Saturday, 22 May 2010

ஈழப் படுகொலைக்கு திதி கொடுக்க வந்த இந்து மதம்


ஈழத்தில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பல இந்துக் கோவில்கள் இருக்கும். ஒரு கிறித்தவத் தேவாலயமும் இருக்கும். இந்து வீட்டில் ஒருவர் கடும் சுகவீன்முற்றிருந்தால் கோவில் ஐயர் வரமாட்டார். கிறித்தவ வீட்டில் ஒருவர் கடும் சுகவீனமுற்றால் பாதிரியார் வந்து சகலருடனும் சேர்ந்து பிரார்த்தனை செய்வார்.
இந்து வீட்டில் ஒருவர் இறந்தால் ஐயர் வரமாட்டார். பாதிரியார் வந்து போதனை செய்து ஆறுதல் கூறிவிட்டுச் செல்வார். இறந்த இந்து வீட்டிற்கு ஒரு வாரம் கழித்து ஐயர் வருவார். வீட்டிற்குள் வரமாட்டார். அவருக்கென்று ஒரு ஆசனம் முற்றத்தில் போடப்படும். காப்பியோ தேநீரோ எதுவும் அருந்த மாட்டார். அவருக்கென்று ஒரு சோடா கடையில் இருந்து தருவித்து கொடுக்கப் படும். வீட்டுப் பாத்திரங்கள் எதிலும் அதை ஊற்றிக் கொடுக்கக் கூடாது. போத்தலோடு அதை குடிப்பார். இறந்த நேரத்தை வைத்து அதன் திதியைச் சொல்லி எந்த நாள் அந்தியேட்டிக் கிரியை வரும் என்று சொல்லிவிட்டுச் செல்வார். பின்னர் அந்தியேட்டிக்கும் ஆண்டுத் திதிக்கும் வந்து இறந்தவரின் ஆத்மாவிற்கு என்று சொல்லி தண்டல் செய்வார்.

இது ஈழப் படு கொலைக்கும் நடந்தது. இலங்கயில் அப்பாவிகள் கொல்லப் பட்டிருக்கும் போது பிரித்தானியாவில் உள்ள இந்து சபைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன் அங்கு இந்துக்கள் கொல்லப் படுகிறார்கள் என்று. பதில் இல்லை. பின்னர் இறந்து கிடக்கும் பசுக்களின் படங்களை அனுப்பி பசுக்களைக் கொல்கிறார்கள் நடவடிக்கை எடுங்கள் என்றேன். பதில் இல்லை. வேல்ஸில் உள்ள இந்துக் கோவிலில் ஒரு பசுவிற்கு தொற்று நோய் பிடித்துவிட்டது. அதைக் கொல்லும் படி உள்ளூராட்சிச் சபை உத்தவிட்டது. இந்து சபை கொதித்து எழுந்து விட்டது. ஆர்ப்பட்டங்கள் செய்தது. ஈழத்தில் கொல்லப் பட்ட பசு தமிழ்ப் பசுவாக இருக்கலாம் அல்லது தாழ்ந்த சாதிப் பசுவாக இருக்கலாம். வேல்ஸில் இறந்தது ஒரு ஆரியப் பசுவாக அல்லது உயர் சாதிப் பசுவாக இருக்கலாம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் படு கொலை செய்யப் பட்டுக் கொண்டிருந்த வேளை பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் இரவு பகல் பாராமல் மாதக் கணக்காக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வராத பிரித்தானிய இந்து சபையினர். 18-05-2010இலன்று பிரித்தானியப் பராளமன்றத்தின் முன் நடந்த ஈழப் படுகொலையின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டனர்.

சும்மா ஆடுமா சோழியன் குடுமி?
என்ன தண்டல்?

Friday, 21 May 2010

விகடன் கக்கும் நஞ்சு


ஈழப் பிரச்சனைபற்றி ஒரு கட்டுரை பிரபாகரனின் அட்டைப் படத்துடன் வெளியிட்டால் நல்ல வியாபாரம் நடக்கும் என்பதை விகடன் குழுமப் பத்திரிகைகள் உணர்ந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளியிட்டுவருகிறது விகடன் குழுமம். இதில் விடுதலைப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். எல்லாம் வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்தசாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். ஒரு பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை.

இலங்கை அரசு தனது பொய்ப்பிரச்சாரத்திற்காக உலகெங்கும் பெரும்தொகைப் பணத்தைச் செலவழிப்பதை நாம் அறிவோம். அம்சா சென்னையில் இருக்கும்போது பல ஊடகவியாலாளர்களுடன் நல்ல உறவைப் பேணினார் என்பது உண்மை. இடையில் ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியர் ஒருவர் பதவி நீக்கப் பட்டார். விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் என்பவர்தான் அவர். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், காணிவீடுகள் விற்பனைத் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

19ம் திகதி மே மாதம் வெளிவந்த ஜுனியர் விகடன் இதழில் முள்ளிவாய்க்கால் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் 1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக் கலவரத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்புப்போல் ஏன் முள்ளி வாய்க்கால் படுகொலையின் போது எழவில்லை என்று ஜுனியர் விகடன் "ஆராய்கிறது".

விகடன் அதற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட "அந்நியமாதல்" நிலையையும் காரணம் காட்டுகிறது.

அப்போது இலங்கையில் தலையிட இந்தியாவிறகு திருகோணமலையிலும் சிலாபத்திலும் அமையவிருந்த அமெரிக்க படைத்துறை வசதிகள் காரணமாக இருந்தது.

இந்தியா வேண்டுமென்றே 1983 இனக்கலவரம் நடக்க விட்டிருந்தது. அது பற்றி மேலும் வாசிக்க இங்கு சொடுக்கவும்:1983 இலங்கை இனக் கொலை இந்திரா காந்திக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது

தனது தேவைக்காக இந்திய உளவுத்துறையும் அதன் தமிழ்நாட்டுக் கைக்கூலிகளும் தமிழர்களைத் தூண்டிவிட்டனர். தமிழ்நாட்டின் சகல ஊடகங்களும் ஈழத் தமிழர்களை ஆதரித்தன. அதன் பிறகு வளர்ந்த தமிழ்நாட்டு-ஈழத் தமிழர்கள் இணைவு இந்தியாவை மாற்றி யோசிக்கவைத்ததை விகடன் மறைத்தது.

இருபதியானாயிரத்திற்கு மேற்பட்ட இந்தியப்படைகள் போர்களத்தில் சிங்களப் படைகளுக்குப் பின்னால் நின்று இராமர் வாலியைக் கொன்றது போல் தமிழர்களைக் கொன்றதை விகடன் அறியாதா?

விகடன் தமிழ்நாட்டு தொலைக்காட்சிச் சேவைகளையும் குற்றம் சாட்டுகிறது. ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் பிரித்து வைப்பதில் இந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகியோரின் பார்பனக் கூட்டமைப்பின் பங்களிப்பை விகடன் மூடி மறைத்து விட்டது. இம்மூவர்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டமையை ஏன் விகடன் சுட்டிக் காட்டவில்லை? சிங்கள ரத்னா என்ற பட்டம் இந்து ராமிற்கு ஏன் வழங்கப்பட்டது? அவரின் பத்திரிகையியல் பயிற்ச்சிக் கல்லூரிக்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது என்பதை விகடன் அறியாதா? சோவின் பொய்ப் பிரச்சாரங்களை விகடன் அறியாதா? சுப்பிரமணிய சுவாமியின் பேத்தல்களை விகடன் அறியாதா?

ஜீனியர் விகடன் மேலும் சொல்கிறது:

  • கடந்த 25 ஆண்டுகளாக முறையான கல்வி பெற முடியாத இனமாக ஈழத் தமிழினம் மாற்றப்பட்டது.
இலங்கையில் இத்தனை மோசமான போர்ச்சூழலிலும் தமிழர்கள் கல்வியைக் கைவிடவில்லை என்பதை நாம் அறிவோம். அங்கு நடக்கும் பரீட்சை முடிவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களின் கல்வித்துறை பல பின்னடைவுகளைச் சந்தித்தது உண்மை. ஆனால் கல்வி பெறமுடியாத் ஒரு இனமாக ஈழத் தமிழினத்தை மாற்றமுடியாது என்பதை உலகறியும். கட்டுரையாளரின் அறிவீனத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

நீலிக் கண்ணீர் வடிக்கிறார் கட்டுரையாளர்: தமிழ் இனத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் துயரம் தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளைப் பாதித்ததாகவே தெரியவில்லை.
ராமின் இந்துப் பத்திரிகையைப் படிக்கும் "அறிவுஜீவிகள்" எப்படி தமிழ் இனத்தைப்பற்றி கவலைப்படுவார்கள் என்பதை நாம் அறிவோம் விகடன் அறியாது.

இலங்கையில் மீண்டும் தமிழ்த் தேசியம் தலையெடுக்காமல் இருக்க தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்களக் குடியேற்றம் இந்தியாவின் உதவியுடனும் ஆலோசனையுடனும் இப்போது நடக்கிறது என்பதை ஏன் விகடன் சுட்டிக் காட்டவில்லை?
  • முள்ளிவாய்க்கால் பேரவலத்தைப் பேசும்போது அதை நமது அரசியல் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். நாமும் மனிதர்கள்தான், நம்மிடமும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது என்பதை நிரூபிக்க இது ஒரு சந்தர்ப்பம். இப்போதாவது நாம் செயல்படுவோமா?
என்று முடிக்கிறது விகடன்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தைப் பற்றிப் பேசும்போது பத்திரிகை வியாபாரத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாமா?

Thursday, 20 May 2010

விளையாட்டுக் காதல்


உன் கண்ணோடு
என் கண் ஆடியது
சடுகுடு ஆட்டம்

உன் இதழோடு
என் இதழின்
மல்யுத்தம்

உன் உடலெங்கும்
என் விரலின்
மரதனோட்டம்

என் கைகளில்
கன்னியுடல்
மென் பந்தாட்டம்

உன் நெஞ்சில்
என் முகத்தின்
உதை பந்தாட்டம்

உன் குறி நாடி
வரும் தேடி
கூடைப் பந்தாட்டம்

உனக்கும் எனக்குமிடையில்
ஒரு மட்டுப் படுத்தப்படா
துடுப்பாட்டம்

காணொளி: May 18 போர்குற்ற நிகழ்வுகள்-இலண்டன் - பாகம் - 2

இலண்டனில் மே மாதம் 18ம் திகதி நடந்த போர் குற்ற அஞ்சலி நிகழ்வுகளின் காணொளிகள்.



Video of Sri Lankan War Crime Day - in London -Part-1


சென்ற ஆண்டு மே 18ம் திகதி வரை ஈழத்தில் நடந்த போர் குற்றங்களை பகிரங்கப் படுத்தவும் படுகொலை செய்யப் பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் உள்ள பாராளமன்ற சதுக்கத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.





Wednesday, 19 May 2010

இணையும் கணனி இது


மென்பொருளும் வன்பொருளும்
இணையும் கணனி இது

உன் இதழில் என்னிதழ் பதிக்கும்
இனிய பதிப்பகம் இது

உணர்வுகள் போட்டியிட்டு
மோதும் விளையாட்டரங்கம் இது

மௌனத்தின் மொழியில்
நடக்கும் கவியரங்கம் இது

Tuesday, 18 May 2010

இலண்டன் போர்க் குற்ற தினம் / அஞ்சலி படங்கள்


இலண்டனில் நடந்த மே மாதம் 18 படுகொலைகளின் அஞ்சலியும் போர்குற்ற நினைவு நாளும் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் உள்ள சதுக்கத்தில் நடை பெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு தமது அஞ்சலியைத் தெரிவித்தனர். பல கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் மனித் உரிமை ஆர்வலர்களும் இதில் பங்கு பெற்றனர். கொழும்புப் பேரினவாதிகளை இயற்கை விழாக் கொண்டாட அனுமதிக்கவில்லை.




வின்ஸ்டன் சேர்சிலின் சிலையடியில் அஞ்சலி.


பாராளமன்ற உறுப்பினர் கீத் வாஸ் அவர்கள்

பிரித்தானிய இந்துப் பேரவையைச் சேர்ந்த குப்தா பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினருடன் உரையாடல்.




பாராளமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா.

ஜீரீவீ தொலைக்காட்சிச் சேவையின் பிரேம், கருணைலிங்கம்.

Tamil For Labour







சரணடைய வந்தோரை சித்திரவதை செய்து கொன்றோம் - இலங்கைப் படை அதிகாரி


சரணடைய வந்தோரைச் சித்திரவதை செய்து கொன்றோம் என்று சனல்-4 செய்தி தொலைக் காட்சிக்கு இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரியும் முன்னிலை சிப்பாயும் கூறியுள்ளனர்.

எல்லோரையும் கொல்லுங்கள்
தன் பெயர் குறிப்பிடப் படாத முன்னிலை இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் சனல்-4 தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் "எமது அதிகாரி எல்லோரையும் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டார், நான் எல்லோரையும் கொன்றோம்" என்றார். இராணுவ அதிகாரி சனல்-4 தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் சகலரையும் கொல்லும் உத்தரவு மேலிடத்தில் இருந்து வந்ததென்றார்.

சிறுவர்கள் உட்படப் பலர் கைகட்டிய நிலையில் கிடங்கொன்றில் இருக்க வைத்திருக்கும் படங்களை எடுத்த இலங்கை இராணுவத்தினர் எடுத்த புகைப்படங்களையும் சனல்-4 செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்பியது

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் பத்திரிகைகள்மீதான அடக்கு முறைகளையும் எடுத்துக் கூறிய சனல்-4 செய்தித் தொலைக்காட்சி அரசை எதிர்ப்பது சுய மரணதண்டனைக்கு ஒப்பானது என்றும் எடுத்துக் காட்டியுள்ளது..

பிரபாகரன் மகனைக் கொன்றோம்.
தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் சரணடைய வந்த தலைவர் பிரபாகரனின் மகனை தகப்பனின் இருப்பிடம் பற்றி விசாரித்துவிட்டுக் கொன்றோம் என்றும் சனல்-4 செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இராணுவத்தினர் தெரிவித்தனர்.




http://link.brightcove.com/services/player/bcpid62612474001?bctid=86382573001

நாராயணன் வந்து நரமாமிசம் தின்ற மாதம்


பாட்டாளி மக்கள் வீறு கொண்டு
எழுந்து வென்ற மாதம் மே மாதம்
தமிழன் வரலாற்றின் இரத்தத்தால்
எழுதிய மாதம் மேமாதம்

கீதையின் பாதையில் நாராயணன்

வந்து நரமாமிசம் தின்ற மாதம் மேமாதம்
வேதத்தின் வழியில் சிவ சங்கரன்
வந்து மனித வேள்வி செய்த மாதம் மே மாதம்

மனுதர்மத்தின் சாயம் வெளுத்த மாதம்
தம்ம போதனைகள் தலை சாய்ந்த மாதம் மேமாதம்
பௌத்தம் புளுத்துப் போன மாதம்
மானிடம் மரணித்துப் போன மாதம் மே மாதம்

ஆயிரம் ஆயிரம்ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள்
ஈழப்போரில் இறந்த சிங்களப் படைகளின்
இடைவெளிநிரப்ப பின்கதவால் வந்து
தமிழர்களை வதைத்த மாதம் மே மாதம்

வட இந்தியப் பிணந்தின்னிப் பேய்களின்
மானம் கெட்ட மலம் தின்னி நாய்கள்
தமிழனை அடுத்து கெடுத்த மாதம்
தமிழன் மானம் இழந்த மாதம் மே மாதம்

பாரதமாதா பாதக நாயாய் நின்று
பாலர்களைக் கருக்கிய மாதம்
தமிழன் ஆளாத் தமிழ்நாட்டின்
கையாலாகாத் தனம் தெரிந்த மாதம்

நாளை வரும் ஒரு விடிவு
எதிரிகளுக்கும் துரொகிகளுக்கும்
வரும் ஒரு முடிவு

Monday, 17 May 2010

Have you won the war?


Indiscriminate shelling
Carpet bombings
Phosphorous bombs
Have you won the war
Have you seen the peace

Sound of big bang still on air
So will be the cry of our babies
Who were murdered by you.

Blood bath by the sea
Dhamma gone down the drain
Buddhism buried alive

Hospitals were your legitimate targets
That is what you learned from the Sangha

No killing; no stealing;
No sexual misconduct;
No lying; No intoxicants
Said to be the the Five Percepts
Of the Gowthama Buddha
Have you followed them?

Have you won the war/

Sunday, 16 May 2010

இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சீனர்கள்


தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை தன்னால் அடக்கமுடியாது என்பதை தனது அமைதிப் படையின் தோல்விக்குப் பின் உணர்ந்த இந்தியா இலங்கையில் சீனாவுடன் இணைந்து செயற்பட முடிவு செய்தது. இது இந்தியா ஆட்சியாளர்களினது குடும்ப நலன்களையும் கொள்கை வகுப்பாளர்களின் சாதி நலன்களையும் கருத்தில் கொண்டு இந்தியப் பிராந்திய நலன்களைப் பலிகொடுத்து எடுக்கப் பட்ட ஒரு முடிவாகும்.

இதன் விளைவாக சீனா இலங்கையின் இனக்கொலைக்கு இந்தியாவுடன் மறை முகமாகக் கைகோத்துக் கொண்டு இந்தியாவை கால் வாரும் தந்திரத்தையும் அரங்கேற்றியது. தமிழன் ஆளக்கூடாது என்ற கருத்துக்கொண்ட இந்தியக் கொள்கை வகுப்பாளர் இந்தச் சீனாவின் இந்தியாவிற்கு எதிரான கால்வாரல் பற்றி அக்கறை கொள்ளவில்லை. சீனா தனது பிடியை இலங்கையில் மெல்ல மெல்ல இறுக்கி வருகிறது. இப்போது இலங்கையில் சீன செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சீனர்கள் இருப்பதாக லங்கா ஈ நியூஸ் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் செம்படை உறுப்பினர்களும் சிறைக்கைதிகளும் ஆவர்கள்.

2009-ம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு அதிக கடனுதவி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. வீதி அபிவிருத்திக்கு 1.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது. உதவித் தொகையாக 2.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது.
CHINA has emerged as Sri Lanka's biggest single lender in 2009, overtaking the World Bank and the Asian Development Bank, the treasury said on Wednesday. China lent US$1.2 billion to build roads, a coal power project and a port in the island's south last year, more than half the total of US$2.2 billion in foreign aid in 2009.
Project loans accounted for US$1.9 billion of the total, with another US$279.6 million in grants, the treasury said ahead of the 2010 budget.

உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கு இந்து சமுத்திரத்தின் ஊடாக நடை பெறுகிறது என்பதை சீனா உணர்ந்து இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை வலுவாக்கிவருகிறது.

இந்தியா தொடர்ந்தும் இலங்கையில் சீன ஆதிக்க வளர்ச்சியை கண்டு கொள்ளாமல் இருக்க அமெரிக்கா இது தொடர்பாக கரிசனை கொண்டுள்ளது.

2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை இது பற்றிக் குறிப்பிடுகையில்:

  • Today, a shifting world order is bearing new fruits for Sri Lanka. Most notably, China’s quiet assertion in India’s backyard has put Sri Lanka’s government in a position not only to play China off against India, but also to ignore complaints from outside Asia about human rights violations in the war.

இத்தனைக்கும் மத்தியிலும் இந்திய அரசு சிங்களவர்களுடன் நட்பை அதிகரித்து வருகிறது. இது பற்றி தினமணி ஆசிரியத் தலையங்கம் இப்படிக் கூறுகிறது:
  • இத்தனைக்கும்பிறகு இந்திய அரசு இது அந்நிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது.
  • “விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல' என்று சொன்னதெல்லாம் பொய்தானே?

இந்தியா ஆட்சியாளர்களினது குடும்ப நலன்களையும் கொள்கை வகுப்பாளர்களின் சாதி நலன்களையும் கருத்தில் கொண்டு செயற்படுகிறார்கள் என்ற உண்மையை மறைக்க தினமணி முயல்கிறது. இதை ஒரு புரியாத புதிர் என்று சொல்லி தினமணி மூடி மறைக்கிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இன்னும் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் மேற்கு நாடுகள் தொடர்ந்தும் இலங்கைக்கு மனித உரிமை மீறல் தொடர்பாக அழுத்தம் கொடுக்கும். இதிலிருந்து தப்புவதற்கு இலங்கைக்கு சீனா பக்கம் மேலும் மேலும் சார்வதைத் தவிர வேறு தெரிவு இல்லை. இந்தியாவை அதன் கொள்கை வகுப்பாளர்கள் என்னும் ஒரு கேவலமான கும்பலிடம் இருந்து யார் காப்பாற்றுவார்?

நாயிற் கேவலமான பிழைப்பு




நாதியற்று வாழவந்த கூட்டம்
நீதியற்று ஆளும் தமிழ்நாட்டில்
வயிற்றுப் பிழைப்பிற்கு
இப்படியும் பொய் சொல்லுவர்.




Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...