Saturday, 14 May 2011
பின் லாடன் கோட்டை(யில்) விட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
1979இல் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த சோவியத் படையை எதிர்த்து வீரமாகவும் விவேகமாகவும் போரடியவர் பின் லாடன். 2001-09-11இல் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலை துல்லியமாகத் திட்டமிட்டவர் பின் லாடன். அன்றிலிருந்து 2011-05-02 வரை அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தவர் பின் லாடன்.
ஒரு வல்லரசுக்கு ஒரு பெயரைத் தேடிப் பிடிக்க எடுத்த மூன்று ஆண்டுகள்
பின் லாடனை அமெரிக்கா பிடிக்க/கொல்ல முயல்கிறது என்றவுடன் தன்னை மற்றவர்களிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்தி தனக்கும் தனது அல் கொய்தா இயக்கத்தினருக்கும் இடையில் நம்பிக்கை மிகுந்த ஒரு தொடர்பாளராக குவைத்தில் பிறந்த ஷேக் அபு அகமத் அவர்களை நியமித்து அமெரிக்காவிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை 10 ஆண்டுகளாக நெறிப்படுத்திய திறமை மிக்கவர் பின் லாடன். தொடர்பாளர் ஷேக் அபு அகமத்தின் பெயரைக் கண்டுபிடிக்க மட்டும் அமெரிக்காவிற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் எடுத்தன. பல மில்லியன்கள் செலவாகின. அந்த அளவிற்கு தனது அமைப்பின் இரகசியங்களைக் கட்டிக் காத்தவர் பின் லாடன்.
சிஐஏ இயக்குனரின் நேரடிக் கண்காணிப்பில் நடவடிக்கை.
பின் லாடனின் இருப்பிடத்தை 2010 ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை அறிந்து கொண்டது. அவரைப் பிடிப்பதற்கான அல்லது கொல்வதற்கான திட்டம் தீட்ட அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு ஆறுமாதங்கள் தேவைப்பட்டன. அமெரிக்காவின் கடற்படையின் ஒரு சிறப்புப் படையணியான சீல் பிரிவின் மிகச்சிறந்த ரீம் - 6 வீரர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இரவு நேரத் தாக்குதலில் சிறப்புப் பயிற்ச்சி பெற்றவர்கள். அவர்கள் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குனர் லியோன் பானெட்டாவின் கீழ் நேரடியாக தாக்குதல் ஒத்திகைகளை மேற் கொண்டனர்.
ஒரு நாயும் படையணியில்
மொத்தமாக 80 வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின் லாடனுக்கு எதிரானா தாக்குதலில் ஒரு நாயும் பயன்படுத்தப்பட்டது. Belgian Malinois அல்லது German Shepherd வகையைச் சேர்ந்த இந்த நாய் இரண்டு மைல் தொலைவில் உள்ள எதிரிகளை மோப்பம் பிடிக்கும் வல்லமை கொண்டது. வெடிகுண்டுகளை கண்டறியும் திறமை கொண்டது. பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் வெடி குண்டுகளைக் கண்டுபிடிக்கவும் பின் லாடன் அல்லது அவரது உதவியாளர்கள் மாளிகையில் எங்காவது ஒழித்திருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்கவும் நாய் தாக்குதல் அணியில் உள்ளடக்கப் பட்டது.
கோட்டை(யில்) விட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
அமெரிக்கா 40 நிமிடங்களில் தனது தரப்பினர்களுக்குக் காயங்கள் கூட ஏற்படாமல் தனது நடவடிக்கையை முடித்தது அமெரிக்கத் தரப்பின் திறமையை எடுத்துக் காட்டுகிறதா அல்லது அவர்களின் எதிரியின் பாதுகாப்புப் பலவீனத்தைக் காட்டுகிறதா? பின் லாடன் தனது இருப்பிடத்தை ஒரு பிரபல இடத்தில் ஒரு வித்தியாசமான மாளிகை அமைத்துத் தங்கியது ஏன்? 12அடி உயரமான முட்கம்பி வலை கொண்ட சுற்றுச் சுவர், உள் மாடிகளிற்கு 7 அடிச் சுற்றுச் சுவர். இவை அந்த விட்டைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைத்தது உண்மை. அவர் இந்த மாளிகையை அமைக்கும் போது அங்கு நீண்டகாலம் தங்கும் எண்ணத்துடனேயே அமைத்தார். உலகில் மிகவும் தீவிரமாகத் தேடப் படும் ஒருவர் 10 ஆண்டுகள் தனது இருப்பிடத்தை மாற்றாமல் இருந்தது ஏன்? பின் லாடனைத் தேடிப் போனவர்கள் அங்கு ஒரு தற்கொலைத் தாக்குதலாளி இருக்கலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அங்கு அப்படி எவரும் இருக்கவில்லை. இது பின் லாடனின் பாதுகாப்பில் ஒரு குறைபாடு. பின் லாடனின் மாளிகையில் நடந்த சண்டையின் நேரம் மிகக் குறுகியதே. 40 நிமிடத்தில் பெரும் பகுதி பின் லாடனின் உடலையும் அங்கிருந்த 100 இற்கு மேற்பட்ட கணனிகளையும் காணொளிப் பதிவுகளையும் பதிவேடுகளையும் ஹெலிக்கொப்டரில் ஏற்றவே அமெரிக்கப் படையினர் செலவழித்தனர். குறுகிய நேரத்தில் சண்டை முடியும் அளவிற்கு மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்தன. பின் லாடனின் மாளிகை விமானத் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற எதிர்பார்பு ஏன் பின் லாடனிடம் இல்லாமல் போனது? அதிலும் அண்மைக் காலங்களாக அமெரிக்க விமானங்கள் குறிப்பாக ஆளில்லா விமானங்கள் பாக்கிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல்கள் நடாத்தி வருகின்றன. இப்படி இருக்கையில் இரண்டு ஹெலிக்கொப்டர்கள் வருவதை உணரக்கூடிய வகையில் எந்த ஏற்பாடுகளும் ஏன் அங்கு செய்யப்படவில்லை? பின் லாடனின் உடையில் சிறப்பாக அமைக்கப் பட்ட ஒரு பையில் சில யூரோ நாணயத் தாள்களும் சில தொலைபேசி இலக்கங்களும் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தன. பின் லாடனின் கைக்கு எட்டிய தூரத்தில் எந்தவித ஆயுதங்களும் இல்லாமல் போனது எப்படி? பின் லாடனின் மாளிகையில் தப்பி ஓடும் மார்கங்கள் ஏதும் இல்லாமல் போனது ஏன்? பின் லாடனுக்கு பின்னால் இருப்பவர்கள் இதைச் சிந்திக்க வேண்டும்.
Thursday, 12 May 2011
பின் லாடனின் பிரேதத்தின் படங்களைப்பார்த்த செனட்டர்கள்
பின் லாடனின் இறந்த உடலை அமெரிக்க அரசு சில மூதவை உறுப்பினர்களுக்குக்(செனட்டர்கள்) காண்பித்துள்ளது. அதைப் பார்வையிட்ட ஜிம் இன்ஹொf முக்கியமான துப்பாக்கிக் குண்டு பின் லாடனின் கண் வழி உட் சென்று காது வழியாக வெளிவந்திருக்க வேண்டும் அல்லது கதினூடாகச் சென்று கண்ணால் வெளி வந்திருக்க வேண்டும் என்றார்.
டெவின் நியூன்ஸ் என்னும் இன்னொருவர் பின் லாடன் கொல்லப்பட்டார் என்பதைத் தவிர எதுவும் கூற மறுத்து விட்டார்.
மேலும் சில மூதவை உறுப்பினர்கள் நாளை வெள்ளிக் கிழமை பின் லாடனின் இறந்த உடலின் படங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
பார்வையிட்ட மூதவை உறுப்பினர்களின் ஒருமித்த கருத்து பின் லாடன் கொல்லப்பட்டுவிட்டார் அப் படங்கள் பார்வையிடக் கூடாதவை என்பதே.
பின் லாடனின் நாட்குறிப்பு ஒன்றும் அமெரிக்கப் படைகளிடம் சிக்கியுள்ளது. அதில் உள்ள பதிவுகளின் படி பின் லாடன் விரைவில் நியூ யோர்க் நகரில் ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தது பகிரங்கமாகியுள்ளது. எதிரியின் பொருளாதாரத்தை சிதைப்பதே பின் லாடனின் முக்கிய கொள்கைளில் ஒன்று.
Wednesday, 11 May 2011
பின் லாடன் ஒழுக்கமானவரா?
பின் லாடனைப் கொல்ல/பிடிக்கச் சென்ற அமெரிக்கச் சிறப்புப் படையணிக்குக் கிடைத்த மிகப் பெரும் பரிசு அவர் தங்கிருந்த மாளிகையில் கிடைத்த கணனிகளும் காணொளிப்பதிவுகளும் மற்றும் பல பதிவேடுகளுமே. நூற்றுக்கணக்கான computer hard disks கைப்பற்றப் பட்டன. அவை இனிவரும் காலங்களில் அல் கெய்தா இயக்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
பின் லாடனைப் பற்றிய தகவல்களை வைத்து அவரது குணாம்சக் கொலை (Character Assasination) செய்ய அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முயல்கிறது. அதற்கு அது பாவிக்கும் முதல் ஆயுதம் பின் லாடனின் மாளிகையில் கைப்பற்றிய காணொளிகளே. 07-05-2011 சனியன்று அமெரிக்க நிர்வாகம் ஐந்து காணொளிகளை வெளிவிட்டது. வெளிவிடப்பட்டமையின் நோக்கத்தை ஒர் அமெரிக்க ஊடகம் இப்படிக்குறிப்பிடுகிறது: The administration released the videos in part to promote an intelligence triumph but also to try to further diminish the legacy and appeal of Bin Laden.
அமெரிக்க நிர்வாகம வெளியிட்ட காணொளிப்பதிவுகளில் ஒலியை நீக்கிவிட்டே வெளிவிட்டுள்ளார்கள். அல்லாவிடில் அது அல் கெய்தாவிற்கு ஒரு பிரச்சாரமாக அமைந்து விடும் என்கிறார்கள்.
அமெரிக்க பாதுகாப்புத் தளமான பெண்டகன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி காணொளிகளை வெளிவிட்டது. பொதுவாக பெண்டகன் பத்திரிகையாளர்களைச் சந்திப்பை மேற்கொள்வதில்லை. இது ஒரு வழமைக்கு மாறான நிகழ்வுதான்.
முக்கிய குறிப்பு: இதை எழுதுவதன் நோக்கம் பின் லாடனின் கொள்கைகளையோ அல்லது அவரது செயல் களையோ ஆதரிப்பதற்காக அல்ல.
பின் லாடனுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட பரப்புரைகள்:
- பின் லாடன் தன்னைப் பற்றிய தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்வையிடுகிறார்.
இதில் ஒன்றும் பெரிய தவறில்லை. ஆனால் அமெரிக்கா பின் லாடன் தன்னைத் தானே இரசிப்பது போல் கூறுகிறது. தன் செயல்கள்பற்றிய பின்னூட்டங்களை அறிய ஆவலாய் இருப்பது ஒரு நல்ல தலைவனுக்குரிய பண்பு. அவர் என்ன நீலப்படமா பார்த்தார்?
- பின் லாடன் தனது தாடிக்கு கறுப்புச் சாயம் பூசியுள்ளார்.
இது ஒன்றும் ஒழுக்கக் குறைவான செயல் அல்ல. அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்: “Our takeaway is that he jealously guarded his own image.”
- மூன்று மாடிகளிலும் மூன்று மனைவியரைக் குடியமர்த்தியுள்ளார்.
பின் லாடனின் மார்க்கத்திற்கோ அல்லது அவரைப் பின்பற்றுபவர்கள் கலாச்சாரத்திற்கோ இது ஒன்றும் முரணானது அல்ல.
- பின் லாடனின் அறையில் குப்பைகள் நிறைந்திருந்தன.
அவர் பணியாள்களை வைத்திருப்பதில் இருந்த சிரமம் புரிந்து கொள்ளக் கூடியது. அவர் படாடோபமான வாழ்க்கை வாழவில்லை.
- பின் லாடனின் வீட்டிற்குள் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் விளையாடும் பந்து சென்றால் அதை உள் சென்று எடுக்க அனுமதிப்பதில்லை. மாறாக பணம் கொடுப்பார்கள் புதிய பந்து வாங்கும் படி.
இது ஒரு நல்ல பண்புதானே!
- பின் லாடன் வயாகரா முலிகை உட் கொண்டார்.
அரபு நாடுகளில் வீரியத்திற்கு மூலிகைகள் உண்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. அந்த மூலிகைக்கு ஏன் வயாகார என்ற முன்னிணைப்பு?
- காணொளிப்பதிவுகளின் போது பின் லாடன் தனது உரையாடல்களில் அடிக்கடி தவறுகள் விட்டதால் பல மீள் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
அவர் வார்த்தையில் வீரன் அல்ல. செயல் வீரனா?
- பின் லாடன் தனது தோற்றத்தில் அதிக கவனம் செலுத்தினார்.
அல் கெய்தா வெளிவிட்ட காணொளிளிப்பதிவுகள் எதிலும் அவர் தன்னை அலங்கரித்து அழகு படுத்திக் காண்பிக்கவில்லை.
அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் இறுதிக் கண்டுபிடிப்பு: பின் லாடனின் மாளிகை ஒரு கட்டளை-கட்டுப்பாட்டுப் பணியகமாகச்(Command and Control) செயற்பட்டது.
முன்பு அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை பின் லாடன் மறைந்து வாழ்வதால் ஓரம் கட்டப்பட்டுவிட்டார் அவரது நேரடி கட்டுப்பாட்டில் அவரது அல் கெய்தா இயக்கம் இல்லை என்றனரே!!!
மொத்தத்தில் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை இதுவரை பின் லாடனிற்கு களங்கம் விளைவிக்கக் கூடிய எதையும் வெளிவிடவில்லை.
Tuesday, 10 May 2011
Skypeஐ விழுங்கும் Microsoft
இணையத் தொலைபேசித் துறையின் முன்னணி நிறுவனமான Skypeஐ Microsoft நிறுவனம் வங்கும் முயற்ச்சியில் விரைவில் வெற்றி காணவிருக்கிறது.
ஏழு அல்லது எட்டு பில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து இந்த வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது. Microsoft இல் 36 ஆண்டுகால வரலாற்றில் இது மிகப் பெரிய நடவடிக்கை.
Skype தனது வாடிக்கையாளர்கள் காணொளியூடான உரையாடல்கள் வசதிகள் வழங்குவதில் பிரபலமானது. Skype நிறுவனம் voice over Internet protocol என்ற தொழில் நுட்பத்தைப் பாவித்து அதன் வாடிக்கையாளர்களை இனைக்கிறது. Skypeஇற்கு பல மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தேடு பொறுத்துறையில் கூகிள் நிறுவனத்தின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறது Microsoft. கூகிள் அடுத்ததாக இணையத்தில் பாடல்களை ஒலிபரப்பவிருக்கிறது. இச்சேவையில் பாவனையாளர்கள் பாடல்களைக் கேட்கலாம் ஆனால் பதிவிறக்கம் செய்ய முடியாது. இப்படிச் செய்வதால் இப்பாடலகளுக்கான அனுமதிப் பத்திரங்களை கூகிள் பெரும் விலை கொடுத்து இசைத் தட்டு நிறுவங்களிடமிருந்து வாங்க வேண்டியதில்லை. ஆப்பிள் நிறுவனம் அனுமதிப்பத்திரங்களை வாங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் பெற்று தரவிறக்கம் செய்ய அனுமதிக்கவுள்ளது.
Microsoft இன் இலாபத்தில் கூகிளும் ஆப்பிளும் பெரும் பாதிப்பை அண்மைக்காலங்களாக ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைச் சமாளிக்க Microsoft தனது வியாபார அளவைக் கூட்டும் தந்திரத்தில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே e-bay நிறுவனம் Skypeஐ வாங்கித் தோல்விகண்டது. 2005இல் வங்கி 2007 இல் வாங்கிய பங்குகளில் பெரும்பகுதியை விற்று விட்டது.
Skype இப்போது நட்டத்தில் இயங்கி வ்ருகிறது.
Monday, 9 May 2011
Haiku : Intoxication without alcohol
Operation search and destroy
Invader of heart
Her eyes
Weapons of mass destruction
Deep penetrating unit
Her glance
Act of reconnaissance
Search and destroy mission
Her look
Silent oration
Intoxication without alcohol
Her kiss
Shattering the hesitation
Smothering the bastion of shy
Her touch
சத்தமிடுவதன் மூலம் மின்னேற்றும்(Charge) கைப்பேசிகள்
கைப்பேசிகளின் பாவனையாளர்களின் பெரும் பிரச்சனை அவர்களின் மின்னிருப்பு எதிர்பாராத நேரங்களில் தீர்ந்து விடுவது. இதற்கு ஒரு தீர்வை தன் கொரிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். சேயோல் பல்கலைக்கழக விஞ்ஞானி கலாநிதி சாங் வூ கிம் அதிர்வுகளில் இருந்து மின்சாரத்தை பிறப்பிக்கும் கருவையை உருவாக்கியுள்ளார். ஒலி பெருக்கிகளில் மின்சாரத்தில் இருந்து அதிர்வு பிறக்கிறது; அதிர்வில் இருந்து ஒலி பிறக்கிறது. அதை மாற்றி யோசித்தார் அவர்.
கலாநிதி சாங் வூ கிம் உருவாக்கிய கருவி ஒலி அலைகளால் ஒரு சிறு தகட்டை அதிர்வடையச் செய்கிறது. அந்த அதிர்வில் இருந்து மின் உருவாக்கப்படுகிறது. இதற்கு அவர் Zinc oxide wires பாவித்துள்ளார்.
பெருந்தெருக்களில் ஓடும் வாகன இரைச்சல், தொடரூந்து ஓடும் ஓசை எல்லாம் இனி மின்சாரமாக மாற்றப் படப் போகின்றன. தொடர்ந்து குறைந்த அளவு ஒலிகளில் இருந்தும் மின் பெறக்கூடியவகையில் இக்கருவி மேம்படுத்தப் படவிருக்கிறது. அது சரிவந்தால் கைப்பேசியில் மின்சாரம் இறங்கியவுடன் மனைவுயுடன் சண்டை போட வேண்டியதுதான். அவர் போடுக் கூச்சலில் உங்கள் கைப்பேசியில் மின்சாரம் ஏறிவிடும்.
இந்த முறையில் மின்சாரம் ஏற்றுவது கைப்பேசிகளுக்கு மட்டுமல்ல மற்ற சிறு உபகரணங்களிலும் பாவிக்கலாம்.
Sunday, 8 May 2011
பின் லாடனுக்குப் பின்.....
அமெரிக்க ஊடகம் ஒன்று இப்படி ஒரு கருத்துப்படத்தை வெளியிட்டது. பின் லாடனைக் கொன்றபின் சில தாக்குதல்கள் ஒரு குறுகிய காலத்திற்கு நடக்கும் அதன் பிறகு எல்லாம் ஓய்ந்துவிடும் என்று அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு சொல்கிறதாம்!!!!
1979இல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தான் மீது படையெடுத்தது. இதன் பின்னணியில் ஆப்கானிஸ்த்தானிற்கு தொலைத்தொடர்பு கோபுரம் அமைத்து கொடுத்த அமெரிக்கா அதில் சோவியத்தை உளவு பார்க்கும் கருவிகளையும் பொருத்தியமையே. சோவியத்தை விரட்ட இலகுவான வழி பொதுவுடமை என்பது இசுலாமிய மார்க்கத்திற்கு எதிரானது என்று ஆப்கானிஸ்தானில் இசுலாமியத் தீவிரவாதம் வளர்க்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் பிறந்த ஒசாமா பின் லாடன் இசுலாமியச் சட்டமான ஷரியாப்படியே இசுலாமிய நாடுகள் ஆளப்படவேண்டும் என்ற நம்பிக்கையுடையவர். கம்யூனிசம், சோசலிசம், மக்களாட்சி போன்ற ஆட்சி முறைகள் இசுலாமிற்கு எதிரானவை என்ற கொள்கை கொண்டவர்.
ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படைகளின் அட்டூழியங்களைப் பொறுக்காத பின் லாடன் அங்கு சென்று ஆப்கானிஸ்தானிற்காக முஜாகிதீன் போராளிகளுடன் இணைந்து போரிட்டார்.
அமெரிக்காவின் Operation Cyclone
ஆப்கானிஸ்த்தனில் சோவியத் ஒன்றியப் படைகளுக்கு எதிராக அமெரிக்காவின் Operation Cyclone என்னும் படை நடவடிக்கை மூலம் திரை மறைவில் பல உதவிகளை ஆப்கானிஸ்த்தான் விடுதலைப் போராளிகளான முஜாஹிதீனிற்கு செய்தது. முஜாஹிதீனில் பின் லாடன் ஒரு புகழ் மிக்க படைத் தளபதியானார்.
1988இல் பின் லாடன் அல் கெய்தா அமைப்பை ஆரம்பித்தார். பின் லாடன் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போரில் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் எதிரியின் பொருளாதாரத்தைச் சிதறடிக்க வேண்டும் என்பதாகும். கற்றுக் கொண்ட மற்றப் பாடம் எதிரிமீதான வெறுப்பை பலதரப்பிலும் வளர்த்து ஆதரவு திரட்டுவது. இதை பின் லாடன் தனது இரு பெரும் கொள்கையாகக் கொண்டிருந்தார். இந்தக் கொள்கையை பின் லாடன் தனது இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் ஆழமாக வளர்த்துள்ளார். உலகெங்கும் உள்ள அல் கெய்தா ஆதரவாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் அமெரிக்காமீதான வெறுப்பையும் தம் மனதில் ஆழமாகப் பதித்து வைத்துள்ளனர்.
பின் லாடனுக்குப் பின் மேற்குலக நாடுகளுக்கு முக்கியமாக அமெரிக்காவிற்கு பெரும் தலையிடியாக இருக்கப்போவது பின் லாடனின் மேற்கூறிய இந்த இரு கொள்கைகளுமே.
பின் லாடன் கொல்லப்பட்டமை அல் கெய்தாவிற்கு பேரிழப்பு என்று கூறினாலும் அது அல் கெய்தாவின் முடிவாக அமையாது. அல் கெய்தா ஒரு உலகமயமாக்கப் பட்ட அமைப்பு. உள்ளூர்த் தலைமைகளின் கீழ் பல நாடுகளிலும் செயற்படுகின்றது. இந்த அமைப்புக்கள் தம் உள்ளூர் நிலமைகளுக்கு ஏற்பத் தமது கொள்கைகளை தாமே மேலிடத் தலையீடின்றி வகுத்துச் செயற்படுகின்றன. இவற்றில் பல பின் லாடனின் கொலைக்கு பழிவாங்கத் துடிக்கின்றன. இவற்றின் வருங்கால நடவடிக்கைகள் பராக் ஒபாமாவின் தேர்தல் வெற்றியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அல் கெய்தாவின் பெரும் பின்னடைவு
பின் லாடன் கொல்லப் பட்டதிலும் பார்க்க பெரிய பின்னடைவ அல் கெய்தாவிற்குக் கொடுக்கப் போவது பின் லாடனின் மாளிகையில் இருந்து அமெரிக்கா எடுத்துச் சென்ற கணனிகளும் பதிவேடுகளும் கைப்பேசிகளுமே. இவை அல் கெய்தாவிற்கு எதிராக கிடைத்த தங்கப் புதையல். இப்படி ஒரு பெரிய தகவல் திரட்டு இதற்கு முன் ஒரு போதும் எந்த ஒரு அமைப்பிடம் இருந்தும் கைப்பற்றப் படவில்லை. பின் லாடனின் அடுத்த நிலைத் தலைகள் பல உருளுவதற்கான வாய்ப்புக்களை இப்போது அதிகரித்துள்ளன.
இலங்கைக்கு மீண்டும் பயந்தோடும் இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த 2008/09 நடந்த இலங்கைப் போரின் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் மனித உரிமைகள் மீதான வகைசொல்லல் தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கை இலங்கைக்குக் கிடைத்தவுடன் இலங்கை தொடர்பு கொண்ட முதல் வெளிநாடு இந்தியா. தமிழின அழிப்புப் போரில் எல்லா உதவிகளையும் வழங்கிய நாடாகிய இந்தியாவிற்கும் இலங்கையி இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களில் பங்கு உண்டு. இலங்கைப் போரை 2009 ஆகஸ்ட் மாதம் இலங்கை முடிக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தியா போரை மே மாதம் இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன் வேண்டும் என்று இலங்கையை வற்புறுத்தியது. இந்தியா அதற்கான ஆதரவுகளை இலங்கைக்கு வழங்கியது. இது தொடர்பாக இந்தியா இலங்கைக்குச் செய்த உதவிகள் விடுத்த வேண்டுகோள்கள் பற்றிய ஆதாரங்கள் இலங்கை அரசிடம் இருக்கின்றன. அவை இந்தியா மீது போர்க் குற்றம் சுமத்தப் போதுமானவை. அவை இந்தியாவின் ஐநா பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்தர இடம் பெறும் கனவுக்குப் பாதகமாக அமையும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த இலங்கைப் போர் மீதான வகைசொல்லல் தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கை இலங்கைக்குக் கிடைத்த சில நாட்களில் இலங்கை அரசு தனது பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஜபக்ச, குடியரசுத் தலைவரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழு இந்தியா சென்று அறிக்கை தொடர்பாக கலந்துரையாட இந்தியா செல்லும் விருப்பம் தெரிவித்தனர். அதை உடன் இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் பார்த்துக் கொள்வோம் என்றது. இச் செய்தி வந்தவுடன் இந்தியாவிற்கு வால்ப் பிடிக்கும் தமிழ் ஊடகங்கள் இலங்கையின் தமிழர் தொடர்ப்பான நிலைப்பாடில் இந்தியாவிற்கு உடன்பாடில்லை அதனால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. அதன் வெளிப்பாடாகாவே இந்தியா இலங்கையின் உயர்மட்டக்குழுவின் டெல்லிப் பயணத்தை பின் போட்டது என்று ஆனந்தக் கூச்சலிட்டன. இந்த அறிவிலிகளுக்கு டெல்லிப் பார்ப்பனக் கும்பலின் வேண்டுதலின் பேரிலேயும் உதவியுடனுமே இலங்கை தமிழர்களுக்கு எதிரான சகல அட்டூழியங்களையும் செய்து வருகிறது என்ற உண்மை என்றுதான் புரியப்போகிறதோ?
ஐரோப்பிய ஒன்றியப் பாராளமன்றம் இலங்கை தொடர்பான் ஐநா நிபுணர்குழு அறிக்கை மீதான ஒரு விவாதம் 12-05-211இலன்று நடத்தப் போகிறது என்ற செய்தி வந்தவுடன் இந்தியா பதை பதைத்து எழுந்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொபோ்ட் ஓ பிளேக் கடந்த வாரம் இலங்கை சென்றதும் இந்தியாவை உசுப்பியுள்ளது. இத்துடன் நிற்கவில்லை இலங்கையில் செயற்படும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனம் ஒன்று இலங்கையும் அதற்கு ஆதரவளிக்கும் நாடுகளும் எப்படி போர்க் குற்றத்தில் ஈடுபட்டன என்பது பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் அதிபருக்கு ஒரு நீண்ட அறிக்கையை அண்மையில் அனுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு வெளியில் இலங்கைக்கு எதிராக சில நடவடிக்கைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மேற்கொள்ளும் சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன. ஐநா மனித உரிமைக் கழகத்தில் அல்லது நேட்டோவில் அல்லது இரண்டு இடங்களிலும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படலாம். தமிழின விரோதிகளான வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ், தேசிய பதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், பதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இப்போது இலங்கைக்கு விரைந்தோடிச் செல்லப் போகின்றனர். இவர்கள் இலங்கைக்குப் போய் தம்மையும் இலங்கையையும் போர்க்குற்றங்களிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றி ஆலோசிக்கப் போகின்றனர். இந்தியா பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுவதற்குப் பிரதி உபகாரமாக சில வட இந்தியப் பணமுதலைகள் இலங்கையில்முதலீடு செய்ய இலங்கை அனுமதி வழங்கும்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...