ஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ஒன்றும் தெரியாது. முதலில் ஒரு சிறு புற்தரையைக் கண்டு அதிசயித்தது நின்றது அப்போது ஒரு பெண் முயல் அதனிடம் வந்தது.
தன்னிடம் வந்த பெண் முயலை ஆச்சரியத்துடன் ஆய்வுகூட முயல் பார்த்தது. தனக்கு வெளி உலகம் பற்றித் தெரியாது என்று தன் கதையைச் சொன்னது. அதற்கு அந்தப் பெண் முயல் உலகம் மிகவும் இனிமையானது என்று சொல்லி முயலை ஒரு தோட்டத்திற்கு கூட்டிச் சென்று அங்கு உள்ள கரட்களை எப்படித் தோண்டி வெளியில் எடுப்பது என்பதைக் காட்டிக் கொடுத்தது. இரண்டும் நிறையக் கரட்களை உண்டு மகிழ்ந்தன. இந்தக் கரட் மட்டும்தானா உலகம் என்று ஆய்வுகூட ஆண் முயல் கேட்டது. பின்னர் அந்தப் பெண் முயல் ஒரு மலையும் ஒரு தடாகமும் உள்ள இடத்திற்கு ஆய்வு கூட முயலை அழைத்துச் சென்று உலகம் மிகவும் அழகானது என்றது. ஆய்வுகூட முயலும் இயற்கை அழகுகளைப் பார்த்து இரசித்தது. பின்னர் இவ்வளவு தான உலகம் என்று ஆய்வு ஆண் கூட முயல் கேட்டது. பின்னர் வேறு இரு முயல்கள் ஒன்றுடன் ஒன்று காதல் புரிவதைக் காட்டியது பெண் முயல். பின்னர் ஆய்வுகூடமுயலும் பெண் முயலும் காதல் புரிந்தன. இப்போது இந்த உலகம் உண்மையில் மகிழ்ச்சி நிறைந்ததுதான் என்றது ஆய்வுகூட ஆண் முயல். அப்போ என்னுடன் இனி வாழ்நாள் பூராவும் இருப்பாயா என்று கேட்டது பெண் முயல். அதற்கு ஆண் முயல் இல்லை நான் மீண்டும் ஆய்வு கூடம் போகப்போகிறேன் என்றது. பெண் முயல் ஆச்சரியப்பட்டு ஏன் என்றது. அதற்கு அந்த ஆய்வுகூட ஆண் முயல் என்னால் சிகரட் இல்லாமல் இருக்க முடியவில்லை என்றது.
Six stages of married life:
1: Tri-weekly
2: Try weekly
3: Try weakly
4. Try oysters
5: Try anything
6: Try to remember
ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியை கடைசிப்பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார். தான் சொல்லும் கூற்றுகளை யார் சொன்னார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்பவர்கள் உடனே வீடு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள் என்று சொல்லி முத்லாவதாக "இது இங்கிலாந்தின் உன்னதமான தருணம்" என்ற கூற்றை யார் சொன்னார்கள் எனக் கேட்டார். ஒரு மாணவி எழுந்து வின்ஸ்டன் சேர்ச்சில் எனப்பதிலளித்தாள். சரியான பதில் நீ உடன் வீடு செல்லலாம் என்றார் ஆசிரியை. அடுத்து "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேட்டுப்பார்." என்ற கூற்றை யார் சொன்னார் என வினவினா? ஒரு மாணவி எழுந்து ஜோன் எஃப் கெனடி என்றாள் அவளைப் பாராட்டி வீட்டுக்கு அனுப்பினார் ஆசிரியை. தனக்குத் தெரிந்த பதிலை இரு மாணவிகள் தன்னை முந்திக் கொண்டு சொல்லிவிட்டார்கள் என ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் "இரண்டு தேவடியாளும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என்றான். அது யார் சொன்னது என ஆத்திரத்துடன் கேட்டார் ஆசிரியை. இன்னொரு மாணவி எழுந்து பில் கிளிண்டன் என்றாள். ஆசிரியை முழு வகுப்பையும் வீடு செல்லச் சொன்னார்.
Friday, 19 July 2013
Thursday, 18 July 2013
சிரியாவில் கையாலாகாத ஐநாவும் அழிவை விரும்பும் மேற்குலகமும்.
ருவண்டாவில் எண்ணூறாயிரம் பேர்
கொல்லப்பட்ட பின்னர் நடக்கும் மோசமான நெருக்கடியாக சிரிய உள்நாட்டுப் போர்
உருவெடுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர்
ஜூலை மாத நடுப்பகுதியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிரியாவில் மாதம்
ஒன்றிற்கு ஐயாயிரம் பேர் கொல்லப்படுகின்றனர் என்கிறார். அத்துடன்
நிற்கவில்லை 1.8 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்கிறார்.
இலங்கையில் கொல்லப்படும் மக்கள் தொகை பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது
நாம் பிணங்களை எண்ணுவதில்லை என ஐநா தெரிவித்தது உங்கள் காதுகளில் இப்போது
எதிரொலிக்கலாம். இன்னும் கேளுங்கள் சிரியாவில் போர்க்குற்றம் இப்போது
ஒழுங்காக நடக்கிறது என்றார் ஐநாவின் மனித உரிமைகளுக்கான பிரதிப் பொதுச்
செயலர் இவான் சைமன்விச். திடீரென்று சிரியாவில் ஐநாவிற்கு ஏன் இந்தக்
கரிசனை என்று பார்த்தால் ஐநா தமக்கு இப்போது சிரியப் பிரச்சனையை எதிர்கொள்ள
மூன்று பில்லிய அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறதாம்.
ஐநா ஊழியர்களின் கொழுத்த ஊழியத்திற்கும் உல்லாசம் மிகுந்த விமானப் பயணங்களுக்கும் ஆடம்பர தங்குமிட வசதிகளுக்கும் இந்த மேற்படி மூன்று பில்லியன்களில் பெரும்பகுதி ஏப்பமிடப்பட்டுவிடுமா? வன்னியில் ஐந்து நட்சத்திர விடுதிகள் இருந்திருந்தால் ஐநாவின் நிலையும் 2009இல் வேறுவிதமாக இருக்கும்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஐநாவிற்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கவிருக்கும் சமந்தா பவர் அமெரிக்க மூதவை உறுப்பினர்களுக்குப் பேட்டியளிக்கையில் சிரியாவில் ஐநா செயற்படாத தன்மை சரித்திரத்தில் மோசமாக விமர்சிக்கப்படும் என்றார்.
சிரிய உள்நாட்டுப் போர் கடுமையடையத் தொடங்கியவுடன் ஐநா பாதுகாப்புச் சபையும் அரபு லீக் நாடுகளும் இணைந்து முன்னாள் ஐநா பொதுச் செயலர் கோஃபி அனன் அவர்களை ஐநா பாது காப்புச் சபையின் தீர்மானம் 2043இன் மூலம் சமாதானத் தூதுவராக நியமித்தன. கோஃபி அனன் தனது முதல் நடவடிக்கையாக ஒரு ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்தார். பின்னர் இந்த அடிப்படையில் சிரியத் தலைநகர் டமஸ்கஸ் சென்று சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துடன் கோஃபி அனன் பேச்சு வார்த்தை நடாத்தினார். கடும் மோதல்கள் நடக்கும் இடங்களில் நடவடிக்கை எடுக்க தானும் அல் அசாத்தும் உடன்பட்டதாக கோஃபி அனன் ஜெனீவாவில் இருந்து வழங்கிய காணொளிப் பேட்டியில் கூறினார்.ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சிரியப் பிரச்சனை தொடர்பாக ஈரான் சென்று அனன் பேச்சு வார்த்தை நடாத்தியது வட அமெரிக்க நாடுகளையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் ஆத்திரப்படுத்தியது. ஆனால் கோஃபி அனனை ஆபிரிக்க ஊடகங்கள் அமெரிக்கக் கைக்கூலி என்றன. அனன் "ஐநா பாதுகாப்புச் சபை ஒரு மனதாக சிரிய ஆட்சியாளர்களையும் கிளர்ச்சியாளர்களையும் தனது சமாதானத் திட்டத்தை ஏற்காவிடில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என எச்சரிக்க வேண்டும்" என வேண்டினார் பாதுகாப்புச் சபையில் இது எடுபடவில்லை. அதிருப்தியடைந்த அனன் சமாதானத் தூதுவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
இன்னும் ஒரு சமாதானத் தூதுவர்.
கோஃபி அனனைத் தொடர்ந்து சிரியாவிற்கான சமாதானத் தூதுவராக அல்ஜீரிய அரசதந்திரி அல் அக்தர் பிராமி ஐநா பொதுச் செயலர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டார். அவர் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டும் பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்து கொண்டும் இருந்தார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னர் தொடர்ந்தும் அதிகமான மக்கள் சிரியாவில் கொல்லப்பட்டனர். எந்த ஒரு சமாதான முன்னெடுப்பையும் செய்ய முடியாத நிலையில் அல் அக்தர் பிராமி இப்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது சமாதனத் தூதுவர் பணிக்கு ஐநா நிறைய செலவழிக்கிறது என்று மட்டும் தெரியும். ஜூலை 23-ம் திகதி அல் அக்தர் பிராமி முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி காட்டர், முன்னாள் ஜோர்தான் வெளிநாட்டமைச்சர் மரவன் மௌசர், முன்னாள் பின்லாந்து அதிபர் மார்தி அஹ்திசாரி ஆகியோரைச் சந்திக்கிறார். சிரியப் பிரச்சனை பற்றி கதைக்கப் போகிறார்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் பெரிசுகள் பாலஸ்த்தீனப் பிரச்சனையைப் பற்றிக் கதைக்கப் போகிறார்கள். அல் அக்தர் பிராமி கையில் ஜெனிவாப் பேச்சு வார்த்தை என்ற ஒரு கிலுகிலுப்பையை வைத்துக் கொண்டு இருக்கிறார் ஆனால் அவர் அதைக் குலுக்குவது கூட இல்லை.
இரத்துச் செய்யப்பட்ட இரண்டு தீர்மானங்கள்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் சிரியாவிற்கு எதிராக அமெரிக்க அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட மூன்று தீர்மானங்கள் சீனாவாலும் இரசியாவாலும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இரத்துச் செய்யப்பட்டன. பாதுகாப்புச் சபையில் இரத்துக்கு மேல் இரத்துக்கள் வந்ததால் இரத்து அதிகாரமான வீட்டோ இல்லாத பொதுச்சபையில் ஒரு உப்புச் சப்பற்ற ஒரு தீர்மானம் சிரிய உள்நாட்டுப் போர் தொடர்பாக 2013 மார்ச்சில் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தை பன்னாட்டு மன்னிப்புச் சபையே போதிய பயன் தாராதது என்று சொல்லி விட்டது. உடனடியாக மோதல் நிறுத்தப் படவேண்டும் என்றது தீர்மானம். ஆனால் இன்றுவரை போர் தொடர்கிறது.
சிரியக்கிளர்ச்சியின் மூலம்
சிரியாவில் ஆட்சியாளர் மாற்றமும் ஆட்சி முறைமை மாற்றமும் வரவேண்டும் என்று மேற்கு நாடுகள் விரும்புகின்றன. 2008இற்குப் பின்னர் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைச் சாட்டாக வைத்து தங்களுக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களை பதவிகளில் இருந்து அகற்றுவதில் மேற்கு நாடுகள் அதிக கரிசனை காட்டி வருகின்றன. துனிசியாவில் பென் அலி லிபியாவில் மும்மர் கடாஃபி ஆகியோர் வெற்றிகரமாக பதவியில் விலக்கப்பட்டனர். ஆனால் மேற்குல சார்பு ஆட்சியாளர்கள் பாஹ்ரெயினிலும் சவுதி அரேபியாவிலும் தமக்கு எதிரான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிவிட்டனர். சிரியக் கிளர்ச்சியாளர்களிடை பற்பல கூறுகள்
சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். எந்த ஒரு விடுதலை அமைப்பிலும் முதல் ஏற்படுவது பிளவா? அவர்களுக்கு உதவுபவர்கள் போதிய உதவியைக் கொடுக்காமல் மட்டுப்படுத்த உதவியைக் கொடுத்து மோதல்களை தீவிரபடுத்துவதில் நீண்டகால இழுத்தடிப்பிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர். விடுதலை இயக்கங்களிடை ஏற்படும் பிளவுகள் தனியே வெளியில் இருந்து மட்டும் உருவாக்கப்படுவதில்லை. உள்ளிருந்தும் உருவாகும். அம்மான், பாரிஸ். பிரஸல்ஸ் ஆகிய நகரங்களில் பிளவடைந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிரியத் தேசிய சபை ஒரு கதிரைக் கனவான்களின் கும்பல்; அது களத்தில் இறங்கிப் போராடுவதில்லை என்று மற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் இவர்களிடம் இருந்து சிலர் பிளவு பட்டு சிரிய தேசப்பற்றாளர் குழுவை ஆரம்பித்தனர். சிரியத் தேசிய சபையினர் ஒரு படைத்துறைச் சபையை அமைத்து அது ஒரு படைத்துறை அமைச்சாக செயற்படும் என்றனர். சுதந்திர சிரியப் படையினர் இது தம்முடன் கலந்து ஆலோசிக்காமல் செய்யப்பட்டது என்று முரண்படுகின்றனர். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயற்படுக் குழுவினரிடை மட்டும்Martyr Hisham Brigade; the Ibn Malik Martyrs Brigade; the Maarratt al-Numan Martyrs Brigade; the Salhauddin Brigade, the Fallujah Brigade என்னும் ஒன்றுடன் ஒன்றுமையில்லாத குழுக்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் வாழும் சிரிய மருத்துவர்கள் தாம் ஒரு அமைப்பை உருவாக்கி சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றனர். அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியாப் படையின் தலைவரை அவர்களுடன் இணைந்து போராடிய இசுலாமியத் தீவிரவாதிகள் கொன்றனர். இப்படியான நடவடிக்கை தொடரும் என்கின்றனர் அவர்கள். இந்தக் கொலைக்குப் பழிவாங்கப்படும் என்கின்றது சுதந்திர சிரியப் படையினர்.
சவுதி அரேபியா, காட்டார், போன்ற சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. அந்த நாடுகளுக்கு என்ன விதமான படைக்கலன்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய அமெரிக்கா கட்டுப்படுத்தி வருகிறது. சிஐஏயின் ஒருங்கிணைப்புடன் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் சவுதி அரேபியா ஊடாகவும் ஜோர்தானுடாகவும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களை வழங்கவுள்ளன. கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரியக் கிளர்ச்சிக்காரப் போராளிகளுக்கு தோளில் செலுத்தக் கூடிய சூடு தேடிச் செல்லும் ஏவுகணைகள் (heat-seeking shoulder-fired missiles) வழங்கப்படவிருக்கிறது. புதிதாகக் கிடைக்கப் பெறும் படைக்கலன்களுடன் உரிய பயிற்ச்சி பெற்று சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் களமுனையை தமக்கு சாதகமானதாக மாற்ற இன்னும் ஆறு மாதங்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவில் இஸ்ரேல் தொடர்ந்து கைவரிசை
சிரியாவில் படைக்கலக் களஞ்சியன் ஒன்றில் இருந்த இரசியாவால் வழங்கப்பட்ட விமான மற்றும் கடற்படைக் கப்பல்களுக்கு எதிரான வலிமை மிக்க ஏவுகணைகள் திடீரென வெடித்துச் சிதறின. இரகசியமாக வந்து தாக்கிய இஸ்ரேலியப் படைகளே அங்கு குண்டு வீசியதாக நம்ப்பப்படுகிறது. அமெரிக்க அரசும் இதையே தெரிவித்தது. இது உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் சிரியாவில் பகிரங்கமாக இஸ்ரேல் செய்த நான்காவது விமானத் தாக்குதலாகும். தேவை ஏற்படின் தரைவழி ஆக்கிரமிப்பும் மேற்கொள்ளப் படும் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. சிரியாவிற்கு புதியதர விமான எதிர்ப்பு முறைமையை இரசியா வழங்குவதை அமெரிக்கவும் இஸ்ரேலும் தடுத்துள்ளன.
சிரிய நண்பர் குழாம்
பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, துருக்கி, யுனைட்டெட் அரப் எமிரேட்ஸ், ஜோர்தான், கட்டார், இத்தாலி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து சிரிய நண்பர்கள் குழாம் என அமைத்துள்ளன. இவை சிரியக் கிளர்ச்சி அமைப்புக்களில் மதசார்பற்ற அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளன. அவர்களுக்குப் படைக்கலன்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலனகள் மட்டுமே. என்ன நட்போ? அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரி சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உரிய நேரத்தில் உரிய படைக்கலன்கள் கிடைப்பதில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளார். ஜோர்தான் நகர் அம்மானில் நடந்த சிரிய நண்பர் குழாமிற்கும் சிரிய கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் நடந்த கூட்டத்தில் இருந்து பல சிரிய சுதந்திரப்படை பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். தமக்கு வேண்டிய படைக்கலன்கள் கிடைக்கவில்லை என்பது இவர்களின் குற்றச் சாட்டு.
தயக்கத்தின் பின்னணி
துனிசிய ஆட்சி மாற்றம் இலகுவில் நடந்தது. லிபியாவில் நேட்டோப்படைகள் மும்மர் கடாஃபியை விரட்டின. எகிப்து மீண்டும் எரிகிறது. சிரியப் பிரச்சனை ஏன் இழுபடுகிறது. வல்லரசுகளின் போட்டா போட்டியா? இல்லை, சரியான முறையில் அழுத்தம் கொடுத்தால் சீனாவும் இரசியாவும் வழிக்கு வரும் என்பதை ஈரானுக்கும் லிபியாவிற்கும் எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை அவை இரத்துச் செய்யவில்லை என்பதில் இருந்து தெரிகிறது. சிரியப் போர் தொடர வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஏன் அனுமதிக்கின்றன? இந்தக் கேள்விக்கான விடை சிரியப் போரில் யார் இறக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது தெரியும். பிரித்தானியாவில் இருந்து செயற்படும் சிரிய மனித உரிமைகள் அமைப்பு சிரியப்போரில் இதுவரை 100,000இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனச் சொல்கின்றது. இதில் பெரும்பான்மையினர் களமுனையில் போராடுபவர்கள். இதில் 43,000பேர் அரசுக்காகப் போராடியவர்கள். 169 ஹிஸ்புல்லாப் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 36,000பேர் பொதுமக்கள்,18,000பேர் அரசுக்கு எதிரான போராளிகள். உண்மையில் கொல்லப்பட்டவர்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. சிரிய அதிபர் அல் அசாத்திற்காக போராடும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இறக்கிறார்கள். அவருக்கு எதிராகப் போராடும் அல் கெய்தா இயக்கத்துடன் தொடர்புடைய அல் நஸ்ரா இயக்கத்தினர் இறக்கிறார்கள். இப்போது தலிபானும் சிரியாவில் களமிறங்கி உள்ளது. தலிபான் போராளிகளும் இறக்கப் போகிறார்கள். அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்களின் தாக்குதலின்றி ஆயிரக்கணக்கில் இசுலாமியத் தீவிரவாதிகள் கொல்லப்படும் ஒரு முனையில் போர் தொடருவதை அமெரிக்கா பெரிதும் விரும்புகிறது, இனி வரும் மாதங்களில் சிரிய போர் பல முனைகளில் நடக்க இருக்கிறது. அதிபர் அல் அசாத்திற்கு எதிரான போராளிக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மூர்க்கத்தனமாக மோதும். ஜோர்தானிலும் துருக்கியிலும் சுதந்திர சிரியப் படைகளுக்கு புதியதரப் படைக்கலப் பயிற்ச்சிகள் வழங்கப்படும்.

Wednesday, 17 July 2013
இங்கிலாந்தின் கால்பந்தாட்ட வீரர்களுக்கு இந்திய உணவுகளின் பெயர்கள்
Tikka, Jalfrezi, Madras, Balti, Tandoori, Rogan Josh, Kurma, Vindaloo போன்ற இந்திய உணவுகளின் பெயர்கள் இங்கிலாந்தில் ஒரு உதைபாந்தாட்ட அணியினர் தமது வீரர்களின் ரி-ஷேர்ட்டில் அவர்களின் பெயர்களுக்குப் பதிலாக எழுதப்பட்டுள்ளது.
Bollington United என்னும் காற்பந்தாட்டக் கழகம் தனது 7 பேர் கொண்ட 9வயதுக்கு உட்பட்ட வீரர்கள் அணியில் விளையாடுபவர்களுக்கு அவர்களது குடும்பப் பெயர்களுடன் இந்திய உணவுகளின் பெயர்களை இணைத்துப் புதுமை செய்துள்ளது. Tikka’ Hall, Oliver ‘Jalfrezi’ Gaunt, Jackson ‘Madras’ Mather, Will ‘Tandoori’ Richardson, Caleb ‘Rogan Josh’ Rogers, Sam ‘Bhuna’ Baistow, Paddy ‘Kurma’ Watts and Tom ‘Vindaloo’ Boyd. என்பன அவர்களின் பெயர்க்ளாக இருக்கிறது. அவர்களின் ரி-ஷேர்ட்டில் உணவுகளின் பெயர்களே பதியப்பட்டுள்ளது.
இப்படிச் செய்வது ஒரு காரணத்துடன் தான் அவர்களது விளையாட்டுக் கழகத்திற்கு அண்மையில் இருக்கும் Viceroy restaurant என்னும் இந்திய உணவகம் அவர்களுக்கான பண உதவியைச் செய்கிறது. இந்தப் பெயர்கள் அந்த Viceroy restaurant உணவகத்திற்கு விளம்பரமாகிறது. Viceroy restaurant உணவகம் நீண்டகாலமாக Bollington United காற்பந்தாட்டக் கழகத்திற்கு நிதி உதவி செய்து வருகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தப் பெயர் சூட்டல் நடந்துள்ளது. பெயர் சூட்டலும் காரணத்துடன்தான் செய்யப்பட்டுள்ளது. காரசாரமாக விளையாடும் hot striker எனப்படும் Tom Boyd என்பவர் Vindaloo’ Boyd எனப் பெயரிடப்பட்டுள்ளார்.

Tuesday, 16 July 2013
நகைச்சுவைக் கதை: பாக்கிஸ்த்தானியுடன் படுக்க முடியாது.
மத்திய கிழக்கில் ஒரு யூதன் ஒரு இந்தியன் ஒரு பாக்கிஸ்த்தானி ஆகிய மூவரும் ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இடையில் ஒரு இடத்தில் வண்டி பழுதடைந்து விட்டது. நேரமோ இரவு. அவர்கள் மூவரும் அண்மையில் இருந்த ஒரு வீட்டுக் கதைவைத் தட்டினார்கள்.
அது ஒரு விவசாயின் வீடு அவனும் அவர்களை அன்புடன் உள்ளே அழைத்து உபசரித்து சுவையான உணவுகள் பரிமாறினான். மூவரும் அவன் வீட்டிலேயே இரவு தங்க முடியுமா என அந்த விவசாயியைப் பணிவன்புடன் கேட்டனர். அதற்கு விவசாயி தனது சிறு வீட்டில் இருவர் மட்டும் தங்க முடியும் என்றான். அதற்கு யூதன் எனது இனம் உலகமெல்லா அலைந்து துன்பப்பட்ட இனம் என்னால் எந்த மோசமான இடத்திலும் தங்க முடியும் என்றான். விவசாயி யூதனை தொழுவத்திலும் இந்தியனையும் பாக்கிஸ்த்தானியையும் வீட்டுக்குள் படுக்க ஏற்பாடு செய்தான்.
சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் நின்ற யூதன் தொழுவத்தில் பன்றி இருக்கிறது எனது மத தத்துவப்படி என்னால் அங்கு நித்திரை கொள்ள முடியாது என்றான். அதற்கு இந்தியன் எமது நாட்டில் மக்கள் தெருவோரத்திலேயே படுத்து உறங்குவார்கள். சிவபெருமானும் திருமாலும் பன்றியாக அவதாரம் எடுத்தவர்கள். அவை கடவுளின் வடிவங்கள். என்னால் அங்கு தங்க முடியும் என்று போய் தான் தொழுவத்தில் தங்கினான்.
சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் நின்ற இந்தியன் தொழுவத்தில் பசு இருக்கிறது. நான் இன்று குளிக்கவே இல்லை. எனது மத தத்துவப்படி பசு இருக்கும் இடம் புனிதமானது. அங்கு நான் குளிக்காமல் தங்க முடியாது என்றான். அப்போது பாக்கிஸ்த்தானி சரி இப்போது எனது முறை எப்படியும் நான் தொழுவத்தில் சமாளிக்கிறேன் என்று சொல்லி தான் போய்த் தொழுவத்தில் தங்கினான்.
சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் பசுவும் பன்றியும் மிகவும் பரிதாபகரமான முகத்துடன் நின்றன.

Monday, 15 July 2013
இணையவெளி(cyber space) உளவும் தகவல் திருட்டும்
எட்வேர்ட் ஸ்னோடன் இரசியாவின் கவர்ச்சி மிக்க பெண் உளவாளி அன்னா சப்மனின் காதலி என்றும் அவர் பத்து பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்க படைத்துறை இரகசியங்களை இரசியாவிற்கு விற்றார் என்றும் சொல்கிறது Internet Chronicle. அமெரிக்க வல்லாதிக்கமென்னும் கோலியாத்திற்கு எதிரான சிறுவன் டேவிட் என ஸ்னோடனைக் காண்பிக்கின்றது இன்னொரு ஊடகம்.
உலக அரங்கில் ஒன்றிற்கு ஒன்று குழிபறிக்கும் தன்மை நாடுகளிடையே அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஒரு நாட்டு மற்ற நாட்டுக்குள் சென்று உளவு பார்ப்பது தொன்று தொட்டே இருந்து வருகிறது. இதை ஐந்தாம் படை என்பர். வள்ளுவரும் இதை:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
இதன் பொருள்: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.
பணம் கொடுத்து உளவுபார்த்தல், அழகிய பெண்களை வைத்து உளவு பார்த்தல், அழகிய ஆண்களை வைத்து உளவு பார்த்தல் இப்படி மாறி வந்த உளவு பார்க்கும் முறை. தகவல் தொழில் நுட்பப் புரட்சியுடன் புதிய வடிவம் பெற்று விட்டது.
ஆளும் கட்சிகள் நாட்டில் தமது செல்வாக்கு எப்படி என்பதை அரச உளவுத் துறையை வைத்துக் கணிப்பிடுகிறது. தேர்தலின் போதும் ஆளும் கட்சி அரச உளவுத் துறையை தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும். இவை சில நாடுகளில் நடக்கின்றன.
உளவு பார்த்தல் என்பது நாடுகளுக்கு மட்டும் உரியதல்ல. தனியார் நிறுவனங்களும் தமது போட்டி நிறுவனங்களை உளவு பார்க்கின்றன. தனிப்பட்டவர்களும் ஒருவரை ஒருவர் உளவு பார்த்துக் கொள்கின்றனர். மனைவியை கணவன் உளவு பார்ப்பதும் மனைவியைக் கணவன் உளவு பார்ப்பதும் உண்டு.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உளவு பார்த்தலுடன் தகவல் திருட்டும் இணைந்து கொண்டது.
பெரு நகரங்களில் தெருவின் இறங்கினால் எம்மை இரசியக் காணொளிப் பதிவுகள் கண்காணிக்கின்றன. வண்டிகளை ஓட்டிச் செல்லும் போது வண்டிகளின் வேகங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பல நாடுகள் தமது குடிமக்களின் எல்லா தொலைபேசி அழைப்புகளையும் பதிவு செய்து கொள்கின்றன. நாட்டில் ஏதாவது குற்றச் செயல்கள் நடந்தால் அதை வைத்து குற்றவாளிகளை உளவுத் துறை கண்டுபிடிக்கிறது.
எட்வேர்ட் ஸ்னோடன் அமெரிக்க மக்கள் அனைவரையும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகம் உளவு பார்க்கிறது என்பதை முதலில் அம்பலப்படுத்தினார். இப்படிப்பட்ட உளவு பார்த்தலால் நாட்டில் நடைபெற இருந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களைத் தாம் முறியடித்ததாக அமெரிக்க அரசு சொன்னது. பின்னர் எட்வேர்ட் ஸ்னோடன் அமெரிக்க எல்லா நாடுகளையும் உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டினார். இதை ஒட்டி உண்மையில் ஆத்திரம் அடைந்தவை தென் அமெரிக்க நாடுகள் மட்டுமே. தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பான மெர்குசூரின் (Mercosur) கூட்டத்தில் ஒரு நாள் முழுக்க அமெரிக்க உளவு பற்றி விவாதிக்கப்பட்டது. மற்ற நாடுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி தெரிவித்தது. இந்தியாஆச்சரியம் தெரிவித்தது. சீனா ஆட்சேபித்தது. தென் அமெரிக்க நாடுகளான எக்குவேடர். அமெரிக்காவிற்கு அச்சப்படாமல் நிக்கரகுவா, வெனிசுவேலா போன்ற நாடுகள் எட்வேர்ட் ஸ்னோடனுக்கு புகலிடம் தர முன்வந்துள்ளன. அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சி இரசியாவே ஸ்னோடனுக்கு புகலிடம் கொடுக்கத் தயங்கிக் கொண்டிருக்கிறது.
எட்வேர்ட் ஸ்னோடன் தனது நான்கு மடிக்கணனிகளில் உள்ள அமெரிக்கப் படைத்துறை இரகசியங்களை இரசியாவிற்கு விற்றார் என்ற குற்றச் சாட்டு இப்போது முன் வைக்கப்பட்டுள்ளது. கடற்படுக்கையில் அணுப்படைக்கலன்கள் கொண்ட தளத்தை அமெரிக்கா அமைக்கவிருக்கும் திட்டமும் அதன் இரகசியங்களும், UFO எனப்படும் பறக்கும் தட்டுகள் பற்றிய இரகசியங்களும் அந்த நாலு மடிக்கணனிகளில் இருக்கின்றன எனப்படுகிறது.
சட்டங்களுக்கு முரணான தகவல் திருட்டு
பின் லாடன் 2001இல் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தை தாக்கியதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே சதாம் ஹுசேன் இரட்டைக் கோபுரத்தைத் தாக்க முற்பட்டார் என்கிறார் ஸ்னோடன். விக்கிலீக் அமெரிக்காவிற்கு ஏற்படுத்திய பாதிப்பிலும் பார்க்க மோசமான பாதிப்பை ஸ்னோடனால் ஏற்படுத்த முடியும். விக்கிலீக்ஸ் அமெரிக்க அரசதந்திரிகளிடையான தகவற்பரிமாற்றத்தை மட்டுமே வெளியிட முடிந்தது. இரசிய விமான நிலையத்தில் இருந்து கொண்டு மனித உரிமையாளர்களுடன் உரையாடிய ஸ்னோடன் தான் நீதி மன்ற தேடுதல் ஆணையின்றி உலகின் எப்பகுதியிலும் புகுந்து தேடித் தகவல்களைத் திரட்டக் கூடியவாராக இருந்தார் என்றார்.தான் செய்தது அமெரிக்க அரசமைப்பு யாப்பின் 4வது 5வது திருத்தங்களுக்கு முரணானது என்றும், வியன்னா உடனபடிக்கைக்கு முரணானது என்றும், உலக மனித உரிமைப் பிரகடனத்திற்கு முரணானது என்றும் ஸ்னோடன் தெரிவித்தார். இரசிய உளவாளி அன்னா சப்மன் தான் ஸ்னோடனைத் திருமணம் செய்ய விரும்புவதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இணைய வெளித் தகவல் திருட்டுக்களுக்கு அஞ்சிய இரசியா தனது முக்கிய அரச பணிமனைகளில் மீண்டும் பழைய தட்டச்சுப் பொறிகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டது.
சீனாவில் அமெரிக்காவின் கைவரிசை
சீனாவில் அரச ஊழியர்கள், பொதுவுடமைக் கட்சிச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பெரும்பாலானோர் தமது த்கவற் பரிமாற்றத்திற்கு SMS எனப்படும் குறுந்தகவல்களிலேயே பெரிதும் தங்கியுள்ளனர். 2012-ம் ஆண்டு சீனாவில் 90 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. சீனக் கைப்பேசி நிறுவனங்களின் கணனிகளை அமெரிக்கா ஊடுருவி எல்லா குறுந்தகவல் பரிமாற்றங்களையும் திருடிவிட்டதாக ஸ்னோடன குற்றம் சாட்டுகிறார்.
இணையவெளிப் போர் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்: அமெரிக்காவின் இணையவெளிப் போர்
அமெரிக்காவில் சீனாவின் கைவரிசை
அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா இணைய வெளியில் ஊடுருவித் திருடுவதால் அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பீடும் இரண்டு மில்லியன் வேலைகள் இழக்கப்படுவதாகவும் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கல் குற்றம் சாட்டுகிறார்கள். அமெரிக்கப் படைத்துறை இரகசியங்களையும் சீனா திருடி வருகிறது.
உலகில் முன்னணி நாடுகள் யாவும் இணையவெளியூடாக தகவல் திருட்டிலும், உளவு பார்த்தலிலும், தக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளன. இணையவெளிப்படைப்பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இதில் அதிக அளவு ஈடுபட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் உலகக் காவற்துறை நிலை தகர்கப்பட்டால் சீனா கூட முறையான உலக வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் என்பதை சீனாவும் அறியும்.

Sunday, 14 July 2013
மத்திய கிழக்கை நோக்கிப் படைகளை நகர்த்தும் அமெரிக்காவும் இரசியாவும்.
பதவியில் இருந்து படைத்துறையினரால் அகற்றப்பட்ட மொஹமட் மேர்சிக்கு எதிராக எகிப்தியப் பொருளாதாரத்தை சிதைத்தார் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கும் முயற்ச்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேர்சி பதவியில் இருந்து விலக்கப்பட்டதை எதிர்த்து பல இலட்சக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
எகிப்திய மக்களின் தற்போதைய முக்கிய பிரச்சனை நாட்டில் மோசமடைந்துள்ள பொருளாதாரமாகும். எகிப்தில் முதல் முதலாக மக்களாட்சி முறைப்படி நடந்த தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட மொஹமட் மேர்சி அவரது பதவி ஏற்று ஓராண்டு நிறைவு நாளான ஜூன் 30-ம் திகதி மக்கள் பல இலட்சக் கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து எகிப்தியப் படைத்துறை அவரைப் ஜூலை 3-ம் திகதி பதவியில் இருந்து விலக்கி நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் இரத்துச் செயத்துடன். புதிய அதிபராக உச்ச நீதிமன்ற நீதிபதி அட்லி மன்சூரையும் புதிய தலைமை அமைச்சராக நோபல் பரிசு வென்ற அல் பராடியையும் படைத்துறையுனர் நியமித்தனர்.
புதிதாக அதிபராக நியமிக்கப்பட்ட சட்டத்தையும் நாட்டின் அரசமைப்பையும் மதித்து நடக்கக் கூடியவர் என்றும் நீதியாக அவர் நடப்பார் என்பதையும் எதிர் பார்க்கலாம். ஆனால் புதிதாக தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்ட தலைமை அமைச்சர் அல் பராடி அமெரிக்க சார்பானவர் என்றும் ஒரு தாராண்மைவாதி என்றும் கூறப்படுகிறது. இவரது நியமனம் பல இசுலாமிய மதவாதிகளை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
எகிப்தில் இப்போது மேர்சிக்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் பெரும் திரள் திரளாகக் கூடி ஆர்ப்பாட்டங்கள் செய்து வரும் அதே வேளை யார் மக்களின் ஆதரவைப் பெறுவது என்ற பெரும் போட்டியும் நிலவி வருகிறது. இதன் ஒரு அம்சமாக மேர்சி நாட்டின் பொருளாதாரத்தை பதவியில் இருந்த போது சிதைத்தார் என்ற குற்றச்சாட்டை படைத்துறையினர் முன் வைத்து அதற்காக அவர் மீது வழக்குத் தொடர யோசித்து வருகின்றனர்.
அமெரிக்கா எகிப்தியப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டால் அது இசுலாமியத் தீவிரவாதிகளை ஆத்திரப்படுத்தும் என்பதால் அது திரைமறைவில் தனது நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் தனது நண்பர்களான சவுதி அரேபிய ஆட்சியாளர்களைக் கொண்டு எகிப்தில் தனது காய்களை நகர்த்தி வருகிறது. மத்திய கிழக்கில் சவுதி அரேபியா தலைமை தாங்குவதை கட்டார் ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் தமது ஆதரவை இசுலாமிய தீவிரவாதிகள் பக்கம் திருப்பியுள்ளனர். இது பற்றிக் காண முன்னைய பதிவிற்குச் செல்லவும்: அல் ஜசீராவும் பாலியல் போராளிகளும்
சூயஸ் கால்வாயால் எகிப்து புவிசார் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு நாடாகும். அது தமது எதிரிகளின் கைகளுக்குப் போவதை அமெரிக்கா ஒரு போதும் விரும்பாது. அமெரிக்கா எகிப்து கொந்தளிக்கத் தொடங்கியவுடன் தனது படைகளை இத்தாலியில் குவித்தது. பின்னர் அமெரிக்கா தனது கடற்படையின் ஈரூடகப் பிரிவினரில் பலரை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்தியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இது மட்டுமல்ல சிரியாவில் லத்திக்கா என்னும் இடத்தில் இருந்த ஏவுகணைத் தளத்தில் இருந்த பெருமளவிலான இரசியத் தயாரிப்பு ஏவுகணைகள் திடீரென வெடித்துச் சிதறின. இது இஸ்ரேலிய விமானப் படைகளின் தாக்குதலால் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த இரசியா தனது 160,000படையினரை மத்திய கிழக்கு நோக்கி நகர்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியா செய்யும் பெரும் படை நகர்வு இதுவாகக் கருதப்படுகிறது.130 நீண்ட தூர விமானங்கள், படைகளை நகர்த்தும் விமானங்களும் கப்பல்களும், சண்டை விமானங்கள், குண்டு வீச்சு விமானங்கள், 70 கடற்படைக் கப்பல்கள் என்பன இரசியப் படைநகர்த்தல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிரியாவையும் எகிப்தையும் ஒட்டி பெரும் பதட்ட நிலை மத்திய கிழக்கில் உருவாகியுள்ளது.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...