின் விரலடையாளத்தை வைத்து திறக்கலாமா என்றால் முடியாது. அது விரலில் உள்ள ரேகையை மட்டுமல்ல அதன் வெப்ப நிலையையும் அதில் உள்ள ஆக்சிஸனையும் இனங்காணும் திறன் கொண்டது. எனவே உயிருடன் உள்ளவரால் மட்டுமே திறக்க முடியும். The technology works in a number of different ways to keep the information safe. It uses encryption technology to encode the information stored. It also contains a fingerprint scanner, so it can only be used by the owner. The scanner also includes a heat and oxygen sensor, which means it can only be activated when a person is alive.

விமானத்திலும் எடுத்துச் செல்லலாம்.
இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் சுவிஸ் ஆமிக் கத்தியின் விற்பனை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது. அதற்கு ஏற்ப இந்தக் கத்தியை தடைசெய்யப் பட்ட பகுதிகளைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு மற்றவற்றை எடுத்துச் செல்லக் கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

விலை விபரம்

8GB நூறு பிரித்தானியப் பவுண்கள்.
32GB முன்னூற்றிப் பதினைந்து பிரித்தானியப் பவுண்கள்.

ஈழத்திற்கு எதிராக இந்தியா என்ன விலையும் கொடுக்கும்.


ஆரியர்களைப் பொறுத்தவரை தமிழன் சூத்திரன் அவன் ஆளப்படவேண்டியவன்; அவன் ஆளக்கூடாது. இந்த அடிப்படையில்தான் இந்தியா தமிழ் ஈழத்தை அன்றிலிருந்து இன்றுவரை எதிர்த்து வருகிறது.

ராஜீவ் காந்தியின் அமைதிப் படையில் என்று வந்த ஆரியப் பிணந்தின்னிப் பேய்களை இலங்கையில் இருந்து அடித்து விரட்டிய பின் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தமிழர்களின் தேசிய போராட்டத்தை தம்மால மட்டும் முறியடிக்க முடியாது இதில் சீனாவையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். இதன் விளைவாக சீனா தனது முத்து மாலைத் திட்டம் எனப் படும் இந்தியாவிற்கு எதிரான சுருக்குக் கயிறுத் திட்டத்தில் இலங்கையின் தென் கோடியில் இருக்கும் அம்பாந்தோட்டையையும் இணைத்து அங்கு ஒரு பாரிய துறைமுகத்தைக் கட்டி வருகிறது. இந்தத் துறைமுகம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான் செலவுடன் நிர்மாணிக்கப் படுகிறது. 33 கப்பல்கள் அங்கு தங்கலாம்.இது பற்றிக் கருத்துத் தெரிவித்த இந்திய கடற்படை தமக்கு அம்பாந்தோட்டையில் சீனாவின் துறை முகத்தால் எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளது. துறைமுகம் கட்டிமுடித்த பின்னரும் சீனர்கள் அங்கு இருப்பார்களா என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியக் கடற்படையின் மேற்படி செய்தியை கொழும்பின் இருந்து வெளிவரும் டெய்லி மிறர் பத்திரிகை வெளியியிட்டபோது அதற்கு இலங்கையர்கள் தெரிவித்த கருத்துக்கள் கவனிக்கப் படவேண்டியவை.

  • அம்பாந்தோட்டை இந்தியாவின் WATERLOO (நெப்போலியன் தோற்ற இடம்) என்றார் ஒருவர்.
  • இந்தியாவிற்கு சீனாவின் துறைமுக நிர்மாணத்தை எதிர்க்கும் திராணி இல்லை அதனால் தான் பயப்படவில்லை என்கிறது இந்தியா என்றார் ஒருவர்.
  • இந்தியாவைப் பற்றி எமக்குக் கவலை இல்லை. சீனா அம்பாந்தோட்டையில் என்றும் தங்கி இருக்கும். அம்பாந்தோட்டை எமது சீன நகரம் 'China-Town' of Sri Lanka என்றார் இன்னொருவர்.
  • சேது சமூத்திரத் திட்டத்திற்கு என்ன ஆச்சு என்று கிண்டலடித்தார் இன்னொருவர்.
  • உலகின் அடுத்த பெரும் வல்லரசான சீனாவைத் நண்பனாகத் தெரிவு செய்தமை புத்திசாலித்தனமானது என்றார் இன்னொருவர்.
  • அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி முதலில் இந்தியாவிடம் தான் வேண்டு கோள் விடுக்கப்பட்டது. ஆனால் இந்தியா நிராகரித்தது. அதனால் சீனாவிடம் சென்றோம் என்றார் இன்னொருவர்.
  • இந்தியா ஏற்கனவே சீனாவால் உதைபட்டது அதனால் இப்படித்தான் சொல்லமுடியும் என்றார் இன்னொருவர்.

மேற்படி பின்னூட்டங்கள் இந்தியா தொடர்பாக சிங்களவர்கள் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான ஒரு கருத்துக் கணிப்பாக எடுத்துக் கொள்ளலாம். எந்த ஒரு சிங்களவனும் இந்தியா எமக்கு விடுதலைப் புலிகளை ஒழிக்க உதவியது அதற்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
சிங்களவர்கள் இந்தியாவைப் பயன் படுத்துகிறார்கள். இந்தியா சிங்களவர்களின் கூலிப் படையாகச் செயற்படுகிறது. ஆனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களோ ஆட்சியாளர்களோ தங்கள் குடும்ப நலனையும் சாதிய மேலாண்மையையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஆளப்படவேண்டிய தமிழன் ஆட்சி செய்யக் கூடாது.

சீனா அம்பாந்தோட்டையில் மட்டுமா கால்வைத்தது. கச்சதீவுவரை நீள்கிறது அதன் திட்டம். வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா யாழ்ப்பாணத்தில் காலூன்றி விட்டது. இலங்கையின் கரையோரக் கண்காணிப்பு கோபுரம் என்ற போர்வையில் இந்தியாவை தனது கண்காணிப்புக்குள் வைத்திருக்கும் திட்டமும் சீனாவிடம் உண்டு

பாக்கிஸ்த்தானியத் தீவிரவாதிகள் இலங்கையூடாக இந்தியாவை ஊருடுவப்போகிறார்கள். இதனால்தான இந்தியா இலங்கையில் இருந்து எந்த அகதிகளும் படகில் வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பாக்கிஸ்தானிய திவிரவாதிகள் இலங்கையின் அனுசரணையுடன் இந்தியாவில் இலங்கையூடாக இந்தியாவைத் தாக்கும் திட்டமும் உண்டு என்று கூறப் படுகிறது.

ஈரானுடனான இந்திய உறவில் விரிசல்
பன்னாட்டு அணுசக்தி முகவரகத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது ஈரானுக்கு கடும் கோபத்தை இந்தியாமேல் ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவின் ஈரானியப் பயணத்தை ஈரான் இரத்து செய்ததுடன் இந்தியப் பிரதமரின் பயணத்தையும் ஒத்திவைத்துள்ளது.
ஈரானின் ஆத்திரம் அவற்றுடன் நிற்கவில்லை. இந்தியாவிற்கு வழங்கிய ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தையும் இரத்துச் செய்து விட்டது. சீனா ஈரானுடன் நல்ல உறவுகளைப் பேணி வளர்த்து வருகிறது. ஈரானிய உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் ஆப்கானிஸ்த்தானிலும் இந்தியாவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆக மொத்தத்தில் இன்றைய இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் தமிழன் ஆளக்கூடாது என்பதில் தான் கரிசனை கொண்டுள்ளார்கள். இதைத் தடுக்க அவர்கள் என்ன விலையும் கொடுக்கத் தயாராகியுள்ளார்கள்.

Tuesday, 30 March 2010

அடுத்த ஈழப் புரட்சிக்கான சூழல்


தமிழர்களால் மேற்கொள்ளப் படவேண்டிய ஒரு ஆயுதப்புரட்சிக்கான சூழல் 1950களில் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு மரபுவழிச் சமூகத்தில் மாற்றத்துக்கு உட்படுத்துவது கடினம். அந்த வகையில் ஆயுதப் போராட்டம் உருவாக1970வரை சென்றது. அன்று தொடங்கி வளர்ந்து வந்த ஆயுதப் போராட்டம் இந்தியாவை நம்பித் தொடங்கப்பட்டது. எதிரியை நண்பனாகக் கருதியதால் போராட்டம் வழிதவறியது.
தமிழர்களின் ஆயுத போராட்டத்திற்கு இலகுவாக பயங்கரவாத முத்திரை குத்தப் பட்டது.

இப்போது ஒரு ஆயுத போராட்ட மரம் மீண்டும் முளைத் தெழுவதற்கான சகல விதைகளும் ஈழத்தில் விதைக்கப் படுகின்றன.

  • விரக்தியின் உச்சக் கட்டத்தில் மக்கள்
  • இனவாதத்தின் கோர முகம்.
  • வர்க்க பேதம்
  • மோசமான அரசாங்கம்
  • ஏமாற்றுதலும் குடும்ப ஆட்சியும்
  • பேரினவாதிகளின் கொக்கரிப்பு
  • ஆயுத அடக்குமுறை
  • நிதி மோசடி
இவையாவும் ஆயுதப் புரட்சிக்கான சூழலை உருவாக்கும்
முகாம்களில் மக்களை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியமை. மக்களுக்கு மலம் கலந்த உணவைக் கொடுத்தமை. எல்லாம் ஒரு ஆயுதப் புரட்சிக்கான விதைகளே. தமிழ்மக்கள் இனிக் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியப் பேரினவாதிகளின் கொக்கரிப்பு மக்களை ஆயுதம் ஏந்திப் போராடத் தூண்டிவிட்டிருக்கும்.

இந்தியாவிலும் இணைந்து எதிரொலிக்கும்.
தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் பல சோகங்களுக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றனர். அவர்களின் விடுதலைக்கான தலைவன் ஏற்கனவே பிறந்திருக்க வேண்டும். ஆயுதப் புரட்சி அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

"Those who make peaceful evolution impossible make violent revolution inevitable." அமைதி வழியில் மாற்றம் ஏற்படுவதை அசாத்தியமாக்குபவர்கள் வன்முறைப் புரட்சியை தவிர்க்க முடியாததாக்குகின்றனர். இது எந்த கம்யூனிஸ்ட்டுக்களாலும் சொல்லப் படவில்லை. ஒரு முதலாளித்துவக் காவலனாக இருந்த ஜோன் F கெனடியால் கூறப் பட்டது.


முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஒரு மாற்றம் அவசியமாக இருந்தது. அந்த மாற்றம் நடைபெறாமல் இருக்கு ஆரிய சிங்களக் கூட்டமைப்பு சகல வழிகளிலும் தடைகள் போடுகின்றன. ஈழத்தில் வன்முறைப் போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.


அறிகுறிகள்
  • கிளிநொச்சியில் பாடசாலை மாணவியை தமது முகாமிற்கு இழுத்துச் சென்ற சிங்களப் படையினரிடம் இருந்து சகல தமிழ மக்களும் ஒன்று கூடி மீட்டுச் சென்றனர்.
  • சாவகச்சேரியில் இளைஞனைக் கடத்திச் சென்று கப்பப் பணம் கேட்டுக் கொன்ற இந்திய அடிவருடிகளான ஈபிடிபியின் முகாமை மக்கள் அடித்து நொறுக்கினர்.
ஆரியப் பேய்களின் முன்னேற்பாடு
ஈழத்தில் அடுத்த ஆயுதப் புரட்சி ஏற்படாமல் இருக்க இந்திய உளவுத்துறை சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். அதன் முன்னேற்பாடாக அது இப்போது தமிழர்களைப் பலகூறுகளாகப் பிரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

Monday, 29 March 2010

இந்தியாவின் காய்(நாய்?) நகர்த்தல்!!!


இந்தியா இலங்கையில் செய்த சாதனைகளில் மிக முக்கியமானது ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதராஜப் பெருமாளை உயிருடன் பாதுகாப்பாக வைத்திருப்பதாகும்.

நேற்று ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதராஜப் பெருமாள் இலங்கைக்கு இவரது குடும்ப சமேதராக இலங்கைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையின் பயிற்சிக் கப்பல் திருஷ்ணா இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்தக் காய் நாகர்த்தல்களும் நாய்நகர்த்தல்களும் எதற்காக?

இப்போது இலங்கையில் நடப்பது என்ன?
  • இந்திய வெளியுறவுச் செயலர் பிள்ளையானைச் சந்தித்துவிட்டுச் சென்றார். பிள்ளையான் குழுவினர் மற்ற அரசியல் கட்சிகளின் கூட்டங்களைத் தாக்கிக் குழப்பிவருகின்றனர்.
  • தமிழ்நாட்டு மீனவர்கள்மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல்.
  • யாழ்பாணம் சாவகச்சேரி பகுதியில் காணாமல் போய் இருவாரங்களின் பின்னர் உடலமாக மீட்க்கப்பட்ட மாணவனது கொலையுடன் ஈபிடிபினருக்கு தொடர்பு உள்ளதாக முன்னாள் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச் சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
  • ஈபிடிபி என்னும் ஆயுதக் குழு வவுனியாவில் ஒரு இளைஞரை அடித்துக் கொலைசெய்துள்ளது.
தமிழ்த் தேசியப் போராட்டம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கு இவை மட்டும் போதாது. தமிழர்கள் 1980களில் இருந்தது போல் மீண்டும் பலகூறுகளாகப் பிரிந்து மோதிக் கொள்ள வேண்டும் என்பதே இந்திய உளவுத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் பிரதான எதிரியான இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதியில்லை என்ற நிலை ஏற்படும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...