ஐ-போன்கள் ஒரு சிறந்த கருவி என்பதிலும் பார்க்க அது சிறந்த விளையாட்டுப் பொருள் என்று சொல்வொரும் உண்டு. கருவியோ விளையாட்டுப் பொருளோ விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகின்றன ஐ-போன்கள்.
ஆப்பிளின் அடுத்த ஐ-போன் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்களை அறியப்பலர் ஆவலாக உள்ளனர். அதுபற்றிய செய்திகள் இப்போது கசியத் தொடங்கிவிட்டன:
- அடுத்த ஐ-போன் iPhone 4S எனப் பெயரிடப்படும்.
- இப்போது உள்ள ஐ-போன்களிலும் பார்க்க தடித்ததாகவும் விரைவாகச் செயற்படக்கூடியதாகவும் இருக்கும்.
- சில அழகுபடுத்தல் வேலை இருக்கும்.
- அதில் A5 dual-processorஉம் HSPA+ support உம் இருக்கும் ஆனால் LTE இருக்காது.
- NFC chipஇருக்காது அதாவது Near-field technology. Near-field technologyஇன்னும் பிரபலமாகும்வரை ஐ-போன் காத்திருக்குமாம்.
- திரை பெரிதாகும்.
- 8MP ஒளிப்பதிவுத்திறன் கொண்டிருக்கும்.
2011 நவம்பரில் iPhone 4S வெளிவரலாம். நத்தார் அதிரடியாக இருக்கும்.