Saturday, 24 July 2010
ஹைக்கூ - வெள்ளாடை விதவைக்குப் பட்டாடை..
எழ எழ விழுவோம்
மேசையிலிருந்து விழுந்தது புத்தகம்
அப்படியே இருக்கட்டும்
மீண்டும் விழாமலிருக்க
செய்வன திருந்தச் செய்
வந்து செய்தது சரியில்லை
மீண்டும் வருவார்
கடவுள் அவதாரம்
இருளரசு
மந்திரிகள் சபையுண்டு
அதற்கு நிழலுமுண்டு
ஒளி எங்கே
மறுவாழ்வு
வெள்ளாடை விதைவை
பட்டுச் சேலை உடுத்தாள்
வானவில்
Friday, 23 July 2010
1983 ஜூலை இனக் கொலையை இந்தியா ஏன் தடுக்கவில்லை?
1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் நாள் இலங்கையில் இனக் கலவரம் என்ற போர்வையில் இடம்பெற்ற இனக் கொலையைப் பற்றி ஆராய்ந்த பலரும் ஒரு கருத்தை தெளிவாகக் கூறினர்: இது திட்டமிட்டு நடத்தப் பட்டது.
இக்கலவரம் தொடர்பான கதைகள் 1981இல் இருந்தே ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பீக்க வேண்டும். கொழும்பில் அவர்கள் சொத்துக்களை அழித்து அவர்களை அங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும். இப்படியாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்து 1981இல் இருந்து பரவி வந்தது.
திட்டமிட்டவர்கள்: சிங்களப் பேரின வாதிகள்.
சம்பந்தப் பட்டவரகள்: அரசியல் கட்சிகள், காவல்துறையினர், அரச படையினர், காடையர்கள்.
ஜேவிபியின் பங்கு
அரசாங்கம் தமிழர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கத் திட்டமிட்டது என்றும் கூறப்பட்டத்து. அதேவேளை தமது போராட்டத்தை நசுக்கிய இந்தியாவைப் பழிவாங்க ஜேவிபி திட்டமிட்டதாம். அத்துடன் தமிழ் முதலாளிகளுகு எதிரான தனது நடவடிக்கையையும் எடுக்கத் திட்டமிட்டதாம். விளைவு கொழும்பில் இருந்த பல தமிழரல்லாத வட இந்தியரும் அவர்களது சொத்துக்களும் வர்த்தக நிலையங்களும் தாக்கப் பட்டன. ஹைட்ராமணி, குண்டன்மால்ஸ், ஜffர்ஜீஸ் போன்ற தமிழர் அல்லாதவர்களின் நிறுவனங்கள் தாக்கியழிக்கப் பட்டன. இந்த இனக் கொலை ஒருவாரமாக நடை பெற்றது.
இந்தியாவிற்கு தெரியாதா?
இந்தியாவின் உளவுத்துறை இலங்கையில் நன்கு செயற்பட்டு வந்தது. இதற்கான சான்று:
இலங்கையில் ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியினர் செய்த ஆயுதப் புரட்சியைஅடக்கியவிதம். இந்திரா காந்தி அம்மையார் மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளை தனது உளவுத்துறை மூலம் நன்கு கவனித்து வந்தார். இலங்கையிலும் பார்க்க இந்தியா அதன் நடவடிக்கைகள் பற்றி நன்கு அறிந்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணி ஆயுதப் புரட்சி தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்தியா வெளிநாட்டமைச்சு தமது கடற்படைக் கப்பல் ஒன்று உங்கள் நாட்டுக்கு அண்மையில் பழுதடைந்து விட்டது உங்கள் கொழும்புத் துறை முகத்தில் நுழைய அனுமதி வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கேட்டுப் பெற்று கொழும்பில் ஒரு கடற்படைக் கப்பல் வந்துவிட்டது. அதே பாணியில் மறுநாள் இன்னொரு கப்பலும் வந்துவிட்டது. இரு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் நிறைய கூர்க்காப் படையினர் தயார் நிலையில் கொழும்புத் துறைமுகத்தில்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதப் புரட்சி தொடங்கியது இலங்கை அதிகாரிகள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயக்காவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவர் சொகுசுப் படமாளிகை ஒன்றில் ஆங்கிலப் படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதற்குள் நாட்டின் சிலபாகங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள். உதவிக்கு சிறிமாவோ இந்திரா காந்தியைத் தொடர்பு கொண்டார். இந்திரா அம்மையார் சொன்னார் "ஆம் பிரச்சனை இல்லை எங்கள் இரு கப்பல்கள் நிறைய வீரர்கள் கொழும்புத் துறைமுகத்தில் நிற்கிறார்கள்." பின்னர் இந்தியாவிலிருந்து ஒரு தொகை உலங்கு வானூர்திகளும் இலங்கை வந்தன. ஜேவிபியின் புரட்சி அடக்கப் பட்டது.
இப்படிப்பட்ட இந்தியாவிற்கு இலங்கையில் பாரிய இனக்கொலைக்கான திட்டம் 1983இல் தீட்டப் பட்டது தெரியாமல் இருந்திருக்குமா?
அப்போது இலங்கை தொடர்பாக இந்தியாவின் பலம் என்ன?
பங்களாதேசப் போரின் போது இலங்கையூடாக பாக்கிஸ்தானிய விமானங்கள் கட்டுநாயக்காவிமன நிலையத்தைப் பாவித்து பறப்புக்களின் ஈடுபட்டன. இது தொடர்பாக இந்தியாவில் சர்ச்சை எழுந்தபாது அப்போதைய பாதுகாபபு அமைச்சர் ஜெகஜீவன் ராம் கூறியது: இலங்கை எமக்கு எதிராக செயற்படுமானால் ஒன்பது நிமிடங்களில் எம்மால் இலங்கையை எமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியும். அப்படிப் பட்ட இந்தியா ஒருவாரமாக நடந்த இனக் கொலையை தடுக்க முடியாமற் போனது ஏன்?
எங்க ஏரியா உள்ளே வராதே! This is my backyard.
1983-ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தைத் தொடர்ந்து இந்திரா காந்தி அம்மையார் தான் செல்லும் நாடுகளில் எல்லாம் இலங்கை இனப் பிரச்சனையப் பற்றி கதைத்து வந்தார். கதைத்து அவர் வலியுறுத்தியது: இலங்கையின் இனப்பிரச்சனை எனது நாட்டில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எனது நாட்டின் பாது காப்புடனும் பிராந்திய ஒருமைப் பாட்டுடனும் சம்பந்தப் பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் உரிமை எனக்கு உண்டு என்பதை வலியுறுத்தி அதைப்பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ளச் செய்தார். இலங்கையை தனது பிடிக்குள் இறுக்கினார் இந்திரா அம்மையார். இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதற்று இனக் கொலை அனுமதிக்கப் பட்டதா?
பி. கு: பின்னர் வந்த ராஜீவ் காந்தி எல்லாவற்றையும் கெடுத்தார்.
Thursday, 22 July 2010
ஹைக்கூ - முத்தையா முரளியின் நிறம் என்ன?
சிசுக்கொலை
தமிழீழம் பெண் குழந்தையா
முள்ளிவாய்க்காலில் கொடுத்தனர்
கள்ளிப் பால்
மாற்றான் தாய்
இந்தியாவிற்கு இரு தாரமா
மாற்றாள் பிள்ளைகளுமா
தமிழ் மீனவர்கள்
மானிட மறதி
தேவை மனிதனிற்கு
நினைவூட்டற் கடிதம்
யாரென்றுணர
மேக மோகம்
மேகத் தம்பதியரின்
கட்டில் ஒலி
முழக்கம்
பாகுபாடு
அவன் கையசைவில் சந்தேகம்
அதன் நிறம் கறுப்பு
முத்தையா முரளீதரன்
Facebook புரட்சி
இணைய உலகில் ஆரம்பித்து ஆறு வருடங்களில் Facebook பல புரட்சிகளைச் செய்துள்ளது.
ஐம்பது கோடி மக்கள் Facebook இணைந்திருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு முன் ஒன்றரைக் கோடியாக இருந்த தொகை இப்படிப் பெருகி இருக்கிறது.
- உலகத்தில் பன்னிரண்டு பேரில் ஒருவர் Facebook இல் இணைந்திருக்கிறார். Facebook ஒரு நாடாக இருந்தால் அது உலகின் மூன்றாவது பெரிய நாடாகும்.
- பிரித்தானியாவில் மூன்றில் ஒருவர் Facebook இணைந்திருக்கிறார்.
- பலருக்கு Facebookஇல்லாமல் உலகமே இல்லை என்றாகிவிட்டது. கைப்பேசிகளைப் போல Facebookம் வாழ்க்கையின் ஒரு அம்சமாகிவிட்டது.
- Facebook மார்க் ஜுக்கர்பேர்க்(இப்போது 26 வயது என்பவரால் அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது.
- ஐம்பத்தி இரண்டரைக் கோடி பிரித்தானிய பவுண்கள் பெறுமதியான விளம்பர வருமானம் Facebook சென்ற ஆண்டு பெற்றது.
- மாதமொன்றிற்கு ஏழாயிரம் கோடி மனித நிமிடங்கள் Facebookஇல் செலவழிக்கப் படுகிறது.
- ஒவ்வொரு மாதமும் முன்னூறு கோடி படங்கள் Facebook தரவேற்றம் செய்யப் படுகிறது.
- ஒருவர் சராசரியாக மாதமொன்றிற்கு 90 பதிவுகளை Facebookஇல் செய்கிறார்.
- சராசரியாக ஒருவருக்கு 130 நண்பர்கள் Facebook இருக்கின்றனர். (எனக்கு 4950 நண்பர்கள்). ஒருவர் ஆகக் கூடியது 5000நண்பர்களை வைத்திருக்கலாம்.
- தமிழ் உட்பட 70 மொழிகளில் Facebook கணக்குகளை ஆரம்பிக்கலாம்.
- 550,000இற்கு மேற்பட்ட செயற்படு மென் பொருட்கள்(applications) Facebookஇல் உள்ளன.
- ஒவ்வொரு நாளும் ஆறு கோடிப் பேர் தங்கள் நிலைப்பாடுகளை பதிகிறார்கள்.(Status update)
சத்துணவான காதலி முத்தம்
Wednesday, 21 July 2010
சும்மா இருப்பதாயின் மிக உயர்ந்த இடம் வேண்டும்.
அது ஒரு சொகுசான மாளிகை. அங்கு ஒரு நாய் சும்மா மெத்தைக் கதிரையில் படுத்திருப்பதும் சாப்பிடுவதுமாக இருந்து வந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த கோழிக்குஞ்சுக்குத் தானும் சும்மா இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன என்ற எண்ணம் வந்து விட்டது. தான் போய் ஒரு மெத்தைக் கட்டிலில் ஏற முயற்சித்தது. முடியவில்லை. பல முறை முயற்ச்சித்தது முடியவில்லை. நிலத்தில் படுத்து நித்திரை செய்து கொண்டிருந்த ஒரு அடர்த்தியான ரோமங்களைக் கொண்ட பூனையை இதுவும் ஒரு உல்லாச இருக்கை என்று எண்ணி அதன் மேல் உட்கார்ந்து ஓய்வெடுத்தது. சிறிது நேரத்தில் பூனை விழித்து விட்டது. லபக்கென்று அந்த கோழிக் குஞ்சை விழுங்கி விட்டது.
- இந்தக் கதையின் நீதி: நீ சும்மா இருந்து வாழ்க்கையை ஓட்டுவதாயின் மிக உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.
Tuesday, 20 July 2010
ஹைக்கூ கவிதைகள் - கண்ணில் விழுந்த காயம்
Monday, 19 July 2010
சிதம்பரம் ஐயா நீங்கள் சுத்தப் பேமானியாய் இருக்கிறீர்களே!
சிவகங்கை தொகுதியில் ஏதோ செய்து வெற்றி பெற்ற ப. சிதம்பரம் ஐயா அவர்கள் இலங்கைத் தமிழர்கள் பற்றி தனது திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.
- சிதம்பரம் ஐயா சொன்னார்: நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது.
- சிதம்பரம் ஐயா சொன்னார்: ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிரு ந்தால் இன்று இலங்கையில் இரு மாகாணங்களில் பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.
உங்கள் ராஜீவ் காந்தி என்ற அரசியல் முட்டாள் தமிழர்களை ஆயுதங்களை ஒப்படையுங்கள் உங்கள் பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம் என்றார். சகல இயக்கங்களும் ஆயுதங்களை ஒப்படைத்தன. விடுதலைப் புலிகள் ஒப்படைக்கவில்லை என்று பறித்தார். அதன் பின்னர் இரண்டு இலட்சம் தமிழர்கள் கொல்லப் பட்டனர். தமிழர்களுடன் தான் செய்த கனவான் ஒப்பந்தத்தை மீறிய அயோக்கியனல்லவா உங்கள் ராஜிவ் காந்தி.
- சிதம்பரம் ஐயா அண்மையில் சொன்னார்: போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இந்தியா வீடுகள் அமைப்பதற்கு நேரடியாக உதவி செய்யும். அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் வைப்புச் செய்யும்.
- சிதம்பரம் ஐயா சொல்கிறார்: இன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது.
இலங்கையில் அவசரகாலச் சட்டம் பயங்கரவாதச் சட்டம் எல்லாம் இப்போதும் அமூலில் உள்ளது ஐயா சிதம்பரம் அவர்களே! அமைதி திரும்பிய நாட்டில் இது எல்லாம் ஏன் ஐயா?
சிதம்பரம் ஐயா நீங்கள் சுத்தப் பேமானியாய் இருக்கிறீர்களே!
உங்கள் இந்திய அரசிற்கு திராணி இருந்தால் ராஜீவ்-ஜே. ஆர் ஒப்பந்தப்படி இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தை முழுமையாக அமூல் செய்யுங்கள்.
நாணயமில்லா ஆட்சியின் நாணயக் குறியீடு
ஆயுதத்தை ஒப்படைத்துவிடு
பாதுகாப்போம் எனக்கூறி
எமை அழித்த அயோக்கியரின்
ஆட்சியின் நாணயக் குறியீடு
தமிழனை கொன்றொழிக்க
பணம் கொடுத்து பலம் கொடுத்து
இருபதாயிரம் படை கொடுத்த
இத்தாலிச் சனியனின் நாணயக் குறியீடு
சொந்த நாட்டு மீனவர்கள்
கடலில் சுட்டுக் கொல்லப்பட
வாய் மூடி மௌனிதிருக்கும்
கையாலாகாதோரின் நாணயக் குறியீடு
இனக் கொலை இலங்கைக்கு
எதிரி சீனாவோடிணைந்து
ஐநா மன்றில் பாராட்டுத் தெரிவித்த
பாதகக் கும்ப்பலின் நாணயக் குறியீடு
Sunday, 18 July 2010
துயரப்பட முடியாது துணை வேண்டும்
பரந்த மனது
எனக்குக் கிடைத்த
காதலி போல்
எல்லோருக்கும்
கிடைக்க வேண்டும்
நான் மட்டும் தனியாக
இந்த உலகில்
துயரப்பட முடியாது
துணை வேண்டும்
அதுவும் வந்தது
பெண் துணையின்றி
இருந்த எனக்கு
பெண் துணையாக வந்தாள்
பிரச்சனை இன்றி
இருந்த எனக்கு
பிரச்சனையாகவும் வந்தாள்
மாறாத உணர்வு
உன்னை முதல் முதலாக
பார்த்தில் இருந்து
நாம் காதல் வசப்பட்டதில் இருந்து
நாம் கைப்பிடித்ததில் இருந்து
உன் மீதான என் உணர்வு
என்றும் மாறவில்லை
அன்றும் தலையிடிதான்
இன்றும் தலையிடிதான்
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...