![](http://4.bp.blogspot.com/_rdxGIaasPPM/SYdOLUXxVCI/AAAAAAAAALA/sJFBpjqOipk/s400/jenolia1.jpg)
என்னைச் சாகடிக்க வந்தவளே
என் மனம் நோகடிக்க செய்தவளே
என் தூக்கம் எடுத்துச் சென்றாளே
பெரும் துயரம் கொடுத்து பிரிந்தாளே
சோலை வனமாய் அவளிருந்தாள் - எனைப்
பாலை வனமாய் ஆக்கிச் சென்றாள்.
கனவுகளை கானல் நீராக்கிச் சென்றாள்
நெஞ்சினை கனலாய் கொதிக்க வைத்தாள்
ஒத்துவராக் காதலியாய் அவளிருந்தாள்
ஒற்றைக் காலணியாய் ஆக்கிச் சென்றாள்
படுக்கையை பழுதாக்க வந்திருந்தவள்
தலையணை ஏனோ நனைக்க விட்டாள்
என் கவிதையும் வரியின்றித் துடிக்கிறதே
வரும் செற்களும் சரியின்றித் தவிக்கிறதே
எழுத்துக்களும் எரிகின்ற தணலானதே
மீண்டும் வந்து எனக்குயிர் கொடுப்பாயே!
No comments:
Post a Comment