Saturday, 24 September 2011
இதயத்தை வருடும் SMS தொகுப்பு
Flowers need sunshine,
violets need dew,
all angels in heaven know I need u.
years may fly,
tears may dry,
but my friendship with u will never die.
One day u will ask me: What is more important to you,
me or your life? I will say: my life.
You will walk away from me without knowing that U R MY LIFE!!!
Feel good when somebody Miss u.
Feel better when somebody Loves u.
But feel best
when somebody never forgets u.
A friend is sweet when its new but it is sweeter
when its TRUE!
But u know what?
Its sweetest when its you.
The morning is just a few moments away. Go to sleep
and when you wake up, remember me as a friend who is
always there for you and never let you down
Always draw a circle around the ones you love, never
draw a heart because hearts can be broken, but
circles are never ending
Of all the gifts, big and small, your friendship
is the greatest of them all.
A friend gives hope when life is low, a friend is a
place when you have nowhere to go, a friend is honest,
a friend is true. A friend is precious a friend is u.
If kisses were water, I will give u sea. If hugs were
leaves, I will give u a tree.If u luv a planet, I will
give u a galaxy, if friendship is life I will give u
mine.
People live People die People Laugh People Cry Some
give up Some will try Some say hi Some say bye Others
may forget YOU but never will I.
A memory lasts forever, and never does it die. True
friends stay together and never say good bye.
Make your life a house your heart can live in. With a
door that is open to receive friends. And a garden
full of memories.... of many good things.
You cannot buy friendship, you can earn it. If someone
comes for help, be a true friend !
A special friend is rare indeed, it beems to be
special breed, yes, perfect friends r very few, so
lucky I m for having you.
Friendship is a wonderful word, it might be the most
beautiful one on earth. Friendship is something
powerful, a gift of great value!
Whenever an unexpected joy passes through your heart and suddenly you smile for no reason, remember someone somewhere is wishing you to be happy always.
You must be a magician for sure, because everytime I look at you everyone else disappears.
Smile is a cooling system of heart, sparkling system of eyes, lightening system of face and relaxing system of mind. So, keep smiling and activate all systems.
Friday, 23 September 2011
ஓட்டம் பிடிக்கும் சர்வாதிகாரிகளும் ஆட்டம் காணும் முதலாளித்துவ அரசுகளும்.
பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் அமெரிக்கா தனது நிதிநிலையைச் சீர்படுத்த என்ன செய்வது என்று தெரியாமல் துடிக்கும் போது ஏதாவது செய்ய வேண்டுமென்று எதையாவது செய்கிறது. அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve அமெரிக்காவின் பொருளாதார நிலையைச் சீர்படுத்த அமெரிக்காவில் வீடு வாங்குவோரை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணியது. புதிதாக வீடுவாங்குபவர்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள். இதனால் நாட்டின் கொள்வனவு அதிகரிக்கும். கொள்வனவு அதிகரிக்க உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்ற நப்பாசை. இதற்காக அமெரிக்க நிதிச் சந்தையில் நீண்டகால வட்டி வீதத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று தனது குறுகியகாலக் கடன் முறிகளை விற்று நீண்டகாலக் கடன் முறிகளை வாங்கியது. இதனால் நீண்டகாலக் கடன்களுக்கான வட்டி வீதத்தைக் குறைக்கும் எண்ணம். அமெரிக்கா நீண்டகாலக் கடன் முறிகளை வாங்க உலகெங்கும் பங்குச் சந்தை 22-09-2011 வியாழக்கிழமை படு வீழ்ச்சியைக் கண்டது. அமெரிகாவின் நீண்ட காலப் பொருளாதார நிலை கூட தற்போதைய நிலை போல மோசமாகவே இருக்கிறது என்று உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் நினைத்ததன் விளைவே இந்த வீழ்ச்சி. இந்த ஒருநாள் விலை வீழ்ச்சி 4% தொடக்கம் 5% வரை இருந்தது. All Country World Index உலகப் பங்குச் சுட்டெண் 4.5% குறைந்தது. பல நாடுகளில் பங்குச் சுட்டெண்ணில் உள்ள சகல பங்குகளும் விலை வீழ்ச்சியடைந்தன.
வியாழக்கிழமை பங்குச் சந்தைத் தரகர்கள் யாவரும் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தண்ட உதை(Penalty)யைத் தவறவிட்டவர்கள் போல் தலையில் கைவைத்தபடி காணப்பட்டனர்.
22-09-2011 வியாழக்கிழமை பிரித்தானியப் பங்குச் சந்தையின் விலை வீழ்ச்சி 4.7% யாக இருந்தது. இது கடந்த 3ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரும் வீழ்ச்சி. கடன் நெருக்கடி இல்லாததும் ஐரோப்பாவின் பலமிக்க பொருளாதாரமுமான ஜெர்மனியின் பங்குச் சந்தையும் தப்பவில்லை. அதன் பங்குச் சுட்டெண் 4.96% விழுந்தது. கடந்த மே மாதத்து பங்கு விலைகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனியின் பங்குச் சுட்டெண் 30% விழுக்காட்டைக் கண்டுள்ளது. பங்குச் சந்தை வீழ்ச்சி ஐந்து கண்டங்களிலும் நிகழ்ந்தது. ஷாங்காய் சுட்டெண் 3.08% வீழ்ந்தது.
பண்டங்களின் விலைகளும் சரிவு
முதலீட்டாளர்கள் எந்தவித நம்பிக்கையும் இல்லாத நிலையில் காணப்பட்டனர். அவர்கள் தங்கத்திலும் முதலிடத் தயாராக இல்லை. தங்கத்தின் விலை 3% வீழ்ந்தது. மசகு எண்ணை விலையும் 3% குறைந்தது. 24 பண்டங்களுக்கான விலைச் சுட்டெண் 4.5% வீழ்ச்சியடைந்தது.
ஆபத்தான கட்டத்தில் உலகப் பொருளாதாரம்.
உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் உலகப் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது என்று சொல்கின்றன. ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி, எரிபொருள் விலை அதிகரிப்பு, அரபு நாடுகளில் நடந்த கிளர்ச்சி ஆகியவை தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்று முக்கிய காரணிகள். ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து, கிரேக்கம் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் அரச கடன் நெருக்கடியும், வங்கிகளின் நிதி நெருக்கடியும் எதிர்பார்ததிலும் மோசமாக அமைந்தன. அடுத்த ஆண்டு தேர்தலை எதிர் நோக்கும் அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளிடை பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நடக்கும் இழுபறி எந்த விதத்திலும் நாட்டுக்கு உதவுவதாக இல்லை.
நல்ல அறிகுறிகள் ஏதும் இல்லை.
ஐரோப்பிய நாடுகளில் மொத்தக் கொள்வனவு குறைந்து கொண்டே போகிறது. யூரோ நாணய வலய நாடுகளில் Purchasing Managers’ Index 59.7இல் இருந்து 49.2இற்குக் குறைந்தது. சீனாவில் தொழிற் துறை நடவைக்கைகளின் வேகம் குறைகிறது. ஜேர்மனியிலும் பிரான்சிலும் இதே நிலைமை.ஜேர்மனியில் உற்பத்திப் பொருள்களுக்கான உத்தரவுகள் குறைந்தன. (manufacturing orders in Germany declined). கடன்படு திறன் போன்றவற்றை மதிப்பீடு செய்யும் Standard & Poor நிறுவனம் இத்தாலியின் 7 வங்கிகளின் கடன்படு திறனைக் குறைத்துள்ளது.
இரட்டை வீழ்ச்சிப் பொருளாதார மந்தம் ( Double Dip Recession)
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இரட்டை வீழ்ச்சி பொருளாதார மந்தம் ( Double Dip Recession) ஏற்படுமா என்பது தான் இப்போது உலக பொருளாதார நிபுணர்களை வாட்டி எடுக்கும் கேள்வி. இரட்டை வீழ்ச்சி பொருளாதார மந்தம் ( Double Dip Recession) என்பது ஒரு முறை வீழ்ச்சி கண்ட பொருளாதாரம் அதிலிருந்து எழுந்தவுடன் மீண்டும் விழுவதாகும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 2008இல் இருந்து மந்தமடையத் தொடங்கிய பொருளாதாரம் அண்மையில் சில நாடுகளில் சிறு வளர்ச்சியக் கண்டது. மீண்டும் ஒரு பெரும் வீழ்ச்சி ஏற்படுமா என்பதுதான் எல்லா முதலீட்டாளர்களையும் வாட்டும் கேள்வி. முதலீட்டாளர்கள் நம்பிக்கையில்லா நிலையிலும் மக்கள் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொண்ட நிலையிலும் இருக்கின்றனர்.
செல்வந்தர்கள் மீது அதிக வரிச்சுமை
பிரான்ஸும் இத்தாலியிம் அதிக வருமானமுள்ளவர்களின் மீதான வரியை அதிகரித்து விட்டன. பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் செல்வந்தர்களிடமிருந்து அதிக வரி அறவிடும் திட்டம் இழுபறியில் உள்ளது. முதலாளித்துவ நாடுகளின் அரசுகள் தங்கள் இருப்பை உறுதி செய்ய இந்த அதிகரித்த வரி விதிப்பைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால் அரசுகளை உருவாக்கும் முதலாளிகள் இதை வரவேற்கப்போவதில்லை. முதலாளிகள் அரசுகளின் செலவுகளைக் குறைக்கும்படி வற்புறுத்துகிறார்கள். ஆனால் முதலாளித்துவ நாடுகளின் நிதி நெருக்கடியை செலவுக்குறைப்பால் மட்டும் சமாளிக்க முடியாது. செலவுக் குறைப்பு வறிய மக்களைப் பெரிதும் பாதிக்கும். இது ஒரு வர்க்க முரண்பாட்டுக்கு வழிகோலும். மக்களுக்கு முதலாளித்துவ ஆட்சி முறைமை மீது ஆத்திரத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும். சமூகக் குழப்பத்திற்கும் கலவரங்களுக்கும் வழிவகுக்கும்.
முதலாளித்துவ நாடுகளில் கிளர்ச்சி தோன்றலாம்.
முதலாளித்துவ நாடுகளில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. உலக சோசலிஸ் இனையத் தளம் ஐரோப்பாவில் பல மில்லியன் கணக்கானோர் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்கிறது. துனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் இளைஞர்களிடையே ஏற்பட்ட வேலையில்லாப் பிரச்சனை அவர்களைச் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழவைத்து ஆட்சியாளர்களைப் பதவியில் இருந்து விரட்டியது. முதலாளித்துவப் பொருளாதார நாடுகளில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சனை ஆட்சியாளர்களை மாற்றுமா ஆட்சி முறையை மாற்றுமா?
வியாழக்கிழமை பங்குச் சந்தைத் தரகர்கள் யாவரும் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தண்ட உதை(Penalty)யைத் தவறவிட்டவர்கள் போல் தலையில் கைவைத்தபடி காணப்பட்டனர்.
he missed penalty kick |
He lost his portfolio |

Thursday, 22 September 2011
தாய்வானை அமெரிக்கா சீனாவிற்கு தாரை வார்க்குமா?
தாய்வான் பாராளமன்றம் |
சீனப் பெருநாட்டிற்கு எதிராக தாய்வானின் இருப்பிற்கு அமெரிக்கா பேருதவி செய்து வருகிறது. அமெரிக்கா தாய்வானுக்குச் செய்து வரும் ஆயுத விற்பனைகளை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனாலும் அறுபது ஆண்டுகளாக சீனா தாயவானைத் தன்னுடன் இணைப்பதை அமெரிக்கா தடுத்து வருகிறது. 1995இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தாய்வான் மீதான சீனப் படையெடுப்பைத் தடுப்பதற்கு அமெரிக்காவின் இரு பெரும் கடற்படைப் பிரிவுகளை தாய்வானுக்கு அனுப்பினார். ஆனால் இன்று சீனா படைத்துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. 2006இல் அமெரிக்கா ஆறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை தாய்வானிற்கு விற்றதால் ஆத்திரமடைந்த சீனா அமெரிக்காவுடனா தனது படைத்துறைத் தொடர்புகளைத் துண்டித்தது. தாய்வானில் அமெரிக்கா இரகசியமாகப் பல நவீன சக்தி மிக்க ஏவுகணைகளை வைத்திருக்கிறது என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.
தாய்வானின் முக்கியத்துவம்.
சீனாவின் மூன்று புறம் அதன் எல்லைகள் பல நாடுகளுடனான தரைப் பகுதியே. அதன் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆழமில்லாத கடலால் ஆனது. சீனா தனது நீர் முழ்கி கப்பல் படைகளை விருத்தி செய்ய ஆழ்கடல்களைச் சூழக் கொண்ட தாய்வான் அவசியம் தேவை. ஜப்பானின் கடல் வழிப்பாதைகள் தங்கு தடையின்றி நடப்பதற்கு சுதந்திரமான தாய்வான் உதவியாக இருக்கிறது. தாய்வான் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் சீனாவால் ஜப்பானின் இலகுவான கடற்பாதைக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியும். இலங்கையிலும் ஆழ்கடல் கரையைக் கொண்ட அம்பாந்தோட்டையை தனது தளமாகச் சீனா தெரிந்து எடுத்தது தன் எதிர்கால நீர்மூழ்கிக் கப்பல்களைக் கருத்தில் கொண்டே. அண்மையில் சீன கடற்படைக் கப்பல்கள் கொழும்பு வந்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள கடற்பகுதியின் ஆழ பரிமாணங்களை மதிப்பீடு செய்தமை அப்பகுதிக்கு ஏற்ப தனது நீர் மூழ்கிக் கப்பல்களை வடிவமைப்பதற்காக இருக்கலாம். ஆபிரிக்க நாடுகளின் கனிம வளங்களும் மத்திய கிழக்கின் எரிபொருள்களும் சீனாவிற்கு தங்கு தடையின்றி கிடைக்க சீனாவிற்கு ஒரு பலமிக்க கடற்படை அவசியம். தாய்வானில் சீனா ஒரு கடற்படைத் தளம் இருந்தால் அது பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் ஆதிக்கத்தை உறுதி செய்யும்.
எத்தைனை காலம் அமெரிக்காவால் தாய்வானைக் காப்பாற்ற முடியும்.
நலிவடையும் அமெரிக்கப் பொருளாதாரமும் வலிவடையும் சீனப் பொருளாதாரமும் சீனாவின் கடன் இன்றி அமெரிக்காவால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அண்மைக் காலமாக தாய்வானில் படைத்துறைச் சமநிலை சீனாவிற்குச் சாதகமாகி வருகிறது. இதை ஈடு செய்ய தாய்வான் அமெரிக்காவிடம் இருந்து நவீன போர் விமானங்களை வாங்க முற்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அமெரிக்கா புதிய போர் விமாங்களை விற்காமல் ஏற்கனவே தாய்வானிடம் இருக்கும் அமெரிக்கத் தயாரிப்புப் போர் விமானங்களை தரமுயர்த்த ஒப்புக் கொண்டது. அதுவும் சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது. ஆனால் இந்த விமானப் படைத் தரமுயர்த்தல் சீனாவிற்கு சாதகமாகச் சரிந்து கொண்டிருக்கும் படைத்துறைச் சமநிலை சீர் செய்யப் போதாது என்று படைத்துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சீனா தனது படைத்துறை வலிமையை உள்ளுர்ப் பார்வையாளர்களுக்கும் உலக அரங்கிற்கும் காட்ட வேண்டிய ஒரு நீர்ப்பந்தம் உள்ளது. சீனா தொடர்ந்து தாய்வானை தன்னுடன் இணைப்பதற்கான சகல முயற்ச்சிகளையும் மேற் கொண்டு வருகிறது. அமெரிக்காவில் சீனாவிற்கு அமெரிக்க சீனாவிற்கு விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
Wednesday, 21 September 2011
கவிதை: பெண்ணே உன்கண்ணும் ஒரு ஐ-ஃபோனடி
ஓரப் பார்வையால் என்னை ஒளிப்பதிவு செய்வதால்
அழைப்பு விடுப்பதால் குறுந்தகவல்கள் அனுப்புவதால்
காமச் செயலிகள் பல கொண்டிருத்தலால்
பெண்ணே உன்கண்ணும் ஒரு ஐ-போனடி
தொடர்பு தேடித் துடிப்பதால்
சைகை நாடித் தவிப்பதால்
தகவற் பரிமாற்றம் செய்வாதால்
காதலும் கைப்பேசி போலே.
நாமே காதல் வெள்ளம்
நீரும் நீரும் போல் எம்
உள்ளங்கள் இணைந்தன
காற்றும் காற்றும் போல் எம்
எண்ணங்கள் இணைந்தன
பைரவியில்
ஆனந்தம் இணைந்தால்
சிருங்கார ரசம் பேசும்
சின்ன விழிகள்
காந்தமாகும்
துடிக்கும் விரல்கள்
தவிக்கும் உதடுகள்
தொடக்கத் துணிவிருந்தால்
நிறைவேற்றும் வல்லமை
தானே வரும்.
கடவுளாரின்
தவறான படைப்புக்களை
திருத்த முயன்று
தோல்வி கண்டன
மதங்கள்
Tuesday, 20 September 2011
கணனிகளால் உலக அரசியல் பொருளாதார நிகழ்வுகளை எதிர்வு கூற வைக்கும் முயற்ச்சி
அரபு நாடுகளில் நிகழ்ந்த மல்லிகைப் புரட்சியும் அதனால் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை ஹஸ்னி முபராக் பதவியில் இருந்து விரட்டப்பட்டதும் அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ எதிர்பார்த்திருக்காத ஒன்று. இதை முன் கூட்டியே சிஐஏயால் அறிந்து கொள்ள முடியாமல் போனதை அமெரிக்க அரச தரப்பு அதிருப்தி அடைந்தது. புரட்சிக்கு முன்னர் எகிப்தில் இருந்து வந்த செய்திகளை மீளாய்வு செய்து அரசியலறிவாளர்கள் எகிப்தில் ஏற்பட்ட புரட்சி எதிர்வு கூறக்கூடியதாகவே இருந்தது என்கின்றனர்.
செய்திச் சுரங்கமிடல் - News Mining
டுவிட்டரில் பதியப்படும் வாக்கியங்களில் இருக்கும் உணர்வுகளுக்கும் பங்குச் சந்தை விலை மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பதை University of Illinois's Institute for Computing in the Humanities, Arts, and Social Scienceஐச் சேர்ந்த Kalev Leetaru என்பவர் கண்டறிந்துள்ளார். Leetaru கடந்த முப்பது வருடங்களாக வெளிவந்த நூறு மில்லியன் செய்திக் குறிப்புக்களை the University of Tennessee's "Nautilus,"என்னும் supercomputerகளுக்கு தரவேற்றம் செய்து அவற்றைப் பகுப்பாய்வு செய்து அவற்றிடை உள்ள தொடர்புகளை ஆயுவு செய்தார். இந்தப் பகுப்பாய்வை செய்திச் சுரங்கமிடல் என்று அழைக்கப்படுகிறது. எகிப்தில் கடந்த முப்பது வருடங்களாக வந்த செய்திகளை ஆய்வு செய்ததில் 2011 ஜனவரியில் வந்த செயதிகள் என்றும் இல்லாத அளவு எதிர் மறையானதாக இருந்தமை அறியப்பட்டுள்ளது.
மெய்ப்பாட்டுணர்வுச் சுரங்கமிடல் - Sentiment Mining
அண்மைக்காலங்களாக பல வர்த்தக நிறுவனங்கள் மெய்ப்பாட்டுணர்வுச் சுரங்கமிடல் - Sentiment Mining என்னும் மென்பொருள் மூலம் செய்திகளை ஆய்வு செய்து தமது திட்டங்களை வகுக்கின்றன.
பின் லாடனின் இருப்பிடம் இலகுவாக அறிந்திருக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக பின் லாடன் பற்றி வந்த செய்திகளை பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது பின் லாடன் வடக்குப் பாக்கிஸ்தானின் ஒரு 200மைல் சுற்றளவுக்குள் இருந்ததை அறியக்கூடியதாக இருக்கிறதாம். சிஐஏ பல மில்லியன்கள் செலவில் பின் லாடனைக் கண்டு பிடிக்க 10 ஆண்டுகள் எடுத்தன.
Political scientist Thomas Chadefaux of the Swiss Federal Institute of Technology (ETH) in Zurich இந்த ஆய்வுகளும் முடிபுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்கிறார். Kalev Leetaru செய்திச் சுரங்கமிடல், தரவுச் சுரங்கமிடல் போன்றவை மூலம் உடனுக்குடன் நிகழ்வுகளை எதிர்வு கூறுவதற்குரிய மென்பொருள்களை உருவாக்குவதற்கு இன்னும் நீண்ட கால ஆரய்ச்சி தேவை என்கிறார்.

Monday, 19 September 2011
நகைச்சுவை: விசித்திரமான காது குத்தல் படங்கள். தமிழனுக்கு குத்தியது மாதிரி...
காது குத்துதல் தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒரு அம்சம். முதலில் பெண்பிள்ளைக்கு காது குத்துதல் ஒரு விழாவாகவே கொண்டாடப்படும். உலகெங்கும் இப்போது காதில் மட்டுமல்ல உடலின் பல வேறு இடங்களில் குத்திக் கொள்கின்றனர்.
1954-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவும் இலங்கைப் பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவலையும் ஒரு ஒப்பந்தம் போட்டனர். அதன் பின்னணி இலங்கை இந்தியாவின் வேண்டுதலின் பேரில் கூட்டுச் சேரா நாடுகளில் இணையும். இந்தியா இலங்கை மலையகத் தோட்டங்களில் பணிபுரியும் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தமிழர் வரலாற்றில் ஒரு காதுகுத்தல்.
1964இல் இந்தியா இலங்கையுடன் சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் சர்வதேச நியமங்களுக்கு எதிராக கைச்சாத்திட்டு 150,000 இலங்கையில் உள்ளமலை நாட்டு தமிழ் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியது. மலைநாட்டுத் தொழிலாளர்களுக்கு இப்படி துரோகம் செய்தது இந்தியா. இதுவும் தமிழர் வரலாற்றில் பெரும் காது குத்து.
1980களின் ஆரம்பப்பகுதியில் இலங்கை வாழ் தமிழர்களிடை பல ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவற்றை சிங்களவர்களுடன் மோதவிட்டதுடன் அக்குழுக்களை ரோ அமைப்பின் சதி மூலம் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டது. இது தமிழ்த் தேசிய போராட்டத்தை பலவீனப் படுத்தவும் இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டுவடவும் செய்த சதி. இதுவும் தமிழர்களுக்கு ஒரு காதுகுத்து.
ராஜீவ் காந்தி - ஜே ஆர் ஜயவர்த்தன 1987இல் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கவென்று ராஜிவ் இலங்கைக்கு தனது கொலை வெறிப் படையை அனுப்பி தமிழர்களைக் கொன்று குவித்தார். இது தமிழர்களுக்கு இன்னும் ஒரு காது குத்து.
இலங்கையில் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது கருணாநிதி 4 மணி நேர உண்ணாவிரதத்தால் போரை முடித்ததாகப் பொய் கூறி தமிழர் சரித்திரத்தில் தனது பெயரைச் சாக்கடைக்குள் போட்டுக் கொண்டார். கருணாநிதியின் காது குத்து மன்னிக்க முடியாத காது குத்து.
இனி தமிழர்களின் காதில் குத்த இடமில்லை.

Sunday, 18 September 2011
ஆலயங்களில் ஆட்டுப்பலியும் நாட்டில் மனிதப் பலியும்
நான் சைவம் என்று சொன்னால் அதற்கு இலங்கையில் இரண்டு கருத்துக்கள் உண்டு. ஒன்று நான் சைவ சமயத்தைச் சேர்ந்தவன். மற்றது நான் சைவ சாப்பாடு சாப்பிடுபவன். சைவ சமயமும் புலால் உண்ணாமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. ஆனாலும் இலங்கையில் சில சைவக்கோவில்களில் மிருங்களைப் பலியிடுதல் நீண்டகாலமாக நடந்து வருகிறது.
சைவ ஆலயங்களில் மிருகபலியின் பின்னணி
மனிதன் ஆதிகாலத்தில் இருந்தே மிருகங்களை உண்டு வந்தான். அவனது நாகரீக வளர்ச்சியின் முதல் கட்டம் விவசாயம். மிருகங்களை வேட்டையாடி உண்பது அவனுக்கு விவசாயத்திலும் பார்க்க இலகுவானது. இயற்கைச் சமநிலையைப் பேண மிருகங்களை உண்ணுதலைத் தவிர்க்கும் படி அவன் சமயங்களால் வலியுறுத்தப் பட்டான். இதனால்தான் சைவ சாப்பாடு என்பது புலால் உண்ணாமையை குறித்தது. அதாவது சைவ சமய விதிகளுக்கு ஏற்ப சாப்பிடுவது. ஆனாலும் மனிதனுக்கு புலால உண்ணும் வேட்கையை தீர்பதற்கு சைவ சமயத்தில் சிலர் ஒரு வழி கண்டனர். அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் ஆடு கோழி போன்றவற்றை கடவுளுக்கான நேர்த்திக் கடனாக வளர்த்து ஆண்டில் சில தடவைகள் அவற்றை கோவிலில் பலியிட்டு உற்றாருடன் பகிர்ந்து உண்ணுவது.
ராஜபக்சவின் அடக்க முடியாத அடி-தடி அமைச்சர்.
ஆலயத்தில் கால்நடைகளைப் பலியிடுதலைப் பல கோவில்கள் 1960களின் பிற்பகுதிகளில் இருந்து கைவிட்டுவிட்டன. சில கோவில்களில் இன்றும் அது நடந்து வருகிறது. அதில் ஒன்று சிலாபத்தில் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளி அம்மன் கோவில். இக்கோவிலை தமிழர்களுடன் பௌத்த சிங்களவர்களும் வழிபடுபவர்கள். அங்கு இந்த ஆண்டு நடைபெறவிருந்த பலி பூசையை மஹிந்த ராஜபக்சவின் அடி-தடி அமைச்சர் தனது அடியாட்களுடன் சென்று தடுத்துவிட்டார். இது இலங்கையில் ஒரு சட்ட விரோத நடவடிக்கை. முன்னேஸ்வரத்தில் மிருகங்களைப் பலியிடுதல் தொடர்பான வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
உயிர்க் கொலையும் "இலங்கை பௌத்தமும்"
அஸ்கிரிய பீடாதிபதி மிருகங்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அமைச்சர் எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா போன்ற நபர்கள் இந்த நாட்டுக்கு தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார் .மிருக வதை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமையினால் கௌதம புத்தர் பாதம் பதிந்த நாட்டில் தொடர்ச்சியாக இவ்வாறான மிருக வதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கை பாராட்டுக்குரியது எனவும் அஸ்கிரிய பீடாதிபதி தெரிவித்துள்ளார். கௌதம புத்தர் பாதம் பதிந்த நாட்டில் தொடர்ச்சியாக தமிழர்கள் கொல்லப்படுவது
1956இல் கொதிதாரில் குழந்தைகளை ஆலயப் பூசாரிகளைப் போட்டுக் கொன்றதில் இருந்து நடைபெறுகிறது. இது வரை இலங்கையில் இதைத் தடுக்க எந்த பௌத்தரும் போதிக்கவில்லை என்பது மட்டுமல்ல பௌத்தத்தை பாதுகாக்க தமிழரைக் கொல்வது புண்ணியமான செயல் என்றும் போதிக்கப் பட்டு வருகிறது. 1983இல் கடைகளில் தமிழன் இறைச்சி விற்கப்படும் என்று எழுதிப் பலகை மாட்டியதையும் நாம் அறிவோம். வன்னி இறுதிப் போரில் எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டனர் எத்தனை பேர் உயிருடன் புதைக்கப்பட்டனர் சரணடைய வந்த எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதையும் நாம் அறிவோம். இலங்கையில் கடலிலும் நிலத்திலும் எத்தனை இலட்சம் உயிர்கள் ஒவ்வொரு நாளும் உணவுக்காகப் பலியிடப்படுகின்றன என்பதையும் நாம் அறிவோம். இலங்கையில் எத்தனை சைவ ஆலயங்கள் திட்டமிட்டு பௌத்த சிங்களப் படைகளால் அழிக்கப்பட்டன என்பதையும் நாம் அறிவோம். முன்னேஸ்வரம் நிகழ்வு தமிழர்கள் மீதான அடைக்கு முறையின் ஒரு அம்சமே. உயிர்கள் மீதுள்ள கருணை அல்ல.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...