ககண்டிப் சிங் Sikh TV என்னும் தொலைக்காட்சி சேவையின் உரிமையாளரான 21வயது மிடுக்கான இளைஞன். மில்லியன் பவுண்கள் பெறுமதியாளரான அவனுக்கு ஒரு மிக அழகான மருத்துவக் கல்லூரி மாணவி மஹில் மீது அளவற்ற காதல். யாரையும் கிறங்கடிக்க வைக்கும் அந்த இருபது வயது அழகி மஹில் ககண்டிப் சிங்கை திணறடித்தாள். செல்வந்தனான அவளும் கவர்ச்சீகரமான அவளும் ஒன்றாக பழகினர். காதலராகினர்.
மஹில் தங்கியிருக்கும் வீட்டிற்கு ஒரு நாள் சென்ற ககண்டிப் சிங் அவள் அழகில் போதை ஏறி வரம்பு மீறி அவளைக் கற்பழிக்க முயன்றான். அவனைப் பிடித்து வெளியே தள்ளிக் கதைவைச் சாத்தினாள் மஹில். ஏமாற்றத்தால் விரக்தியுற்ற ககண்டிப் சிங் வெளியில் நின்று தன்னை மன்னிக்கும்படி அழுதான். மஹிலின் வீட்டுக்கதவும் இதயக் கதவும் திறக்கவில்லை.
தன்னுடன் தகாத வரம்பு மீறி நடக்க முயன்றதால் ககண்டிப் சிங்மீது அதிக ஆத்திரம் கொண்டிருந்தாள் மஹில். அவளது காவாலி நண்பன்களிரிடமும் முறையிட்டாள்.
ஒரு நாள் மஹலிடமிருந்து தன்னை இரவு 11மணிக்கு வந்து தன் விஇட்டில் சந்திக்கும்படி கைப்பேசிக் குறுந்தகவல்கள் பல ககண்டிப் சிங்கிற்கு வந்தன. மிகச் சிலிர்ப்படைந்த ககண்டிப் சிங் பல வசந்த நினைவுகளோடு மஹில் வீடு சென்றான். அங்கு அவன் மஹிலின் காவாலி நண்பர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டான். தாக்கப்படும் போது மஹில் மஹில் மஹில் உதவி செய் என்று கத்தினான். அவனைத் தாக்கியவர்கள் அத்துடன் நிற்கவில்லை ஒரு பென்ஸ் காரின் பின் டிக்கிக்குள் அவனைக் கட்டிப் போட்டு அவன் மீது பெற்றோல் ஊற்றிவிட்டு மூடிப் பின்னர் காரு முழுவதும் பெற்றோல் ஊற்றி காரோடு சேர்த்து ககண்டிப் சிங்கையும் கொழுத்தினர். மஹில் மஹில் என்று அலறியபடி உயிர் விட்டான் ககண்டிப் சிங்.
மஹில் இப்போது நீதிமன்றில் நிறுத்தப் பட்டுள்ளாள்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment