
களத்தில் எறிகணைகள் பாயும்
காதலில் காமன் கணைகள் பாயும்
களத்திலும் துரோகிகள் உண்டு
காதலிலும் துரோகிகள் உண்டு
களத்தில் அணிகள் ஆழ ஊடுருவும்
காதலி பார்வையும் அதையே செய்யும்
களத்தில் பதுங்கும் குழிகள்
காமத்தில் பிதுங்கும் விழிகள்
களத்தில் கண்ணி வெடிகள்
காதலில் கன்னி விழிகள்
களத்தில் படைகள் கரந்தடிக்கும்
காதலில் காதலன் கரந்துடிக்கும்
களத்தில் சுற்றி வளைத்து யுத்தம்
காதலில் சுற்றி வளைத்து முத்தம்
3 comments:
compare களம் vs காதல் super
அருமை தோழா
மிக நன்று...
Post a Comment