
இலங்கையில் திரைப் படவிழா நடாத்திய இந்திய நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று சிங்கள பாராளமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க பொரிந்து தள்ளியுள்ளார். இலங்கையில் நடந்த திரைப்பட விழாவிற்கு இந்தியாவால் ஒரு ரூபா கூடச் செலவழிக்கப்படவில்லை. முழுச்செலவும் இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையே செய்தது என்று கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
திரைப்பட விழாவிற்கு விநியோகிக்கப் பட்ட நுழைவுச் சீட்டு விபரம்
விற்பனை செய்யப் பட்டவை ------------------------------ 15%
ஆதரவு தந்த நிறுவனங்களுக்கு கொடுத்தவை ----- 17%
ஆளும் கட்சியினர்க்கு கொடுத்தவை ------------------68%
மொத்தச் செலவு ----1000 மில்லியன் ரூபாக்கள்
வரவு ------------------------15 மில்லியன் ரூபாக்கள்
இதையறிந்து ஆத்திரமடைந்த சிங்கள் பாராளமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இந்திய சர்வ தேச திரைப்பட விழாவை நடாத்திய Wizcraft International Entertainment Pvt Ltd நிறுவன மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பச்சான் வராததால் ஏமாந்த சிங்கள மச்சான்
அமிதாப் பச்சான் வராதமையை சிங்கள் எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க மாப்பிளை இல்லாக் கல்யாணம் என்று சொல்லி வந்த இந்தி நடிகர்களைத் தாழ்த்திவிட்டார். அவர் நடந்த விழாத் தொடர்பான கணக்குகள் தேவை என்றும் கோரியுள்ளார். அத்துடன் இது தொடர்பாக பாராளமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்தத் திரைப்படவிழா தோல்வியில் முடிவடைந்தது தென்னக நடிகர்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தமையாகும். தமிழன் ஒன்றுபட்டால் அது தமிழ்நாட்டில் உள்ள ஆரிய சக்திகளுக்கு அது பேரிடியாகும். இதனால் அவர்கள் இப்போது திரைப்பட விழாவை எதிர்த்தமைக்கு எதிராக குரைக்கத் தொடங்கிவிட்டனர். இதில் குமுதத்தில் ஞானி முன்னிற்கிறார்.