Thursday, 31 December 2020

2020 ஒரு மீள் பார்வை


சீனா மீது சினம் கொள்ள வைத்த ஆண்டு

சோதிடர்களை சோதித்த ஆண்டு

System சரியில்லை என நிரூபித்த ஆண்டு

அயோக்கிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்திய ஆண்டு

பலரது வாழ்க்கை முறைமையை மாற்றிய ஆண்டு

ZOOM ஆண்டு

மாநிலங்களின் உரிமையை இந்தியா பறித்த ஆண்டு

இலங்கை கடனில் மூழ்கிய ஆண்டு


சீனா மீது சினம் ஏற்படுத்திய ஆண்டு

2020-ம் ஆண்டை திரும்பிப் பார்க்கையில் தெரிவதெல்லாம் கொரொனா நச்சுக்கிருமியும் அதனால் பரப்பப்பட்ட கொவிட்-19 தொற்று நோயும்தான். சீனாவில் இருந்து அந்த தொற்று நோய்க் கிருமிகள் பரவியதாக பலரும் நம்பியதால் சீனா மீது உலகெங்கும் வாழ் மக்களில் பலர் சினம் கொண்டுள்ளனர். நோய் உருவாகியதாகக் கருதப்படும் வுஹான் நகரில் இருந்து மற்ற சீனப் பிரதேசஙக்ளுக்கு பயணிப்பதை கடுமையான தடுத்த சீனா வுஹானில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமானங்கள் செல்வதைத் தடுக்கவில்லை. அதனால் சீனா அதிக முதலீடு செய்துள்ல இத்தாலிக்கும் வுஹானில் இருந்து அதிக விமானப் பறப்புக்கள் செய்யப்படும் நியூயோர்க் நகருக்கும் தொற்று நோய் பெருமளவில் பரவியது. புதிய வகைக் கிருமி ஒன்று பரவுகின்றது என எச்சரித்த சீன மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரும் கொவிட்-19 ஆல் கொல்லப்பட்டார். இதெல்லாம் சீனாவில் சாதாரணமப்பா என்பது போல் சீனா நடந்து கொண்டது.

சோதிடர்களை சோதித்த ஆண்டு

2020-ம் ஆண்டு அமோகமாக இருக்கப் போகின்றதுபிரம்மாண்டமாக இருக்கப் போகின்றதுசுபீட்சமாக இருக்கப் போகின்றதுஇது ஒரு ஒளிமயமான ஆண்டுமன்னர்களும் மக்களும் நேர்மையாக இருக்கப் போகின்ற ஆண்டுபஞ்சம் என்பதே இருக்காதுஐந்து கிரகங்கள் சாதகமாகவும் குரு ஆட்சி பெற்றும் இருக்கையில் பிறங்கும் அற்புதமான ஆண்டு என சோதிடர்கள் சொன்னார்கள். ஆனால் 2020 உலகையே கலங்கடித்த ஆண்டு. மக்களின் செயற்பாடுகளை மாற்றியமைத்த ஆண்டு.

System சரியில்லை என நிரூபித்த ஆண்டு

கொவிட்-19 நோய் பரவத் தொடங்கியவுடன் பல நாடுகளின் மருத்துவத் துறையும் சுகாதாரத்துறையும் சரிவர செயற்படவில்லை. தைவான் அரசு ஒரு கொடிய தொற்று நோய் வந்தால் எப்படிச் எதிர் கொள்வது என்ற தயாரிப்பு வேலைகளை முன் கூட்டியே செய்து வைத்து வருமுன் தன் மக்களைக் காப்பாற்றியது. வியட்னாம் நோய் வந்தவுடன் துரிதமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஒருவர் கூட நோயால் இறக்காமல் பார்த்துக் கொண்டது. இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் நோயை எதிர் கொள்ளக் கூடிய வகையில் தயார் நிலையில் இருக்கவும் இல்லை வந்தவுடன் துரித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது ஒரு சாதாரண நச்சுக் கிருமிக் காய்ச்சல் என்றார். மக்கள் ஒன்றுகூடுவதை தடை செய்யும் படி மருத்துவ நிபுணர்கள் சொன்ன போது பிரித்தானிய தலைமை அமைச்சர் பப்பிற்கு போய் தண்ணியடிக்காமல் இருப்பதும் ஒரு வாழ்க்கையா என்றார். பொதுவாக பல நாடுகளின் ஆட்சி முறைமை மோசமான நிலையில் இருக்கின்றது என்பதை கொவிட்-19 நோய் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அயோக்கிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்திய ஆண்டு

இந்தியாவில் மலேரியாக் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துகின்றது என்ற பிழையான தகவல் வெளிவிடப்பட்டது. அதை பல நாடுகளும் வாங்க முயற்ச்சித்த போது இந்தியா அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. அமெரிக்க அதிபர் இந்தியா தமக்கு அந்த மருந்தைக் கொடுக்க வேண்டும் அல்லது இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப் படும் என மிரட்டினார். பின்னர் அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்டது ஆனால் அது கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த மாட்டாது என்ற உணமை அறியப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் உரிய நேரத்தில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. தொற்று நோயைப்பரவ விட்டமைக்காக சீனா மீது உலக அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஒஸ்ரேலியா தெரிவித்த படியால் அதற்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்தியாவும் சீனாவும் தமது எல்லையில் நடந்த மோதல்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளிவிட்டனர். உலகெங்கும் கொவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிக்கா ஆய்வு செய்யும் உள்ள பல்கலைக்கழங்களிலும் ஆய்வு கூடகங்களிலும் உள்ள கணினிகளில் இருந்து தகவல்களை திருட பல நாடுகளில் இருந்து ஊடுருவல் முயற்ச்சிகள் நடந்தன. யார் முதலில் தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடிப்பது என்பதில் கடும் போட்டி நடந்தது ஆனால் ஒத்துழைப்புகள் நடக்கவில்லை. போதிய முன்னறிவித்தல் இன்றியும் உரிய வசதிகள் அமைத்துக் கொடுக்காமலும் ஊரடங்கு சட்டம் அறிவித்தமையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டனர். பல நூறு மைல்களை பல இலட்சம் பேர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தைகள் அதின்போது இறக்க நேரிட்டச்ச்து. தன் நாட்டு மக்களை சிறப்பாக காப்பாற்றிய சிங்கப்பூர் அரசு வெளிநாட்டில் இருந்து வந்து தொழில் செய்வோரை உதாசீனம் செய்தது.

பலரது வாழ்க்கை முறைமையை மாற்றிய ஆண்டு

போக்கு வரத்துக் கட்டுப்பாடு ஒன்று கூடல் தடை போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். உணவகங்கள், உல்லாச விடுதிகள் போக்குவரத்துத் துறையில் பணி புரிவோர் வருமான இழப்பால் பாதிக்கப்பட்டனர். வீட்டில் இருந்து பணிபுரியும் முறைமை பெருமளவில் அறிமுகப் படுத்தப் பட்டது. மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே இணைய வெளி மூலம் கல்வி கற்கும் ஏற்பாடு பரவலாக அறிமுகமானது. ஏழை மாணவர்கள் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது

 

ZOOM ஆண்டு

அமெரிக்காவில் வாழும் சீனர் ஒருவர் உருவாக்கிய ZOOM என்ற செயலி உலகெங்கும் பாவிக்கப் பட்டது. காணொலி மூலமான தொடர்பாடல் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் கலவி கற்பவர்களுக்கும் பெரிதும் உதவி செய்தது. உலக முடக்கத்தின் போது ZOOM மூலமான தொடர்பாடல் உலக இயக்கத்திற்கு உதவியது.

மாநிலங்களின் உரிமையை இந்தியா பறித்த ஆண்டு

பல தேசங்களின் ஒன்றியமாக உருவாக்கப்பட்ட இந்தியாவில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப் பட்டு வருகின்றன. மாநிலக் கட்சிகளை சிதைப்பதில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி பகிரங்கமாக செயற்படுகின்ற ஆண்டாக 2020 அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் மம்தா பனர்ஜீ தலைமையிலான திரினாமுல் காங்கிரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவினர். பாஜகவின் அமித் ஷா பனர்ஜீயைப் பார்த்து நீ தனித்து நிற்கப் போகின்றாய் என்றார். மக்களாட்சிக்கு பல கட்சிகள் வலிமையாக இருப்பது அவசியம் ஆனால் காங்கிரசுக் கட்சி தலைமையின்றி தடுமாறுகின்றது. ராகுல் காந்தியைத் தவிர மற்ற எல்லோரும் ராகுல் தான் கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்கின்றனர். காங்கிரசு கட்சியினர் ராகுல் திறன்படச் செயற்பட வேன்டும் என்கின்றனர். ஆனால் கட்சிக்கு ஒரு திறமை மிக்க தலைவரை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் காங்கிரசுக்கு தலைமை தாங்க கூடாது என்பது எழுதாத சட்டமாக உள்ளது.

இலங்கை கடனில் மூழ்கிய ஆண்டு

கடந்த பல பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வரவிலும் பார்க்க அதிக செலவு செய்து வந்த இலங்கை அரசுக்கு கொவிட்-19 கடைசி வைக்கோலாக அமைந்துள்ளது. இலங்கையின் கடன்படு திறனை மூன்று நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலைக்கு தாழ்த்தியுள்ளன. அத்துடன் இலங்கையில் வங்கிகள் ஆபத்தான சூழலில் செயற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிக அளவில் நிதி உதவு தேவைப்படுகின்றது. 2020இல் இலங்கை சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரை வெறும் கையுடன் திரும்பி அனுப்பியது இலங்கை அரசு. அவர் மிலேனியம் சவால் ஒத்துழைப்பின் மூலம் இலங்கைக்கு 480மில்லியன் டொலர் உதவியை வழங்க தயாராக இருந்தார். அதற்கு பதிலாக இலங்கையை அமெரிக்கப் படைத்துறையினர் கட்டுப்பாடின்றி பாவிக்கும் உரிமையைக் கோரியிருந்தார். சீனாவை அதிருப்திப் படுத்தும் நடவடிக்கையை இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

மேற்காசிய அரசுறவியலை மாற்றிய ஆண்டு

இஸ்ரேலுடன் சில அரபு நாடுகள் அரசுறவியல் தொடர்புகளை 2020இல் ஏற்படுத்திக் கொண்டன. ஆனாலும் இஸ்ரேலில் உறுதியான ஆட்சி இல்லை. இரண்டு ஆண்டுகளில் நான்கு தேர்தல்களை இஸ்ரேல் சந்திக்க வேண்டிய சூழல். சவுதி அரேபியா அனுபவமற்ற இளவரசரின் ஆட்சியில் ஆட்டம் காண்கின்றது. ஈரான் படைத்தளபதியினையும் அணு விஞ்ஞானியையும் பாதுகாக்க முடியாமலும் அந்த இழப்பீட்டிற்கு பதிலடி கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. துடுக்குடன் செயற்படும் துருக்கியை அடக்க யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இரசியா

வரலாற்றில் மிகப்பெரிய இணைய வெளி ஊடுருவலை இரசியா அமெரிக்கா மீது செய்து மிகப்பெரிய தகவல் அபகரிப்பைச் செய்தது என்ற குற்றச் சாட்டு இரசியாமீது 2020இல் வைக்கப்பட்டது. அதற்கான அறுவடையை இரசியா 2021இல் செய்யலாம். லிபியாவில் துருக்கியும் இரசியாவும் குட்டையைக் குழப்பின. இரசியா அஜர்பைஜான் – ஆர்மேனிய மோதலில் இரசியா அப்பம் பகிரும் வேலையை வெற்றிகரமாக செய்தது. அங்கு துருக்கியையும் பிரான்ஸையும் இரசியா ஓரம் கட்டியது.

அமெரிக்கா

சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போரையும் தொழில்நுட்பப் போரையும் 2020இல் அமெரிக்கா தீவிரப்படுத்தியது. சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும். அது போல் போர் என்றால் பொருளாதாரம் கிழியும். அடி வாங்கிய சீனாவிலும் பார்க்க அடித்த அமெரிக்காவிற்கு அதிக காயம். 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை வெற்றிகரமாகவும் துரிதமாகவும் உருவாக்கிய அமெரிக்கா அடுத்த தலைமுறை பெரு-விமானம் தாங்கிக்கப்பல்களையும் ஆழக்கடல்களில் பாவிக்கத் தொடங்கியது. 2020இல் சீனா தைவானைக் கைப்பற்றாமல் தடுப்பதில் அமெரிக்கா பார்த்துக் கொண்டது.

சீனா

பையப் பையத் தின்றால் பனையையும் தின்னலாம் என்பதை தென் சீனக் கடலில் நிரூபித்த சீனா அதே பாணியை இமய மலைச்சாரலிலும் 2020இல் செய்தது. அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் 2020இல் இரகசியமாக இமையமலைச் சாரலில் இந்தியாவிற்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். மேற்காசியாவில் குர்திஷ் மக்களைப் பலி கொடுத்தது போல இமய மலைச்சாரலில் தீபெத்திய இளையோர் பலியிடப்படுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பல ஆசிய நாடுகளுடனும் சீனா செய்துள்ள வர்த்தக் ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் பாதிப்பை ஈடு செய்யலாம். சீனாவில் பெருமுதலாளிகள் உருவெடுப்பதை இட்டு 2020இல் சீனப் பொதுவுடமைக் கட்சி கரிச்னை கொள்ளத் தொடங்கியுள்ளது.

FANG நிறுவனங்க்களின் ஆண்டு

FANG என சுருக்கமாக அழைக்கப்படும் Facebook, Amazon, Netfliz, Google ஆகிய நாற்பெரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது வருமாந்த்தை பெருமளவில் 2020இல் பெருக்கிக் கொண்டன. இந்த நிறுவனங்களின் தனியாதிக்கத்தை அமெரிக்க ஆட்சியாளர்கள் தணிக்க வேண்டும் என நினைக்கின்றனர். எண்மியக் கொடுப்பனவுகள் 2020இல் மிகவும் அதிகரிதிருந்தன. நுண்மிய நாணயங்களின் பெறுமதியும் பாவனையும் 2020இல் அதிகரித்திருந்தன. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்துள்ளது.

உலகமயமாதல் நிறுத்தப்பட்டு தேசியவாதம் தலை தூக்கியது. சில்லறை வர்த்தகத் துறை பாதிக்கப்பட்டு இணையவெளி வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது. நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு சோதனைக்கு உள்ளாகிய வேளையில் குவாட் என்னும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான எண்ணக் கரு 2020இல் உருவானது.

சோதனைகள் நிறைந்த ஆண்டான 2020இல் ஆட்சியாளர்கள் படிப்பினை பெறவில்லை. 

Monday, 28 December 2020

அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்?

 

பன்னாட்டு நியமங்களுக்கு உட்படாமலும் பன்னாட்டு அமைப்புக்களில் விவாதிக்க முடியாமலும் ஒரு நாட்டுக்கு பாதகம் விளைவிக்க் கூடிய வகையில் இன்னொரு நாடு செயற்படுதல் சாம்பல் வெளித் (Gray Area) தாக்குதல் எனப்படும். சாம்பல் வெளி நடவடிக்கைகளை போர்ச் செயல் (Act of War) எனக் கருதப்பட முடியாது. சாம்பல் வெளித் தாக்குதல் செய்யும் போது அதற்கு உடனடியான பதிலடி கொடுக்க முடியாத வகையில் செய்யப்படும். தென்சீனக் கடற்பிரதேசத்தில் கணிசமான பகுதியை சீனா தன் வசமாக்கியதும் உக்ரேனின் கிறிமியாவை இரசியா தனதாக்கிக் கொண்டதும் ஈரான் நாடானது ஈராக், சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியதும் சாம்பல் வெளி தாக்குதல் மூலமாகவே. அமெரிக்காவில் பிரபல்யவாதத்தை இரசியா சாம்பல் வெளி நடவடிக்கைகள் மூலம் வளர்த்தது. ஒரு கணினியில் அல்லது கணினித் தொகுதியில் இருந்து இன்னொரு கணினி அல்லது கணினித் தொகுதிகளுக்குள் இலத்திரனியல் மூலமாக நுழைந்து தகவல்களைத் திருடுதல், தகவல்களை அழித்தல் இணையவெளி ஊடுருவல் என அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊடுருவல் மூலம் ஒரு கணினியை அல்லது கணினித் தொகுதியை செயற்படாமல் செய்வது இணையவெளித் தாக்குதல் எனப்படும். இணையவெளி ஊடுருவல் மற்றும் தாக்குதல் போன்றவை சாம்பல் வெளித் தாக்குதல் ஆகும்.

அமெரிக்க கணினித் தொகுதிகள் மீது பரவலான தாக்குதல்

அமெரிக்க திறைசேரி, அமெரிக்க வர்த்தக அமைச்சு, அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சு ஆகிய முக்கிய அரசத்துறை, அமெரிக்காவின் முன்னணி உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு முகவரகம் (National Security Agency), அமெரிக்க அணு முகவரகம் போன்ற முன்னணி அரச அமைப்புக்கள்முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் உட்பட பத்தாயிரக் கணக்கான அமைப்புக்களின் கணினித் தொகுதிகள் மீது 2020 டிசம்பர் மாதம் 8-ம் திகதி இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இரசிய ஆதரவுடன் செய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த பல ஆண்டுகளாக இந்தக் குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்ட போதிலும் அமெரிக்காமீதும் அதன் நட்பு நாடுகள் மீதும் செய்யப்படும் இணைய வெளித் தாக்குதலை நிறுத்த முடியாமல் இருக்கின்றது. இரசியாவில் இருந்துதான் இணையவெளித்தாக்குதல் செய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் உறுதிபட செய்திகள் வெளியிட்டன. அரச நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும் தனியார் நிறுவங்கள் ஒவ்வொன்றினதும் கணினித் தொகுதிகளை தனித்தனி ஊடுருவுவதிலும் பார்க்க அவற்றிற்கெல்லாம் சேவை வழங்கும் நிறுவனத்தின் கணினித் தொகுதிகளை ஊடுருவி பின்னர் எல்லாக் கணினித் தொகுதிகளையும் ஊடுருவும் முறை பாவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. எட்டு மாதங்களாக செய்யப்பட்ட ஊடுருவலை தடுக்க முடியாமல் போனது அதிலும் அதிக ஆச்சரியம் கொடுத்துள்ளது.

டிரம்ப் இரசிய நண்பரா?

2020 டிசம்பரில் செய்யப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது இணையவெளி ஊடுருவலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையை புதிய அதிபர் பார்த்துக் கொள்ளட்டும் என்றார். ஈரான் தொடர்பான விவகாரங்களில் உடனுக்குடன் பதிலடி நடவடிக்கை எடுக்கும் டிரம்ப் இதில் தயக்கம் காட்டுகின்றார். புதிதாகப் பதவியேற்கவிருக்கும் அதிபர் ஜோன் பைடன் டிரம்ப் ஊடுருவிகள் யார் என இனம் காணவேண்டும் என்றதுடன் வழமையான முறைப்படி ஊடுருவல் தொடர்பான தகவல்களை டிரம்ப் தன்னுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற குற்றச் சாட்டையும் முன்வைத்தார். டிரம்பினுடைய சட்டமா அதிபர் வில்லியம் பார் இரசியாதான் சாத்தியமான ஊடுருவல் குற்றவாளி என்றார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் (அமைச்சர்) மைக் பொம்பியோ இத்தகைய பொறுப்பற்ற, பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை இரசியாவால் மட்டுமே செய்ய முடியும் என்றார். டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் எல்லாவற்றிற்கும் இரசியா, இரசியா, இரசியா எனக் குற்றம் சாட்ட முடியாது சீனாவும் செய்திருக்கலாம் என்றார்.

தாக்குதல் நடந்த விதம்

அமெரிக்காவின் Solar Winds என்ற கணினிச் சேவை நிறுவனம் பல அமெரிக்க அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கணினிகளுக்கான மென்பொருள் மற்றும் பராமரிப்பு சேவைகளைச் செய்கின்றது. அதன் கணினிகளை ஊடுருவி அது சேவை வழங்கும் நிறுவனங்களின் கணினிகள் ஊடுருவப்பட்டுள்ளன. Solar Winds கணினிச் சேவை நிறுவனம் தனது மென்பொருள்களை புதுப்பிக்கும் (updating) பணியைச் செய்த போது அதன் மென்பொருளில் ஊடுருவிகள் தங்களது தீங்குநிரலியை (Malware) இணைத்து விட்டனர். அதனால் Solar Winds கணினிச் சேவை நிறுவனத்தின் மென்பொருட்களைப் பாவிக்கும் எல்லா கணினிகளையும் அந்த தீங்குநிரலி சென்றடைந்து தனது ஊடுருவல் பணியைச் செய்யத் தொடங்கியது. இதனால் Solar Windsஇன் முதன்மை நிறைவேற்று அதிகாரி பதவி விலகியுள்ளார். Solar Windsஇன் கணினிகள் ஊடுருவப்பட்ட செய்தி வெளிவர முன்னரே அதனது சில பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்து விட்டதும் அறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Solar Winds மீதான ஊடுருவல் நீண்ட காலம் நடந்த தாக்குதல் மட்டுமல்ல அமெரிக்காவின் தகவல்களின் தங்கச் சுரங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தகவல், மின்னஞ்சல்கள் மிக அதிக அளவினதாகும். இந்த ஊடுருவலின் போது தகவல் திருடப் பட்டது மட்டுமே நடந்துள்ளது. மென்பொருள்களைச் சிதைத்தல் கணினித் தொகுதிகளை செயற்பட முடியாமல் செய்தல் போன்ற அழிப்பு நடவடிக்கைகள் செய்யப் படவில்லை.

ஒரு வலிமை மிக்க நாடுதான் செய்திருக்க வேண்டும்

Solar Winds கணினிச் சேவை நிறுவனத்தின் அதிகாரிகளின் கருத்துப்படி தங்களது கணினித் தொகுதிகளில் இணைக்கப்பட்டுள்ல மென்பொருளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறியடித்து ஊடுருவுவதற்கு உயர் தொழில்நுட்பம், அதிக அளவிலான நிபுணர்கள், சிறந்த அனுபவம் தேவை என்பதால் அதை ஒரு வெளிநாடு ஒன்றுதான் செய்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் இத்தகைய ஊடுருவலை இரசியா அல்லது சீனாவால் மட்டுமே செய்ய முடியும் என்கின்றனர். தாக்குதலுக்கு பாவிக்கப் பட்ட மென்பொருள் FireEye எனவும் அறியப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றில் இருந்து அமெரிக்காவில் உள்ள ஓர் இடத்தில் உள்ள கணினிகளை இயக்குவதன் மூலம் ஊடுருவல் நடந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

இரசிய உளவுத்துறையின் நூற்றாண்டுக் கொண்டாட்டம்

இரசியாவில் FSB என்ற உள்நாட்டு உளவுத்துறையும் SVR என்ற வெளிநாடு உளவுத்துறையும் உள்ளன. இரசிய SVR உளவுத்துறையின் 100வது ஆண்டு விழா 2020 டிசம்பர் 20-ம் திகதி கொண்டாடப் பட்டது. இரசிய உளவுத்துறையின் தலைமையகத்தில் உரையாற்றிய முன்னாள் உளவாளியும் தற்போதைய இரசிய அதிபருமான விளடிமீர் புட்டீன் இரசியாவையும் அதன் மக்களையும் பாதுகாப்பதில் இரசிய உளவுத்துறையின் பங்களிப்பை மிகவும் பாராட்டினார். 100வது ஆண்டு நிறைவு நாளில் இரசிய உளவுத்துறைக்கு ஓர் ஊக்கம் கொடுக்கும் வகையில் இரசியா அமெரிக்காவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் ஓர் இணையவெளி ஊடுருவலைச் செய்ததா எனக் கருத இடமுண்டு. இரசிய SVR உளவுத்துறை சில மாதங்கள் உறங்கு நிலையில் இருந்து விட்டு பின் திடீரென அமெரிக்க இணையவெளியில் ஊடுருவலைச் செய்துள்ளது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் பதிலடி

இரசியாவில் இருந்து செய்ததாக கருதப் படும் ஊடுருவல் பல தடவைகள் நடந்துள்ளன. இதற்கு எப்போது, எங்கே, எப்படி அமெரிக்கா பதிலடி கொடுக்கப் போகின்றதுச் என்ற கேள்விக்கான பதிலை சரியாக அறிவது கடினம். பதில் ஊடுருவல் அமெரிக்கா மீதான ஊடுருவல்களை இன்னும் தீவிரமடையச் செய்யும். அதனால் இரசிய அதிபர் புட்டீனின் உத்தரவின் பேரில் இந்த ஊடுருவல் நடந்தது என்பதற்கான ஆதாரங்களுக்கு அமெரிக்கா காத்திருக்கலாம். பின்னர் புட்டீனின் சொத்துக்களை முடக்குதல் போன்ற நிதித்துறை தாக்குதல்களை அமெரிக்கா செய்து அவருக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பீடுகளை ஏற்படுத்த்லாம்.

கணினித்துறை நிபுணர்கள் இரசியாதான் செய்திருக்க வேண்டும் எனச் சொன்னாலும் தங்களால் அதை உறுதி செய்ய முடியாது என்கின்றனர். ஆனால் அமெரிக்காவின் இணையவெளிப்பாதுகாப்பு (Cyber Security) பாதுகாப்பற்றது என்பதை தம்மால் உறுதியாகக் கூற முடியும் என்கின்றனர்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...