திருமணமான பெண்கள் தினமும் முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிப்பது கணவனின் உதட்டால் தங்கள் முகத்திற்கு கிருமிகள் பரவாமல் இருக்க என்ற நம்பிக்க்கை காலம் காலமாக தமிழ் மக்களிடை இருந்து வருகிறது. மஞ்சள் கிருமிகளைக் கொல்லும் சாப்பாட்டில் சேர்த்தால் அது உடலில் உள்ள அதிலும் முக்கியமாகக் குடலில் உள்ள கிருமிகளைக் கொல்லும் என்று அமெரிக்க Oregon State University இன் பேராசிரியர் Adrian Gombart தெரிவித்துள்ளார்.
மஞ்சளின் இருக்கும் குர்குமின் என்னும் உட்பொருளே இந்த நல்ல காரியங்களைச் செய்கின்றது.
"Curcumin caused levels of the protein, cathelicidin anti-microbial peptide, to almost triple" என்பது Adrian Gombart என்னும் பேராசிரியரின் கருத்தாகும். அது மட்டுமல்ல Curcumin is also believed to have anti-inflammatory and antioxidant properties என்றும் சொல்கிறார் அப் பேராசிரியர்.
மஞ்சளின் இருக்கும் குர்குமின் என்னும் உட்பொருள் மூளைக்கு அமிலத்தன்மை பரவாமல் தடுக்கிறது இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் அத்துடன் வயோதிபர்கள் மத்தியில் வரும் மூளை அழுகல் என்னும் நோயையும் தடுக்கிறது. நல்ல பயன் பெறுவதற்கு குறைந்தது வாரத்தில் மூன்று நாட்களாவது உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மஞ்சளை தினசரி உணவில் கலந்தும் அழகு சாதனப் பொருளாகவும் பாவித்து வருகின்றனர். அத்துடன் அதை ஒரு மங்களமான பொருளாகவும் கருதுகின்றனர்.
தமிழ் மருத்துவர்கள் மஞ்சளில் இருந்து பெறும் எண்ணெயை சிறந்த கிருமிக் கொல்லியாகப் பாவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துப்படி பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், புண் சுகமாகும். பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் ஏற்படும் வயிற்று வலி, மாதவிடாய்ச் சிக்கலுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.மஞ்சளைச் சுட்டு எரித்து அதில் எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.
உணவு வகைக்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும் மஞ்சள் உதவும். அதிலும் முக்கியமாக இறைச்சிக் கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க மஞ்சள் உதவும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment