Saturday, 14 January 2012
பெண்ணே நீ நீல வானமடி
தொடரூந்தில் எதிரே இருக்க
அவள் கண்ணசைவுகள்
மின்னலாய் மிளிர
பார்வைகள் நெஞ்சில்
முழக்கமாய் எதிரொலிக்க
நண வரிகள் கன்னதில்
வானவில்லின் வர்ணம் தீட்ட
சோவெனப் பொழிந்தது
காதல் மழை
ஓர விழிப் பார்வை பொழியும்
காதல் மொழி மழை
கோபம் வந்தால் அதுவே
பொழியும் எறிகணை மழை
கன்னம் தொட்டால் பட்டு மழை
நாணத்தில் வானவில்லும் தோன்றும் அதிலே
உதடு தரும் தேன்மழை
ஆத்திரம் வந்தால்
அதுவே சொரியும் திட்டு மழை
அணைத்தால் இன்பமழை
பிரிந்தால் துயரமழை
பெண்ணே நீ நீல வானமடி
Friday, 13 January 2012
நகைச்சுவைக் கதை: முதலமைச்சரின் மூன்று பெட்டிகள்
picture from vinavu.com |
முதலமைச்சராகப் பதவி ஏற்ற அம்மு ஆர்ஜீஎம் ஐ முற்றாக மறந்து விட்டு அவரின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமானவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு ஆட்சி நடத்தினார். அவர் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். கட்சியில் பிரச்சனை. நாட்டில் பிரச்சனை. மத்திய அரசு ஆட்சியைக் கலைக்கலாம் என்ற அச்சம். அப்போது தான அம்முவிற்கு ஆர்ஜீஎம்இன் நினைவு வந்தது. அவர் கொடுத்த பெட்டிகளும் நினைவிற்கு வந்தன. முதலாவது பெட்டியைத் திறந்து பார்த்தார். உன் பிரச்சனைகள் எல்லாவற்றிற்ககும் காரணம் எதிர்க் கட்சியே என்று பரப்புரை செய் என்று ஒரு சிறு துண்டில் எழுதப்பட்டு இருந்தது. அம்முவும் அப்படியே செய்தார். பிரச்சனைகள் ஒருவாறு சமாளிக்கப்பட்டு அம்மு அடுத்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். ஆட்சி தொடர்ந்தது. ஊழல்களும் நிறைந்தன. அம்மு பெரும் பணக்காரியானார். மீண்டும் பிரச்சனைகள். பிரச்சனைகளுக்கு மேல் பெரும் பிரச்சனைகள். அம்மு இரண்டாம் பெட்டியைத் திறந்து பார்த்தார். எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் மத்திய அரசு என்று பரப்புரை செய் என்று இருந்தது. அம்முவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இனிப் பெட்டிகளையே திறப்பதில்லை என்று முடிவு செய்தார் அம்மு. எதிர்க் கட்சியில் இருந்த அம்முவிற்குப் பெரும் யோகம் அடித்தது. ஆளும் கட்சியை தொலைக்கிறேன் பேர்வழி என்று பல தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்த அம்முவை தேர்தலில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்ந்தனர். அம்முவின் உற்ற தோழிக்கும் அம்முவிற்குமிடையில் அம்முவின் குருவினர் சண்டையை மூட்டி விட்டனர். தமிழின உணர்வாளர்கள் ஒருபக்கம் நெருக்கல் கொடுத்தனர். அவர்கள் சொற்படி நடந்தால் தனது ஆட்சியை தமிழர்களின் விரோதியான மத்திய அரசு தனது ஆட்சியைக் கலைத்துவிடும் என்ற பயம் ஒரு புறம். சொத்துக் குவிப்பு வழக்கு இன்னொரு புறம். அம்முவின் நோய்கள் இன்னும் புறம் எப்போது எத்தனை ஆண்டு சிறைவாசம் என்ப அச்சம் எல்லாவற்றிற்கும் மேலாக.............................. அம்முவிற்குப் பெரும் துயர். சரி கடைசியாக அந்த மூன்றாவது பெட்டியைத் திறந்து பார்ப்போம் என்று போய் அந்த மூன்றாவது பெட்டியையும் திறந்து பார்த்தார். அதில் கிடந்த வாசகம்: "மூன்று பெட்டிகளைத் தயார் செய்".
Thursday, 12 January 2012
அணு ஆபத்து மிகுந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று
உலகின் அணு ஆபத்து மிகுந்த நாடுகளாக வட கொரியா, பாக்கிஸ்தான், ஈரான், வியட்நாம், இந்தியா, சீன உஸ்பெக்கிஸ்தான் போன்றவை இனம் காணப்பட்டுள்ளன.
அணு ஆபத்துக் குறைந்த நாடுகளாக ஒஸ்ரேலியா, ஹங்கேரி, செக் குடியரசு, சுவிஸ்லாந்து, ஒஸ்ரியா, நெதர்லாந்து, சுவீடன் ஆகியவை கருதப்படுகின்றன.
அணு ஆயுத இருப்பு, அணு உலைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 32 நாடுகள் பட்டியல் இடப்பட்டன:
நாடு பாதுகாப்புப் புள்ளிகள்
1. Australia 94
2. Hungary 89
3. CzechRepublic 87
4. Switzerland 86
5. Austria 85
6. Netherlands 84
7. Sweden 83
8. Poland 82
9. Norway 81
=10. Canada 79
=10. Germany 79
=10. United Kingdom 79
=13. Belgium 78
=13. United States 78
15. Ukraine 76
=16. Argentina 74
=16. Belarus 74
=16. Italy 74
=19. France 73
=19. Mexico 73
=19South Africa 73
22. Kazakhstan 71
23. Japan 68
24. Russia 65
25. Israel 56
26. Uzbekistan 55
27. China 52
28.. India 49
29. Vietnam 48
30. Iran 46
31. Pakistan 41
32. North Korea 37

Wednesday, 11 January 2012
ஈரானிய அணு விஞ்ஞானி குண்டு வெடிப்பில் கொலை: அமெரிக்காவைக் குற்றம் சுமத்துகிறது ஈரான்.
ஈரானிய அணு விஞ்ஞானியான முஸ்தபா அஹ்மதி றொஸானன் என்னும் பல்கலைக்கழகப் பேராசிரியர் அவரது வாகனத்தில் இனம் தெரியாத இருவர் பொருத்திய குண்டினால் கொல்லப்பட்டார். இத்தாக்குதல் ஈரானின் அணுத் திட்டத்தில் வேலை செய்த முந்தைய விஞ்ஞானிகள் கொல்லப்படமை போன்றே அமைந்திருந்தன. இரண்டு வருடங்களுக்குள் ஈரானில் இது போன்ற தாக்குதல்கள் நான்கு இடம்பெற்றுள்ளன. அவற்றில் இரு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் தப்பிவிட்டார்.
கொல்லப்பட்ட 32 வயதான முஸ்தபா அஹ்மதி றொஸானன் Natanz uranium enrichment facility இல் மேற்பார்வையாளராகக் கடமையாற்றியவர். ஈரான் அணுக் குண்டு தாயாரிக்கப் போகிறது என்று அமெரிக்கா அண்மைக்காலமாக ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்த்துள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கின்றன.
வயதான முஸ்தபா அஹ்மதி றொஸானன் கொல்லப்பட்டமைக்கு ஈரான் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் குற்றம் சாட்டுகிறது.

இருவர் ஒருவராக...... வாய்கள் சொல்லாமலே....
முதற் சந்திப்பில்
நாலு விழிகளின் மோதலில்
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
சரளி வரிசைகள்
இருமனங்கள்
இரட்டச்சுரங்களாய்
ஒருமனதாய் இணைய
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
ஜண்டை வரிசைகள்
ஊடலும் கூடலும்
மாறி மாறி வர
இதயத்து ஏக்கங்களை
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
தாட்டு வரிசைகள்
கிங்ஸ்ரனில் உணவகத்தில்
மெழுகு திரியொளியில்
இருவரையும் அலங்கரித்தன வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்த
அலங்கார வரிசைகள்
Chessington adventure parkஇல்
ரோலர் கோஸ்டரில்
பயத்தில் வந்த நெருக்கத்தில் வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
இனிய கீதம்
வெஸ்ற் எண்ட் தியேட்டரில்
பல வர்ண விளக்கொளியில்
கட்டி அணைக்கையில் வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
நின்னுக் கோரி வர்ணம்
என் தனி அறையில்
அந்த இரவில்
இருவர் ஒருவராக
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
தோடியில் தில்லான
யாருக்கும் சொல்லாமல்
இருந்த உறவை
உலகறிய அரங்கேற்றுவோம்
மணவறையில்
Tuesday, 10 January 2012
ராஜபக்சவின் பேச்சாளராக மாறிய பார்ப்பனப் பார்த்தசாரதி.
இந்திரா காந்தி இந்தியப் பிரதம மந்திரியாக இருந்தபோது இந்தியாவின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவராக இருந்த ஜி. பார்த்தசாரதி 1980களில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க திருமால் எடுத்த அவதாரமாகக் கருதப்பட்டவர். சிங்களவர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர். பங்களாதேசம் உருவாக்கப்பட்டபோது நடந்த இந்திய-பாக்கிஸ்தான் போரில் மிகத் திறமையாகச் செயற்பட்டு உலகின் சிறந்த அரசதந்திரிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ஹென்றி கிசிங்கரின் காய் நகர்த்தல்களை வெற்றீகரமாக முறியடித்தவர். பின்னர் அரசியல் கற்றுக் குட்டி ராஜீவ் காந்தியால் அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தனவின் வேண்டுகோளிற்கு இணங்க இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டவர்.
1977இல் ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்கப்பூர் போல இலங்கையை சிறந்த நாடாக முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று தீவிர அமெரிக்க ஆதரவாளராக உருவெடுத்தது. திருகோணமலைத் துறைமுகத்தையும் சிலாபத்தையும் அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கத் தயாரானார். திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படையினருக்கு ஒரு எரி பொருள் மீள் நிரப்பு நிலையமும் சிலாபத்தில் அமெரிக்க நீர் மூழ்கிக்கப்பல்களுக்கான அதி-தாழ்நிலை அலைவரிசைத் தொடர்பாடல் நிலையமும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் இருந்தது. திருகோணமலைத் திட்டம் ஒரு சிங்கப்பூர் நிறுவந்த்தின் போர்வையிலும் சிலாபத்திட்டம் அமெரிக்காவின் வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா வானொலிச் சேவை அஞ்சல் நிலையம் என்ற போர்வையிலும் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலத்த அச்சுறுத்தல் என்றுணர்ந்த இந்திரா காந்தி அம்மையார் அப்போது 1977 இனக்கொலையை அடுத்து உருவாகி இருந்த தமிழர்களின் இனப் பிரச்சனையைக் கையிலெடுத்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்ச்சி கொடுத்தது. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான விரோதம் மோசமான ஆயுத போராட்டமாக மாறியது.
அப்போதும் கணிசமான அழுத்தத்தை இலங்கைமீது பிரயோகிக்க பெரிதும் சிரமப்பட்டார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பார்த்தசாரதி பல பிரயாணங்களை இலங்கைக்கு மேற்கொண்டார். இந்தியா பற்றி இலங்கை அரசியல் வாதிகளும் ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தன. இலங்கைப் பிரதமராக இருந்த பிரேமதாச இந்தியாவைக் மிகக் கடுமையாக விமர்சித்தார். முடியுமானல் உன் படையை அனுப்பிப் பார் என்று சவால்விட்டார் அவர். இதற்குப் பதிலளித்த இந்திரா அம்மையார் எமது அயலவர்கள் தமது கற்பனையை கன்னா பின்னா என ஓடவிடுகிறார்கள் என்றார்.
..
ஆண்டுகள் ஓடின தமிழர் பிரச்சனை தீரவில்லை. இலங்கையில் அமெரிக்காவின் பிடியும் தளரவில்லை. இந்திரா அம்மையார் கொல்லப்பட்டார். அரசியல் கற்றுக் குட்டி ராஜுவ் காந்தி பதவிக்கு வந்தார். இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் கரந்தடித் தாக்குதலை நடாத்தி பலத்த சேதம் விளைவிக்கும் நிலைக்கு வளர்ந்தனர். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட புலிகள் மறுத்தனர். ராஜுவ் காந்தி இலங்கைக்கும் புலிகளுக்கும் பலத்த நெருக்குதலைக் கொடுத்தார். இந்தியாவின் சகல திட்டங்களும் அமெரிக்க உளவுத் துறையூடாக இலங்கைக்கு தெரியப் படுத்தப் பட்டது. இந்தியாவின் நெருக்குதலுக்கு அடிபணிவது போல் ஜயவர்த்தனே நடித்து இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை முடிந்து விடுவதில் வெற்றி கண்டார். திருகோணமலைத்திட்டத்தையும் சிலாபத்திட்டத்தையும் இலங்கை கைவிட்டது. தமிழர்களின் முதுகில் ஏறி நின்று இந்தியா இதைச் சாதித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பேராட்டமின்றி இந்தியாவால் இதைச் சாதித்திருக்க முடியாது.
அதன் பின்னர் இந்தியா தமிழர்களின் பரமவிரோதியாக மாறியது. தமிழ்நாட்டில் சோ, சுப்பிரமணிய சுவாமி, இந்து ராம் போன்றோர் தமிழர்களின் விடுதலைப் போரை ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டனர். இன்றும் செயற்படுகின்றனர். விசு, பாலச்சந்தர், மணிரத்னம், எஸ் வீ சேகர் போன்றோர் அவர்களின் பின்னால் தமிழர்களின் நண்பர்களைப் போல் தம்மைக் காட்டிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராகச் சதி செய்கின்றனர்.
இப்போது இன்னொரு ஜீ பார்த்தசாரதி இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை பற்றி திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். இவர் முன்னவரின் பேரன் என்றும் கூறப்படுகிறது.
08-01-2012இலன்று சென்னையில் கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரியில் அதன் பழைய மாணவரான ஜீ பார்த்தசாரதி "இலங்கையுடனான உறவுகள் பற்றிய சொந்த நினைவுகள் - இந்திய அமைதிப் படையும் அதற்க்கு அப்பாலும்" என்னும் தலைப்பின் உரையாற்றினார். ஜீ பார்த்தசாரதி கூறியது:
தமிழர்களுக்கு இந்தியா பொருளாதார உதவி செய்து அவர்களின் புனர் வாழ்விற்கு உதவ வேண்டும். அதற்கு ஏற்ப இந்தியா தனது சிந்தனையை மாற்ற வேண்டும்.
ராஜீவ் காந்தி ஜே ஆர் ஜயவர்த்தனவுடன் ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு ஒரு படையை அனுப்பி 8000இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்று 3000த்திற்கு மேற்பட்ட பெண்களைக் கற்பழித்து இலங்கை அரசியல் அமைப்பிற்கு ஒரு 13வது திருத்தத்தைக் கொண்டுவந்தார். அது 2012இல் 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடப் போகிறது. ஆனால் அது இது வரை இலங்கையில் நிறைவேற்றப்படவில்லை. அதை இனி மறக்க வேண்டியதுதான்.
ராஜபக்சே சொன்னான் அய்யங்கர் பேசுகிறான்
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இப்போது அடிக்கடி சொல்லுவது: முதலில் தமிழர்களிற்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசக் கூடாது. தமிழர்கள் சிங்களவர்களுடன் இணங்கி இருக்க வேண்டும்.
ராஜபக்சே தமிழர் புனர்வாழ்வு என்ற போர்வையில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற முயற்ச்சிக்கிறார். அதற்கு இசைவாகவே பார்த்தசாரதி அய்யங்கர் பேசுகிறார். இயற்கை அனர்த்தம் நிகழ்ந்த பிரதேசம், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் போன்றவை பொருளாதாரச் சுரண்டலுக்கு மிகவும் ஏதுவான இடங்களாகும். இதைச் சுரண்ட ராஜபக்சே முயல்கிறார். . அய்யங்கர்களும் அவற்றை சுரண்ட முயல்கின்றனர். அய்யங்கர் சொல்கிறார்:
“There has to be a basic rethink in Delhi to see in economic terms our neighbours as an extension of the Indian market,” . "........setting up industrial training and engineering institutions in the North and East of Sri Lanka that would, within a generation, result in the economic integration of the markets in these areas with that of Tamil Nadu—something that Sri Lanka could be persuaded to see as not beneficial merely for Tamils but for the greater common good.
இந்தியாவின் சந்தை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அதன் அயலவர்களை பார்க்கும் படி இந்தியா பொருளாதார ரீதியில் மீள் சிந்தனை செய்ய வேண்டுமாம்.இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் கைத்தொழில் பயிற்ச்சி நிலையங்களும் இயந்திரவியல் கல்வி நிலையங்களும் அமைக்க வேண்டுமாம்.
இந்தியாவில் அய்யங்கருக்கு வேண்டியவர்கள் இலங்கையில் கைத்தொழில் பயிற்ச்சி நிலையங்களும் பொறியியல் கல்வி நிலையங்களும் அமைத்து இலாபம் ஈட்ட முனைகிறார்கள். கல்வி நிலையங்களை உருவாக்கலாம். பயிற்றுவிக்கலாம். கற்றவர்கள் வேலை வாய்ப்பிற்கு எங்கு போவது? நீங்கள் அமைக்கவிருக்கும் கல்வி நிலையங்களில் சிங்களவர்களை அனுமதிக்காமல் கல்வி நிலையங்கள் நடாத்த முடியுமா? முதலில் அரசியல் தீர்வு வேண்டும். அய்யங்கரே பின்னர்தான் பொறியியல் கல்லூரி.
பார்த்தசாரதி அய்யங்கரே அன்று இந்தியா இலங்கை இளைஞர்களுக்கு ஆயுதம் கொடுத்துச் சிங்களவனுடன் மோதுங்கள் என்று தூண்டிவிடாமல் கைத்தொழில் பயிற்ச்சி நிலையங்களையும் பொறியியல் கல்லூரிகளையும் தமிழர்களுக்கு கட்டிக் கொடுத்து அவர்களை வாழ வைத்திருக்கலாமே. உதவி செய்கிறேன் என்று வந்தீர்கள். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொல்லப்பட்டனர். பல கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஒரு இனத்தையே ஏதும் இல்லாத நிலைக்கு ஆக்கிவிட்டீர்கள். சும்மா ஆடுமா உங்கள் குடுமி?

- அரசியலைப் பொருளாதாரம் துருப்பு வெட்டும் நிலை மாற்றமுடியாததாக இருக்கும் தற்காலத்தில் இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்விற்கு ஒரு நிலைத்திருக்கக் கூடிய தீர்வாக பொருளாதாரரீதியாக வலுச் சேர்ப்பது என்பதற்கு சாதகமாக இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மீள் சிந்தனை செய்ய வேண்டும்.
- In the present-day world where politics is invariably trumped by economics, India has to have a drastic rethinking of its policy in favour of economically empowering the Tamils in Sri Lanka as a sustainable solution for their rehabilitation.
தமிழர்களுக்கு இந்தியா பொருளாதார உதவி செய்து அவர்களின் புனர் வாழ்விற்கு உதவ வேண்டும். அதற்கு ஏற்ப இந்தியா தனது சிந்தனையை மாற்ற வேண்டும்.
ராஜீவ் காந்தி ஜே ஆர் ஜயவர்த்தனவுடன் ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு ஒரு படையை அனுப்பி 8000இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்று 3000த்திற்கு மேற்பட்ட பெண்களைக் கற்பழித்து இலங்கை அரசியல் அமைப்பிற்கு ஒரு 13வது திருத்தத்தைக் கொண்டுவந்தார். அது 2012இல் 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடப் போகிறது. ஆனால் அது இது வரை இலங்கையில் நிறைவேற்றப்படவில்லை. அதை இனி மறக்க வேண்டியதுதான்.
ராஜபக்சே சொன்னான் அய்யங்கர் பேசுகிறான்
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இப்போது அடிக்கடி சொல்லுவது: முதலில் தமிழர்களிற்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசக் கூடாது. தமிழர்கள் சிங்களவர்களுடன் இணங்கி இருக்க வேண்டும்.
ராஜபக்சே தமிழர் புனர்வாழ்வு என்ற போர்வையில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற முயற்ச்சிக்கிறார். அதற்கு இசைவாகவே பார்த்தசாரதி அய்யங்கர் பேசுகிறார். இயற்கை அனர்த்தம் நிகழ்ந்த பிரதேசம், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் போன்றவை பொருளாதாரச் சுரண்டலுக்கு மிகவும் ஏதுவான இடங்களாகும். இதைச் சுரண்ட ராஜபக்சே முயல்கிறார். . அய்யங்கர்களும் அவற்றை சுரண்ட முயல்கின்றனர். அய்யங்கர் சொல்கிறார்:
“There has to be a basic rethink in Delhi to see in economic terms our neighbours as an extension of the Indian market,” . "........setting up industrial training and engineering institutions in the North and East of Sri Lanka that would, within a generation, result in the economic integration of the markets in these areas with that of Tamil Nadu—something that Sri Lanka could be persuaded to see as not beneficial merely for Tamils but for the greater common good.
இந்தியாவின் சந்தை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அதன் அயலவர்களை பார்க்கும் படி இந்தியா பொருளாதார ரீதியில் மீள் சிந்தனை செய்ய வேண்டுமாம்.இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் கைத்தொழில் பயிற்ச்சி நிலையங்களும் இயந்திரவியல் கல்வி நிலையங்களும் அமைக்க வேண்டுமாம்.
இந்தியாவில் அய்யங்கருக்கு வேண்டியவர்கள் இலங்கையில் கைத்தொழில் பயிற்ச்சி நிலையங்களும் பொறியியல் கல்வி நிலையங்களும் அமைத்து இலாபம் ஈட்ட முனைகிறார்கள். கல்வி நிலையங்களை உருவாக்கலாம். பயிற்றுவிக்கலாம். கற்றவர்கள் வேலை வாய்ப்பிற்கு எங்கு போவது? நீங்கள் அமைக்கவிருக்கும் கல்வி நிலையங்களில் சிங்களவர்களை அனுமதிக்காமல் கல்வி நிலையங்கள் நடாத்த முடியுமா? முதலில் அரசியல் தீர்வு வேண்டும். அய்யங்கரே பின்னர்தான் பொறியியல் கல்லூரி.
பார்த்தசாரதி அய்யங்கரே அன்று இந்தியா இலங்கை இளைஞர்களுக்கு ஆயுதம் கொடுத்துச் சிங்களவனுடன் மோதுங்கள் என்று தூண்டிவிடாமல் கைத்தொழில் பயிற்ச்சி நிலையங்களையும் பொறியியல் கல்லூரிகளையும் தமிழர்களுக்கு கட்டிக் கொடுத்து அவர்களை வாழ வைத்திருக்கலாமே. உதவி செய்கிறேன் என்று வந்தீர்கள். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொல்லப்பட்டனர். பல கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஒரு இனத்தையே ஏதும் இல்லாத நிலைக்கு ஆக்கிவிட்டீர்கள். சும்மா ஆடுமா உங்கள் குடுமி?
Monday, 9 January 2012
தேர்வு நகைச்சுவைகள்
வினாத்தாளைப் பார்த்து
நீ அழுதால்
அது உனக்கு சோதனை
உன் விடைத்தாளைப் பார்த்து
உன் ஆசிரியர் அழுதால்
அது உன் சாதனை
பிட் அடித்தால் இலவசம்
பிட் அடித்தால் அதிபரின் அறைக்கு இலவசப் பயணம்
மூன்றாண்டுகள் விடுமுறை.
மாணவர் என்பதன் பொருள்: student + dying = STUDYING
80% of the Ques. in the exams are based on the
One lecture u missed and the topics u dont covered for the exams.
நீ பெண்கள் பின்னால் திரிந்தால்
தேர்வில் தோல்வியடையலாம்
ஆனால் நீ தேர்வில் வெற்றியடைந்தால்
பெண்கள் உன் பின்னால் வரலாம்.
one of the best caption
written on a clock in an exam hall..
“TIME WILL PASS.WILL YOU?
ஆயிரம் ஆண்டுகள் வரலாம்
செல்லலாம்
ஆனால் ஒரு மாணவன் மனதில்
நாளையில் இருந்து படிப்பேன்
என்ற எண்ணம் மாறாது
Kolaveri D EXAM Version:-
Why this kolaveri kolaveri kolaveri di..
Hand-la book-u, book la stuff-u, eyes full aa tear-u..
empty mind-u, exam come-u, life reverse gearr-u..
marks-e marks-e o my marks-e
i want u here nove..
show-e show-e "S GRADE" show-e
Result nice show-e
God i'm dyin now-, prof. is happy how-u..
this-u song-u 4 students-u, we dont hav a choice-u..
Why dis kolaveri kolaveri kolaveri di.!!
Who says chemistry is easy!!!
Chemistry is Complicated ...
2 Guys' Conversation in Bathroom During Test..
G1 : You Gotta Help Me !
G2 : I Am Just here For Peeing . I can't Help During test
G1 : Please Dude ... I Am Gonna Fail
G2 : Okay Be Quick .. Ask Me ?
G1 : Whats Abbreviation For Nobelium ?
G2 : NO
G1 : But You Said You Will Tell Me...
G2 : NO !
G1 : OK Leave it Tell me Whats Sodium ?
G2 : Na !
G1 : Damn At least Tell me Of Potassium ?
G2 : Hmm K !
G1 : What's Okay ?
G2 : Just K !
G1 : Whats Just OK ?
G2 : You Mean OK2 ?
G1 : Whats OK Too ?
G2 : Potassium Oxide ..
G1 : Oxide ?
G2 : O
G1 : Oh ! What ??
G2 : Oxygen
G1 : Damn Not Oxygen I Asked For Potassium ?
G2 : K
G1 : NO
G2 : Nobelium
G1 : Nobelium ?
G2 : NOG1 : Just Give Me The Bonus Question Answer . Whats Element166 ?
G2 : Uhh
G1 :Go On ?
G2 : UHH
G1 : UHH ??
G2 : Exactly
G1 : NO WHAT IS IT ???
G2 : NobeliumG1 : Damn For God Sake At least Tell me For URANIUM ?
G2 : That's U !
G1 : I Know That's Up to Me ... But I Am Asking Your Help
G2 : U !
G1 : NO YOU !!!
G2 : Nobelium . Uranium
Sunday, 8 January 2012
வரப்போகும் மாற்றங்கள்: கைப்பேசிகள், கணனிகள், தொலைக்காட்சிகள்
2011-ம் ஆண்டு Tablet கணனிகளினது ஆண்டாக இருந்தது. ஆப்பிள், சம்சங், பிளக்பெரி, சோனி, அமேஜன் எனப் பல நிறுவனங்கள் தமது Tablet கணனிகளைக் களமிறக்கின. 2012இல் பல புதிய தொழில்நுட்பங்கள் கைப்பேசிகள், கணனிகள், தொலைக்காட்சிகளில் போன்றவற்றில் வரவிருக்கின்றன. 2012-01-10-ம் திகதி அமெரிக்காவின் லாஸ் வெகஸில் ஆரம்பமாகும் International Consumer Electronics Show இல் இதற்கான அதிரடித்தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம். மிகவும் பெரிய இடத்தில் இந்த கண்காட்சி நடக்கவிருக்கிறது. அதை முழுக்கப் பார்க்க ஒருவர் 25கிலோ மீட்டர்வரை நடக்க வேண்டி இருக்கும். பல முன்னணி இலத்திரலியல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இதில் பங்கேற்கவிருக்கின்றன.
சாம்சங்கின் Galaxy Nexus
இந்த ஆண்டு நடுப்பகுதியில் சாம்சங்கின் Galaxy Nexus அதிரடியாக வரவிருக்கிறது. இதில் 4G தொழில்நுட்பத்துடன் 1.5GHz dual-core processor இருக்கும்.
குரலுணரி - Voice recognition
இந்த ஆண்டில் பெரிதாக அடிபடப்போவது குரலுணரி - Voice recognition தொழில்நுட்பம். ஆப்பிள் நிறுவனம் தனது Siri என்னும் செல்லப் பெயருடைய 'personal assistant’ தனிப்பட்ட உதவியாளரை அறிமுகப்படுத்தி குரலுணரி - Voice recognitionதொழில் நுட்பத்திற்கான போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது. Siri உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும், சில நடவடிக்கைகளைச் செய்யும். இனி மற்றக் கைப்பேசி உற்பத்தியாளர்களும் தங்கள் கருவிகளின் குரலுணரி - Voice recognitionகளைப் புகுத்துவர்.
விண்டோஸ் -8
மைக்குரோசொஃப்ற் தனது அடுத்த விண்டோஸ்-8 ஐ2012 ஆகஸ்ட் மாதத்தில் வெளிவிட இருக்கிறது. தொடுதிரைத் தொழில் நுட்பம் இதில் உள்ளடக்கப்படவிருக்கிறது. 128 bit Operating Systemம் இதில் இருக்கும். Task Manager தேவையற்ற செயலிகளை இடை நிறுத்தும். இது HyperV virtualization.
கைப்பேசிகள் மூலமான பணக் கொடுப்பனவுகள் அதிகரிக்கும்
2012இல் கைப்பேகளினூடாக செய்யப்படும் பணக் கொடுப்பனவுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கைப்பேசித் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து Isis என்னும் மென்பொருளை பணக்கொடுப்பனவிற்காக உருவாக்கியுள்ளன.
ஐ-பாட் 3
2012இல் ஆப்பிள் தனது ஐ-பாட் 3ஐ வெளிவிடவிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள்:
- Higher resolution display
- GLONASS support (next to GPS) [not available in wifi-only model]
- The inside of the device has been completely redesigned (iFixit must love this!)
- Improved cameras
- Some sort of a price drop, unknown what exactly. Possibly a $399 iPad 2. iPad 3 starts at $499, but there will be some sort of a price drop for at least one of the iPad models.
- Bluetooth 4.0
- Runs on the successor of the A5 processor
- No separate CDMA and GSM models, world tablet (CDMA + GSM)
- UMTS/HSDPA/HSUPA (850, 900, 1900, 2100 MHz); GSM/EDGE (850, 900, 1800, 1900 MHz); CDMA EV-DO Rev. A (800, 1900 MHz)
- No proximity sensor
- Improved speakers
- Similar, but not exactly the same design
ஐ-பாட் 3 உடன் ஒரு ஐ-பாட் மினியும் வரவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஐ-பாட் மினி Kindle Fireஇற்கு போட்டியாக குறைந்த விலையில் வரும் என்கிறார்கள்.
தொலைக்காட்சிகள்
2012இல் வரவிருக்கும் காட்சிகள் கணனிகளையும் இணைத்தவையாக இருக்கும். பல 3D தொலைக்காட்சிகளை எதிர்பார்க்கலாம். LGஇன் 55-inch OLED TV பெரும் மாற்றங்களுடன் வரவிருக்கிறது. இது முதல் 55'' தொலைக்காட்சியாகும்

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...