சீனாவுடனும் ஐக்கிய அமெரிக்காவுடனும் தந்திரமாக நட்பைப் பேணிவரும் பாக்கிஸ்த்தான் ஆசியாவில் படைவலிமை மிக்க நாடாக மாறிவருகிறது. பக்கிஸ்த்தானின் அதிகரித்து வரும் படை வலிமையும் அரசியல் தேறலும் ஆசியப் பிராந்தியத்தின் படைச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் ஈராகினதும் லிபியாவினதும் அணுக் குண்டு உற்பத்தியிலும் தற்போது ஈரானினதும் வட கொரியாவினது அணுக்குண்டு உற்பத்தியிலும் அதிக அக்கறை செலுத்திய வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் பாக்கிஸ்த்தானிய அரசு இசுலாமியத் தீவிரவாதிகள் கைக்குப் போக விடாமல் பார்த்துக் கொள்கின்றன. பாக்கிஸ்த்தனிடமிருந்துதான் ஈரானுக்கும் வட கொரியாவிற்கும் அணுக் குண்டு உற்பத்தி தொழில்நுட்பம் பரவியது.
1,500களுக்கு கூடிய வீச்சுள்ள ஏவுகணைகளைக் கொண்டுள்ள பாக்கிஸ்த்தானின் அணுக் குண்டுகள் பிராந்திய படைச் சமநிலையில் பெரும் பங்கு வகிக்கின்றன. அமெரிக்க ஆட்சேபனையையும் மீறி சீனாவும் பாக்கிஸ்த்தானும் 2013 பெப்ரவரி மாதம் மிகவும் இரகசியமாகச் செய்து கொண்ட அணு மின் உற்பத்தி உடன்பாடு பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டு உற்பத்தியையும் மேம்படுத்த உதவும்.
சீனாவின் படைபல அதிகரிப்புக்கு ஏற்ப இந்தியா தனது படைபலத்தைப் பெருக்க பாக்கிஸ்த்தானும் இந்தியாவின் படைபலத்திற்கு ஈடாக தனது பலத்தைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. இந்தியா அணுக்குண்டு உற்பத்தி செய்தால் பாக்கிஸ்த்தானியர் புல்லைத் தின்றாவது அணுக்குண்டை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் பாக்கிஸ்த்தானிய முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத பாக்கிஸ்த்தான் அதன் படை வலிமைக்கு ஈடுகொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.
2013 பெப்ரவரி மாதம் தனது Shaheen-1 (Falcon-1) HATF-IV/Vengeance-IV short-range ballistic missile என்னும் எறியியல் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்த பாக்கிஸ்த்தான் அடுத்த கட்டமாக நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து அணுக் குண்டுகளை ஏவும் திறனைப் பெற முயல்கிறது. இந்திய படைத்துறை வல்லுனர்களை இலகுவாகக் குழப்ப பாக்கிஸ்த்தானின் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவும் அணுக்குண்டுகளால் முடியும். பாக்கிஸ்த்தானியப் படைத்துறை நிபுணர்கள் நீர்மூழ்கியில் இருந்து ஏவக்கூடிய அணுக்குண்டுகள் இந்தியாவுடனான தமது படைத்துறைச் சமநிலையை தமக்குச் சாதகமாகத் திருப்பும் என நம்புகின்றனர். பாக்கிஸ்த்தானிய நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவும் அணுக்குண்டுகளை முழுமையாக இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் நம்புகின்றனர்.
Saturday, 1 June 2013
Thursday, 30 May 2013
சிரியாமீது இஸ்ரேல் பெரும் தாக்குதல் தொடுக்குமா?
சிரியாவிற்கு இரசியா அனுப்பியுள்ள அல்லது அனுப்பவுள்ள S-300 வான் பாதுகாப்பு ஏவுகணை முறைமை (S-300 AIR DEFENCE MISSILE SYSTEM) சிரிய உள்நாட்டுப் போரில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த S-300 AIR DEFENCE MISSILE SYSTEM எப்படி வேலை செய்கிறது?
S-300 இரசியாவால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அதில் பல மாற்றங்களும் மேம்படுத்துதலும் செய்யப்பட்டன. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென வித்தியாசமான S-300PMU-1 உருவாக்கப்பட்டது. இது மூன்றாவது தலைமுறை ஏவுகணை முறைமையாகும். இது தாழப்பறக்கும் விமானங்களையும் சீர்வேக ஏவுகணைகளையும் (cruise missiles) கண்டறியவும், செல்லும் வழியறிவும், தாக்கி அழிக்கவும் வல்லன. இது பல எண்ணிக்கையான தாழப்பறக்கும் விமானங்களையும் சீர்வேக ஏவுகணைகளையும் இனம் கண்டு அழிக்க வல்லன. இது அமெரிக்காவின் patriot missilesகளை ஒத்தன. அமெரிக்காவின் patriot missiles பல போர் முனைகளில் வெற்றீகரமாகப் பரீட்சிக்கப்பட்டன. ஆனால் இரசியாவின் S-300PMU-1 இன்னும் போர் முனையில் பரீட்சிக்கப்படவில்லை. ஏவுகணை எதிர்ப்பு முறைமை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டவை: 1. கதுவி(Radar) எனப்படும் உணரிகள், 2. கட்டளை நிலையம், 3. ஏவுகணைகள். 1. கதுவி(Radar) எதிரியின் விமானங்களையோ அல்லது ஏவுகணைகளையோ இனம் கண்டு அவற்றின் வேகம் பாதை ஆகியவற்றை கணக்கிட்டு கட்டளை நிலையத்திற்கு அத்தகவல்களை அனுப்பும். கட்டளை நிலையத்தில் இருந்து ஏவுகணைகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு அவை ஏவப்பட்டு எதிரி விமானங்களையோ அல்லது ஏவுகணைகளையோ தாக்கப்படும். கதுவி(Radar)கள் ஒரு கனரக வாகனத்தில் இருக்கும், கட்டளைப் பணியகம் ஒரு கனரக வாகனத்தில் இருக்கும், ஏவுகணைகள் வேறு ஒரு வாகனத்தில் இருக்கும். இந்த கனரக வாகனங்கள் எந்த நிலத்திலும் எந்தக் கால நிலையிலும் சிரமமின்றி நகர வல்லன.
அமெரிக்காவின் patriot missiles:
S-300PMU-1 missiles என்னும் ஏவுகணை முறைமை சிரியாவில் செயற்படத் தொடங்கினால் அது இஸ்ரேலை பலத்த சங்கடங்களுக்கு உள்ளாக்கும். முதலாவதாக சிரிய ஆட்சியாளர்க்ளின் படைக்கலன்கள் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் கைகளுக்கு போய்ச் சேர்வதை இஸ்ரேலால் தடுக்க முடியாது. இஸ்ரேல் ஏற்கனவே மூன்று தடவைகள் சிரியாமீது விமானத் தாக்குதல்கள் நடாத்தி ஹிஸ்புல்லாவிற்கான படைக்கலன்கள் பரிமாறப்படுவதை தடுத்தது. சிரியாவிடம் S-300PMU-1 missiles இருந்தால் அப்படி இஸ்ரேலால் தாக்குதல் நடத்த முடியாது.
S-300PMU-1 missiles இரசியாவிடமிருந்து தனக்கு வந்துவிட்டதாக சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தெரிவிக்கிறார். ஆனால் அது உண்மையல்ல என இஸ்ரேலிய அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. S-300PMU-1 missiles முழுமையாக சிரியாவில் செயற்படத் தொடங்கினால் இஸ்ரேலிய விமானங்கள் இஸ்ரேலில் கூடப் பறக்க முடியாத நிலை ஏற்படலாம். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ S-300PMU-1 missilesஇஸ்ரேலை ஒரு விமானப்பறப்பற்ற பிரதேசமாக மாற்றிவுடும் எனவே இஸ்ரேல் அது செயற்படாமல் இருக்க ஆவன செய்யும் எனச் சூழுரைத்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியாவில் லிபியாவில் ஏற்படுத்தியதுபோல ஒரு விமானப்பறப்பற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய பெண்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதைக் கருத்தில் கொண்டே இரசியா S-300PMU-1 missiles சிரியாவிற்கு அனுப்பியுள்ளதாகக் கருதப்ப்டுகிறது. ஈரானுக்கும் இரசியா செய்ய இருந்த S-300PMU-1 missiles விற்பனை அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஆட்சேபத்தினால் நிறுத்தப்பட்டது. ஆனால் சிரியாவிற்கான விற்பனையில் இது நடக்க வில்லை. அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி நிலைப்பது தொடர்பாக இரசியாவின் உறுதியான நிலைப்பாட்டை இது காட்டுகிறது.
S-300PMU-1 missilesசிரியாவிற்கு வந்தாலும் அவை பொருத்தப்பட்டு முழுமையாக்கப் பட சில வாரங்கள் எடுக்கும். அவற்றை இயக்கும் பயிற்ச்சியை சிரியப் படையினர் பெறச் சில மாதங்கள் எடுக்கும். அதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவில் பெரும் தாக்குதல் நடாத்தி இரசியாவில் இருந்து வந்த S-300PMU-1 missilesகளை முற்றாக அழிக்கலாம்.
S-300 இரசியாவால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அதில் பல மாற்றங்களும் மேம்படுத்துதலும் செய்யப்பட்டன. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென வித்தியாசமான S-300PMU-1 உருவாக்கப்பட்டது. இது மூன்றாவது தலைமுறை ஏவுகணை முறைமையாகும். இது தாழப்பறக்கும் விமானங்களையும் சீர்வேக ஏவுகணைகளையும் (cruise missiles) கண்டறியவும், செல்லும் வழியறிவும், தாக்கி அழிக்கவும் வல்லன. இது பல எண்ணிக்கையான தாழப்பறக்கும் விமானங்களையும் சீர்வேக ஏவுகணைகளையும் இனம் கண்டு அழிக்க வல்லன. இது அமெரிக்காவின் patriot missilesகளை ஒத்தன. அமெரிக்காவின் patriot missiles பல போர் முனைகளில் வெற்றீகரமாகப் பரீட்சிக்கப்பட்டன. ஆனால் இரசியாவின் S-300PMU-1 இன்னும் போர் முனையில் பரீட்சிக்கப்படவில்லை. ஏவுகணை எதிர்ப்பு முறைமை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டவை: 1. கதுவி(Radar) எனப்படும் உணரிகள், 2. கட்டளை நிலையம், 3. ஏவுகணைகள். 1. கதுவி(Radar) எதிரியின் விமானங்களையோ அல்லது ஏவுகணைகளையோ இனம் கண்டு அவற்றின் வேகம் பாதை ஆகியவற்றை கணக்கிட்டு கட்டளை நிலையத்திற்கு அத்தகவல்களை அனுப்பும். கட்டளை நிலையத்தில் இருந்து ஏவுகணைகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு அவை ஏவப்பட்டு எதிரி விமானங்களையோ அல்லது ஏவுகணைகளையோ தாக்கப்படும். கதுவி(Radar)கள் ஒரு கனரக வாகனத்தில் இருக்கும், கட்டளைப் பணியகம் ஒரு கனரக வாகனத்தில் இருக்கும், ஏவுகணைகள் வேறு ஒரு வாகனத்தில் இருக்கும். இந்த கனரக வாகனங்கள் எந்த நிலத்திலும் எந்தக் கால நிலையிலும் சிரமமின்றி நகர வல்லன.
அமெரிக்காவின் patriot missiles:
படத்தில் சொடுக்கினால் பெரிதாகத் தெரியும். |
S-300PMU-1 missiles இரசியாவிடமிருந்து தனக்கு வந்துவிட்டதாக சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தெரிவிக்கிறார். ஆனால் அது உண்மையல்ல என இஸ்ரேலிய அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. S-300PMU-1 missiles முழுமையாக சிரியாவில் செயற்படத் தொடங்கினால் இஸ்ரேலிய விமானங்கள் இஸ்ரேலில் கூடப் பறக்க முடியாத நிலை ஏற்படலாம். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ S-300PMU-1 missilesஇஸ்ரேலை ஒரு விமானப்பறப்பற்ற பிரதேசமாக மாற்றிவுடும் எனவே இஸ்ரேல் அது செயற்படாமல் இருக்க ஆவன செய்யும் எனச் சூழுரைத்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியாவில் லிபியாவில் ஏற்படுத்தியதுபோல ஒரு விமானப்பறப்பற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய பெண்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதைக் கருத்தில் கொண்டே இரசியா S-300PMU-1 missiles சிரியாவிற்கு அனுப்பியுள்ளதாகக் கருதப்ப்டுகிறது. ஈரானுக்கும் இரசியா செய்ய இருந்த S-300PMU-1 missiles விற்பனை அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஆட்சேபத்தினால் நிறுத்தப்பட்டது. ஆனால் சிரியாவிற்கான விற்பனையில் இது நடக்க வில்லை. அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி நிலைப்பது தொடர்பாக இரசியாவின் உறுதியான நிலைப்பாட்டை இது காட்டுகிறது.
S-300PMU-1 missilesசிரியாவிற்கு வந்தாலும் அவை பொருத்தப்பட்டு முழுமையாக்கப் பட சில வாரங்கள் எடுக்கும். அவற்றை இயக்கும் பயிற்ச்சியை சிரியப் படையினர் பெறச் சில மாதங்கள் எடுக்கும். அதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவில் பெரும் தாக்குதல் நடாத்தி இரசியாவில் இருந்து வந்த S-300PMU-1 missilesகளை முற்றாக அழிக்கலாம்.
அமெரிக்காவின் புதிய இணையவெளிப் போர் வியூகம்
நாடுகளிடையான இணையவெளிப்( cyber warfare)போரில் சீனா மற்ற நாடுகளிலும் பார்க்க முன்னேறிவிட்டது என்ற செய்தி பரவலாக அடிபடும் சூழலில் அமெரிக்கா தனது இணையவெளிப் படைபலத்தை மேம் படுத்தும் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் நிபுணர்களையும் ஹொலிவூட்டில் அசைப்படம்(animation) உருவாக்கும் நிபுணர்களையும் இணைத்து ஒரு இணையவெளிப்படையை அமெரிக்கா உருவாக்கவுள்ளது.
அண்மைக்காலத்தில் சீனா பல அமெரிக்க படைத்துறை இரகசியங்களைத் திருடியது என்ற குற்றச்சாட்டு செய்திகளாக வந்தன. இதுபற்றி இந்த இணைஇபில் அறியலாம்:
அமெரிக்க இணையவெளியில் தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுவதன் மூலம் அமெரிக்காவிற்கு ஆண்டொன்றிற்கு 300 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இணையவெளி ஊடுருவல்களில் எழுபது விழுக்காடுகள் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என்கிறது அமெரிக்கா. ஒஸ்ரேலியாவின் உளவுத் துறையின் கட்டிடம் தொடர்பான தகவல்கள் சீனாவால் திருடப்பட்டன எனப்படுகிறது.
ஒரு தனிப்பட்டவரில் இருந்து ஒரு நாட்டுப்படைத்துறை உடபட பலதரப்பட்டவர்களாலும் ஒரு நாட்டின் பாதுகாப்புத் துறையினதோ அல்லது உள்கட்டமைப்பையோ அத்தியாவசிய வழங்கு துறையையோ அவற்றின் கணனிகளை ஊடுருவதின் (hacking) மூலம் செயலிழக்கச் செய்யலாம். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் மேம்பட்ட திட்ட ஆய்விற்கான முகவரகம் (Defense Advanced Research Projects Agency) (DARPA) இணையவெளிப்போரை பெரிய அளவின் அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. இதன் இயக்குனராக ஆரத்தி பிரபாகர் செயற்படுகிறார்.
அமெரிக்கா தனது புதிய இணையவெளிப்படைத் திட்டத்திற்கு Plan X எனப் பெயரிட்டுள்ளது. இதன் படி இணையவெளிப் போர் செயற்பாடுகள் ஓர் ஐபோனில் Angry Bird விளையாடுவதுபோல இலகுவாக இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. சின முன்மாதிரிகள் Google Glass-esque wearable computers போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் படைபலத்தை ஆய்வு செய்த சீன நிபுணர்கள் அது செய்மதித் தொலைத் தொடர்பாடலிலும் கணனிகளிலும் பெரிதும் தங்கியிருப்பதை அறிந்து கொண்டனர். தரையில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் செய்மதிகளைத் தாக்கி அழிக்கும் முறைமைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனா வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்த்தது. சீனா பின்னர் அமெரிக்காவின் பல இணையத் தொகுதிகளை வெற்றீகரமாக ஊடுருவியது. பல தொழில்நுட்பத் தகவல்களையும் சீனா பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சீனா, இரசியா, வட கொரியா ஆகிய நாடுகள் இணையவெளிப்போரில் முன்னேறியதைத் தொடர்ந்து அமெரிக்கா இணையவெளிப் போருக்கான தனது நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் தாம் இணையவெளியை படைத்துறை மயப்படுத்தவில்லை. தமது நாட்டைப் பாதுகாக்கக் கூடியவகையில் தமது இணையவெளித் தாக்குதல் திறனை அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்கா காத்திருக்கும் கணனிக் கிருமிகளை (Sleeper cell viruses) பல நாட்டு கணனித் தொகுதிகளில் புகுத்தி வைத்திருப்பதாகவும் அந்த நாடுகளுடன் போர் நடக்கும் போது அவை செயற்படுத்தப் பட்டு அந்த நாட்டின் கணனித் தொகுதிகளை செயலிழக்கச் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
2016-ம் ஆண்டு அமெரிக்கா நூறு குழுக்களை இணைய வெளிப்போரில் ஈடுபடுத்தும் எனச் சொல்லப்படுகிறது. இவை மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று தேசத்தைப் பாதுகாப்பது, இரண்டாவது மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடாத்துவது, மூன்றாவது நாட்டில் முக்கிய வழங்கல்களைச் செய்யும் உட்கட்டமைப்புக்களைப் பாதுகாப்பது.
இணையத் தொழிநுட்பம் வேகமாக மாறிக் கொண்டிருப்பதால் இதில் வல்லரசு நாடுகளிடை பெரும் போட்டியை இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.
Wednesday, 29 May 2013
அமெரிக்கப் படைத்துறை இரகசியங்களைக் கொள்ளையடித்தது சீனா!
அமெரிக்காவின் மிக உச்ச படைத்துறை இரகசியங்களை சீனா இணைய வெளியூடாக திருடியுள்ளது( cyber-theft). இது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவையும் சீனாவிற்கு பெரும் முன்னேற்றத்தையும் கொடுக்க வல்லதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
திருடுவது மலிவானது
அமெரிக்கா தாயாரிக்கும் புதிய படைத்துறை உபகரணங்கள் ஆராய்ச்சிக்களுக்காகப் பெரும் செலவு செய்து உருவாக்கப்படுகின்றன. அவை மிகவும் புதியரக தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும். சீனா இத்துறையில் பல ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது. இந்த இடைவெளியை அமெரிக்கத் தொழில்நுட்பங்களைத் திருடுவதன் மூலம் விரைவில் நிரப்ப சீனாவால் முடியும். சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.
பெஞ்சமின் பிஷப் ஊழல்
பெஞமின் பிஷப் அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியத்தில் எதிரிகளைக் கையாளும் முறைமை தொடர்பான ஒப்பந்த வேலைகளைச் செய்தவர். 59வயதான பெஞமின் பிஷப் 2011இல் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் நடந்த ஒரு பாதுகாப்புத்துறை தொடர்பான மாநாட்டில் 27வயதான சீன மாணவியைச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் காதலர்களானார்கள். சீன மாணவியின் பெயர் இதுவரை வெளிவிடப்படவில்லை பெஞமின் பிஷப் எதிராக நடக்கும் வழக்கில் அவர் நபர் - 1 எனவே குறிப்பிடப்பட்டுள்ளார். சீன மாணவி மாணவ அனுமதிப்பத்திரத்தில் அமெரிக்காவில் வசித்தவர். பெஞ்சமின் பிஷப் அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தில் lieutenant colonel in the U.S. Army Reserve ஆகப் பணிபுரிந்தவர். பெஞ்சமின் பிஷப்பின் வீட்டைச் சோதனையிட்ட போது அமெரிக்கப் படைத்துறையின் பல இரகசிய தகவல்களடங்கிய பத்திரங்களை கண்டெடுத்தனர்.
உச்ச பாதுகாப்புத் தகவல்கள்
அண்மையில் அமெரிக்க கணனிகளை ஊடுருவி சீனா அமெரிக்காவின் 25இற்கு மேற்பட்ட படைத்துறைப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை திருடியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இது எப்போது நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் புதுத்தர Patriot missile system, அமெரிக்கக் கடற்படையின் Aegis ballistic missile defense systems, F/A-18 போர் விமானம், the V-22 Osprey என்னும் விமானம் தாங்கிக் கப்பல்களில் இலகுவாக தரையிறங்கும் விமானங்கள், the Black Hawk helicopter and the F-35 இணைத் தாக்குதல் போர் விமானங்கள் போன்ற அமெரிக்காவின் முக்கிய படைக்கலன்கள் தொடர்பான இரகசியங்கள் திருடப்பட்டுள்ளன. சீனா இந்தக் குற்றச் சாட்டுக்களை ஆதாரமற்றவை என மறுத்துள்ளது.
திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுபவை:

Black Hawk helicopter |
Tuesday, 28 May 2013
தள்ளாடும் ஐரோப்பா விழுமா?
நான்கு நூற்றாண்டுகள் உலகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பா, பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை உலகிற்கு கொடுத்த ஐரோப்பா, மக்களாட்சி உட்படப் பல நாகரீக வளர்ச்சிகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஐரோப்பா இப்போது பொருளாதார ரீதியில் தள்ளாடுவது உண்மை. அது வீழ்ச்சியடைய சீனாவும் இந்தியாவும் எழுச்சியடைந்து உலகத்தை ஆட்டிப்படைக்குமா?
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது
ஐரோப்பிய நாணயக்கட்டமைப்பு மருத்துவ மனையில் கிரேக்கமும் ஸ்பெயினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தன. யூரோ நாணயத்தால் பாதிக்கப்ப்பட்ட மற்ற நாடுகளான அயர்லாந்து, போர்த்துகேயம், இத்தாலி ஆகிய நாடுகள் பூரண சுகமடைய முன்னரே மருத்துவ மனையில் இருந்து விலகி விட்டன. கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இணையும் போது தனது பொருளாதார நிலை பற்றி திரிக்க்கப்பட்ட தகவல்களை வழங்கியிருந்தது. இதனால் பல பொருளாதார நெருக்கடிகளை அது சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது கிரேக்கமும் ஸ்பெயினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து விலக்கப்பட்டு சாதாரண சிகிச்சைப்பிரிவில் இருக்கின்றன. ஐரோப்பாவின் இத்தனை பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அரபு வசந்தத்தின் போது துனிசியாவிலும் எகிப்திலும் அரசியல் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தமது பங்களிப்பை வழங்கத் தயங்கவில்லை. கடாஃபியைப் பதவில் இருந்து தூக்கி எறிய தமது படைகளை ஈடுபடுத்தி முன்னின்று போர் தொடுக்கவும் தயங்கவில்லை. சிரியப் போரைத் திசை மாற்றும் வல்லமை பிரித்தானியாவிற்கும் பிரான்ஸுக்கும் உண்டு.
தலை தப்பிய யூரோ நாணயம்
பல நாடுகளை ஒரு பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு புது முயற்ச்சியில் ஈடுபட்டன 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். அவற்றில் 17 நாடுகள் ஒரு பொது நாணயத்தை தமதாக்கி ஒரு புதுப் பொருளாதார பரீட்சையில் இறங்கின. கிரேக்க நாடு யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகும் யூரோ நாணயம் ஒழிந்துவிடும் என்று ஓர் ஆண்டுக்கு முன்னர் எதிர்வு கூறியவர்கள் அது இப்போது தவறு எனக் கூறத் தொடங்கி விட்டனர். அமெரிக்காவிலும் ஜப்பானிலும் உள்ளக ஏற்றத்தாழ்வுகள் குறைவு. ஆனால் ஒரு நாடாக இல்லாத ஐரோப்பிய ஒன்றியத்தில் வேறுபட்ட பொருளாதார நிலையில் உள்ள 27 நாடுகள் இருக்கின்றன.
பொலியும் போல்டிக்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள போல்டிக் நாடுகள் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் 2013இல் பெரும் பொருளாதார வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லத்வியாவும் எஸ்ரோனியாவும் 3 விழுக்காட்டிலும் அதிக பொருளாதார வளர்ச்சியை 2013இல் எட்டும். அவற்றை ஒட்டி மற்ற ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சி பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு 0.6 விழுக்காடு பொருளாதாரத் தேய்வைக் கண்ட யூரோ வலய நாடுகள் 2013இல் 0.4 விழுக்காடு தேய்வை மட்டுமே அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலை நிமிரும் தல
ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜேர்மனி 2013இல் தனது உள்நாட்டு கொள்வனவு வலுவால் பொருளாதாரத் தேய்வில் இருந்து தப்பித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியின் கார் உற்பத்தியை வோல்க்ஸ் வகன் நிறுவனம் இனிவரும் நாட்களில் பெரிதும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்க குடும்பம் ரெம்பப் பெருசு
உலகிலேயே பெரிய பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியமாகும். 2012 அதன் மொத்த பொருளாதார உற்பத்தி US$16.566 ட்ரில்லியன்களாகும். தனி நபர் வருமானம் என்று பார்க்கையில் ஐரோப்பிய ஒன்றை நாடுகளின் வருமானம் சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் பார்க்க பல மடங்கானதாகும். தனிமனித சுதந்திரம் பேணல், போன்றவற்றில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் உலகில் முன்னணியில் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அதையே பின்பற்றுகின்றன. மனித உரிமை பேணல், சமூக நலன் பேணல் போன்றவற்றில்உலக வல்லரசுகள் ஐந்தில் இரண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் இரண்டு பெரும் போர்களின் பின்னர் தமது எல்லைகளையும் நாடுகளிற்கிடையிலான உறவுகளையும் முற்றாகச் சரிப்படுத்தி விட்டன. யூரோவலய நாடுகளின் கடன் பளு அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. உலகப் பொருளாதாரப் போட்டியிடுதிறன் சுட்டியில் (Global Competitiveness Index) பின்லாந்து, ஒல்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, சுவீடன் ஆகிய நாடுகள் முதல் பத்துக்குள் வருகின்றன. சீனாவின் மிகப்பெரும் பொருளாதார பங்காளி (trading partner) ஐரோப்பிய ஒன்றியமாகும். இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரப் பங்காளி. ஆசியான் நாடுகளின் இரண்டாவது பெரிய பொருளாதாரப் பங்காளி. ஜப்பனின் மிகப்பெரிய பொருளாதாரப் பங்காளி. ஐரோப்பியப் பொருளாதாரம் தேய்மானமடைந்தால் அது அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும் என்பதை இந்த நாடுகள் நன்கு அறியும். மொத்த உலகின் பாதுகாப்புச் செலவீனத்தில் 20 விழுக்காடு ஐரோப்பிய நாடுகளினுடையது. சினாவின் விழுக்காடு 8 மட்டுமே. பிரான்ஸும் பிரித்தானியாவும் உலகின் எந்தப் பகுதியிலும் சென்று போர் புரியும் வல்லமையையும் மிகவும் புதிய தர படைக்கலன்களையும் கொண்டுள்ளன.
வயதுப் பிரச்சனை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இளையோர் தொகை குறைவாகவும் முதியோர் தொகை அதிகமாகவும் இருக்கிறது என்ற குறை சொல்லப்படுகிறது. இந்த வயதும் பிரச்சனை பல நாடுகளைப் பாதிக்கிறது. 2030-ம் ஆண்டு சீனர்களின் சராசரி வயது தற்போது உள்ள35 இல் இருந்து 43 ஆக உயரவிருக்கிறது.by 2030, ஜப்பானில் இது 45 இல் இருந்து 52இற்கு உயரும், ஜேர்மனியில் 44 tஇல் இருந்து49இற்கு உயரும். ஆனால் பிரித்தானியாவில் 40 இல் இருந்து 42இற்கு மட்டுமே. உயரும். பிரன்ஸும் சுவீடனும் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் ஊக்கங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டன.
விழ விழ எழுவோம்
தற்போதையப் பொருளாதாரச் சரிவில் இருந்து மீள எழுச்சி(bounce back) பெறக்கூடிய அனுபவம், அறிவு, திறமை போன்றவை ஐரோப்பியர்களுக்கு இருக்கிறது. உள்ளக அரசியில் புரட்ச்சிகளையோ எழுச்சிகளையோ சமாளிக்கக் கூடிய நிர்வாகத் திறனும் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. அரபு வசந்தம் ஐரோப்பாவிற்கு பரவும் என எதிர்பார்த்தனர் சிலர்!

Monday, 27 May 2013
விரிவடையும் சிரியப் போர்
அரபு வசந்தத்தில் ஒன்றான சிரிய ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சி இரண்டு ஆண்டுகளில் 90,000இற்கு மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்டதுடன் பல இலட்சம் மக்களை இடப்பெயர்வுக்கும் உள்ளாக்கியது. இப்போது சிரிய உள்நாட்டுப் போர் மற்ற நாடுகளுக்கும் பரவும் ஆபத்தை உண்டாக்கியுள்ளது.
பின்னடைவைச் சந்திக்கும் சிரிய சுதந்திரப்படை
சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது பல களமுனைத் தாக்குதல்களுக்கு ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர்மீது பெரிதும் தங்கியிருக்கின்றனர். ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினரின் பல தாக்குதல்கள் களமுனைச் சமநிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் கார் குண்டுத்தாக்குதல்களிலும் வல்லவர்கள். இவர்கள் கொடூரமாகப் போர் புரிகின்றனர். தம்மிடம் அகப்படும் எதிரிகளைக் கொடூரமாகக் கொல்கின்றனர். ஜபத் அல் நஸ்ரா போராளிகளுக்கு அல் கெய்தாவிடம் இருந்து பணமும் படைக்கலன்களும் கிடைக்கின்றன. இதனால் அப்போராளிகள் நன்கு கவனிக்கப்படுகின்றனர். இதனால் அமெரிக்க ஆதரவுப் போராளி இயக்கமான சுதந்திர சிரியப் படையில் இருந்து பல போராளிகள் விலகி ஜபத் அல் நஸ்ராவுடன் இணைகின்றனர்.
சியா-சுனி முசுலிம்களின் மோதல்
சிரியாவில் ஆட்சியில் இருப்பவர்கள் சியா முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தினர். சிரியாவின் மக்கள் தொகையில் சுனி முசுலிம்களே அதிகமானவர்கள். சியா முசுலிம் ஆட்சியாளர்களுக்கு சியா முசுலிம்களைப் பெரும்பான்மையினராகவும் ஆட்சியாளர்களாகவும் கொண்ட ஈரான் உதவி வருகிறது. லெபனானில் செயற்படும் சியா இசுலாமிய தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல்லாப் போராளிகள் சிரிய அரச படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.
சிரியாவிற்கு இரசியாவின் ஆதரவு
சிரிய ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு இரசியா பலத்த ஆதரவை வழங்கி வருகிறது. சிரியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட இரண்டு தீர்மானங்களை இரசியா இரத்துச் செய்துவிட்டது. இரசியாவின் படைத்தளமுள்ள ஒரே ஒரு நாடு சிரியாவாகும். இரசியாவின் எஸ்-300 எனப்படும் விமான எதிர்ப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இரசியா சிரியாவிற்கு விற்பனை செய்ய இணங்கி இருந்தது. இதை இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்தன. இஸ்ரேல் பஷார் அல் அசாத் ஆட்சியில் இருப்பதை விரும்பினாலும் தனது விமானத் தாக்குதல் சிரியாமீது செய்ய முடியாமல் போவதை அது விரும்பவில்லை. கடந்த பன்னிரண்டு மாதங்களுக்குள் சிரியாமீது எந்த வித எதிர்த்தாக்குதலையும் எதிர் கொள்ளாமல் மூன்று தடவை இஸ்ரேல் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டது. சிரியாவிடம் இருக்கும் வலிமை மிக்க்க படைக்கலன்களோ அல்லது வேதியியல் படைக்கலன்களோ ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் கைக்களுக்குப் போகாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இரசியா எஸ்-300 பாதுகாப்பு முறைமையை சிரியாவிற்கு விற்பனை செய்யாமல் இருக்க இரசியாவுடன் ஓர் இரகசிய உடன்பாட்டை எட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.
ஜெனிவா சமாதானப் பேச்சு வார்த்தை மூன்று நகரப் பேச்சு வார்த்தைகளும்.
சிரிய உள்நாட்டுப் போர் தொடர்பாக தமக்குள்ளே ஓர் ஒற்றுமையை எட்ட முடியாத வல்லரசு நாடுகள் ஜெனிவாவில் ஒரு சமாதானப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளன. அதில் பங்கேற்க சிரியா கொள்கையளவில் இணங்கியுள்ளது. ஆனால் சிரியக் கிளர்ச்சி இயக்கங்கள் ஜெனிவா பேச்சு வார்த்தையில் பங்கு பெற சில நிபந்தனைகளை விதிக்கின்றன. அதன்படி சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்றும் மேற்கு நாடுகள் தமக்கு எதிரான படைக்கல வழங்கற் தடையை நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. சில சிரியக் கிளர்ச்சிப் போராளி இயக்கங்கள் பேச்சு வார்த்தையில் பங்கு பெற மறுத்துள்ளன. தாம் அசாத்தின் பிரதிநிதிகளுடன் ஒன்றாக இருக்க்ப்போவதில்லை என அவர்கள் சொகின்றனர். இன்று(27/5/2013) அமெரிக்க அரசத்துறைச் செயலரும் இரசிய வெளிநாட்டமைச்சரும் பரிஸில் சந்தித்து சிரியப் பிரச்சனை தொடர்பாக உரையாடவுள்ளனர். இது சிரியவில் மோதலில் ஈடுபட்டுள்ளவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வரும் முயற்ச்சி தொடர்பான ஒரு பேச்சு வார்த்தையாகக் கருதப்படுகிறது. மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை சமாதானப் பேச்சு வார்த்தை என்பது அவர்களுக்குச் சாதகமாக நிலைமையை ஏற்படுத்துவதற்கான கால அவகாசத் தேடல் மட்டுமே. பேச்சு வார்த்தையையும் போர் நிறுத்தத்தையும் பயன்படுத்தி நிலைமையை அவர்கள் தமக்கு எதிரானவர்களிடை மோதல்களை உருவாக்கியும் தமக்கு ஆதரவானவர்களைப் பலப்படுத்தியும் விடுவார்கள். பாரிஸ் நகரில் அமெரிக்காவும் பேசிக்கொண்டிருக்க பிரஸ்ஸல் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிரியா தொடர்பாக ஒருமித்த கொள்கை வகுக்கப் பேச்சு வார்த்தை நடத்துகின்றன. அதே வேளை சிரியக் கிளர்சிப் போராளிக் குழுக்களை ஒன்று படுத்தும் கூட்டம் துருக்கி நகர் இஸ்த்தான்புல்லில் நடக்கிறது. இவை மூன்றும் ஜெனிவா-2 எனப்படும் சிரிய உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டுவரும் முயற்ச்சியான ஜெனிவா சமாதானப் பேச்சு வார்த்தையை மையப்படுத்தியதாக நடக்கின்றன.
பிராந்தியத்தை உலுக்கும் சிரியப் போர்
கடந்த வாரம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளின் மீது இரு ஏவுகணைத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இவை சிரியக் கிளர்ச்சிகாரர்களால் அசாத்துடன் இணைந்து போராடும் ஹிஸ்புல்லாமீதான பழிவாங்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. சிரியா தனக்கு எதிரான போராளிக்குழுக்களின் கைக்குப் போனால் சிரியாமிது இஸ்ரேல் படை எடுக்கும் என எச்சரித்ததுடன் கடந்த வாரமும் சிரியாவிற்கு படைக்கலன்கள் செல்வதைத் தடுக்கும் முகமாக ஒரு ஏவுகணைத்தாக்குதலை மேற்கொண்டது. துருக்கி, காட்டார், சவுதி அரேபியா போன்ற நாடுகள் அல் அசாத்தைப் பதவியில் இருந்து நீக்குவதில் உறுதியாக உள்ளன. ஈரானும் இரசியாவும் அசாத் பதவியில் இருந்து விலகினால் மத்திய கிழக்குப் படைத்துறைச் சமநிலை தமக்கு பாதகமாக மாறும் என உறுதியாக நம்புகின்றன. ஜெனிவா-2 பேச்சு வார்த்தை சரிவராத பட்சத்தில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிகாவோ அல்லது பிரான்ஸோ படைக்கலனகளை வழங்கலாம். இது பெரும் மோதலை அரபுப் பிரதேசத்தில் உருவாக்கலாம்.

எஸ்-300 பாதுகாப்பு முறைமை |

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...