Saturday, 27 March 2010

நாயகம் இந்தியம் சனியாள் ஆட்சி



ஆண்ட பரம்பரை
மீண்டும் ஒரு முறை
ஆள நினைப்பதில்
என்ன குறையா?

அடிவாங்கிய பரம்பரை
மீண்டும் மீண்டும்
அடிவாங்க வேண்டியதுதான்
தமிழனின் தலைவிதியா?

துணையென வந்த பாரதம்
துரோகியாக மாறியதேன்?
தீர்க்கவென வந்த ஆரியப் பேய்கள்
தீர்துத் கட்டிக் கொண்டிருப்பதேன்?


துரோகிகள் அழிவதுமில்லை
துரோகங்கள் மடிவதுமில்லை
துயரங்களுக்கு விடிவுமில்லை
தேடல்கள் நிற்பதுமில்லை

இத்தனை அழிவுகள் செய்தபின்
இந்தியாதான் ஒரே கதியாம்
எமது திறவுகோல் இந்தியாவின்
கையில் இருக்கிறதாம்
பிதற்றுகின்றன எருமைகள்
தாயகம் தேசியம் தன்னாட்சியா?
நாயகம் இந்தியம் சனியாளாட்சியா?

Friday, 26 March 2010

வில்லன் நம்பியாரும் சிங்களவனும்


ஐநாவின் பொய்நா நீதி
வில்லங்கமான வில்லன் விஜய் நம்பியாரும்
சிங்களவனும் கலந்துரையாடல்
சிங்களவனை விசாரிக்க
ஆலோசனை யாரிடம் கேட்பதென்று.

உரிமை
தமிழர்கள் பிரதிநிதிகளைத்
தெரிவு செய்ய சிங்களம்
நடத்தும் தேர்தல்
ஊமையிடம் கொடுக்கும் ஒலி வாங்கி

ஒற்றுமை
ஒன்று பட வேண்டும் என்று
பல கூறுகளாகப் பிரிந்து நின்று
கூக்குரல் இடுகின்றனர்
தமிழ் வேட்பாளர்கள்.

Thursday, 25 March 2010

இந்திய சீனக் கள்ளக் காதல் முறிவடைந்தது.


தமது சாதி நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளும் இந்தியக் கொள்கை வகுப்பளர்களின் கருத்துப்படி தமிழன் ஆளப்பட வேண்டியவன் இந்தியக் கரையில் ஒரு தமிழன் ஆளக்கூடாது என்பதுதான் முக்கியம்.
1980களில் அமெரிக்கா இலங்கையின் திருகோணமலையில் எரிபொருள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமெரிக்கக் கடற்படைக்கான தொலைதொடர்பு வசதிகளையும் ஏற்படுத்த முயன்றபோது அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வெகுண்டெழுந்தார். தமிழர்கள் முதுகில் ஏறி அதை முறியடித்தார். அவர் புதல்வன் தமிழர்கள் முதுகில் குத்தினார்.

1987இல் ராஜிவ் காந்தியின் கொலை வெறிப்படையை இலங்கையில் இருந்து விரட்டியடிக்கப் பட்டபின் தமிழ்த் தேசியம் பலம்பெற்றெழுந்தது. அதை தன்னால் மட்டும் முறியடிக்க முடியாது என்று உணர்ந்த இந்தியா சீனாவுடன் இதற்க்காக ஒரு கள்ளக் காதலை ஏற்படுத்தியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் சாதிய நலனையும் ஆட்சியாளர்கள் தம் குடும்ப நலனையும் மட்டும் கருத்தில் கொண்டு இந்தியாவின் பிராந்திய நலனை கோட்டைவிட்டு சீனாவுடன் இந்தக் கள்ளக் காதலை மேற்கொண்டனர். விளைவு சீனா தந்திரமாக அம்பாந்தோட்டையில் தனது தளத்தை தனது இந்தியாவிற்கு போடும் சுருக்குக் கயிறானா முத்து மாலைத் திட்டத்தில் ஒன்றாக அமைத்துக் கொண்டது. தமிழர்களின் தேசிய போராட்டத்தை ஒழிக்க இந்தியா கொடுத்த விலை இது. எதிரிக்கு சகுனம் பிழைக்க தனது முக்கை அறுத்த கதை.

இந்திய சீனக் கள்ளக் காதல் இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றும் வரை தொடர்ந்தது. இப்போது சீனா கச்சதீவு வரை வந்த பின் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் விழி பிதுங்குகிறார்கள். தமது கள்ளக் காதலையும் முடித்துக் கொண்டனர்.

போர் முடிந்த பின் இலங்கை மீது எந்த அழுத்தமும் பிரயோகிக்க முடியாத சூழ்நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டு விட்டது. இந்தியா இலங்கைமீது ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக எந்தவித நிர்ப்பந்தங்களும் கொடுக்க முடியாத கையாலாகாத பரிதாப நிலையில் இருக்கிறது என்பதை இந்திய அரசின் முன்னாள் செயலர் ஆர். சுவாமிநாதன் அவர்கள் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த 2009 ஜூலை 7-ம் திகதி நடந்த மாநாட்டில் அதை இவர் இந்தியா நிலை தொடர்பாக அவர் தெரிவித்தது:

I will be very brief in stating my views about India’s role in the present situation (in Srilanka). Politically, India can only be persuasive – not too obtrusively, but persistent in working towards the Tamils being treated as equal citizens the same as the Sinhalas, Muslims etc. On the economic front, India could be as cooperative and helpful as possible. In matters relating to relief and rehabilitation, India could easily display much more activism and involvement.

(These points were made by R.Swaminathan, former Special Secretary (DG-Security), Government of India, to form the basis of his “Chairperson’s Remarks” at a seminar jointly organized by Observer Research Foundation - Chennai Chapter and Stella Maris College, on 7 July 2009.)

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை சர்வதேச ரீதியில் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

இப்போது இந்தியாவின் நிலையைப் பற்றி சுவாமிநாதன் கூறியதுடன் இந்திய அரசின் முன்னாள் மேலதிக செயலர் பி. ராமன் அவர்கள் கூறியதை ஒப்பிட்டுப் பார்ப்போம்:
In many articles in the past, I had expressed my fears that once the Srilakan security forces win against the LTTE, the SL Government would try to impose a dictated peace on the Tamils. Those fears remain. All the more reason for India to play the leadership role to ensure that these fears are belied. These fears, even if valid, should not be allowed to inhibit our initiatives in Sri Lanka.
தமிழர்கள்மீது ஒரு சமாதனத்தை சிங்களம் திணிக்காமல் இருக்க இந்தியா ஒரு தலைமைத்துவ நிலையில் நின்று செயற்பட வேண்டும். ஆனால் சுவாமிநாதனின் கூற்றுப்படி இந்தியா தலைமைத்துவ நிலையில் இருந்து செயற்படமுடியாது உள்ளது.

இந்நிலையில் தமிழர்களின் பிரச்சனைக்கு யார் தீர்வு கொடுப்பார்கள்? இதற்குரிய பதிலை கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறிவிட்டார்கள்: ராஜபக்சே கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்தக் கள்ளக் காதல் முறிவு தமிழர்களுக்கு சாதகமாக அமையக் கூடாது என்பதிலும் இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

தமது சாதி நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளும் இந்தியக் கொள்கை வகுப்பளர்களின் திட்டம் தமிழர்களைச் சிங்களவர்களுக்கு மீளா அடிமைகளாக்குவதே. அதற்கான சகல முயற்சிகளையும் அவர்கள் இப்போது மேற்கொள்கிறார்கள். 2010 ஏப்ரல் 8ம் திகதி நடக்கவிருக்கும் இலங்கைப் பாராளமன்றத் தேர்தலில் தமிழர்கள் பற்பல கூறுகளாக பிரிப்பதிலும் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இதையிட்டு அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் மகிழ்ச்சி தெரிவித்தாராம். தமது சாதி நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளும் இந்தியக் கொள்கை வகுப்பளர்களின் கருத்துப்படி தமிழன் ஆளப்பட வேண்டியவன் இந்தியக் கரையில் ஒரு தமிழன் ஆளக்கூடாது என்பதுதான் முக்கியம்.

போருக்குப் பின்னரான இலங்கையில் இந்தியா ஓரம் கட்டுப்படுவதை இப்போது உணர்ந்து கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்கள் என்ன செய்வதென்று அறியாமல் விழி பிதுங்குகின்றனர். அவர்கள் தமதுஅதிருப்தியை வெளிப்படுத்த இரு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையில் பான் கீ மூனின் நிபுணர்களின் ஆலோசனைச் சபைக்கு கூட்டுச் சேரா நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்த போது அதில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை. மற்றது இலங்கை வந்தவுடன் நிருபாமா ராவ் அவர்கள் ஒரு அமெரிக்கப் பயணத்தையும் மேற் கொண்டார்.

Tuesday, 23 March 2010

மின்னல் ஏன் மேகமாகவில்லை?


மின்னலாய் வந்த உன் நட்பு
மேகமாயேன் நிலைக்கவில்லை?
மழையாய் பொழிந்த அன்பு
காற்றாகிப் போனதேனோ?

மெல்லிய மெழுகு திரியொளியில்
ஒன்றாய் உண்ட உணவுகளில்
பகிர்ந்து கண்ட சுவைகள்
நெஞ்சகத்தில் நிலைக்காததேனோ?

துள்ளும் இசைக்கு கையிணைய
ஆடிய நடனங்கள் செய்த அசைவுகள்
எம் இதயத் துடிப்புகளில்
ஒத்திசைய மறுத்ததேனோ?

கடலாய் வந்த எங்கள் காதல்
அலை போலேன் அடிக்கவில்லை?
வழித்துணையாய் வந்தவள்
ஏன் வாழ்க்கைத் துணையாகவில்லை

பிரபா-பொட்டு - கடிதப் புலிப் புரளி


  • சிங்கள அரசுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை விடுதலைப்புலி தலைவர்கள் கொடுத்துள்ளனர். நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரனும், பொட்டு அம்மானும் கடிதம் எழுதி உலகம் முழுக்க வாழும் தங்கள் ஆதரவாளர்களுக்கு அனுப்பி உள்ளனர். இப்படி ஒரு செய்தியை விகடன் பத்திரிகை பிரசுரித்தது.

மேலும் விகடன் தெரிவிப்பது:

  • தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்... அதில், ''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகிவிட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்'' என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ''போரின் கடைசி நாள் பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இத்தனை மாதங்கள் கழித்து இலங்கை அரசு வலிந்து அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? இண்டர்போல் அறிக்கை வெளியான பிறகுதான் தற்கொலை தகவல் அவர்களுக்குக் கிடைத்ததா? பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் ரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம். இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்கு வந்து போவார்'' என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
  • ''புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா?'' என்று இவர்களிடம் கேட்டால்... ''எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல்படி சொல்வதானால்... இயக்கத்துக்கு புதிய தலைமை வரவேண்டிய அவசியமில்லை!'' என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்.
சில துரோகக் குழுக்களைச் சேர்ந்தவர்களோ பொட்டு பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்துவிட்டார்கள் இதை மறைக்க புலிப் "பாசிசவாதிகள்" பிரபாகரன் உயிருடன் இருப்பதைப் போன்ற மாயையை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்தப் பேரினவாதிகளின் அடிவருடிகளான துரோகக் குழுக்களைச் சேர்ந்தோரும் இபோது சற்றுத் திணறுகிறார்கள்.

விகடன் இந்தச் செய்தியை வெளிவிடமுன்னரே கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத் தளம் ஒன்று விகடனில் இப்படி ஒரு செய்தி வெளிவந்ததாகக் கூறிவிட்டு அதை திடீரென நீக்கிவிட்டது. இது யார் கிளப்பிவிட்ட புரளி?

விடுதலைப் புலிகளின் தலைமை எப்போதும் மிக நவீன தொடர்பாடல் கருவிகளைப் பாவிப்பது. இப்படி இருக்கையில் ஏன் அவர்கள் கடிதமூலம் தமது இருப்பை உறுதி செய்யவேண்டும்? தமிழகத் தலைவர்களுக்கு ஏற்கனவே விடுதலைப் புலிகளின் இருப்பு உறுதி செய்யப் பட்டுவிட்டது. வெளிநாடுகளில் எவருக்கும் இப்படி ஒரு கடிதம் வந்ததாகத் தகவல் இல்லை.

இந்தக் கடிதப் புலிப் புரளியை இப்போது கிளற வேண்டிய அவசியம் என்ன? இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தை தமக்கு தேவையான திசையில் திருப்ப சில சக்திகள் முயற்ச்சி செய்கின்றன எனபதுதான் உண்மை.

அந்திக் கடலில் மறைந்த கதிரவன் மறுநாள் உதிப்பான்

நந்திக் கடலில் மறைந்த தலைவன் நாளை வருவான்

Sunday, 21 March 2010

காத்தருள்வாய்


காலை வீட்டிலிருந்து வேலைக்கென்று வெளியே வந்தால் - தன்
காலை மெட்டாக அசைத்து முன் மெல்லெனப் போவாள்
பாலைக் கடைந்தாற்போல் மேனியுடன் ஒரு குஜராத்திக் குமரி – என்
வாலை மனதைச் சிதறாமல் காப்பாய் மஞ்சவனப் பதி கந்தா கடம்பா

பேருந்து தரிப்பிடத்தில் கரிபியக் கன்னி யொருத்தி – சிலையென
இருந்து கையில் ஓர் காதல் நாவல் கையேந்தி – போதை
மருந்து போலொரு கண்ணால் ஓரப் பார்வை விடுகிறாள் - என்
குருத்து மனதைச் சிதறாமல் காப்பாய் நல்லைக் குமரா வேலா

வேலையில் போய் அமர்ந்தால் ஆங்கொரு ஐரிஸ் பெண்
வேலைக் கண்ணில் எடுத்து உரசிக் கொண்டு அருகில் வந்து
கொலை செய்கின்றாள் ஐயா என்தன் வாலிபத்தை – என்
காளை மனதைச சிதறாமல் காப்பாய் சந்நிதி முருகா முருகா

இத்தாலி உணவகம் மதியம் சென்றால் அங்கொரு – போலந்து
இளவழகி உணவுதரக் குனிந்து பவள மார்பு காட்டி
களவுவழி என்னை மனதைக் கவர்கின்றாள் ஐயா – என்
சிறு மனதைச சிதறாமல் காப்பாய் மாமங்காடு ஆண்டவா


Facebookஇல் பேசி எனை வாட்டுகிறாள் ஒரு பிரெஞ்சுப் பெண்
சொற்களால் செய்யும் சில் மிஷங்கள் சொல்வொணாது
வார்த்தைகளால் காட்டுகிறாள் அவள் இங்கு நீலப் படம் - வாலிப
மனதைச சிதறாமல் காப்பாய் கோணமாமலை அமர்ந்த ஈசா

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...