Saturday, 26 February 2011
நகைச்சுவைக் கதை: சீனாவிற்கு தண்ணீர் வார்த்த இந்தியன்.
மத்திய கிழக்கு நாடொன்றில் ஓர் சிங்களவன் ஒரு சீனன் ஒர் இந்தியன் ஆகிய மூன்று பேரும் ஒற்றுமையாக ஒர் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். மூவரும் ஓர் இரவு ஒரு பாலைவனத்தினூடாக சென்று கொண்டிருக்கையில் ஒரு கல்லில் இடறுபட்டு விழுந்தனர். இலங்கையனுக்கு கோபம் வந்து அந்தக் கல்லை உதை உதை என்று உதைத்தான். அவனோடு சேர்ந்து மற்ற இருவரும் கல்லை உதைக்க கல்லுப் பிரண்டது. என்ன ஆச்சரியம் கல்லுக்குக் கீழிருந்து ஒரு பூதம் புறப்பட்டது. அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தது விட்டு அன்பர்களே என்னை பல்லாயிரம் ஆண்டுச் சிறையிலிருந்து மீட்டுவிட்டீர்கள். உங்களுக்குத் தேவையானவற்றைக் கேளுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன் என்றது.
சீனாக் காரன் முந்தி விழுந்து எனது நாட்டை நாம் அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியாவிடம் இருந்து பாது காக்க வேண்டும். நாம் எமது நாட்டைப் பாதுகாக்க சுவர்தான் கட்டுவோம். உடனடியாக நூறு மீட்டர் உயரம் பதினைந்து மீட்டர் அகலத்தில் எமது நாட்டைச் சுற்றி ஒரு பெரும் சுவர் எழுப்பிவிடு என்றது. பூதம் ஒரு சொடுக்கில் சீனாவைச் சுற்றி பெரும் சுவைரை எழுப்பிவிட்டது.
இப்பொது இந்தியன் அட சீனன் எப்பவும் எங்களை முந்துகிறான், இவனுக்கு வைக்கிறன் ஆப்பு என்று நினைத்துக் கொண்டு பூதத்திடம் சொன்னான் நீ எனக்குச் செய்ய வேண்டியது இலகுவான வேலை. சீனாவில் கட்டிய சுவருக்குள் நீரை வார்த்து நூறு மீட்டர் உயரத்தையும் நிரப்பிவிடு என்றான். பூதம் ஒரு சொடுக்கில் அப்படியே செய்தது. இப்போது சீனன் ஆ... ஊ... என்று கத்திக் கொண்டு இந்தியன் மேல் குங்பூ பாய்ச்சல் பாய இந்தியன் கபடி..... கபடி.. என்று உறுமிக்கொண்டு சீனன் மேல் பாய்ந்து இருவரும் சண்டையிட்டனர்.
இப்போது பூதம் யோசித்துக் கொண்டிருந்த சிங்களவனைப் பார்த்து. சரி உனக்கு என்ன வேண்டும் என்றது. சிங்களவன் தனது காதலி குமாரிஹாமியை கன்னியாக உடனடியாக என்முன் கொண்டு வந்து நிறுத்து என்றான். பூதம் கண்ணை மூடிச் சிறிது நேரம் யோசித்தது. சிங்களவனின் காதலி சிங்களவனை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழி அனுப்பி விட்டு வீடு திரும்பும் வழியிலேயே அவளது வாகன ஓட்டியை டாவடித்து தன்னை இழந்துவிட்டாள். அவன் கேட்டபடி செய்ய முடியாது என்று உணர்ந்த பூதம். இந்தா பார் அவங்க ரெண்டு பேரும் தங்கள் நாட்டுக்காக கேட்டார்கள். உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றது. உடனே சிங்களவன் சரி நானும் எனது நாட்டுக்காகவே கேட்கிறேன். எங்கள் புண்ணிய பூமியில் சகல மக்களும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் அமைதியாக நல்ல தலைமையின் கீழ் வாழவேண்டும் என்று கேட்டான். இந்தப்பாவி பார்த்திபனின் அப்பனுக்குப் பிறந்திருப்பானோ; இப்படிக் குண்டக்க மண்டக்கமாகவே கேட்கிறானே; நடக்கிறமாதிரி ஏதாவது கேட்கிறானா? படுபாவி! படுபாவி!! என்று பூதம் தனக்குள் நினைத்துக் கொண்டது. பின்னர் சிங்களவனைப் பார்த்துச் சொன்னது: நான் சும்மா பகிடிக்குச் சொன்னேன். உனது காதலியைக் கன்னியாகக் கொண்டுவந்து சேர்க்கிறேன் என்றது.
Friday, 25 February 2011
லிபியா இப்போது: லிபியாவுக்குள் ஒரு புதிய அரசு
லிபிய அதிபர் தளபதி மும்மர் கடாபி தான் பதவி விலகப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றார். பிரித்தானிய் அரசி எலிசபெத்-2 பதவியில் இருக்கும் வரை தானும் பதவிய்யில் இருப்பேன்; தன்னிலும் அதிக காலம் எலிசபெத்-2 பதிவியில் இருக்கிறார் என்கிறார். பிரான்ஸ் போன்ற மற்ற நாடுகளில் அரச குடும்பத்திற்கு எதிராக நடந்த இரத்தப் புரட்சி தமக்கு எதிராக நடக்காமல் இருக்க பிரித்தானிய அரச குடும்பம் தனது அதிகாரங்களை பிரபுக்கள் சபைக்கும் மக்கள் சபைக்கும் வழங்கிவிட்டது. இதற்கு நன்றியாக அரச குடும்பத்தை இப்போதும் ஒரு அலங்காரப் பொருளாக வைத்துக் கொண்டு அவர்களுக்கு பம் கொடுத்துக் கொண்டு வருகிறது பிரித்தானைய அரசு. அரச குடும்பம் நாட்டை ஆளவில்லை. நாட்டுப்பணத்தில் வாழுகிறார்கள். கடாபி ஒரு விடுதலை வீரனாக உருவாகி ஒரு மோசமான சர்வாதிகாரியாக மாறிவிட்டார். முன்றாம் உலக நாடுகளில் ஒரு காலத்தில் நல்ல செல்வாக்குப் பெற்றிருந்தார் கடாபி. இந்திரா காந்தி, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்றோர் மட்டுமல்ல நெல்சன் மண்டேலாவினாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.தென் ஆபிரிக்காவின் இனவெறிக்கு எதிரான போருக்கு காத்திரமான உதவிகள் வழங்கியவர்.
இப்போது கடாபியின் அதிகாரம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. லிபியாவிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடை எந்நேரமும் வரலாம். ஐரோப்பிய ஒன்றியம் கடாபிக்கு எதிரான பொருளாதரத் தடைக்கு ஒப்புதல் அளித்து விட்டது. சுவிஸ்லாந்து அரசு தம் நாட்டிலுள்ள கடாபியின் வங்கிக் கணக்குகளை முடக்கி விட்டது. இவை கடாபிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கலாம்.
இன்று வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடந்த தொழுகைகளுக்குப் பின் கடாபிக்கு எதிரான ஆத்திரம் மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
திங்கட் கிழமை ஜெனிவாவிலுள்ள ஐநா மனித உரிமைக்கழகத்தில் கடாபியின் அரசுக்கு எதிரான கண்டனங்கள் நடவடிக்கைகள் பல உருவாகலாம்.
லிபியா தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்றுப் பின்னிரவு பிரித்தானிய இத்தாலியப் பிரதமர்களுடனும் பிரெஞ்சு அதிபருடனும் கலந்துரையாடியுள்ளார். லிபியா மீது படை நடவடிக்கை ஒன்று மேற் கொள்ளப்படுமா என்று கேட்கப்பட்டபோது வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜே கார்ணி அது நடக்காது என்று கூற அவர் மறுத்துவிட்டார்.
கடாபி தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி அல் ஹைய்தா அமைப்பால் மேற் கொள்ளப்படுகின்றன என்று சொல்கிற்றார். பொதுவாக கடாபி போன்றவர்கள் தமக்கு எதிராக கிளர்ச்சி செய்பவரக்ளை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீது குற்றம் சுமத்துவது உண்டு. கடாபி தான் வித்தியாசமானவர் என்று இன்றும் காட்டுகிறார். கடாபி தான் இன்னும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தும்படி உத்தரவிடவில்லையாம் அப்படி உத்தரவிட்டால் முழு லிபியாவும் எரியும் என்று எச்சரிக்கிறார். இப்போது இவரை அமெரிக்க முன்னாள் அதிபர் விசர் நாய் என விபரித்தது ஞாபகம் வருகிறது.
லிபியாவின் மூன்றாம் நான்காம் பெரிய நகரங்க்களை கடாபி இழந்தார்.
பெங்காஜியைத் தொடர்ந்து திரிப்போலியில் இருந்து முப்பது மைல்கள் தொலைவில் உள்ள ஜாவியா நகரத்தையும் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர். கடாபி ஜாவியா நகர மக்களுக்கு இப்படிச் சொன்னார்: "உங்கள் மகன்மார்கள் பின் லாடன் சொல்வதிக் கேட்பதால் ஜாவியா எனது கைகளில் இருந்து நழுவுகிறது". கிளர்ச்சிக்காரர்களும் முன்னாள் படைத்துறையைச் சேர்ந்தவர்களும் இணைந்து கடாபியின் படையினரிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டு காடாபியின் ஆதரவுப் படைகளை மிஸ்ரட்டா நகரில் இருந்து விரட்டினர்.
இதுவரை இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். 50,000 மேற்பட்ட லிபியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் பலர் வெளியேறத் தயாராகின்றனர்.
காப்பி போன்ற பானங்களில் போதைப் பொருள்களைக் கலந்து கொடுத்து தனக்கு எதிராக கிளர்ந்தெழும்படி இளைஞர்கள் தூண்டப்படுகிறார்கள் என்றாக் கடாபி அதையொட்டி வெளியான கேலிச் சித்திரம் இது
ஒரு புதிய அரசின் ஆரம்பம்.
லிபியாவின் கிழக்குப் பகுதியான பெங்காஜியை மும்மர் கடாபியிடம் இருந்து அவருக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பின் அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் பல குழுக்களை அமைத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பெரும் பாடு படுகிறார்கள். கடாபிக்கு ஆதரவான குழுக்கள் கடாபியின் உளவாளிகள் போன்றேரிடமிருந்து பாரிய சவால்களை அவர்கள் எதிர் நோக்குகிறார்கள்.
சுதந்திரம், குடியாட்சி ஆட்சி மாற்றம் என்ற தார்க மந்திரத்துடன் பெங்காஜியில் இருந்து புதிய பத்திரிகையும் வெளிவரத் தொடங்கியுள்ளது. இது அரபு மொழியில் இணையப்பதிப்பாக வெளிவருகிறது. பிரித்தானிய அரசு தனது மக்களை லிபியாவிலிருந்து வெளியேற்ற கடாபிக்கு இலஞ்சம் வழங்கியாதாக அது குற்றம் சாட்டுக்கிறது.
நியூயோர்க் ரைம்ஸின் தகவலின் படி ஒரு நீதிபதி தெருவில் நின்று வண்டியோட்டிகளை ஆசனப் பட்டி அணியச் செய்தல் போன்ற அறிவுறுத்தல்களை மக்களுக்கு விடுக்கின்றார். பெங்காஜியின் சட்டவாளர்களும் நீதவான்களும் சமூக ஒழுங்கை நிலை நாட்டுவதில் முன்னின்று உழைக்கின்றனர். இளைஞர்கள் காவல் துறைக்கு ஓத்தாசையாகச் செயற்படுகின்றனர். மொத்தத்தில் அவர்கள் அங்கு ஒரு புதிய அரசை அமைக்க முற்படுகின்றனர்.
இன்னமும் கத்தி முனையிலேயே.
லிபியாவின் நிலை இப்போதும் மோசமாகவே உள்ளது. எகிப்தைப் போல் லிபியாவில் படைத்துறை நடுநிலையாக இருக்கவில்லை. இரத்தக்களரி இப்போது முடிவுக்கு வரும் நிலையில் இல்லை. காடாபியின் பதவி ஆசைக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நீண்ட கடினமான பாதையில் பலத்த இழப்புக்களுடன் பயணிக்க வேண்டியுள்ளது.
Thursday, 24 February 2011
பார்வதி அம்மாள் அவமரியாதை: ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் பெரும் சதி?
பார்வதி அம்மாள் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் பெரும் அசிங்கம் அரங்கேறியுள்ளது.
பெப்ரவரி 22-ம் திகதி நள்ளிரவில் மயானத்திற்கு வாகனமொன்று வந்துள்ளது. அந்தப் பகுதி மக்கள் அதை அவதானித்த போதும் அச்சத்தால் எவரும் வெளியே வரவில்லை. சுமார் 40 நிமிடத்திற்குப் பின் அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. மறுநாள் காலை அப்பகுதி மக்கள் மயானத்திற்குச் சென்று பார்த்த போது, பூதவுடல் எரிந்த சாம்பல் அவ்விடத்திலிருந்து சமயக் கிரியைகளுக்கு சேகரிக்க முடியாதவாறு முற்றாக அகற்றப்பட்டு வெளியே வீசப்பட்டிருந்ததுடன் அவ்விடம் முழுவதும் கழிவு எண்ணெயும் டீசலும் ஊற்றப்பட்டிருந்ததுடன், சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மூன்று நாய்களின் உடல்களும் சிதை எரிந்த இடத்தில் போடப்பட்டிருந்தன.
இரவில் யாழ்ப்பாணத்தில் மக்கள் வெளியில் நடமாடுவதில்லை. நடமாடினால் என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். நாடமாடுபவர்கள் சோதனைச் சாவடிகள் ரோந்து செல்லும் காவல்துறை மற்றும்படைத்துறை வாகனங்களைச் சந்திக்க வேண்டிவரும்.சந்திக்கும் வேளைகளில் விளைவுகள் பற்றி மக்கள் அறிவர்.
பலதரப்பினரும் இது இலங்கை அரச படையினரின் வேலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கின்றனர்.
சிங்கள மக்கள் வாழும் பகுதியில் ஒரு பிரேத ஊர்வலம் போகும்போது அனைவரும் காலணிகளை கழற்றி வைத்து மரியாதை செய்வர். பேருந்து நிறுத்தப் படும். அதில் உள்ளவர்கள் யாவரும் எழுந்து நின்று மரியாதை செய்வர். என்று கேள்விப்பட்டதுண்டு. அப்படிப்பட்ட சிங்களவர்கள் வாழும் நாட்டில் ஏன் இப்படி நடந்தது. இதனால் ஏதோ ஒரு நன்மை வரும் என்று எதிர்பார்த்தா?
பார்வதி அம்மாளின் சாம்பலை அசிங்கப்படுத்தியவர்களுக்கு நன்கு தெரியும் இதனால் தமக்கும் இலங்கைக்கும் ஆட்சியாளர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்று. இப்படிப்பட்ட செயல்கள் கீழ்மட்டத்தில் முடிவெடுக்க முடியாது. ஒரு மேல் மட்டத்தில் இருந்துதான் இதற்கான முடிவு எடுத்திருக்க வேண்டும். இந்த சாம்பல் அசிங்கப்படுத்திய செய்தி வாஷிங்டன் போஸ்ட் வரைக்கும் செய்தியாக அடிபட்டுள்ளது. நாட்டுக்கு கெட்ட பெயர் வரும் என்று தெரிந்தும் இதனால் பெரிய ஒரு நன்மை கிடைக்க இருக்கும் என்று நம்பித்தான் இதைச் செய்திருக்க வேண்டும்
இந்த இறந்த ஒருவரின் சாம்பலை அசிங்கப்படுத்தும் செயலால் எதோ ஒரு நன்மை கிடைக்கும் என்று நம்பியே இப்படிச் செய்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு பாரதப் போரின் 18நாளில் நடந்தவை விடை பகிரும்.
பாரதப் போரின் 17-ம் நாளுடன் துரியோதனனின் சகல படைகளும் மாண்டுவிட்டன. ஒன்றல்ல இரண்டல்ல 99 தம்பிமார் கொல்லப்பட்டுவிட்டனர். உற்ற நண்பன் கொல்லப்பட்டுவிட்டான். தனித்து நின்ற துரியோதனன் நீருக்கடியில் சென்று தனக்கு ஒரு முனிவர் கற்றுக் கொடுத்த சிரஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்யத் தொடங்கிவிட்டான். அவன் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய போர்க்களமான குருஷேத்திரத்தில் இறந்த உடல்கள் மீண்டும் துடிக்கத் தொடங்கிவிட்டன. "பரமாத்மா" கண்ணன் நிலமையைப் புரிந்து கொண்டுவிட்டான். துரியோதனன் இருக்கும் ஆற்றடிக்கு பாண்டவர்களை அழைத்துச் செல்கின்றான். பாண்டவர்கள் அவனை வெளியில் வரும்படி அறை கூவல் விடுக்கின்றனர். ஆனால் துரியோதனன் தொடர்ந்து தவ நிலையில் இருந்து மந்திரம் சொல்லிக் கொண்டே இருக்கிறான். தவ நிலையில் இருப்பவனை போய் இழுத்துக் கொண்டுவருதல் மகாபாவம் என்பதால் கண்ணன் துரியோதனனின் பரம விரோதியான வீமனை துரியோதனனுக்கு உசுப்பேற்றும் படி அறைகூவல் விடச் சொல்கிறான். வீமனின் அறை கூவலை கேட்ட துரியோதனன் நீருக்கடியில் இருந்து வீறு கொண்டு எழுகிறான். பின்னர் வீமனும் துரியோதனனும் மோதுகிறார்கள் வீமன் போர் விதிகளுக்கு முரணாக விமனின் ஆணுடம்பில் அடித்து அவனைக் கொல்கிறான்.
இப்போது ஈழத்திற்கு வருவோம்.
போர் 2009 மே மாதம் முடிவடைந்த பின்னர் எத்தனை விடுதலைப்புலிகள் மறைந்திருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் மீளக்கூடி என்று வருவார்கள் என்று கொழும்பும் டில்லியும் அஞ்சிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு தலைமையின் கட்டளையின் பேரிலேயே இப்படி மறைந்திருக்கின்றனரா என்று கொழும்பும் டில்லியும் அஞ்சலாம். இவர்களை உசுப்பேத்தி உரிய காலத்திற்கு முதல் வெளிக் கொண்டுவர பார்வதி அம்மாளின் சாம்பல் அசிங்கப் படுத்தப்பட்டதா?
முள்ளி வாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், 20 நாடுகள் தமிழர்கள் மீது "ரவுண்டு கட்டித் தாக்கி" அவர்கள் ஆயுத பலத்தை மழுங்கடித்த பின்னர், உயிரோடு மக்கள் கொன்று புதைக்கப்பட்ட பின்னர், ஒரு நாளில் மட்டும் 25000 பேர் கொல்லப்பட்ட பின்னர், இன்னும் தமிழ் இன உணர்வுடன் கொதித்து எழக்கூடியவர்கள் எவர்களாவது இருக்கிறார்களா என்று அறிய கொழும்பும் டில்லியும் மிக ஆவலுடன் இருக்கிறது. இப்படி தமிழர்களை உசுப்பேத்தி ஆத்திரப் படக் கூடிய செய்கைகளைக் செய்தால் யார் கொதித்து எழுகிறார்கள் என்று அறிந்து கொள்ளலாமா?
நம்மளை வைச்சு எல்லாரும் பொழைப்பு நடத்துறாங்களா?
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவரகத்தை மூடச் சொல்லி நெடுமாறன் ஐயா போராட்டம் நடத்துகிறார். அவருக்குத் தெரியும் அது நடக்காத அலுவல் என்று.
பிரபாகரனின் தாயாரின் சம்பலை அசிங்கப்படுத்தியதை உலக நாட்டுத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என்கிறார் வைக்கோ ஐயா. அவருக்கும் தெரியும் இது ஆவாத காரியம் என்று.
ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திய பன்னாடைக் கூட்டத்தோடு போன திருமாவளவன் மூன்றாம் முறை இலங்கை சென்றபோது அவர் திருப்பி அனுப்பப்பட்டார். டில்லியின் அவர் பாராளமன்ற உறுப்பினர் என்றாலும் அவர் ஒரு தமிழன்தானே. டில்லியில் சிங்களவன் செல்வாக்கு செல்லாக்காசுத் தமிழனின் செல்வாக்கிலும் பார்க்க பல மடங்கு அதிகம் என்று தோழர் திருமாவிற்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர் சோனியா ஆட்சியின் பங்காளனாக இருந்து கொண்டு தானும் ஏதோ போராட்டம் நடத்துவதாகக் கூறுகிறார்.
சோனியா கூட்டணி கிடைக்கும் என்ற நப்பாசையில் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு இருக்கிறார் செல்வி.
இதற்கு மேல் போய் மன்மோகன் சிங் ஐயா பகிடி விடுகிறார் இப்படி:
- இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் இராஜதந்திர ரீதியில் அழுத்தமான கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு இலங்கை அரசாங்கம் சாதகமான பதில் அளித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களை கௌரவமான முறையில் நடாத்துவதாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் உள்ள கருணாநிதி மகளைவிட்டு ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடாத்துகிறார் இலங்கை அரசிற்கு எதிராக.
கருணாநிதியன் அடிமடியில் சோனியா கைவைத்து விட்டார். இப்போது அவருக்கு கவிதை எழுதவோ கடிதம் எழுதவோ நேரமில்லை. நேரமிருந்தாலும் மானாட மயிலாடவை எப்படிச் சிறப்பிப்பது என்றுதான் யோசிப்பார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏதாவது போலி நாடகம் அவர் ஆடுவார். ஏமாறத்தான் இருக்கிறாங்களே கோடிக்கணக்கில் இளிச்ச வாயங்கள்.
தான் இலங்கைப்பிரச்சனையில் நேரடியாக ஈடுபடப்போகிறேன் என்கிறார் ராகுல் காந்தி. அடப்பாவி மகனே! நீ மறைமுகமாக ஈடுபட்டபோதே மூன்று இலட்சத்திற்கு மேலான தமிழ் மக்களைக் கொன்று குவித்தாங்கள். நேரடியாக ஈடுபட்டால்????
நாம் செத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாரும் எம்மை வைத்து பொழைப்பு நடத்துறாங்க.
நகைச்சுவை: பின்லாடனுக்கு அமெரிக்கா கொடுக்க விரும்பும் தண்டனை
பின்லாடனை கற்பனையிலாவது பிடித்துக் தண்டனை கொடுக்கிறார்கள் அமெரிக்கர்கள். அப்படிப்பட்ட அவர்களின் கற்பனையில் ஒன்று இது.
பின்லாடனைக் கொன்றால் அவர் மாவிரர் ஆவார். தியாகி எனப் போற்றப்படுவார். அவரைப் போல் பல வன்முறையாளர்களை உலகெங்கும் உருவாக்கப்படுவர்.
பின்லாடனைக் கைது செய்தால் பல ஆள்கடத்தல்கள் நடந்து அவரை விடுவிக்கும்படி மிரட்டப்படும்.
இரு வழிகளும் சரிவராது என்று பல அமெரிக்க அதிகாரிகள் நீண்ட நாட்களாக மண்டையைப் போட்டுக் குழப்பி முடிகளைப் போட்டுப் பிய் பிய் என்று பிய்த்துக் கடைசியாக ஒரு வழி கண்டிபிடித்தனர்.
பின்லாடனை கடத்திக் கொண்டுவந்து அவரைச் சத்திர சிகிச்சை மூலம் பெண்ணாக மாற்றி அவரை தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் வாழ விடவேண்டும். அப்போது தெரியும் தலிபான்களுக்குக் கிழ் பெண்ணாக இருப்பது எவ்வளவு கொடுமை என்று.
Wednesday, 23 February 2011
ஹைக்கூ: பக்க விளைவுகள் பல தரும் மருந்து..
ஓர் இதயத்தின் கீதத்தை
இன்னோர் இதயம் கேட்கிறது
காதல்
பழம் நழுவியது பாலில் விழுந்தது
அவள் தவறுதலாக அனுப்பிய குறுந்தகவல்
நெஞ்சில் ஒரு காவியம்
அறியத் துடித்தால் சிலகாலம்
அறிய மறுத்தால் எக்காலமும்
மடமையின் இருப்பு
Tuesday, 22 February 2011
நகைச்சுவைக் கதை: நரகத்திற்கு வாக்களித்த கருணாநிதி
கருணாநிதி இயற்க்கை மரணம் எய்தியபின் அவரை ஒருவர் வந்து அழைத்துச் சென்று முதல் நாள் சொர்க்கத்தைக் காட்டினார். அங்கு மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் போன்றேர் ஒரு புற்தரையில் மல்லாக்கப் படுத்து அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் மறுநாள் கருணாநிதியை நரகத்திற்கு அழைத்துச் சென்றார்கள் அங்கு ஒர் அழகிய அரங்கில் மானாட மயிலாட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலா அக்கா ஒரு நாட்டுக் கட்டை போல் அமர்ந்திருந்தார்; விநோத உடைப்போட்டியில் கலந்து கொள்பவர் போல் சுதா சந்திரன் ஒரு விசித்திரமான ஆடையுடன் இருந்தார்; ஆச்சரியப்படத் தக்க வகையில் செம கட்டை மும்தாஜ் ஆடை அணிந்திருந்தார். சிறப்பாக அமைக்கப்பட்ட மேடையில் பலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். சிலர் அதைப்பார்து அது நடனமா நாடகமா என்று விழிபிதுங்கிக் கொண்டிருந்தனர். என்ன ஆச்சரியிம்! அவர்களை முன் வரிசையில் அமர்ந்து ராஜிவ் காந்தியும் முன்னாள் சிங்களத் தலைவர்களன ஜே ஆர் ஜயவர்த்தன ஆர் பிரேமதாசா போன்ற தமிழின விரோதிகளும் உமா மகேஸ்வரன் அமிர்தலிங்கம் போன்றோர்களும் அமர்ந்து மது அருந்தியபடி இரசித்துக் கொண்டிருந்தனர்.
கருணாநிதியை அழைத்துச் சென்ற தூதுவர் கருணாநிதியிடம் கூறினார்: இப்போது சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்து விட்டீர்கள். இப்போது உங்கள் வாக்கை அளியுங்கள் சொர்க்கமா நரகமா சிறந்தது என்று. நீங்கள் வாக்களிக்கும் இடத்தில் நீங்கள் இனி உங்கள் வாழ் நாளைக் கழிக்க வேண்டி இருக்கும். நரகம் சொர்க்கத் தங்கம் சோனியா அன்னை போல் எவ்வளவு சுகமாக இருக்கிறது. அதற்கே எனது வாக்கு என்றார் கருணாநிதி. அடுத்தநாள் கருணாநிதிக்கு நரகத்தில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டு அங்கு அவரை அழைத்துச் சென்றனர்.
நரகத்தில் கருணாநிதிக்கு பெரும் ஆச்சரியம்! அங்கு கூவம் நதி போன்ற ஒரு மிக அழுக்கான நதியை ராஜிவ் காந்தியும் முன்னாள் சிங்களத் தலைவர்களன ஜே ஆர் ஜயவர்த்தன ஆர் பிரேமதாசா போன்றோர் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களை ஒருவர் இருந்து நீண்ட சவுக்கால் அடித்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார். போனவுடன் கருணாநிதிக்கும் ஒரு அடி விழுந்தது. கருணாநிதி ஐய்யோ முதல் நான் இங்கு வந்த போது வேறு விதமாக இருந்ததே! இப்போது ஏன் இப்படி என்று அலறினார். அதற்கு அப்போது நடந்தது நீ வாக்களிப்பதற்கான தேர்தல் பிரச்சாரம். பிரச்சார "செட் அப்" இற்கான "சீன்" அது. அவற்றைப்பார்த்து நீ வாக்களித்து விட்டாய். வாக்களித்த பலனை நீ இனி அனுபவிக்க வேண்டியதுதான் என்று கூறி மீண்டும் ஒரு அடி விழுந்தது.
போர் குற்றம்: பாலித கொஹென்னவுடன் விஜய் நம்பியாரின் பெயரும் இணைப்பு
தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையில் நிரந்தரத் தூதுவர் பாலித கொஹென்னவுடன் இந்திய அரசதந்திரிவிஜய் நம்பியாரும் போர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் இலங்கை ஒரு உறுப்பினர் நாடு அல்ல. இதனால் இலங்கைக் குடிமக்கள் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சாட்டுவது கடினம். விஜய் நம்பியார் இந்தியக் குடிமகன் என்பதாலும் பாலித கொஹென்ன இலங்கை அவுஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமை உள்ளவர் என்பதாலும் அவர்கள் இருவர் மீதும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நம்பப் படுகிறது. விஜய் நம்பியாரில் குற்றம் சுமத்திய அடிப்படை:
- வெள்ளைக் கொடியுடன் இலங்கை அரசிடம் சரணடைபவர்கள் பாதுகாப்பு உண்டு அவர்கள் போர்க்கைதிகள் போல் நடத்தப்படுவார்கள் என்று மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, பாலித கொஹென்ன ஆகியோர் தன்னிடம் உறுதியளித்தனர் என்று விஜய் நம்பியார் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இந்த வழக்குத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
1987இல் பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்து அவரைக் கொன்று விடும்படி ராஜிவ் காந்தி உதரவிட்டிருந்தாராம். இதை இலங்கையில் அப்போது நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்(?) படையின் உயர் அதிகாரி அது போர் குற்றத்தில் முடியும் என்று சொல்லி மறுத்திருந்தாராம்.
யார் இந்த விஜய் நம்பியார்
மும்பாய் பல்கலைக்கழகத்தில் அரசறிவியற் துறையில் பட்டப்படிப்பு படித்த விஜய் நம்பியார் இந்தியாவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஆவார். அல்ஜீரியா, மலேசியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் விஜய் நம்பியார் இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியவர். 2002இல் இருந்து 2004ம் ஆண்டுவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியவர். விஜய் நம்பியார் முன்னாள் ஐந பொதுச் செயலர் கோபி அனன் அவர்களின் ஆலோசகராகவும் கடமையாற்றியவர். இவருக்கு சதீஷ் நம்பியார் என்ற ஒரு சகோதரர் இருக்கிறார் அவர் இலங்கை அரசுக்கு படைத்துறை ஆலோசகராகப் பணியாற்றுபவர். ரனில்-பிரபா சமாதான ஒப்பந்தத்தின் படி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து படைகளை ரணில் விக்கிரமசிங்க விலக்கத் தயாராக இருந்த வேளை இந்தியா சதீஷ் நம்பியாரை அனுப்பி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து படைகள் விலகுவதைத் தடுத்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் தலைமைச் செயலரான விஜய் நம்பியார் இலங்கையில் இருந்தபோது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியிருக்கிறார். இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைவது தொடர்பான பேச்சு வார்த்தையில் விஜய் நம்பியார்.
நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் அவர்களிடமும் இது தொடர்பாக புலித்தேவன் தெரிவித்தார். விஜய் நம்பியார் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சரணடைதல் தொடர்பான வேண்டுகோளுடன் பிரித்தானிய ஊடகவியலாளரான மேரி கொல்வின் அவரை முதலில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதி ஒருவரும் விஜய் நம்பியாரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். சரணடைவதாக இருந்தால் இலங்கை படையினரிடம்தான் சரணடைய வேண்டுமே தவிர மூன்றாவது தரப்பினரிடம் அல்ல என்பதை இலங்கை அரசு வலியுறுத்தி வருகிறது என்ற செய்தியை விஜய் நம்பியார் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார். சரணடைவதற்கு விரும்பிய நடேசனிடமும், புலித்தேவனிடமும் வெள்ளைக்கொடியை ஏந்தி இலங்கை படையினரிடம் காட்டினால் போதும், பாதுகாப்பாக சரணடையலாம் என்று விஜய் நம்பியார் கூறியிருக்கிறார். நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி வேண்டுகோள் ஊடகவியலாளர் மேரி கொல்வின் மூலமாக விஜய் நம்பியாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது உரிய முறையில் இலங்கை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்றபோது சுட்டுக் கொல்லப் பட்டனர். இதன் பின்னால் ஒரு சதி இருந்திருக்க வேண்டும். இலங்கை அரசு விடுதலைப் புலிகளை வேரோடு அழித்தொழிக்கும் எண்ணத்தையே கொண்டிருக்கிறது. அதன் இராணுவ ஆலோசகர் சதீஷ் நம்பியார் அவரின் சகோதரர் விஜய் நம்பியாரை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்குத் தூதுவராக அனுப்பியது ஒரு சதியன்றி வேறு எது? இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு செல்லும்படி அவரிடம் வலியுறுத்திய போது அவர் அதைத் தட்டிக் கழித்து விட்டு போர் முடிந்த பின் இலங்கை சென்றார். சம்பந்தமில்லாமல் கண்டி சென்றார். மிக உயரத்தில் இருந்து வன்னி முகாம்களை பார்வையிட்டுவிட்டு அறிக்கை விட்டார். இதனால்தால் Foreign Policy இணையத்தளம் மிக ஆபத்தான கொரியர் என்று விமர்சித்தது. The Economist சஞ்சிகை இலங்கை விவகாரத்தில் அவரது செயற்பாட்டை வைத்து அவருக்கு பத்துக்கு மூன்று புள்ளிகள் வழங்கியது.
இலங்கையில் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது காலத்தை இழுத்தடித்த விஜய் நம்பியார்
போர் நடந்து கொண்டிருந்த வேளை பிரித்தானியாவின் வற்புறுதலின் பேரில் ஐநாவின் விஜய் நம்பியார் என்னும் சீனாவின் நண்பர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு சென்று உடனடியாக அறிக்கை சமர்பிக்கும்படி பணிக்கப் பட்டார். அவர் அங்கு சென்று உடன் ஐநா திரும்பாமல் இந்தியா சென்றார். அவர் அங்கு தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனனுடனும் நாராயணுடனும் பேச்சு வார்த்தை செய்யவா சென்றார் என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. காலம் தாழ்த்தி ஐநா திரும்பிய வில்லங்கமான வில்லன் நம்பியார் முதலில் தனது அறிக்கையை சமர்பிக்காமல் காலம் தாழ்த்தினார். இதற்க்காக அவர் மீது ஒழுக்காற்று நடவைக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா மிரட்டிய பின் நிலத்திற்குக்கீழ் உள்ள மூடிய அறையில் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.
வில்லங்கமான வில்லன் இந்த விஜய் நம்பியார்
மியான்மர் ஜனநாயக இயக்கத்திற்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக விஜய் நம்பியார் செயல்படுவதாகவும் இங்கிலாந்து குற்றம் 2010 டிசம்பரில் குற்றம் சாட்டி இருந்தது. இதுகுறித்து ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க் லியால் கிரான்ட் கூறுகையில், மியான்மர் தூதராக விஜய் நம்பியார் தொடர்ந்து செயல்படக் கூடாது. மியான்மருக்கென தனி, நிரந்தர தூதரை ஐ.நா. நியமிக்க வேண்டும் என பான் கி மூனை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை இதை பான் கீ மூன் இழுத்தடித்து வருகிறார். மியன்மார் தொடர்ப்பாக விலங்கம் பிடித்த வில்லன் விஜய் நம்பியார் ஐநாவிற்கு சமர்ப்பித்த அறிக்கையில் சீனாவின் வேண்டுகோளிற்கு இணங்க போர் குற்றம் தொடர்பான வாசகங்களை தவிர்த்துக்கொண்டார். இந்த அசிங்கமான இந்தியர் ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவியில் இருப்பது ஐநாவிற்கு ஒரு பெரும் இழுக்காடு.
Monday, 21 February 2011
லிபியாவில் இருந்து கடாபி தப்பி ஓடிவிட்டாரா?
லிபிய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்த அனுப்பப்பட்ட இரு போர் விமானங்களும் இரு உலங்கு வானூர்திகளும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தாமல் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் போய் தரை இறங்கின. விமானிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டனர்.
படைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த மும்மர் கடாபி தனது படையினரை நம்புவதில்லை பெரும்பாலான படையினரிடம் ஆயுதங்கள் இல்லை. காவல் துறையினரிடமும் ஆயுதங்கள் இல்லை. கடாபிக்கு நெருக்கமான படையினரிடம் மட்டுமே ஆயுதங்கள் உண்டு. அவரது மெய்ப்பாதுகாவலர் அனைவரும் பெண்களே.
திங்கட்கிழமை கடாபியின் மகன் சய்f தொலைக்காட்சியில் தோன்றி ஆற்றிய உரையத் தொடர்ந்து மக்களின் ஆத்திரம் மேலும் அதிகமானது. பல படையினர் அரசு தரப்பில் இருந்து விலகி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்தனர். மும்மர் கடாபியின்நீதி அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலில் பதவி விலகினார். லிபிய அரசின் வெளிநாடுகளுக்கான தூதுவர்களில் ஏழுக்கு மேற்பட்டவரகள் லிபிய அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து பதவி விலகி உள்ளனர். லிபிய விமானப்படையின் இரு உயர் அதிகாரிகள் மோல்டா நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர்.லிபியாவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவரும் பலத்த அதிருப்தி அடைந்துள்ளார். உதவித் தூதுவர் கடாபி இனக்கொலை புரிவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இலண்டனில் உள்ள லிபியத் தூதுவரகத்திற்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தூதுவரகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
பெண் பித்தனுக்கு பெண் பித்தன் ஆதரவு?
கடாபியின் நடவடிக்கைகளை அவரது நண்பரான இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ் கோனி கண்டிக்க மறுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் திரிப்பொலியைச் சூழ்ததைத் தொடர்ந்து மும்மர் கடாபி திரிப்பொலியில் உள்ள தனது உறைவிடத்தில் இருந்து தப்பி தனது செந்த ஊருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வெனிசுலேவியாவிற்குத் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் தனக்கு கடாபி தென் அமெரிக்கா நோக்கிப் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
முந்திய பதிவு: கடாபியின் லிபியாவில் இரத்தக் களரி
இரத்தக் களரியில் கடாபியின் லிபியா
மேற்குலக நாடுகள், முக்கியமாக அமெரிக்கா, பதவியில் இருந்து விலக்க நினைக்கும் அரசத்தலைவர்களில் வட கொரியாவின் கிம் ஜொங், ஜிம்பாவேயின்ரொபேர்ட் முஹாபே, கியூபாவின் fஇடெல் காஸ்ரோ, லிபியாவின் மும்மர் கடாபி ஆகியோர் முக்கியமானவர்.
நீண்டகால ஆட்சியாளர்.
இப்போது உள்ள அரச தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருப்பவர் லிபியத் தலைவர் மும்மர் கடாபி. மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர். உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்களுக்கு உதவுபவர் என்று பல மூன்றாம் உலகநாடுகளின் மக்களால் போற்றப் படுபவர் மும்மர் கடாபி. 1969-ம் ஆண்டு ஒர் ஆயுதப் புரட்சி மூலம் அப்போது அரசாராக இருந்த இட்றிஸை பதவியில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியவர் மும்மர் கடாபி. அப்போது அவருக்கு வயது 27. அப்போது அவர் சிறந்த புரட்சியாள்ராகவும், புதிய சேகுவேராவாகவும் மதிக்கப்பட்டார்.
கடாபி இஸ்லாமையும் சோசலிசத்தையும் கலந்து பசுமைப் புரட்சி என்ற நூல் எழுதினார்.
விடுதலை இயக்கங்களுக்கு உதவிய கடாபி
காடாபி கறுப்பு செப்டம்பர் இயக்கத்திற்கு நிதி உதவுவதாக கூறப்பட்டது. 1972இல் ஜேன்மன் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்றது கறுப்பு செப்டம்பர் இயக்கம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. கடாபி பல்வேறு விடுதலை இயக்கங்களுக்கு செய்த உதவியால் அவரை ஒரு பயங்கரவாதிகளிக்கு நிதி வழங்குபவராக அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் கடாபியை மத்திய கிழக்கின் விசர் நாய் என்றும் அவரது லிபியா ஒரு பறையர் நாடு என்றும் விமர்சித்தார்.( தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு போன வார்த்தைகளுக்குள் பறையர் உம் ஒன்று).
கடாபியை கொல்ல முயன்ற ரீகன்
1986இல் அமெரிக்க விமானங்கள் லிபியாவின் கடாபியின் இருப்பிடங்களில் குண்டுகளை வீசி அவரைக் கொல்ல முயன்றன. நிலக்கீழ் அறையில் இருந்ததால் கடாபி உயிர் தப்பினார். கடாபியின் வளர்ப்பு மகன் அதில் கொல்லப்பட்டார்.
மும்மர் கடாபியின் மீது இப்போது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்:
- அவரது ஆட்சி உலகிலேயே மோசமான அடக்கு முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஆட்சி
- மும்மர் கடாபியின் லிபிய நாட்டில் எந்த பத்திரிகைச் சுதந்திரமும் இல்லை.
- முறை கேடான ஆட்சி
- பெண்பித்தர்.
.
இரு வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட பிள்ளைகள். சர்வாதிகார அடக்கு முறையாளராகினாரா இளம் புரட்சியாளர்?
லிபிய மக்கள் பலர் மும்மர் கடாபியின் ஆட்சியில் அதிருப்தி அடைந்து எகிப்து துனிசியா பாணி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் எண்னிக்கையையும் ஆவேசத்தையும் பார்க்கும்போது புரட்சியாளராக வந்தா கடாபி இப்போது ஒரு அடக்குமுறைச் சர்வாதிகாரியாக மாறிவிட்டார் என்பதை உறுதி செய்கிறது. மும்மர் கடாபியின் ஒரு மகனான சயிf கடாபி லிபியாவில் ஒரு மேற்கத்திய பாணி அரசு அமைவத விரும்புகிறார். ஆனால் அவரது தம்பி முத்தாசிம் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர். லிபியாவில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழத் தொடங்கியபின் இருவருக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்து விட்டதாக பெப்ரவரி 20-ம் திகதி சில வதந்திகள் பரவின. அதில் சயிf கொல்லப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. பின்னர் சயிf தொலைக்காட்சியில் தோன்றி தந்தையின் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வோரைக் கடுமையாக எச்சரித்துள்ளார். கடைசி நிமிடம் வரை கடைசித் துப்பாக்கிக்குண்டு இருக்கும்வரை தாம் போராடுவேம் என்று அறிவித்தார். கடாபியின் மகன் கூறிய முக்கியமானவை:
- நாம் துனிசியர்களோ அல்லது எகிப்தியரோ அல்லர்.
- எமது நாட்டை இத்தாலியர்களுக்கோ அல்லது துருக்கியர்களுக்கோ விட்டுக் கொடுக்க மாட்டோம்.
- சில படைத்தளங்கள் ஆயுதங்கள் கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
- லிபியப்பாரளமன்றம் இன்று(திங்கட்கிழமை) கூடி அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி ஆராயும்.
- சில தடைகள் நீக்கப்படும்.
- லிபியா விழ்ச்சியடைந்தால் இங்கு மேற்கு நாடுகள் தளம் அமைக்கும்.
பென்காஜி ஆர்ப்பாட்டக்காரர்கள் வசம்
லிபியாவின் கிழக்குப் பிராந்திய நகரான பென்காஜி ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில். அங்குள்ள வானொலி நிலையத்தை அவர்கள் கைப்பற்றி வலைத்தளங்கள் மூலம் தங்கள் செய்திகளை பரப்பி வருகின்றனர்
மோசமான இரத்தக்களரி
எகிப்தைப் போலவோ அல்லது துனிசியாவைப்போலவோ லிபியாவில் அதன் தலைவர் கடாபி இலகுவில் பதவியில் இருந்து விலகிவிடப்போவதில்லை. அவருக்கு விசுவாசமான படையினர் கணிசமாக இருக்கின்றனர். கடாபிக்கு ஆதரவானவர்கள் கடாபிக்கு எதிரான ஆற்ப்பட்டக்காரர்கள்மீது தாக்குதல்கல் நடத்துகின்றனர். உலங்கு வானுர்தியில் வந்தும் கடாபியின் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்துகின்றனர். அரச படையில் இருந்து விலகியவர்க்ளுக்கும் அரசின் சிறப்புப் படையணிக்கும் மோதல் வெடித்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும். வரும் நாட்களில் மோதல்கள் தீவிரமடையும். உயிரிழப்புக்களும் அதிகமாக இருக்கும்
Sunday, 20 February 2011
தமிழ்த்தாயே வீரவணக்கம்
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...