Saturday, 25 April 2009

இலங்கைத் தமிழர் கொலை: குரலை மாற்றிய அமெரிக்கா.


இலங்கையில் சிங்களவரும் ஆரியரும் இணைந்து நடாத்தும் இனக்கொலை தொடர்பாக அமெரிக்கா தனது குரலை மாற்றியுள்ளது. எச்சரிக்கை என்ற பதத்தை பாவித்து விட்ட தனது அறிக்கையில் போரை உடன் நிறுத்தாவிடில் இலங்கையின் ஐக்கியமும் இனங்களுக்கிடையிலான இணக்கமும் ஆபத்துக்குள்ளாகும் என்றும் கவலை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்ளை வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவ்வறிக்கையில் பாதுகாப்பு வலயத்தில் எறிகணைகள் வீசுவதை உடன் நிறுத்தும் படி கேட்கப் பட்டுள்ளது. இலங்கை-இந்தியப் படைகள் இலங்கை அரசு பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த முதல் நாளில் இருந்தே பாதுகாப்பு வலயத்துள் வேதியியல் குண்டுகள் கொத்துக் குண்டுகள் (chemical bombs and cluster bombs) உட்பட பல பயங்கர ஆயுதங்களைப் பாவித்து தமிழ் இனக்கொலையை அரங்கேற்றி வருகின்றன.

இந்திய ஆதிக்கத்தை அமெரிக்கா விரும்பாது
இலங்கையில் இந்தியாவின் முற்று முழுதான ஆதிக்கம் நிலை நாட்டப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பது இதிலிருந்து

மேனன்-நாராயணன் கேட்கவில்லையா? கொடுக்கவில்லையா?




சிவ் சங்கர் மேனனும் நாராயணனும் இலங்கைக்கு திடீர்பயணம் மேற் கொண்டபோது தமிழ்நாட்டிலுள்ள உத்தரப் பிரதேச பேரினவாதிகளின் கொத்தடிமைகள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
போகிறார்கள் போர்நிறுத்தம் வரப் போகிறது என்று நம்பியிருந்தனர். தாம் தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்கலாம் என மகிழ்ந்திருந்தனர். இவ்விரு தமிழின விரோதிகளும் காங்கிரசுக் கட்சிக்கு அப்பால் இந்திய நலன்களுக்கு அப்பால் தமது சாதிய மேம்பாட்டை நிலை தளராமல் பார்த்துக் கொள்ளும் ஒரு கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
கேட்டு சம்மதிக்கவில்லையா? அல்லது கேட்கவில்லையா?
எவர் வற்புறுத்தினாலும் போர்நிறுத்தம் செய்யப் போவதில்லை என்று இலங்கை இனக் கொலையாளிகள் மீண்டும் கத்துகின்றனர். இவர்கள் இருவரும் போருக்குத் தேவையான வழங்களையும் தற்போதைய நிலையையும் மீளாய்வு செய்ய சென்றார்களா? அல்லது இவர்கள் போர் நிறுத்தம் கேட்டு இலங்கை இனக் கொலையாளிகள் மறுத்து விட்டார்களா?
இவ்விரு தமிழின விரோதிகளும் இலங்கை சென்று திரும்பிய பின் இனக்கொலையின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும். இதுவே கடந்த கால அனுபவம்.
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி போர்நிறுத்தம் செய்யும்படி இந்தியப் பிரதிநிதிகள் கோரவில்லை. தமிழ்நாட்டில் உள்ள உத்திரப் பிரதேச பேரின வாதிகளின் கொத்தடிமைகள் என்ன சொல்லப் போகிறார்கள். - ராஜுவ் கொலை - சகோதர யுத்தம்...என்பதைத்தவிர.

















Friday, 24 April 2009

சனியாள் கட்சிக்கு உயிர் கொடுக்க - போர் முடிந்த பின் போர் நிறுத்தம் கோரும் இந்தியா












இத்தாலிச் சனியாளின் கட்சிக்கு எதிராக தமிழின உணர்வாளர்களும் தமிழ்த் திரை உலகினரும் திரண்டெழுந்து செயல்படத் தொடங்கியிருப்பதால் தேர்தலில் பலத்த தோல்வியை அது சந்திக்க விருக்கிறது. வெறும் அறிக்கை மூலம் போர்நிறுத்தம் கோரிவந்த சனியாள் ஆட்சி இப்போது அதனால் தமிழர்களை ஏமாற்ற முடியாது என உணர்ந்து ஏதாவது செய்து தமிழர்களை ஏமாற்ற முற்படுகிறது.
சனியாளைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெறுவது இப்போதைய முதல் தேவை. தனது குடும்பத்துக்கான பழிவாங்கலை தேர்தலுக்கு பிறகும் செய்யலாம். அதற்கு தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதற்காக தனது ஆலோசகர்கள் சிவ் சங்கர் மேனனையும் நாராயணனையும் இப்போது இலங்கைக்கு அனுப்பி போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் படி கேட்கிறாள் அச் சனியன். தமிழ் தேசியவாதத்திற்கு எதிராக செயல்படும் மிக மிக மோசமான எதிரகள் இந்த இருவரும்.
முடியப் போகும் போரை நிறத்தப் போகிறார்கள்
இலங்கையைப் பொறுத்தவரை இன்னும் சில் தினங்களில் போர் முடிந்து விடும். அல்லது போரை நிறுத்திவிட்டோம் என்று சம்மா அறிவித்து விட்டு போரைத் தெடர்ந்து நடத்தலாம். சும்மா சாட்டுக்கு இலங்கை அறிவிக்கப் போகும் போர் நிறுத்தத்ததை தத்தளிக்கும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் துரும்பாக எடுத்துக் கொண்டு தாம் பெரிதாக சாதித்து விட்டதாக பிரச்சாரம் செய்து தப்பலாம் என்று தப்புக் கணக்கு போட்டுள்ளார்கள்.
தேர்தலுக்குப் பிறகு மேலும் கூலிப் படையினரை அனுப்பி இனக்கொலைக்கு தேவையான சகல உதவிகளும் செய்வோம். 300 மில்லியன் டொலர் கடன் தருவோம் போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று இவர்கள் இருவரும் இலங்கையைக் கோரலாம்.

Thursday, 23 April 2009

இத்தாலிச் சனியாளை தமிழ்நாட்டில் காலடி வைக்க மானமுள்ள தமிழன் அனுமதிக்கமாட்டான்.



















இந்த அட்டூழியங்கள் புரியும் இலங்கை அரசிற்கு உதவி ஒத்தாசை செய்யும் இத்தாலிச் சனியனை தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைக்க எந்த மானமுள்ள தமிழனும் அனுமதிக்க மாட்டான்.
.
யுத்தத்தை வழி நடத்துவது இந்தியப்படை.
.
யுத்தத்திற்கான தொழில் நுட்ப உதவிகளை அளிப்பது இந்தியப்படை
.
யுத்தத்திற்கான பயிற்சி அளிப்பது இந்தியப்படை.
.
யுத்தததிற்கான நிதி உதவிகளை வழங்குவது இந்திய அரசு.
.
களத்தில் இருந்து இரசாயன ஆயுதங்களை வீசுவது இந்தியா


கையோங்கி நின்றது ஈழத் தமிழ்த் தேசியவாதம்
கை நடுங்கி நின்றது ஈனச் சிங்களப் பேரினவாதம்
ஒரு கை பார்க்க வந்தாள் இத்தாலிச் சனியாள்
கை கொடுத்து நின்றது பார்பனியச் சாதியவாதம்
கைகள் இணைத்துக் கொண்டன கொலைவெறி நாய்கள்
உத்தரப் பிரதேசத்துப் உதவாக்கரைப் பேரினவாதம்
சின்னத்தனமான சிங்களப் பேரினவாதத்திற்கு
நூறு மில்லியன் டொலர்களை அள்ளிக் கொடுத்தது
சீன எதிரியுடன் இந்தியாவிற்குப் போட்டா போட்டி
இனக் கொலைக்கு யார் கை கொடுப்பது என்று
ஆறாயிரம் ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள்
அடியெடுத்து வைத்தன ஈழ மண்ணில்
பல்லாயிரம் சிங்களப் கொலை வெறி நாய்களுடன்
கைகள் கோத்துக் கொண்டன
குழந்தைகளைக் கொல்ல
கையில்லா உடல்களும்
உடலில்லாக் கைகளும்.

Wednesday, 22 April 2009

இலங்கை - ஐநாமீது நற்பணி நிறுவனங்கள் பலத்த குற்றச்சாட்டு


ஐநாவின் மெளனமே கடலோர இரத்தக் களரிக்கு இட்டுச் சென்றது

பத்திரிகையாளர்களையும் அரச சார்பற்ற நற்பணி நிறுவனங்களையும் போர் நடக்கும் இடத்துக்கு அனுமதிக்காததே இலங்கையில் தமிழர்களின் கடலோர இரத்தக் களரிக்கு இட்டுச் சென்றன என்று அரச சார்பற்ற நற்பணி நிறுவனங்கள் பலவும் ஐக்கிய நாடுகள் சபையில் குற்றஞ் சாட்டியுள்ளன. Joseph Cornelius Donnelly of CARITAS International ஐநாவின் மெளனமே இந்த அனுமதி மறுப்புக்கு காரணமானது என்று கூறினார்.

அமெரிக்காவின் பயங்கர வாத(?) தடை சட்டம்
Operation USA இன் நிம்மி கெளரிநாதன் அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புச் சட்டமே தமது வட-கிழக்கு இலங்கையில் தமது பணிகளைப் பிரச்சினைக்குள்ளாக்கியது என்று கூறினார். இது தொடர்பாக கதைக்காமல் தாம் தடை செய்யப் பட்டோம் என்றும் கூறினார்.

ஐநாவின் சிறந்த நோக்கங்கள் காண்பிக்கப் படவில்லை
முன்னாள் ஐநா அதிபர் கோபி அனனின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஜேம்ஸ் ரொவுப் அவர்கள்(James Traub, policy director of the Global Center for the Responsibility to Protect) ஐநா தனது சிறந்த நோக்கங்களை இலங்கை விடயத்தில் காண்பிக்கத் தவறியது என்று குற்றம் சாட்டினார்.

இலங்கைக்கு பயந்த ஐநா
Robert Templer of the International Crisis Group, ஐநா இலங்கைக்கு பயந்து நடந்து கொண்டது என்றும் அதனால் பயங்கர விளைவுகள் ஏற்பட்டன என்று குற்றம் சாட்டினார். அரச நடவடிக்கைகளால் இறந்தவரகளின் எண்ணிக்கை தெரிந்தும் ஐநா வெளியிடாமல் இருந்ததையும் அவர்கள் குற்றம் சாட்டினர். தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு தாம் செல்லத் தடை விதித்ததையும் அவர்கள் கண்டித்தனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அனா நெய்ஸ்டற் அவர்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்: ஒரு சிறிய நாடான இலங்கைக்கு ஏன் பயந்து நடந்தது? அவரது மறு கேள்வி இலங்கை எப்படி அரசு சார்பற்ற நற்பணி நிறுவனங்களை வெளியேற்ற முடியும்? அவரது கேள்விகளுக்கு விடை வழங்கப் படவில்லை. அத்துடன் அவர் நிற்கவில்லை தமிழர் தடுப்பு முகாம்களுக்கு நிதி வழங்குவது சட்ட பூர்வமானதா என்றும் கேள்வி எழுப்பினார்

ஐநாவின் பொய் நா - வில்லங்கமான வில்லன் நம்பியார்



இந்திய மலையாளி நம்பியார்.
ஐக்கிய நாடுகள் சபையால் அனுப்பப்பட்ட "சிறப்புத்தூதுவர்" விஜய் நம்பியார் பாதுகாப்புச்சபைக்கு அறிக்கை சமர்பிக்க மறுத்து அடம் பிடிக்கிறார். சீனா இரசியா போன்ற நாடுகள் மூடிய அறைக்குள் இலங்கை அவலம் தொடர்பாக கலந்துரையாட ஒத்துக்கொண்டபோதும் மூடிய அறக்குள் தன்னும் தன் அறிக்கையை சமர்பிக்க முடியாதென்று அடம் பிடிக்கிறார் இந்த வில்லங்கமான வில்லன்.


இந்தியாவின் சதி?

இவர் இப்படி மறுப்பதற்கு இந்தியாவைத்தவிர வேறு யார் காரணம்? மூடிய அறைக்குள் கூட விவாதிக்கக் கூடாத அளவிற்கு நிலமை மிக உணர்ச்சி மயமானது என்று நம்பியார் அடம் பிடிக்கிறார். இது அரசியல் அல்ல மனிதபிமானம் மிக்கது என்று கூறுகிறார். இலங்கை அரசு போரை முடிப்பதற்குத் தேவையான கால அவகாசம் வழங்குவதை தவிர வேறு காரணம் என்ன இருக்கிறது இந்த நம்பியாருக்கு?


ஒரு வல்லரசு நாடு எதிர்ப்பு

ஐந்து வல்லரசுகளில் ஒன்று நம்பியாரின் நிலையை கடுமையாக எதிர்த்துள்ளது. அது பிரித்தானியாவாக இருக்கலாம்.


நம்பியார் மீது சட்ட நடவடிக்கை!

நம்பியாரின் செயலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை(subpoena) எடுக்கப் படலாம்.


subpoena
A writ issued by a court or other authorized body requiring the attendance of a person at a stated time and place, subject to penalty for non-compliance.

கல்லான கன்னி


கல்லைக் கோவிலாக்கினான் இராஜஇராஜ சோழன்
கல்லை அணையாக்கினான் அந்தக் கரிகால மன்னன்
கல்லைச் சிலையாக்கினான் மாமல்ல பல்லவன் – நீயேன்
கல்லாய் உன்மனதை ஆக்கினாய் காரிகையே.
.
சிலம்புடைத்தாள் கண்ணகி கணவன் மானம் தனைக் காக்க
வில்லுடைத்தான் ராமன் காரிகை யொருத்தியின் கைப்பிடிக்க
கல்லுடைத்தான் காஞ்சியிலே சிலைகள் பல வடிக்க – என்
நெஞ்சுடைத்தாய் நேரிழையே எக் காரணத்திற்காக.

நண்பனின் நண்பனான நண்பனா?



சோனியா-கருணாநிதி-பிரபாகரன்
நண்பனின் நண்பனான நண்பனா?

சோனியா-பிரபா-கருணாநிதி
எதிரியின் நண்பனான எதிரியா?

ராஜபக்சேவுக்கு
காலக்கெடுவா? கால அவகாசமா?

இந்தியா-இலங்கை-தமிழர்
பிராந்திய நலனா? ஒரு குடும்பத்தின் பழிவாங்கலா?


மொத்தத்தில் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறாங்களய்யா!!!!

Tuesday, 21 April 2009

காலம் கடந்த பின் காலக்கெடு - காலக்கேடு


போர் நிறுத்தம் தொடர்பாக இலங்கை அரசிற்கு காலக்கெடு விதிக்கும்படி மாண்பு மிகு முதல்வர் கருணாநிதி அவர்கள் மத்திய அரசிற்கு தந்தி அனுப்பியுள்ளார்.
இந்திய அரசு இலங்கையை போர்நிறுத்தம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தது அல்லது வேண்டுகோள் விடுப்பது போல பாசாங்கு செய்தது. போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துவிட்டது இலங்கை. இந்தியா இது தொடர்பாக மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை. அட செய்யாமல் இருந்தாலாவது பரவாயில்லை. 50,000 எறிகணைகளைக் கொடுத்ததாம் இலங்கைக்கு.
அமெரிக்கா போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கையை கேட்டது. இலங்கை மறுத்தது. அமெரிக்கா போர்நிறுத்தம் செய்யாவிடில் சர்வ தேச நாணயத்தின் கடன் கிடைக்காது என்று மறைமுகமாக தெரிவித்து விட்டதாம். முதுகெலும்புள்ள நாடு!
இந்தியா கொல்கிறதா?
இந்தியாவின் போர்நிறுத்தக் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது. தொடர்ந்து இனக்கொலை நடை பெறுகிறது. இதற்காக இந்தியா தனது கண்டனத்தை இலங்கைக்கு தெரிவித்திருக்கலாம். குறைந்த்தது ஒரு வருத்தத்தையாவது தெரிவித்திருக்கலாம். இந்தியாவின் ஏற்பாட்டில்தான் எல்லாக் கொலைகளும் நடக்கிறதா?
இலங்கைக்கு வழங்கும் கால அவகாசமா? காலக் கெடுவா?
இலங்கை அரசு தனது போரில் வெற்றி பெற இன்னும் சிலநாட்கள் தான் தேவை என் நினைக்கிறது. அதற்கு ஒரு கால அவகாசம் தேவை.
இன்று கலைஞர் கலக்கெடு விதிக்கும் படி கேட்கிறார். சில நாட்க்ள் கழித்து இந்தியா ஒரு காலக் கெடுவை விதிக்கும். அதற்குள் இலங்கை போரை முடித்துவிட்டு போர் நிறுத்தம் என்று சொல்லும். கலைஞர் அப்போது சொல்லுவார் தன்னால்தான் இலங்கை போரை நிறுத்தியது என்று.
என்னமாதிரி ஏமாத்துறாங்கள்!

தமிழர் கொலை - மூடிய கதவுகளுக்கு நடுவில் நடந்த ஐநா கூட்டம் - நம்பியாரின் வில்லத் தனம்

பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதியின் வலியுறுத்தலின் பேரில் மூடிய கதவுகளுக்குள் இலங்கை நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடந்தது.

கடலோர இரத்தக் களரி
சூடனில் நடக்கும் கொலைகளை விட மோசமான கொலைகள் இலங்கையில் நடந்தபோதும் இலங்கைக் கடலோர இரத்தக் களரி பற்றிய விவாதம் ஐநாவின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவில்லை. இருந்த போதும் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் இலங்கை தொடர்பான கலந்துரையாடல் மூடிய கதவுகளுக்கு நடுவில் நடந்தது. விடுதலைப் புலிகள் இக் கூட்டத்தை தமக்கான சட்டபூர்வ அங்கீகாரமாகப் பாவிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சீன அங்கு தெரிவித்ததாக நம்பப்படுகிறது. இக்கருத்து முழுக்க முழுக்க இலங்கையின் கருத்தாகும்.

நம்பியாரின் வில்லத் தனம் – கடலோரக் கொலைகள்
ஐநா தனது சிறப்புத் துாதுவராக விஜய் நம்பியார் என்னும் இந்தியரை இலங்கைக்கு அனுப்பியது. அவர் சீனாவாலும் விரும்பப்படுபவர். அவரின் சகல கோரிக்கைகளையும் இலங்கை நிராகரித்து விட்டது. அவர் தமது பயணம் தொடர்பான அறிக்கையை ஐநாவிற்கு இன்று வரை சமர்ப்பிக்கவில்லை. அவர் செவ்வாய் கிழமை ஐநா செல்வார். புதன் கிழமை தான் அறிக்கை சமர்ப்பிப்பார். அவர் இலங்கைக்கு கால அவகாசம் அளிப்பதற்காகவே இப்படிச் செய்வதாக அறிவிக்கப் படுகிறது. புதன்கிழமைக்குள் இலங்கை தனது கடலோரக் கொலைகளை அரங்கேற்றி விடலாம். நம்பியாரின் அறிக்கைக்கு இப்போது பிரித்தானியா வலியுறுத்தி வருகிறது.

சீன இந்தியக் கூட்டமைப்பு
தமிழர் இனக்கொலைக்கு இலங்கைக்கு சாதகமாக இந்தியாவும் சீனாவும் நடந்து கொள்வதால் மற்ற நாடுகள் ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Monday, 20 April 2009

இலண்டன் தமிழர் ஆர்ப்பாட்டம் காணொளியில்

பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன்அதிகாலை 5 மணிக்கே குளிரையும் பொருட் படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் குவிந்தனர். பாடசாலைகளைப் புறக்கணித்து மாணவர்களும் வேலைக்குச்செல்லாமல் பெரியோருமாக அங்கு திரண்டனர்.

தடையை மீறி புலிக்கொடி
காவல்துறையினரின் தடையை மீறி பல புலிக்கொடிகள் அங்கு பறந்தன. முதலில் தடுத்த காவல் துறையினர் பெருமளவு மக்கள் திரண்டவுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை மறியல்
மக்கள் தொகை கூடக் கூட கவலர்கள் தடுப்புக்களை அகற்றி ஒதுக்கப்பட்ட இடத்தை விரிவு படுத்தினர். வன்னியில் பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி கேட்டவுடன் மக்கள் கொதித்தெழுந்து சாலைகளில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்களால் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

சாகும் வரையான உண்ணாநிலைப் போர்.
இத்தனைக்கும் மத்தியில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை 14வது நாளாகத் தொடர்கிறார்.

காணொளி 1
UN! UN! - TAKE ACTION
INDIAN ARMY - GO HOME
SRILANKAN GOVERNMET - TERRORIST

காணொளி - 2

We want - ceasefire

Permanent - Ceasefire

Immediante - ceasefire

காணொளி - 3

OUR NATION - TAMIL EELAM

STOP USING CHEMICAL WEAPONS

Two minutes of silence observed



தமிழர் ஆர்ப்பாட்டத்தால் - இலண்டனில் பெரும் களேபரம்

பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் திரண்டு பெரும் ஆர்ப்பாட்டம் நடாத்துவதால் பெரும் களேபரம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சில தமிழர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வன்னியில் பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி கேட்டவுடன் மக்கள் கொதித்தெழுந்து சாலைகளில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாலை 5 மணிக்கே குளிரையும் பொருட்படுத்தாமல் பாராளமன்ற சதுக்கத்தில் குவிந்தனர்.

படங்கள் காணொளிகள் விரைவில் இங்கு பதியப்படும்.

Sunday, 19 April 2009

கருணாநிதியை கோமாளி என சிங்களவர்கள் கிண்டல்.

கருணாநிதி ஒரு சாணக்கியர் என்றும் அவர் தேர்தல் இலாபத்தைக் கருதியே பிரபாகரனை தன் நண்பன் என்றும் பயங்கரவாதி அல்ல என்றும் கூறினார் என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியின் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான கருத்தால் ஆத்திர மடைந்த சிங்களவர்கள் அவரை ஒரு கோமாளி என விமர்சித்துள்ளனர். டெய்லி மிரர் எனும் கொழும்பில் இருந்து வெளி வரும் ஆங்கிலப் பத்திரிகையில் சிங்கள வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள்:

Karunanidhi is a leader of political jokers of Tamil Nadu. The politicians have been cheating the people for their profits only.The people still unable to understand the jokes - Wannian

No one in their right mind even bother to pay attention to what this TN clown got to say. - gerard

கலைஞருடன் முரண்படும் காங்கிரஸ் - பிரபாகரன் பயங்கரவாதியே


காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கபில் சிபால் பிராபாகரன் பயங்கரவாதியே என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கர வாத அமைப்பாகக் கருதுவதாகவும் அதன் நடவடிக்கைளில் சம்பத்தப் பட்டவர்கள் அனைவரும் பயங்கர வாதிகளே என்றும் கபில் சிபால் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீவிரவாதியல்ல என்றும் அவர் எனது நண்பர் என்றும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தனித் தமிழ் ஈழ லட்சியம் உண்மையானதும் நேர்மையானதும் தான் என்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறியுள்ள அவர், தீவிரவாதம் என்பது வேறு என்று கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் சில தீவிரவாத சக்திகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கபில் சிபால் மேற்படி கருத்தை வெளியிட்டதுடன் கருணாநிதியின் கருத்து அவரது சொந்த அபிப்பிராயம் என்றும் கூறினார்.

தேர்தல் நெருங்கினால் என்ன என்னவோ எல்லாம் சொல்லுவாங்கள்.

சோனியா கலக்குவாரா? கலங்குவாரா?


நேரு-காந்தி குடும்பத்தின் பரம்பரைத் தொழில் இந்தியாவை ஆள்வது. சஞ்சை காந்திக்கு மகனாக வருண் பிறந்தபோது இந்தியாவின் அடுத்ததிற்கு அடுத்து பிரதம மந்திரி பிறந்து விட்டார் என காங்கிரசார் மகிழ்ந்து கொண்டனர். இந்தியாவின் தலைவிதி அப்படி. அண்மையில் இலங்கைச் சிக்கலில் சாதிய வெறியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு பாரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது இக்குடும்பம்.

இலங்கையில் தோட்டங்களில் தொழிலாளிகளாக இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டபோது ஜவகர்லால் நேரு அது உள் நாட்டுப் பிரச்சனை என்று கூறித் தட்டிக் கழித்துக் கொண்டார். இலங்கை அமெரிக்கா பக்கம் சாய்ந்த போது தமிழர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து சிங்களவர்களுடன் சண்டை பிடிக்கும் படி துாண்டினார். ராஜுவ் காந்தி தமிழர்களின் ஆயுதங்களைப் பறித்து தனது படைகளை அனுப்பி தமிழர்களை கொன்று கொள்ளையடித்து கற்பழித்து அட்டூழியங்கள் பல புரிந்தார். சோனியா காந்தி திரைமறைவாக சிங்களவர்களுக்கு சகல உதவிகளையும் செய்து தமிழர்களைக் கொன்றொழிக்கவும் தமிழ் தேசிய வாதத்தை இல்லா தொழிக்கவும் முயலுகிறார்.

சோனியா காந்தி இப்போது தேர்தலை எதிர் கொள்கிறார். இந்திரா காந்தியின் கொலையை ஒட்டி நடந்த இனக் கலவரத்தில் சீக்கியர்களின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களைத் தண்டிக்காத காரணத்தால் சீக்கியர்களின் ஆத்திரத்துள்ளாகி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி இவரது கட்சிக்கு பெரும் சவாலாக உருவெடுத்து விட்டது. இலங்கை இனக் கொலைக்கு இவருக்கு பங்கிருப்பதாக தமிழின உணர்வாளர்கள் அனைவரும் நம்புகிறார்கள். இவர்களின் உணர்வலைகள் இனி வரும் நாட்களில் மேலும் பொங்கி எழும்.

தேர்தலுக்கு முன் தமிழ் தேசிய வாதத்தை ஒழித்து இலங்கை அரசை ஒரு அரைவேக்காட்டுத் தீர்வை முன்வைத்து தனது காங்கிரஸ் கட்சிதான் இலங்கையில் தமிழர்களை தொன்று தொட்டே பாதுகாத்து வருகிறது என்பதையும், தாம் இல்லாவிட்டால் தமிழர்கள் அனைவரும் என்றோ கொன்றொழிக்கப் பட்டிருப்பர் என்ற பொய்ப்பிரச்சாரத்தையும் முன்வைத்து தமிழர் வாக்குகளைப் பெறலாம் என்ற சோனியாவின் கனவு பலிக்கவில்லை. இவரை இம்முறை தேர்தல் கலங்கடிக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...