
இறையாண்மை இழந்தோர்க்கு
முறையான தீர்விங்கு
தேர்தலில் கிடைக்குமோடி - சீலம்பாய்
தேர்தலில் கிடைக்குமோடி
நினைவுத் தூபி நிர்மூலமாக்கும்
கொடுங்கோல் ஆட்சியில் - உரிமை
தேர்தலால் கிடைக்குமோடி - சீலம்பாய்
தேர்தலால் கிடைக்குமோடி
தன்னாட்சியில்லை
தாயகம் தானில்லை
தேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்
தேர்தல் ஏதுக்கடி
குழந்தைகளைக் கொன்றேரும்
குமரிகளைக் கெடுத்தோரும்
தேர்தலால் தீர்ப்பாரோடி - சீலம்பாய்
தேர்தலால் தீர்ப்பாரோடி
உயிரோடு புதைத்தோரும்
சரணடைந்த்தோரைக் கொன்றோரும்
தேர்தலால் தீர்ப்பாரோடி - சீலம்பாய்
தேர்தலால் தீர்ப்பாரோடி
ஆரியப் பேய்களும்
சிங்கள ஓநாய்களும்
தேர்தலால் தீர்ப்பாரோடி - சீலம்பாய்
தேர்தலால் தீர்ப்பாரோடி
ஒற்றுமை எனக்கூவிக் கூவி
வேறு பட்டு நிற்பார்க்கு
தேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்
தேர்தல் ஏதுக்கடி
அகதியெனும் சொல்லை
அடை மொழியாய் கொண்டோர்க்கு
தேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்
தேர்தல் ஏதுக்கடி
பிரதான எதிரி இந்தியாவை
கதியென்று நம்புவோர்க்கு
தேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்
தேர்தல் ஏதுக்கடி
No comments:
Post a Comment