
கல்லைக் கோவிலாக்கினான் இராஜஇராஜ சோழன்
கல்லை அணையாக்கினான் அந்தக் கரிகால மன்னன்
கல்லைச் சிலையாக்கினான் மாமல்ல பல்லவன் – நீயேன்
கல்லாய் உன்மனதை ஆக்கினாய் காரிகையே.
.
சிலம்புடைத்தாள் கண்ணகி கணவன் மானம் தனைக் காக்க
வில்லுடைத்தான் ராமன் காரிகை யொருத்தியின் கைப்பிடிக்க
கல்லுடைத்தான் காஞ்சியிலே சிலைகள் பல வடிக்க – என்
நெஞ்சுடைத்தாய் நேரிழையே எக் காரணத்திற்காக.
1 comment:
Nanbarae Arumai
Post a Comment