Showing posts with label கொரானா. Show all posts
Showing posts with label கொரானா. Show all posts

Thursday, 16 April 2020

உலகப்பொருளாதாரத்தையும் தொற்றிய நோய்


நூற்றிற்கு மேற்பட்ட நாடுகள் கொவிட்-19 நோயால் தமது நாட்டுக்கில் வெளிநாட்டவர் வராமல் பயணத்தடை விதித்துள்ளன. அந்த நோயின் பரவலைத் தடுக்க அரசுகள் பிறப்பித்த மூடிப்பூட்டல் உத்தரவால உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கி உலகப் பொருளாதார உற்பத்தி கொவிட்-19 ஆல் 5% வீழ்ச்சியடையும் என்கின்றது. பன்னாட்டு நாணய நிதியம் அதை மூன்று விழுக்காடு என மதிப்பிட்டுள்ளது. பநா நிதியம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக மொத்த உற்பத்தியில் ஒன்பது ரில்லியன் டொலர் பெறுமதியான குறைப்பை கொவிட்-19 தொற்று நோய் ஏற்படுத்தும் என்கின்றது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் அரையாண்டு அறிக்கை
பன்னாட்டு நாணய நிதியத்தின் அரையாண்டு அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் 5.9 விழுக்காட்டாலும், யூரோ வலய நாடுகள் 7.5விழுக்காட்டலும், ஜப்பான் 5.2விழுக்காட்டாலும் பிரித்தானியா 6.5 விழுக்காட்டாலும் பொருளாதார தேய்வை 2020இல் சந்திக்கும். ஆண்டுக்கு குறைந்தது  எட்டு விழுக்காடு வளர வேண்டிய கட்டாயத்தில் உள்ள சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதாரங்கள் 2020இல் சொற்ப அளவே வளரும். சீனாவின் பொருளாதாரம் 1.2 விழுக்காட்டாலும் இந்தியாவின் பொருளாதாரம் 1.9 விழுக்காட்டாலும் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வுகூறியுள்ளது. 2020இல் ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இலங்கை ஆகிய நாடுகள் பெரும் பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அறுபது வளர்முக நாடுகள் கடன் கேட்டு பன்னாட்டு நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டுகின்றன. கொரொனா நச்சுக் கிருமியின் கொவிட்-19 நோயால் பாதிக்கப் பட்ட வளரு முக நாடுகளுக்கு உதவும் வகையில் பன்னாட்டு நாணயத்தின் சிறப்பு பணமெடுப்பு உரிமையை (Special Drawing Rights) ஒரு ரில்லியன் டொலர்களாள் அதிகரிக்கும் படி பல ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாட்டு தலைவர்களும் முன்னாள் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அமெரிக்கா அதற்கு தயக்கம் காட்டுகின்றது. 


பாரிய தாக்கம்
பன்னாட்டு தொழில் அமைப்பின் தகவலின் படி கொவிட்-19 தொற்றுநோய் 3.3 பில்லியன் உலக உழைப்பாளர்களில் 40 விழுக்காட்டினரை வேலை செய்யாமல் பண்ணியுள்ளது. 1.25பில்லியன் மனிதர்களின் உழைப்பு இழப்பு உலகப் பொருளாதாரத்தை உலுப்பியதுடன் பல ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. பல முன்னணிப் பொருளாதார நாடுகளில் தொற்றுநோய் பரவும் வேகம் குறையாத படியால் உண்மையான பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இறுதியில் 25 மில்லியன் உழைப்பாளர்கள் நிரந்தரமாக வேலையிழக்கும் நிலை வரலாம். இது 2008-ம் ஆண்டு உருவான உலக நிதி நெருக்கடியின் போது ஏற்பட்ட பாதிப்புலும் அதிகமானது. அதனால் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் பல அரசுகள் முன்வைத்துள்ள கடன் நிவாரணத் திட்டம் போதுமானதாக இருக்காது எனச் சொல்லியுள்ளன.
கோவிட்-19 நோய் பரவலைத் தடுக்க ஹங்கேரி மக்களாட்சியில் இருந்து தனியொருவர் ஆட்சிக்கு மாறிவிட்டது எனச் சொல்லக் கூடிய அளவிற்கு அதன் பாராளமன்றம் தலைமை அமைச்சர் விக்டர் ஓபனுக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்கியுள்ளது.

அதிகரிக்கும் அமெரிக்க சீன விரோதம்.                
அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளும் சீனாவிற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ளன. டிரம்ப் கொரோனாவை சீன நச்சுக் கிருமி என அழைத்தமையை மக்களாட்சிக் கட்சியினர் விரும்பாத போதிலும் அந்தக் கிருமி பரவுவதற்கு சீனாவே காரணம் என்கின்றனர். கொவிட்-19 தாக்கதிற்கு பின்னர் சீன அமெரிக்க உறவு முன்பை விட மோசமாகும் என்பதில் ஐயமில்லை. 90% குடியரசுக் கட்சியினரும் 67% மக்களாட்சிக் கட்சியினரும் சீனாவே கொரோனா நச்சுக் கிருமியின் பரவலுக்கு பொறுப்பு என நம்புகின்றனர். மற்ற நாடுகளின் இழப்பீட்டிற்கு சீனா ஈடு செய்ய வேண்டும் என்ற கருத்தும் அமெரிக்காவில் வலுப்பெறுகின்றது. இந்தக் கருத்தை அமெரிக்க ஊடகங்கள் உலகெங்கும் பரவச் செய்தால் சீனாவிற்கு உலக அரங்கில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே பல நாடுகளில் சீனர்கள் மீது தாக்குதல் செய்வது அதிகரித்துள்ளது.

சீனா சிதறுமா சீறுமா
2020 ஜனவரி பெப்ரவரி மாதங்களில் சீனாவின் ஏற்றுமதி 17.5% வீழ்ச்சியடைந்தது. 2020 ஜனவரியில் 50% ஆக இருந்த சீனாவின் தொழிற்றுறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டி 2020 பெப்ரவரியில் 37.5% ஆக வீழ்ச்சியடைந்தது. பின்பு மார்ச் மாதம் அது 52% ஆக உயர்ந்தது. சீனாவின் உள்நாட்டு உற்பத்தி துரிதமாக சீரடைந்தமை ஒரு நல்ல செய்தி. ஆரம்பத்தில் தவறுகள் செய்தாலும் தான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் தொற்றுநோய் நெருக்கடியை சீனா சிறந்த முறையில் கையாண்டுள்ளது. சீனாவின் உற்பத்தித் துறை வழமைக்குத் திரும்பியுள்ளமையும் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்தமையும் சீனாவின் பொருளாதாரத்திற்கு எந்த அளவில் உதவப் போகின்றது? சீனப் பொருளாதாரம் பெருமளவு ஏற்றுமதியில் தங்கியுள்ளது. அது ஏற்றுமதி செய்யும் நாடுகள் பல கொவிட்-19 நெருக்கடியில் இருந்து மீள இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் எடுக்கும். அதனால் சீனாவின் பொருளாதாரம் அடுத்த 6 மாதங்களுக்கு பல சவால்களை எதிர் நோக்கும். கொவிட்-19 தாக்குதலுக்கு முன்னரே சீனாவின் தொழில்நுட்பத்துறையில் செய்யப்படும் முதலீடு பாதிப்படையத் தொடங்கியது. 2020 முதலாம் காலாண்டில் அது 31% வீழ்ச்சியடைந்தது. 2020 முதலாம் காலாண்டில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடு செய்ய அதிக உற்பத்தியை இரண்டாம் காலாண்டில் சீனா செய்யும் போது இரண்டாம் காலாண்டில் அதிக உற்பத்தியை செய்யலாம். ஆனால் சீனாவில் உற்பத்தி செய்யும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தியை தமது நாட்டுக்கு நகர்த்த முயன்றால் அது சீனப் பொருளாதாரத்தைப் பாதிக்கும். பறகலங்களின் (Drones) உலக விற்பனையில் 70% சீன நிறுவனமான DJIஇற்கு உரியது. இவை பறந்து கொண்டிருக்கையில் எதிர்கொள்பனவனற்றை தாமாகவே உணர்ந்து அவற்றுடன் மோதலைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் தபால்துறை பொதி விநியோகத்துறை போன்றவற்றில் மட்டுமல்ல படைத்துறையிலும் இந்த பறகலங்கள் பெரிதும் பயன்படுத்தப்படவிருக்கின்றன. இது போல பல புதிய தொழில்நுட்ப உற்பத்திகள் சீனாவிற்கு கைகொடுக்கலாம்.

மீண்டும் தன்னிறைவுக் கொள்கை
கொவிட்-19 தாக்கத்தின் பின்னர் பல நாடுகள் தமக்குத் தேவையானவற்றை தமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தன்னிறைவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். அத்துடன் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் பல நாடுகள் எடுக்கலாம். உலகெங்கும் பல கிராமங்கள் அக்கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவை அவற்றின் மக்கள் எடுத்துள்ளனர். இது பல் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தியைப் பாதிக்கலாம்.

உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள்
எந்த ஒரு மோசமான பொருளாதா நெருக்கடியும் சில நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். கொவிட்-19 நோய்த்தாக்கம் பேஸ்புக், கூகிள், அமேசன், நெட்ஃபிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் வருமானத்தை அதிகரித்துள்ளது. இந்த நோய்த்தாக்கம் பலரை தமது வீடுகளில் இருந்து கணினிகள் மூலம் இணையவெளித் தொடர்புகளைப் பயன் படுத்தி பணிபுரியும் தேவையை அதிகரித்துள்ளது. அதற்குரிய மென்பொருளை உருவாக்கும் நிறுவனங்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. இத்துறைக்கு புதிதாக வந்துள்ள Slack & Zoom நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்துள்ளது. நோயாளர்களின் தகவல்களைத் திரட்டி செயற்கை விவேகத்தின் மூலம் மிகத் துரிதமாக நிரைப்படுத்தலுக்கான தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. 2020 ஜவரியில் இருந்து உலகெங்கும் பங்குச் சுட்டிகள் வீழ்ச்சியடைந்த நிலையில் கூகிள், அமேசன், அப்பிள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

இந்திய வங்கித்துறையும் பொருளாதாரமும்
இந்திய வங்கித்துறைக்கான பங்குகளின் சுட்டி 2020 மார்ச் மாதத்தில் 41 விழுக்காடு வீச்சியடைந்தது. கொவிட்-19இன் தாக்கத்திற்கு முன்னரே இந்திய வங்கித்துறை அறவிட முடியாக்கடன் (வாராக்கடன்) பிரச்சனையில் மூழ்கியிருந்தது. கொவிட்-19 பரவுவதைத் தடுக்க நான்கு மணித்தியால அவகாசம் மட்டும் கொடுத்து மூன்று வார ஊரடங்கு உத்தரவை நரேந்திர மோடி பிறப்பித்தார். Fitch Ratings என்ற தரப்படுத்தும் நிறுவனத்தின் கணிப்பின் படி இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை இரண்டு விழுக்காடாக மட்டுமே இருக்கும். இது சுதந்திர இந்தியாவின் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியாகும். ஆண்டு தோறும் படித்து முடித்து வேலை தேடி வரும் இந்திய இளைஞர்களுக்கு வேலை கொடுக்க இந்தியா ஆகக் குறைந்தது எட்டு விழுக்காடு வளர்ச்சியடைய வேண்டும். அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் தமது மொத்த தேசிய உற்பத்தியின் பத்து விழுக்காட்டை தங்களுடைய பொருளாதார நிலைத் தரம் தாழ்த்தப் படாமல் மக்கள் நலனுக்காக செலவிட முடியும். இந்தியா பெருமளவு தொகையை மக்கள் நலனுக்காக செலவளித்தால் அதன் பொருளாதாரத் தரம் குறைக்கப்படும். அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவடையும். வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவது கடினமாகும். பணவீக்கம் அதிகரிக்கும், இந்திய நிதித் துறை முன்னாள் செயலாளரான சுபாஷ் சந்திர கார்க்கின் கருத்துப்படி இந்தியாவின் மூன்று வார பூட்டி மூடல் இந்தியப் பொருளாதாரத்திற்கு எட்டு இலடசம் கோடி இழப்பு ஏற்படும். அதை ஈடு செய்ய இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 2.5 சதவிகிதம் பெறுமதியான கடன் வாங்க வேண்டும் அதாவது 4 முதல் 5 லட்சம் கோடி ரூபா வரை கடன் வாங்க வேண்டும்.

அமெரிக்காவில் இரண்டு ரில்லியன் திட்டம்
கொவிட்-19 ஆல் பாதிக்கப் பட்ட பொருளாதாரத்தை மீட்க இரண்டு ரில்லியன் டொலர்களை பொருளாதாரத்தினுள் செலுத்தும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக $99000இலும் குறைந்த வருமானமுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட அமெரிக்கர்களுக்கும் 1200 டொலர்களையும் தம்பதிகளுக்கு 2400 டொலர்களையும் பிள்ளைகளுக்கு 500 டொலர்களையும் அமெரிக்க அரசு வழங்குகின்றது. அமெரிக்கர்களின் கொள்வனவு குறைந்தால் அமெரிக்க முதலாளிகளின் வருமானம் குறையும் என்பதால் நாட்டில் கொள்வனவை அதிகரிக்க அமெரிக்கா இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் 810பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து-வாங்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதனால் வங்கிகளிற்கு குறைந்த வட்டியில அதிக நிதி கிடைக்கும். அதை அவ்வங்கிகள் பொருளாதார மேம்பாட்டிற்கான கடனாக நிறுவனங்களிற்கும் பொதுமக்களுக்கும் வழங்கலாம். 2020 ஏப்ரல் 7-8 திகதிகளில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒருமித்த முடிவை எடுக்கவில்லை. இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படலாம்.

எரியும் எரிபொருள் உற்பத்திக்குள் நெய் ஊறிய கொரோனா
சவுதி அரேபியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் உருவான போட்டியால் மசகு எண்ணெயின் விலை முப்பது டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்த நிலையில் உலக உற்பத்தியும் போக்கு வரத்தும் கொரோனா நச்சுக் கிருமியால் பாதிப்படைந்தது. இந்திய சீனா போன்ற நாடுகள் மலிந்த விலையில் தமது எரிபொருள் கையிருப்பை பெருமளவு அதிகரித்தன. பின்னர் மசகு எண்ணெய் விலை 20டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலையீட்டினாலும் அமெரிக்கா சவுதி அரேபியா மீது கடுமையான மிரட்டல்களைப் பிரயோகித்ததாலும் இரசியாவும் சவுதியும் எரிபொருள் உற்பத்திக் குறைப்பிற்கு ஒத்துக் கொண்டன. ஆனாலும் பன்னாட்டு எரிபொருள் முகவரகம் எரிபொருள் கொள்வனவு கொவிட்-19 நோய் தாக்கத்தால் இந்த ஆண்டு பெரிதும் குறையும் என எதிர்வு கூறியத அடுத்து 2020 ஏப்ரல் 15-ம் திகதி மசகு எண்ணெய் விலை இருபது டொலரிலும் குறைந்துள்ளது. இதனால் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் போது அந்த நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் வருமானத்தை இழப்பதுடன் அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியும் குறையும். இந்திய இந்தியா, பாக்கிஸ்த்தான், இலங்கை ஆகியவற்றுடன் பல கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வேலை வாய்ப்பு குறையும்
அமெரிக்க கோர்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியரும் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகருமான  கலாநிதி கௌசிக் பாசு செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளிய கொவிட்-19இன் தாக்கம் அதிகரிக்கும் என்கின்றார்.  கொவிட்-19இன் பின்னர் பெரிய உற்பத்தி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பாவித்து தமது உற்பத்திகளை மேலும் கணினி மயமாக்கும். அதனால் வேலை வாய்ப்புக்கள் குறையும். மேலும் அவர் வீட்டில் இருந்து வேலை செய்வது இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்கின்றார்.

1930களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் பார்க்க 2007இல் உருவான உலக நிதி நெருக்கடியிலும் பார்க்க கொவிட்-16இன் தாக்கத்தால் உலகப் பொருளாதாரம் பெரிய பாதிப்பைச் சந்திக்கவிருக்கின்றது. இன்னும் தொற்று நோய் பரவிக் கொண்டிருப்பதாலும் எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என சொல்ல முடியாத நிலை இருப்பதாலும் உலகப் பொருளாதாரம் எந்த அளவு பாதிக்கப்படும் என இப்போது அளவிட முடியாது.

Friday, 3 April 2020

கொரோனாவும் அரசுகளும் சதிக்கோட்பாடுகளும்

கொரோனா நச்சுக்கிருமி உலகை எதிர்பார்த்திராத அளவு ஆட்டிப்படைக்கின்றது. மனித வரலாற்றில் கோவிட்-19இலும் பார்க்க பல மடங்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட பல தொற்று நோய்கள் வந்திருந்தாலும் கொவிட்-19உலக நாடுகளுக்கு இடையிலான உறவிலும் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா நச்சுக்கிருமியின் தோற்றம் பற்றி பல கற்பனைக் கதைகள் பரவுகின்றன.

சுகாதாரப் பிரச்சனையில் இருந்து பொருளாதாரப் பிரச்சனைவரை
சீனாவின் ஆரம்பித்ததாகக் கருதப்படும் கொவிட்-19முதலில் சுகாதாரப் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. அதற்குரிய மருந்தையும் சிகிச்சை வசதிகளையும் தேடும் போது அது ஒரு மருத்துவப் பிரச்சனையானது. அந்த இரண்டு பிரச்சனையையும் ஆரம்பத்தில் சீன அரசு கையாண்ட போது எழுந்த விமர்சனங்களால் அது அரசியல் பிரச்சனையாக மாறியது. சீனாவின் முக்கிய நகரமான உஃகான் தனிமைப் படுத்தப் பட்ட போதும் அதைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பல நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட போதும் பெரும் பொருளாதாரப் பிரச்சனை எழுந்தது. சீனாவின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப் பட்டு 2020இன் முதல் இரண்டு மாதங்களில் சீனாவின் தொழிற்றுறை உற்பத்தி 13.5% வீழ்ச்சியடைந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. 1979இன் பின்னர் முதற்றடவையாக சீனாவின் பொருளாதாரம் குன்றப் போகின்றது எனக் கருதப்படுகின்றது. சீனாவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாலும் உலகெங்கும் பல நாடுகளில் பரவியுள்ள கொவிட்-19அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் கௌரவப் பிரச்சனை
சீனாவில் இருந்துதான் கொரோனா உருவானது என்பதும் சீனா ஆரம்பத்தில் அந்த கிருமிகள் தொடர்பாக உண்மையான செய்திகளை வெளிவிடவில்லை என்ற குற்றச் சாட்டும் சீனாவிற்கு ஒரு கௌரவப் பிரச்சனையாக இருக்கின்றது. தான் கொரோனா கிருமிப்பரவலை மற்ற நாடுகளிலும் பார்க்க சிறப்பாகக் கையாண்டது என சீனா மார்தட்டுகின்றது. சீனா அரசு மேற்கொண்ட இறுக்கமான நடவடிக்கைகளால் 7.5மில்லியன் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன என்ற ஒரு பிரித்தானியப் பல்கலைக் கழகம் சீனா தனது நடவடிக்கைகளை மூன்று வாரங்களுக்கு முன்னர் எடுத்திருந்தால் 95% உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என்ற குற்றச் சாட்டையும் முன் வைத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் சீனாவை வாயாரப் புகழ்ந்துள்ளது. ஆனால் பல மேற்கு நாட்டு ஊடகங்கள் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பொம்மை என்கின்றது. சீனாவிற்கு முன்னர் தைவான் உலக சுகாதார நிறுவனத்திற்கு கொரொனா நச்சுக் கிருமிகள் மனிதர்களில் இருந்து மனிதருக்கு பரவக் கூடியது என அறிவுறுத்தியிருந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளின் தலைவர்கள் உலக சுகாதார நிறுவன அதிபர் மீது குற்றம் சாட்டினர். அவர் பதவி விலக வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. 


நாட்டுக்கு நாடு வித்தியாசமாக கையாளப்பட்ட கொவிட்-19
சிறியா நாடென்பதாலும் சிறப்பாக முகாமைப் படுத்தப்படுவதாலும் சிறந்த மருத்துவத் துறையைக் கொண்டிருந்த படியாலும் சிங்கப்பூர் கொவிட்-19நச்சுக்கிருமிப் பரவலை சிறப்பாகக் கையாண்டது. சிறப்பான ஒற்றையாட்சியைக் கொண்ட தென் கொரியாவாலும் சிறந்த முகாமையைக் கொண்ட ஜப்பானாலும் கோவிட்-19இன் பரவலை தடுக்க முடிந்தது. தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான இத்தாலி பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதை மற்ற ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாகக் கவனித்தன. துருக்கிய ஆட்சியாளர்கள் முதலில் தமது நாட்டில் கொவிட்19 நச்சுக்கிருமி பரவவில்லை என்றது. இஸ்ரேல் தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளை கொவிட்-19இற்கு எதிராக எடுத்தது. இலங்கை அரசு கொவிட்-19இல் அதிக கவனம் எடுத்தது. விரைவில் பாராளமன்றத் தேர்தலி நடத்தி அதன் அரசமைப்பு யாப்பின் 19வது திருத்தத்தை ஒழிப்பதில் அதிபர் அக்கறையாக உள்ளார்.
பண்டங்கள் அல்ல மனிதப் போக்கு வரத்தே பிரச்சனைக்குரியது.
சீனாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் இந்தியாவிலும் பாக்கிஸ்த்தானிலும் கோவிட்-19இன் பாதிப்பு பல ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க குறைந்த அளவில் இருக்கின்றது. கொவிட்-19 நச்சுக்கிருமியின் ஆரம்ப இடமான உஃகான் நகரில் இருந்து நேரடி விமானச் சேவையைக் கொண்ட தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொற்று நோய்ப்பரவல் துரிதமாகவும் அதிக அளைவிலும் இருந்தது. கொவிட்-19 நச்சுக் கிருமி மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுவதே அதிகம். அது உணவுப் பொருட்களிலோ மற்ற வர்த்தகப் பொருட்களிலோ அதிக மணித்தியாலங்கள் உயிருடன் இருக்காது.

பல விதமான சதிக் கோட்பாடுகள்
ஒவ்வொரு தடவையும் புது வகையான தொற்று நோய்க்கிருமிகள் உலகெங்கும் பரவும் போது மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதற்காக அக்கிருமிகளை உருவாக்கின என்பது முதலில் வைக்கப்படும் குற்றச் சாட்டாகும். இரண்டாவது குற்றச் சாட்டு உயிரியல் படைக்கலன்களுக்கு உற்பத்தி செய்த கிருமிகள் தப்பி விட்டன என்பது. மூன்றாவது ஒரு நாட்டில் அழிவை விளைவிக்க மற்ற நாடு பரவ விட்டது. ஐந்தாவது இது இலுமினாட்டிகள் உலகை அழிக்க செய்யும் வேலை. இவை மட்டுமல்ல இன்னும் பல நம்பமுடியாத ஆதாரமற்ற சதிக்கோட்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

காசா முதல் டில்லிவரை
காசா நிலப்பரப்பில் ஓர் இஸ்லாமிய போதகர் கொரோனாவை அல்லா இஸ்லாமியர்களின் எதிரிகளை அழிக்க உருவாக்கினார் என்றார். மேற்குக் கரையில் உள்ள சிலர் இஸ்ரேல் இஸ்லாமியர்களை அழிக்க கொரோனா வைரஸை உருவாக்கிப் பரவவிட்டனர் என்கின்றனர். இந்தியாவில் சில மதவாதிகள் கொரோனாவை இஸ்லாமியர்கள் பரப்புகின்றார்கள் எனக் குற்றம் சாட்டி அதற்கு “ஜிகாடிஸ்ற் வைரஸ்” எனப் பெயரிட்டனர். சீனாவில் உஃகான் நகரில் இருந்து சீனத் தலைநகர் பீஃயிங்கிற்கும் பொருளாதாரத் தலைநகர் ஃசங்காயிற்கும் பரவியதிலும் பார்க்க அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு அதிகம் பரவியது ஏன் என சிலர் கேள்வி எழுப்பியதுடன் ஒரு வீட்டின் சமையலறையில் பிடித்த தீ அதன் இருப்பறைக்குப் பரவாமல் அடுத்த வீட்டுக்கு பரவியது எப்படி எனவும் கேள்வி எழுப்புகின்றனர். முதலாவது உண்மை கொரொனா மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவும். சமையலறையில் தீப்பிடித்தவுடன் சமையல் அறையில் இருந்த பக்கத்து வீட்டுக்கார் தன் மீது பிடித்த தீயுடன் பக்கத்து வீட்டு இருப்பறைக்கு ஓடினால் பக்கத்து வீட்டில் தீப்பிடிக்கும். சமையலறையில் தீப்பிடித்தவுடன் அந்த வீட்டின் படுக்கையறையில் இருந்தவர் திடீரென எழுந்து வந்து துரிதமாகச் செயற்பட்டால் சமையலறைக்குள்ளேயே தீ அடக்கப்பட்டுவிடும். உஃகான் நகரில் இருந்து நியூயோர்க் நகருக்கு நேரடி விமானச் சேவை உண்டு. உஃகான் நகரில் அமெரிக்கா, பிரித்தானியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் துணைத்தூதுவரகங்கள் இருக்கின்றன. மாதம் 900பேர் உஃகான் நகரில் இருந்து நியூயோர்க்கிற்கு பறப்புக்களை மேற்கொள்கின்றனர். மேற்கு நாடுகள் முதலில் கொவிட்-19 நோயை பரவவிட்டு மக்களின் நோய் எதிர்ப்பு வலுவால் அடக்கி மக்களின் நோய் எதிர்ப்பு வலுவை அதிகரிக்கும் திட்டத்துடன் இருந்தன. சுவாசக் கவசத்தை முகத்தில் அணிவது பயனில்லை என மேற்கு நாட்டு நிபுணர்களும் அரசியல்வாதிகளும் பரப்புரை செய்தனர். ஆனால் சுவாசக் கவசம் அனிந்த ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கிருமி பரவாது என்பது முற்றிலும் உண்மை. சீனாவின் பெரு நகரவாசிகள் எல்லோரும் கொவிட்-19 தொற்று நோய் பரவ முன்னரே சீனாவின் வளிமண்டலம் மாசு பட்டிருப்பதால் சுவாசக் கவசத்தை அணிந்த படியேதான் அவர்கள் வெளியே செல்வார்கள். அதனால் யாராவது கொவிட்-19 நோயால் பிடிக்கப்பட்டால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவது பெருமளவில் குறைக்கப்பட்டது. சீனா மக்களை வெளியில் செல்ல வேண்டாம் என உத்தரவிட்டால் அந்த உத்தரவிற்கு மக்கள் பணிந்தே ஆக வேண்டும். சீனாவெங்கும் 200மில்லியன் ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் முகங்களை வைத்து ஆட்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தில் சீனா உலகில் முதன்மையாகத் திகழ்கின்றது. அதனால் வீட்டுக்குள் இருக்கும் உத்தரவிற்கு மக்கள் பணிந்தனர். சீனாவில் நோயாளிகளுக்கான சுவாசப் பெட்டிகளுக்கு தட்டுப்பாடு இத்தாலியில் இருந்தது போல் இருக்கவில்லை. இவற்றால் சீனாவால் நோய் பரம்பலையும் இறப்பையும் மட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் உரிய நேரத்தில் உலக சுகாதார நிறுவனத்திற்கு கொவிட்-19 நோய் பற்றி எச்சரிக்க சீனா தவறியது மாநிடத்திற்கு எதிரான குற்றமாகும்.

அமெரிக்கப்படையினர் பரப்பினர் என்கின்றது சீனா
சீனாவின் உஃகான் நகரில் நடந்த பல நாடுகளின் படையினர் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற வந்த அமெரிக்க படையினர் அங்கு கொவிட்-19 நச்சுக் கிருமியைப் பரப்பினர் என சீனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீன வெளியுறவுத் துறையின் பேச்சாளரான Zhao Lijian திட்டமிட்டு இப்படி ஒரு கதையைப் புனைந்து சீன சமுகவலைத்தளங்களில் பரவ விட்டார் என அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொற்று நோய் பரவ ஆரம்பித்த காலங்களில் சீனா எடுத்த பிழையான நடவடிக்கைகளை மறைக்கவே இப்படி ஒரு கதையை சீனா கட்டிவிட்டுள்ளது என்கின்றனர் அமெரிக்கர்கள். அமெரிக்க அதிபர் கொரொனாவிற்கு சீனநச்சுக்கிருமி எனப் பெயரும் சூட்டினார்.

போர் அனுபவமில்லா சீனாவின் போர்க்கால நடவடிக்கை
சீனாவின் படைத்துறையைப் பற்றி விமர்சிக்கும் மேற்கு நாட்டவர்கள் சீனர்களுக்கு போர் அனுபவம் இல்லை என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டுவார்கள். ஆனல் கொவிட்-19நச்சுக் கிருமியை ஒழிப்பதில் எடுத்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஒரு போர் நடந்தால் அதை சீனா எப்படிக் கையாளும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதிலும் சிகிச்சை அழிப்பதிலும் சீனா மனித இயந்திரங்களைப் பயன்படுத்தியது. நோயால் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு மருந்துகளையும் உணவையும் ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பியது. செயற்கை நுண்ணறிவில் சீனா எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதையும் சீனாவின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின.

ஈரான் வழி தனி வழி
ஈரானிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவால் தமது நாட்டில் கொரொனா நச்சுக் கிருமி பரப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றது. அமெரிக்கா ஈரானுக்கு வழங்க முன்வந்த மருந்துப் பொருட்களையும் ஈரான் வாங்க மறுத்தது. அந்த மருந்திலும் ஈரானியர்களைக் கொல்லும் நச்சுக் கிருமிகளை உள்ளடக்கி அமெரிக்கா அனுபும் என்றன ஈரானிய ஆட்சியாளர்கள்.

டிரம்பின் ஆதரவாளர்கள் வேறு வழி
டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் டிரம்பின் தேர்தல வெற்றி வாய்ப்பை இல்லாமல் செய்ய அவரின் எதிரிகள் கொவிட்-19 நோயின் தாக்கம் பற்றி வேண்டுமென்றே மிகைப்படுத்திக் கூறுகின்றார்கள் என்கின்றனர். நியூயோர்க் மாநில மருத்துவ மனைகளில் இருந்து திட்டமிட்டு அவலங்கள் பற்றிய செய்திகள் பரப்பப்படுகின்றன என டிரம்ப் ஆதரவாளர்கள் ஆத்திரப்படுகின்றனர். 5ஜீ தொழில்நுட்பத்தை

பில் கேட்ஸ் முன்கூட்டி திட்டமிட்டாரா?
2015-ம் ஆண்டு ஆற்றிய ஓர் உரையில் வரும் காலத்தில் 10மில்லியன் மக்கள் இறக்கலாம் என எதிர்வு கூறியிருந்தார். மென்பொருள் உற்பத்தி வர்த்தகரான அவர் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப மென் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அவரது நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, கணனிகள் தாமாகவே கற்றுக் கொள்ளல் ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நடக்கவிருப்பவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத் தரவுகளை மிகப்பெருமளவில் திரட்டி அவற்றில் இருந்தும் தற்போது நடக்கும் மாற்றங்களில் இருந்தும் எதிர்காலத்தை அவர்கள் கணிக்கின்றார்கள். அதில் அவர் கண்டதைப் பகிர்ந்து கொண்டார். இந்த கொவிட்-19 நோய்ப்பரமலால் அவருக்கு ஏதாவது நன்மை கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி ஏதாவது கிடைத்தால் அவர் மீது குற்றம் சாட்டுவது நியாயமானது. டீன் கூன்ஸ் என்ன்னும் நாவலாசிரியர் 1981-ம் ஆண்டு எழுதிய The Eyes of Darkness நாவலில் 2020 ஆண்டளவில் நிமோனியா போன்ற ஒரு கடுமையான நோய் உலகெங்கும் பரவும். அது சுவாசப்பை சுவாசக் குழாய் போன்றவற்றைத் தாக்கும். எந்த ஒரு மருந்தாலும் அதை தடுக்க முடியாது என எழுதினார். அந்த நோய்க்கு அவர் ஃஉகான்-400 எனப்பெயரிட்டிருந்தார். பில் கேட்ஸிலும் பார்க்க அவரது எழுத்து மிகவும் துல்லியமாக இருக்கின்றது.

எகிப்த்தியரின் எகத்தாளம்
எகிப்திய நடிகர் ஒருவர் எகிப்தியரை கொரோனா ஒன்றும் செய்ய முடியாது என்றார். உப்புப் போட்ட மீனும் வெங்காயமும் உண்ணும் எம்மிடம் கொரோனா கிருமி வந்தால் அதுதான் அழியும் என்றார். எம்மை ஒன்று கூட வேண்டாம் என்கின்றார்கள் ஆனால் நாம் கூடுவோம்; எம்மை முத்தமிட வேண்டாம் என்கின்றார்கள் ஆனால் நாம் முத்தமிடுவோம் என்றார் அந்த நகைச்சுவை நடிகர். ஆனால் இப்போது எகிப்து நோயாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றது. பல எகிப்தியப் பத்திரிகைகள் Egypt is "untouchable" and that Egyptians "are immune" to coronavirus எனச் செய்திகளையும் வெளியிட்டிருந்தன. எகிப்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் எகிப்தியர்கள் கடவுளால் பாதுகாக்கப்படுபவர்கள் என்றனர். எகிப்திய மத போதகர்கள் இஸ்லாமியர்களை எந்தக் கிருமியும் தாக்காது என்றனர்.

வித்தியாசமாகக் கையாள முயன்ற பிரித்தானியா
இரண்டு உலகப் போரிலும் பிரித்தானியா தனது மக்களின் உயிர்களின் பாதுகாப்பிலும் பார்க்க எதிரியை ஒழிப்பதில் அதிக கவனம் செலுத்தியது. தனது மக்களின் அதிக உயிரிழப்புக்கள் அவர்களை தீவிரமாகப் போரில் ஈடுபடத் தூண்டும் என பிரித்தானிய ஆட்சியாளர்கள் நம்பினார்கள். அது போலவே கொவிட்-19கிருமிகளைப் பரவ விட்டு அதை அழிக்க முயன்றனர் என்ற குற்றச் சாட்டு சீனாவில் இருந்து வைக்கப்பட்டது. பிரித்தானியா ஆரம்பத்தில் பாடசாலைகளைக் கூட மூடாமல் இருந்தது ஆனால் பிரித்தானியப் பல்கலைக்கழகம் ஒன்று அதனால் ஐந்து இலட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என எச்சரித்தைத் தொடர்ந்து அந்த முயற்ச்சி கைவிடப்பட்டது. பின்னர் புதிய சட்டத்தின் மூலம் கோவிட்-19ஐ எதிர்வு கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்கா
இணைப்பாட்சி ஆட்சி முறைமையைக் கொண்ட அமெரிக்காவில் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமான வகையில் கையாளும் நிலையைத் தவிர்க்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். சீனாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அவர் எடுக்கும் முயற்ச்சிக்கு கொவிட்-19கிருமிகளையும் பாவிக்க முயன்றார். அதனால் முதலாவதாக சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிகள் வருவதைத் தடை செய்தார். அதே போல் ஐரோப்பிய நாடுகள் செய்யாத படியால் ஐரோப்பாவில் இருந்தும் மக்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதைத் தடை செய்தார்.

மோசமான நிலையில் மேற்கு நாடுகளின் மருத்துவத் துறை
கொரோனா நச்சுக் கிருமி பல நாடுகளின் மருத்துவத் துறையின் கேவலமான நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. ரொனால்ட் ரீகன் -மார்கரெட் தட்சர் காலத்தில் இருந்தே முதலாளித்துவ நாடுகள் முதலாளிகளுக்கு விதிக்கப்படும் வருமான வரியைக் குறைப்பதற்கு அரச செலவுகளைக் குறைக்கத் தொடங்கினர். அவரகள் முதலில் கை வைத்தது மருத்துச்வத் துறை. அன்றிலிருந்து மேற்கு நாடுகளின் மருத்துவத் துறை வலுவற்றதாக இருக்கின்றது. சமூகவுடமைக் கொள்கையைக் கொண்ட ஸ்கண்டினேவிய நாடுகள் மட்டும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்றன.

நோயிலும் இலாப நட்டக் கணக்கு
கொரோனா நோய் பரவலைத் தடுக்க மக்கள் நடமாட்டைத்தை இறுக்கமாகக் கட்டுப்படுத்தினால் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் தான் மேற்கு நாட்டு ஆட்சியாளர்களை ஆட்டிப்படைத்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் நோயால் வரும் இழப்பிலும் பார்க்க அதிக இழப்பை பொருளாதார அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டி வரும் என பகிரங்கமாக எச்சரித்தார். அந்த அச்சம்தான் அவரை துரித நடவடிக்கை எடுக்காமல் தடுத்தது. தமது மருத்துவத் துறையின் பலவீனத்தையும் தமது பொருளாதாரக் கரிசனையையும் மறைக்கவே பல சதிக் கோட்பாடுகளை அவர்கள் பரப்புகின்றார்கள்.

ஆய்வு கூடத்தில் உருவாக்கப் பட்டதா?
மரபணு மாற்றத்தின் மூலம் கொரோனா நச்சுக்கிருமி உருவாக்கப் படவில்லை என சில பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதன் தோன்றியதில் இருந்தே பல புதிய நச்சுக்கிருமிகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டு வௌவால்களில் கொரொனா நச்சுக் கிருமிகள் இருந்து வருகின்றன. 2002-ம் ஆண்டு வௌவால்களில் உள்ள கொரோனா நச்சுக்கிருமிகள் காட்டுப்பூனை போன்ற ஒரு மிருகதிற்குப் பரவி அங்கு உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்குப் பரவி சார்ஃச் என்னும் நோயைப் பரப்பியது, 2012இல் வௌவால்களில் இருந்த கொரோனா கிருமி பூனை போன்ற ஒரு காட்டு விலங்கிற்கு பரவி அவற்றிலிருந்து மனிதர்களுக்குப் பரவி மெர்ஃச் என்ற நோயைப் பரப்பியது. 2019இல் வௌவால்களில் இருந்து எறும்பு தின்னி விலங்கிற்குப் பரவி அதில் உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்குப் பரவி கொவிட்-19 நோயை உலகெங்கும் பரப்பியுள்ளது. சார்ஃச் நோயும் கொவிட்-19 நோயும் உலகெங்கும் சீனாவில் இருந்தே பரவியது. சீனர்களின் உணவுப் பழக்கம் இந்த நோய்களின் பரம்பலுக்கு காரணமாய் இருந்தன என்ற குற்றச் சாட்டுக்கு சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும். முதன் முதலில் ஓர் இனம் தெரியாத நச்சுக்கிருமி பரவ தொடங்கியுள்ளது என்ற இளம் சீன மருத்துவரை சீன அரசு கண்டித்தது மிகப்பெரிய குற்றம்.

1960இல் இருந்து கொரோனா உள்ளது.
கொரோனா நச்சுக்கிருமியை 1960களில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது இருந்த நுண்காணிகள் மூலம் பார்க்கும் போது அது அரசரின் முடி போல இருந்ததால் அதற்கு கொரோனா (Corona in Greek. In English: Crown) என்ற பெயர் சூட்டப்பட்டது. தற்போதுள்ள நுண்காணிகள் மூலம் பார்க்கும் போது அது ஒரு கடற்கண்ணி வெடி போல தோற்றமளிக்கின்றது. கொரோனா நச்சுக் கிருமிக் குடும்பத்தில் 40இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதாவது 40 வகையான கிருமிகள் உள்ளன. இவை வௌவால், பூனை, காகம் ஆகியவற்றில் கொரோனா உள்ளன. 

உயிரியல் படைக்கலனா?
New Scientist சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை இந்த நச்சுக்கிருமி உயிரியல் படைக்கலன் அல்ல (No, this virus isn’t a bioweapon) என ஆரம்பிக்கின்றது. அக்கட்டுரையின் சில பகுதி:
New diseases have emerged throughout human history, and we have seen two major coronavirus outbreaks in the last two decades: SARS and MERS. So we shouldn’t be surprised by the arrival of the covid-19 virus.
However, rumours on social media suggest that the outbreak was human-made. Some say the virus leaked from a Chinese lab studying coronaviruses. Others suggest the virus was engineered to spread among humans.
Even the most secure laboratories do sometimes have accidents, and a human-engineered pandemic has been identified as a possible risk to our civilisation, but there is no good evidence that either has happened.
Many similar viruses are found in wild bats, and it seems likely that is the origin of this one, probably via an intermediate host. Similarly, we know that both SARS and MERS came from bats, so there is no reason to invoke a laboratory accident.

உண்மைகளை உரிய முறையில் அறிந்து பதிவுகளை இடுவோம். 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...