Saturday, 25 September 2010
பிழையாக முத்தம் கொடுத்தால்
செய்தி வாசிப்பவளுக்கு
பிழையாக முத்தம் கொடுத்தால்
இத்துடன் முடிந்தது வணக்கம் என்பாள்
கர்நாடக சங்கீதப் பாடகிக்கு
பிழையாக முத்தம் கொடுத்தால்
மங்களம் பாடிவிடுவாள்
சினிமா நடிகைக்கு
பிழையாக முத்தம் கொடுத்தால்
"கட்" சொல்லிவிடுவாள்
காவற்துறைப் பெண்ணுக்கு
பிழையாக முத்தம் கொடுத்தால்
கைது செய்து விடுவாள்
பள்ளி ஆசிரியைக்குப்
பிழையாக முத்தம் கொடுத்தால்
மீண்டும் பல தடவை செய்யச் சொல்வாள்
Friday, 24 September 2010
பெண்களே ஆண்களைக் கவருவது எப்படி?
ஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
ஒத்துப் போகும் இரசனை: ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர விரும்புகிறார்கள். உலகில் பெரும்பாலான ஆண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை இது. அநேகமான ஆண்களுக்கு அவர்களுடன் ஒத்துப்போகும் இரசனையுள்ள பெண்கள் கிடைப்பதில்லை.
அதிக உடலுறவு: அடிக்கடி உடலுறவு கொள்வதையும் ஈடுபாடுள்ள உடலுறவையும் ஆண்கள் விரும்புகிறார்கள். அந்தரங்கத்தில் பெண்கள் அதிக வேட்கையுடன் இருக்க வேண்டும் என்பது ஆண்களின் விருப்பம்.
கவர்ச்சி போதும் ஆபாசம் தேவையில்லை: உங்கள் நடை உடை பாவனை போன்றவர்றிலும் அந்தரங்கத்திலும் கவர்ச்சியாக இருந்தால் போதும். ஆபாசம் அவசியமில்லை.
என்னவள்தான் எனக்கு மட்டும்தான்: ஆண்கள் தங்களின் பெண்கள் தமக்கு மட்டுமே சொந்தம் என்பதில் அதிக அக்கறைகாட்டுகிறார்கள்.
உங்கள் தோற்றம்: நீங்கள் உலக அழகியாக இருக்க வேண்டும் என்பதல்ல. உள்ளம் கவரும் தோற்றம் கொண்டிருக்க வேண்டும். நல்ல உருவ அமைப்பும் தன் தோற்றத்தில் தன்னம்பிக்கையும் உள்ள பெண்கள் ஆன்ண்களைக் கவர்கிறார்கள். அழகு என்பது ஒவ்வொருவர் கண்களைப் பொறுத்தது.
நல்ல உணவு: ஆம் ஒரு ஆணின் இதயத்திற்கான வழி அவனின் நாவினூடாகத்தான். சமைக்கத் தெரிந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. நல்ல உணவுகளை தெரிவு செய்யத் தெரிந்திருந்தாலே பெரும்பாலான ஆண்களை திருப்திப்படுத்தலாம்.
நம்பிக்கையூட்ட வேண்டும்: தமது தன்னம்பிக்கையை வளர்க்கும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவர். உங்கள் ஆணின் திறமையை உணர்ந்து கொள்ளுங்கள் அதைத் தட்டிக் கொடுங்கள்.
அம்மாவை வணங்காமல் உயர்வில்லை: ஆண்கள் தமது தாயாரிடம் அதிக அன்பு கொண்டிருப்பபர். அதை உணர்ந்து நடவுங்கள். மாமியார் மேல் பொறாமை கொள்ளாதீர்கள்.
மதிப்பும் சொற் கேட்டலும்: தம்மை மதித்து தம் சொற் கேட்டு நடக்கும் பெண்களால் ஆண்கள் அதிகம் கவரப் படுகிறார்கள்.
நகைச்சுவை உணர்வு: நகைச்சுவை உணர்வு அறவே இல்லாத பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்கள்.
நடத்தும் விதத்தை அறிந்து கொள்ளுங்கள்: தம்மை எப்படி நடத்த வேண்டும் என்று தமக்கு நெருக்கமானவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
போலித்தனமற்ற நட்பு: ஆண்கள் போலித்தனமற்ற நட்பைப் பெரிதும் மதிப்பர். பெண்களே நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
அவ்வப்போது தனிமை: ஆண்கள் தங்கள் பொழுது போக்குகளுக்கு தனிமையாக அல்லது தமது ஆண் நண்பர்களுடன் நேரத்தை கழிப்பதை பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
சுதந்திரமான பெண்கள்: எப்போதும் தம்முடன் ஒட்டிக் கொண்டிருக்காமல் அவ்வப்போது பெண்கள் சுந்தந்திரமாக தங்கள் தேவைகளைத் தாமே பூர்த்தி செய்து கொள்வதை ஆண்கள் விரும்புகிறார்கள்
நல்ல உரையாடல்: தேவையற்ற கோபங்களையும் தேவையற்ற குற்றச் சாட்டுகளயும் ஆண்கள் அறவே வெறுக்கிறார்கள். அன்பாகவும் அக்கறையாகவும் உரையாடும் பெண்கள் ஆண்களைக் கவர்வர்.
அழுத்தம் வேண்டாம்: ஆண்களுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு வேலையிடத்தில் அது பொதுவாக அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நச்சரிக்காதீர். ( யார் கேட்பார் இந்த அறிவுரையை? என்று சிலர் முணு முணுப்பது கேட்கிறது)
அவரவர் தன்மைக் கேற்ப நடக்கவேண்டும்: ஆண்களின் விருப்பு வெ'றுப்புக்கள் அவர்களின் பின்னணிக்கேற்ப வேறுபடும். அதையறிந்து நடக்க வேண்டும்.
Thursday, 23 September 2010
உங்களுடன் நீங்களே பேசுங்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஒருவர் தனக்குத் தானே பேசிக் கொண்டால் அது பைத்தியத்தின் ஆரம்பம் என்று சொல்லப்படுவதுண்டு. இதை மனோதத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வின் மூலம் மறுத்துள்ளதுடன் முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். ரொரன்ரோ கனடாவைச் சேந்த ஆய்வுப் பேராசிரியர் மைக்கேல் இங்ஜிலிச் தனது தொடர் ஆய்வுகளின் மூலம் தனக்குத் தானே பேசிக்கொள்பவர்கள் சுய கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
பேராசிரியர் மைக்கேல் இங்ஜிலின் முதல் கட்ட ஆய்வில் கணனியில் தோன்றும் உருவங்களில் வித்தியாசமான உருவங்கள் தோன்றும் போது விசைப்பலகையை அழுத்தக் கூடாது என்றும் வழமையான உருவங்கள் தோன்றும் போது அழுத்தும்படியும் சிலர் பணிக்கப் பட்டனர். இது உள்ளுந்தல் இல்லாமல் சுயகட்டுப்பாட்டுடன் யார் செயற்படுகிறார்கள் என்பதை அறிய மேற் கொள்ளப் பட்டது.
இரண்டாம் கட்ட ஆய்வில் பங்கெடுத்தவர்கள் தங்களது உள்ளகக் குரலைத்(inner voice) தடுக்கும் முகமாக ஒரு சொல்லை மட்டும் அவர்கள்ஆய்வின் போது திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டு விசைப்பலகையை அழுத்தும்படி பணிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் தமக்குத் தாமே பேசிக்கொண்டு விசைப்பலகையை அழுத்த முடியாது.
முதல் கட்ட ஆய்வில் சிறப்பாகச் செயல்பட்ட தமக்குத் தாமே பேசிக் கொள்பவர்களால் தமக்குத் தமக்குத் தாமே பேசிக் கொள்வதைத் தடுத்தவிடத்தில் சிறப்பாகச் செயற்பட முடியவில்லை.
எமக்கு நாமே பேசிக் கொள்வதால் நல்ல சுய கட்டுப்பாடும் ஏதேச்சையாக முடிவெடுப்பதைத் தடுத்து சிந்தித்து முடிவெடுக்கும் திறமையை எமக்கு வழ்ங்கும் என்கிறார் பேராசிரியர் மைக்கேல் இங்ஜிலிச்.
ஆய்வின் ஆசிரியர் அலெக்ஸா ருலேற் நாம் எப்போது எம்மை நாமே கட்டுப் படுத்தும் முகமாக எமக்கு நாமே தகவல்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம் என்கிறார். இத்தகவல்களின் அடிப்படையிலேயே நாம் இயங்குகிறோம் என்கிறார் அலெக்ஸா ருலேற்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு நானே சிறந்த பேச்சுத் துணை.
பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பவை எவை?
சிரி - ஆண்கள் புன்னகை பூத்தவர்களாக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.
சிரிக்க வை - ஆண்கள் அவ்வப்போது பெண்களைச் சிரிக்க வைக்க வேண்டும். நல்ல நகைச்சுவைகளால் மட்டுமல்ல, நல்ல பரிசுப் பொருட்களாலும்.
பாதுகாப்பு - பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை ஆண்களிடமிருந்து எதிர்பார்கிறார்கள்
தன்னிலை தாளாமை - ஆண்களால் தங்கள் சுதந்திரம் பறிக்கப்படுவதை பெண்கள் விரும்ப மாட்டார்கள்.
மென்மையும் கடுமையும் -பெண்கள் ஆண்கள் மென்னமையாக நடக்க வேண்டிய நேரங்களில் மென்மையாகவும் கடுமையாக நடக்க வேண்டிய நேரங்களில் கடுமையகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
நோக்குங்கால் நோக்காதிருக்கவும் - ஆண்களைத் தாம் பார்க்கும் போது பெண்கள் தம்மை ஆண்கள் பார்ப்பதை விரும்புவதில்லை. உங்களை ஒரு பெண் பார்த்தால் தெரியாதது போல் பாசாங்கு செய்யவும்.
அந்தரங்கத்திற்கு மரியாதை - பெண்களின் தனிமைக்கு ஆண்கள் மரியாதை செலுத்த வேண்டும். ஆண்கள் தமது அந்தரங்கங்களைப் பார்ப்பதை பெண்கள் விருப்புவதில்லை.
உற்சாகமாயிருங்கள் - ஆண்கள் சோம்பேறிகளாய் இருப்பதை பெண்கள் விரும்புவதில்லை.
தன்னம்பிக்கை - தன்னம்பிக்கை உள்ள ஆண்களால் பெண்கள் ஈர்க்கப் படுவார்கள்.
துப்பரவாயிருங்கள் - உடல் சுகாதாரத்திலும் துப்பரவிலும் ஆண்கள் அதிக கவனம் செலுத்துவதைப் பெண்கள் விரும்புகிறார்கள்.
வேறுபடும் - ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு நிறம் மணமுடையது. பெண்களின் எதிர்பார்ப்பும் அப்படியே. பெண்ணுக்கு பெண் எதிர்பார்ப்புக்களும் வேறுபடும்
Wednesday, 22 September 2010
அந்தமாதிரி தகவல்கள்
டோக்கியோ நகரில் பல இடங்களில் மிதி வண்டியில் மோட்டார் வாகனங்களிலும் பார்க்க விரைவாகப் பயணம் செய்யலாம். (ஜப்பானியர்கள் அதிலும் வேகமாக நடப்பார்களே!0
வண்ணத்துப் பூச்சிகள் தமது கால்களினால் சுவையை உணர்கின்றன.( போய் உட்கார்ந்தவுடன் ருசிக்க வசதியாக் இருக்க இந்த ஏற்பாடோ)
இணையத் தளங்களில் ஆண்கள் பெண்களிலும் பார்கக் ஆறு மடங்கு அதிகமாக பாலியல் சம்பந்தமான சமாச்சாரங்களைப் பார்க்கிறார்களாம்.( நான் பார்த்ததையும் கணக்கெடுத்தாங்களோ. களவாணிப் பயலுக)
பிரித்தானிய இளவரசர்கள் சார்ல்ஸும் வில்லியமும் ஒரே விமானத்தில் பயணம் செய்வதில்லை. விபத்தில் இருவரும் இறக்கக் கூடாது என்பதற்காகவாம்.( மோட்டார் வண்டியில் போனால் புகைப்படக்காரர்கள் துரத்திக் கொண்டுபோய் சாகடிக்க மாட்டார்களா?)
56% ஆண்கள் வேலை செய்யுமிடத்தில் அந்த மாதிரி சமாச்சாரங்கள் செய்கிறார்களாம்(பெண்கள் எந்தனை விழுக்காடு?)
வாத்தின் சத்தம் எதிரொலிக்காதாம். அதற்கான காரணம் யாருக்கும் தெரியாதாம்.( வாத்துச் சத்தத்தை ஒரு தடவையே கேட்க கொடூரமாக இருக்கும் என்பதால் இப்படி ஆனதோ)
எமது உடல் ஒரு நொடியில் ஒன்றரைக் கோடி உயிரணுக்களை(cells) உற்பத்தி செய்கிறது. அதே தொகை அழிக்கிறது. ( எப்படி எண்ணினார்கள்?)
பத்து மணித்துளிகளில் சுழல் காற்று வெளிவிடும் சக்தி உலகில் உள்ள மொத்த அணுக்குண்டுகள் வெளிவிடும் சக்தியிலும் அதிகம். ( எத்தனை பேரைக் கொல்லும் என்பது தானய்யா முக்கியம்)
உலகில் அதிகமான மக்கள் இறப்பிலும் பார்க்க சிலந்திக்கு அதிகமாகப் பயப்படுகிறார்கள்.(மனைவிமாருக்கு பயப்படுவோரைக் கணக்கில் எடுக்க்கவில்லையா?)
லஸ் வேகஸ்ஸில் உள்ள சூதாட்ட நிலையங்களில் கடிகாரங்கள் வைத்திருக்கப்படுவதில்லை. (நேரம் போவது தெரியாமல் பணத்தைத் தொலைக்க வேண்டுமே)
காதலி தேவை என்று விளம்பரம் கொடுப்பவரில் 35% மானோர் ஏற்கனவே திருமணமானவர்கள். ( கிளிமாதிரிப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு சின்ன வீடு தேவையோ?)
மோனா லிசா புருவத்தை மழித்துள்ளார். அக்காலத்தில் அது ஒரு நாகரீகமாம்.( எப்படி மழித்திருப்பார்?)
மிருகங்களில் யானையால் மட்டும் தாவ முடியாது.( யானையை தமது சின்னமாகக் கொண்ட இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியினர் இதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்)
ஐஸ்லாந்தில் உணவகங்களில் பரிமாறும் பணிபுரிவேருக்கு நன்கொடை(tips) கொடுப்பதை அப்பணியாளர்கள் அவமானப் படுத்துதலாக கருதுவார்களாம்.
அமெரிக்க இந்தியானா மாநிலத்தில் உள்ள பொது நூலகம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு அங்குலம் நிலத்துக்குள் செல்கிறதாம். அக்கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் அங்கு வைக்கப்படும் புத்தகங்களின் பாரத்தை கருத்தில் கொள்ளவில்லையாம். ( பிரம்மனும் மனிதனைப் படைக்கும் போது சிறு பிள்ளைகள் சுமக்கும் புத்தகங்களின் பாரத்தைக் கணக்கில் எடுக்கவில்லை)
ஒரு நத்தை மூன்று ஆண்டுகள் நித்திரை செய்யுமாம். ( அரச உழியர்கள் எத்தனை ஆண்டுகளாக இதைச் செய்கிறார்கள்?)
நோபல் பரிசாக வழங்கப்படும் பதக்கத்தில் மூன்று நிர்வாண ஆண்கள் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டபடி நிற்கும் வடிவம் உள்ளதாம்.
ஒரு போயிங் 747 விமானம் 57,585கலன்கள் எரிபொருளைக் கொண்டுள்ளது.
எமது காதும் மூக்கும் நாம் வளரும்போது வளர்கின்றன. கண்கள் வளர்வதில்லையாம்.
Tuesday, 21 September 2010
பாவனையாளர்களை முட்டாள்களாக்கும் அறிவுறுத்தல்கள்
பாவனையாளர்களைப் பாதுகாப்பதற்காக சில அறிவுறுத்தல்களை உற்பத்தியாளர்கள் விடுக்கவேண்டும். ஆனால் சில பாவனையாளர்களை முட்டாள்களாக்கும்:
On a Sears hairdryer -- Do not use while sleeping.
On a bar of Dial soap -- "Directions: Use like regular soap,"
On Tesco's Tiramisu dessert (printed on bottom) -- "Do not turn upside down."
On Marks & Spencer Bread Pudding -- "Product will be hot after heating."
On packaging for a Rowena iron -- "Do not iron clothes on body."
On Boot's Children Cough Medicine -- "Do not drive a car or operate machinery after taking this medication."
On Nytol Sleep Aid -- "Warning: May cause drowsiness."
On Sainsbury's peanuts -- "Warning: contains nuts."
On an American Airlines packet of nuts -- "Instructions: Open packet, eat nuts."
Monday, 20 September 2010
குறுங்கவிதைகள்: உண்மைகள் முருகன். பொய்கள் பிள்ளையார்
கடுகதி
உண்மைகள் முருகன்
பொய்கள் பிள்ளையார்
உலகத்தை முதலில்
சுற்றி விடும்
பேயாட்சி
பொய்கள் வாழ்வதிலை
என்றார் மார்டின் லூதர் கிங்
பொய்கள் இப்பொது ஆள்கின்றன.
எச்சரிக்கை
வாக்குச் சீட்டில்
ஏன் இல்லை
அரசு
எம் நலனுக்கு
கெடுதல் என்று
முதுமை
அனுபவத்தின் விலை
என் காதலி
பெண்கள் சுக்கிரக் கிரகத்தில் இருந்து வந்தனராம்
ஆண்கள் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்தனராம்
அவள் மட்டும் சனிக்கிரகத்தில் இருந்து வந்தாளா?
அனுபவம்
கல்லாதவன் செய்தது
கட்டுமரம்
கற்றவன் செய்தது
ரைட்டானிக்
Sunday, 19 September 2010
காணொளி: இலண்டனில் காப்பியில் கலக்கிய சாருலதா மணி
யாழ் மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை பிரித்தானியாவில் உள்ள அதன் பழைய மாணவர்கள் செப்டம்பர் 18-ம், 19-ம் திகதிகளில் கொண்டாடினர். இரு நாளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக சங்கீத் வித்தகியும் திரைப்படப் பின்னணிப்பாடகியுமான சாருலாதா மணி அவர்கள் இசை நிகழ்ச்சி வழங்கினார்.
அவரது கச்சேரி இளம் பிள்ளைகளை கர்நாடக சங்கீதத்தின் பால் கவர்ந்திழுத்தது. சபையில் இருந்த சகலரையும் அவரது நிகழ்ச்சி தாளம் போடவைத்தது. குறிப்பாக அவர் காபி இராகத்தில் பாடியது மிகச் சிறப்பாக அமைந்தது. எழுந்து நின்று ஆட வேண்டும் போல் இருந்தது என்றார் ஒரு முதியவர். காபி இராகப் பாடலைக் கேடதும் சாருலதா காலில் விழுந்து வணங்க வேண்டும் போலிருந்தது என்றார் இன்னொருவர்.
சிரிக்க: தொலைபேசிகள் இப்படியும் பதில் சொல்லும்
நீங்கள் யாருக்காவது தொலைபேசி அழைப்பு விடும்போது அவர்கள் அவர்களால் பதில் சொல்லப்படாதவிடத்து தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட ஒலி உங்களுக்கு பதில் கூறும். பொதுவாக தகவல் பதிவு செய்யும் படியே அது கூறும். ஆனால் சில விநோதமான ஒலிப்பதிவுகள் சில:
Sorry I can’t get to the phone right now because my girlfriend and I are doing our favorite thing together. Personally I like doing it up and down, while she likes doing it side-to-side r-e-a-l slow... So I’ll get back to you when we finish brushing our teeth.
Hi! John's answering machine is broken. This is his refrigerator. Please speak very slowly and I'll stick your message to myself with one of these magnets.
Hi. This is John: If you are the phone company, I already sent the money. If you are my parents, please send money. If you are my financial aid institution, you didn't lend me enough money. If you are my friends, you owe me money. If you are a female, don't worry, I have plenty of money.
This is not an answering machine this is a telepathic thought-recording device. After the tone, think about your name, your reason for calling, and a number where I can reach you, and I'll think about returning your call.
Hello. I'm home right now but cannot find the phone. Please leave a message and I will call you back as soon as I find it.
Hi, I'm not home right now, but my answering machine is, so you can talk to it instead. Wait for the beep.
You're growing tired. Your eyelids are getting heavy. You feel very sleepy now. You are gradually losing your willpower and your ability to resist suggestions. When you hear the tone you will feel helplessly compelled to leave your name, number, and a message.
Greetings, you have reached the Sixth Sense Detective Agency. We know who you are and what you want, so at the sound of the tone, please hang up.
Please leave a message as soon as possible and I'll get back to you at the sound of the tone.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...