Friday, 24 September 2010
பெண்களே ஆண்களைக் கவருவது எப்படி?
ஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
ஒத்துப் போகும் இரசனை: ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர விரும்புகிறார்கள். உலகில் பெரும்பாலான ஆண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை இது. அநேகமான ஆண்களுக்கு அவர்களுடன் ஒத்துப்போகும் இரசனையுள்ள பெண்கள் கிடைப்பதில்லை.
அதிக உடலுறவு: அடிக்கடி உடலுறவு கொள்வதையும் ஈடுபாடுள்ள உடலுறவையும் ஆண்கள் விரும்புகிறார்கள். அந்தரங்கத்தில் பெண்கள் அதிக வேட்கையுடன் இருக்க வேண்டும் என்பது ஆண்களின் விருப்பம்.
கவர்ச்சி போதும் ஆபாசம் தேவையில்லை: உங்கள் நடை உடை பாவனை போன்றவர்றிலும் அந்தரங்கத்திலும் கவர்ச்சியாக இருந்தால் போதும். ஆபாசம் அவசியமில்லை.
என்னவள்தான் எனக்கு மட்டும்தான்: ஆண்கள் தங்களின் பெண்கள் தமக்கு மட்டுமே சொந்தம் என்பதில் அதிக அக்கறைகாட்டுகிறார்கள்.
உங்கள் தோற்றம்: நீங்கள் உலக அழகியாக இருக்க வேண்டும் என்பதல்ல. உள்ளம் கவரும் தோற்றம் கொண்டிருக்க வேண்டும். நல்ல உருவ அமைப்பும் தன் தோற்றத்தில் தன்னம்பிக்கையும் உள்ள பெண்கள் ஆன்ண்களைக் கவர்கிறார்கள். அழகு என்பது ஒவ்வொருவர் கண்களைப் பொறுத்தது.
நல்ல உணவு: ஆம் ஒரு ஆணின் இதயத்திற்கான வழி அவனின் நாவினூடாகத்தான். சமைக்கத் தெரிந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. நல்ல உணவுகளை தெரிவு செய்யத் தெரிந்திருந்தாலே பெரும்பாலான ஆண்களை திருப்திப்படுத்தலாம்.
நம்பிக்கையூட்ட வேண்டும்: தமது தன்னம்பிக்கையை வளர்க்கும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவர். உங்கள் ஆணின் திறமையை உணர்ந்து கொள்ளுங்கள் அதைத் தட்டிக் கொடுங்கள்.
அம்மாவை வணங்காமல் உயர்வில்லை: ஆண்கள் தமது தாயாரிடம் அதிக அன்பு கொண்டிருப்பபர். அதை உணர்ந்து நடவுங்கள். மாமியார் மேல் பொறாமை கொள்ளாதீர்கள்.
மதிப்பும் சொற் கேட்டலும்: தம்மை மதித்து தம் சொற் கேட்டு நடக்கும் பெண்களால் ஆண்கள் அதிகம் கவரப் படுகிறார்கள்.
நகைச்சுவை உணர்வு: நகைச்சுவை உணர்வு அறவே இல்லாத பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்கள்.
நடத்தும் விதத்தை அறிந்து கொள்ளுங்கள்: தம்மை எப்படி நடத்த வேண்டும் என்று தமக்கு நெருக்கமானவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
போலித்தனமற்ற நட்பு: ஆண்கள் போலித்தனமற்ற நட்பைப் பெரிதும் மதிப்பர். பெண்களே நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
அவ்வப்போது தனிமை: ஆண்கள் தங்கள் பொழுது போக்குகளுக்கு தனிமையாக அல்லது தமது ஆண் நண்பர்களுடன் நேரத்தை கழிப்பதை பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
சுதந்திரமான பெண்கள்: எப்போதும் தம்முடன் ஒட்டிக் கொண்டிருக்காமல் அவ்வப்போது பெண்கள் சுந்தந்திரமாக தங்கள் தேவைகளைத் தாமே பூர்த்தி செய்து கொள்வதை ஆண்கள் விரும்புகிறார்கள்
நல்ல உரையாடல்: தேவையற்ற கோபங்களையும் தேவையற்ற குற்றச் சாட்டுகளயும் ஆண்கள் அறவே வெறுக்கிறார்கள். அன்பாகவும் அக்கறையாகவும் உரையாடும் பெண்கள் ஆண்களைக் கவர்வர்.
அழுத்தம் வேண்டாம்: ஆண்களுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு வேலையிடத்தில் அது பொதுவாக அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நச்சரிக்காதீர். ( யார் கேட்பார் இந்த அறிவுரையை? என்று சிலர் முணு முணுப்பது கேட்கிறது)
அவரவர் தன்மைக் கேற்ப நடக்கவேண்டும்: ஆண்களின் விருப்பு வெ'றுப்புக்கள் அவர்களின் பின்னணிக்கேற்ப வேறுபடும். அதையறிந்து நடக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment