
சாம்பல் மேட்டில் ஒரு தோட்டம் செய்ய முனைகிறோம்
உள்ளே இருப்பது எதிர்கால விருட்சங்களின் வித்துக்களா?
அல்லது நீறுபூத்த நெருப்புக்களா?
பூகம்பத்தில் பூப்பறித்து பூமாலைகள் செய்கிறோம்
சமாதான தேவதைக்கு சாத்திரப்படி ஒரு சாத்துப்டியாக்க
சென்று சேர்வது தேவதைக்கா?
சூறாவளியில் சுடர் ஒன்று ஏற்றுகிறோம்
அமைதிச் சூரியன் அஸ்தமித்தால்
இது ஒரு அணையாச் சுடரா?
வேற்றுமைத் தீயணைக்க வெதும்பி நிற்கிறோம்
ஒற்றுமை மேகங்கள் மழை தருமா
கிழக்கில் தெரிவது தொடுவானமா?
1 comment:
சூறாவளியில் சுடர் ஒன்று ஏற்றுகிறோம்
அமைதிச் சூரியன் அஸ்தமித்தால்
இது ஒரு அணையாச் சுடரா?
சூறாவழிக்குத் தீயிடுவோம் எங்களுக்கான ஒளிச்சூரியனை வரவேற்று.
நல்ல கவிதை.
Post a Comment